Thursday, January 27, 2011

அகிலா மாமியும் ஐ.டி கம்பெனிகளும்....

ஆழ்வார் பேட்டை ரெங்காச்சாரி துணி கடை அருகில் இருக்கும் ஒரு பிரபல பதிவர்கிட்ட போய் மாமி உங்களுக்கு ஹனிவெல் கம்பெனியை தெரியுமா?னு கேட்டா "ஓ வெரிவெல் கம்பெனியாச்சே கண்ணப்பா"னு நாலே வார்த்தைல அழகா சிரிச்ச முகத்தோட சொல்லிடுவா. அம்பத்தூர் எஸ்டேட்ல இருக்கும் ஒரு மூதாட்டி கிட்ட போய் "பாட்டி, உங்களுக்கு ஐகேட் கம்பெனியை தெரியுமா?"னு நாம கேட்டு முடிக்கர்துக்குள்ள "அங்க தான் எங்க நாத்தனாரோட இரண்டாவது நாட்டுபொண் வேலை பாக்கரா, அவள் கூட ஒரு ப்ளாக் வெச்சுருக்கா, அதுல ‘கான்பூர்’ கபாலீஸ்வரர் கோவில் பத்தி எழுதிண்டு இருக்கா, நான் தான் அதை எழுத சொன்னேன். உனக்கு கான்பூர் கபாலீஸ்வரர் பத்தி எதாவது தெரியுமோ?"னு 2 நிமிஷத்துல 50 விஷயம் பேசி நாம என்ன கேட்டோமோ அதை மறக்க வெச்சுடுவா.


இந்த மாதிரி எல்லாம் எங்க ஊர் மாமிகளொட மனசுல ஒரு கம்பெனியை பத்தி அவ்ளோ சுலபமா நல்ல எண்ணம் வராது. அவாளுக்கு வரிசையா ஒரு 5 - 6 கம்பெனி பேர் தெரியும். அதுக்குள்ள நம்ப கம்பேனி பேர் வந்துட்டா நாம பொழச்சோம், இல்லைனா மாமிகளோட தொடர் விசாரணைக்கு ஆளாக வேண்டி இருக்கும். அவாளோட லிஸ்ட்ல முதல் கம்பெனி @#$ஸிஸ். இந்த கம்பெனில மட்டும் ஒருத்தன் வேலை பாத்தாக்க அவன் ஒரு அறிவு கொழுந்து,கணக்கு புலி, கட்டி சமத்துனு அடுக்கிண்டே போகலாம். இயல்பா பாத்தாக்க அவாளும் நம்மை மாதிரியே சமத்துகுடமாத்தான் இருப்பா. இருந்தாலும் @#$ஸிஸ் சமத்துன்னா கொஞ்சம் ஒசத்தி தான்.அகிலா மாமி...:)

எங்க தெரு அகிலா மாமிக்கு கம்பெனியோட மொதலாளி பேரும் தெரியும். நாமளே நழுவி ஓடினாலும் இந்த மாமி விடமாட்டா! ஏன்டாப்பா! பெங்களூர்ல தானே நோக்கு வேலை?னு மெதுவா சிபிஐ அதிகாரி மாதிரி ஆரம்பிப்பா. அந்த சமயம் நான் வேலை பாத்த கம்பெனிக்கு 83 நாட்டுல ஆபிஸ் இருந்தாலும் அகிலா மாமிக்கு தெரியாத கம்பெனிதான் அது.அதுனால மெதுவா பம்ப ஆரம்பிச்சேன். உடனே அந்த மாமி "என்னோட அண்ணா பிள்ளை பெங்களூர்ல இருக்கும் @$fooooooஸிஸ்ல(பெரிய கம்பெனிங்கர்துனால foooo நீட்டிதான் சொல்லுவா) இருக்கான்டா, அவன்ட சொல்லி உனக்கும் அங்க வேலை வாங்கி தரலாம்னா நீ இஞ்ஜினியர் இல்லையே!"னு சொல்லி கடுப்பேத்துவா. அவாளோட அண்ணா புள்ளையும் கோரமங்கலால(பெங்களூர்ல கலர்புல்லான ஒரு இடம்) என்னோட நித்யம் உடுப்பி உபஹார்ல ராத்ரி டிபன் சாப்டுவான். அவன் நித்யம் புலம்பர்து எனக்கு தான் தெரியும்.


