Thursday, March 3, 2011

மூக்கும் முழியுமா.........

கல்லிடைல தாமிரபரணில குளிச்சுட்டு தலை துவட்டும் போது 2 - 3 தடவை பாத்து இருக்கேன். அதுக்கு அப்புறம் பூலோக சொர்கமான பெங்களூர்ல நித்யம் அதிகாலை 4.30க்கு அர்க்யம் குடுக்கும் போதும் அதே காட்சியை பாத்ததுண்டு. நான் மொட்டை மாடிக்கு அதிகாலைல வருவேன்னு அவளுக்கு எப்பிடித்தான் தெரியுமோ, கரெக்டா எதிர்த்தாத்து மாடிக்கு மேல அவளும் வந்துடுவா. பாக்கும் போதெல்லாம் ஒரு விதமான ஆசை வருமே தவிர மோஹம் வந்தது கிடையாது. தள்ளி இருந்து பார்க்கும் போதே ரொம்ப அழகா இருக்கும். “மூக்கும் முழியுமா இருக்கா!”னு சொல்லும் வசனம் நிச்சயமா அவளுக்கு தான் பொருந்தும். வில்லிப்புத்தூர் ரெங்கமன்னார் கோவில் கருடாள்வார் மாதிரி அவளுக்கு கூர்மையான மூக்கு. என்ன ஒரு கூர்மையான மூக்கு!னு ஆச்சர்யப்பட்டாலும், பஜாரியாட்டமா அவளோட சத்தம் ஊரையும் நாட்டையும் கலக்கும். எதுக்கு இப்போ கத்திண்டு இருக்கை?னு கேக்கனும் போல இருக்கும், கேட்டாலும் ஒன்னும் பெரிசா மாற்றம் எல்லாம் வந்துடாதுனு நன்னா தெரியும், அப்பிடியே வழுக்கிண்டு போகர மாதிரி 'பளபள'னு ஒரு சரீரம்.



நான் சொன்னது இவரைதான்...:)

சின்ன வயசுலேந்தே ஏரோப்ளேன்ல போகனும்னு ரொம்ப ஆசை உண்டு, ஆனா திருனெல்வேலி பஸ் ஸ்டாண்டுக்கும் கல்லிடை மெட்ரோவுக்கும் நடுல ஏரோப்ளேன் சர்வீஸ் கிடையாதுங்கர்துனால போகலை. தோஹாவுக்கு வரும் போதுதான் முதல்முதலா ‘மூக்கும் முழியுமா’ இருக்கும் ஏரோப்ளேல உக்காசுண்டு வந்தேன். தூரதேசத்துக்கு போறேன்னு எங்க அம்மா அப்பா எந்த அளவுக்கு கவலை பட்டாளோ அதே அளவுக்கு எங்க மன்னியும் கவலைபட்டா. ‘மத்தவா மாதிரி பிரமாதமான சாமர்த்தியமும் நம்ப மச்சினருக்கு கிடையாதே!!’னு அவாளுக்கு கவலை(இருக்காதா பின்ன!!). எங்க அண்ணா நல்ல நாள்லையே என்னை பயம் காட்டுவான். போதாகொறைக்கு அவன் ஆபிஸ்லேந்து வேற லண்டன் வரைக்கும் போய்ட்டு வந்துட்டான், இப்ப கேக்கவே வேண்டாம்.அந்த லண்டன் ஏர்போர்ட் பேர் கூட எனக்கு சரியா சொல்ல வராம கொஞ்சம் மாத்தி சொல்லி, எங்க மன்னி "கருமம்! கருமம்!"னு தலைல அடுச்சுண்டா. ‘ஹீத்ரூ ஏர்போர்ட்’னு சொல்லர்துக்கு பதிலா நான் ‘seethrough ஏர்போர்ட்’னு சொல்லிட்டேன்..:)

