Saturday, February 20, 2010

ஆடு பார்கலாம் ஆடு........... Part 2

புதுசா வந்திருந்தா அவங்களுக்கு PART 1


மேல சொல்லர்துக்கு முன்னாடி இந்த டான்ஸ் ஆடரவங்களை பத்தி கொஞ்சம் சொல்லனும். போட்டிக்கு பத்து நாள் முன்னாடியிலிருந்தே, ஒத்திகை! ஒத்திகை!னு ஒரு ரூமுக்குள்ள தையா! தக்கா!னு குதிப்பார்கள். அதுவும் நம்பள மாதிரி டான்ஸ் தெரியாதவர்கள் தெரியாதனமா உள்ள நுழஞ்சுட்டா அவ்ளோதான் கதை! introduction stepu அப்படிம்பாங்க, intro steppu- கும் second steppu-கும் நடுல ஒரு motion step வச்சுக்கலாமா அப்படினு அவர்களுக்குள் கலந்தாலோசிப்பார்கள், ஒன்னாங்கிளாஸ் படிக்கும் பிள்ளைகள் மாதிரி 1008 தடவை 1 2 3 சொல்லிவிட்டுத்தான் ஆடுவார்கள்,நெத்தில வராத வேர்வையை கட்டை விரலால் வழித்து நம்ப பக்கமாக தெளிப்பார்கள். போட்டிகள் நடக்கற இடத்திலும் இந்த டான்ஸ் கோஷ்டிக்குதான் கூட்டம் ஜாஸ்தியா இருக்கும்.

இதே பெண் கொழந்தேளா இருந்தா அவாளோட கூத்து வேற மாதிரியா இருக்கும். கர்ணன் கவச குண்டலத்தோட பொறந்த மாதிரி எங்க ஊர் பொண்ணுங்க எல்லாம் துப்பட்டாவோடு பிறந்தவர்கள். எட்டு பின் போட்டு குத்தி சரியா இருக்கர துப்பட்டாவை பத்துமுறை(நிமிடத்திற்கு) சரிசெய்துகொண்டேதான் ஒத்திகை செய்வார்கள்.

நம்பளோட பேச்சுப்போட்டி Preparation place ரொம்ப சிம்பிளாதான் இருக்கும். அச்சுகுண்டா எழுதர்துக்கு ஒரு ரூபாய் பேனா,போன வருஷத்து பழைய கட்டுரை நோட்டு(Paper waste பண்ணக்கூடாது!!), இரண்டு ஆரஞ்சு மிட்டாய், நடுவில் காது குடைந்து கொள்ள ஒரு சிறிய கோழி இறகு(அது கிடைக்கவில்லை என்றால் atleast ஒரு காக்கா இறகு), ஒக்காச்சுக்கர்துக்கு ஒரு பெரிய வேப்பமரத்தடி, என் மேல கக்கா போகாத இடைவெளியில் உக்காந்துண்டு தாளம் தப்பாம கத்தற ஒரு காக்கா, நான் பார்கும் தொலைவில், ஆனால் அவர்கள் என்னை பார்காத தொலைவில் வட்டசட்டமா ஒக்காசுண்டு கலகலவென்று சிரித்து பேசிக்கொண்டிருக்கும் நாலு குத்துவிளக்கு(உங்களுக்கும் வித்யாபாலன் பிடிக்கும்னா, வெட்கப்படாமல் ‘வித்யாபாலன்’ என்றே சத்தமாக வாசிக்கலாம்) போன்ற பொண்கொழந்தேள்(இடது உச்சந்தலையில்(அவாளோட தலைலதான்) ஒரு ஒத்தை ரோஜாவும் வச்சுண்டு இருந்தா கல்லும் சொல்லாதோ கவி???) இது எல்லாம் இருந்தா, நம்ப கற்பனை குதிரை 'குருசிஷ்யன்' படத்துல வர VK.ராமசாமி குதிரை மாதிரி சும்மா பிச்சுண்டு போகும்.

