Saturday, March 27, 2010

நினைவெல்லாம் நித்யா!

நானும் எழுத வேண்டாம்னுதான் பார்த்தேன், ஆனா ஆதரவு படுபயங்கரமா இருப்பதால் எழுதிடலாம்னு முடிவு பண்ணியாச்சு. படம் ஆரம்பத்தில் மெதுவாகத்தான் தொடங்குகிறது. கதாநாயகன் ரொம்பவே இளமையாக தோற்றம் அளிக்கிறார். அவருடைய காந்தச்சிரிப்புக்கே நாம வாங்கின டிக்கெட்டு சரியா போச்சு. ஒரு கட்டத்தில் கதாநாயகி குடித்துவிட்டு மிச்சம் வச்ச டம்பளர்லையே கதாநாயகன் குடிக்கும் போது கதாநாயகியோட நம்ம காந்தக் கண்ணழகனுக்கு இருக்கும் அன்யோன்யம் நமக்கு நல்லா புலப்படுகிறது. சன் டீவியில் வெளிவராத முழூ காட்சிகள் இங்கு உள்ளது.

ஆரம்பத்தில் நண்பர்களோட லூட்டி அடிக்கும் கார்த்திக், ஒரு கட்டத்தில் எல்லா நண்பர்களும் பொழைப்பை தேடி போன உடன் தனது தூரத்து சொந்தக்காரரான நிழல்கள் ரவியின் வீட்டில் சில நாள் தங்கிட்டுப் போகலாம்னு ஒரு மலை பிரதேசத்துக்கு வரும் கார்திக் அங்கு ஒரு மலை ஜாதிப் பெண்ணை பார்த்து காதலில் விழுந்து, பல போராட்டத்துக்கு பிறகு எப்படி கை புடிக்கிறார் அதுதான் கதை.

இங்கு நான் சொல்ல வந்தது அந்த படத்தில் வந்த பாடல்களை பத்திதான். எல்லா பாடல்களுமே இனிமையான ஒரு வயசு குழந்தையோட மழலை வார்த்தைகள் போல் எப்போது கேட்டாலும் நமக்கு மகிழ்ச்சியை தரும். அழகான வைகாசி மாதத்தில், மாலை மயங்கும் வேளையில் கல்லிடையில் பாயும் ‘நித்யகன்னி’யான தாமிரபரணியில் காலை நனைத்தபடி ஆள் அரவம் இல்லாத ஒரு பாறையில் அமர்ந்து இருக்கும் போது, எங்கிருந்தோ வரும் ஒரு மெல்லிய புல்லாங்குழல் இசையை ரசிப்பது போன்ற ஒரு உணர்வை எல்லா பாடல்களிலும் நாம் காணலாம். 'பனி விழும் மலர் வனம்' பாடல் இளையராஜாவின் மகுடத்தில் ஒரு வைரம் என்றே சொன்னால் அது மிகையாகாது. ராஜா அதிகம் உபயோகிப்பது வயலினா, தபேலாவா? என்று சண்டை போட்டுக் கொள்பவர்கள் சற்று குழம்பிப் போகும் படியாக இந்தப் பாடலில் இரண்டும் ஒன்றோடு ஒன்று பிணைந்த ஒரு அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அதிலும் ஒரு சரணத்தில் பாடல் வரியோடு சேர்ந்து தபேலாவை உருட்டிய அழகு அடடா! அடடா! .

'கன்னிப் பொண்ணு கை மேல' பாடல் ஒருமாதிரி நாட்டுப்புற பாடல் போலவும் அதே சமயம் தாளக்கட்டும் சிறிதும் பிறலாமல் இருக்கும். பாடலின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டப்பட்டு இருக்கும் அழகு நம்மை பாடலோடு ஒன்றவைக்கிறது. அந்தப்பாடலில் அந்த மணப்பெண் அங்கு ஆடிக்கொண்டு இருக்கும் ஆட்கள் ஒருவர் மீதும் படாமல் மணமகன் இருக்கும் இடத்தை அடைந்து அவனுக்கு மாலை இட வேண்டும். மாப்பிளைவீட்டார் குறுக்கும் நெடுக்குமாக வளையவந்து கொண்டே இருப்பார்கள், அதை எல்லாம் தாண்டி அவங்க கோவம் வராமல் பொறுமையா போய் இலக்கை அடையனும். இந்த கலோபரத்துக்கு நடுவில் கார்திக் அவரோட வண்டியை நைசாக ஓட்டிவிட்டு வந்துவிடுவார்.

