என்னடா இது? நம்ப தக்குடுதான் வெள்ளிக்கிழமை ராமசாமியாச்சே, அதிசயமா ஒரு நாள் முன்னாடியே போஸ்ட் போட்ருக்கே?னு யோசனையோட படிக்க வந்த எல்லாருக்கும் ஒரு சலாம்குலாமு!
வளைகுடா நாடுகள் எல்லாத்துலையுமே ஜூன் மாசத்துல ஆரம்பிச்சு கொஞ்சம் கொஞ்சமா செப்டம்பர் வரைக்கும் பொட்டியை தூக்கிண்டு எல்லாரும் கிளம்பிடுவா.
எங்க ஆபிஸ்லதான் எல்லாம் லோக்கல் ஷேக்குதானே, அவா எல்லாரும் அவாளோட பொண்டாட்டிகள் எல்லாரையும் கூட்டிண்டு ஐரோப்பா, சிங்கப்பூர்னு கிளம்பிட்டா. எனக்கு இந்த வக்கேஷன் எல்லாம் பழக்கம் இல்லை. பெங்களூர்ல இருக்கும் போது வருஷத்துக்கு மொத்தமே 10 நாள்தான் லீவு எடுப்பேன். அதுவும் எங்க ஊர் வினாயகர் சதுர்த்திக்காகதான்(ஆமாம் எங்க ஊர்ல 10 நாள் உத்ஸவம் தொப்பையப்பருக்கு).
இங்க லீவும் ' நான் முந்தினா நேக்கு!' நீ முந்தினா நோக்கு!னு யாரு சீக்கரமே அப்ளே பண்ணராளோ அவாளுக்குதான் கிட்டும். நான் அதை பத்தி எல்லாம் யோசிக்காம ஆணியை பிடிங்குண்டு இருந்தேன். பொறுத்து பொறுத்து பாத்த எங்க ஷேக்கு மேனேஜர் என்னை கூப்பிட்டு அனுப்பினார். போய் பார்த்தா, ‘ஆளே இல்லாத ஊர்ல யாருக்குடா டீ ஆத்திண்டு இருக்க?’னு என்கிட்ட கேட்டார். மொதல்ல போய் லீவுக்கு அப்ளே பண்ணர வழியை பாரு!னு சொன்னார்.
அப்ளிக்கேஷன் பார்ம் அரபில இருந்தது. நமக்கு என்ன கவலை, நம்ம கைலதான் சூடான் சிங்கம் இருக்காரே! எல்லா விபரமும் அவர் நிரப்பிட்டார், தக்குடு!னு ஒரு கையெழுத்து மட்டும் தான் நான் போட்டேன். 20 நாள் தான் நான் கேட்டேன். 20 நாள்ல நாக்கு கூட வழிக்க முடியாது! 30 நாள் வெச்சுக்கோ! என்ஜாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!னு ஜனகராஜ் மாதிரி அள்ளிக் குடுத்தார் அந்த வள்ளல்...:) ‘கரகாட்டக்காரன்’ கனகாவுக்கு லெட்டர் குடுத்தவனுக்கு ‘தங்கப்பதுமை’ தமன்னாவே பிக்கப் ஆன மாதிரி ஆயிடுத்து தக்குடுவுக்கு.
அதோ! இதோ!னு அந்த நாளும் வந்தாச்சு, ஆமாம் பொட்டியை தூக்கிண்டு தக்குடு கிளம்பியாச்சு. செப்டம்பர் 15 வரைக்கும் நம்ப ப்ளாக்குக்கும் விடுமுறை (எல்லாரும் நிம்மதியா இருக்கலாம்).
ஆப்பக்காரி அன்னம்மா பொண்ணு, ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு! எல்லாரும் செளக்கியமா?னு ஊர்ல கேட்டுட்டு வந்து சொல்றேன். ஒரு வாரம் பெங்களூர்ல டேரா, அதுக்கு அப்புறம் கல்லிடை சிட்டிதான்.
ஊர்லேந்து வரும் போது என்ன வாங்கிண்டு வரனும்?னு கேட்டதுக்கு, (எங்க அம்மா மாதிரி) ' நீ பத்ரமா போய்ட்டு வந்தாளே போதும் மகனே! அதுதான் வேணும்!'னு சொல்லி புல்லரிக்க வச்ச என்னோட தோஸ்த் ‘துபாய்’ செளம்யாவுக்கு ஒரு ஸ்பெஷல் சலாம்.
நான் திரும்பி வரவரைக்கும் புதுசா யாராவது நம்ப கடைக்கு வந்தா, வலது பக்கம் நம்பளோட ‘அமரகாவியங்கள்’ எல்லாம் இருக்கு. படிச்சுண்டு இருக்கவும்....:)
ஊருக்கு போகப்போர தக்குடுகோந்தையோட முகத்தில் என்ன ஒரு ஆனந்தம் பாத்தேளா?...:))
தக்குடு திரும்பி வரும் வரைக்கும் என்னோட ப்ளாக்கை பத்ரமா பாத்துக்கும் பொறுப்பை ‘சியாட்டில் சிங்காரி’ கிட்டயும், இட்லி மாமி கிட்டயும் ஒப்படைக்கிறேன் (யாருப்பா அங்க? திருடன் கைலயே சாவி!னு நக்கல் அடிக்கர்து?).