"பேருதான் பெரிரிரிரிரிய @#$ஸிஸ், நயாபைசாவுக்கு ப்ரயோஜனம் இல்லை, “பேரு பெத்த பேரு தாகத்து நீலு லேது”ங்கர கதையா இவன் client வருவாங்கர்த்துக்காக எங்க ப்ராணனை வாங்கரான்டா. திங்கட்கிழமை ஆனா டை கட்டிண்டு வாங்கோ! புதன் கிழமை ஆனா எல்லாரும் கோமணம் கட்டிண்டு வாங்கோ! வெள்ளிக் கிழமை மட்டும் எல்லாரும் காத்தாட வாங்கோ!னு ஸ்கூல் மாதிரி ஆயிரத்தெட்டு ரூல்ஸு வேற. ஊருக்கு வெளில கம்பேனியை கட்டி வச்சுட்டு அங்க அவனோட பஸ்ல கூட்டிண்டு போகர்த்துக்கு அன்னியன்ல வர சதா மாதிரி பஸ் பாஸ் எடுக்கனும்டா! நம்ப கம்பெனிதானே ஒரு மாசம் கழிச்சு எடுக்கலாம்னு இருந்தோம்னா இரண்டு அல்லக்கைகள் செக்கிங் எல்லாம் பண்ணி நாம வித்தவுட்ல வரும் விஷயத்தை மொத்த கம்பெனிக்கும் மெயில் அனுப்பி நாறடிச்சிடுவாங்க. இவ்ளோ களோபரத்துலையும் நீ ஏன் அந்த மானங்கெட்ட பஸ்ல போறாய்?னு நீ நெனைக்கலாம். அதுக்கும் ஒரு காரணம் இருக்கு, ஒரு குஜராத் பிகர் கொஞ்ச நாளா "சுனியே! சுனியே!"னு இப்பதான் பேச ஆரம்பிச்சு இருக்கா. அவளோட கள்ளம் கபடம் இல்லாத தூத்பேடா முகத்துக்காக தான் இவாளோட எல்லா கொடுமையையும் சகிச்சுண்டு அந்த பஸ்ல போயிண்டு இருக்கேன்டா மாப்ளே!"னு மூச்சு விடாம அவன் சொன்னதை எல்லாம் நான் அகிலா மாமி கிட்ட சொல்லிண்டா இருக்க முடியும்.


லிஸ்ட்ல அடுத்து இருப்பது @#ரோ. பஞ்சாப்ல ஆத்துக்கு ஒருத்தரை மிலிட்டரிக்கு அனுப்பர மாதிரி எங்க ஊர் முழுசும் தெருவுக்கு 10 பேர் இந்த கம்பெனிலதான் மண்ணள்ளி போட்டுண்டு இருக்கா. பெருமாள் கோவில்ல தீபாராதனை கற்பூர தட்டு போய் தீர்த்தம் சாதிக்கர்த்துக்கு நடுவில் வரும் இடைவெளியில் “எங்க ப்ரியா காப்பி போட்டாக்க கண்ணை மூடிண்டு குடிக்கலாம்!னு சொன்ன காலம் போய் இப்பெல்லாம் "காயத்ரி முதல் ரவுண்டு இன்டர்வியூ போகும் போதே, 'அம்மா, நேக்கு இங்கையே கிடைச்சா நன்னா இருக்கும்னு தோன்றர்து பஸ் பஸ்ஸா எல்லாரும் இங்க வந்து இறங்கராமா!'னு பெங்களூர்லேந்து போன் பண்ணி இப்ப தான் சொன்ன மாதிரி இருக்கு இப்போ அவளுக்கு கீழ 8 பேர் வேலை பாக்கறாளாம்!" "எங்காத்து ஹரிஷுக்கு கூப்டு வேலை குடுத்தா அந்த கம்பெனில" மாதிரியான மாமிகள் சம்பாஷனைகள் இப்பெல்லாம் சர்வசாதாரணா ஆனதால ரேடிங்ல அசைக்க முடியாத இடத்துல இன்னமும் விடாமல் டால்டா விற்கும் அந்த கம்பெனி இருக்கு.கோவில் மாமி....:)

