Saturday, February 6, 2010

ஆடு பார்கலாம் ஆடு...........

இது ஒரு பழைய தமிழ் படத்துல வர ஒரு பாட்டோட முதல் வரி. ரவிசந்திரனும் புரட்சி தலைவியும் இந்த பாட்டுல ஆடுவாங்க, பதிவு இந்த பாட்டை பத்தி இல்லை. நான் ஸ்கூல்ல இருந்த நாட்களைவிட வெளியில் சுத்தின நாட்கள்தான் அதிகம்.

போட்டி! போட்டி!னு தோட்டிக்காத ஈரத்தலையோடு அலைஞ்ச கோஷ்டிக்கு நான் தான் மொட்டை பாஸ். ஆரம்பத்துல ஸ்கூல் அனுமதியோட கிளாஸ் கட்டு அடிக்கலாம், பயணப்படியெல்லாம் கிடைக்கும் என்ற நப்பாசையில் தொடங்கி பின்பு கழக போர்வாள்(அதாம்பா ஸ்கூல் Rep),வட்ட செயலாளர்(college Rep),மாவட்ட செயலாளர்(college secrty) வரை போய் நின்றது. இதையெல்லாம் விட பெரிய கூட்டத்துக்கு நடுல பரிசு எல்லாம் தருவார்கள், யோகம் நன்னா இருந்தா, ஓவியப்போட்டில firstu prize வாங்கின(யாருன்னே தெரியாத) ஒரு காவியா வந்து, congratssss!!! அப்படினு கைகுலுக்கி வாழ்த்துவா, Vijay TV மறுஒளிபரப்பு போல அடுத்த நாள் Prayer-ல வச்சு அதே பரிசை, உன்னை நனைச்சா பெருமையா இருக்கு! காய வச்சா அருமையா இருக்கு! i am proud of you! அப்படினு மேஜர் டயலாக்கெல்லாம் சொல்லி ஆயிரத்து எழுநூறு மாணவ, மாணவிகளுக்கு நடுவில் வைத்து HM தருவார்.

ரைட்டு மேட்டருக்கு வரேன், நான் படிச்ச பள்ளிகூடம் கல்லிடைகுறிச்சி என்ற பெரிரிரிரிரிய சிட்டில இருக்கு,பக்கதுல இருக்கற குக்கிராமமான அம்பாசமுத்திரத்தில் பெண் சிங்கங்கள் கூட்டமைபோட(அதாம்பா! lionees club) 25'வது ஆண்டு விழாவை முன்னிட்டு பல போட்டிகள் அறிவிச்சு இருந்தாங்க. இந்த விஷயம் circularla வந்தது. அப்ப எல்லாம் circularai base பண்ணிதான் நான் பாடமே படிப்பேன். circularai வாசிக்கும் போதே அந்த வாத்தியார் என்னை ஒரு பார்வை பார்தார். போச்சு! இந்தப் பய ஒரு வெட்டி கூட்டத்தை கூட்டிக்கிட்டு கிளம்பிடுவான்! என்று அவர் மனதில் ஓடுவது எனக்கு நன்றாக தெரிந்தும் தெரியாத மாதிரியே முகத்தை பாவமாக வைத்துக் கொண்டேன்(பின்றையேடா! என்று மனசாட்சி வேறு கால நேரம் தெரியாமல் நக்கல் அடித்தது).

என்னோட தமிழ் வாத்தியாரா(இவரை பத்தி தனியா சொல்லறேன்) இருந்தா, டேய் கண்ணா! நீ எந்தெந்த போட்டில எல்லாம் கலந்துக்க போற! அப்படினு வாஞ்சையோட கேப்பாரு, அறிவியல் வாத்தியாரா இருந்தா circularai வாசிக்கருத்துக்கே அனுமதிக்க மாட்டார். இந்த போட்டி சூப்பரா வெள்ளிக்கிழமைல இருந்தது, ஒரு நாள் மட்டம் போடலாம் என்று ஒரே சந்தோஷம். அடுத்த period ஆரம்பிக்கர்துக்குல்ல நான் எதிர்பார்த்த மாதிரியே என்னோட கழகத்தை சேர்ந்த ஒரு கழக கண்மணி என்னை HM கூப்பிடுவதாக சொல்லி அழைத்து செல்ல வந்தது. நான் அப்போ +1 படிச்சுண்டு இருந்தேன்.

