Thursday, February 17, 2011

லைட்! காமிரா! ஆக்க்க்ஷன்!

மேலே சொன்ன இந்த மூனு வார்த்தைகளுக்கும் மயங்காதவாளே கிடையாது. தன்னோட வாழ்னாள்ல ஒரு தடவையாவது இந்த மூனு வார்த்தைக்கு அப்புறம் வெளிச்சம் கொட்டும் விளக்குகளுக்கு நடுல நின்னூண்டு "எங்க ஆத்தா அன்னிக்கே சொன்னா! ஹ்ம்ம்ம்ம் நாந்தான் மடச்சி கேக்காம போனேன்!"னு ஒரு வசனத்தை சொல்ல பெண்களும் "ஆமா ஆமா பெரியய்யா" ரேஞ்சுக்கு இருந்தா கூட பரவாஇல்லைனு சொல்ல தயாரா இருக்கும் ஆண்களும் இங்கு அதிகம். இந்த மூனு வார்த்தையை சொல்லி ஒரு காட்சியை எடுத்துட்டு "அடுத்த சீன் நாம ஹீரோவோட முகத்துக்கு க்ளோஸப் வைக்கப்போறோம்"னு சொல்ல ஆவாலாய் துடிக்கும் இளம் இயக்குனர்களுக்கும் பஞ்சமே இல்லை.
எனக்கும் அந்த மாய உலகம் மேல ஒரு சின்ன ஈர்ப்பு உண்டு. சின்ன வயசுலேந்தே மேடைல நின்னு பேசர்துன்னா ரொம்ப பிடிக்கும். அதுவும் நமக்கு பழக்கமே இல்லாத வெளியிடத்துல வெளி மனுஷா முன்னாடி எதாவது பண்ணி காட்டர்துன்னா சந்தோஷம் கரை புரண்டு அம்பை வரைக்கும் ஓடும். பத்மாசேஷாத்ரி அளவுக்கு செலவு செய்யக் கூடிய எந்த கலை சேவைக்கும் மோர்குழம்பு விடர்த்துக்கு நான் போகமாட்டேன். ஏதோ நம்ப ரேஞ்சுக்கு தாத்தாவோட பழைய கல்யாண கோட், அப்பாவோட 9 முழம் வேஷ்டியில் கட்டும் பஞ்சகச்சம் சகிதமா ஒட்டு மீசையோட போடும் பாரதியார் வேஷம், அம்மாவோட ரெட்டை வடம் சங்கிலியுடன் அங்கவஸ்திரம் சகிதமா வரும் பண்ணையார் வேஷம், ‘முடுக்கு’ மூச்சா மாமாவோட பழைய காவி வேஷ்டியை இரவல் வாங்கி காவேரிப் பாட்டியோட காசி பித்தளை கிண்டியோட வரும் போலி சாமியார் வேஷம்,பக்கத்தாத்து முருகன் படத்துல செருகி வச்ச மயிலிறகை தலையில் செருகிண்டு கைல வெண்ணீர் அடுப்பு ஓமக்குழல் வெச்சுண்டு நெத்திச்சுட்டி எல்லாம் போட்ட சுட்டியான நாலு பொண்கொழந்தேளுக்கு நடுவில் நிற்கும் கள்ளக் கிருஷ்ணர் அப்பிடின்னு செலவு இல்லாத வேஷம் மட்டும் தான் போடுவேன்.நம்ப வாத்தியார்!..:)

இப்படியா வாழ்க்கை வேடிக்கை வினோதங்களோட போயிண்டு இருக்கும் போது சில சுவாரசியமான சம்பவங்கள் ஏற்பட்டது. எங்க ஊருக்கு சினிமா & சீரியல் ராசி அதிகம். டைரக்டர் ஷங்கர் ஜென்டில்மேன்ல தொடங்கி முதல்வன், அன்னியன் வரைக்கும் எங்க ஊர்லையோ அல்லது அம்பைலயோ படம் புடிக்காம போனது இல்லை, அதுலேந்து ஏகப்பட்ட சூட்டிங் எப்ப பாத்தாலும் நடந்துண்டே இருக்கும். “சாமி படத்துல வரும் த்ரிஷா எல்லாம் எங்காத்து திண்ணைல வச்சுதான் காபி குடிச்சா! னோக்கு தெரியுமோ!னும் “இது என்ன ப்ரமாதம்! அவளுக்கு ஐயங்கார்கட்டு மடிசாரே நான் தான் கட்டி விட்டேன் தெரியுமோ?” னும் சொல்லும் மாமா மாமிகள் எங்க ஊரில் சர்வ சாதாரணம்.தக்குடு!...:)

