Saturday, March 6, 2010

ஆடு பார்கலாம் ஆடு... 4

புதிதாக வந்தவர்களுக்கு - Part 1 Part 2 Part 3

நான் வேனா உன்னோட ஆடட்டுமா? என்று அவனிடம் கேட்டேன். அவ்ளோதான் எங்களுடைய மொத்த டீமும்(Bombey sisters உட்பட) புளுக்!!!!! என்று கோரஸாக சிரித்தார்கள். எனக்கு வெட்கம் வெக்கமா போயிடுத்து! பெரிய கல்யாணப் பந்திகளில் மெயின் டிபன் அயிட்டம் எல்லாம் காலியா போன சமயத்தில் மாப்பிள்ளையோட சொந்த அத்தைபாட்டி(கீதாபாட்டி!னு வாசகர்கள் வாசிச்சா ஆசிரியர் அதற்கு பொறுப்பல்ல) டிபன் சாப்பிட வந்து விடுவது உண்டு, அப்போது ரவா உப்புமாவை போட்டு ஒப்பேத்தப்பார்பார்கள். அதுபோல், இதுக்கெல்லாம் அசர்ர ஆளு இல்லை இந்த தக்குடுபாண்டி! அப்படினு எனக்கு நானே சமாதானம் சொல்லிண்டு ஆடுவதற்கு தயாரானேன். விதி யாரை விட்டது???....

திடீரென்று சிங்கம்பட்டிகாரன், கம்பு சுத்தர்தும், கொம்பு(மான் கொம்பு) சுத்தர்தும் ஒன்னு கடையாது! அப்படீன்னான். எனக்கு ஒரு எழவும் புரியாமல் முழித்துக்கொண்டிருக்கும் போதே, கம்புனா வீசி சுத்தனும், கொம்புனா வாங்கி சுத்தனும்! என்று முடித்தான். பாத்து ஆடுங்கண்னே! என்பதைதான் அவனுடைய Technical terms ல சொல்லியிருக்கான். பல்லவிலேந்து அனுபல்லவிக்கு சஞ்சாரம் பண்ணும்போது பதட்டம் இருக்கக் கூடாது(இது நம்ப Bombey sister-ஸேதான்). Finishing touch தான் ரொம்ப முக்கியம் தக்குடு!(இது நம்ப ‘மிக்கி மவுஸ்’ புகழ் ரவிவர்மா) என்று ஆளாளுக்கு அட்வைஸாக அள்ளி விட்டுக்கொண்டிருந்தார்கள் (பாசக்கார பயலுக). நான் எப்படா சிக்குவேன்னு ரொம்ப நாளா காத்துண்டு இருந்திருப்பாய்ங்க போலருக்கு!!

எங்கள் பள்ளிப் பெயரை நீட்டி முழக்கி அந்த அறிவிப்பாளர் அழைத்தார். நானும் இன்னொரு கண்மணியும் மேடையை நோக்கி நடந்தோம். குலதெய்வம் பெருவேம்புடையாரெல்லாம் மனசுக்குள்ள கும்பிட்டுக் கொண்டே மேடயை அடைந்தோம். பச்சை பாண்டு, வெள்ளை சட்டை அணிந்துகொண்டு(ஸ்கூல் யூனிபார்ம்) இந்தி நடிகர் கோவிந்தா போல ரொம்ப லக்ஷ்ணமாக இருந்தேன் (நெத்தில அழியாத ஒரு கோபி வேற இதுல). என்ன ஒரே தைரியம்னா? கூட ஆடற பையன் டான்ஸுல பலே கில்லாடி( நல்ல வேளை! இவனையும் சேத்து அந்த நாதாரிகள் கூட்டிண்டு போயிருந்தா கதை கந்தல்தான்). மத்த வானரங்கள் அட்வைஸ் குடுத்துண்டு இருந்த சமயத்துலேயே, நீ என்னை பத்தி கவலை படாம ஆடு! அப்பப்போ ‘இது நம்ம ஆளு பாக்யராஜ்’ மாதிரி, ஸ்வாகா!ல வந்து உன்னோட நான் join பண்ணிக்கரேன்னு அவனிடம் சொல்லிவிட்டேன்.

