என்னை ஒரு ஆபிசர் அழைக்கவும் பக்கத்துல போய் பாஸ்போர்ட்டை குடுத்துட்டு தொண்டையை சரிபண்ணிண்டு பதில் சொல்ல தயாரானேன். அவர் உடனே என்ன சொன்னார் தெரியுமோ?? ஆத்தங்கரைல ஜலம் நிறைய இருக்கா?னு மெதுவான குரல்ல கேட்டார். எனக்கு ஒன்னும் புரியலை. “எனக்கு வி.கே.புரம் தான் சார், முதல் தடவையா வெளி நாடு போறீங்களா?”னு கேட்டார். நான் ஆமா!னு சொல்லி முடிக்கும் போது ' நச்'னு சீல் குத்தி “பேஷா போய்ட்டு வாங்கோ!"னு சொல்லி பாஸ்போர்ட்டை கைல தந்தார். தோஹால டோலோத்ஸவம் நடத்தி வைக்கர்த்துக்கு போகும் கடையனல்லூர் பாகவதர் மாதிரி ‘U’ ஷேப்ல இருந்த என்னோட நெத்தி கோபியை பார்த்துட்டு இப்படி சொன்னாரோ?னு எனக்கு ஆச்சர்யமா இருந்தது. எது எப்பிடியோ தாமிரபரணி தாயார் மாதிரி எங்க போனாலும் கூட வந்து காப்பாத்தர்து மட்டும் நன்னா புரிஞ்சது.
அதுக்கு அப்புறம் செக்யூரிட்டி செக் எல்லாம் முடிஞ்சு வெயிட்டிங் ஹால்ல போய் அப்பாஆஆஅடா!னு உக்காசுண்டேன். வெயிட்டிங் ஹால் நன்னா கலகலப்பா இருந்தது. துபாய் விமானம் ஒன்னு அந்த சமயம் புறப்பாடு ஆயிண்டு இருந்தது இன்னொரு பக்கம் எதோ சிங்கப்பூர் ப்ளைட்ல ஜெய்ஷ்ரீ மிஸ்ஸிங்! ஜெய்ஷ்ரீ மிஸ்ஸிங்!னு ஸ்பீக்கர்ல ஏலம் போட்டுண்டு இருந்தா. லிப்தான்ஸா ஏர்வேஸ் சும்மா சொல்லக் கூடாது அடா! அடா! அடா! என்ன ஒரு கவனிப்பு!! என்ன ஒரு கவனிப்பு!! “தோஹா வழியா போறேள்னா என்னையும் செத்த இறக்கி விட்டுட்டு போவேளா?”னு கேட்டு பாக்கலாம்னு நினைச்சேன், ஆனா “மூக்கும் முழியுமா பால்கோவா நிறத்தோட வேற ஏர்லைன்ஸை சேர்ந்த க்ரவுண்ட் கண்ட்ரோல் பிகர் யாராவது வந்து கூப்டானு வெள்ளந்தியா பின்னாடியே போயிடாதீங்கோ!”னு எங்க மன்னி எனக்கு முன்னாடியே உபதேசம் பண்ணி அனுப்பி இருந்தா அதனால கேக்கலை. ஒரு வழியா என்னோட ப்ளைட்டொட நம்பரையும் குழாய்மைக்செட்ல சொல்லி நாங்களும் ப்ளைட் உள்ள போய் சீட் தேடி உக்காசுண்டோம். எனக்கு நடு வரிசைல வலது பக்க ஓரத்து சீட்டு.

