Thursday, March 17, 2011
மூக்கும் முழியுமா......III
Part 1 Part 2 படிச்சாதான் யாரோட மூக்கு, யாரோட முழினு புரியும்!..:)
வண்டி புறப்பாடு ஆகர்துக்கு தயார் ஆச்சு, யாரோ ஒரு வெள்ளக்கார ஏர்ஹோஸ்டஸ் வந்து எல்லாருக்கும் புளிப்புமிட்டாய் குடுத்தா, நிறைய ரூபாய் குடுத்து டிக்கெட்டு வாங்கினதுக்கு நல்லதா ஒரு 5 STAR சாக்லேட் குடுக்கப்படாதோ! எதுக்கு எல்லாரும் மசக்கயா இருக்கர மாதிரி புளிப்புமிட்டாய் குடுக்கரா!!னு எனக்கு யோஜனையா இருந்தது, இருந்தாலும் குடுத்த காசுக்கு நம்மோட ஷேரை விட்டுடகூடாதுன்னு “மைக்கெல் மதன காமராஜன்”ல வரும் வரதுகுட்டி மாதிரி 2 புளிப்புமிட்டாய் எடுத்துண்டேன். புளிப்புமிட்டாய்க்கு வால் புடுச்சுண்டே அடுத்தாப்ல ஒரு கொழந்தை லெமன் ஜூஸ் குடுத்துண்டே வந்தது. அடராமா! ஏதுடா இது! சீமந்த விஷேஷ ஆத்துக்கு வந்தமாதிரி எல்லாம் ஒரே புளிப்பு வஸ்துவான்னா வந்துண்டு இருக்கு! அடுத்து என்னது மாங்காயும் நொக்கட்டான்புளியுமா?னு கேக்கலாம்னு வாயை திறக்கர சமயத்துல தான் லெமன் ஜூஸ் குடுச்ச டம்ப்ளரை வாங்கர்துக்கு நம்ப தீவாளி வந்தது.
தீவாளியோட Surname ஹரிலால்னு போட்டு இருந்தது (நிச்சயமா நைனாவோட பேராதான் இருக்கும்). டம்ப்ளரை குடுத்துட்டு “தாங்க் யூ தீவாளி!”னு சொன்னேன். தினசரி வாழ்க்கைலையுமே இந்த மாதிரி நமக்கு உபகாரமா இருக்கரவாளை "ஏ தக்காளி!" "இந்தாப்பா கோலப்பொடி" "ஏ கீரை! இங்க வா!"னு சொல்லாமா அவாளோட பேரை சொல்லி கூப்பிடும்போது அவாளுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். தீவாளியும் ரொம்ப சந்தோஷமா சிரிச்சுட்டு போச்சு. எனக்கு பக்கத்துல இருந்த டவுசர்பாண்டியன் மட்டும் வைரமுத்துவா இருந்தா "தீவாளியின் கண்களோ மத்தாப்பூ! சிரிப்போ முத்துப்பூ! மொத்தத்தில் அவளே அழகின் முத்தாய்ப்பு!"னு கவிதை சொல்லி இருப்பார். நமக்கு தான் கவிதையே வராதே, அதுவும் போக பொம்ணாட்டிகளை தக்குடு நிமிர்ந்து கூட பாக்க மாட்டான்!னு லோகத்துக்கே தெரியும்(சந்தேகமா இருந்தா அகிலா மாமி கிட்ட கேளுங்கோ!). அதனால கிருஷ்ணா! ராமா!னு சொல்லிண்டு காதுல பஞ்சை வெச்சுண்டு சீட் பெல்ட்டை முதல் முயற்சிலயே வெற்றிகரமா போட்டுண்டு தயார் ஆனேன். வண்டி மெதுவா நகர ஆரம்பிச்சு அப்புறம் ஓட ஆரம்பிச்சு கடைசில பறக்கவும் ஆரம்பிச்சது.