அந்த மாதிரி ஒரு சமயத்துல தான் எங்க ஸ்கூலுக்கு சினிமாகாரா ரெண்டு பேர் வந்து "கள்ளம் கபடம் இல்லாத ஒரு முகவெட்டுடைய ஒரு பையன் வேணும்!"னு எங்க ஹெட்மாஸ்டர் கிட்ட கேக்கவும் அவருக்கு உடனே தக்குடுவோட முகம் ஞாபகத்துக்கு வர, என்னை ப்யூன் வந்து அழைச்சுண்டு போய், அவா ரெண்டு பேரையும் பாத்து பேசினேன். அவாகிட்ட பேசினதுலேந்து படம் பேர் 'பாரதி'னு தெரிஞ்சது, நான் தான் ஒரு பாரதியோட விசிறி அதுவும் போக அவா சொன்ன தேதில தான் என்னோட ரிவிஷன் டெஸ்ட்ல கணக்கு பரிட்சை வந்தது, அதனால ரெட்டை சலாம் சொல்லி ஒத்துண்டாச்சு. பாரதியாருக்கு ஒன்னு விட்ட மச்சினன் வேஷம், ஆக கண்ணம்மாவுக்கு தம்பி. கண்ணம்மாவா நடிச்சது நம்ப தேவ்யாணி, அந்த நாளும் வந்தது, காத்தால குளிச்சுட்டு, பளீர் கோபியோட காத்துண்டு இருந்தேன். 'டாண்'னு எட்டு மணிக்கு ஒரு வெள்ளை கலர் அம்பாசிட்டர் வந்து எங்காத்து வாசல்ல நின்னது. பக்கத்தாத்து மாமிக்கு பெருமை பிடிபடலை. உம்மாச்சி எல்லாம் கும்பிட்டுட்டு கார்ல பின் சீட்ல ஏறி உக்காந்தேன். அடுத்த நாள்லேந்து கார் வந்தவுடனே தெருல ரெண்டு பக்கமும் வெளில நின்னுண்டு பாத்தா, ஸ்கூலுக்கு போகர்த்துக்காக அவாத்து நடைல வச்சு தலை பின்னிக்கும் எங்க தெரு பிகர்கள் எல்லாம் வாசல்ல வந்து பின்னிக்க ஆரம்பிச்சது.


எங்க ஊர்லையே இருக்கும் ஒரு தெருல தான் அந்த சமயம் சூட்டிங் நடந்துண்டு இருந்தது. போன உடனே என்னை பாத்த டைரக்டர் "பையனுக்கு மேக்கப் போட்டு கூட்டிட்டு வாங்க!"னு சொல்லிட்டார். ஒரு ஆத்து பட்டாசாலைக்கு போனோம். அங்க பாத்தா எல்லாரையும் வரிசையா உக்காசுக்க சொல்லி மொட்டை அடிச்சுண்டு இருந்தா. அடுத்து உனக்குதான் தக்குடு!னு ஒருத்தர் சொன்னார். "அட ராமாஆஆஆ! இது ஏதுடா இது புது வம்பா இருக்கு!"னு ஆயிடுத்து. ஸ்கூலுக்கு வந்த ப்ரகஸ்பதிகள் நல்ல ரோல்! நல்ல ரோல்!னு சொன்னாளே தவிர மொட்டை அடிக்கர விஷயத்தை சொல்லவே இல்லை. அந்த மேக்கப் மாமா கிட்ட போய் "மொட்டை எல்லாம் அப்பா கிட்ட கேக்காம அடிக்க முடியாது, வேணும்னா எங்க ஸ்கூல்ல காந்தி தாத்தா வேஷம் போடரவா மாதிரி சப்பாத்தி மாவை தலைல தடவி முடியை மறச்சுடுங்கோ"னு அப்பாவியா முகத்தை வச்சுண்டு ஐடியா எல்லாம் சொன்னேன்.
அந்த கடங்காரன் காதுலையே வாங்கிக்காம எனக்கு மொட்டை அடிக்கர்துலையே குறியா இருந்தான். அதுக்கு அப்புறம் 'மொழு மொழு'நு இருந்த ஒரு மொட்டையை காட்டி "பாத்தியா, இவர் பாரதிக்கு சொந்த மச்சினர் அப்பாதுரை, அவருக்கே மொட்டை போட்டாச்சு, நீ ஒன்னு விட்ட மச்சினன் தான், அதனால ஒழுங்கா மொட்டை போட்டுக்கோ!"னு சொன்னார்.எல்லாரும் பாரதிக்காக உயிரையே குடுக்கரா நாம கொஞ்சம் #%வது குடுப்போம்னு சூப்பரா ஒரு மொட்டையை போட்டுண்டு தழைய தழைய குடிமியோட(செளரி) போய் காமிரா முன்னாடி நின்னேன். பாரதியா நடிச்சவர் பேர் ஷாயாஜி ஷிண்டே!னு ஒரு மராட்டிகாரர்(தூள் படத்துல அமைசரா வருவாரே).