லிப்தான்ஸா.....:)
சீட் ரிசர்வ் பண்ணும்போதே கொஞ்சம் நடுசென்டர்ல சீட் போடுங்கோ!னு சொல்லி இருந்தேன். ரொம்ப பின்னாடி போயிடுத்துன்னா அப்புறம் தெரு சாப்பாட்டு பந்தி நடக்கும் ஹாலோட முகப்புல தாம்பூல பையோட நின்னுண்டு “எல்லாம் திருப்தியா முடிஞ்சுதா? வயிறு நிறைய சாப்டேளா?”னு ஜாரிக்கரமாதிரி யாரெல்லாம் ‘கக்கா’ போகர்துக்கு அவசர அவசரமா போறானு கணக்கு எடுத்துண்டு இருக்கனும் & ப்ளைட் மேடுல ஏறி இறங்கும் போதெல்லாம் தூக்கி தூக்கி போடும், அதுக்காக ரொம்ப முன்னாடி போயிட்டோம்னா எதிர்த்தாப்ல வரும் ப்ளைட்காரனோட ஹெட்லைட் நம்ப மூஞ்சிக்கு நேர அடிச்சு ராத்ரி முழுசும் தூங்க முடியாது
அதுவும் போக நடுசென்டர்ல தான் கொஞ்சம் தெளிவான நீரோட்டம் இருக்கும்!னு சொன்னதால ‘கஷ்ஷ்ஷ்டம்!’னு கரிச்சு கொட்டிண்டே இந்த சீட்டை மன்னி எனக்கு ரிசர்வ் பண்ணி குடுத்தா. எங்க மன்னி இதுக்கு முன்னாடி ஒரு தடவை இதே மாதிரி பயங்கரமா ஆட்டம் போட்ட எங்க அண்ணாவுக்கு சத்தம் இல்லாம ஏர்-இண்டியால ரிசர்வ் பண்ணி வெச்சுட்டா. அங்க இருக்கும் ஏர்ஹோஸ்டஸ் எல்லாம் அசப்புல பாக்கர்த்துக்கு ஒன்னு விட்ட 'ஆம்பூர்' அத்தைபாட்டி மாதிரி இருப்பா. ஏர்ஹோஸ்டஸ்புடவை & பன் கொண்டைல இருக்கர்துனால ‘அவுரங்காபாத்’ அத்தைபாட்டினு வேணும்னா சொல்லிக்கலாம். கத்தார் ஏர்வேஸ்ல எப்பிடி இருப்பானு இன்னும் தெரியாது, அதனால “போனா போகர்து மச்சினர் பொழச்சு போகட்டும்!”னு ஓரத்து சீட்டு பண்ணிகுடுத்தா.

அத்தைபாட்டி...:)
இருந்தாலும் டெக்னாலஜி இன்னும் இம்ப்ரூவ் ஆக்லைனு தான் நான் சொல்லுவேன். நம்ப டிக்கெட்டை ரிசர்வ் பண்ணும்போதே “கண்ண்ண்ணா லட்டு திண்ண ஆசையாஆஆ?”னு பேக்ரவுண்ட் வாய்ஸோட பக்கத்து சீட்ல யாரு முன்னாடி,பின்னாடி,அடுத்த சீட்ல யாரு இதெல்லாம் திரைல வந்தா எவ்ளோ செளகர்யமா இருக்கும்.( நான் சொல்லர்து கரெட்டுதானே ஷோபா மேடம்?). அல்லசல்ல யாரு வரானு நமக்கு ஒரு ஐடியா கிட்டுமே இல்லையா!!
எனக்கு அடுத்த சீட்ல அரைடவுசர் போட்ட புள்ளையாண்டான் உக்காசுண்டு இருந்தார். செந்திலுக்கு அப்புறம் உங்களுக்குதான் டவுசர் ப்ரமாதமா இருக்கு!னு சொல்லனும் வாய் வரைக்கும் வந்துடுத்து, இருந்தாலும் சொல்லலை. அவரோட முகத்துல இருந்த அசட்டு களையை வெச்சே அமெரிக்கா பார்ட்டினு புரிஞ்சுடுத்து. ஒரு ஆள் அமெரிக்காவா,லண்டனா இல்லைனா அலப்பறை பிடிச்ச கனடாவா என்பதை சில லக்ஷணங்களை வெச்சு கண்டுபிடிச்சுடலாம்.
டி-சர்ட் பாக்கெட்ல சின்னதா ஒரு முதலை எம்ப்ராய்டரி லோகோ, முக்கால் காலுக்கு 6 - 8 பாக்கெட் வெச்ச ஒரு டவுசர், நாரதர் கைல இருக்கும் சிப்லாகட்டை மாதிரி சதாசர்வ காலமும் இருக்கும் ஒரு ஆப்பிள் ஐபோன் & ஐபாட்(அதுல கித்தார் மியூசிக்கோட "வெல்கம் டூ ஹோட்டல் கலிபோர்னியா"னு நன்னா கனிஞ்ச வாழைபழ கொழகொழப்போட ஒரு பாட்டுதான் ஓடிண்டு இருக்கும்), ‘வேணாம்! வேணாம்!னு நம்ப சொன்னாலும் அவா பேசும் போது Wanna,gonna,gotta வார்த்தை ப்ரயோகம் இல்லாம நிச்சயமா பேச மாட்டா. கல்லிடை கான்வெண்ட்ல வேப்பமரத்தடில படிச்ச ஓட்ட இங்கிலிபீஷை வெச்சு that that worries, that that person-நு நம்ப சமாளிச்சாலும் பிடிவாதமா நம்ப கிட்ட இங்கிலிபீஸ்லதான் பேசுவா. பொதுவா இந்த மாதிரி சமயங்கள்ல நான் உடனடியா எங்க தெரு பிள்ளையாருக்கு நேந்துண்டு காலவரையற்ற மெளனவிரத்தை ஆரம்பிச்சுடுவேன்.