எதோ தங்கமலைக்கு போகும் விக்ரமபாண்டியனுக்கு ராஜகுரு வழிமுறை சொல்லி குடுக்கர மாதிரி எங்க மன்னி விளாவரியா சொல்லிகுடுத்தா. நடுல எங்க அண்ணா, "மாப்ப்ளே! எல்லாம் தாண்டிடலாம், இந்த இமிக்ரேஷந்தான் ரொம்ப கஷ்டம்! நிறையா கேள்வி எல்லாம் கேப்பா! பன் கொண்டை போட்ட எதாவது ஒரு காமாட்சி மேடம் வந்தா நீ பொழச்சை, ஒருவேளை கட்டம் போட்ட சட்டை & கண்ணாடி போட்ட சுப்பிரமணி ஆபிசரா இருந்தா நீ தொலஞ்சை!னு நல்ல பயம் காட்டினான். நான் போகவேண்டிய ப்ளைட் அர்த்தராத்ரி 1.30 பேயோட்டர சமயம்(நம்ப இட்லி மாமி போஸ்ட் போடும் நேரம்! என்றும் சொல்லலாம்).ஏர்போர்ட்டுக்கும் போயாச்சு, “வெற்றி நமதே விக்ரமபாண்டியா!”னு எங்க மன்னி வாழ்த்தி அனுப்பினா, நான் எங்கையாவது மாட்டிண்டு 'பக்க்ர! பக்க்ர!'னு முழிச்சா பாத்து ரசிக்கலாம்னு எங்க அண்ணா ஆவலா இருந்தான்.

என்னோட பாக்கேஜ் பொட்டில இருந்த புளிகாய்ச்சல்/பருப்புபொடி/சாம்பார்பொடி/ரசப்பொடி/கோலப்பொடி/புண்ணாக்குபொடி எல்லாம் நல்ல படியா தப்பிச்சாலும் எதிர்பாத்த மாதிரியே பிரச்சனை ஆரம்பம் ஆனது. என்னோட விசா நம்பரை கம்யூட்டர்ல அடிச்ச அந்த ஏரோப்ளேன் கம்பெனி பிகரோட முகம் அமைதியான ஜலபாத்ரத்துல விழும் முதல் மழைதுளியோட காட்சியை குடுத்து நெற்றியும் புருவமும் சுருக்கியது. ‘கல்யாணி!’னு பேர் போட்ட பேட்ச் குத்தின அந்த மாது இரண்டு மூனு தடவையா என்னோட விசா நம்பரை டைப்பிட்டு மண்டையை ஆட்டிண்டே அங்க இருந்த ஒரு ஆபிசரை கூப்பிட்டு எதோ சொல்லி என்னோட பாஸ்போர்ட்டை குடுத்தது. அதை எடுத்துண்டு காணாம போன ஆபிசர் சிலம்போட போன கோவலன் மாதிரி திருப்பி வரவே இல்லை.



சின்ன கவுண்டர்..:)

ஒரு மணி நேரம் ஆயாச்சு, போன மச்சான் போயே போனான்டி!னு ஆனதால நம்ப கல்யாணிகிட்ட மெதுவா 'எச்சுஸ்மீ'னு ஆரம்பிச்சு விஷயத்தை கேட்டேன். “உங்க விசா நம்பர் செல்லாது!னு வரர்தே சார்!”னு பதில் சொன்னா. "பெயரோ கல்யாணி! மங்களகரமான பெயர்! ஆனால் அமங்களமாய் பேசுகிறாயே கண்ணே!னு சொல்லனும் போல இருந்தது. இருந்த ஒரே ‘அல்லக்கை’ அனலிஸ்ட் வேலையையும் பெங்களூர்ல ராஜினாமா பண்ணிட்டு வந்தாச்சு, விசா செல்லாதுன்னு சொன்னா அப்புறம் கல்லிடைல இருக்கும் ராஜியோட மாமா பக்கத்துல திண்ணைலதான் உக்காச்சுக்கனும்னு ஒரே டென்ஷன். "பிரச்சனை மட்டும் சரிஆகட்டும் முருகா! திருச்செந்தூர்ல எங்க அண்ணாவுக்கு மொட்டை அடிக்கறேன்!"னு வேண்டுதல் எல்லாம் பண்ணிண்டு இருந்தேன்.