மூன்று வருஷமாக அதே பொழப்பா வச்சுண்டு இருந்ததால என்னொட கரகாட்டக்காரன் டீம்ல யாரு யாரு எத்தனை யோஜனை தூரம் தாண்டுவாங்கனு(specialised) எனக்கு அத்துப்பிடி, அதை அடிப்படையா வச்சுண்டு ஒரு Portfolio தயார் பண்ணியாச்சு.
English medium-ல படிக்கற (ஆமாம்பா! பத்தாம் வகுப்பு வரைக்கும் தமிழ் நன்னா படிச்சாதான் பதிவு நல்லா எழுத முடியும்னு நான் தமிழ் medium-ல தான் படிச்சேன்) இரண்டு கொழந்தேள் (காதுல குண்டலம் எல்லாம் போட்டுண்டு வருவா ) சா பா! சா பா!னு சூப்பரா பாடுவா!(நான் கூட Bombey sisters மாதிரியே இருக்கு!னு எல்லாம் ice வச்சுருக்கேன்), சிங்கம்பட்டிலேந்து வர ஒரு கண்மணி கம்பு நல்லா சுத்துவான் பெரிய லெவல் போட்டியா இருந்தா வாய்ல மண்ணென்னெய் எல்லாம் விட்டுண்டு ஊதி டிராகன் மாதிரி தீ எல்லாம் வரவப்பான். ஊதர்துக்கு பதிலா இவன் என்னிக்காவது உரிஞ்சுட்டாண்னா என்னடி ஆகும்??னு Bombey sister’s நக்கல் அடிப்பார்கள். எங்க ஊர் பையன் மூனு பேரு டான்ஸ்ல பின்னி பெடல் எடுப்பாங்க, மற்றொரு கண்மணி அஞ்சு நிமிஷம் அசங்காம நின்னா நம்பலையே ஓவியமா வரஞ்சு தந்துருவான். அவனுக்கு மிக்கி மவுஸ் ரொம்ப புடிக்கும் அதனால் எந்த ரூபம் வரஞ்சாலும் அதோட முகத்துல அதன் தாக்கம் கொஞ்சம் இருக்கும். இது மாதிரி பிரிச்சு குடுத்தாச்சு.

நீ என்ன பண்ணின! அப்படினு நீங்க கேக்கர்து எனக்கு புரியுது, நம்ப ஏரியா பேச்சுப்போட்டி,மாறுவேடம்,வினாடி வினா(குவிஜு) & அணியின் போட்டி பத்தின வியூகம் அமைப்பது(சகுனி வேலை என்றும் வாசிக்கலாம்). சகுனி வேலை ஒன்னும் அவ்லோ சுலபம் கிடையாது(இல்லையா கொடி?). சக போட்டியாளர்கள் எந்த பாட்டுக்கு ஆடப்போறா, எதன் அடிப்படையில் mark போடுகிறரர்கள், ஜட்ஜுக்கு காபி கொண்டு போவது போல் போய் விட்டு யார் யாருக்கு எவ்வளவு மார்க் வந்துருக்குனு நோட்டம் விடுவது போன்ற எல்லா தில்லாலங்கடி (அஞ்சாநெஞ்சன்) பயிற்சிகளும் உங்களுக்கு தெரிந்தால்தான் ஒரு வெற்றியை நோக்கி வியூகம் அமைக்க முடியும். எங்க அண்ணன், வீட்டில் எனக்கு எதிராக அடிக்கடி பின்னும் சதிவலைகளிலிருந்து என்னை காப்பாதிக்க போராடியதில் இந்த பயிற்சி எல்லாமே எனக்கு கைவந்தகலையாக இருந்தது.

