Thursday, February 3, 2011

என்ன்ன்னமோ போங்கோ!!!!

புதிய பதிவு உம்மாச்சி ப்ளாக்கில் வெளியிடப்பட்டுள்ளதுகாலையிலிருந்தே அருண் மிகவும் குழப்பான மனதுடன் இருந்தான். மழை பெய்து முடிந்த பின்னும் தேங்கி நிற்கும் சகதி போல அவன் மனதில் அந்த கசப்பான நிகழ்வின் எச்சங்கள் சொச்சம் அளவு கூட மாறாமல் இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக தன் கணவன் அருணின் செயல்கள் அனைத்தும் மிகவும் வித்தியாசமாகவே இருப்பதை நிகிலா நன்கு அறிவாள்.இருப்பினும் காதல் கணவனின் கன்னங்கள் புரிந்த அளவுக்கு அவனின் எண்ணங்கள் பிடிபடாமல் தவித்தாள். தேர்தலுக்கு முந்தைய இணக்கமான கூட்டணிகள் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பிணக்கமாவது போல் அடிக்கடி எரிந்து விழத் துவங்கிய அருணை நிகிலாவின் மனது ஏனோ அன்னியமாக உணர்ந்தது.

டப்பாவில் வாங்கி வைத்த பால் கூப்பன் முழுவதும் ஒரு நாளில் காலியானது போல நாட்கள் வேகமாக உருண்டோடிக் கொண்டிருந்தது. அன்று மிதமான நிலவொளி, ஆரவாரம் இல்லாத நடு இரவு, புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் கண்களை துளியும் தழுவவில்லை. காலில் இருந்த தலையாணியை தலைக்கும், தலையில் இருந்ததை காலுக்கும் மாற்றி முயற்சித்த போது நாத்தம் வந்ததே தவிர தூக்கம் வரவில்லை.விரக்தியோடு கைகளால் அருகில் துளாவிய போது அருண் இல்லை என்பதை நிகில் உணர்ந்தாள். அரை தூக்கத்துடன் எழுந்து சென்று பால்கனியில் பார்த்த போது இதயம் இயக்கத்தை இரு நொடிகள் நிறுத்தும் படியாக உரத்த குரலில் " நோஓஓஓஓஒ!" என்று கத்தினாள் நிகில்.// ஹம்ம்ம்ம்ம்ம், இப்படி எல்லாம் ஒரு பில்டப்போட நானும் ஒரு திகில் கதை எழுதனும்னு தான் ஆசையா இருக்கு. என்ன பண்ண, அதுக்கெல்லாம் ஒரு இது வேணும். "திக்! திக்! திகிலுடன் நிகில்!"னு தலைப்பு தான் பிரமாதமா வருதே தவிர எழுத உக்காச்சுண்டா வெறும் காத்துதான் கவருது! ஒருவேளை 'அடப்பாவி தங்கமணி துணை'னு போட்டு ஆரம்பிச்சா கண்டா வருமோ என்னவோ!பெட்ரோல் செலவு இல்லாத பைக்!....:)

சரி திகில் கதை தான் வேண்டாம்பா! நடுல நடுல ஒரு சைன்டிபிக் பிட்டை எல்லாம் சொருகி நடுல நடுல அஜால்ஸ் குஜால்ஸா ஜிகினாஷ்ரீ,ஆண்டாளுனு கதாபாத்திரம் எல்லாம் உண்டாக்கி 5 பகுதிக்கு அப்புறம் ஒவ்வொரு கதாபாத்திரமா போட்டுத் தள்ளி ஒரு தொடர் கதை எழுதலாம்னு பாத்தா ம்ம்ம்ம்ம்ம்ம்! ஒன்னும் ஒப்பேர மாட்டேங்கர்து. சினிமா போஸ்டரை சுவாரசியமா திண்ணுண்டே நகராமல் நிற்கும் மாடு போல கதை நகர மாட்டேங்கர்து.