குலவிளக்கு with குத்துவிளக்கு...:)

அந்த சமயம் என்னோட பாஸ்போர்ட்டை கைல வெச்சுண்டு, திருக்கார்த்திகைக்கு முதல் விளக்கை வாசல்ல வைக்கர்த்துக்கு வர மாதிரி புல் மேக்கப்போட புடவை கட்டின ஒரு புண்ணியவதி பூமி அதிர வந்து “கங்கிராடுலேஷன்ஸ்! உங்க விசா நம்பர் செல்லும்! கல்யாணி அரபி டிரான்ஸ்லேட் பண்ணும் போது ஒரு நம்பரை விட்டுட்டாங்க!”னு இங்கிலிபீஸ்ல சொன்னா. சிரிச்சுண்டே அந்த புண்ணியவதி வந்து சொன்ன விதத்தை தள்ளி இருந்து பாக்கறவா "கங்கிராடுலேஷன்ஸ்! நீங்க அப்பா ஆயிட்டீங்க" மாதிரி புரிஞ்சுக்க வாய்ப்புகள் அதிகம்.

குலதெய்வத்தை வேண்டிண்டே இமிக்ரேஷன் பகுதியை நோக்கி நடையை கட்டினேன். எங்க ஊர் அண்ணாச்சி கடை மளிகை சாமான் லிஸ்ட் மாதிரி முதல்ல ஒன்னை பூர்த்தி பண்ணி தரசொன்னா . அதுக்கு அடுத்து என்னோட முறைக்கு காத்துண்டு இருந்தேன். இதுக்கு முன்னாடியே ஒரு வாரமா இமிக்ரேஷன் ஆளை சமாளிக்க ஸ்பெஷல் கமாண்டோ டெரியினிங் எல்லாம் எடுத்தேன். ‘அபியும் நானும்’ பிரகாஷ்ராஜ் மாதிரி “ஜப்பான்ல இருக்கர்து டோக்கியோ, போன்ல சிறந்தது நோக்கியா"னு நிறையா ஹோம்வொர்க் பண்ணினேன். என்னோட பாஸ்போர்ட் எந்த ஸ்டாம்பிங்கும் இல்லாம ‘அய்யா’ படத்துல வரும் நயந்தாரா மாதிரி புத்தம் புதுசா ‘பளிச்’னு இருந்ததால தான் இவ்ளோ தலைவலி. என்னை ஒரு ஆபிசர் அழைக்கவும் பக்கத்துல போய் பாஸ்போர்ட்டை குடுத்துட்டு தொண்டையை சரிபண்ணிண்டு பதில் சொல்ல தயாரானேன்.

அவர் உடனே என்ன கேட்டார் தெரியுமோ??..:) (அடுத்த வாரம் தொடரும்)


(Note - பிரஞ்சு மொழில எல்லாத்துக்குமே ஆண்பால் பெண்பால் உண்டு. அதனாலதான் ‘ஏரோப்ளேன்’ அவள் ஆனாள்...;)

44 comments:

RVS said...

தக்குடுவின் தோஹா பயணம் அட்டகாசம்.....
கருடாழ்வாரைப் பழிக்கப் படாது.. அப்புறம் கிளி போல பொண்ணு கிடைப்பா!!!
ஏர்போர்ட் பொண்ணோட பேரை எல்லாம் ஏம்ப்பா உத்து உத்துப் பார்த்து படிக்கறே! ;-)))
கை குடுங்க.. நீங்க அப்பா ஆயிட்டீங்க.. ;-))))
எல்லோரும் வாழ்த்தினதுக்கப்புறம் திரும்ப வரேன்.. ;-))))))

Chitra said...

என்னோட பாக்கேஜ் பொட்டில இருந்த புளிகாய்ச்சல்/பருப்புபொடி/சாம்பார்பொடி/ரசப்பொடி/கோலப்பொடி/புண்ணாக்குபொடி எல்லாம் நல்ல படியா தப்பிச்சாலும் எதிர்பாத்த மாதிரியே பிரச்சனை ஆரம்பம் ஆனது.


.....புண்ணாக்கு பொடி, நோக்கு எதுக்குடா தக்குடு?

Chitra said...

"பிரச்சனை மட்டும் சரிஆகட்டும் முருகா! திருச்செந்தூர்ல எங்க அண்ணாவுக்கு மொட்டை அடிக்கறேன்!"னு வேண்டுதல் எல்லாம் பண்ணிண்டு இருந்தேன்.


....அண்ணா, இன்னும் எப்படி உன்னை விட்டு வச்சுருக்கார்? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா... அதான் அவாளை, இந்த பக்கம் அனுப்பி வச்சிட்டேளா?

Chitra said...