அந்த டவுசர் பாண்டியன் கிட்ட பேசிண்டு இருக்கும் போதே கேப்டன் மாமா எதோ அனோன்ஸ்மண்ட் பண்ணினார். நமக்கு சின்ன வயசுலேந்தே காதும் கண்ணும் கொஞ்சம் சூஷனை ஜாஸ்தி. அனோன்ஸ்மண்ட்ல யாரு ப்ரதானபைலட்,யாரு கோ-பைலட்,யாரு நமக்கு காப்பிதண்ணி எல்லாம் தரபோறா!னு வரிசையா சொன்னார். ஒரு பேர் கூட வாய்லையே நுழையலை, பகவானே! இப்படி மோசம் போய்ட்டேனே!னு வருத்தப்பட ஆரம்பிக்கர சமயத்துல “பக்தா! உன் பக்தியை யான் மெச்சினோம்!”னு பகவான் சொல்ற மாதிரி சொன்னான் பாக்கனும் ஒரு மேட்டர்!! காதுல தேன் பாயரதோட உண்மையான அர்த்தம் அன்னிக்கிதான் விளங்கித்து. கேப்டன் மாமா சொன்ன கடைசி ஏர்ஹோஸ்டஸோட பேர் 'தீவாளி'. வடக்கத்திக்காராதான் இப்படி தீவாளி/திருகார்த்திகைனு எல்லாம் பேர் வெப்பா. நம்ப சைடு எல்லாம் காயத்ரி,விஜி,அர்ச்சனா,கல்யாணி,கல்பனா,மீனா,உமா, நித்யா, ராஜி,ப்ரீத்தீ & etc etc இந்த மாதிரிதான் வெப்பா. ஸோ, தீவாளி குஜராத்தியா இல்லைனா டில்லியானு ஒரே யோஜனையா இருந்தது.
அப்போ என்ன நடந்தது தெரியுமோ?? (அடுத்த வெள்ளி தொடரும்.....)
36 comments:
ஏர்-இண்டியால ரிசர்வ் பண்ணி வெச்சுட்டா. அங்க இருக்கும் ஏர்ஹோஸ்டஸ் எல்லாம் அசப்புல பாக்கர்த்துக்கு ஒன்னு விட்ட 'ஆம்பூர்' அத்தைபாட்டி மாதிரி இருப்பா.
......அதான் கோச்சூண்டு போய்ட்டா.....
கல்லிடை கான்வெண்ட்ல வேப்பமரத்தடில படிச்ச ஓட்ட இங்கிலிபீஷை வெச்சு that that worries, that that person-நு நம்ப சமாளிச்சாலும் பிடிவாதமா நம்ப கிட்ட இங்கிலிபீஸ்லதான் பேசுவா.
......பாயிண்ட்ஸ் நோட் பண்ணிக்கிட்டேன்.... இது வரை, நான் அப்படி பண்ணதில்லை... அடுத்த முறை, வரும் போது இந்த அலும்பு பண்ணலைனா, நான் அமெரிக்காவில் இருந்து வரலனு, நினைச்சுடுவேளே!
'hotel california'! LOL... chance-e-illa! :D
"aambur aththa paatti".... :D ennoda aduththa favourite...
"காயத்ரி,விஜி,அர்ச்சனா,கல்யாணி,கல்பனா,மீனா,உமா, நித்யா, ராஜி,ப்ரீத்தீ & etc etc" ... hem hem.... nekku purinjuduththu! :D :P
waiting... waiting....
//லண்டனா இல்லைனா அலப்பறை பிடிச்ச கனடாவா//
ஐ லைக் திஸ்.. :)
//அடுத்த வெள்ளி தொடரும்// ஐ டோண்ட் லைக் திஸ்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
இவ்ளோ நல்ல மன்னி கிடைக்க தக்குடு குடுத்து வச்சிருக்கணும் :)
//அசட்டுக் களையை வச்சே//
தக்குடுவுக்கு இந்த வயசிலேயே என்ன ஞானம்!
காதுல எப்படி தேன் பாஞ்சதுன்னு தெரிஞ்சுக்க வெயிட்டிங்...!