மீசை இருந்தா விசு! மீசை இல்லைனா பசு!னு சொல்லும் ஜீன்ஸ் பட செந்தில் மாதிரி இந்த ரெண்டு கம்பேனிக்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம். அகிலா மாமியோட அத்தங்கார் பொண்ணு கூட C-ல ஆரம்பிக்கும் அந்த கம்பெனில தான் வேலை பாக்கரா!னு அடிக்கடி பீத்துவா, ஒரு தடவை பீத்தல் ஓவர்ப்ளோ ஆகி அத்தங்கார் பொண்ணு ஆபிஸுக்கு ஒரு நாள் போகலைனா கூட அங்க ஒரு வேலை நடக்காது தெரியுமோ!னு பக்கத்தாத்து கோவில் மாமி கிட்ட சுவாரசியமா சொல்லிண்டு இருக்கும் போது, நடுல போன ஹரிகுட்டி சும்மா இருக்காம "ஏது அவாட்டதான் எல்லா பாத்ரூமோட சாவியும் இருக்கா"னு கேட்டுட்டு ஓடியே.. ஏஏஏஏ போய்ட்டான். “C#$-ல எதை வெச்சு ஆள் எடுக்கரான்னே தெரிலைடா, ஒவ்வொருத்தரும் என்னப் பாரு! உன்னப் பாரு!னு லட்டுலட்டுவா இருக்கா!”னு எங்க அண்ணா சொன்னது எவ்வளவு நிஜம்னு நேர்ல பாத்ததுக்கு அப்புறம் தான் எனக்கு தெரிஞ்சது.


“T#$-ல இருக்கும் எங்காத்து மாப்பிள்ளை அமெரிக்காவுக்கு போயிட்டு போயிட்டு வருவார்!”னு சொல்லும் மாமியிடம் US என்ன லூஸ்மோஷனா? போய்ட்டு போய்டு வரர்த்துக்கு!ன்னு கேக்க வாய் வந்தாலும் சிரிப்பை அடக்கிண்டு ‘ஸ்திரமா ஒரு இடத்துல நம்பாத்து மாப்பிள்ளை இருந்தான்னா நீங்க பாட்டி ஆக முடியும்!’னு ‘ரொட்டிசால்னா’ சேகர் சென்டிமென்டா பாயிண்டை பிடிப்பான்.

இது போக ‘தோசக்கல்’ மாதிரி ஒரு கம்பெனி,’அக்குபஞ்சர்’ மாதிரி ஒரு கம்பெனினு லிஸ்ட்ல இருக்கு. இது தவிர மத்த கம்பெனில நாம சீனியர் மேனேஜராவே இருந்தாலும் அகிலா மாமி ஒத்துக்க மாட்டா. எட்டாம் கிளாஸ் பாஸ் பெரிசா? SSLC-பெயில் பெரிசா? கதைதான்........:)

48 comments:

Porkodi (பொற்கொடி) said...

அந்த ஜோக்கை ஏன் இழுக்கறீங்க தக்குடு.. நம்ம ஊர்ல இன்ஃபோசிஸ் டிசிஎஸ் பெரிசா... இங்க வந்தா அவங்க தான் மத்த பெரிய கம்பெனி அவுட்சோர்ஸ் பண்ற‌ ப்ராஜெக்டை செய்யறாங்க, அதுனால அதுக்கே ஒரு இளக்காரம்.. ஒரே காமெடி பாஸ்.

Porkodi (பொற்கொடி) said...

ஷப்பா.. இத்தனை காமெடிக்கு நடுவிலயும் இந்த போஸ்டை படிச்சதும் செம எரிச்சலா இருந்துது, அதான் போஸ்டோட வெற்றியே!

paravasthu sundar said...

periya kambaany (company) la velai pakkurathu avlo sugam kudukkaathu. Kurippa inposis.

thakkudu anubavichu sonna maathiri irukku.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//அவன்ட சொல்லி உனக்கும் அங்க வேலை வாங்கி தரலாம்னா நீ இஞ்ஜினியர் இல்லையே//
எங்காத்துல ஒரு இஞ்ஜினியர் இருக்கார்.. உங்க மாமிட்ட சொல்லி ஒரு வேலை ஏற்பாடு பண்ணலாமோன்னோ.. :))))

ட்ரெஸ் code பத்தி அடிச்ச கிண்டல் super...LOL :)))

//அன்னியன்ல வர சதா மாதிரி பஸ் பாஸ் எடுக்கனும்டா! //
லோகத்துல யார்க்கும் இப்படி ஒரு கம்பேரிசன் தோணுமோ... பஸ் பாஸ் எடுத்ததை அசினே மறந்த்துருப்பா இந்நேரம்... :))))

//எங்க அண்ணா சொன்னது எவ்வளவு நிஜம்னு//
அஞ்சு வயசுல அண்ணன்தம்பி பத்து வயசுல பங்காளி... IT கம்பெனி போனா மொத்தமும்காலி...:)))

//அக்குபஞ்சர்//
one of my friend works there...never thought of this term to tease her...ha ha ha... thanks for the tip... LOL ...:)))))

Porkodi (பொற்கொடி) said...