ஒரு வழியா போட்டி நாளும் வந்தாச்சு! நம்ப பயபுள்ளைங்க எல்லா போட்டி யிலும் பட்டையை கிளப்பி கொண்டிருந்தார்கள். முடிவுகள் எல்லாம் சாயங்காலம் மேடைல வச்சுதான் அறிவிப்போம்!அப்படின்டாங்க.(இல்லைனா ‘கிழக்குச்சீமையிலே’ நெப்போலியன் குரூப் மாதிரி ஜெயிக்காத Team எல்லாம் வண்டியை கட்டிக் கொண்டு கிளம்பிவிடும். அப்புறம் பரிசளிப்பு விழால மொத்தம் பத்து பேர்தான் இருப்பார்கள்). என்னோட போட்டியெல்லாம் மத்தியான சாப்பாட்டுக்குள்ளையே முடிந்து விட்டது. ஓரளவு திருப்தியா பண்ணியிருந்தேன். எங்களோட டான்ஸ் கோஷ்டிதான் முதல் முதலாக எழுதிய லவ் லெட்டர், பிகரோட அப்பா கையில் சிக்கிக்கொண்டது மாதிரி ரொம்ப டென்ஷனாக இருந்தார்கள்.

விசாரித்து பார்த்ததில் நம்ப fashion டான்ஸ்தான் பரிசளிப்பு விழாவுக்கு முந்தின போட்டி என்று தெரிந்தது. பாக்ஸின் மாஸ்டர் போல் அவர்களை, கவலைபடாதே! நாமதான் ஜெயிப்போம்! அப்படி, இப்படினு நான் வேறு கூட கொஞ்சம் டென்ஷனை ஏத்தி விட்டுட்டேன். எனக்கும் ரொம்ப ஆசை, எப்படிதான் அந்த fashion டான்ஸ் ஆட்றாங்கனு பாக்கனும்டா தக்குடு! அப்படினு எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

காபி,டீ எல்லாம் தெம்பா குடிச்சுட்டு எல்லாரும் டான்ஸ் போட்டிக்கு ரெடி ஆனார்கள். நம்ப பசங்க ‘முக்காபுலா!’ பாட்டுக்கு ஆடுவதாக முடிவு செய்து பயிற்சியும் செய்து வந்திருந்தார்கள். அதற்கு வசதியாக ‘குலே பகவாலி’ எம்ஜியார் மாதிரி தொழ தொழ பாண்டு எல்லாம் போட்டுக்கொண்டிருந்தனர். நான் வழக்கம் போல போட்டி ஆரம்பிக்கர்துக்கு முன்னாடி ஆடு களம் எப்படி இருக்குனு பாக்கர்துக்கு போனேன். சுமாரா ஒரு நூத்தி இருபது பார்வையாளர்கள் உக்காச்சுக்கர மாதிரியான ஒரு வகுப்பரை, எட்டு ஜன்னல் இருந்தது, இரண்டு நுழைவாயில் இருந்தது, சைடுல நடுவர்கள் உக்காச்சுக்கர்துக்கு நாலு chair எல்லாம் போட்டு வச்சுருந்தா.

எல்லாம் பாத்துட்டு பின்னாடி திரும்பி பார்தால், போர்டுல Fusion டான்ஸ் அப்படினு கொட்டை எழுத்துல எழுதி வச்சுருந்தா. இங்கையுமா தப்பா எழுதி வச்சுருப்பா??!!!!! அப்படினு யோசிச்சுண்டு இருக்கும் போதே எல்லாரும் வர ஆரப்பிச்சாச்சு. லிஸ்டு படி நம்ப கோஷ்டியோட நிகழ்ச்சி இரண்டாவது. எப்படியும் மொதல்ல ஒரு குரூப் ஆடப்போர்து, பசங்க அத பாத்தா ஒரு idea கடைச்சுரும்னு மொன்னை தைரியத்தோடு இருந்து விட்டேன். அவரே வருக! இவரே வருக!னு எல்லா சம்பிருதாய வரவேற்பும் முடிந்த பிறகு, போட்டியும் ஆரம்பமானது. முதல் அணி மேடையை நோக்கி சென்று கொண்டு இருந்தது. கல்யாணமண்டபத்தில் எதிர்படும் சக மாமிகளிடம், ‘கல்யாணத்துக்கு வந்தேளா??’ என்று அசட்டுக் கேள்வி கேட்கும் சராசரி அம்புஜா மாமி போல, நானும் அவர்களிடம், ஆடப்போரேளா?னு கேட்டு விட்டு, (இன்முகத்தோட) நீங்க என்ன பாட்டுக்கு ஆடப்போறேள்!?அப்படினு மெதுவா அடுத்த பிட்டை போட்டேன். அதுக்கு அவர்கள் சொன்ன பதில் என்னோட தலைல இடி மாதிரி இறங்கியது.