'ரோஜாவை தாலாட்டும் தென்றல்' பாடலின் தாளக்கட்டு நம்மை யாரோ இயல்பான வேகத்தில் ஒரு ஊஞ்சலில் வைத்து ஆட்டுவது போன்ற ஒரு அனுபவத்தை நமக்கு ஏற்படுத்தும். சங்கீதத்தில் அதுதான் ஒரு ஆச்சர்யம், எத்தனை முறை கேட்டாலும் நமக்கு திகட்டவே திகட்டாது. பெண்களூர் ரெட்டிகள் வீட்டு கல்யாணங்களில் உண்மையாகவே குறைந்த பட்சம் பதினாறு விதமான ஸ்வீட் வகைள் பரிமாறுவார்கள். பஸ் ஸ்டாண்டில் ஒரு பிகராவது வராதா என்று ஏங்கிக் கொண்டிருப்பவன் முன்னால் ஒரு நல்ல லேடிஸ் காலேஜ் பஸ் நிறைய பிகர்கள் வந்து இறங்கியதுன்னா, அவன் எதை அள்ள, எதை தள்ள? நு தெரியாமல் குழம்பிவிடுவது போல், நம்மாள எல்லாத்தையும் சாப்டவும் முடியாது, ஆனா சாப்டாம இருக்கவும் முடியாது.. ஆனால் இந்த படத்தில் எல்லா பாடல்களுமே அருமையாக இருக்கும் போதிலும் நமக்கு திகட்டாத ஒரு மனனிலையே நிலவுகிறது என்றால் அதன் பெருமை அனைத்தும் அதன் பாடலாசிரியரையும், இசையமைப்பாளரையுமே சாரும்.

நான் இந்த படத்தில் வரும் பாடல்களை பத்திதான் ரொம்ப நாளா எழுதனும்னு நினைச்சுண்டு இருந்தேன்பா! இதுல எந்த நுண்ணரசியலும் கிடையாது....:)

கோப்ஸ், ஆயில்யன் மாதிரி வேறு யாரெல்லாம் நாக்கை சப்புக் கொட்டிண்டு வந்து 'கப்பு' வாங்கிய முகத்தோட அசடு வழிஞ்சுண்டு, 'எனக்கு அப்பையே தெரியும்!'னு உங்களுக்கு நீங்களே சமாதானம் சொல்லிண்டு என்னை திட்டினீர்கள்??? ஒழுங்கா வந்து கமண்ட்ல போட்டா நாங்களும் உங்க கூட சேர்ந்து சிரிப்போம்ல....:)

Saturday, March 20, 2010

நிம்'ஸ் ஐலண்டு ( Nim's Island)இரவு எட்டுமணி தருவாய், ஒவ்வொரு சானலாக மாத்திக் கிட்டே இருந்தேன். எல்லாம் விளங்காத நிகழ்ச்சியாகவே இருந்தது. கடைசியாக MBC 3 கார்ட்டூன் சானலுக்கு நான் மாத்தவும், அங்க 'டென்...டடடேன்'னு பேர் போட்டு ஒரு படம் ஆரம்பிக்கவும் சரியா இருந்தது. அந்த படத்தை பத்தி கொஞ்சம் இங்க சொல்லலாம்னு இருக்கேன்..

படத்தோட பேருக்கு ஏத்தமாதிரி ஒரு கடற்கரைல ஒரு சின்னப்பொண்ணு கடல்வாழ் பிராணியான சீல் கூட விளையாடிட்டு இருக்கு. அந்த பொண்ணொட அப்பா ஒரு விஞ்ஞானி. அந்த குட்டித்தீவுக்கு பயணம் பண்ணி வரும்போதே கப்பல் திமிங்கலத்தால தாக்கப்பட்டு அவரோட தங்கமணி காலமாயிடுவாங்க. அந்தத் தீவுல ஒரு பழைய குட்டி எரிமலையும் இருக்கும். ஆனா அதுலேந்து குளம்பு எல்லாம் வராது. இந்த அப்பா பொண்ணுக்கு அந்த பக்கமா நாலு மாசத்துக்கு ஒரு தடவை வரும் ஒரு நண்பரோட கப்பல் மூலமா தேவையான சாமான்கள் மற்றும் புஸ்தகம் எல்லாம் வரும். அந்த புஸ்தகங்களோட சேர்ந்து அந்த குட்டிப்பொண்ணுக்கு 'அலேக்ஸ் ரோவர்'னு ஒரு புஸ்தகமும் வரும். அந்த கதாபாத்திரம் எப்படின்னா, போராட்டம் நிறைந்த பயணங்கள் செய்யும் ஒரு ஆளு தன்னோட அனுபவங்களை விவரிக்கர்து மாதிரியான ஒரு புஸ்தகம்.