இது எதுவுமே வேண்டாம், நாம பேசாம ஒரு புரட்சி எழுத்தாளரா ஆகலாம்னு முடிவு பண்ணி வெச்சுருந்தேன். புரட்சி பதிவர்னா அமெரிக்காவை கன்னா பின்னானு திட்டனும் அதனால " ஒபாமாவுக்கு ஒன்பது கேள்விகள்" நு ஒரு பதிவு போட்டு கேள்வி கேட்டோம்னா எப்படியும் ஒரு வாரத்துல ஒபாமா பதில் சொல்ல மாட்டார். இதை சாக்கா வெச்சே "ஒபாமாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு" "ஒபாமாவுக்கு கடைசி எச்சரிக்கை"னு வரிசையா பதிவு போட்டுட்டு கடைசியா "பதில் சொல்ல பயப்படும் ஒபாமாவே"னு ஒரு பதிவை போட்டு முடிச்சா நிச்சயம் புரட்சி பதிவர் ஆயிடலாம்னு நினைச்சாலும், கமண்ட் போட்டு கலாய்க்கறவாளை நினைச்சா பயமா இருந்தது. அதனால அந்த ஆசைலையும் மண்ணு விழுந்தது. அல்வா தீர்ந்து போகும் போது மைசூர்பா வச்சு சமாளிக்கும் ஸ்வீட்டு கடை மொதலாளி மாதிரி எதுக்கும் இருக்கட்டும்னு "மன்மோஹன் சிங்குக்கு மனம் திறந்த மடல்" ஒன்னு கைவசம் அவுத்து விட ரெடியா வெச்சுருக்கேன். அவுத்து விடர்த்துக்கு இது என்ன நாகுட்டியா?னு யாரும் நக்கல் அடிக்காத சமயத்தில் வெளிவரும்.

சரி போ புரட்சி தான் வரலை பொதுஅறிவு சம்பந்தமா வத்தல் வடாம் போடுவது எப்புடி?னு எழுதலாம்னா வடாம்லாம் ஏற்கனவே எல்லாரும் புழிஞ்சு வெச்சுருக்கா, வத்தல் வடாம் இல்லாட்டி ஒரு கூல் வடாமாவது முயற்சி செய்யலாம்னா இந்த பொறாமை புடிச்ச உலகம் ஏற்கவே கருவடாம் தொடங்கி வெங்காய வடாம் வரைக்கும் எல்லாத்தையும் ஏற்கனவே உலர்த்தி காயபோட்டு வெச்சுருக்கு.

கவிதை எழுதர்து எல்லாம் உண்மைலயே பெரிய்ய்ய்ய்ய விஷயம். கவிதையில் என்னுடைய முயற்சி என்பது முன்னிறவில் மூனு வாழைப்பழம் திண்ணுட்டு அடுத்த நாள் வாய்க்காங்கரையில் "இன்னிக்கி நிச்சயமா வெளிய போயிடும்!" என்ற நம்பிக்கையோடு இருக்கும், கும்ம்ம்ம்! ம்ம்! கிராமத்தான் நிலை தான். "அண்ணலும் நோக்கியா, அவளும் நோக்கியா" நு ஒரு விஞ்ஞான தொடுதலோட ஒரு கவிதை எழுதலாம்னா "தக்குடு! உனக்கு கவிதை ஒன்னுதான் பாக்கியா?"னு கேள்வி வரும் அபாயம் உள்ளதால் ஜாக்ரதையாதான் அடி எடுத்து வைக்கனும். மனசுக்கு தோணினதை எல்லாம் எழுதிட்டு கவிதை/இது கவிதை/இது கவிதை தான் நு லேபில் குடுத்தா ஒரு சிலர் கவிதையா ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் என்பதால் முயற்சி செய்ய வேண்டும்.ஒரு வயது எனக்கும்...:)

இன்னிக்கி என்ன ஆச்சு இந்த பிள்ளைக்கு?னு நீங்க எல்லாரும் யோசிக்கர்து புரியர்து. ஒரு வருஷம் முன்னாடி இதே பிப்ரவரி மாசம் இரண்டாம் தேதி தான் ப்ளாக்க ஆரம்பிச்சேன். உடனே வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்! சைடுலேந்து பார்க்கிறேன்!னு எல்லாம் பீலா விட மாட்டேன். எனக்கு தில்லானா மோஹனாம்பாள் படத்துல வரும் ஜில்ஜில் ரமாமணி பாத்திரம் ரொம்ப பிடிக்கும். "மேடைல நடுல நின்னு அவுக ஆடினா, நான் ஒரு ஓரமா நின்னு ஆடிட்டு போறேன், அவுக ஆட்டத்தை 1000 பேரு பாத்தா எங்க ஆட்டத்தை பத்து பேராவது பாக்க மாட்டாகலா"னு வரும் வார்த்தைகள் யாருக்கு பொறுந்தர்தோ இல்லையோ எனக்கு மிகவும் பொறுந்தும். எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போனார்ங்கர கதையா தக்குடுவும் உங்களுக்கு நடுல கோமாளி வேஷம் கட்டி ஆடிண்டு இருக்கு.