ஒரு வாரம் 3 இடங்கள்ல வெச்சு என்னோட காட்சிகள் எல்லாம் சூட் பண்ணினா, அதுக்கு அப்புறம் காசில நடக்கும் சூட்டிங்குக்கும் வரர்தா இருந்தா கூட்டிண்டு போறோம்!னு சொன்னா, ஆனா நான் போகலை. ஆத்துல அப்பா கிட்ட ஒரே அர்ச்சனை, “உன்னோட புள்ளை உருப்படாம தான் போக போறான்!”னு அம்மா கிட்ட அப்பா சொல்லுவார்.மொட்டை போட்டதுல அப்பாவுக்கு பயங்கர கோவம். இன்னொரு பக்கம் தெருல,ஸ்கூல்ல எல்லா இடத்துலையும் தக்குடு நல்ல பிரபலமானான். படத்துல எல்லாம் நடிச்சு இருக்கன்!னு ஒரே பெருமை எல்லாருக்கும். படத்தோட ஆரம்பத்துல என்னோட பேர் வரும் போது தெருக்காராளுக்கு எல்லாம் ஒரே சந்தோஷம்..:) அதுக்கு அப்புறம் காலேஜ் வரைக்கும் எங்க போனாலும் எல்லாரும் மொதல்ல இந்த சினிமா சூட்டிங் பத்தி தான் ஜாரிப்பா.

இப்பவும் ஆகஸ்ட் 15, ஜனவரி 26-க்கு எதாவது சேனல்ல பாரதி படம் போட்டா விடாம எங்க தெரு மாமா மாமிகள் “பாரதில தக்குடு வரும்!”னு சொல்லிண்டே பாத்துட்டு சாயங்காலம் கோவில் தீபாராதனை போது எங்க அம்மா கிட்ட 'டீவீல உம்புள்ளையாண்டான் வந்தானே காத்தால"னு மறக்காம சொல்லர்தா அம்மா போன்ல சொல்லுவா.

பழைய நினைவுகள் தாமிரபரணி ஆத்தங்கரையில் தண்ணியோட ஆழம் குறையும் போது வெளில தெரியும் சின்ன சிவன்பாறை சிற்பம் மாதிரி சில சமயம் உண்டாகி ஆனந்தம் கலந்த ஏக்கத்தை ஏற்படுத்திட்டு போகர்து.

37 comments:

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//நெத்திச்சுட்டி எல்லாம் போட்ட சுட்டியான நாலு பொண்கொழந்தேளுக்கு நடுவில் நிற்கும் கள்ளக் கிருஷ்ணர்//
கனபொருத்தமான வேஷம் ஐ சே...:)

//"கள்ளம் கபடம் இல்லாத ஒரு முகவெட்டுடைய ஒரு பையன் வேணும்!"னு எங்க ஹெட்மாஸ்டர் கிட்ட கேக்கவும் அவருக்கு உடனே தக்குடுவோட முகம் ஞாபகத்துக்கு வர//
நோ கமெண்ட்ஸ்...