குறிப்பு - நம்ப வலையுலக 'சொர்னாக்கா'(அனன்யா அக்கா) கொசுவத்தி சுத்த அழைச்சுருக்காங்க. அக்கா! நம்ப பதிவுல மெஜாரிட்டி அந்த வகைதான்....:)

ஆட்டம் தொடரும்..........:)

25 comments:

அநன்யா மஹாதேவன் said...

ஆரம்பமே சூப்பரு.. இனி அடுத்த பதிவு கன் ஜோரா இருக்கும்ன்னு நினைக்கறேன். நீ தர்ம அடி வாங்கும் அந்த கண்கொள்ளாக்காட்சி இப்போவே தெரியரதே! அடுத்த வாரம் சீரியஸ் பதிவு போட்டு மொங்காம் போடாதே, படிக்கும்போது ஒரு கண்டின்யூட்டி வேண்டாமோ? நீயெல்லாம் கவிதை எழுதினா காக்கய்க்கு கூட வயத்த கலக்கிடுமாக்கும்.. நடத்து நடத்து.

அண்ணாமலையான் said...

நடத்துங்க... விருது உங்களுக்குத்தான்

தி. ரா. ச.(T.R.C.) said...

எங்க ஊர் பொண்ணுங்க எல்லாம் துப்பட்டாவோடு பிறந்தவர்கள். எட்டு பின் போட்டு குத்தி சரியா இருக்கர துப்பட்டாவை பத்துமுறை(நிமிடத்திற்கு) சரிசெய்துகொண்டேதான் ஒத்திகை செய்வார்கள்

ஆஹா என்ன ஒரு டைம் அன்ட் மோஷன் ஸ்டெடி.இதெல்லாம் ஒளிச்சு உள்ளே வெச்சுண்டு ஹர ஹர சங்கரான்னு பில்டப் கொடுக்கறகு. அம்பியோட தம்பிதானே எப்படி போகும்
கலக்குடா மாப்ளே! தோஹாலே

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//எங்க ஊர் பொண்ணுங்க எல்லாம் துப்பட்டாவோடு பிறந்தவர்கள். எட்டு பின் போட்டு குத்தி சரியா இருக்கர துப்பட்டாவை பத்துமுறை(நிமிடத்திற்கு) சரிசெய்துகொண்டேதான்//

ஐ லைக் திஸ்! :)
என்னமா ஒரு Study! என்னமா ஒரு Observation! :)
படிக்கற புள்ளைங்க எப்பமே இப்பிடித் தான்! தான் உண்டு, "தன் படிப்பு" உண்டு-ன்னு இருக்கும்! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நான் பார்கும் தொலைவில், ஆனால் அவர்கள் என்னை பார்காத தொலைவில்//

உங்களுக்கு அப்பவே தொலை-நோக்குப் பார்வை இருந்திருக்கு போல! :)

//வட்டசட்டமா ஒக்காசுண்டு கலகலவென்று சிரித்து பேசிக்கொண்டிருக்கும் நாலு குத்துவிளக்கு போன்ற பொண்கொழந்தேள்(இடது உச்சந்தலையில்(அவாளோட தலைலதான்) ஒரு ஒத்தை ரோஜாவும் வச்சுண்டு இருந்தா//

அடடா! அடடா!