//“C#$-ல எதை வெச்சு ஆள் எடுக்கரான்னே தெரிலைடா, ஒவ்வொருத்தரும் என்னப் பாரு! உன்னப் பாரு!னு லட்டுலட்டுவா இருக்கா!”னு எங்க அண்ணா சொன்னது//

அம்பியின் அம்பிகைக்கு மெயில் தட்டியாச்சு.

Chitra said...

“T#$-ல இருக்கும் எங்காத்து மாப்பிள்ளை அமெரிக்காவுக்கு போயிட்டு போயிட்டு வருவார்!”னு சொல்லும் மாமியிடம் US என்ன லூஸ்மோஷனா? போய்ட்டு போய்டு வரர்த்துக்கு!ன்னு கேக்க வாய் வந்தாலும் சிரிப்பை அடக்கிண்டு ‘ஸ்திரமா ஒரு இடத்துல நம்பாத்து மாப்பிள்ளை இருந்தான்னா நீங்க பாட்டி ஆக முடியும்!’னு ‘ரொட்டிசால்னா’ சேகர் சென்டிமென்டா பாயிண்டை பிடிப்பான்.


......
ஹா,ஹா,ஹா,ஹா, ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... இனி யாரு இப்படி என் கிட்ட சொன்னாலும், இதுதான் ஞாபகம் வந்து நல்லா சிரிச்சு வைக்க போறேனே! ஹையோ.....

Yaathoramani.blogspot.com said...

தக்குடு..ரொம்பக் குறும்பு...ரொம்ப நக்கல்
ரசித்து இர்ண்டு மூன்று முறை படித்தேன்
தொடர வாழ்த்துக்கள்.

Mahi said...

நல்ல காமெடி போஸ்ட் தக்குடு! :)

sriram said...

நீ கோக்ரான் மேக்ரான் கம்பெனியில ஒட்டகம் மேய்க்கிறதைச் சொன்னதும் மாமியிடமிருந்து வந்த ரியாக்‌ஷனைச் சொல்லவே இல்லயே தக்குடு!!!

கலக்கல் இடுகை..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

vgr said...

nee "gajaoda dhosthu" nu sonnathukku...
akila mami, sita paatti, geetha akka, koki manni, vayadi thangai vatsu, altaps ananthi, velli kolusu vedha, mayavaram malathi, kozhanda sudha, rava idli ranjani...ivallam enna sonnanu sollavelaye thakkudu :)

nanum pakren oru post layavadu oru Aan magan peru varumanu...kanome...

vgr

ஆயில்யன் said...

செம!!!

ஹம்ம்ம்ம்ம்ம் நாம மட்டும் ஏன் பாஸ்.....?!!


இப்படிக்கு
தக்குடு ஒட்டகம மேய்க்கும் அதே பாலைவனத்தின் இன்னொரு ஸோனிலிருந்து
ஆயில்யன்

ஆயில்யன் said...

//nanum pakren oru post layavadu oru Aan magan peru varumanu...kanome...//

ஹாஹாஹா


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

mightymaverick said...

உங்க அண்ணன் அந்த சோப்பு டப்பா @*ரோ கம்பெனியில மராத்தி குட்டிக்கு சோப்பு போட்ட கதையை எல்லாம் இதுல சேக்கவே இல்ல... யாருக்கு தெரியும், அந்த கம்பெனியில பொட்டி தட்டுற வேலை பார்க்கிறாங்களா; அல்லது பொட்டி தூக்கிட்டு (இவங்க சோப்பு டப்பாவுல இருந்து எல்லா துறையிலேயும் இருக்கதுனால பொட்டி தூக்கிட்டு விற்பனை பிரதிநிதி வேலை செய்தாலும் இந்த கம்பெனியில வேலை செய்யுறேன்னு சொல்லிக்கிட்டு இருந்தா?) அலையுறாங்களான்னு...

#@எல் கம்பெனிய இப்படியும் கூட சொல்லலாமா (தோசக்கல்) ?

//இப்போ அவளுக்கு கீழ 8 பேர் வேலை பாக்கறாளாம்!"//எனக்கு கீழ கூட இப்போ 20 பேர் வேலை பாக்கிறாங்க... நான் இருக்கறது எட்டாவது மாடி ஆபீசுல; ஏழாவது மாடி ஆபீசுல 20 பேர் இருக்காங்க... ஹிஹிஹி...

