Friday, April 2, 2010

சமையலும் சங்கீதமும்

என்னடா இது?? சக்கரை பொங்கலுக்கும் சங்கராபர்னத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?னு யோசிக்க வேண்டாம். சங்கீதம் & சமையல் இரண்டுமே பல கோணங்களிலும் ஒத்துப் போகக்கூடிய நண்பர்கள்.

சங்கீதத்துக்கும், சமையலுக்கும்தான் உடனடி ரிசல்ட் வந்துவிடும். அருமையான பாடல் தேர்வுடன், அற்புதமான குரல்வளம் உள்ள ஒரு வித்வான் பாடிண்டு இருக்கார்னா, அந்த சபையே நிறைஞ்சு இருக்கும், பல பேர் உக்காச்சுக்கர்துக்கு இடம் இல்லைனா கூட அவ்ளோவா கண்டுகொள்ளமாட்டார்கள். கடைசி வரிசைல ஒரு குட்டியூண்டு இடத்துல கூட அட்ஜெஸ்ட் பண்ணிக் கொண்டு கேட்பவர்கள் ஏராளம், உதாரணம் அருணா சாய்ராம் அவர்கள் கச்சேரி. அவருடைய கச்சேரிகளில் இருக்கும் ரசிகர்கள் முகத்தில் ஒரு திருப்தியும், சந்தோஷமும் தாண்டவம் ஆடுவதை நீங்கள் பார்த்து ரசித்ததுண்டா??அதேசமயம் தாளமும் ஸ்ருதியும் ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டு ஓடிக்கொண்டு இருந்ததுன்னா, முதல் வரிசைல அமர்ந்திருக்கும் பெண்மணி," ஓ! கிச்சன்ல காஸை அணைக்காமையே வந்துட்டேன்" என்று சொல்லி(புழுகி)விட்டு மெதுவாக நகர்ந்துவிடுவார்.



சமையல்லையும் அதே மாதிரிதான், சமைத்து வச்சுருக்கர அந்த வஸ்துவை முகரும் அழகிலேயே அதோட ரிசல்டை நாம் தெரிந்து கொள்ளலாம். சாப்பிடுபவருடைய முகத்தை பார்த்தே நாம் புரிந்து கொள்ளலாம். எனக்கு தெரிஞ்ச ஒரு மாமாவுக்கு ரசம்னா கொள்ளை பிரியம். ட்ரூர்! ட்ரூர்!னு கையில் வாங்கி உறிஞ்சிவிடுவார். ரசம் அவ்வளவாக சோபிதம் இல்லைனா அந்த மனுஷர் ரொம்ப கடுப்பாகிவிடுவார். சில இடங்களில் தங்கமணிக்கு பயந்து அவர்கள் என்ன ஆக்கிப் போட்டாலும் ஆஹா! அற்புதம்!னு சொல்ல வேண்டிய நிர்பந்தத்தில் சில ரங்கமணிகள்(உண்மையான அப்பாவிகள்) சிக்கிக்கொள்வதுண்டு. எப்படி ஒரு சாமான் நன்னா இருக்கு!னு சொல்லும் போது சந்தோஷமா நாம ஏத்துக்கரோமோ, அதேபோல் குறைகள் சொன்னாலும் ஏத்துக்கொள்ளும் மனப்பக்குவம் சமைப்பவர்களுக்கு அவசியம் இருக்க வேண்டும்.