அந்த பொண்ணுக்கு அந்த கதாபாத்திரம்தான் ஆதர்ஸ நாயகன். ஹாரிபார்ட்டர் புக்கு மாதிரி அந்த ஆளோட எல்லா புக்கையும் அந்தப்பொண்ணு விடாம படிச்சுண்டு வருது. இந்த சமயத்துலதான் இயக்குனர் ஒரே சமயத்துல இரண்டு விதமான கதைகளை கொண்டுவந்து அதை ஒரு இடத்தில் சேர்க்கிறார். திடீர்னு ஒரு நாள் அந்த விஞ்ஞானிக்கு ஒரு ஆசை வருது. தனது ஒரு முக்கியமான ஒரு ஆராய்ச்சிக்காக கடலுக்கு நடுவில் அவருக்கு செல்ல வேண்டும். சன்டீவியில் தீபாவளிக்கோ/பொங்களுக்கோ நிச்சியமா ஒரு நிகழ்ச்சி இருக்கும் ' நமிதாவுடன் ஒரு நாள்'. கடைசியில் போய் பார்த்தா, அப்பா சொல்லிச்சு! அம்மா வந்திச்சு!னு சங்கத்தமிழை சங்கை நெறித்துக் கொண்டிருப்பாள் நமிதா. அது மாதிரி இந்த கதையிலும் அந்த விஞ்ஞானி அப்பா, தன் மகளிடம் போய், ‘கடலுக்கு நடுவில் ஒரு நாள்’ அப்பா தங்கிட்டு வரப்போறேன். நீ சமத்தா இங்க விளையாடிண்டு இருக்கனும் சரியா!னு சொல்லரார். அந்தப் பொண்ணும் சரி டாடி! போய்ட்டு பத்ரமா வந்துருங்கோ!னு சொல்லி டாட்டா எல்லாம் காட்டி அனுப்பி வைக்கும். அதே சமயத்தில் அந்த பொண்ணுக்கு புடிச்ச அந்த கதாசிரியர் அலேக்ஸ் ரோவர் எரிமலைகள் நிறைந்த ஒரு பகுதில பயணம் பண்ணுவது மாதிரி எழுதனும்னு ரூம் போட்டு யோசிச்சுக்கிட்டு இருப்பாங்க. இந்த இடத்துல அந்த கதாசிரியரை பத்தி கொஞ்சம் நமக்கு தெரியனும்.

அந்த கதாசிரியப் பெண்மணி ஒரு காகிதப்புலி, அதாவது அவங்க வீட்டை விட்டு கூட வெளியே வந்தது கிடையாது. அவ்ளோ பயம்! தனியா வீட்டுக்குள்ளையே உக்காச்சுண்டு உலகம் பூரா பயணம் பண்ணின மாதிரி கதை அளந்து கொண்டிருப்பார்கள். பத்து இட்லியை ஒரே சிட்டிங்கில் அமுக்கமட்டுமே தெரிந்திருந்தும், என்னமோ பல வருஷங்களாக மாவாட்டின மாதிரி, என்னிடம் முழுவிவரத்தையும் கேட்டுக்கொண்டு,கிரைன்டர் படம் எல்லாம் போட்டு “மாவாட்டுவது எப்படி!”னு தனியாக ஒரு பதிவு போட்ட ஒன்னாம் நம்பர் தில்லாலங்கடியான எங்க அண்ணன் மாதிரினு கூட சொல்லலாம்.

நம்ப ஊர் படம் மாதிரி அவரோட கற்பனை கதாபாத்திரமான 'அலேக்ஸ் ரோவர்' மட்டும் அடிக்கடி தனியாக இருக்கும் அந்த கதாசிரியப் பெண்மணி யிடம் பேசுவது போல காட்சிகளை இயக்குனர் அமைத்திருப்பார். யாரோ ஒரு நண்பர் மூலமாக நம்ப விஞ்ஞானிக்கு எரிமலை பத்தி நல்லா தெரியும்னு கேள்விப்பட்டு, அந்த கதாசிரியர் ஒரு மெயில் அனுப்ப, மெயில் பெயரில் இருந்த 'அலேக்ஸ் ரோவர்'ரை பார்த்து ஆர்வக்கோளாரில் அந்த மெயிலுக்கு அந்த குட்டிப் பொண்ணு அப்பா ஊர்ல இல்லை, ஆனா நான் போய் அந்த எரிமலையை பாத்துட்டு வந்து பதில் அனுப்பரேன்!னு பதில் சொல்லிட்டு, போய் பாத்துட்டும் வந்துவிடும். இதற்கு நடுவில் அந்த தீவுக்கு ஒரு கப்பல் நிறைய சுற்றுலாபயணிகள் வந்து இறங்கி விடுவார்கள். குட்டிப்பொண்ணு அவங்களை தீவுலேந்து விரட்டியடிக்க தன் நண்பர்களான சீல்,ஓணான் போன்ற மிருகங்களோடு களம் இறங்கி ஒரு ராமனாராயணன் எபக்டு கொடுக்கிறது.கடலுக்குள் போன விஞ்ஞானி புயலில் சிக்கி நடுக்கடலில் உதவிக்காக திண்டாடிக்கொண்டு இருப்பார். கதாசிரியப் பெண்மணி மெயிலில் உங்க வயசு என்ன?னு குட்டிப்பொண்ணு கிட்ட கேட்க, எனக்கு பத்து வயசுதான் ஆகுது, கடலுக்குள் போன அப்பாவையும் ஆளைகாணும், உங்களால முடிஞ்சா ஒரு எட்டு வந்துபாத்துட்டு போகமுடியுமா?னு மெயில் அனுப்புது. பலத்த மனப்போராட்டத்திற்குப் பிறகு அந்த தீவுக்கு போய்த்தான் பார்ப்போமே!னு தன்னுடைய மனசாட்சியான 'அலெக்ஸ் ரோவர்' சகிதமா கிளம்புகிறார். போகும் இடத்தில் கிடைக்குமோ? கிடைக்காதோ?னு சந்தேகத்தில் நார்த்தங்காய் ஊறுகாய், பருப்புப்பொடி, புளிக்காய்ச்சல், குழம்புப்பொடி எல்லாம் ஞாபகமாக எடுத்துக்கொண்டு போய், விமான நிலையத்தில் சுங்க இலாக்கா தடியன் எல்லாத்தையும் புடிங்கி குப்பைத்தொட்டியில் போடும் இடத்தில் அவர் மீது நமக்கு பரிதாபம்தான் வருகிறது. கஷ்டப்பட்டு அந்தம்மா விட்டை விட்டு வெளில முதல் தடவையா வருவதால், அறியாதவன் ஆம்பளை புள்ளை பெத்த கதையா அவளுக்கு வாந்தி, வாந்தியா வருது.