என்னோட பாஸ்போர்ட் எந்த ஸ்டாம்பிங்கும் இல்லாம ‘அய்யா’ படத்துல வரும் நயந்தாரா மாதிரி புத்தம் புதுசா ‘பளிச்’னு இருந்ததால தான் இவ்ளோ தலைவலி.


....ஹி,ஹி,ஹி,ஹி,ஹி,ஹி.... நோக்கு மட்டும் தான் இப்படியெல்லாம் தோன்றதுடா!

தி. ரா. ச.(T.R.C.) said...

//மத்தவா மாதிரி பிரமாதமான சாமர்த்தியமும் நம்ப மச்சினருக்கு கிடையாதே!!’னு அவாளுக்கு கவலை(இருக்காதா பின்ன!!). //

மன்னிக்கு திருஷ்டி சுத்தி போடச் சொல்லனும் எப்படி இவ்வளோ துல்லியமா ஜட்ஜ் பண்ணியிருக்கா மஹாபுத்திசாலி

Mahi said...

:)
தக்குடு,பிரயாணக்கட்டுரை நன்னா இன்ட்ரஸ்டிங்கா இருக்கு.
//பிரஞ்சு மொழில எல்லாத்துக்குமே ஆண்பால் பெண்பால் உண்டு. அதனாலதான் ‘ஏரோப்ளேன்’ அவள் ஆனாள்...;)//ஓ,ப்ரென்ச்லதான் ஆண்பால்-பெண்பாலா? ஹிந்திலயே இருக்குன்னு எனக்கு ஞாபகம்..இல்லையா??!!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

// ‘ஹீத்ரூ ஏர்போர்ட்’னு சொல்லர்துக்கு பதிலா//
உன்னை சொல்லி குற்றமில்லை... மனசுல இருக்கறது தானே வார்த்தையா வரும்...:)

//நம்ப இட்லி மாமி போஸ்ட் போடும் நேரம்! என்றும் சொல்லலாம்//
நீ மட்டும் காலகாத்தால திருப்பள்ளி எழுச்சி போடறதா நெனப்போ...:)

//பெயரோ கல்யாணி! மங்களகரமான பெயர்! ஆனால் அமங்களமாய் பேசுகிறாயே கண்ணே!னு//
ப்ளாக் & வைட் சினிமா நெறைய பாக்கறயோ...:)

//திருச்செந்தூர்ல எங்க அண்ணாவுக்கு மொட்டை அடிக்கறேன்//
தம்பியுடையான் மொட்டைக்கும் அஞ்சான்...:)

//"கங்கிராடுலேஷன்ஸ்! நீங்க அப்பா ஆயிட்டீங்க" மாதிரி புரிஞ்சுக்க வாய்ப்புகள் அதிகம்//
ஓ மை கடவுளே....:)

// ‘அய்யா’ படத்துல வரும் நயந்தாரா //
அடடா... உலகத்துலேயே இப்படி ஒரு உவமை உனக்கு மட்டும் தான் வரும்...பெருமாளே காப்பாத்து...:)

//அவர் உடனே என்ன கேட்டார் தெரியுமோ??..:) //
இதுல தொடரும் வேற...இதுல தொடரும் போடறதை நான்னு என்னை கிண்டல் வேற...ஹ்ம்ம்...

//அதனாலதான் ‘ஏரோப்ளேன்’ அவள் ஆனாள்//
உனக்கு சகலமும் "அவள்" தான்னு தெரிஞ்சுது தானே பிரதர்... :)

இதுல மேட்டர் என்னனா... இந்த போஸ்ட் பாத்து எனக்கு மொதல் வாட்டி துபாய் இல்ல இல்ல கனடா வந்தப்ப பம்பாய் ஏர்போர்ட்ல நடந்த கொடுமை எல்லாம் ஞாபகம் வந்துடுச்சு... ஒரு போஸ்ட் போட லீட் குடுத்த தக்குடு வாழ்க... (வெரி குட் அப்பாவி...இப்படி தான் ஒரு ஒரு போஸ்ட்க்கும் ஒருத்தர் மேல பழி(லி) போட்டுட்டு நீ எஸ்கேப் ஆயடனும்... ஹா ஹா...:)))

Kavinaya said...