சங்கீதத்தை 'காந்தர்வ வேதம்'னு சொல்லும் வழக்கம் உண்டு. பாடக்கூடிய வித்வான் அந்த பாட்டோட ஒன்றர கலந்து நன்னா லயிச்சு பாடவேண்டும். சங்கீதத்தின் மாதா பிதாவான ஸ்ருதி & தாளம் பிசகாமல் பாடவேண்டும். வித்வான் மோஹன ராகம் பாடரார்னா, அது உண்மையிலேயே மோஹனராகமா இருக்கனும். மஹாராஜபுரம் சந்தானம் அவர்களோட 'குழழூதி மனமெல்லாம்' பாட்டுக்கு தொடக்கத்தில் 'ஒய்யாரக் கண்ணன்'னு ஒரு விருத்தம் வரும். கண்ணை மூடிக் கொண்டு மனம் மயங்கி கேட்டால் அப்படியே கண்ணன் ரூபம் நமக்குத் தெரியும். அதிலும் ‘அந்த செவியிலொரு மகர குண்டலம் ஆட!னு ஒரு வரியில் அந்தக் குண்டலம் ஆடுவது போலவே நமக்கு இருக்கும்.



சமையல் பண்ணக்கூடியவர்கள் அந்த காரியத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டோடு செய்ய வேண்டும். //உன்னை தாளிச்சு கொட்டினேனா இல்லையா?? ஏ! அன்னக்கை! எங்க போனாய்! ஒழுங்கா வெளில வா!னு சில பேர் கடுகு டப்பா, அன்னக்கை கூட எல்லாம் பேசிக் கொள்ளும் அளவுக்கு அதில் ஒன்றிப்போய்விடுவார்கள்( நானெல்லம் நிறைய பேசுவேன்). சின்னச் சின்ன விஷயத்தில் கூட அதீதமான கவனம் எடுத்து செய்வார்கள். ஒரு பதார்த்தம் பண்ணினா அதுக்கு உரிய குணாதிசயங்களோட இருக்க வேண்டும். இல்லைனா எனக்கு தெரிஞ்ச ஒரு பதிவரோட கதையா ஆயிடும். அவரோட வீட்டுக்கு சில பதிவர்களை அழைச்சுட்டு, வந்தவா எல்லாருக்கும் எதோ ஒரு வஸ்துவை சாப்ட கொடுத்து விட்டு, சும்மா இருக்காம கூகுள் பஸ்ல வந்து, " ஸ்வீட் எப்படி இருந்தது?னு கேக்க, சாப்ட அந்த மனுஷர், மைசூர்பாகு நன்னா இருந்தது!னு சொல்ல, 'அய்யையோ! நான் குலோப் ஜாமூன்னா பரிமாறினேன்!னு அந்த அம்மையார் சொல்ல ஒரே காமடியா போச்சு.

சங்கீதம் ரசிகர்களை பொறுத்தும் களை கட்டும், கச்சேரிக்கு வந்தவர்கள் வித்வான் பாடும் 'ஷிரிசக்கரராஜ சிம்ஹாசனேச்வரி' ராகமாலிகையை ரசிக்காமல், நாலாவது வரிசையில் ஆறாவதாக உக்கார்ந்திருக்கும் வைரக்கல் தோடுமாமி கட்டிண்டு வந்திருப்பது அபூர்வாவா? அபர்ணாவா?னு யோசிச்சுக் கொண்டிருந்தால் மூனாவது பாட்டில் மூட்டையை கட்டவேண்டியதுதான். ‘நாதஸ்வர சக்கரவர்த்தி’ வித்வான் ராஜரத்னம் பிள்ளையிடம், நீங்க வாங்கினதுலேயே உயர்ந்த விருதாக எதை கருதுகிறீர்கள்?னு ஒரு சபைல வச்சு கேட்ட போது, 'மைசூர் அரண்மனையில் ஒரு தசரா கலை நிகழ்ச்சியில் தோடி ராகத்தில் ஒரு கஷ்டமான பிருக்காவை நான் வாசித்த போது, பலே!னு தன்னை மறந்து ரசிச்சு சொன்ன பெட்ரமாஸ் லைட்டுக்காரருடைய பாராட்டை!னு பதில் சொன்னாராம். சங்கீத கலைஞரோ, சமையல் கலைஞரோ இருவருக்குமே உரிய அங்கீகாரம் & பாராட்டு மிகவும் அவசியமான ஒரு விஷயம்.