கேசட்டு போடும் அந்த நம்பியார் முதல்ல எதோ ஒரு கேசட்டை எடுத்துட்டு, அப்புறம் வேறு ஒன்றை எடுத்து ஒரு வில்லப் புன்னகையோடு போட்டு பொத்தானை அழுத்தினான். நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள் பாட்டு (சலங்கை ஒலி) ஸ்லொகத்துலேந்து ஆரம்பமானது. சேரன்மாதேவி கல்யாணராம பாகவதர் போல நான், நொண்டியடிக்கும் நடராஜர், குழழூதும் கண்ணன், பள்ளி கொண்டபெருமாள்( நம்ப KRS அண்ணா போஸ்) என்று பல அபிநயங்கள் பிடித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று பாட்டு திரனண திரனண! பகுதிக்கு போய்விட்டது.( நம்பியாரோட மிக்ஸிங் அப்படி!) எனக்கு கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டது. குதிங்காலை மட்டும் குதித்துக்கொண்டே ரெண்டு கையையும் சைடுல நீட்டிக்கொண்டு மேலும் கீழுமாக ஒரு step பரதத்துல உண்டு அதை try பண்ணப் போய் அது ‘சார்லி சாப்லின்’ step-ல போய் முடிந்தது.

கூட இருந்தவன் பம்பரம் போல சுற்றி சுற்றி ஆடிக்கொண்டிருந்தான். நான் டபக்குனு ஒரு இடத்துல போய் அசையாமால் நின்றுகொண்டு சிலை மாதிரி போஸ் குடுக்க ஆரம்பித்துவிட்டேன். அபிநயதர்ப்பணம் புக்குல கூட அத்தனை போஸ் இருந்திருக்காது. டிங்குடான்டாண்! டிங்குடான்! என்று யேக்கு தோ தீன் பாட்டு ஆரம்பிச்சுருச்சு!(சுத்த்த்த்த்தம்! தமிழுக்கே இங்க நான் தாண்டவம் ஆடிண்டு இருக்கேன், இதுல இந்தி வேரையா! என்று நொந்துகொண்டேன்). டக்குனு விட்டல பாண்டுரங்கர் மாதிரி இரண்டு கையையும் இடுப்பில் வச்சுண்டு upto இடுப்பு portion வரைக்கும் மாத்தி மாத்தி இரண்டு பக்கமும் தலையை சாய்க்க ஆரம்பித்தேன். கால்களையும் அப்பப்போ சாணியை மிதிச்சவன் போல உதறிக்கொண்டேன். அடுத்த இருபதாவது வினாடியில், ராஜா! ராஜாதி ராஜன் இந்த! என்ற ‘அக்னி நட்சத்திரம்’ பாடல் ஒலித்தது. தீப ப்ரதக்ஷிணத்துக்கு ஆடுவது போல மேடையை சுத்தி சுத்தி ஆட ஆரம்பித்துவிட்டேன்.

நம்பியாரோட திருட்டு முழியை பார்த்தால் அடுத்த பாட்டு ஒருவேளை ' ‘நேத்த்த்த்து ராத்திரி யம்ம்ம்ம்மா!’ வாக இருக்குமோ??னு எனக்கு சந்தேகமாக இருந்தது. அப்படி வந்தால் ஜட்ஜு டேபிள் பக்கத்துல போய் சிலுக்கு மாதிரி முகத்தை வைச்சுண்டு, உதட்டையும் லைட்டா கடித்துக் கொண்டு, இரண்டு கண்களையும் அரைவாசி திறந்து கொண்டு,வலது கையை மடக்கி பின்தலையை பிடித்துக்கொண்டு,அப்படியே நெளிச்சுண்டு அதே போஸில் பாடல் முடியும்வரை நின்றுவிடுவது என்று மனதுக்குள் முடிவு செய்திருந்தேன். நம்ப தெரு புள்ளையார் கோவில் பஜனையா இருந்தா, நமக்கு பிடிக்காத மாமா, கந்தா! கடம்பா! கார்த்திகேயா!னு முருகர் பாட்டுப்பாட முயற்சி பண்ணும் போது, ஜெய் கோவிந்த நாம சங்கீர்தனம்! கோவிந்தா! கோவிந்தா!னு சத்தமா சொல்லி அவரை பாடவிடாமல் செய்துவிடலாம், இங்க அதுக்கும் வழியில்லை.