// ‘ஹீத்ரூ ஏர்போர்ட்’னு சொல்லர்துக்கு பதிலா//
உன்னை சொல்லி குற்றமில்லை... மனசுல இருக்கறது தானே வார்த்தையா வரும்...:)//

ரிப்பீட்டு!

//பெயரோ கல்யாணி! மங்களகரமான பெயர்! ஆனால் அமங்களமாய் பேசுகிறாயே கண்ணே!னு//

அப்படியே தக்குடு குரல் என் காதில் ஒலிக்குது :)

//திருச்செந்தூர்ல எங்க அண்ணாவுக்கு மொட்டை அடிக்கறேன்//

பிரச்சனை தீர்ந்தாச்சே! மொட்டை என்ன ஆச்சு?

//"கங்கிராடுலேஷன்ஸ்! நீங்க அப்பா ஆயிட்டீங்க" மாதிரி புரிஞ்சுக்க வாய்ப்புகள் அதிகம்//

ஹாஹா :)))

// ‘அய்யா’ படத்துல வரும் நயந்தாரா //
அடடா... உலகத்துலேயே இப்படி ஒரு உவமை உனக்கு மட்டும் தான் வரும்...பெருமாளே காப்பாத்து...:)//

ரொம்ப கரெக்ட்! :)))

//அதனாலதான் ‘ஏரோப்ளேன்’ அவள் ஆனாள்//
உனக்கு சகலமும் "அவள்" தான்னு தெரிஞ்சுது தானே பிரதர்... :)//

:)))

Dubukku said...

:))))


//எங்க அண்ணா நல்ல நாள்லையே என்னை பயம் காட்டுவான். போதாகொறைக்கு அவன் ஆபிஸ்லேந்து வேற லண்டன் வரைக்கும் போய்ட்டு வந்துட்டான்//

அடப்பாவி எப்படா லண்டன் வந்தான்....ஹூம்ம்ம்ம் எல்லாம் ப்ளாக் வழியாத் தான் தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு...நடக்கட்டும் நடக்கட்டும் இருக்கு அவனுக்கு :)

Vasagan said...

குலவிளக்கு with குத்துவிளக்கு...:)

ஜாதகம் Ok ஆகிடுச்சா. எப்போ சாப்பாடு ?


\எதாவது ஒரு காமாட்சி மேடம் வந்தா நீ பொழச்சை, \
ஒரு தடவை தைவான் போகும்போது, நீங்க தைவான் போறதா சொல்றீங்க, விசால சீனால போட்டுருக்குனு ஆரம்பிச்சாங்க, உடனே தைவான் historya பத்தி quantum mechanics range க்கு கிளாஸ் எடுக்க ஆரம்பிச்ச உடன் கையெடுத்து கும்பிட்டு, நீங்க இப்படியே
Antarctica கூட போங்கnu வழியனுப்பி வச்சிடுச்சி .

டே டு டே நடக்கிற நிகழ்ச்சியை அப்படியே மனசுலே வச்சு அதை சுவையாய் எழுதுகிற திறமை, you blessed with Saraswathi Katacham. Keep it up.

Unknown said...

me the first

thakkadu super..

Unknown said...

//வந்தப்ப பம்பாய் ஏர்போர்ட்ல நடந்த கொடுமை

எல்லாம் ஞாபகம் வந்துடுச்சு... //

oh my god...so sad :( marupadium oru thodara?????)

Unknown said...

"takkadu anna oru doubt..
evangathan neenga kattika poravnagala?"

Harini Nagarajan said...

French mozhila aeroplane aan paala illa pen paala illa aavin paala?? :P

வல்லிசிம்ஹன் said...

தக்குடு. பொளந்து கட்டறே;)
சான்ஸே இல்ல.நான் சொல்லணும்னு நினைச்சதெல்லாம் தங்கமணி அப்பாவி சொல்லிட்டாங்க. அதுக்கு ரிபீட்டு போட்டுக்கறேன்.
காலங்கார்த்தால சிரிக்க வைச்சுப் புண்ணியம் தேடிக் கொண்ட கணேசா, நீ நன்னா இருக்கணும்.
நாங்களும் பட்டிருக்கோம்ல இந்த அவஸ்தையெல்லாம். ஹூம். வாழ்க்கை எனும் பயணத்திலே ஏர்போர்ட்டில் நடந்ததுவேன்னு பாட்டு எழுதப் போறேன்.:)))))

Jeyashris Kitchen said...