நான் மெதுவா அல்லசல்ல யாரெல்லாம் இருக்கானு பாத்தேன். எனக்கு அடுத்து இருந்த நடைபாதைக்கு அடுத்து இருந்த வரிசைல எனக்கு நேர ஒரு குடும்பம் உக்காச்சுண்டு இருந்தது. அதுல இருந்த ரங்கமணி, தங்கமணி & குட்டீஸ் அச்சு அசலா ஒரு NRI-கு உண்டான எல்லா லக்ஷணங்களோட இருந்தா. ஆத்தங்கரைல இருக்கும் தும்பிக்கையாழ்வார் மாதிரி அந்த ரங்கமணிக்கு வேழ முகம் இல்லையே தவிர பேழை வயிறு (அதனால தான் புளிப்பு மிட்டாய் குடுக்கறாளோ?). ஜூஸை குடிச்ச உடனே கபார்னு தூங்க ஆரம்பிச்சுட்டார். பக்கத்துல இருந்த டவுசர் பாண்டி Apple ஐபாடை பாடாபாடு படுத்திண்டு இருந்தார். என்னோட திரைல தேடி புடிச்சு ஒரு ஹிந்தி படம் பார்த்துட்டு நானும் தூங்க ஆரம்பிச்சுட்டேன்.
நல்ல தூங்கிண்டு இருக்கும் போது யாரோ என்னோட கன்னத்தை தட்டி எழுப்பர மாதிரியும் “எச்சுஸ்மி சார்!”னு ஸ்வர சுத்தமா புல்லாங்குழல்ல ஊதற மாதிரி இருந்தது. கண்ணை முழிச்சு பாத்தா பரிவான முகத்தில் கனிவான சிரிப்போட நம்ப தீவாளி நிக்கர்து. நீங்க என்ன சாப்ட போறேள்?னு கேட்டது. கொட்டாவி விட்டுண்டே நளதமயந்தி மாதவன் மாதிரி “நோ பிஷ்! நோ எக்! நோ சிக்கன்/மட்டன்!”னு சொல்லிமுடிக்கவும் புன்சிரிப்போட போய்ட்டா. பிஸினஸ் கிளாஸ்ல உள்ளவாளுக்கு எல்லாம் “இன்னும் ஒருவாய்! இன்னும் ஒருவாய்! ஆஆஆஆ அம்ம்ம்ம்!னு சொல்லிண்டே ஊட்டியே விடுவா போலருக்கு! மன்னார்குடி/மாயவரத்தை சேர்ந்த மொரட்டு சம்பந்திகளுக்கு போடரமாதிரி அவாளுக்கு தான் முதல் பந்தி.அவாளுக்கு சாப்பாடு குடுத்துட்டு போர வழில மெதுவா "ஒரே ஒரு வெஜ் இருக்கு! நீங்க வேணா சாப்டுங்கோ!"னு சொல்லிண்டே ஒரு ட்ரே நிறையா தந்தா. எனக்கு குடுக்கர்தை பாத்துண்டே டவுசர்பாண்டியனும் கண்முழிச்சுட்டார். மத்தவா எல்லாருக்கும் சாப்பாடு வர 20 நிமிஷம் ஆச்சு, நமக்கு மட்டும் ஸ்பெஷல்..:) டவுசர்பாண்டியன் பரபரப்பான குரல்ல "என்னோட சாப்பாடுல வடை இல்லையே!"னு முதல் தடவையா தமிழ்ல பேசினார். “வாடி வா! வடையை பாத்தவிட்டுதான் தமிழ் வருதா உமக்கு?”னு மனசுல சொல்லிண்டே கனீர் குரல்ல “தீவாளி!”னு கூப்டு அவருக்கு வடை வாங்கி குடுத்தேன்.