ஒரு வருஷத்துல பலவிதமான சந்தோஷ அனுபவங்கள் வாய்த்தது. எந்த குழுமத்துலையும் தக்குடு இல்லாம இருந்தாலும் ஆர்வமா விரும்பி வந்து படிக்கும் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள்! உலகத்தோட எதோ ஒரு மூலைல இருந்தாலும் உங்காத்து புள்ளை மாதிரி வாஞ்சையுடன் தக்குடு! தக்குடு!னு அன்பு காட்டும் அத்தனை பாசமலர்களுக்கும் அன்பு வணங்கங்கள்! பின்னாடியே வந்துண்டு இருக்கறவா,ஓசிப் பேப்பர் படிக்கறவா, கள்ளப் பயலே!னு உரிமையோட திட்டறவா, Dear Thakkudu போடறவா, பூரிக் கிழங்கு பண்ணி போட்டவா,கமண்டு மட்டும் போடாம பால்கோவாவோட சாப்பாடு போட்டவா எல்லாரோட ஆதரவும் அடியேனுக்கு எப்போதும் தேவை.

என்றும் வம்புடன்,
தக்குடு

46 comments:

Porkodi (பொற்கொடி) said...

என்ன ஒரு தெளிவு என்ன ஒரு தாத்பர்யம்.. அடடடடா. வாழ்த்துக்கள் தக்குடுண்ணா.

Porkodi (பொற்கொடி) said...

ஜிகினாஸ்ரீ தக்குடு மாதிரி ஒரு உத்தமன் தான் எனக்கு அண்ணனா வரணும்னும், ஆண்டாள் மாதிரி சொல்பேச்சு கேக்கற அண்ணியும் தான் வேணும்னு கேரவனுக்குள்ளே போகாமல் தர்ணா பண்றாங்களாம்.. தெரியாதா?

Yaathoramani.blogspot.com said...

ஓராண்டு நிறைவுக்கு மனங்கனிந்த வாழ்த்துக்கள்
தெளிவான நடை.
இடையிடையே வரும் ரசிக்கத்தக்க
குசும்பு நக்கல் கிண்டல்
நீங்கள் உங்கள் முதல் பதிவையும்
இணத்துப் போட்டிருந்தால்
உங்கள் எழுத்தின் திறன் வளர்ந்துள்ளவிதம்
நன்றாக புரிந்துகொள்ளத்தக்கதாய் இருந்திருக்குமோ ?
வாழ்த்துக்களுடன்

Meena Sankaran said...

//"அண்ணலும் நோக்கியா, அவளும் நோக்கியா" நு ஒரு விஞ்ஞான தொடுதலோட ஒரு கவிதை எழுதலாம்னா//

ஆஹா எப்பேர்ப்பட்ட வரிகள்! நம்ம வைரமுத்து உனக்கு ஒண்ணு விட்ட சித்தப்பாவா? வெக்கப்படாம உண்மையை சொல்லிடு தக்குடு.

"தக்குடு! உனக்கு கவிதை ஒன்னுதான் பாக்கியா?"னு கேள்வி வரும் அபாயம் உள்ளதால் ஜாக்ரதையாதான் அடி எடுத்து வைக்கனும்.//

யாரு உன்னை அப்படி கேக்கறான்னு நானும் தான் பாக்கறேன். நீ சும்மா கலக்கு தக்குடு. இந்த ஒரு வருஷ ப்ளாக் அனுபவத்துல உனக்கே தெரிஞ்சிருக்கும், நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீ உப்புத்தண்ணியை கொப்புளிச்சு காரி துப்பினா கூட ஏதோ சோக்குன்னு நினைச்சு நாங்கல்லாம் உருண்டு உருண்டு சிரிக்க ரெடியா இருக்கும்போது உனக்கென்ன கவலை?