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

டேமேஜ் அதிகமோ? நல்லவேளை நான் பொட்டி தட்டல!!!

அப்பாவி தங்கமணி said...

//அன்னியன்ல வர சதா மாதிரி பஸ் பாஸ் எடுக்கனும்டா! //
லோகத்துல யார்க்கும் இப்படி ஒரு கம்பேரிசன் தோணுமோ... பஸ் பாஸ் எடுத்ததை அசினே மறந்த்துருப்பா இந்நேரம்... :))))

பேஸ்! பேஸ்!! "இட்லி மாமி"
இது மைன்ட் வாய்ஸ் மகாதேவியோடது மாதிரின்னா இருக்கு, சுட்டுடேளா?

இப்படிக்கு,
தக்குடு,ஆயில்யன் ஒட்டகம் மேய்க்கும் அதே பாலைவனத்தின் இன்னொரு இடத்திலிருந்து
பாலகுமாரன்.

மனம் திறந்து... (மதி) said...

நம்ம கடைப் பக்கம் ஒரு விசிட்டு குடுங்கோ! டுபுக்கு தல, கேடியக்கா, பாவை இவங்கல்லாம் வந்து வாழ்த்திட்டு போயிட்டாகளே!

இன்னைக்கே வந்தா எல்லாருக்கும் வடை உண்டு...உண்டு...உண்டு!


கடை விலாசம் (என் முதல் பதிவு) இதோ: http://thirandhamanam.blogspot.com/2011/01/blog-post_27.html

கொஞ்சம் பிசி...அப்பறமா வந்து கமெண்டு போடறேன்...ஒ.கே?

வெங்கட் நாகராஜ் said...

அக்குபஞ்சர்....:))))

RVS said...

அதென்னவோ கெட்டவார்த்தைக்கு போடறாப்ல கம்பெனி பேருக்கு @!ல்லாம் Prefix போடறியே.. அவாள்லாம் கோச்சுக்கப்போறா....
//டால்டா விற்கும் அந்த கம்பெனி இருக்கு.// என்ன சேட்டு கம்பனியா.... நக்கல் நாயகம்....
//எங்க அண்ணா சொன்னது எவ்வளவு நிஜம்னு நேர்ல பாத்ததுக்கு அப்புறம் தான் எனக்கு தெரிஞ்சது.// பேஷ்..பேஷ்... ராமா லக்ஷ்மனாளா சேர்ந்து சைட் அடிச்சுருக்கேள்!!! மன்னி ப்ளாக் படிப்பாளா? மன்னையில் எங்க தெருவில இதே மாதிரி சகோதாரால்லாம் சேர்ந்துண்டு அடிச்ச லூட்டி ஒரு மன்னார்குடி டேஸ் பதிவு தாங்கும்.. பார்க்கலாம்...;-)

//sriram said... நீ கோக்ரான் மேக்ரான் கம்பெனியில ஒட்டகம் மேய்க்கிறதைச் சொன்னதும் மாமியிடமிருந்து வந்த ரியாக்‌ஷனைச் சொல்லவே இல்லயே தக்குடு!!!//
இதையே ஸ்ரீராம் கூட சேர்ந்துண்டு நானும் கூவிக்கிறேன்.... வெ.ரா!!! ;-) ;-)

Matangi Mawley said...

boss! :D ultimate pongo! TCS dress code nejamaave romba toppu-takkar! :D LOL....

US porathum semma kaumedeee!

kadeseela antha doodhbeda figure enna aachchu???

Subhashini said...

அக்மார்க் தக்குடு குறும்பு. நானும் பாஸ்டன் கேக்கற கேள்வியை ரிப்பீட்டு.....))
அன்புடன்
சுபா

Harini Nagarajan said...

aamam ithuku neenga company pera solliye irukalam. ipdi maraimugama pesarathu yennavo antha company-a thittara maariye enakku padarathu... :P

Sh... said...

தக்குடு, டீ, காபி, ஸ்நாக்ஸ் மேல உங்களுக்கு ஏன் இவ்ளோ கோவம்? ஆனாலும் அந்த லூஸ் மோஷன் மேட்டர் செம காமெடி.

but all said and done, many of the IT professionals feel proud if Infosys is in their resume.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...
பேஸ்! பேஸ்!! "இட்லி மாமி"
இது மைன்ட் வாய்ஸ் மகாதேவியோடது மாதிரின்னா இருக்கு, சுட்டுடேளா?//

Aahaa... always this mindvoice scores.... avvvvvvvvvvv.....(:

பத்மநாபன் said...