நமக்கு இந்த டான்ஸ் எல்லாம் ரொம்ப பயம். பாதி ஆடிண்டு இருக்கும் போது பாண்டு கிழிஞ்சு போச்சுனா என்னலே பண்ணுவாங்க!னு அறிவுபூர்வமான கேள்வியெல்லாம் எனக்கு தோணும். யாராவது ஆடினா, நல்லா பண்ணியிருக்கலாம்!எதிர்பார்த்த energy இல்லை! chemistry/histry நல்லா இருக்கு! அப்படின்னு கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை சொல்லுவதுதான் நம்பலால முடியும்பா!

எங்க குரூப்ல இருந்த எல்லாருக்குமே(except Bombey sisters) English கொஞ்சம் தடவல், Tsunami என்பதை டீசுனாமி!னு வாசிச்சா கூட பரவாயில்லை, டீசு- மாமி!னு starting கையும் ending-கையும் மட்டுமே வச்சு உத்தேசம் பண்ணி வாசிச்ச கூட்டம் நாங்க. இந்த லட்சணத்துல போட்டி லிஸ்டுல fusion டான்ஸ் அப்படினு ஒன்னு இருந்தது. என்ன்ன்னடா இது! (வடிவேல் குரலில்) புது ஏரியாவா இருக்கே??னு யோசிச்சிட்டு, இங்கிலீஷ் டீச்சர்ட போய் கேட்டா, அவங்க இதுல spelling mistake இருக்கு இது fashion டான்ஸ் அப்படின்னாங்க. நானும் சளைக்காம ஓஓ! fashion டான்ஸா! அப்படினு கேட்டுட்டு வந்துட்டேன்(யாருக்கு தெரியும்!). அப்படியே தெரிஞ்ச மாதிரியே டீமில் வந்து, நீ எப்போதும் ஆட்ற டான்ஸையே கொஞ்சம் fashion’a ஆடு! அதுதான் fashion டான்ஸ்! அப்படினு சொல்லி சமாளிச்சாசு(கழுத!!! அவந்தானே ஆட போறான்).

டான்ஸ் கண்மணிகள் இருந்தும் விடாமல், அண்ணே! நல்லா தெரியுமா? அது அப்படிதான் ஆடனுமா? நீங்க இதுக்கு முன்னாடி எங்கயாச்சும் அந்த டான்ஸை பாத்துருக்கீங்களா? அப்படினு CBI அதிகாரிகள் போல் வரிசையாக கேள்வியா கேட்டு தள்ளினார்கள். நானும் விடாம சமாளிச்சு(வரப்போர வில்லங்கம் தெரியாம) எப்படியோ அவங்களை நம்ப வச்சுட்டேன்.

ஆட்டம் தொடரும்..........:)

21 comments:

கீதா சாம்பசிவம் said...

//எங்க அண்ணன், வீட்டில் எனக்கு எதிராக அடிக்கடி பின்னும் சதிவலைகளிலிருந்து என்னை காப்பாத்திக்கப் போராடியதில் இந்த பயிற்சி எல்லாமே எனக்கு கைவந்த கலையாக இருந்தது.//

கண்ணுக்கு, மனசுக்குக் குளிர்ச்சியான வரிகள், பதிவிலேயே இந்த இடம் மட்டுமே மனசுக்கு சந்தோஷத்தைத் தருது. :P கொஞ்சம் கலர் எல்லாம் கொடுத்துப் பெரிய எழுத்தில் கொட்டையாகப் போட்டிருந்தால் இன்னும் நன்னாயிருந்திருக்குமோ??? போகட்டும், பரவாயில்லை, இந்த வரிகளுக்காகவே மொத்தப் பதிவையும் சகிச்சுண்டேன், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சுயபுராணம் ரொம்பவே ஓவராயில்லை???

கீதா சாம்பசிவம் said...

கமெண்ட் பொட்டியிலே ஜி3 பண்ணமுடியலை, என்ன பொட்டி இது??? காலாவதியான மாடலா?? :P:P:P:P:P:P

கீதா சாம்பசிவம் said...