வழக்கம் போல் அசத்தல் பதிவு. :-)

vgr said...

Thakkudu, Thakkudu, Thakkudu....

attagasama irundudu post...kadai padika thodanginadume guess panen...engayo idakaranu..

namma ida pathi pesarchey...enaku royalty tharen nu soniye...thara kanome..

Congrats and continue the great work.

endrendrum un thamizhukum, katuraikum, kavidaikum, comedy kum adimai nu podanam nu asaya than iruku ..:)

ana ipodaiku

best regards,
vgr

RVS said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் தக்குடு. கதை நல்லாவே வருது. எழுத முயற்சிக்கலாம்.
எப்போ காது குத்தி மொட்டை போடுவா? ;-) ;-)

Chitra said...

ஒரு வருஷம் ஆகி போச்சா? வாழ்த்துக்கள்!!!!! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!!! அந்த சைக்கிள் படம் - செம ஐடியாப்பா....

கவிநயா said...

ஆஹா, ரூம் போட்டு யோசிச்சும் ஒண்ணும் மாட்டலைங்கிறதை என்ன ஒரு ஹஹ்ஹாஸ்யமா சொல்லியிருக்கீங்க :) எங்கூரு பொண்ணு சொன்ன மாதிரி தக்குடு என்ன எழுதினாலும் உருண்டு பொரண்டு... ம், அவங்க சொன்னதேதான்!

ஒரு வயசு நூறு வயசாகி, அதுக்கு மேலேயும் ஆக வாழ்த்துகள்!

sriram said...

வாழ்த்துக்கள் தக்குடு, இன்று போல் என்றும் வாழ்க..

//Porkodi (பொற்கொடி) said...
என்ன ஒரு தெளிவு என்ன ஒரு தாத்பர்யம்..// அது என்னா பர்யம் கேடியக்கா?

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Vijay said...

//கணவனின் கன்னங்கள் புரிந்த அளவுக்கு அவனின் எண்ணங்கள் பிடிபடாமல் தவித்தாள்.//

என்னா எதுகை, மோனை டா சாமி.....:)

Vidhya Chandrasekaran said...

வாழ்த்துகள் தக்குடு:)

Vijay said...

//கமண்ட் போட்டு கலாய்க்கறவாளை நினைச்சா பயமா இருந்தது.//

ம்...ம்... அந்த ப்யம் இருக்கட்டும்....:)

Vijay said...

//"ஒபாமாவுக்கு கடைசி எச்சரிக்கை"//

இதுக்கு எல்லாம் ஒபாமா பதில் சொல்றது இல்லியாம். சிஐஏ ல இருந்துதான் ஆள் வருமாம்..உசாரு...:)

Vijay said...

//கவிதை/இது கவிதை/இது கவிதை தான் நு லேபில் குடுத்தா//

’இதுவும் கவிதைதான்’ லேபில்தான் பெட்டரா இருக்கும்ன்னு நினைக்கிறேன்...யோசிச்சி செய்யுங்கோ... :)

Vijay said...

//உடனே வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்! சைடுலேந்து பார்க்கிறேன்!னு எல்லாம் பீலா விட மாட்டேன்.//

அது செரி, நேரா பார்த்தாலே ம்ம்ம்ம்..தான்....நம்க்கு எதுக்கு பேக்..சைட்..பார்வையெல்லாம்.....கழுத்து சுளுக்காம இருந்தா போதாதா....:)

Vijay said...

//அவுக ஆட்டத்தை 1000 பேரு பாத்தா எங்க ஆட்டத்தை பத்து பேராவது பாக்க மாட்டாகலா"னு//

இதுல நியாய்ம் இருக்குங்கறேன். நீ நடத்துங்கறேன்...

Vijay said...

//ஒரு வருஷத்துல பலவிதமான சந்தோஷ அனுபவங்கள் வாய்த்தது.//

எங்களுக்கும் தான?

//எந்த குழுமத்துலையும் தக்குடு இல்லாம இருந்தாலும் ஆர்வமா விரும்பி வந்து படிக்கும் //

அதுக்கு காரணம் உங்களோட எழுத்துதான்.

//என்றும் வம்புடன்,
தக்குடு //

இதுதான் உங்க பல்மே..அடிச்சி ஆடுங்க... மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..