Now a days ,Unnoda posta padicha kira arvatha vida un comment sectiona padikardhula romba jastiya irruku.That too "appavi thangamani madam's"comment.
Waiting for the next one.Nice write up

திவாண்ணா said...

ATM சொன்னதுக்கு எல்லாம் ரிபீட்டு! அப்பாடா! எவ்வ்வளொ சுலபமா கமென்டியாச்சு! :-))))))

Subhashini said...

I repeat whatever Bhuvana said. yeppa mudiyala Ganesa...:)) what a flow yaar.
nadu naduvila ambiyei vambukku izuthundu....
jamai....:))
anbudan
subha

vgr said...

Inference:

(nan -> thakkudu)

கல்லிடைல தாமிரபரணில குளிச்சுட்டு தலை துவட்டும் போது 2 - 3 தடவை பாத்து இருக்கேன்.
Nan thavaramal thalaiku kulipen.

பூலோக சொர்கமான பெங்களூர்ல நித்யம் அதிகாலை 4.30க்கு அர்க்யம் குடுக்கும் போதும் அதே காட்சியை பாத்ததுண்டு
Nan kalai 4.30 mani ezhubavan.

‘மத்தவா மாதிரி பிரமாதமான சாமர்த்தியமும் நம்ப மச்சினருக்கு கிடையாதே!!’னு அவாளுக்கு கவலை(இருக்காதா பின்ன!!).
Nan migavum appavi. vayil viral vaithal kooda kadika theriyadu.

‘seethrough ஏர்போர்ட்’னு சொல்லிட்டேன்..:)
idayum therinda appavi nan.

இருந்த ஒரே ‘அல்லக்கை’ அனலிஸ்ட் வேலையையும் பெங்களூர்ல ராஜினாமா பண்ணிட்டு
nan erkanave irunda analyst velayai resign seidavan.

குலவிளக்கு with குத்துவிளக்கு...:)
inda photo kum inda post kum enna samandam?

பிரஞ்சு மொழில எல்லாத்துக்குமே ஆண்பால் பெண்பால் உண்டு. அதனாலதான் ‘ஏரோப்ளேன்’ அவள் ஆனாள்...;)
ennaku general knowledge romba jasthi.

-vgr

Anonymous said...

Blog title la pathathum yethi nee patha ponu pathi yelutha porea nu neenichen.

katha aarambam naana iruku...nanum kuda international flight yernathu ilaa...ithu vari chance kidaikala..

'Techops'Mami

மனம் திறந்து... (மதி) said...

வழக்கம் போல, கச்சேரி களை கட்டிடுச்சி!

இவ்வளவு கூட்டத்துக்கு மத்தியிலே "மூக்கை" நொழைச்சி ஒரு வழியா பதிவைப் படிச்சுட்டு, பின்னூட்டச் சந்தைக்குள்ளே போய் வெளிய வர்றதுக்குள்ள "முழியே" பிதுங்கிடுச்சிப்பா!

அது சரி...நயன்தாரான்னாலே கொஞ்சம் பிரச்சனை தானா எப்பவுமே?!

மனம் திறந்து... (மதி) said...

//jeyashrisuresh: Now a days ,Unnoda posta padikira arvatha vida un comment sectiona padikardhula romba jastiya irruku.That too "appavi thangamani madam's"comment.//

இதிலென்ன ஆச்சர்யம்? மியூசிக் அகாடமிக்கு வர்றவங்க, அறுசுவை நடராசன் கேன்டீனுக்குப் போய் ஒரு புடி புடிச்சிட்டு, முடிஞ்சா கச்சேரியிலும் கொஞ்ச நேரம் உக்காந்துட்டுப் போறது தானே வழக்கம்!:))))))

அதே மாதிரி பதிவுலகிலே, நம்ம வட்டாரத்திலே
இட்லி மாமி:தக்குடு = priya.r :இட்லி மாமி!?

Matangi Mawley said...

"Thakkudu Touch"!

'see-through'...,('haiyo...haiyo... :D)...,'Congratulations..'..(tho-da.... :D), 'peyaro kalyaani'...(bad-news kudukkum 'fugure'-kum ivalo azhagaa nool vittirukkele...! unga talent-e-talent-u! :P), 'silamboda pona kovalan..'(ROFL... :D)

^^^^^^ soooper-dooper! ^^^^^^^

Gopikaa said...