ஆஹாரம்....:)
சாப்பாடு எல்லாம் நன்னா தான் இருந்தது, இருந்தாலும் உள்ளூர கொஞ்சம் பயம். அர்த்தராத்ரில நன்னா வடையும் வெண்பொங்கலும் நொசுக்கிட்டு அப்புறம் கலக்கி விட்ருத்துன்னா என்ன பண்ணர்து!!? சுச்சா போனாலே காலை அலம்பி 7 தடவை வாய் கொப்பளிக்கர நமக்கு கக்கா போய்ட்டு “பேப்பர்ல தொடச்சுண்டு வாங்கோ!”னு சொன்னா நன்னாவா இருக்கும், அதனால எக்காரணத்தை கொண்டும் ப்ளைட்ல கக்கா போககூடாதுன்னு சபதம் பண்ணின்டுதான் ப்ளைட்டே ஏறினேன். சாப்பிட்டு முடிஞ்ச உடனே அடுத்த காமெடி ஆரம்பமானது.
நல்ல 6 அடி உசரத்துல ஒரு வெள்ளக்காரி ஒரு 'ஐடக்கல்' வண்டியை தள்ளிண்டு வந்து ‘அரங்கேற்றவேளை’ பிரபு கிட்ட ‘சார் லட்ட்ட்ட்டுடுடு’!னு கேட்ட மாதிரி "சார் ட்ரிங்ங்ங்ஸ்!"னு கேட்டா. பந்தில பரிமாறர்த்துக்கு முன்னாடி வாழக்கா பொருத்துவல்ல கொஞ்சம் வாய்ல போட்டுப்பா,ரசத்துல கொஞ்சம் குடிச்சுப்பா,ஸ்வீட் & வடையை விண்டு வாய்ல போட்டு பாத்துப்பா, அதை மாதிரி இந்த வெள்ளைகாரியும் எல்லா சரக்குலையும் கொஞ்சம் கொஞ்சம் டேஸ்ட் பாத்துருப்பாளோ?னு ஒரு சம்சியம் எனக்கு. அவள் நெளுச்சுண்டு நின்ன ஸ்டைல் வேற அதை ஊர்ஜிதம் பண்ணரமாதிரி இருந்தது. பாட்டில் மூடியை மோந்து பாத்தாலே மயக்கம் போடற கேஸான நான் ஒரு டம்ப்ளர் தூத்தம் மட்டும் வாங்கி குடிச்சேன்.
அடுத்து நேர பக்கத்து சீட்டு ரங்கமணியை "சார் ட்ரிங்ங்ங்ஸ்!"னு கேக்க, அவர் ஏக்கமான முகத்தோட தங்கமணியை பாத்துண்டே ஷீணமான குரல்ல நோ! நோ!னு மறுத்தார். “மீசை வெச்ச ஆம்பிளையா இருந்தா க்ளாஸ்ல கையை வெச்சு பாருய்யா பாப்போம்!!”னு சொல்லற மாதிரி அவரோட தங்கமணி மொறச்சுண்டு இருந்தாங்க. ரயில்ல எல்லாம் டிக்கேட் எடுக்கர மாதிரி ஒரு 10 சீட் தள்ளி அவரோட தங்ஸ்சுக்கு டிக்கெட் ரிசர்வ் பண்ணி இருக்க கூடாதோ? லூசுமாதிரி பொண்டாட்டிக்கு பக்கத்து சீட்டை ரிசர்வ் பண்ணினா இப்பிடிதான் ஆகும். என்கிட்ட ரிசர்வ் பண்ண சொல்லி இருந்தா 2 வரிசையே தள்ளி பண்ணிவெச்சுருப்பேன். டவுசர்பாண்டியன் மொடாக் குடியனா இருப்பார் போலருக்கு, எதோ தேர் திருவிழால நீர்மோர் குடிக்கர மாதிரி சுர்ர்! சுர்ர்!னு உரிஞ்சு தள்ளிட்டார். “இந்த ரேஞ்சுல சோடா கலக்காம குடிச்சேள்னா தோஹால நீங்க பிடிக்க வேண்டிய மினிசோட்டா ப்ளைட்டை வீல் சார்ல போய் தான் ஓய் பிடிக்கமுடியும்!”னு அவர் கிட்ட சொன்னதுக்கு அப்புறம் நிப்பாட்டினார்.