//கல்லும் சொல்லாதோ கவி???)//

அந்தக் கொழந்தேள் ஒங்க மேல வீசுன கல்லா? சொல்லும் சொல்லும்! :)

Porkodi (பொற்கொடி) said...

idi madhri oru paatu ennava irukum nu me thinking.. adhuvum 80's la..! hmmm...

sari, konjam ambiyai or geetha paatiyai proof read paaka solla koodadha? illa idhu tamizh typing typo nalaya? enaku thaan kaaichal la kannu sariya theriliya nu vera conpeesinga irukku!!

கீதா சாம்பசிவம் said...

சொல்லர்து=சொல்லறது
ஆடரவங்களை =ஆடறவங்களை
சொல்லனும். =சொல்லணும்
தெரியாதனமா =தெரியாத்தனமா
நுழஞ்சுட்டா =நுழைஞ்சுட்டா
ஒன்னாங்= ஒண்ணாங்கிளாஸ் (பாலக்காட்டுத் தமிழிலே சொன்னேன்னு சொல்லிட்டுப் பிழைச்சுப் போகலாம் :P)
இருக்கர=இருக்கிற

போதும்பா சாமி, முதல் இரண்டு பாராவிலேயே இத்தனை பிழையா??? தலை சுத்துது! :P:P:P:P இம்பொசிஷன் எழுது முதல்லே! அப்புறமா பதிவு எழுதறதைப் பார்க்கலாம்! :P:P:P:P

(இல்லைனா ‘கிழக்குச்சீமையிலே’ நெப்போலியன் குரூப் மாதிரி ஜெயிக்காத Team எல்லாம் வண்டியை கட்டிக் கொண்டு கிளம்பிவிடும்.//
அப்படி ஒரு படம் வந்ததா??? ஒரு படம் பாக்கி வைக்கிறதில்லை போலிருக்கே! :P


இங்கையுமா தப்பா எழுதி வச்சுருப்பா??!!!!! //

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னடாப்பா உங்க போஸ்டிலே இவ்வளவு எழுத்துப்பிழையானு பார்த்தேன், இப்போ இல்லை புரியுது! கஷ்டம், கஷ்டம், இப்படியான வாத்தியாருங்க கிட்டயா படிச்சீங்க??? :P:P:P:P

கீதா சாம்பசிவம் said...

தொடர//

அப்பாடி, வேர்ட் வெரிஃபிகேஷன், அது, இது எல்லாத்தையும் எடுத்துட்டு, சிம்பிளாப் பின்னூட்டம் போட வச்சதுக்கு நன்னியோ நன்னி!

தக்குடுபாண்டி said...

@ கொடியார் மற்றும் கீதா அம்மையார் - இந்தப் பதிவு ஒரு தர்மசங்கடமான நிலையில் சிக்கிக்கொண்ட ஒரு சாதாரண மாணவன் தனது நிலையை விளக்கும் படியான ஒரு அமைப்பை உடையது. அதன் காரணமாய் இதன் வடிவமைப்பும், அதில் வரும் பாத்திரங்களும் இயல்பானதொரு நடையில் தத்தம் நிலையை பரபரப்பாய் விளம்பும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. பதிவின் சுவை குன்றாதிருக்கும் வண்ணம் இதன் வார்த்தை அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே வரக்கூடிய மற்ற பதிவுகளில் இயல்பானதொரு தமிழ் நடை பின்பற்றப்படும். இந்தத் தொடரில் எழுத்துப்பிழையென தாங்கள் கருதும் இடங்கள் பதிவின் சுவாரசியத்தின் பொருட்டே அன்றி வேறொன்றும் இல்லை. புரிதலுக்கு நன்றி

கீதா சாம்பசிவம் said...

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ன ஒரு சமாளிப்பு! போர்க்கொடிக்கு வயசாச்சு இல்லை, அதான் கண்ணு தெரியலை, எனக்கு அப்படியா?? வி.எ. நிறைய ஊத்திப்பேனாக்கும். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

அநன்யா மஹாதேவன் said...