மாமிகளிடம் சிக்கி சீரழிவதற்கு தப்பி செல்வதே உத்தமம்... காத்தை புடுங்குவதிலேயே குறியாய் இருப்பார்கள்..

உண்மையை உடச்சு சொல்லிட்டே தக்குடு ...

தெய்வசுகந்தி said...

ஹா ஹா ஹா !!! கலக்கல்!!

Jaishree Iyer said...

I enjoyed this post..Asusual Superb!

Madhuram said...

Super post Thakkudu. Romba naal kazhichu vizhundhu vizhundhu sirichen. Bandaid/iodex vaangina paisa va needhaan un kekkran mekkran company la irundhu reimburse pannanum.

My mother is a regular visitor here. She enjoys all your posts very much. Unga annavoda blogum visit pannuvanga. Dubuku and Idli mamiyoda blogum vittu vekkaradhu illa. Nalla time pass avangalukku.

Madhuram said...

//“C#$-ல எதை வெச்சு ஆள் எடுக்கரான்னே தெரிலைடா, ஒவ்வொருத்தரும் என்னப் பாரு! உன்னப் பாரு!னு லட்டுலட்டுவா இருக்கா!”னு எங்க அண்ணா சொன்னது எவ்வளவு நிஜம்னு நேர்ல பாத்ததுக்கு அப்புறம் தான் எனக்கு தெரிஞ்சது. //

Enga amma romba varuthapattaanga unga anna blog update panniye romba naal aachenutu. Ippa puriyaradhu enna reason nuttu. Idhu madhiri nee ekkuthappa niraiya pottu kuduthu, veetula sema dose pola. Unga manni nanna gavanichirukka polairukku. Edhuku unakku indha naaradhar vela?

Shobha said...

தக்குடு , அகிலா மாமிக்கு , @$கிள், ##ஹூ , @#$சாப்ட் கம்பெனி பத்தியெல்லாம் இன்னம் தெரியாதா ?
ஷோபா

Anonymous said...

Ha ha ha ha...irungoo naan sirichu mudichukkaren.yenna kurumbu ungalukku!chanceyy illai.naan sirichathu poothaathunu yennoda frndsaiyum kuptu kattinaa yellarum Rofl..:) dress code varnanaiyai yenga HR paakkanum ans cmmt about US frqnd trip also suuper dooper.perumal kovil conversation typical thakkudu style. why don't you write a series in this topic? Overall post is breathless comedy! keep it up.

@ vgr - //rava idli ranjani// helloo boss,yennai yethukku vambukku ilukkarell??..;))

Ranjani Iyer
'Akila'ulaka thakkudu rasikaigal mandram

SRINIVAS GOPALAN said...

நானும் இந்த மாதிரி நிறைய மாமிகள்ட மாட்டிண்டு முழிச்சிருக்கேன். ஏதோ அவாத்து பொண்ண கல்யாணம் பண்ணி கொடுக்கற மாதிரி அவ்ளோ interrogation. citibank ல வேலை பண்றேன்னு சொன்னால் ஏண்டாப்பா city union bank ல வேலை பாக்கவா அமெரிக்க போய் படிச்சேன்னு கேள்வி வரும்.
அதுவும் கோயில் ல இப்படி பேசற போது இந்த மாமி எல்லாம் சாமி பாக்க வராளா இல்லை வம்பு பேச வராளானு இருக்கும்.

Kavinaya said...

//“T#$-ல இருக்கும் எங்காத்து மாப்பிள்ளை அமெரிக்காவுக்கு போயிட்டு போயிட்டு வருவார்!”னு சொல்லும் மாமியிடம் US என்ன லூஸ்மோஷனா? போய்ட்டு போய்டு வரர்த்துக்கு!ன்னு கேக்க வாய் வந்தாலும் சிரிப்பை அடக்கிண்டு ‘ஸ்திரமா ஒரு இடத்துல நம்பாத்து மாப்பிள்ளை இருந்தான்னா நீங்க பாட்டி ஆக முடியும்!’னு ‘ரொட்டிசால்னா’ சேகர் சென்டிமென்டா பாயிண்டை பிடிப்பான்.//

:))) தக்குடு, ரூம் போட்டு யோசிக்கறது நன்னாவே work out ஆறது :)

sannadhi street said...

akila mami kadhai suuuuuper. Nee yentha streetnu innum yenakku pudipadalai, aanaa kusumbum kurumbum attakasamaa irukku. US la naanga yellarum read panni siruchundeyy irukkom. 2 mami photosum attakasam konthai.