Porkodi (பொற்கொடி) said...

என்றும் வம்புடன், தக்குடு - idhu yaar kudutha pattam? :P

என்றும் அன்புடன், பாஸ்டன் ஸ்ரீராம் - அது என்னா பர்யம் கேடியக்கா?

அங்கிள் நீங்க தூங்கறீங்கன்னு தான் நினைச்சேன், இதென்ன ஏதோ கோமால இருந்து எழுந்து நான் எங்க இருக்கேன்னு கேக்கற மாதிரி ஒரு கேள்வி? :-(

வெங்கட் நாகராஜ் said...

ஒரு வருட குழந்தைக்கு வாழ்த்துகள். இன்னும் பல பதிவுகள் எழுதி எங்கள் எல்லோரையும் மகிழ்விக்க இன்னும் ரூம் போட்டு யோசிக்க வாழ்த்துகிறேன்..

திவாண்ணா said...

தக்குடு ஆசீர்வாதங்கள்!

Shobha said...

வாழ்த்துக்கள் தக்குடு !
//காதல் கணவனின் கன்னங்கள் புரிந்த அளவுக்கு அவனின் எண்ணங்கள் பிடிபடாமல்//
இதெல்லாம் உனக்கு எப்பிடி....? ம்ம்ம் என்னவோ போ !
ஷோபா

Sriram, Doha said...

உங்கள் எழுத்து நடையும் நகைச்சுவையும் really enjoyable. ஊரில் ஆத்தங்கரையோரமா (உட்கார்ந்தோ, நின்ட்ருகொண்டோ)வம்படிச்ச த்ருப்தி. Please keep writing..

ஆயில்யன் said...

நீ கலக்குடி ராசா!வாழ்த்துகள் :)

பத்மநாபன் said...

கதை ஆரம்பித்த விதத்தை படிக்க ஆரம்பித்தவுடன் , தக்குடுதம்பிக்கிட்டிருந்து பாஷையை யாரோ பிடுங்கிண்டு போய்ட்டாங்கன்னு சீரியஸா படிச்சுட்டு இருந்தேன் .முடிக்காட்டியும்.. கதை நல்லாத்தான் வருது....கவிதையும் வரும் ..
ஒரு வருட வாழ்த்துகள்... மென்மேலும் பல்லாண்டு தொடர்ந்து அனைவரையும் மகிழ்விக்க வாழ்த்துகள்..

குட்டி கிருஷ்ணரும்....பைக்சைக்கிளும் அருமை...

Jeyashris Kitchen said...

Congrats on ur first blog anniversary thakkudu.
// நீ உப்புத்தண்ணியை கொப்புளிச்சு காரி துப்பினா கூட ஏதோ சோக்குன்னு நினைச்சு நாங்கல்லாம் உருண்டு உருண்டு சிரிக்க ரெடியா இருக்கும்போது உனக்கென்ன கவலை? //
romba seriya sonna meena

Matangi Mawley said...

boss!! 1 yr completion-ku ennoda best-best-u wishes!
naan romba serious-aa padikka start panninen-- 'aiiiiiiii katha'nnu! nannaa thaan boss irunthuthu.
neenga munnaadi ezhuthiruntha 'puliyodara..' series um romba nannaa irunthuthu... atha pola oru series ezhuthavum.

congrats! :)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//கணவனின் கன்னங்கள் புரிந்த அளவுக்கு அவனின் எண்ணங்கள் பிடிபடாமல் தவித்தாள் //
இப்படி கூட மொக்கை போடலாமா? நல்ல ஐடியாவா இருக்கே... முடிஞ்சா அடுத்த எபிசொட்ல implement பண்ணிடறேன்... ஹா ஹா ஹா... :))

//டப்பாவில் வாங்கி வைத்த பால் கூப்பன் முழுவதும் ஒரு நாளில் காலியானது போல//
அடாடா என்ன ஒரு உவமை என்ன ஒரு உவமை.... தோஹால பால் பற்றாக்குறையா? எழுத்துல ஒரு வருத்தம் தெரியுதே அதான் கேட்டேன்... :)))

//நாத்தம் வந்ததே தவிர தூக்கம் வரவில்லை//
ROFTL ...