கீதா மாமி, அசாத்யம் போங்கோ. இந்த பிருகஸ்பதிக்கு நான் முன்னாடியே சொல்லி இருந்தேன். ரொம்ப தப்பும் தவறுமா எழுதறே, திருத்திக்கோன்னு. இது கேக்கலை. இப்பொ பாருங்கோ டீச்சர் மானம் காத்துல பறக்க விட்டுடுத்து!
//பாலக்காட்டுத் தமிழிலே சொன்னேன்னு சொல்லிட்டுப் பிழைச்சுப் போகலாம்// போறுமே இதுக்கு தமிழே தெரியலை, இந்த லக்ஷணத்துல பாலக்காட்டு தமிழ்வேற.. இதெல்லாம் ரெம்ம்ம்ப ஓவர்ட்டேளா? இதோட சமாளிஃபிகேஷனை பார்த்தேளோன்னோ? இதெல்லாம் தேறுமா? நேக்கென்னமோ சந்தேகமான்னா இருக்கு.

அநன்யா மஹாதேவன் said...

மாமி,
என் தம்பி தக்குடுவை இப்படி நீங்கள் சராமாரியா தாக்கறதை நான் வன்மையா ஆட்சேபிக்கிறேன், கண்டிக்கின்றேன், எதிர்க்கின்றேன். சின்ன பையன் தானே, எல்லாம் இனி சரியாத்தான் எழுதுவான்கேட்டாளா? இனி யாராவது இவனைப்பத்தி இங்கே தப்பு தப்பா எழுதுங்க உங்களுக்கு இருக்கு!
தக்குடு, ஓக்கேயா ராசா? இனி கதை சொல்லுவியோன்னோ?ஹீ ஹீ

கீதா சாம்பசிவம் said...

அநன்யா, எங்கே கிடைச்சது விக்கிரமாதித்தன் சிம்மாசனம்???? :P:P:P:P பிச்சு உதறி இருக்கீங்க?? அம்பியோட தம்பி, உன் காட்டிலே மழைதான் போ! சப்போர்ட்டுக்கு ஆளா சேர்க்கிறே!:P:P:P

அநன்யா மஹாதேவன் said...

மாமி நீங்க வேற, இது என்கூட செம்ம சண்டை! நான் உங்க கட்சியில இருக்கறது இவனுக்கு பிடிக்கலையாம். அதுக்கு தான் சப்பைக்கட்டு கட்டினேன். நீங்க தான் அவசரப்பட்டுடேள்!

ambi said...

@thambriiii, ஒரு குறிப்பிட்ட மொழி நடையை கையாள எழுத்துப் பிழையோடு தான் எழுதனும் என்ற அவசியம் இல்லை. குறிப்பா நீ கையாளும் மொழிக்கு எ-பிழை வர வேண்டிய அவசியம் இல்லவே இல்லை. கொங்கு தமிழுக்கு வல்லினம், மெல்லினம் எ-பிழைகள் அனுமதி உண்டு. :)

////வி.எ. நிறைய ஊத்திப்பேனாக்கும்//

@geetha paati, வாய்ல தானே? அது எங்களுக்கே தெரியுமே. :p

தக்குடுபாண்டி said...

@ அனன்யா அக்கா - முதல் போனியே நீங்கதானா?? ரொம்ப சந்தொஷம்.

@ மலை வாத்தியார் - வருகைக்கு நன்னிஹை!

@ TRC சார் - நன்றி ஐயா!

@ கே.ஆர்.எஸ் - என்னடா நம்ப பள்ளிகொண்ட பெருமாளை காணுமேனு நினைச்சேன். நன்றி KRS அண்ணா!

@ அனன்யா அக்கா - என்ன ஒரு வில்லத்தனம்!!!!

@ அம்பி - வாங்க சார், என்ன செய்வது, உனக்கு எழுதித் தரும் போதெல்லாம் ஒழுங்கா வந்தது, இப்பொ கொஞ்சம் இடிக்குது!...:)

கீதா சாம்பசிவம் said...