சாப்பிடும் நபர் அந்த பதார்தத்தை நன்றாக ரசித்துப் புசிக்காமல் எதோ திருநெல்வேலி To கொல்லம் வரை போகும் ரயில் வண்டியில் இருக்கும் இன்ஜீனுக்குள் கரி அள்ளிப்போடுவது போல் வாயில் போட்டுக் கொண்டு நடுவில் கொஞ்சம் தண்ணியையும் குடித்துவிட்டு ஜடம் போல செல்பவராக இருந்தால் சமைச்சுப் போட்ட அந்த அம்மாவுக்கு வாழ்க்கையே வெறுத்துவிடும்...:) எப்படி ஒரு திரைப்பாடலில் அந்த இயக்குனர், கதாசிரியர்,பாடலாசிரியர்,இசையமைப்பாளர் என்று அனைவரும் ஒரே விதமாக செயல்படும்போது அந்த பாடல் வெற்றி அடைகிறதோ அதே போல் பாடுபவர்,பாட்டை கேட்பவர், சமைப்பவர், சாப்பிடுபவர் என அனைவரும் முழுமையாக ரசித்து செய்யும் போது வாழ்க்கை இனிதாகும்.



குறிப்பு - ராமனையே உயிராக போற்றிய சங்கீத மும்மூர்த்திகளில் முதன்மையான தியாகராஜ ஸ்வாமிகளுக்கு முன்னால் அவருக்கு அழகாக சமைத்துப் போட்ட அவருடைய தங்கமணிக்குத்தான் 'ஸீதா லக்ஷ்மண பரத ஸத்ருக்ன ஹனுமத் சமேதராய்’ அந்த ராமன் முதலில் காட்சி அளித்தான். அந்த அம்மையாரும் நம்ம கேடி மாதிரி,'ஹை! வடை எனக்குதான்!னு சவுண்டு விட்டதுக்கு அப்புறம்தான் தியாகராஜர் கண்ணை திறந்து பார்த்தார்

29 comments:

ஆயில்யன் said...

சாப்பாட்டை பத்தி சொல்லுவீங்கன்னு மத்த வேலையெல்லாம் சைடு கட்டி வைச்சுட்டு வந்து குந்தினா மிக்ஸ்டு வித் மியூசிக்கா? ரைட்டு நடத்துங்க! ஆமாம் கிச்சன்ங்கற பேர்ல இருக்கிற போட்டோ எங்க எடுத்தது நல்லா இருக்கு ! :)

Ananya Mahadevan said...
This comment has been removed by the author.
தி. ரா. ச.(T.R.C.) said...

சங்கடமான சமையலையும் சங்கீதத்தையும் வெளுத்து வாங்கியிருக்கே அதுவும் சங்கீதம்ன்ன கிலொ என்ன விலை கேக்கிறாவாள பக்கத்திலேயே வெச்சுன்டு.
சில இடங்களில் தங்கமணிக்கு பயந்து அவர்கள் என்ன ஆக்கிப் போட்டாலும் ஆஹா! அற்புதம்!னு சொல்ல வேண்டிய நிர்பந்தத்தில் சில ரங்கமணிகள்
இந்த உள்குத்து யாருக்கு பெங்களூர் பக்கம் போறதில்லைன்னு தீர்மானம் பன்னிட்டியா
அப்படியே உன்னால் முடியும் தம்பி "என்ன சமயலோ" பாட்டையும் போட்டு இருக்கலாம்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//சில இடங்களில் தங்கமணிக்கு பயந்து அவர்கள் என்ன ஆக்கிப் போட்டாலும் ஆஹா! அற்புதம்!னு சொல்ல வேண்டிய நிர்பந்தத்தில் சில ரங்கமணிகள்(உண்மையான அப்பாவிகள்)//

