Saturday, April 10, 2010

கணக்கு! பிணக்கு! சுணக்கு!

பத்தாவது வகுப்பு வரைக்கும் வாழ்க்கை எந்த விதமான போராட்டமும் இல்லாமல் போய்க்கொண்டிருந்தது. பதினோராவது வகுப்பில் இருந்து தொடங்கியது போராட்டம். (அய்யையோ! லவ்வெல்லாம் இல்லை)ஆறாவது வகுப்பிலிருந்தே நம்ப மனசு கண்ணம்மா! கண்ணம்மா!னு உருகிய முண்டாசுக் கவியிடம் லயித்து விட்டது. அவரது உபாசனை சித்தி பெற்றதாலோ என்னமோ தெரியவில்லை பத்தாம் வகுப்பிற்கு பிறகு கணக்கு பாடம் வில்லனாய் மாறிவிட்டது.

அதுக்காக நான் எங்க அண்ணன் மாதிரி கணக்குல அடிமுட்டாள் எல்லாம் கிடையாது(கீதா பாட்டி வீட்டுல இன்னிக்கி பால் பாயாசம்தான்!). ரூபாய் எண்ணிக்கை சம்பந்தமான எல்லா கணக்கும் ஒழுங்காக வந்தது. ஆனால் இந்த வகை நுண் கணிதம், தொகை நுண் கணிதம்(integeral calculus) போன்ற பகுதிகள் தலை கீழாக நின்னு பாத்தாலும் கொஞ்சம் கூட மண்டைல ஏறவே இல்லை. வாழ்க்கைக்கு சிறிதும் பயன்படாத பகுதிகள் என்று அந்த பகுதிகளை கண்டாலே எனக்கு எரிச்சலும், கோபமுமாய் வரும்(நம்ப மீராஜாஸ்மின் சொல்லுவது போல,இதெல்லாம் எவன்யா கண்டுபுடுச்சது???). எட்டாம்கிளாஸ் படிக்கர காலத்திலேயே எங்கப்பாட்ட நூறு ரூபாய் கட்டு ஒன்னு வாங்கி அதை சிதறாமல்/பதறாமல் எப்படி எண்ணுவது!னு எல்லாம் சுயஆர்வத்துல கற்றுக்கொண்டேன். எங்க அண்ணா ரூபாய் எண்ணும் அழகை பாத்துண்டே இருக்கலாம். அவன் கைல ஒரு அம்பது தாள் உள்ள ஒரு ரூபாய் கட்டை குடுத்து எண்ணச் சொன்னா போதும், நடுல மூனு நோட்டை கீழே விட்டுவிடுவான். எல்லாம் முடிச்சு நாப்பத்தஞ்சு தாள் இருக்கு!னு கரெக்டா தப்பா சொல்லுவான். நல்ல வேளை இப்பொ அவன் வேலை பார்க்கர(அப்படித்தான் சொல்றான்) கம்பெனியில் சம்பளத்தை பாங்க் அக்கவுண்ட்ல வரவு வைக்கிறார்கள், கவர்ல போட்டு குடுத்தா மூனு நாள் ஆகும் அவன் எண்ணி முடிக்க, மேலும் எங்கிட்ட வந்து, ஒரு நாலாயிரம் ரூபாய் எங்ங்ங்ங்ங்கையோ இடிக்குது மாப்ளெ!னு வேற சொல்லுவான்

இவ்ளோவுக்கும் நான் அக்கவுண்டன்சி, காமர்ஸ் ல எல்லாம் 195, 189 மார்க்(200க்கு) வாங்கிவிடுவேன், ஆனால் இந்த எழவு பிடித்த கணக்குதான் எப்போதும் என்னை பார்த்து கண்ணை அடித்து விட்டுப் போய்விடும். பாஸ் ஆகர்துக்குள்ளையே மேல் மூச்சும் கீழ் மூச்சும் வாங்கும். ஒருவேளை எனக்கு வாய்த்த வாத்தியார்னால கூட இருக்கலாம். (ராமானுஜத்துக்கு ஒன்னு விட்ட மண்ணியோட, மாமா வழி சொந்தம் அவர்) என்னோட கணக்கு வாத்தியார் ஒரு பெரிய கணக்கு மேதைனே சொல்லலாம்(ஆமா, ஒருத்தர் பேசர்து யாருக்கும் சுத்தமா புரியலைனா அவரு மேதை தானே?). அவர் கேள்வி கேட்டு பதில் சொல்லலைனா அவ்ளோதான், குனியச் சொல்லி கும்மிவிடுவார். தவில் வித்வான் 'ஹரித்வாரமங்கலம்'பழனிவேலுவின் ப்ரதம சிஷ்யர் போல, நம்ம முதுகில் கோடையிடியாய் ஒரு தனியாவர்த்தனக் கச்சேரியே நடத்திவிடுவார். ஒருமுறை அவர் வழக்கம் போல கும்முகையில், என்னோட வாயில அடக்கி வச்சுருந்த ஆரஞ்சு மிட்டாய் வெளியே வந்து மொத்த கிளாஸும் 'கொல்'என்று சிரித்தது. ஆரஞ்சு மிட்டாய் போச்சே!னு எனக்கு ரொம்ப வருத்தம்.