//@ அம்பி - வாங்க சார், என்ன செய்வது, உனக்கு எழுதித் தரும் போதெல்லாம் ஒழுங்கா வந்தது, இப்பொ கொஞ்சம் இடிக்குது!...:) //

மண்டபத்திலே எழுதிக் கொடுத்ததை எல்லாம் இதை விடச் சத்தமா யாராலே சொல்ல முடியும்???

கீதா சாம்பசிவம் said...

//மாமி நீங்க வேற, இது என்கூட செம்ம சண்டை! நான் உங்க கட்சியில இருக்கறது இவனுக்கு பிடிக்கலையாம். அதுக்கு தான் சப்பைக்கட்டு கட்டினேன். நீங்க தான் அவசரப்பட்டுடேள்!//

இது எத்தனை நிமிஷத்துக்கு??? க்ர்ர்ர்ர்ர் அவசரப்பட்டுட்டேள்னு எழுதணுமா, அவரசப்பட்டுடேள்னு எழுதணுமா???

தக்குடு, இப்படியெல்லாம் டீச்சர் இருந்தா நீ என்னத்தைத் தமிழ் எழுதி, போ! போ! போய்யா போ! (ஜெயம் ரவிகிட்டே யாரோ ஒருத்தி சொல்லுவாளே, சதா?? அந்த ஸ்டைலில் சொல்லிக்கவும்)அது என்னபடம்??? மறந்தே போச்சு! :D

LK said...

கீதா அண்ட் அனன்யா பாட்டி

இந்த மாதிரி பேச்சு நடைல எழுதறது கஷ்டம் .உங்களால முடியலைன்னு ஆதங்கத்துல தக்குடுவ குற்றம் சொல்லாதீங்க

அநன்யா மஹாதேவன் said...

கீதா மாமி, நான் ஒண்ணும் இவன் டீச்சர் இல்லை. நேக்கே டமில் தெரியாது.. நான் இந்த வெள்ளாட்டுக்கு வரலேது!!!! ஆளவுடுங்கப்பா!

அநன்யா மஹாதேவன் said...

அன்புள்ள தக்குடு ஜால்ரா, சாரி LK,

நீ அடிச்ச ஜால்ரா சத்ததுல காதுல ப்ளட். கொஞ்சம் அடக்கி வாசி!

இப்படிக்கு,
அனன்யா பாட்டி

LK said...

யெச்சுஸ்மி அனன்யா பாட்டி
oru unmaya sonna jaalravar \\ ..irukattum.. ethu eppadiyo paatinu accept pannathu nandri

கீதா சாம்பசிவம் said...

அநன்யா, என்ன இது??? இப்படியா மனசைத் தளர விடறது. நாலு வருஷமா இவனோட அண்ணனோட நான் தாக்குப்பிடிச்சுண்டு வரேன், ம்ஹும், துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே! :)))))

கீதா சாம்பசிவம் said...

இப்படிக்கு,
அனன்யா பாட்டி//

அக்கிரமமா இல்லை?? எதிரணிக்கு இப்படியா எடுத்துக்கொடுக்கிறது?? ம்ஹும், உங்களுக்கு இன்னும் நிறையச் சொல்லிக் கொடுக்கவேண்டி இருக்கே! என்ன போங்க! சூசனையாப் புரிஞ்சுப்பீங்கனு நினைச்சேன்! :D

Porkodi (பொற்கொடி) said...

சரி இப்போ யார் என்ன சொல்றாங்கனு எனக்கு புரியலை.. நான் என்ன சொன்னேன்னு ஒரு தடவை விளக்கிடுறேன்.. (வர வர தக்குடு ப்லாக் பக்கம் வந்தாலே மைக் பிடிக்க வேண்டியதா ஆகிடுது!)

நிச்சயமாய் பேச்சுத் தமிழில் எழுதலாம், முக்காவாசி எல்லோருமே அதானே பண்றோம். அதுக்காக, 'ர்', 'ற்'; 'ண்', 'ன்' இதெல்லாம் எதுக்கு மாத்தணும்.. அதை தான் நான் ஸ்பெல்லிங் மிஸ்டேக்னு சொன்னேன். அது என்னடானா கட்சி மாநாடாட்ட எங்கியோ போயிட்டு இருக்கு.

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)