ஹலோ... என்ன உள்குத்து இது?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//சாப்பிடும் நபர் அந்த பதார்தத்தை நன்றாக ரசித்துப் புசிக்காமல் எதோ திருநெல்வேலி To கொல்லம் வரை போகும் ரயில் வண்டியில் இருக்கும் இன்ஜீனுக்குள் கரி அள்ளிப்போடுவது போல் வாயில் போட்டுக் கொண்டு நடுவில் கொஞ்சம் தண்ணியையும் குடித்துவிட்டு//

அட அட... என்ன ஒரு உவமை? காப்பாத்து முருகா

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//டப்பா, அன்னக்கை கூட எல்லாம் பேசிக் கொள்ளும் அளவுக்கு அதில் ஒன்றிப்போய்விடுவார்கள்( நானெல்லம் நிறைய பேசுவேன்//

அட பெருமாளே.... இது எப்போ இருந்து? சீக்கரமா ஒரு கால் கட்டோ கை கட்டோ போட்டா தான் சரி வரும்... அனன்யா... பொற்கொடி...ஆக வேண்டியத பாருங்கோ

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஆனா சும்மா சொல்ல கூடாது... கொஞ்சம் சங்கீத ஞானம் உண்டுன்னு ஒத்துக்க தான் வேணும். நல்லா இருக்கு போஸ்ட். வாழ்த்துக்கள்

Kavinaya said...

சூப்பரா சமையலையும் சங்கீதத்தையும் ரசிச்சு எழுதியிருக்கீங்க. சுப்புடுவா, தக்குடுவா? :P

Chitra said...

சில இடங்களில் தங்கமணிக்கு பயந்து அவர்கள் என்ன ஆக்கிப் போட்டாலும் ஆஹா! அற்புதம்!னு சொல்ல வேண்டிய நிர்பந்தத்தில் சில ரங்கமணிகள்(உண்மையான அப்பாவிகள்) சிக்கிக்கொள்வதுண்டு.

...... punch??? ouch!!!

vetti said...

சும்மா December மாசம் மியூசிக் அகாடமி-குள்ள போன மாதிரி இருக்கு...இந்த பக்கம் கச்சேரி அந்த பக்கம் அறுசுவை அரசின் கான்டீன்....பலே பலே...ஜமாயிங்கோ...

எல் கே said...

அதாகப்பட்டது இந்த பதிவு மூலமா , இவர் என்ன சொல்ல வரார்ன, சமைக்க மற்றும் சங்கீதம் நன்றாக பாடக்கூடிய பெண்ணை சீக்கிரம் எனக்கு திருமணம் செய்துவைக்கவும்.

எல் கே said...

//கூகுள் பஸ்ல வந்து, " ஸ்வீட் எப்படி இருந்தது?னு கேக்க, சாப்ட அந்த மனுஷர், மைசூர்பாகு நன்னா இருந்தது!னு சொல்ல, 'அய்யையோ! நான் குலோப் ஜாமூன்னா பரிமாறினேன்!னு அந்த அம்மையார் சொல்ல ஒரே காமடியா போச்சு. //
enga talaiviya ippadi kindal adikarathai vanmayaga kandikiren

எல் கே said...

//ஆஹா! அற்புதம்!னு சொல்ல வேண்டிய நிர்பந்தத்தில் சில ரங்கமணிகள்(உண்மையான அப்பாவிகள்) சிக்கிக்கொள்வதுண்டு//
unmai unmai unmai

அண்ணாமலையான் said...

செம காமெடி

Ananya Mahadevan said...

//அதாகப்பட்டது இந்த பதிவு மூலமா , இவர் என்ன சொல்ல வரார்ன, சமைக்க மற்றும் சங்கீதம் நன்றாக பாடக்கூடிய பெண்ணை சீக்கிரம் எனக்கு திருமணம் செய்துவைக்கவும்//

எல்.கே,
ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொல்லி இருக்கே.. வெரி வெல் டன் ராஜா..

தக்குடு said...