தங்கமணி மட்டும் பக்கத்துல இல்லைனா இந்த ரங்கமணிகள் வாழ்க்கையை எப்பிடி எல்லாம் அனுபவிக்கரா தெரியுமோ! மாமியை மெட்ராஸுக்கும், பெங்களூருக்கும்,கல்லிடைக்கும் அனுப்பி வச்சுட்டு தோஹால சில மாமாக்கள் அடிக்கர கொட்டம் சொல்லி முடியாது..:) ஒரு வழியா நான் இறங்க வேண்டிய ஸ்டேஷனும் வந்தது, சாமான் செட்டை எல்லாம் எடுத்துண்டு இறங்கர இடத்துல டாடா சொல்லர்த்துக்கு நின்னுண்டு இருந்த தீவாளிட்ட “ரொம்ப சந்தோஷம் கோந்தை! அப்ப நான் போய்ட்டுவரேன்!”னு சொல்லிண்டு இப்பதான் இறங்கின மாதிரி இருக்கு, அதுக்குள்ள 1.5 வருஷம் முடிஞ்சாச்சு!!....:)
(கதை பலன் - யாரெல்லாம் கர்மசிரத்தையோட இந்த கதையை படிச்சுட்டு ஒழுங்கா கமண்டும் போடராளோ அவா போகும் ப்ளைட்ல நம்ப தீவாளி மாதிரி மூக்கும் முழியுமான பிகர் ஏர்ஹோஸ்டஸா வருவா. படிச்சது அக்கா & மாமிமார்களா இருந்தா பலன் அவாளோட ஆத்துக்காரரை போய் சேரும்...:) (சுபம்)
Labels:
தோஹா பயணம்
Subscribe to:
Post Comments (Atom)
37 comments:
Naan thaan firstaa innikku?? yaaroda mooku, yaar muzhichchaannu ezhuda koodaathaa?
விரிவான ஆராய்ச்சி எல்லாம் செஞ்சு கமெண்ட் போடறதுக்கு முன்னாடி ஒரு விஷயம் நான் சொல்லியே ஆகணும்... நிஜமே சொல்றேன்... இந்த நேரத்துல நடந்தே போய் இருந்தாலும் சென்னைல இருந்து தோஹா போய் சேந்து இருக்கலாம்... ஆனா இதை மூணு போஸ்ட் போட்டு கழக கண்மணி என நிரூபித்து விட்டாய்... இதை நினைக்கும் பொழுது... எனக்கு.... ஆ...ஆ... ஆ....ஆனந்த கண்ணீருடன்.....வடை பெறுகிறேன்... :)))))
(ச்சே...வடை ஜஸ்ட் மிஸ்ட்.... 50/50 ஷேர் பண்ணிக்கலாமாங்க லதா...:))
//படிச்சது அக்கா & மாமிமார்களா இருந்தா பலன் அவாளோட ஆத்துக்காரரை போய் சேரும்...:)//
இப்படி சொன்னா யாரு படிப்பா? :) நான் படிக்கவே இல்லை!!