இந்தப்பக்கம் நடுக்கடலில் தவிக்கும் விஞ்ஞானிக்கு நிம்ஸ்சோட நண்பனான ஒரு கொக்கு உதவி எல்லாம் பண்ணுது. எல்லாம் பண்ணி முடிச்சு கிளம்பும் சமயத்தில் மறுபடியும் ஒரு புயல் அடிச்சு, அவர் முடிடிடிடிடியலை!னு ஆயிடுவார். நம்ப கதாசிரியர் அம்மணியும் ஒரு வழியா பல போராட்டத்துக்கு பிறகு இந்த தீவுக்கு வந்து குட்டிப்பொண்ணை கட்டிகொண்டு இரவு தூங்கி மறுனாள் எழும்போது நம்ப விஞ்ஞானியும் ஒருமாதிரி சமாளிச்சு வந்துவிடுகிறார். கடற்கரையில் தன் மகளோடு நிற்கும் அந்த கதாசிரியப்பெண்மணியை பார்த்தவுடன், நாம் எதிர்பார்பது போலவே, அவருடைய கண்ணுக்கும், அம்மணியோட கண்ணுக்கும் ஜிங்சக்!ஜிங்சக்! ஆகிவிடுகிறது.

வித்தியாசமான கதை இல்லைனு நாம சொன்னாலும், இயக்குனர் அதை படமாக்கியுள்ள விதம் நம்மை படத்தோட ஒன்ற வைக்குது. கடலுக்கு நடுவில் வரும் புயல் காட்சிகள் துரைகள் படத்துக்கே உரிய முறையில் மிரட்டும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது. மேலும் சில இடங்கள்ல அந்த குட்டிப்பொண்ணு தன் கண்களாலையே தனிமை, பிரிவு, எதிர்பார்ப்பு, ஏக்கம், கோவம்னு எல்லா உணர்ச்சிகளையும் காமிச்சு நம்பளை பிரமிப்பில் ஆழ்த்துது. ஒத்த மரத்துக் குரங்கா உக்காசுண்டு இருக்கும் எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது. உங்களுக்கு ஒரு வேளை புடிக்கவில்லை என்றால் , டாய் தக்குடு!னு கத்த/திட்டவேண்டாம்.

குறிப்பு – 2008-ல் வெளிவந்த படத்துக்கு இப்பொ ஏன்டா விமர்சனம் எழுதரை?னு கோவிக்கவேண்டாம், சமீபத்தில் வெளிவந்த படம்தான் எழுத வேண்டும் என்றால், 'ஜக ஜகா சாமியாரின் சல்லாப லீலைகள்' படம் பத்திதான் நான் எழுதனும்....:)

Saturday, March 13, 2010

ஆடு பார்கலாம் ஆடு 5

புதிதாக வந்தவர்களுக்கு - Part 1 Part 2 Part 3 Part 4

அன்று வந்ததும் இதே நிலா! புரட்சித்தலைவரோட பாடல் ஒலித்தது, எனக்கு இருந்த பதட்டத்தில் ஆடனுமா? பாடனுமா?னு தெரியாமல் ‘டடட்டா!’ என்று சத்தமாக பாடிக்கொண்டே (கத்திக்கொண்டே) ஓடிப்போய் கூட ஆடிண்டு இருந்தவன் இடுப்பை வளைத்துப் பிடித்து(நல்ல்ல்ல்ல்லவேளைடீ! நாம தப்பிச்சோம்! என்று Bombey sisters குசுகுசுத்துக்கொண்டனர்), அவனுடைய இடது உள்ளங்கையை என்னுடைய வலது உள்ளங்கையால் இறுக்கமாக பிடித்துக் கொண்டு ‘லகாண்’ படத்துல அந்த வெள்ளைகாரி அமீர்கானோட yes! i am in loooooooooooove!னு பாடிண்டே ஆடுவது மாதிரி ரொம்ப ரொமான்டிக்கா சுத்தி சுத்தி ஆட ஆரம்பிச்சுட்டோம்(டேன்). Base மட்டத்தோடு பில்டிங்கும் பயங்கரமாக ஆட்டம் கண்டதால் யாரையாவது கைதாங்கலா புடிச்சுக்கனும் போல இருந்தது அதான் அந்த step- க்கு காரணம்.