//ஸ்கூலுக்கு போகர்த்துக்காக அவாத்து நடைல வச்சு தலை பின்னிக்கும் எங்க தெரு பிகர்கள் எல்லாம் வாசல்ல வந்து பின்னிக்க ஆரம்பிச்சது//
நம்பிட்டோம்...

//படத்தோட ஆரம்பத்துல என்னோட பேர் வரும் போது தெருக்காராளுக்கு எல்லாம் ஒரே சந்தோஷம்..:)//
நிஜமாதான் சொல்றியா... எப்பவும் போல காதுல பூ சுத்தறேனு நெனச்சேன்...சாரி... :))))

உன்னோட சீன் Youtube லிங்க் எதுனா add பண்ணி இருக்கலாமே தக்குடு...

Mahi said...

அட..சொல்லவே இல்ல தக்குடு? /உன்னோட சீன் Youtube லிங்க் எதுனா add பண்ணி இருக்கலாமே தக்குடு... /ரிபீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்!

sriram said...

சினிமா புகழ் ப்ளாக்கர் தக்குடு வாழ்க வாழ்க.

தக்குடு, கெழம் மறுபடியும் முதல்வர் ஆனா உனக்கும் கலைமாமணி பட்டம் உண்டு

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Chitra said...

பழைய நினைவுகள் தாமிரபரணி ஆத்தங்கரையில் தண்ணியோட ஆழம் குறையும் போது வெளில தெரியும் சின்ன சிவன்பாறை சிற்பம் மாதிரி சில சமயம் உண்டாகி ஆனந்தம் கலந்த ஏக்கத்தை ஏற்படுத்திட்டு போகர்து.


..... ஜாலியா வாசிச்சிட்டு வந்தேன்... கடைசியில இப்படி எழுதி, மனசை கரைய வச்சிட்டேளே!

Chitra said...

கலைமாமணி தக்குடு, வாழ்க!

வல்லிசிம்ஹன் said...

என்ன ஒரு பாக்கியம் தக்குடு. சொல்லவே இல்லையேப்பா. பாரதி படம் ஒரு காவியம். அதில நடிச்சதுக்குக் கொடுத்துவச்சிருக்கணும்.சரித்திரத்தில இடம் பிடிச்ச தக்குடு! பால தக்குடு என்னமா இருக்கு. இந்த மாதிரி இன்னோரு எடிஷன் சீக்கிரமா உங்கள் வாழ்வில் வரணும். அதை நாங்க எல்லாரும் பார்த்து கொஞ்சணும்.

கவிநயா said...

தக்குடு வேஷமெல்லாம் போடாட்டியும் கிருஷ்ணன்தான் :) பாரதி படம் இதுக்காகவே இன்னொரு முறை பார்ர்கணுமே! வாழ்த்துகள் தக்குடு!

Anonymous said...

இட்லி மாமியோட பின்னூட்டத்தை கன்னாபின்னான்னு வழி மொழிகிறேன்

Vasagan said...

\ஏதோ நம்ப ரேஞ்சுக்கு தாத்தாவோட பழைய கல்யாண கோட், அப்பாவோட 9 முழம் வேஷ்டியில் கட்டும் பஞ்சகச்சம் சகிதமா ஒட்டு மீசையோட போடும் பாரதியார் வேஷம், அம்மாவோட ரெட்டை வடம் சங்கிலியுடன் அங்கவஸ்திரம் சகிதமா வரும் பண்ணையார் வேஷம், ‘முடுக்கு’ மூச்சா மாமாவோட பழைய காவி வேஷ்டியை இரவல் வாங்கி காவேரிப் பாட்டியோட காசி பித்தளை கிண்டியோட வரும் போலி சாமியார் வேஷம்,பக்கத்தாத்து முருகன் படத்துல செருகி வச்ச மயிலிறகை தலையில் செருகிண்டு கைல வெண்ணீர் அடுப்பு ஓமக்குழல் வெச்சுண்டு நெத்திச்சுட்டி எல்லாம் போட்ட சுட்டியான நாலு பொண்கொழந்தேளுக்கு நடுவில் நிற்கும் கள்ளக் கிருஷ்ணர் அப்பிடின்னு செலவு இல்லாத வேஷம் மட்டும் தான் போடுவேன்.\
தக்குடு தம்பி
சான்சே இல்லை உன்னை அடிசுகிறதுகு. உணமையா Labla (இன்னும் இருகேன்) உங்காந்து கிட்டு சிறிச்சுடேன், பக்கதுலே இருந்த ஸ்டுடென்ட் என்னாச்சு இந்த ஆளுக்குகனு பார்க்கிறான்.