@ ஆயில்யன் - வருகைக்கும் கருத்துக்கும் நன்னி, /ஆமாம் கிச்சன்ங்கற பேர்ல இருக்கிற போட்டோ எங்க எடுத்தது / அது நம்ப கிச்சந்தான்...:)

@ அனன்யா அக்கா - /செவியிலொரு மகர குண்டலம் ஆட!/நீங்க நோட் பண்ணுவேள்னு எனக்கும் தெரியும்..:)

about spelling mistake - என்ன செய்வது, நீங்க பெண் பார்த்த கதை, பேன் பார்த்த கதை-நு அடிக்கடி எழுதுவதால் கீபோர்டுல நல்ல புலமை இருக்கு, நான் குருடன் யானையை தடவி பார்த்த மாதிரி தடவி தடவி டைப் பண்ணின்டு இருக்கேன்..:)

@ TRC மாமா - உண்மைதான், கிண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் பழக்கம் இன்னும் உங்க கிட்ட அப்படியே இருக்கு...;)பாட்டு லிங்க் நிறைய பேருக்கு ஓப்பன் ஆக மாட்டேங்கர்து. அதான் தரவில்லை.

@ அடப்பாவி - வாங்கக்கா வாங்க, உள்குத்தெல்லாம் இல்லை, உண்மையைதான் சொல்லியிருக்கேன்...:)

தக்குடு said...

@ அடப்பாவி - /அனன்யா... பொற்கொடி.../ அது எப்படி அக்கா, சொல்லி வச்ச மாதிரி ரெண்டு கேடிகளையும் அழைக்கிறீங்க???...:)

/ஆனா சும்மா சொல்ல கூடாது/ஒரு ஆயிரம் டாலரை அக்கவுண்டுக்கு மாத்திட்டே சொல்லலாம்...:) வாழ்த்துக்களுக்கு நன்னிஹை!..:)

@ கவினயா - அடடே! கவிதாயினி அக்காவா? வர வேண்டும், நான் ஒரு சாதாரண கிச்சன் கிச்சா அவ்ளோதான்...:)

@ சித்ரா - அக்கா, அந்த வரியை படிச்ச உடனே எங்க சாலமன் அண்ணா உங்க சமையலை பத்தி புழுகினது எல்லாம் ஞாபகத்துக்கு வந்துருக்குமே???...:) LOL

@ வெட்டி - //மியூசிக் அகாடமி-குள்ள போன மாதிரி இருக்கு//ஒழுங்கா டிக்கெட் பணம் ரூபாய் 500 அனுப்பி வைக்கவும்..:) /பலே பலே...ஜமாயிங்கோ...
/நன்னிஹை!

@ LK - யோவ் LK, புரளி கிளப்பிவிடர்துல உம்மை மிஞ்சமுடியாதுப்பா!...:)

மூனு தடவை உண்மையா?? உங்க தங்கமணி இதை பார்த்தா அப்புறம் உமக்கு புண்டம் பெருங்காயம் தான்..:)

@ மலை வாத்தியார் - வருகைக்கு நன்றி வாத்தியாரே!

@ அனன்யா அக்கா - என்ன ஒரு வில்லத்தனம்???..:)

துளசி கோபால் said...

அப்பாவி ரங்க்ஸை முப்பத்தியஞ்சே முக்கால் வருசமாப் பழக்கி வச்சுருக்கு:-)))))

சங்கடமான சமையலைவிட்டு சங்கீதம் பாடப்போறேன்.......

உன்னால் முடியும் தம்பின்னு ஒரு படம் வந்ததே அதில் சமையலோடு ஒரு பாட்டு வரும்.

பதிவு அருமை.

குழலை ஊதியாச்சு. குழலூதி......

Jayashree said...

"சில இடங்களில் தங்கமணிக்கு பயந்து அவர்கள் என்ன ஆக்கிப் போட்டாலும் ஆஹா! அற்புதம்!னு சொல்ல வேண்டிய நிர்பந்தத்தில் சில ரங்கமணிகள்(உண்மையான அப்பாவிகள்) சிக்கிக்கொள்வதுண்டு"
Ha Ha !!! Man in the making??? தயார் பண்ணிண்டு இருக்கேளோ??