போனாப்போகுது என்று நம்பியாரும், உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையின் ஓரத்தில் டிரைவர் & கண்டக்டர் மாமா ஓசி டிபன் சாப்பிட, எட்டுமணி நேர தொடர்பயணத்திற்கு பிறகு, உச்சா மணம் கமழும்(!!!??) ஒரு அறுசுவை(???!!) உணவு விடுதி முன்பாக, நடு இரவில் நிறுத்தப்படும் ஒரு அரசுப்பேருந்து போல, ஒரு வழியா டேப்பை நிறுத்தினான். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா!னு நானும் நிறுத்தினேன். இவ்ளோ போராட்டத்துக்கு நடுவிலும் ஒரு மந்தகாச புன்னகையை(அவ்வ்வ்வ்வ்........) என்னேட முகத்துல maintain பண்ணினேன்(தக்குடு! மீசைல மண் ஒட்டலடா!!!..:)) நம்ப ரவிவர்மா சொன்ன மாதிரி finishing -ல ஒரு வணக்கம் எல்லாம் சொல்லிட்டு வந்துட்டோம். சிரிப்புச்சத்தமும், கைதட்டலும் நிற்க நாலு நிமிஷம் ஆச்சு. (அடுத்தவன் திண்டாடி தெருவுல நின்னா, நம்ப மக்களுக்குத்தான் எத்தனை ஆனந்தம்!!!!)

நாலு ஜட்ஜுல ஒரு ஜட்ஜு மைக்கில் எங்களை மீண்டும் மேடைக்கு அழைத்தார். உங்க டான்ஸ் அவாளுக்கு ரொம்ம்ம்ம்ம்ப புடிச்சு போச்சாம்! அதான் திருப்பி ஒரு தரவை ஆடற்துக்கு கூப்பட்ரா! என்று Bombey sister’s வளிப்பு காட்டினார்கள். குழப்பத்தோடையே மேடைக்கு போனா அந்த நக்கீரர், எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகனும்! என்றார். முதல்ல ஆடின பரதத்துல(அப்ப நான் ஆடினதுதான் பரதமா????) ஸ்லோகம் நடராஜர் பத்தினது, ஆனா நீ ஏன் கிருஷ்ணர் அபிநயமும் காட்டிணாய்?? என்று கேட்டார். நானும் சளைக்காம ‘ஜெயாடிவி’ புகழ் சங்கீத வித்வான் நெய்வேலி சந்தானகோபாலகிருஷ்ணன் மாதிரி, அந்த லாஸ்டு லைனை நீங்க நன்னா கவனிச்சேள்னா உங்களுக்கு புரியும்! பார்வதிபரமேஷ்வரோ!னா அது நடராஜரை குறிக்கும் அதே சமயம் பார்வதீப ரமேஷ்வரோ!னா அது உள்ளம்கவர் கள்வனை குறிக்கும்! அப்படீன்னு ஒரு மினி உபன்யாசம் செய்தேன்(எப்பையோ தெய்வத்தின் குரல்!ல படிச்சது). அவ்ளோதான்! அந்த ஜட்ஜு flauttuu, அதுக்கப்பரம் அவர் போட்ட மார்கை பாத்துட்டு பக்கத்துல இருந்த ஜட்ஜுக்கு மூச்சே நின்னு போச்சு! (யாரெல்லம் ‘மூச்சா’ நின்னுபோச்சு!னு வாசிச்சேள்?) அனேகமா அவர் ‘தில்லுமுல்லு’ தேங்காய் சீனிவாசன் மாதிரி 95 மார்க்(பத்துக்கு) போட்டாரோ என்னமோ??...:)