Vasagan said...

சினிமா புகழ் ப்ளாக்கர் தக்குடு வாழ்க வாழ்க.

தக்குடு, கெழம் மறுபடியும் முதல்வர் ஆனா உனக்கும் கலைமாமணி பட்டம் உண்டு

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

I second it
Sri ithukkakavenum kelam marupadium varavendum.

Vasagan said...

\தாமிரபரணி ஆத்தங்கரையில் தண்ணியோட ஆழம் குறையும் போது வெளில தெரியும் சின்ன சிவன்பாறை சிற்பம் மாதிரி சில சமயம் உண்டாகி ஆனந்தம் கலந்த ஏக்கத்தை ஏற்படுத்திட்டு போகர்து.\

இந்த வரிகள் என்னை ரொம்ப பாதிச்ச வரிகள். சின்ன பிள்ளையில் சிந்துபூந்துறையில் (நெல்லை ஜங்ஷன்) தாமிரபரணியை பார்த்ததுக்கும் இப்போ சாக்கடையாய் பார்க்கும் போது என்னுடைய பிள்ளைகள் இழந்ததை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை.
சந்தோசமாக குதித்து விளையாடி கொண்டிருந்த குழந்தையை சீரளிச்ச மாதிரி உணர்கிரேன்.

RVS said...

தக்குடு...கார்ல வந்து அழைச்சுண்டு போய் சிண்டை எடுத்துட்டாளே! பாரதி படத்துல நடிச்சதே பெருமைதானே!
அகில உலக தக்குடு ரசிகர் நற்பணி மன்றம்ன்னு ஆரம்பிச்சு சென்னையை தலைமையிடமா கொண்டு வேலைகளை தொடரட்டுமா? ;-) ;-)
கடைசி பாரா அற்புதம் தக்குடு! பினிஷிங் டச். டச்சிங்..டச்சிங்.. ;-)

mightymaverick said...

//உன்னோட சீன் Youtube லிங்க் எதுனா add பண்ணி இருக்கலாமே தக்குடு...//சொம்பு தூக்கிட்டு தக்குடு நடந்து வர்ற சீனை போல வருமா? (youtube-க்கு திருஷ்டிப்பொட்டு இந்த காட்சியாக தான் இருக்கும்.)//காவி வேஷ்டியை இரவல் வாங்கி காவேரிப் பாட்டியோட காசி பித்தளை கிண்டியோட வரும் போலி சாமியார் வேஷம்//இந்த வேஷம் உனக்கு மட்டும் இல்லை... உன் அண்ணனுக்கும் நல்லாவே பொருந்தும்... அத்தோட உனக்கு பால(குழந்தை)கிருஷ்ணன் வேஷம் தான் பொருத்தமா இருக்கும்...உன் அண்ணனுக்கு தான் கோபாலகிருஷ்ணன் வேஷமெல்லாம் பொருந்தும...

வெங்கட் நாகராஜ் said...

Nice Narration. Thanks for sharing!

பத்மநாபன் said...

சினிமாவில் தக்குடுவா....அஹா மகிழ்ச்சி அதுவும் பாரதி படத்தில் மிகுந்த மகிழ்ச்சி...இதுக்காகவே இன்னோர் முறை பார்க்கவேண்டும்..

குட்டித்தக்குடு தூள்....

Sriram (doha) said...

வருங்கால முதல்வர் தக்க்குடு வாழ்க!!
இவண்
(வருங்கால) 8 வது மாவட்ட செயலர்.

Sriram (Doha) said...

//நெத்திச்சுட்டி எல்லாம் போட்ட சுட்டியான நாலு பொண்கொழந்தேளுக்கு நடுவில் நிற்கும் கள்ளக் கிருஷ்ணர்//
Krishnar veshamellaam poda vendam. As it is.. u r like krishnar (nadai bhavanai la)

Finishing lines - really superb!!

Jaishree Iyer said...