\“மூக்கும் முழியுமா பால்கோவா நிறத்தோட வேற ஏர்லைன்ஸை சேர்ந்த க்ரவுண்ட் கண்ட்ரோல் பிகர் யாராவது வந்து கூப்டானு வெள்ளந்தியா பின்னாடியே போயிடாதீங்கோ!”னு\
\எங்க அண்ணாவுக்கு சத்தம் இல்லாம ஏர்-இண்டியால ரிசர்வ் பண்ணி வெச்சுட்டா.\
அண்ணனையும் தம்பியையும் பத்தி மன்னிக்கு தெளிவா தெரிஞ்சு இருக்கிறது. .
\காதுல தேன் பாயரதோட உண்மையான அர்த்தம் அன்னிக்கிதான் விளங்கித்து.\
கத்தார் நல்லா ஏர்லைன்ஸ் தானே, அதுல எப்படி எறும்பு எல்லாம் வந்துச்சு.
ok waiting for next week.
post romba super thakkudu.
nandhan un blogkku vandhu coment poderene,pinna edhu kannomnnu thedare.Any way thanks for the link!!!!!
அது லிப்தான்சா இல்ல ஓய்... லுஃப்தான்சா!! லிப் லிப்னு ஏன் அங்கேயே இருக்கேர்?
ungathula irukarthulaea unga mani taan genius.....nala matupoonu. unakum antha mathiri ponu kidaika valthukal!!!
'Techops' Mami
//நம்ப சைடு எல்லாம் காயத்ரி,விஜி,அர்ச்சனா,கல்யாணி,கல்பனா,மீனா,உமா, நித்யா, ராஜி,ப்ரீத்தீ & etc etc //
.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...யப்பா ...பிளைட்டு இன்னும் கிளம்பவே இல்ல.. இப்பவே இவ்வளவு களைகட்டுதே...அது கிளம்பி பணி குழந்தைகள் (அதாங்க ஏர் ஹோஸ்டஸ் ) வந்து .... ஹ்ம்ம்ம்
//அப்போ என்ன நடந்தது தெரியுமோ?? (அடுத்த வெள்ளி தொடரும்.....) //
முந்தின என் கம்மென்ட்டு .... ரிபீட்டு ...
eppave kanna katuthey, ennum adutha veli varikaikum wait pannanuma!! ambur athaipatti, hotel caifornia LOL , nalla sirukumpadiya ezhutharey thakkudu
//மூக்கும் முழியுமா பால்கோவா நிறத்தோட வேற ஏர்லைன்ஸை சேர்ந்த க்ரவுண்ட் கண்ட்ரோல் பிகர் யாராவது வந்து கூப்டானு வெள்ளந்தியா பின்னாடியே போயிடாதீங்கோ!”//
என்ன இருந்தாலும் சென்னை கேர்ள் ஆச்சே ,அண்ணாவையும் தம்பியையும் நன்னா அளந்து வச்சிருக்கா :)
//'ஆம்பூர்' அத்தைபாட்டி//
இது கரெக்டு , ஏர்- இந்தியாவுல ரிடேர்மென்ட் இல்லையோ ?
//( நான் சொல்லர்து கரெட்டுதானே ஷோபா மேடம்?).//
நான் என்ன ஊறுகா ?
ஜாக்கிரதை ! அப்புறம் அந்த புக் கிடைச்சாலும் நோக்கு இல்லை :)
//கல்லிடை கான்வெண்ட்ல //
இதுக்கு இணை உலகில் உண்டா?
//கடையனல்லூர் பாகவதர் மாதிரி ‘U’ ஷேப்ல இருந்த என்னோட நெத்தி கோபி//
காதுல பூ வக்கரதில்லையா? :)
//அது லிப்தான்சா இல்ல ஓய்... லுஃப்தான்சா!! லிப் லிப்னு ஏன் அங்கேயே இருக்கேர்? //
ரிபீட்டு
அடுத்த வெள்ளிக்கு வெய்ட்டிங்!! :)
ஷோபா
Aiyo idhu thodar kadhaiyaa....Lufthansa figure serippa, QA notbad levelaavadhu thaandiththa? aduththa velli varai kaakkanumaennu irukku!
சத்ய ராஜுக்கு மேல லொள்ளு ஜாஸ்தியா இருக்கே. நல்ல வேளை இன்னும் சென்னைப் பசங்க யாரும் உங்களைப் படுத்தலை போலிருக்கு:)
இத்தனை நல்ல மன்னி யாருக்குக் கிடைப்பா.