//ரூபாய் குடுத்து டிக்கெட்டு வாங்கினதுக்கு நல்லதா ஒரு 5 STAR சாக்லேட் குடுக்கப்படாதோ//
இதே கேள்விய கேட்டு ரங்க்ஸ்கிட்ட வாங்கி கட்டிகிட்டேன்... ஹ்ம்ம்... நம்ம அறிவு இவங்களுக்கு எங்க புரியுது...:)))
//ஜூஸ் குடுச்ச டம்ப்ளரை வாங்கர்துக்கு நம்ப தீவாளி வந்தது//
என்னமோ பொண்ணு பாக்க போன ஆத்துல பொண்ணு டபரா செட்டை வாங்கிக்க வந்த ரேஞ்சுல ஒரு பில்ட் அப்...ஹா ஹா ஹா...:)))
//நிச்சயமா நைனாவோட பேராதான் இருக்கும்//
ஐ லைக் யுவர் கான்பிடன்ஸ்...:))))
//பொம்ணாட்டிகளை தக்குடு நிமிர்ந்து கூட பாக்க மாட்டான்//
வேண்டாம்... வாய கிளறாதே... ரெம்ப டேமேஜ் ஆய்டும் சொல்லிட்டேன்... :))))
//வாடி வா! வடையை பாத்தவிட்டுதான் தமிழ் வருதா உமக்கு//
ஹா ஹா அஹ... வடைய பாத்தா வாஸ்கோடகாமா கூட தமிழ் பேசுவார் போல...:)))
//கனீர் குரல்ல “தீவாளி!”னு கூப்டு அவருக்கு வடை வாங்கி குடுத்தேன்.///
அட ராமா... கடேசீல சப்ளையா....:)))
//எல்லாம் டிக்கேட் எடுக்கர மாதிரி ஒரு 10 சீட் தள்ளி அவரோட தங்ஸ்சுக்கு டிக்கெட் ரிசர்வ் பண்ணி இருக்க கூடாதோ//
என்ன பண்றது... உன்னளவுக்கு அவருக்கு விவரம் போதல... :))
(தக்குடுவின் வருங்கால தங்க்ஸ் - எங்கிருந்தாலும் நோட் திஸ் பாயிண்ட்...:)))
தீவாளி பார்த்தவுடனே உமக்கு தீபாவளி போல சந்தோஷம் வந்துடுத்து ஓய். மூணு பகுதியா போட்டு கலக்கிட்டே!
அப்பாடா தோஹா வந்துடுத்தா. அங்க கஸ்டம்ஸ், குல்லா போட்ட நவாபு கதையெல்லாம் சொல்லலியா.
சுந்தரகாண்டத்துல கூட ஆஞ்சனேயர் , கடலைத் தாண்டி லம்பமான மலையில இறங்கினது வரை படித்து,பிறகு லங்காப் பிரவேசம் வரை படிச்சாலே ஏக பலன் கிடைக்கும். வெறும் ஏர்போர்ட்ல இறங்கினது மத்திரம் சொன்னா எப்படி. அதனால் இரண்டாவது சர்க்கத்திற்குச் செல்லவும்.:)
/சுந்தரகாண்டத்துல கூட ஆஞ்சனேயர் , கடலைத் தாண்டி லம்பமான மலையில இறங்கினது வரை படித்து,பிறகு லங்காப் பிரவேசம் வரை படிச்சாலே ஏக பலன் கிடைக்கும்./அதாவது...தக்குடுவ ஆஞ்சனேயர்னு சொல்லவரீங்களா மேடம்?!! தக்குடு நோட் திஸ் பாயின்ட்! :)))))))
போஸ்ட் இன்னும் படிக்கலை,படிச்சிட்டு வரேன்.
'ãìÌõ ÓÆ¢Ôõ ¦ÅñÊ ´Õ ¸¦Áýð!'