சினிமாவில் தக்குடுஅட..சொல்லவே இல்ல.Feel Happy.I will see this film once more.. பழைய நினைவுகள் தாமிரபரணி ஆத்தங்கரையில் தண்ணியோட ஆழம் குறையும் போது வெளில தெரியும் சின்ன சிவன்பாறை சிற்பம் மாதிரி சில சமயம் உண்டாகி ஆனந்தம் கலந்த ஏக்கத்தை ஏற்படுத்திட்டு போகர்து. I love this sentence,Nice Post!

lata raja said...

Hi super pa! Nostalgia-ngra vaarthai-kku azhagaana thamizh vilakkam andha kadaisi vari!

meenamuthu said...

ஆஹா! பெருமையா இருக்கு தக்குடு :)
வரிக்கு வரி சிரிச்சுட்டே இருந்தேனா..

கடைசியில பொசுக்குனு மனசை நெகிழவச்சுட்டே..

Matangi Mawley said...

hee he! LOL ... 'barathi kaaga uyira kodukkaraa.. namba..' -- antha part semma comedy!

naan 'bharathi' movie paaththathilla. athu ennamo- oru marathi actor-aala eppadi bhaarathiyaar role panna mudiyum. athu verum acting oda poidum. soul irukkaathu-nnu enakku oru ennam. athanaala antha movie ennamo paakka thonave illa.
aanaa ippo thakkudu irukkaar antha movie-la nnu therinjapram paakka vendiyathu thaan polarukke... koodiya seekkaram 'thakkudu rasikar mandram' start pannidalaam polarukke! Boss-kulla eththana eththana talent-uuuuu!!!! :D :D :P

RVS said...

தக்குடு இன்னமும் நோக்கு மூஞ்சி மாறவேயில்லையே! ஆச்சர்யமா இருக்கு. ;-) ;-)))))

Anonymous said...

indha jan26 thkku jaya tv la barathi padam pottanga. kadyam oorukku devayani poyirkkapo enakku neelamana kudumiyoda oru ollipichaan character a kattina nyabagama irukku. sariya thakkudu?sasisuga203@yahoo.co.in

vidhas said...

Eppadi Thakkudu, ellarum sollramatri nanum sollaren , you tube link eruntha add pannu, nanna sericheen, enjoyed .

தி. ரா. ச.(T.R.C.) said...

Thakktuvin bala leelaikal thotarum

SRINIVAS GOPALAN said...

தக்குடு
பாரதியாருக்கு சாப்பாடு எடுத்திண்டு 'அத்திம்பேருக்கு சாப்பாடு கொண்டு போகணும், காத்திண்டு இருப்பார் னு ஒரு பையன் வருவானே' அவனா நீ?
நல்ல opportunity.

Anonymous said...

Dear Thakkudu, cinemavaiyum vittu vaikalaiyaa, mottai yellam poottu vikram maathiri hard work panni irukkelnu sollungo!..;) Poolisamiyar & kalla krishnar vesham yellam ungalukku perfectaa match aagum,ungalukku antha skills neraiyaa undunnu yenga yellarukkum theriyum..:P

Ranjani Iyer

Shobha said...

ஹையோ குட்டி தக்குடு ரொம்ப ச்வீட் ! சினிமா உலகத்தில் கால் பதித்து களம் கண்ட வருங்கால முதல்வர் தக்குடுவுக்கு ஒரு ' ஓ' போட்டுக்கறேன்
ஷோபா

Anonymous said...

பதிவு பிரமாதம். நான் ரொம்ப லேட்டா வந்துருக்கேன் போல இருக்கு. வருங்கால அகில உலக சூப்பர் ஸ்டார் தக்குடு வாழ்க...:)) ஒரு பெரிய ஓஒ போட்டுக்கறேன் தக்குடுவுக்கு ...........
அன்புடன்
சுபா

vgr said...

thakkudu, enda scene..eduku munnadi eduku pinnadi nu sonnena...verify panna vasadiya irukum...:)Bharathi padam enakum sambantha pattadey...

-vgr

Unknown said...

great..nice memories brother..

valga pallandu..

Unknown said...

kutti papa ennai polavey erukku annaa.

தக்குடு said...