என்னிடம் மெதுவான குரலில், அண்ணே! அடுத்த பாட்டு slow motion! அப்படின்னான் கண்மணி. எனக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் லூஸ் motion வந்துவிடுமோ என்ற பயத்தில் ஆடிக்கொண்டிருந்தேன். மொத பெஞ்சுல உக்காச்சுண்டுருந்த ஒரு பொண்ணு வயத்தை பிடித்துக்கொண்டு தரையில் ‘டபால்னு’ விழுந்து புரண்டு சிரிச்சதை(ROFTL) பாத்தோனே எல்லாரும் சத்தமாக சிரிக்க ஆரம்பிச்சுட்டா. fusion டான்ஸ் பரிபூர்ணமாக ‘அசத்தப்போவது யாரு?’ நிகழ்ச்சியாக மாறிக்கொண்டிருந்தது.

எங்க நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது நாப்பது பேர்தான் இருந்தா, ஆனா எங்க நிகழ்ச்சி முடியும் போது housefull-ஆ இருந்தது (உச்சா போகப்போனவர்கள் கூட பாதியிலேயே(அடக்கிக் கொண்டு) திருப்பி வந்துவிட்டார்கள்!). எல்லா ஜன்னல்கள் வழியாவும் வேறு ரசித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்(ஓடிப்போன நாதாரிகளும் பல்லை காட்டிக்கொண்டு இருந்தார்கள்)

அதுக்கப்புறம் வந்த கடைசி பாட்டுதான் நாங்க பண்ணின fusion டான்ஸ்லேயே highlight ஆன விஷயம்.....

ஆட்டம் தொடரும்..........:)

24 comments:

அநன்யா மஹாதேவன் said...

மீ த ஃபர்ஷ்ட்டு!!!! வெயிட்டீஸ் படிச்சுட்டு வர்றேன்!

அநன்யா மஹாதேவன் said...

ROFL !!!!
. சேரன்மாதேவி கல்யாணராம பாகவதர் போல நான், நொண்டியடிக்கும் நடராஜர், குழழூதும் கண்ணன், பள்ளி கொண்டபெருமாள்( நம்ப KRS அண்ணா போஸ்) என்று பல அபிநயங்கள் பிடித்துக் கொண்டிருந்தேன். ..

எப்படி இப்படி எல்லாம்? கலக்கிட்டே போ! முடியல!

LK said...

//(கீதாபாட்டி!னு வாசகர்கள் வாசிச்சா ஆசிரியர் அதற்கு பொறுப்பல்ல)//

பாட்டி கண்ணாடி மாத்தியாச்சு . சரியாய் படிப்பாங்க இனிமே.

//எங்க நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது நாப்பது பேர்தான் இருந்தா, ஆனா எங்க நிகழ்ச்சி முடியும் போது housefull-ஆ இருந்தது ///

எப்படியோ எல்லாரும் என்ஜாய் பண்ணாங்க இல்ல அதுதான் முக்கியம்

Porkodi (பொற்கொடி) said...

:)

(verum smiley ku enna artham nu kekka koodadhu.. posta padikala vadaiya vanga thaan vandhen adhuvum poche aiyo nu artham..)

post adutha madham vettiyaga aani pidungum podhu padikka padum :D

"geetha paati" nu boldla potta ungluku indhanga oru cup payasam.. ;)

திவா said...

உள்ளேன் ஐயா!

மதுரையம்பதி said...

மிகவும் ரசித்தேன் கணேசன்....

//. நம்ப தெரு புள்ளையார் கோவில் பஜனையா இருந்தா, நமக்கு பிடிக்காத மாமா, கந்தா! கடம்பா! கார்த்திகேயா!னு முருகர் பாட்டுப்பாட முயற்சி பண்ணும் போது, ஜெய் கோவிந்த நாம சங்கீர்தனம்! கோவிந்தா! கோவிந்தா!னு சத்தமா சொல்லி அவரை பாடவிடாமல் செய்துவிடலாம், இங்க அதுக்கும் வழியில்லை.//

பிள்ளையார் கோவில் உள்குத்து அரசியலையும் இங்கு நுழைத்த உம்மை 'நுண்ணரசியல் திலகம்' என்றே அழைக்கலாம்.. :))

கீதா சாம்பசிவம் said...

grrrrrrrrrrrrrrr padika maten.

கீதா சாம்பசிவம் said...

follow up

தி. ரா. ச.(T.R.C.) said...

சிலுக்கு மாதிரி முகத்தை வைச்சுண்டு, உதட்டையும் லைட்டா கடித்துக் கொண்டு, இரண்டு கண்களையும் அரைவாசி திறந்து கொண்டு,வலது கையை மடக்கி பின்தலையை பிடித்துக்கொண்டு,அப்படியே நெளிச்சுண்டு அதே போஸில்

@தக்குடு இங்கே இருந்த வரை சாதரண சாமியாரா இருந்த நீ அங்கே போனவுடனே நித்யானந்தா ரேஞ்சுக்கு போயிட்டே.