Dear Thakkudu, such a nice narration for that pulippu mittai. Excellentaa kondupoonel.3 partsum roomba viruviruppa poochu. Next series yenna "Vaayaum Vayarumaa"-vaa nu amma unga kitta kekkaa sonnaa..:)LOL
Ranjani Iyer
//அக்கா & மாமிமார்களா இருந்தா பலன் அவாளோட ஆத்துக்காரரை போய் சேரும்...:) // neejama naan padikala and commentum podala....:))
'Techops' mami
//மன்னார்குடி/மாயவரத்தை சேர்ந்த மொரட்டு சம்பந்திகளுக்கு போடரமாதிரி அவாளுக்கு தான் முதல் பந்தி//
ஆமாம்.. அப்பதான் உப்பு புளி காரம் எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துட்டு தின்னவேலிக்காரா பந்திக்கு நல்ல சாப்பாட போட முடியும். ;-))
நோக்கு கல்யாணம் ஆனப்புறம் ரெண்டு வரிசை தள்ளி புக் பண்ணிக்கிறியா இல்லைன்னா ஒரே சீட்ல ரெண்டு பேரும் போறேளான்னு பாப்பம். ;-))
தீவாளிக்கு ஒரு ஸ்வீட் குடுத்துட்டு வரப்ப்டாதோ தக்குடு. கோந்தே உன்னையே நினைச்சுண்டு இருக்கறா மாதிரி!!! ;-))
நன்னா எழுதி இருக்கேள் போங்கோ.. நானும் மொத தடவை ப்ளைட்ல போறச்சே இந்த மாதிரி கூத்தெல்லாம் நடந்தது. ஆப்பிள் ஜூசை ட்ரிங்க்ஸ் ன்னு நெனச்சுட்டு தாகமாவே எட்டு மணி நேரம் போனேன்.. நெனச்சு பாத்தா , ஐயோ ஐயோ..
ப்ளைட்ல குடுத்த இத்துனூண்டு சாப்பாடுல நன்னா பசியாற முடிஞ்சதோ? நேக்கு போறவே இல்லையே ... :)
தக்குடு ரியலி சூப்பரா எழுதரீங்க. சிரிச்சு சிரிச்சு’’’’’’’’’’’ வந்துடுத்து.
யாரோட மூக்கு, யாரோட முழினு புரியும்!..:)
புரிஞ்சுரிச்சு .. தீவாளி
தீவாளி போட்டோ போட்டுரிந்தா, தக்குடு பையனுக்கு பொண்ணு பார்க்கும் போது வசதியா இருந்துற்கும்.
பதிவுலகில், ரொம்ப நாளைக்கப்புறம் ரசிச்சுப் படிச்சு, வாய் விட்டு சிரிக்க வைத்த பதிவு. பாராட்டுகள்.
தக்குடு
என்னோட போன வார கமெண்ட் இந்த வாரம் போட்டுருக்கணும் போல இருக்கு. அது சரி தோஹா கே நீ மூணு பகுதி போட்டேனா அமெரிக்கா வந்தா நீ எவ்ளோ போடுவே? இந்தியா லேர்ந்து தோஹா நடந்து போனாலே சீக்கிரம் போயிருக்கலாமா?
பரவாஇல்லையே உனக்கு கன்னத்தை தடவி ராஜா எழுந்திரு , சாப்பிடு நு சொன்னாளா இல்ல கதை விடறியா? ஏதோ உன் போஸ்ட் படிச்ச பலஸ்ருதி எனக்கு கிடைச்சா சரி.
//பொம்ணாட்டிகளை தக்குடு நிமிர்ந்து கூட பாக்க மாட்டான்//
நம்மளவிட ஒசரம் கொறஞ்ச பொம்ணாட்டிகளை நிமிந்தா கொஞ்சங்கூட பாக்க முடியாதே!!
தீவாலிக்கு ஒரு பாட்டு டெடிக்கேஷன். உம்ம சார்பா!
காதல் வைத்துக் காதல் வைத்துக் காத்திருந்தேன், காற்றில் உந்தன் ஃப்ளைட் மட்டும் பார்த்திருந்தேன்,
சிரித்தாய் மிட்டாய் சுவைத்தேன்...
varathu kutty-pulippu mittaai--toppu-takkar!
thu-- kadeseela antha trouser paandi local-thaana!