பின்னிட்டடா! பூ வச்சுட்டடா! என்று ஒரே பாராட்டு மழை. அறுபதுக்கும் மேற்பட்டவர்கள்(சில பிகர்களும் அதில் அடக்கம் ஹி..ஹி) வந்து கை குலுக்கியதில்(உலுக்கியதில்!னே வாசிக்கலாம்) தோள்பட்டை வலிவந்துவிட்டது. அந்த போட்டியில் முதல் பரிசு கிடைச்சது மட்டும் இல்லாம 'சிறந்த பொழுதுபோக்கு அணி' அப்படினு ஒரு special பரிசு வேறு கிடைத்தது. நம்ப கழக கண்மணிகளும் பல பரிசுகளை வாங்கி குவித்திருந்தனர். சிங்கம்பட்டிகாரன் இரண்டாம் பரிசும், ரவிவர்மா முதல் பரிசும்(அவனுக்கு வந்த ஓவியத்தலைப்பு என்ன தெரியுமா?? மிக்கிமவுஸ். வராட்டாலும் அவன் அதோடசாயல்லதான் எதாவது ஒன்னு வரைவான் என்பது வேறு விஷயம்) வாங்கியிருந்தனர். அதெல்லாம் இருக்கட்டும் Bombey sister’s என்ன வாங்கினா??! அப்படின்னு நீங்க எல்லாரும் சத்தமா கோரஸா கேட்பது என் காதுல விழுந்தாச்சு. அவர்களுக்கு இரண்டாம் பரிசு (என்ன ஒரு அநியாயம்!) கிடைத்தது(பச்சைக்கல் வச்ச குண்டலமெல்லாம் போட்டுக்கொண்டு வந்தும்!!!!) அப்புறம் அவாள்டையே விசாரித்ததில்(‘வறுத்ததில்’னும் வாசிக்கலாம்), தென்காசி பையன் ஒருத்தன் ‘சங்கீத ஜாதி முல்லை!’ பாட்டை தம் கட்டி பாடிவிட்டான் என்பது தெரிந்தது. கவலைபடாதீங்கோ! அடுத்த தடவை சிவப்புக்கல் குண்டலத்தோடு வந்து முயற்சி பண்ணுங்கோ!னு அணியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அவாளுக்கு ஆறுதல் சொன்னேன்.

தனியாக ஜெயிப்பதை விட, அணியாக ஜெயிப்பதில் வரும் சந்தோஷமே தனிதான்! பலதடவை என்னுடைய தனிப்பட்ட வெற்றி வாய்ப்புக்களை அணியின் வெற்றிக்காக தியாகம் செய்யும் பாக்கியம் எனக்கு கிட்டியது. பரிசளிப்பு விழாவிற்கு சிட்டிலேந்து(அதாவது கல்லிடைகுறிச்சிலேந்து)ஒரு பிரபலமான டாக்டர் வந்திருந்தார்(அவரது மகள் என்னோட பள்ளித்தோழி!). நம்பளோட ஆனந்த தாண்டவத்தை அவரும் பாத்துருக்கார்(போட்டோலாம் வேற புடிச்சு எனக்கு ஒரு copy எல்லாம் தந்தார். அதன் பிறகு பல வருடங்கள் வழியில் எங்கு பார்த்தாலும் அவருடைய ‘டாடா இண்டிகா’ காரை நிறுத்தி ஓசி லிப்ட் எல்லாம் கொடுத்தார்). மேலும் ஊர்ல நாலு பெரிய மனுஷாளோட பழக்கம் எல்லாம் கிடைத்தது. இதன்பிறகு பல மாதங்கள் குக்கிராமத்துல(அம்பாசமுத்திரத்துல!னு நீங்களே வாசிச்சுட்டீங்களே!! very good)பல தடவை என்னை பார்ததும் குபீர் சிரிப்பு/நக்கல் சிரிப்பு சிரித்த அடையாளம் தெரியாத/தெரிந்த நண்பர்கள் ஏராளம்! ஏராளம்! நானும் பெரிய பெரிய நாட்டிய மேதைகள் வாழ்கையில் இதெல்லாம் ஜகஜம்!னு திருப்பி சிரிச்சுட்டு போயிருவேன்.

சில சமயம் மாப்பிள்ளையோட அத்தைபாட்டிக்கு ரவா உப்புமாவும் பிடித்துப் போவது உண்டு........:)

(உப தகவல்) – சிங்கம்பட்டிக்காரன் மதுரையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறான், ரவிவர்மாவுக்கு ரயில்வேயில் வேலை கிடைத்து கோவில்பட்டி அருகே ஒரு ரயில் நிலையத்தில் நிக்காத ரயிலுக்கு எல்லாம் கொடி காட்டிக்கொண்டு இருக்கிறான். சரக்கு ரயில் பெட்டியில் எல்லாம் எதாவது வரைஞ்சு வைடா மாப்ளே! இந்தியா பூரா எல்லாரும் பார்ப்பா!னு அவனுக்கு நான் ஆலோசனை வழங்கியுள்ளேன். Bombey sister’s la ஒருத்தருக்கு டும்! டும்! டும்! முடிஞ்சு இப்பொ 'வள்ளி கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்!னு ‘காவடிச்சிந்து’ பாடி அவாளோட புள்ளையை தாலாட்டுவதாக நினைத்துக்கொண்டு அதை தூங்கவிடாமல் தொல்லை செய்து கொண்டிருக்கிறார், இன்னொருத்தருக்கு வலை வீசி மாப்பிள்ளை தேடிக் கொண்டிருப்பதாக கேள்வி. நமக்கு இந்த ஊர் வம்பு பேசுவதே புடிக்காது, அதனால இதை பத்தி நமக்கென்ன வேண்டாத கவலை எல்லாம்...:)

ஆட்டம் இப்போதைக்கு ஓய்ந்தது!