//'அடப்பாவி தங்கமணி துணை'னு போட்டு ஆரம்பிச்சா கண்டா வருமோ என்னவோ//
சொந்த செலவுல சூனியம் வெச்சுகறேனு தான் சொல்வேன்... எனக்கே எதிரிக எண்ணிக்கை கூடி போச்சு... நீ என் பேரை போட்டு ஆரம்பிச்சா உன் ப்ளாக்யையும் சேத்து கொளுத்திடுவாங்க...:))

//பெட்ரோல் செலவு இல்லாத பைக்!....:)//
ஐ... இது நல்லா இருக்கே... சூப்பர்

//5 பகுதிக்கு அப்புறம் ஒவ்வொரு கதாபாத்திரமா போட்டுத் தள்ளி//
ஒரு சின்ன திருத்தம்... அஞ்சு பகுதிலயே அஞ்சு பேரு அவுட்... நீ புது கதை படிக்கலையா? "கொலை தான் செய்வாள் கொடி"னு ப்ளாக் பேரை மாத்தறது பத்தி பொதுகுழு கூடி தீர்மானம் எடுத்து இருக்காங்களாம்... :)))
அது சரி... நீ இன்னுமா அந்த ஆண்டாளை மறக்கல... கோப்ஸ், என்ன ஏதுனு விசாரிங்க கொஞ்சம்...:)

//நாம பேசாம ஒரு புரட்சி எழுத்தாளரா ஆகலாம்னு முடிவு பண்ணி வெச்சுருந்தேன்//
யாரை தாக்கறேனு புரியல... நாராயண நாராயண...:)

நீ கவிதை எழுது தக்குடு...படிக்க நானாச்சு... :)) (இப்படி தான் ஒரு நாள் "உன்கிட்ட நெறைய திறமை இருக்கு... கதை எழுதேன் தக்குடு"னு கெளப்பி விட்டு வைஷு மேட்டர் வாங்கினோம்... கவிதைல என்ன வருதுன்னு பார்ப்போம்... ஹா ஹா)

//ஒரு வயது எனக்கும்...:)//
எல்லாருக்கும் ஒரே வயசு தான்...பின்ன ரெண்டு வயசா இருக்கும்? அந்த ஒரு வயசு என்னங்கறது தான் matters????

//ஒரு வருஷம் முன்னாடி இதே பிப்ரவரி மாசம் இரண்டாம் தேதி தான் ப்ளாக்க ஆரம்பிச்சேன்//
ஆஹா... ஹாப்பி ப்ளாக் பர்த்டே... ஆஹா... ஒரே வருசத்துல உங்கள் எழுத்தில் என்ன ஒரு முதிர்ச்சி(ஹா ஹா)... இன்னும் நெறைய எதிர்பார்க்கிறோம் மிஸ்டர் தக்குடு... :)))

//என்றும் வம்புடன்//
இந்த மட்டும் உண்மைய ஒத்துண்டதுக்கு பாராட்டுக்கள்... :)))

Jokes apart...super post... asusual kalakkal...

கொசுறு:
நீ என் ப்ளாக்ல ஒரு வரி கமெண்ட் போட்டா நானும் அப்படி maintain பண்ணுவேன்னு நீ எதிர்பார்த்தா... I'm sorry your honour, you'll greatly disappointed... எனக்கெல்லாம் வணக்கம் சொல்லவே நாலு paragraph வேணும்... :))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//Porkodi (பொற்கொடி) said... அங்கிள் நீங்க தூங்கறீங்கன்னு தான் நினைச்சேன், இதென்ன ஏதோ கோமால இருந்து எழுந்து நான் எங்க இருக்கேன்னு கேக்கற மாதிரி ஒரு கேள்வி? :-(//

why coma? ஒருவேள Timefreezer பக்கம் தெரியாம வந்துட்டாரோ...:)))

எல் கே said...

வாழ்த்துக்கள் தக்குடு தம்பி

Vasagan said...

முதல படிக்க ஆரம்பிச்ச உடனே, ஆஹா இந்த பையன் இத்தனை நாளா நல்லாதானே இருந்தான் AT , போர்க்கொடி blog -யை படிச்சு இப்படி ஆயிடனேன்னு, வருத்தல எடுத்த லஞ்ச் பாக்ஸ் சை மூடி வச்சிட்டு பக்கத்துல உள்ள நேபால் ரெஸ்டாரன்ட் போய் வருத்ததோடு சாப்பிட்டு பில்ல பார்த்து சந்தோசப்பட்டு வந்து சரி என்னதான் எழுதி இருக்கான்னு பார்த்தா தம்பி பர்த்டே கொண்டாடி இருக்கான்.