unga "katha palan" konjam idikkarathu, boss... :P
@ மாதங்கி - சொல்ல மறந்துட்டேனே! கதையை படிச்சது கல்யாணம் ஆகாத பொண்கொழந்தேளா இருந்தா தீவாளியோட ஒடப்பொறந்தானாட்டமா மூக்கும் முழியுமா பைலட் வருவார்..:PP
@ boss... pozhachchu pongo! :)
//பொம்ணாட்டிகளை தக்குடு நிமிர்ந்து கூட பாக்க மாட்டான்//
வேண்டாம்... வாய கிளறாதே... ரெம்ப டேமேஜ் ஆய்டும் சொல்லிட்டேன்... :))))
அதென்னவோ கரெக்ட்தான். குனிஞ்சாதானே நிமிரத்துக்கு. போனவுடனே தீபாளீ, பொங்கல்ன்னு பாத்துண்டேதானே இருந்தோம். ஜலபாத்திரத்தில் தீர்த்தத்தை வாங்கி ரொப்பிண்டாதா கேள்வி.
pomanatigaley thakkdu nimendhu pakkamattan, i like the comments regarding this. i totally agre with them too!! pulippu mittai LOL, eppadi thakkdu karpanai vallam rombha jasthinunnkku.
Ha ha.. Good series!! Falls under my favorite kind of articles: picking a commonplace thing and magnifying the details. Stephen Leacock-ku apram neenga than pongo!!
And loved Part 2 the most of the lot.. enakku pudicha lines copy-paste panlaama nu nenachen.. aana avlo time ippo illaingradhaala, potthaam podhuva oru 'ohho'!
Very nice Thakkudu! The final thakkudu-touch was suuper. :)
மூக்கு முழியுமான மூன்று பதிவுகளையும் படிச்சாச்சு
ஹீத்ருவுல ஆரம்பிச்சு..ஆம்பூர் அமதாபாத் மாமிகளோடு....தீவாளி வரைக்கு சரவெடியா வெடிச்சு தள்ளிட்டே தக்குடு..
மும்பை வழியா வரும்பொழுது ஹிந்தி ஆன்ட்டிகள் பீயேர் பீயேர் என ஊடாடுவதும்
கொழும்பு வழியா வரும் பொழுது சிங்கள மங்கையரிடம் அவ்விடதேசத்து மக்கள் சிஸ்டர் , சிஸ்டர் என சகோதரத்துவம் பாராட்டி புட்டி புட்டியாய் குதிரை சமாச்சரத்தை உள்ளிறக்கி டவுண்பஸ் மாதிரி விமானத்தை மாற்று வதும் நினவுக்கு வந்தது....
subam nu potadunale comment podaren...padikren aprama :)
மிகவும் ஜனரஞ்சகமான ஒரு தொடர்! கலக்கிட்டீங்க... ! என்ன ஒரே ஒரு சங்கடம்னா, இனிமே "மூக்கும் முழியும்"னாலே தக்குடு ஞாபகம் தான் வரும் போலிருக்கே! எல்லாக் கன்னிப் பெண்களும் உங்களைத்தான் சபிக்கப் போறா! அந்த ஆஞ்சநேயர் தான் உங்களைக் காப்பாத்தணும்! :))) இல்லேன்னா, இந்த இட்லி மாமி தான் கைகுடுக்கணும்! ஏன்னா, ரகளை பண்றதிலும், சொல்லி வச்சி அடிக்கறதிலும், அப்பாவிகளைக் காப்பாதுறதிலும் அவங்களை "பொம்பளை ஆஞ்சநேயர்னே" சொல்லலாமே! :))) அடடே, ஆட்டோ வர்ற சத்தம் கேக்குதே ...நான் கிளம்பறேன் தக்குடு...Bye, Bye! :)))
அது சரி...உங்க கதைப்பலன் இந்த குண்டு சட்டியிலே குதிரை ஓட்டுற "domestic flight" லேயும் பலிக்குமா?... ஆமாம்னு சொல்லுங்கோ! ஏமாத்திடாதீங்கோ , ப்ளீஸ்!
அமர்களமா ஒரு வழியா பதிவை முடிச்சுட்டாய். வல்லி மா சொன்னா மாதிரி போய் எறங்கின கதை தனி பதிவா..........:))
அன்புடன்
சுபா
nanna iruku thakkudu...padichutten...funny post...inda matter a 3 episode potta un thiramai vazhga valarga velga.