Saturday, March 6, 2010

ஆடு பார்கலாம் ஆடு... 4

புதிதாக வந்தவர்களுக்கு - Part 1 Part 2 Part 3

நான் வேனா உன்னோட ஆடட்டுமா? என்று அவனிடம் கேட்டேன். அவ்ளோதான் எங்களுடைய மொத்த டீமும்(Bombey sisters உட்பட) புளுக்!!!!! என்று கோரஸாக சிரித்தார்கள். எனக்கு வெட்கம் வெக்கமா போயிடுத்து! பெரிய கல்யாணப் பந்திகளில் மெயின் டிபன் அயிட்டம் எல்லாம் காலியா போன சமயத்தில் மாப்பிள்ளையோட சொந்த அத்தைபாட்டி(கீதாபாட்டி!னு வாசகர்கள் வாசிச்சா ஆசிரியர் அதற்கு பொறுப்பல்ல) டிபன் சாப்பிட வந்து விடுவது உண்டு, அப்போது ரவா உப்புமாவை போட்டு ஒப்பேத்தப்பார்பார்கள். அதுபோல், இதுக்கெல்லாம் அசர்ர ஆளு இல்லை இந்த தக்குடுபாண்டி! அப்படினு எனக்கு நானே சமாதானம் சொல்லிண்டு ஆடுவதற்கு தயாரானேன். விதி யாரை விட்டது???....

திடீரென்று சிங்கம்பட்டிகாரன், கம்பு சுத்தர்தும், கொம்பு(மான் கொம்பு) சுத்தர்தும் ஒன்னு கடையாது! அப்படீன்னான். எனக்கு ஒரு எழவும் புரியாமல் முழித்துக்கொண்டிருக்கும் போதே, கம்புனா வீசி சுத்தனும், கொம்புனா வாங்கி சுத்தனும்! என்று முடித்தான். பாத்து ஆடுங்கண்னே! என்பதைதான் அவனுடைய Technical terms ல சொல்லியிருக்கான். பல்லவிலேந்து அனுபல்லவிக்கு சஞ்சாரம் பண்ணும்போது பதட்டம் இருக்கக் கூடாது(இது நம்ப Bombey sister-ஸேதான்). Finishing touch தான் ரொம்ப முக்கியம் தக்குடு!(இது நம்ப ‘மிக்கி மவுஸ்’ புகழ் ரவிவர்மா) என்று ஆளாளுக்கு அட்வைஸாக அள்ளி விட்டுக்கொண்டிருந்தார்கள் (பாசக்கார பயலுக). நான் எப்படா சிக்குவேன்னு ரொம்ப நாளா காத்துண்டு இருந்திருப்பாய்ங்க போலருக்கு!!

எங்கள் பள்ளிப் பெயரை நீட்டி முழக்கி அந்த அறிவிப்பாளர் அழைத்தார். நானும் இன்னொரு கண்மணியும் மேடையை நோக்கி நடந்தோம். குலதெய்வம் பெருவேம்புடையாரெல்லாம் மனசுக்குள்ள கும்பிட்டுக் கொண்டே மேடயை அடைந்தோம். பச்சை பாண்டு, வெள்ளை சட்டை அணிந்துகொண்டு(ஸ்கூல் யூனிபார்ம்) இந்தி நடிகர் கோவிந்தா போல ரொம்ப லக்ஷ்ணமாக இருந்தேன் (நெத்தில அழியாத ஒரு கோபி வேற இதுல). என்ன ஒரே தைரியம்னா? கூட ஆடற பையன் டான்ஸுல பலே கில்லாடி( நல்ல வேளை! இவனையும் சேத்து அந்த நாதாரிகள் கூட்டிண்டு போயிருந்தா கதை கந்தல்தான்). மத்த வானரங்கள் அட்வைஸ் குடுத்துண்டு இருந்த சமயத்துலேயே, நீ என்னை பத்தி கவலை படாம ஆடு! அப்பப்போ ‘இது நம்ம ஆளு பாக்யராஜ்’ மாதிரி, ஸ்வாகா!ல வந்து உன்னோட நான் join பண்ணிக்கரேன்னு அவனிடம் சொல்லிவிட்டேன்.

கேசட்டு போடும் அந்த நம்பியார் முதல்ல எதோ ஒரு கேசட்டை எடுத்துட்டு, அப்புறம் வேறு ஒன்றை எடுத்து ஒரு வில்லப் புன்னகையோடு போட்டு பொத்தானை அழுத்தினான். நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள் பாட்டு (சலங்கை ஒலி) ஸ்லொகத்துலேந்து ஆரம்பமானது. சேரன்மாதேவி கல்யாணராம பாகவதர் போல நான், நொண்டியடிக்கும் நடராஜர், குழழூதும் கண்ணன், பள்ளி கொண்டபெருமாள்( நம்ப KRS அண்ணா போஸ்) என்று பல அபிநயங்கள் பிடித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று பாட்டு திரனண திரனண! பகுதிக்கு போய்விட்டது.( நம்பியாரோட மிக்ஸிங் அப்படி!) எனக்கு கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டது. குதிங்காலை மட்டும் குதித்துக்கொண்டே ரெண்டு கையையும் சைடுல நீட்டிக்கொண்டு மேலும் கீழுமாக ஒரு step பரதத்துல உண்டு அதை try பண்ணப் போய் அது ‘சார்லி சாப்லின்’ step-ல போய் முடிந்தது.