வாழ்த்துக்கள் தக்குடு தம்பி.

அன்புடன்
one of the ஓசிப்பேப்பர்

Mahi said...

தக்குடு,நிஜமாவே கதை எழுத ஆரம்பிச்சிட்டியோன்னு பயந்துபோய் படிக்க ஆரம்பிச்சேன்,அப்பாடா! :)

ப்ளாகின் முதல் ஆண்டு ஆனிவர்ஸரிக்கு வாழ்த்துக்கள்! இன்னும் பலப்பல ஆண்டுகள் பதிவுலகில் கலக்க வாழ்த்துக்கள்!

குட்டி கிருஷ்ணர் அழகா இருக்கார்.
///ஒரு வயது எனக்கும்...:)//
எல்லாருக்கும் ஒரே வயசு தான்...பின்ன ரெண்டு வயசா இருக்கும்? அந்த ஒரு வயசு என்னங்கறது தான் matters????
////////////புவனா,கரெக்ட்டா கேட்டீங்க! சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

வல்லிசிம்ஹன் said...

தக்குடு மா, இப்படிப் பயமுறுத்தலாமா. திகில் கதையெல்லாம் வேண்டாம் ராஜா:)
அன்பு தக்குடு அழகாப் பதிவு போட்டு வெள்ளிக்கிழமைதோறும் வெளிவரும் குட்டி அதாவது சிறிய படம் போல எழுதினாலே அது ஒரு வாரத்துக்குச் சிரிக்க வகை இருக்கும்.
ஒரு ஆண்டுகள்னு சொன்னால் நம்பவே முடியவே இல்லை!!
வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள்.

Anonymous said...

Dear Thakkudu, best wishes for your i'st blog anivrsry. valli madam sonna maathiri crime story/kavithai yethuvum neenga yeluthalainu yenga yaarukkum varutham kedaiyaathu, athu yeluthaa 1000 peeru irukka, but thakkudu way of writing thakkuduvalathan yelutha mudiyum.for that flavour only we are rushing to ur blog.keep rocking thakkudu.so ungalukku sappadu yellam kedaikkarthu through blogs..:P and who is that person calling //Dear Thakkudu//??..:) ha ha

Ranjani Iyer

Anonymous said...

Hi Thakkudu,

yethoo thodar kathai yelutha start panitaan poola iruku nu neeichu padika arramicha kadasila centimentaa mudichutiyea...thanks solli.

how ever..asusaul super :-)

Continue your work. All the very best!!!

by,
'Techops' mami ('Poorikelangu' pannipoottavaa)

lata raja said...

Congrats Thakkudu! innum niraiya ezhudhanum...all the very best!

Subhashini said...

When I started reading konjam bayama thaan irunthathu. Thakkuduvukku yennamo aayiduthunnu...:)) appuram vazhakkamaana paanikku vanthappuram thaan nimmathi aachu...:))
post potomaa, sirikka vachommanu irukkanum ketaiyaa konthai nee. namakku yethukku kathai, kathirikkai yellam...
vaazthukkal oru varuda kondatathukku
anbudan
subha

SRINIVAS GOPALAN said...

தக்குடு
1st anniversary க்கு வாழ்த்துக்கள். உன்னை அரம்பதுலேர்ந்து படிக்கலை.புளியோதரை series ல தான் படிக்க ஆரம்பிச்சேன். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் உன்னை தான் படிக்கறேன். இதான் உன்னோட success .
இதை அப்படியே maintain பண்ணி இன்னும் நிறைய followers வரணும்.
முக்கியமா நாளைக்கு உனக்கு வரப் போற தங்க்ஸ் உன்னோட இந்த friends circle ல புரிஞ்சவள வரணும்.
ஆசீர்வாதம்.

Geetha Sambasivam said...

ஓ, மனம் நிறைந்த வாழ்த்துகள்.

Shanthi Krishnakumar said...

Congrats thakkudu... Wish you many more humourous posts to come... Enjoy and peace out..