-vgr
அன்பு மஹி, நம்ம தக்குடு நைத்டிக பிரம்மச்சாரியா இருக்கப் போறது கொஞ்ச நாளைக்குதான்.:)
கணேசனுக்கு அநுமாரும் கிருபை செய்து, ஸ்ரீராமனையும் மைதிலியையும் சேர்த்து வைத்த மாதிரி நம்ம குழந்தைக்கு ஒரு நல்ல பொண்ணாக் கொண்டு வந்துசேர்ப்பார்னு சொல்கிறேன்.
@ லதா மாமி - :)) ஆமாம், நீங்க தான் முதல் ஆள் இன்னிக்கி!
@ அப்பாவியோட தங்கமணி - ஹலோ ரஸ்கை வெச்சுண்டு போஸ்ட் போட்டவா இதை பத்தி பேச குடாது!!...:)
@ கவினயா அக்கா - உங்காத்து மாமாவுக்கு பலன் ஏற்கனவே போய் சேர்ந்தாச்சு!!...;)
@ இட்லி மாமி - என்னவோ என்னோட வருங்கால தங்க்ஸ் என்னோட போஸ்டை படிக்கற மாதிரி பயம் காட்டரேல்!!..:P
@ வெங்கட் அண்ணா - :)) அதே அதே
@ வல்லிம்மா - உங்களுக்கும் சேட்டை ஜாஸ்தி ஆயிடுத்து!!..:)
@ மஹி - :))
@ சுப்பு - @#$..:)
@ ரஞ்ஜனி - அம்மாவுக்கும் பொண்ணுக்கும் என்னோட வாயை பிடுங்கர்தே வேலையா போச்சு!..:P
@ Techops மாமி - நம்பிட்டோம்!!..:)
@ மைனர் - ஒரே seatலையா? ஆசைதான் ஒய்ய் உமக்கு!!..;PP
@ ப்ரதீபா - வாங்கோ! வாங்கோ! ஜூஸ் போச்சே!!!..:0
@ லெக்ஷ்மி அம்மா - சந்தோஷம் அம்மா!..:)
@
@ வாசகன் - ப்ரபசர் சார்! :))
@ கெளதமன் - ரொம்ப சந்தோஷம் சாரே!!..:)
@ கோபலன் அண்ணா - கவலையே படாதீங்கோ கதையை ச்ரத்தையா படிச்சாக்கா பலன் நிச்சயம் கிட்டும்! ..;)
@ அருண் - என்ன இருந்தாலும் நாம ஒரு ஊர்காரா, நமக்குள்ள பேசிக்கலாம்..:)
@ TRC மாமா - :))
@ வித்யா அக்கா - எல்லாம் உங்க ஆசிர்வாதம்!..:)
@ விச்சு - வாங்க லண்டன் துரை! ஸ்டீபன் லீகாக் மரியாதைக்கு மிக்க நன்னிஹை!..:)
@ கோபிகா அக்கா - நன்னிஹை!..:)
@ ரசிகமணி - லேட்டா வந்தாலும் சீத்ரூலேந்து ஆரம்பிக்கரேல் பாத்தேளா அங்க தான் நீங்க நிக்கரேல்..:)
@ vgr - எதோ பாத்து செய்ப்பா!!..:)
@ மதி - கதை பலன் நிச்சயம் கிட்டும் கிங்பிஷரில் போங்கோ!!..:)
@ சுபா மேடம் - :))
@ வல்லிம்மா - உங்க ஆசிர்வாதப்படியே!!..:)
விரைவில் திருமணம் நடைபெற வாழ்த்துக்கள்.
@ Raji madam - :))
Read all the 3 parts at a time today. I realise I am late to comment particularly after reading all the comments in the 3 parts. People like Appavithangamani have appreciated our blog line by line. I cannot add much! Simply I loved your writing style. Keep going! - R. J.
Post a Comment
யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)