தோஹா ப்ளேன்ல அந்த ஊரு தேவதைகள் வரமாட்டாளோ.பாவம் தக்குடு. ஏதோ அண்டர்கரண்டு இந்தப் பதிவில ஓடற மாதிரி இருக்கே:))
//ஆத்தங்கரைல ஜலம் நிறைய இருக்கா?னு மெதுவான குரல்ல கேட்டார்//
இந்த சுண்டக்கா கொஸ்டின்க்கு என்னமோ sherlock holmes ரேஞ்சுக்கு என்னா ஒரு பில்ட் அப்... உன்கிட்ட நெறைய கத்துக்கணும் தம்பி நாங்கெல்லாம்...:)))
//தோஹால டோலோத்ஸவம் நடத்தி வைக்கர்த்துக்கு போகும் கடையனல்லூர் பாகவதர் மாதிரி//
நல்ல self-explanation .... குட் குட் இப்படி தான் உண்மைய பேசணும்...ஆனா இந்த பாகவதர் வெறும் பாகவதர் மட்டுமில்ல கொஞ்சம் "பகா-வதர்"ங்கற மேட்டர் சொல்லாம விட்டுட்டியே...:)
//ஜெய்ஷ்ரீ மிஸ்ஸிங்! ஜெய்ஷ்ரீ மிஸ்ஸிங்!னு ஸ்பீக்கர்ல ஏலம் போட்டுண்டு இருந்தா//
நீ வரேன்னு தெரிஞ்சு அப்போ தான் மறஞ்சு நின்னாங்களாம்... அப்படிதானே ஜெயஸ்ரீ?...:)
//லிப்தான்ஸா ஏர்வேஸ் சும்மா சொல்லக் கூடாது//
சும்மா சொல்லக்கூடாது...ஆனா ஸ்பெல்லிங் கரெக்டா சொல்லலாமோன்னோ....:))
//தோஹா வழியா போறேள்னா என்னையும் செத்த இறக்கி விட்டுட்டு போவேளா?//
அப்படியே வங்காள விரிகுடால ஒரு ஸ்டாப் இருக்காம்... அங்க செத்த கால நெனச்சுட்டு போலாமோன்னோ... :)
//மன்னி எனக்கு முன்னாடியே உபதேசம் பண்ணி அனுப்பி இருந்தா//
நல்லா தான் புரிஞ்சு வெச்சு இருக்காங்க மன்னி... இல்லேனா உங்கள எல்லாம் (!!) சமாளிக்கறது எப்படி..:)
//ப்ளைட் மேடுல ஏறி இறங்கும் போதெல்லாம் தூக்கி தூக்கி போடும்//
ஹா ஹா ஹா... சந்துல திரும்பறப்ப ஜெர்க் ஆகாதா...இல்ல அதை விட்டுடியேனு கேட்டேன்..:)
//முன்னாடி போயிட்டோம்னா எதிர்த்தாப்ல வரும் ப்ளைட்காரனோட ஹெட்லைட் நம்ப மூஞ்சிக்கு//
ஸ்ஸ்ஸ்ஸ்பப்பா... முடியல தக்குடு..:))
//சத்தம் இல்லாம ஏர்-இண்டியால ரிசர்வ் பண்ணி வெச்சுட்டா//
கனடால இருந்து இந்தியாக்கு ஏர் இந்தியா சர்வீஸ் இருக்கானு பாத்து வெச்சுக்கணும்... ரங்க்ஸ்க்கு உபயோகப்படும் யு சி..:)))
//அல்லசல்ல யாரு வரானு நமக்கு ஒரு ஐடியா கிட்டுமே இல்லையா//
எதையும் பிளான் பண்ணி பண்ணனும்னு வடிவேல் சித்தர் இதை தான் சொல்றாரோ...:))
//செந்திலுக்கு அப்புறம் உங்களுக்குதான் டவுசர் ப்ரமாதமா இருக்கு//
பின்ன நாங்க என்ன தக்குடுவா பாலைவனத்துலையும் கோட் சூட் போட்டுகரதுக்கு... நீங்க எல்லாம் ஆபிசர்.....நாங்க எல்லாம் அப்ரண்டிஸ் யு சி...அப்ரன்ச்டிஸ்க்கு அரை டவுசர் தான் குடுப்பாங்க பாஸ்..:))
//அலப்பறை பிடிச்ச கனடாவா//
அடப்பாவி... சந்துல சிந்து பாடிட்டியே... இதுக்கு ஒரு "பெரியவர்" "ஐ லைக் திஸ்.. :)"னு வேற கமெண்ட் போட்டு இருக்கார்...ஹ்ம்ம்.... எல்லாம் டைம்ஸ் ஆப் கனடா... :))
(உன்னை என் போஸ்ட்ல கலாய்ச்சுட்டேன் பாவம்னு ஒரு சின்ன பரிதாபம் இருந்தது...இப்போ அது இல்ல...:)
//காயத்ரி,விஜி,அர்ச்சனா,கல்யாணி,கல்பனா,மீனா,உமா, நித்யா, ராஜி,ப்ரீத்தீ //
வைஷுக்கு இப்படி துரோகம் பண்றியே தக்குடு....:)))