Kallidai mami

Shanthi Krishnakumar said...

Superb... adhuvum திங்கட்கிழமை ஆனா டை கட்டிண்டு வாங்கோ! புதன் கிழமை ஆனா எல்லாரும் கோமணம் கட்டிண்டு வாங்கோ! வெள்ளிக் கிழமை மட்டும் எல்லாரும் காத்தாட வாங்கோ!னு ஸ்கூல் மாதிரி ஆயிரத்தெட்டு ரூல்ஸு வேற" LOL

வல்லிசிம்ஹன் said...

சாரி தக்குடு மா. ரங்காச்சாரி கடைக்குப் பக்கத்தில இருக்கிற மாமி சரியான மக்கு. ஹனி வெல்லா. ஹனி நல்லதா இருக்குமான்னு கேக்கறா:)))
மாமிகள் போட்டோல எத்தனை லட்சண்மா இருக்கா!!பொண்கள் யாராவது இருக்காளான்னு கேட்டு வச்சுக்கோ.(இதுவரை கண்டு கொள்ளாமல் இருந்தால்)
குசும்பு செய்யறதில திலகமாயிட்ட. நன்னா இருடா கோந்தே:)

Anonymous said...

Super post Thakkudu...

Antha loose Motion, Maapilai US..mamiyar paati example super...

Infosys uniform example kalakal.

super comparison of wipro with Military ku aal yedukarthu...

Hari kutti..bath room saavi irukaa nu ketadhu..

mothathula blog super..I have read couple of times...

Keep posting :-)

'Techops' mami

சிவகுமாரன் said...

IT கம்பனியில வேலை பாக்குற உங்களுக்கே இப்படின்னா chemitry படிச்சிட்டு ஆசிட் தூக்கி ஆணி புடுங்குற எங்களுக்கு என்ன மரியாதை கெடைக்கும்னு நெனைச்சு பாருங்க தக்குடு.( இப்பெல்லாம் chemistryன்னு சொல்லவே கூச்சமா இருக்கு. ஒழிக கலா மாஸ்டர்)

தக்குடு said...

@ கொடி - எரிச்சல்னா அப்போ போஸ்ட் நன்னா இல்லையா??..:(

@ பரவஸ்து அண்ணா - அதே! அதே!

@ ATM அக்கா - கம்பேரிசன்ல தான் வண்டி ஓடுது..:)

@ கொடி- இந்த கமண்டை எங்க மன்னியும் ஒத்துண்டாச்சு அல்ரெடி!..;PP

@ சித்ரா அக்கா - செம காமெடி போங்கோ உங்களோட..:)

@ ரமணி சார் - சந்தோஷம்!..:)

@ மஹி - :))

@ பாஸ்டன் நாட்டாமை - நான் தான் சொல்லவே இல்லையே!!..:)

@vgr - ஒரு சின்ன திருத்தம் அது வேதா இல்லை 'வெள்ளி கொலுசு விஜி'..:PP

@ ஆயிலு - எனக்கு எதிரா ரிபீட்ட்ட்டு போடர்தே பொழப்பா போச்சு உமக்கு..;P

@ வி கடவுள் - சூப்பர் தகவல்..;)

@ பாலகுமாரன் - அண்ணாச்சி, நம்ப பதிவுக்கு வந்தும் தங்கமணிக்கு கமண்டா??..;))

@ மதி - ஓக்கே!..;)

@ வெங்கட் - ஆமாம்..:)

@ மன்னார்குடி மைனர் - போடுங்கோ படிச்சு சிரிக்கறோம்!..;)

@ மாதங்கி - நீங்க சிரிப்பேள்னு எனக்கு தெரியும்..:P

@ சுபா மேடம் - பாஸ்டனுக்கு சொன்ன பதில் தான் உங்களுக்கும்..:)

@ ஹரிணி - நேரடியா பேர் சொன்னா ஒரு சுவாரசியம் இருக்காது..:)

தக்குடு said...