தொடர

மதுரையம்பதி said...

அட!, கணேசன் பதிவிட ஆரமிச்சாச்சா?....அப்போ அம்பிக்கு இன்னுமே யார் எழுதித்தருவது?....

கீதா சாம்பசிவம் said...

ஹாஹா, மெளலி, ஒருவார்த்தைனாலும் திருவார்த்தைங்கறது இதான், இன்றைக்கு ஏன் இந்த ஆநந்தமே! :))))))))))))))))

Anonymous said...

கன்ஸ், யு 2 ? ப்ளாக்கர் ஆகியாச்சா?:)
அண்ணன்(அம்பி) காட்டிய வழியில் வளர்ந்து வெற்றிகள் பல அடைய வாழ்த்துகள்!
ஷைலஜா

அநன்யா மஹாதேவன் said...

தடுக்குபாண்டி,
உங்ககிட்டே நிறைய காமெடி ஸ்டாக் இருக்கே, டெய்லி டுபுக்காய நமஹான்னு 108 வாட்டி ஜபிக்கறேளோ? கலக்கறேள்.

அந்த பாம்பே சகோதரிகள் ஸ பா ஸ எல்லாம் அசாத்தியமா பாடுவாளாம். என்னா வில்லத்தனம். நடத்துங்க. இன்னும் நிறைய வரட்டும்

அண்ணாமலையான் said...

கலக்குங்க தக்குடு பா.

LK said...

@gans

vanga vanga kalakunga... ama antha bombay sisters enna panranga ippa atha sollunga :P

Dubukku said...

தக்குடு...ஆஹா ஆரம்பமே தொடரா...கலக்கு :))) ஆல் தி பெஸ்ட் !!!

Porkodi (பொற்கொடி) said...

ada raama.. illa theriyama thaan kekkaren, naan epo enga enna sakuni velai pathen?? idhu rombave mucha iruku aamam.. naan oru appavi ponnu nu kai kuzhandhai AMBIku kooda theriyum!

paarra...! oru dance pottiku ponadha pathi oru thodare podra alavu killadi thakkudu pandi!

@ananya mahadevan: secret mandhirathai urakka sollitele? ;)

Geetha patti, enna overa palla kadikarel? medhuva kadingo paati :D

கீதா சாம்பசிவம் said...

போர்க்கொடி, பொற்(கேடி), இருங்க, தனியா வரும்போது வச்சுக்கறேன்!

ஆயில்யன் said...

//ஜட்ஜுக்கு காபி கொண்டு போவது போல் போய் விட்டு யார் யாருக்கு எவ்வளவு மார்க் வந்துருக்குனு நோட்டம் விடுவது போன்ற எல்லா தில்லாலங்கடி (அஞ்சாநெஞ்சன்) பயிற்சிகளும் உங்களுக்கு தெரிந்தால்தான் ஒரு வெற்றியை நோக்கி வியூகம் அமைக்க முடியும்///

முக்கியமான பாயிண்ட் மாதிரி தோணுது நோட் பண்ணிக்கிடறேன் அவ்வப்போது இப்படியான தில்லாலங்கடி எல்லாம் சொல்லிக்கொடுங்க!

அநன்யா மஹாதேவன் said...

தக்ஸ், (இந்த தடுக்கு, தக்குடு, என்னால முடீல இந்த கன்பீஷன் அதான் இனிமே தக்ஸ்)
எடுத்த எடுப்புலேயே மோதிரக்கையால குட்டா? பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் வந்து ஆட்டோகிராஃப் போட்டாச்சு, இனி டாப்கியர் போட்டு ஸ்பீடு எடுக்க வேண்டீது தானே?
அடுத்த பகுதி சீக்கிரம் வரட்டும்.