//அப்போ என்ன நடந்தது தெரியுமோ?? (அடுத்த வெள்ளி தொடரும்.....) //
இனிமே யார்னா என்னை "இதுக்கெல்லாம் தொடருமா" னு திட்டுங்க...அப்புறம் பேசிக்கறேன்...:)))
//இதுக்கு ஒரு "பெரியவர்" "ஐ லைக் திஸ்.. :)"னு வேற கமெண்ட் போட்டு இருக்கார்...ஹ்ம்ம்//
நான் பெரியவனெல்லாம் இல்லை அடப்பாவி மேடம், நான் ஒரு சின்னப் பையன்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
Good post thakkudu sir...innum 15 part ottuvvela?
-vgr
//அங்க இருக்கும் ஏர்ஹோஸ்டஸ் எல்லாம் அசப்புல பாக்கர்த்துக்கு ஒன்னு விட்ட 'ஆம்பூர்' அத்தைபாட்டி மாதிரி இருப்பா. ஏர்ஹோஸ்டஸ்புடவை & பன் கொண்டைல இருக்கர்துனால ‘அவுரங்காபாத்’ அத்தைபாட்டினு வேணும்னா சொல்லிக்கலாம்.//
அமர்க்களம் தக்குடு...
மொதோ தடவ பாகவதர் கணக்கா தோஹா போகும்போது நளதயமந்தி மாதவன் மாதிரி போய் இறங்கின கதையெல்லாம் வெளிய வரணும்.. ஓ.கே வா... ;-))))
//நான் பெரியவனெல்லாம் இல்லை அடப்பாவி மேடம், நான் ஒரு சின்னப் பையன்//
மன்னிச்சுடுங்க Sriram Sir... தவறான புரளி பரப்பினதுக்கு
விழுந்து விழுந்து சிரிச்சேன் தக்குடு. Great Job! இந்த தடவ எப்பவும் விட கொஞ்சம் காமெடி தூக்கலாவே இருந்தது.
ஸ்ரீராம், டுபுக்கோட லேட்டஸ்ட் போஸ்ட் ல என்னோட கமெண்ட் பாருங்க. Great minds think alike!
hm hahaha nice...
Dear Thakkudu, vilunthu vilunthu sirichen, what a post yaa! back seatla ukkanthaa thooki poodumaa ungalukku?..;)LOL aththaipatti usage typical thakkuduvoda kurumbu.Lufthansa spllngthan postlaiyee highlight.vaayai thoranthaaley girls names rainflow maathiri varutheyy!!Next friday 3 daysla varakodathaanu varuthama irukku..:( eagerly waiting for next friday.
Ranjani Iyer
அடப்பாவி ஒரு வாட்டி தோஹா போன பயணமே 3 / 4 பதிவு தேத்திடுவே போல இருக்கே......... நடத்து ....:))
நன்னா தான் இருக்கு.........:)
அன்புடன்
சுபா
thakkudu ippo dhaan last week and indha week posts rendum padichen. adhu enna lipthansa? Very bad..very bad..Idhu pathaadhunu, aana oona jeyshri-ya vera vambukku izhukkara? Hmm!
But the post was really good. and ambur athai paati was really too good. funny but true :) Naanga first time air india-la ponappa shock aaiten..adhu varaikkum air hostess-na aishwarya rai maari iruppanu nenachundu irundhen :D
//அதுக்காக ரொம்ப முன்னாடி போயிட்டோம்னா எதிர்த்தாப்ல வரும் ப்ளைட்காரனோட ஹெட்லைட் நம்ப மூஞ்சிக்கு நேர அடிச்சு ராத்ரி முழுசும் தூங்க முடியாது//
aiyo mudiyala. :) :) :)
aana onnu thakkudu....i like your manni's smartness! vaazhga ungal manni! ungalai nanna purinju vachindu iruka!
waiting for your next post!