@ ஷ்ஷ்- நீங்க சொல்லர்து உண்மைதான்! (குக்கர் விசில் மாதிரி இருக்கு உங்க பேர்)..:))

@ ரசிகமணி - முற்றிலும் உண்மை..:)

@ சுகந்தி - நன்னிஹை!..;0

@ ஜெய்ஷ்ரீ மாமி - சந்தோஷம் பா!..;)

@ மதுரம் அக்கா - எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளோ நாள் ஆச்சு உங்களை பாத்து! செளக்கியமா அக்கா? ஆக அம்மவுக்கும் இப்போ என்னோட வண்டவாளம் எல்லாம் தெரியும்..:PP

@ ஷோபா மேடம் - தெரியாது, அவாளோட அண்ணா நாட்டுப்பொண் யாருக்காவது கிடைச்சா தெரியும் அவாளுக்கு..:P

@ ரஞ்ஜனி - ரொம்ப சந்தோஷம் பா! அந்த ரவாஇட்லி பேர் நன்னா தான் இருக்கு!!..:P

@ கோபாலன் அண்ணா - ஹா ஹா நல்ல காமெடி!..;)

@ கவினயா அக்கா - நன்னிஹை!..:)

@ கல்லிடை மாமி - உங்களை பாத்தாளே எனக்கு பயமா இருக்கு, இதுல தெரு பேரை சொல்லர்த்துக்கு நான் என்ன ...:)

@ சாந்தி மாமி - ஆமாம்!..:)

@ வல்லிம்மா - நமக்கு கொழந்தேள் தான் கண்ணுக்கு படறா!!..;)

@ 'Tech ops'மாமி - ;))

@ குமரன் - நான் ஒன்னும் ஐ டி கம்பெனி இல்லை, சாதாரண கணக்கு புள்ளை..:)

இராஜராஜேஸ்வரி said...

எல்லா கம்பெனிகளையும் கலாய்த்து, காயப்போட்டாச்சு!!

தக்குடு said...

@ Rajeshwari madam - Thanks for your comment...:)

Anonymous said...

soooooooooper!

King Vishy said...

Suuuuuper post thakkudu!!

"திங்கட்கிழமை ஆனா டை கட்டிண்டு வாங்கோ! புதன் கிழமை ஆனா எல்லாரும் கோமணம் கட்டிண்டு வாங்கோ! வெள்ளிக் கிழமை மட்டும் எல்லாரும் காத்தாட வாங்கோ" - idha padichuttu naa sirichadhukku, inga naalu vellaikaraanungalukku vilakkam solla vaendiyadhaa poachu!!

Adhu ennavo therila, enakkum eppovumae idheyyyyy prechnai than.. Naan romba aaraichi panni 'nalla company' nu mudivu panni engayachum poi saendhaa, yaarukkumae company paer theriya maatengudhu.. "Paavam.. nalla padikkala pola irukku.. Andha 4 periya company la vaelai kedaikkala" nu assume pannikaraa..

Ramprasad said...

Amazing Stuff...I have encountered this in most of the functions i attend, All mamis will ask this and say that is the best company na, yen anga try pannalaya nu...

Poitu Poitu vara athu yenna loose motiona....top class sir...

Nandhini said...

தக்குடு, ரொம்ப நல்லாவே இந்த IT கம்பெனிகளை புட்டு புட்டு வெச்சுடிங்க!!!

அதுவும் ஊருக்கு வெளியில கம்பெனி கட்டிட்டு பஸ் பாஸ் எடுக்கலேனா அவா பண்ற பிகுவ நச்சுன்னு எழுதிருக்கேள் !!!டிசிஎஸ் பத்தி எழுதினது சூப்பர்! யுஎஸ் என்ன லூஸ் மோஷனா? ஹஹஹஹஹஹா !!

arul said...

very nice post with reality

Unknown said...

I have shared this on FB

Unknown said...

என்ன பேரு இது தக்குடு.? கோபாலகிருஷ்ணா சாரின் அறிமுகம் பாத்து இங்க வந்தேன். வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை என்னா ஒரு நக்கல் நையாண்டி. செரிச்சு சிரிச்சு கண்ணெல்லாம் வேத்துடுச்சி ஹா ஹா

Srinivasan J said...

தக்குடு வுக்கு நன்னிஹை!..:)இந்த மாமி கள் பண்ணுகிற தொல்லைகளை இவ்வளவு ரசனை யாக எழுதியதற்கு

// வெள்ளிக் கிழமை மட்டும் எல்லாரும் காத்தாட வாங்கோ // இந்த ஒரு நாளுக்காக தான் மற்ற நாலு நாளும் பொருத்து போகிறார்கள்

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)