தக்குடு said...

@ கேடி - ஜிகினாஷ்ரீக்கு அண்ணா எல்லாம் கிடையாது வேணும்னா 'யேன்னா?'வா வேணும்னா ஒத்துக்கலாம்..:P

@ ரமணி சார் - வாழ்த்துக்கு நன்னிஹை!..:)

@ மீனா அக்கா - ரொம்ப நாள் ஆச்சு உங்களை பாத்து! நீங்க நக்கல் அடிக்கற மாதிரின்னா இருக்கு!!..;)

@ vgr - ஒம்மோட ஆதரவுக்கும் அன்புக்கும் தக்குடுவின் நன்றி!..:)

@ மன்னார்குடி மைனர் - ஓக்கே! கல்லிடைல நாங்க மத்தவாளுக்குதான் காது குத்துவோம்!...:)

@ சித்ரா அக்கா - நன்னிஹை!..:)

@ கவினயா அக்கா - :))

@ பாஸ்டன் நாட்டாமை - ஓக்கே நாட்டாமை!..:)

@ விஜெய் அண்ணா - தங்களின் அமோக ஆதரவிற்கு அடியேனின் நன்றிகள் பல...:)

@ வித்யா அக்கா - டாங்க்ஸ் அக்கா!..:)

@ கேடி - :))

@ வெங்கட் சார் - சந்தோஷம்!..:)

@ திவா அண்ணா - தன்யனானேன்!..:)

@ ஷோபா மேடம் - அதானே எப்பிடி தெரிஞ்சது?..:P

@ sriram அண்ணா - வீரவனல்லூர் வம்பு போகவே இல்லை..:)

@ ஆயிலு - :))

தக்குடு said...

@ ரசிகமணி - தக்குடுவோட பாஷை ஒரு நாளும் மாறாது!..:)

@ ஜெய்ஷ்ரீ அக்கா - //romba seriya sonna meena//கசினும் அசினும் கழுத்தை கட்டிக்கர்து போலருக்கு!!..:)

@ மாதங்கி - ரொம்ப சந்தோஷம்பா!..:)

@ இட்லி மாமி - நீங்க தான் நீட்டி முழக்குவேள்னு எல்லாருக்கும் தெரியுமே! ஸ்டீவ் வீட்ல காப்பி போட்ட கதையை ஒரு எபிசோட் எழுதின புண்ணியவதி ஆச்சே!..;P

@LK - நன்னிஹை!..:)

@ வாசகன் - நீங்களும் ஓசி பேப்பர் தானா??..:)

@ மஹி - தக்குடு எங்க ஒரு பெரிய எழுத்தாளர்(??!!) ஆயிடுவானோ?னு பொறாமை உங்களுக்கு..:)

@ வல்லிம்மா - பயம் வேண்டாம்! தக்குடுவுக்கு கதை எல்லாம் வராது!..:)

@ ரஞ்ஜனி - தங்கள் அன்புக்கு மிகவும் சந்தோஷம்!..:)

@ 'Tech ops'மாமி - ;))

@ லதா மாமி - :))

@ சுபா மேடம் - உத்தரவு எஜமான்..:)

@ கோபாலன் அண்ணா - அன்புக்கு மகிழ்ச்சி!..:)

@ கீதா பாட்டி - நன்னிஹை!..:)

@ சாந்தி மாமி - ரொம்ப சந்தோஷம் மாமி!..;)

இராஜராஜேஸ்வரி said...

மனம் நிறைந்த வாழ்த்துகள்!
இன்று போல் என்றும் வாழ்க!!

vidhas said...

Congrats thakkudu, ennum naarya ezhuthi elloriyum, serikka vai :-), apparam oru vizhyam Konjam kurumbu, fulla nakkal nnu mathu ;-)

Unknown said...

so sweet
vaalga valamudan annachu...

Anonymous said...

konjam late a padikkaren. aanalum ist year aaniversarykku manamarntha vazhthukkal. cake vettalama illa thakkudukku romba pidicha therattupal velli kinnaathula kudukkalama. readers opinion please!!!!sasisuga:)))

தக்குடு said...

@ siva - Thanks dude!..:)

@ suga - Thirattipaley yenakku ok, yeppa vanthu ungalta vangikkanum??..:))

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)