என்னோட முதல் flight அனுபவத்தை ஞாபகப் படுத்தியது.
என்னோட முதல் பயணம் அப்போதைய மெட்ராஸ் - பாம்பே - நியூயார்க் விமானத்துல. பாம்பேல 12 மணி நேரம் layover.
பாம்பேல பேசாம அமெரிக்காவும் வேண்டாம், பேரிக்காவும் வேணாம் திரும்பிடலாமானு இருந்துது. அதே விமானத்துல வர ஆந்திரா காரன் ஒருத்தன பார்த்து வெச்சுண்டேன். அவனோட சேர்ந்து போர்டிங் பாஸ் வாங்க போனேன். அவன் nonsmoking and window seat நு கேட்டான். நானும் அதே கேட்டேன். அவனுக்கு பின் சீட் எனக்கு. போர்டிங் போது uniform இல்லாத ஒருத்தன் தான் பாஸ்போர்ட் செக் பண்ணினான். ஓட்ட வெட்டின என் முடிய பாத்துட்டு நீ பாஸ்போர்ட் ல உள்ள படத்துல மாத்ரி இல்லை நு சொல்லிட்டன். எனக்கா பயம் - என்னடா இது நு, அந்த ஆந்திரா பார்ட்டி கு இதே நிலைமை. அவன் மொட்டை போட்டுருந்தான். எங்க ரெண்டு பேரையும் கடைசியா இன்னொருத்தன் வந்து விட்டான். ராம்ப் ல வேகமா போய் ஏறினேன்.
flight ல அத்தை பாட்டி தான் :) ட்ரிங்க்ஸ் கொண்டு வந்தா. நான் coke கேட்டேன். அந்த பாட்டி - u r so young to drink beer நு சொன்னா. நான் கேட்டது அவ காதுல coors (பீர்) நு விழுந்திருக்கு. அப்புறம் கோககோலா நு சொன்னோன அது கிடச்சுது.
அப்புறம் மீல்ஸ் வந்துது. ஆத்துல அதுக்கு முன்னாடி அம்மா சாப்ட கூப்பிடும் போது அப்புறம் அப்புறம் நு சொல்லுவேன். அதே நினைப்புல அந்த airhostess டயும் சொன்னேன். அவளும் இப்போ சாப்டா சாப்பிடு - இல்லேன்னா கிடையாதுன்னு செல்லமா(!) சொன்னா. எனக்கு என் அம்மா ஞாபகம் தான் வந்துது.
நியூயார்க் லேர்ந்து நான் connecticut பஸ்ல போக வெயிட் பண்ணும் போது கூட ஒரு லேடியும் அதே ஊருக்கு போற நு அவ கூட இருந்தேன். அவ நான் ரெஸ்ட்ரூம் போயிட்டு வரேன்னு சொன்னா. நான் ரெஸ்ட்ரூம் waiting room நு நினச்சு கூட வரட்டுமா நு almost கேக்க போயிட்டேன். பகவான் புண்ணியம் கேட்கலே. அப்புறம் தான் ரெஸ்ட்ரூம் அர்த்தம் புரிஞ்சுது. கேட்டிருந்தா வந்து இறங்கின உடனே உதை கிடைச்சிருக்கும்.
//மன்னிச்சுடுங்க Sriram Sir... தவறான புரளி பரப்பினதுக்கு//
புவனாக்கா.. பின்னூட்டத்தின் Tone கோவமா இருக்கறா மாதிரி தெரியுது.. நான் சொன்னது சும்மா கலாய்க்கத்தான் - Just Clarifying.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
@ Sriram - அப்ப கோபம் இல்லீங்க அண்ணாத்தே... இப்போ லைட்டா வந்துட்டே இருக்கு... எதுக்கா? இதுக்கு தான் //புவனாக்கா//....(ஒரு யூத்தை அக்கானு கூப்பிட உங்க மனசாட்சி உறுத்தலையா Boss....:)
(BTW - என்னையெல்லாம் எப்பவும் காமெடி பீஸா தானே பார்ப்பீங்க... இதென்ன புதுசா Just Clarifying எல்லாம்....:)))
Thakkudu Kondhai, unnoda writingai yengathula yellarum nalla enjoy panninonda kondhai.Yennoda naattupon unnoda athithivara rasikai aayittaa.Lufthanza spelling vachichuttu yennoda paiyan kaila iruntha coffeeyai kottitan.Tirunelvelikaramathiri ulakathulaiyee yaaralaiyum jollu vida mudiyaathu!!nu yennoda nattuponnu kindal pannara...:) nannaa irudaa kondhai!!