@ அப்பாவியோட தங்கமணி - யூ ட்யூப்ல லிங்க் வரும் அளவுக்கு பெரிய வேஷம் எல்லாம் கட்டலை அக்கா!..:)

@ மஹி - :))

@ பாஸ்டன் நாட்டாமை - நக்கல்யா உமக்கு!!..;PP

@ சித்ரா அக்கா - பாளையங்கோட்டைக்கும் அந்த நினைவு வந்திரிச்சே!!..:)

@ வல்லிம்மா - உங்களுடைய ஆசிர்வாதங்களுக்கு நன்னிஹை!!...;)

@ கவினயா அக்கா - நீங்க இப்படி சொல்லுவேள்னு எனக்கு தெரியும்...:))

@ மின்னல் - உங்கொக்காவுக்கு சொன்ன பதில் தான் உங்களுக்கும்..:PP

@ வாசகன் சார் - ரொம்ப சந்தோஷம் பா!! சிந்துபூந்துறை நானும் கேள்வி பட்டதுண்டு..:)

@ மன்னார்குடி மைனர் - உங்க அளவுக்கு எல்லாம் டச்சிங்கா எழுத முடியாது மைனர்வாள்!..:))

@ வி கடவுள் - நீங்க சொன்னா சரியாதான் இருக்கும், மதுரைல அந்த மார்வாடி பொண்ணு பேர் என்னா...;)

@ வெங்கட் சார் - :))

@ ரசிகமணி - மகிழ்ச்சி அண்ணா!..:)

@ Sriram அண்ணா - வெள்ளிக் கிழமை கவனிச்சுக்கறேன்..:P

@ ஜெய்ஷ்ரீ மேடம் - நன்னிஹை!..:)

@ லதா மாமி - சந்தோஷம் மாமி!..:)

@ மீனா அக்கா - காரைகுடி தங்கம் நம்ப கடை பக்கம் வந்துருக்கு போல!!..:))

@ மாதங்கி - நானும் அப்பிடிதான் நெனச்சேன் ஆனா நடிப்புல மனுஷன் ப்ரமாதமா பிஸ்து காட்டினார். முடிஞ்சா பாருங்கோ!..:)

@ மைனர் - குழந்தை மனசும் இன்னும் மறலைனு சொல்ல வந்தேள் இல்லையா...:))

தக்குடு said...

@ சுகா - அதே! அதே!..:)

@ வித்யா அக்கா - சந்தோஷம் ஜனனி அம்மா!!..;)

@ TRC மாமா - :))

@ கோபாலன் அண்ணா - அதே! அதே!

@ ரஞ்ஜனி - :))

@ shoba மாமி - இந்தியா வரமுடியாம பண்ணிடுவேள் போலருக்கே!!..:P

@ சுபா மேடம் - :))

@ vgr - பாரதியாருக்கு சாப்பாடு கொண்டு போகும் ஒரு பொடியன் வேஷம்...:) உங்களுக்கு என்ன அதுல தொடர்பு???

@ சிவா - :))

Unknown said...

@ மன்னார்குடி மைனர் - உங்க அளவுக்கு எல்லாம் டச்சிங்கா எழுத முடியாது மைனர்வாள்!..:))--நாங்கலாம் ஒரே ஊரு காரவங்களாக்கும்

மனம் திறந்து... (மதி) said...

"பாரதி சின்னப் பயல்" தக்குடு "பெரிய பயல்" னு ஆயிடுச்சே! ஆஹா!

soma said...

எல்லாரும் பாரதிக்காக உயிரையே குடுக்கரா நாம கொஞ்சம் #%வது குடுப்போம்னு சூப்பரா ஒரு மொட்டையை போட்டுண்டு தழைய தழைய குடிமியோட(செளரி) போய் காமிரா முன்னாடி நின்னேன்.

பவும் ஆகஸ்ட் 15, ஜனவரி 26-க்கு எதாவது சேனல்ல பாரதி படம் போட்டா விடாம எங்க தெரு மாமா மாமிகள் “பாரதில தக்குடு வரும்!”னு சொல்லிண்டே பாத்துட்டு சாயங்காலம் கோவில் தீபாராதனை போது எங்க அம்மா கிட்ட 'டீவீல உம்புள்ளையாண்டான் வந்தானே காத்தால"னு மறக்காம சொல்லர்தா அம்மா போன்ல சொல்லுவா.

பெருமை தான் தக்கபடி

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)