Had a hearty laugh reading your post. Nice :) couldnt wait for the next one to come up...come on... make it fast! :)

vidhas said...

Thakkudu robha nalla erukku. As jeysri said post um comments um padikarathkku rombah nalla erruku, Parasakthi vasanam ellam serthu pottu, room pootu yosipaiyo.

ennuma unga manni unnakku ethuvum theriyathunu nambra :-)

Anonymous said...

Dear Thakkudu, first flight exp pramaathamaa irukku poongo! prvs postla vantha mami list yellam ippathan read panni sirichuttu inga vanthaa again strt music..:) saatharna vishayam kooda unga writingla padikum poothu varum sugamey thaithan. unga kannu always seethroughthaan..:P waiting for next part.

new template roomba nanna irukku, yenakku pidicha colour sky bluethannu ungalukku yaaru vanthu sonna?!!..:)

Ranjani Iyer

vidhas said...

new template in nice thakkudu

தக்குடு said...

@ RVS அண்ணா - நான் ஒன்னும் கருடரை பழிக்கலை! எவ்ளோ நேரம் கம்யூட்டரோட மானிட்டரையே பாத்துண்டு இருக்க முடியும் அதான் கொழந்தையோட பேர் என்ன?னு பாத்தேன்..:)

@ சித்ரா அக்கா - எண்ண தேய்ச்சு குளிக்க புண்ணாக்குபொடி வேணுமே!! ஆமாம் அதான் உங்க பக்கம் அனுப்பி வெச்சாச்சு!..:))

@ TRC மாமா - :))

@ மஹி - ஹிந்தி தெரிஞ்சு இருந்தாதான் பெங்களூர்ல 'பல' கார்யங்கள் ஜெயம் ஆகி இருக்குமே!!..:))

@ இட்லி மாமி - என்னோட போஸ்டை விட எல்லாருக்கும் உங்க கமண்டுதான் இஷ்டமா இருக்கு இப்போ!!..:)

@ கவினயா அக்கா - ஒழுங்கா கமண்ட் டைப் பண்ணி போடுங்கோ!!..:P

@ டுபுக்கு அண்ணாச்சி - நீங்க லண்டன்ல இருக்கும் ஜோடிப் புறாக்கள், அதனால தான் உங்களை இம்சிக்கலை..:)

@ வாசகன் சார் - உங்களோட நல்ல வார்த்தைகளுக்கு ரொம்ப சந்தோஷம்!!..:))

@ சிவா - இது ஒன்னும் நான் கட்டிக்கப்போகும் பிகர் இல்லை, நீங்க தாராளமா சைட் அடுச்சுக்கலாம்..:P

@ ஹரிணி - போஸ்டோட கடைசி வரியை மட்டும் படிச்சுட்டு கமண்ட் போட்டு சமாளிக்கறேளேபா!!..:)

@ வல்லிம்மா - ரொம்ப சந்தோஷம்மா, கட்டாயமா எழுதுங்கோ! சுவிஸோட அழகை உங்க எழுத்துல படிக்க ஆசையா இருக்கு...:)

@ ஜெய்ஷ்ரீ அக்கா - ரொம்ப சந்தோஷம்! ப்ரொபைல் போட்டோ சூப்பரா இருக்கு!!..:)

@ திவா அண்ணா - :))

தக்குடு said...

@ மேனேஜர் மாமி - தன்யனானேன் மேடம்! அம்பியை வம்புக்கு இழுத்தாதானே உங்களுக்கு பிடிக்கும்...:)

@ vgr - யோவ்! எதுக்கு இந்த கொலை வெறி!!..:)

@ 'Techops'மாமி - நீங்க அதைதான் எதிர்பார்ப்பேள்னு யான் அறியும்!!..:)

@ மதி - ஆமாம், நயந்தாரானாலே கொஞ்சம் பிரச்சனைதான். ஜெய்ஷ்ரீ அக்காவை கூட கொஞ்சம் ஏத்திவிடாதீங்கோ!!..:))