கூட இருந்தவன் பம்பரம் போல சுற்றி சுற்றி ஆடிக்கொண்டிருந்தான். நான் டபக்குனு ஒரு இடத்துல போய் அசையாமால் நின்றுகொண்டு சிலை மாதிரி போஸ் குடுக்க ஆரம்பித்துவிட்டேன். அபிநயதர்ப்பணம் புக்குல கூட அத்தனை போஸ் இருந்திருக்காது. டிங்குடான்டாண்! டிங்குடான்! என்று யேக்கு தோ தீன் பாட்டு ஆரம்பிச்சுருச்சு!(சுத்த்த்த்த்தம்! தமிழுக்கே இங்க நான் தாண்டவம் ஆடிண்டு இருக்கேன், இதுல இந்தி வேரையா! என்று நொந்துகொண்டேன்). டக்குனு விட்டல பாண்டுரங்கர் மாதிரி இரண்டு கையையும் இடுப்பில் வச்சுண்டு upto இடுப்பு portion வரைக்கும் மாத்தி மாத்தி இரண்டு பக்கமும் தலையை சாய்க்க ஆரம்பித்தேன். கால்களையும் அப்பப்போ சாணியை மிதிச்சவன் போல உதறிக்கொண்டேன். அடுத்த இருபதாவது வினாடியில், ராஜா! ராஜாதி ராஜன் இந்த! என்ற ‘அக்னி நட்சத்திரம்’ பாடல் ஒலித்தது. தீப ப்ரதக்ஷிணத்துக்கு ஆடுவது போல மேடையை சுத்தி சுத்தி ஆட ஆரம்பித்துவிட்டேன்.

நம்பியாரோட திருட்டு முழியை பார்த்தால் அடுத்த பாட்டு ஒருவேளை ' ‘நேத்த்த்த்து ராத்திரி யம்ம்ம்ம்மா!’ வாக இருக்குமோ??னு எனக்கு சந்தேகமாக இருந்தது. அப்படி வந்தால் ஜட்ஜு டேபிள் பக்கத்துல போய் சிலுக்கு மாதிரி முகத்தை வைச்சுண்டு, உதட்டையும் லைட்டா கடித்துக் கொண்டு, இரண்டு கண்களையும் அரைவாசி திறந்து கொண்டு,வலது கையை மடக்கி பின்தலையை பிடித்துக்கொண்டு,அப்படியே நெளிச்சுண்டு அதே போஸில் பாடல் முடியும்வரை நின்றுவிடுவது என்று மனதுக்குள் முடிவு செய்திருந்தேன். நம்ப தெரு புள்ளையார் கோவில் பஜனையா இருந்தா, நமக்கு பிடிக்காத மாமா, கந்தா! கடம்பா! கார்த்திகேயா!னு முருகர் பாட்டுப்பாட முயற்சி பண்ணும் போது, ஜெய் கோவிந்த நாம சங்கீர்தனம்! கோவிந்தா! கோவிந்தா!னு சத்தமா சொல்லி அவரை பாடவிடாமல் செய்துவிடலாம், இங்க அதுக்கும் வழியில்லை.

என்னிடம் மெதுவான குரலில், அண்ணே! அடுத்த பாட்டு slow motion! அப்படின்னான் கண்மணி. எனக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் லூஸ் motion வந்துவிடுமோ என்ற பயத்தில் ஆடிக்கொண்டிருந்தேன். மொத பெஞ்சுல உக்காச்சுண்டுருந்த ஒரு பொண்ணு வயத்தை பிடித்துக்கொண்டு தரையில் ‘டபால்னு’ விழுந்து புரண்டு சிரிச்சதை(ROFTL) பாத்தோனே எல்லாரும் சத்தமாக சிரிக்க ஆரம்பிச்சுட்டா. fusion டான்ஸ் பரிபூர்ணமாக ‘அசத்தப்போவது யாரு?’ நிகழ்ச்சியாக மாறிக்கொண்டிருந்தது.

எங்க நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது நாப்பது பேர்தான் இருந்தா, ஆனா எங்க நிகழ்ச்சி முடியும் போது housefull-ஆ இருந்தது (உச்சா போகப்போனவர்கள் கூட பாதியிலேயே(அடக்கிக் கொண்டு) திருப்பி வந்துவிட்டார்கள்!). எல்லா ஜன்னல்கள் வழியாவும் வேறு ரசித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்(ஓடிப்போன நாதாரிகளும் பல்லை காட்டிக்கொண்டு இருந்தார்கள்)

அதுக்கப்புறம் வந்த கடைசி பாட்டுதான் நாங்க பண்ணின fusion டான்ஸ்லேயே highlight ஆன விஷயம்.....

ஆட்டம் தொடரும்..........:)