பொற்(கே)கொடி,

மன்னிச்சுக்கோங்க, சீக்ரெட் எல்லாம் போட்டு உடைச்சுட்டேன். இந்த ப்ரும்மஹத்திக்கு தனிமடல் அனுப்பலாம்னா இது ஐ.டி போடலை. அதான் பப்ளிக்கா போட்டு உடைக்கும்படி ஆயிடுத்து. தக்குடு அண்ட் பொற் நீங்க ரெண்டுபேரும் நேக்கு மெயில் அனுப்புங்கோ. ananya.mahadevan@gmail.com. உங்களாட்டம் புண்யாத்மாக்கள் கிட்டே பேசணும்ன்னு நேக்கு ரொம்ப ஆசை.

Porkodi (பொற்கொடி) said...

//உங்களாட்டம் புண்யாத்மாக்கள் கிட்டே பேசணும்ன்னு நேக்கு ரொம்ப ஆசை.//

idhuku peru vera - "so.se.su" - sondha selavula sooniyam. :)))) sooniyam vechachu.. ;P

தக்குடுபாண்டி said...

@geethapaatti - நீங்க ஆனந்தமா இருந்தா சரிதான்!

@ madhuraiyampathi anna - உள்ள வரும் போதே வெடியை பத்தவச்சுண்டே வரேளே அண்ணா! போன பதிவுல KRS அண்ணா வந்து வளைச்சு கும்மி அடிச்சுட்டு போனார், இப்பொ நீங்க!

@ shylaja akka - வாழ்த்துக்களுக்கு நன்றி ஷைலஜா அக்கா.

@அனன்யா அக்கா - ஜபிக்கர மூலமந்த்ரத்தை பப்ளிக்கா சொல்லக்கூடாது!...:)

@Brother mountain - மலை! நீங்க பெரிய தலை! நான் மூனு போஸ்டு முக்கி முக்கி டைப்படிச்சு வைக்கரதை நீங்க ஒரே போஸ்டுல left hand-ல டைப் அடுச்சு போடர ஆளு! அடிக்கடி வந்து போங்க வாத்தியாரே!

@ LK - பதிவுல எவ்ளோ விஷயம் இருக்கு! அதை எல்லாம் விட்டுட்டு எதுக்குயா நோண்டுரீங்க?..:)

@டுபுக்கு - தெய்வமே!.......தெய்ய்ய்ய்ய்ய்ய்வமே! நன்றி அண்ணாத்தே!

@கேடி - சகுனிகள் மகாசபையோட நிரந்தர தலைவனே அம்பிதான், நீங்க அவனை சாட்சிக்கு அழைக்கும் போதே தெரியுது நீங்க எவ்ளோ பெரிய சகுனியா இருக்கனும்னு!...:)

@ayilyan - நாம நேர்லையே பேசிக்கலாம்...;)

@ அனன்யா அக்கா - சொந்த செலவுல சூனியம் வச்சுண்டாச்சு போலருக்கு!!...ஸ்வாமிதான் காப்பாதனும் உங்களை!...:)

திவா said...

தம்பி ஆசிகள்.
அண்ணனுக்கு தகுந்த தம்பி போல இருக்கு! :-))

// அப்போ அம்பிக்கு இன்னுமே யார் எழுதித்தருவது?....//
அட அதுவும் அப்படியா? என்னடா அதே சாயல் இருக்கப்பல இருக்கேன்னு நினைச்சேன்!

எப்படியோ போகட்டும். தொடரலாம். படிக்க ரெடி ......(எப்பவாவது!)

Porkodi (பொற்கொடி) said...

sari thakkudu, namba vechachu, vara pora villangam enna? evlo naala kaal kaduka nikradhu?

வல்லிசிம்ஹன் said...

தக்குடு, ஒரே அதகளமா இருக்கே:)

ஆடுமாடு said...

ஹலோ நீங்க திலகர் வித்யாலயா பார்டியா?

ஓகே ஓகே நல்லாருக்கு.

எங்கூர்ல ஒருத்தர் பேரு தங்குடு!. நீங்க தக்குடு?
ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோன்னு நினைச்சேன்.

தக்குடுபாண்டி said...

@ valliamma - thanks amma!,,,;)

@ aadumaadu - aamaam sir, thanks! namba original name veera...;)

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)