Vijay said...

நைஸ்...நான் கூட பாட்டு போட்டில, பாடறேன்னு பண்ண அமர்களத்துல, நெறய பேரு கர்ச்சிப்லயே தூக்கு மாட்டிக்கிட்டு, ஆடியன்ஸ் சைட்ல ரொம்ப டெரரா போயிடுச்சி...

தக்குடுபாண்டி said...

@ அனன்யா அக்கா - வருகைக்கும் கருத்துக்கும் நன்னி ஹை!

@ LK - ஆமாம் நன்னா என் ஜாய் பண்ணினா எல்லாரும்.

@ கேடி - //இதையும் மீறி அந்த கம்பெனி லாபம் எல்லாம் பண்ணினா உண்மைலயே பெரீய சாதனைதான்...:)

@ திவா அண்ணா - வருகைக்கு நன்னி ஹை!

@ கீதாபாட்டி - வருகைக்கு நன்னி ஹை!

@ ம'பதி அண்ணா - உங்களுக்கு மட்டும் எப்படித்தான் இதெல்லாம் கண்ணுல படுதோ??..:)

@ TRC மாமா - என்னோட புனைப்பெயர் என்ன தெரியும் இல்லையா??...:)

@ விஜய் - நல்ல அனுபவம்தான்...:)

Anonymous said...

//இந்தி நடிகர் கோவிந்தா போல ரொம்ப லக்ஷ்ணமாக இருந்தேன்.

Govinda lakshanamaa......... ha ha ha.

TV Serial Pola Kadaisi paatu suspensaaa.

Very Enjoyable.....:)

Rathika

Anonymous said...

//நம்பியாரோட திருட்டு முழியை பார்த்தால் அடுத்த பாட்டு ஒருவேளை ' ‘நேத்த்த்த்து ராத்திரி யம்ம்ம்ம்மா!’ வாக இருக்குமோ??னு எனக்கு சந்தேகமாக இருந்தது//

Thakkudu, yennala control pannavey mudilai keettiyaa!! thaniyaa ukkanthu siruchundurukken....:)

Jaishree

தக்குடுபாண்டி said...

ராதிகா அக்கா & ஜெய்ஷ்ரி - வருகைக்கும் கருத்துக்கும் நன்னிஹை!!!

நினைவுகளுடன் -நிகே- said...

ரசனை மிக்க பதிவு
வாழ்த்துக்கள்

பித்தனின் வாக்கு said...

நல்ல சொல்லி இருக்கின்றீர்கள். நல்ல நினைவலைகள். நல்ல அனுபவம். மிக்க நன்றி.
ஆமாங்க உங்களுத் தெரிந்த வாழ்வின் நிதர்சன உண்மைகளை எங்களிடமும் பகிர்ந்து கொள்ளலாமே. நன்றி.

பித்தனின் வாக்கு said...
This comment has been removed by the author.
தக்குடுபாண்டி said...

@ நிகே - வருகைக்கும் கருத்துக்கும் நன்னி டீச்சர்..:)

@ திரு.பித்தன் - அதுதான் என்னொட பதிவுகளா வந்துகொண்டிருக்கிறது...:) அடிக்கடி நம்ப கடைபக்கம் வந்து போகவும்...;)

மாதேவி said...

"சுத்த்த்த்த்தம்! தமிழுக்கே இங்க நான் தாண்டவம் ஆடிண்டு இருக்கேன், இதுல இந்தி வேரையா!" நன்றாய் ரசித்தேன்.

தக்குடுபாண்டி said...

@ மாதேவி - கரண்டியும் கையுமா நீங்க வந்ததால என்னோட ப்ளாக்கே சமையல் மணம் வீசுகிறது...:) அடிக்கடி வரவும்...:)

Dubukku said...

எச்சுஸ்மீ இது சாமி சாமின்னு சாமியாரா ஆக்ட் குடுத்தானே அதே ஆளா இது :))
நல்லா எழுதறடா

தக்குடுபாண்டி said...

@ Dubukku - //சாமி சாமின்னு சாமியாரா ஆக்ட் குடுத்தானே அதே ஆளா இது// yenakku innoru peyarum undu!!(in Badsha style)...:) Thanks for your boosting words...:)

vgr said...

Extremely funny!!! Well written!

தக்குடுபாண்டி said...

thanks Vgr...;)

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)