அருணா ஸாய்ராம் !! அட்டஹாஸம் பா. அபங், குரு மீது துஜ நமோ, முருகன் மீது - என்ன கவி பாடினாலும், கண்ணன் மீது - மாடு மேய்க்கும் கண்ணே - அசத்துவாங்க!!
சந்தானம்ஜி - CLASSY!!

sriram said...

தக்குடு, உங்களுக்கு சங்கீதமும் வருது, சமையலும் வருது.. இப்படியே சந்தோஷமா இருந்துடுங்க கல்யாணம் பண்ணிக்காம.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

My days(Gops) said...

என்ன தக்குடு, சங்கீதம் கத்துக்கிட்ட தங்கமணி யாரும் வீட்குக்கு வராங்களா? சங்கீதத்தை நீ பார்த்துக்கோ சமையலை நான் பார்த்துக்கிறேனு indirect ah சொல்லுற மாதிரி இருக்குதே.. ம்ம்ம்ம்

தக்குடு said...

@ துளசி ரீச்சர் - துளசி வாசனையால் அடியேனின் வலைதளம் பவித்ரமானது...;) அடிக்கடி வீசட்டும்...:)

@ ஜெய்ஷ்ரீ மா - மாடு மேய்க்கும் கண்ணே! எனக்கும் ரொம்ப புடிக்கும் அம்மா, மஹாராஜபுரமும் கேட்டுண்டே இருக்கலாம். வருகைக்கு ரொம்ப சந்தோஷம்.

@ பாஸ்டன் அண்ணாச்சி - அப்பாடி நாட்டாமை நம்ம கடை பக்கம் வந்து எவ்ளோ மாசம் ஆச்சு!!!!!
//இப்படியே சந்தோஷமா இருந்துடுங்க கல்யாணம் பண்ணிக்காம//சேதாரம் ரொம்ப பலமா இருக்கும் போலருக்கே???...:)

@ கோப்ஸ் - ஒரு புன்னாக்கும் இல்லை தலைவா! நான் பாட்டுக்கு பாட்டோட நிம்மதியா இருக்கேன்...;)

லங்கினி said...

:) mikka nandri commentiyadhukku!

balutanjore said...

first time i am visiting this blogspot

romba nanna irukku

keep writing

balasubramanyan vellore

தக்குடு said...

@ லங்கிணி - வாங்கோ லங்கிணி அக்கா!...:)

@ பாலு அண்ணா - அடிக்கடி வாங்கோ!...;)

mightymaverick said...

சித்ரா... உங்க வீட்டு ரங்கமணியை பத்தி இப்படி வெளிப்படையா பேசப்படாது... (தகடுவோட அண்ணனாகிய அம்பி வீட்டிலேயும் இது தான் நடக்குது... ஆனால் எவ்வளோ அடிச்சாலும் சத்தம் மட்டும் வெளியே வராது)... சங்கத்து ஆளை இப்படியா கட்டம் கட்டி அடிக்கிறது...

kamalabhoopathy said...

My first visit to your blog.So entertaining and interesting blog.

Anonymous said...

hiii da, very interesting . i can totally relate to Maharajapurams, always had the same effect while hearing that compostion.And ur kitchen looks picture perfect-clean never been used? enna aryabavan,vasantbavan -doha ,membership???.very lucid wrting style keep it up.lookin forward for ur next post.

தக்குடு said...

@ வித்யாசமான கடவுள் - உள்கட்சி விவகாரம் எல்லாம் வெளில சொல்லக்கூடாது!!...:)

@ கமலா - ரொம்ப சந்தோஷம்பா! அடிக்கடி வாங்கோ!

@anony - //very lucid wrting style keep it up.// எதோ எனக்கு தெரிஞ்சதை எழுதறேன் அவ்ளோதான், நன்றி!!! //hiii da, very interesting .//உரிமையோடு நீங்கள் அழைத்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது!!

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)