@ பாஸ்டன் நாட்டாமை - இட்லி மாமிக்கு எல்லாம் பயந்து போய் Clarifying-னு சொல்லி எதுக்கு கிளரிபையிங்? இட்லி மாமி எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாங்க, அதனால நோ பீலீங்கு ஓக்கே!!..:))
@ இட்லி மாமி - //அப்ப கோபம் இல்லீங்க அண்ணாத்தே... இப்போ லைட்டா வந்துட்டே இருக்கு// பரவால்லியே, கோவம் எல்லாம் வருமா உங்களுக்கு?..;PP
உங்கள் பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
http://blogintamil.blogspot.com/2011/03/1_15.html
/அலப்பறை பிடிச்ச கனடாவா//
ha ha ha. well said.
@ சித்ரா அக்கா - உங்களோட அலம்புதான் லோகத்துக்கே தெரியுமே!!..:PP
@ மாதங்கி - நான் ரசிச்சு எழுதின இடங்களும் அதுவே!!..;)
@ பாஸ்டன் நாட்டாமை - வாங்க யூத்து!!..:P
@ கவினயா அக்கா - என்னோட கதைதான் உங்களுக்கு நன்னா தெரியுமே!!..:)
@ வாசகன் - லேப்லேந்து நேர நம்ப ப்ளாக்தான் வருவேளோ??..:))
@ ஜெய்ஷ்ரீ அக்கா - அப்பிடியே தேடிட்டாலும்!!!..:PP
@ அருண் - நீங்களும் கல்லிடையா??..:)) நான் தொலஞ்சேன்!
@ 'Techops'மாமி - இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை!!..:)
@ Cheeram அண்ணா - :)))
@ வித்யா அக்கா - நன்னிஹை!..:)
@ ஷோபா மேடம் - தெரிஞ்ச மனுஷாளை ரெபரன்ஸ் குடுத்தா கோச்சுப்பாளா இப்படி?..:) எங்களுக்கு பக்கத்துல உள்ளவாலோட காதுல பூ வெச்சு தான் பழக்கம்...:)
@ லதா மாமி - :))
@ வல்லிம்மா - அண்டர்க்ரவுண்ட்ல எல்லாம் ஒன்னும் ஓடலை..:)
@ இட்லி மாமி - என்னோட போஸ்டை விட உங்க கமண்ட் பெரிசா இருக்கு அக்கா!..:)) லிப்தான்ஸாதான் கரெக்ட் ஸ்பெல்லிங்! யார்கிட்ட வேணும்னாலும் கேட்டு பாருங்கோ!!..:)
@vgr - இன்னும் ஒரு பார்ட் தான்யா, அவசரபடாதியுமோய்!..:)
@ மன்னார்குடி மைனர் - தங்கள் விருப்ப படியே!!..:)
@ மதுரம் அக்கா - நீங்களும் யூத்தா??..:) ஸ்ஸ்ஸ்ஸப்பாபாபா...:)
@ சிவா - :))
@ ரஞ்ஜனி - எல்லாரும் லிப்தான்ஸா ஸ்பெல்லிங் தப்புனு சொல்லறா, நீங்க மட்டும் தான் நம்ப கட்சி!..:)
@ சுபா மாமி - ;))
@ விபா அக்கா - ஜெய்ஷ்ரீ அக்காவுக்கு நான் வம்புக்கு இழுக்கலைனா தான் வருத்தமா இருக்கும்..:) லிப்தான்ஸா ஸ்பெல்லிங் தப்புன்னு பாலாஜி மட்டும் சொல்லட்டும் ஒத்துக்கறேன்!..;P
@ கோபிகா அக்கா - :)) நன்னிஹை!
@ கோபாலன் அண்ணா - ஒரு போஸ்டை வேஸ்ட் பண்ணிட்டேளே அண்ணா!!..:)
@ கல்லிடை மாமி - ரொம்ப சந்தோஷம்!..:)
@ SK - நன்றிகள் பல,,:)
@ சுனாமி - :))
ஃப்ளைட்லகூட உங்கபாகவதர் கெட்டப்பும் நாரதர் சிப்ளாகாட்டையும் உங்களை விடலியா? நீங்கபோன சமயம் கிங்க் ”ஃபிஷர் இல்லியா”? அதுல பிகர்லாம் சும்ம சூப்பரா இருக்குமே.
@ லெக்ஷ்மி மாமி - அடுத்த தடவை அதுலதான் போகனும்...:)
Post a Comment
யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)