@ மாதங்கி - ஹா! ஹா! ஹா! கோவலன் மேட்டரை கண்டுகொண்டு ரசிச்சதுக்கு ரொம்ப நன்னி!..:)

@ கோபிகா அக்கா - தங்கள் முதல் வரவுக்கும் கருத்துக்கும் ரொம்ப சந்தோஷம்பா!!..:)

@ வித்யா அக்கா - :)) எல்லாம் உங்க ஆசிர்வாதம்தான்...;)

@ ரஞ்ஜனி - என்னடா மேடத்தை காணுமேனு நினைச்சேன். ஆத்துல எல்லாரும் செளக்கியம் தானே!! உங்களுக்கும் ப்ளூதான் பிடிக்குமா!!..;))

@ வித்யா அக்கா - :))

Jeyashris Kitchen said...

nice template thakkudu

Mahi said...

தக்குடு,டெம்ப்ளேட்லாம் மாத்தியாச்சு போல?! ஏதோ ஒண்ணு மிஸ் ஆகுது ப்ளாக்ல! மூக்கும் முழியுமா இருக்கற மாமி போட்டோ ஒண்ணை 'கொஞ்சம் குறும்பு,கொஞ்சம் நக்கல்'-க்கு பக்கத்திலே போட்டா சரியாகிடும்னு நினைக்கிறேன். ;)

ஒரு தொடர் பதிவுக்கு கூப்ட்டிருக்கேன்.நல்லபிள்ளையா எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன். :)
http://mahikitchen.blogspot.com/2011/03/blog-post.html

RS said...

@தக்குடு !

அருமையான விவரிப்பு.

தோஹால இருந்தா 33179826 தொடர்பு கொள்ளவும்.

ஸ்ரீதர்

lata raja said...

Siruchchindae irukkaen...mudiyalaippa:)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Thanks Jaishree for your continued support...:))))

தக்குடு said...

@ ஜெய்ஷ்ரீ அக்கா - நன்னிஹை!!..:)

@ மகி - மாமி போட்டோதானே போட்டா போச்சு!!..:)

@RS sir - கால் பண்ணரேன் சரியா!..;)

@ லதா மாமி - :))

Anonymous said...

ha ha. =))

Ananya Mahadevan said...

செம்ம..செம்ம.. செம்ம சூப்பர் தக்குட்ஸ்! சிரிச்சு சிரிச்ச் முடியல!

சாந்தி மாரியப்பன் said...

//பிரச்சனை மட்டும் சரிஆகட்டும் முருகா! திருச்செந்தூர்ல எங்க அண்ணாவுக்கு மொட்டை அடிக்கறேன்!"னு வேண்டுதல் எல்லாம் பண்ணிண்டு இருந்தேன்//

வேண்டுதலை நிறைவேத்தியாச்சா :-)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

தெய்வசுகந்தி said...

:-))))))))))))))))))))))))!!!!!!!!!

கௌதமன் said...

போஸ்ட், கமெண்ட்ஸ் எல்லாமே சூப்பர். பாராட்டுகள்!

தக்குடு said...

@ சுனாமி - :))

@ அனன்யா அக்கா - ரொம்ப சந்தோஷம்பா!..:)

@ அமைதிசாரல் - பின்ன அடிக்காம விடுவோமா??..:)

@ முத்தக்கா - :))

@ சுகந்தி - :))

@ கெளதமன் - நன்னிஹை!!..:)

குறையொன்றுமில்லை. said...

இதுக்குப்பேருதான் கல்லிடைக்குசும்போ. உனக்குமட்டும் ஒரு ரகசியம், நானும் கல்லிடைக்காரிதான். ஞாபகத்ல இருக்கட்டு. நான்கல்லிடைன்னு தெரிஞ்சோடனே 135 பேர் கல்லிடைக்காரா என்னைதெரியுமோ, உன்னைதெரியுமோன்னு நாவீரப்புரம் தெரு, நா சன்னதி தெரு, நா பாட்டனயினார் தெருன்னு ஏக ஃப்ரெண்ட் தேடர ரிக்வெஸ்ட். ஆனா என் 12 வயசுலயே கல்லிடை வைட்டு ஆத்துக்காரர் வீடு போயிட்டேனா எனக்கு யாரையுமே தெரியலைப்பா.

தக்குடு said...

@ Lakshmi madam - Message noted & :)))

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)