அப்படித்தான் ஒரு நாள் கிளாஸுக்குள்ள நுழஞ்சவுடனே போர்டுல போய் 0நு எழுதினார். என்னடா இது?? நம்ப மார்க்கை எதுக்கு இப்படி பப்ளிக்கா எழுதிக் காட்டறார்னு நான் ஆழ்ந்த சிந்தனைல இருந்தேன். சில வினாடிகளில் அவரே தொடர்ந்தார். கிட்டத்தட்ட ஒரு இருபத்தினாலு ஸ்டெப்பு போட்டு முடிச்சு ஒரு கணக்கு கேள்வில போய் முடித்து விட்டு, கையில் மிச்சம் இருந்த சாக்பீஸ் துண்டை,என் பக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்த காட்டுமன்னார்கோவில்காரன் மீது எரிந்தார். அப்போதான் எங்களுக்கு புரிஞ்சது, தலைவர் பதில்லேந்து ஆரம்பிச்சு ‘ரிவர்ஸ்’ கியர் போட்டு அப்படியே back-ல போய் கேள்வில முடிச்சுருக்கார். எங்களுக்கெல்லாம் கேள்விலேந்து ஆரம்பிச்சு பதில்ல போய் முடிச்சாளே ஒன்னும் விளங்காது, இந்த லக்ஷணத்துல பதில்லேந்து ஆரம்பிச்சு கேள்வியா!னு எனக்கு தலை சுத்தத்தொடங்கியது. கேள்வியின் நாயகனே!னு வாத்தியாரை பார்த்து பாடனும் போல இருந்தது, ஆனால் தவில் கச்சேரி நினைவுக்கு வந்ததால் என்னை கட்டுப்படுத்திக்கொண்டேன். என்னோட பக்கத்துல உக்காசுண்டு இருந்த காட்டுமன்னார்கோவில்காரன் என்னைவிட கணக்குல படுமோசம், அவன் உடனே ஆத்திரத்துல அந்த கணக்கு வாத்தியாரை ம.....ரு, தயிரு!னு திட்டி தீத்துட்டான்.(no!....no அக்காவை பத்தியெல்லாம் பேசக்கூடாது!னு நான் அவனை அடக்கினேன்))

மத்த எல்லா சப்ஜெக்டுலையும் 170துக்க்கு மேல மார்க் வாங்கிடுவேன், கணக்கு மட்டும் எப்போதும் ஜம்மு காஷ்மீர் தான்(பார்டர்ல பாஸ்- அதை தான் கொஞ்சம் கெளரவமா சொன்னேன்). குவார்டேலிக்கு தான் ராங்கார்டு கொடுப்பார்கள், அதனால் முதல்ல நடந்த இரண்டு மிட்டேர்ம் டெஸ்டுலையும் வந்த மார்க் எல்லாத்தையும் % லேயே வீட்டுல சொல்லுவேன், கணக்கு மட்டும் வந்த மார்க்கையே அப்படியே மொட்டையா சொல்லிருவேன்.(for eg 75 in maths) நூறுக்கா, இருனூறுக்கானு சொல்ல மாட்டேன்.

குவார்டேலிக்கு கையெழுத்து வாங்க கார்டை அப்பாட்ட நீட்டிய போதுதான் என்னுடைய வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறியது. அப்பாவுக்கு கடுமையான கோபம், உங்கண்ணனுக்கு தான் கணக்குனா கச்சு விஷமா கசக்கும், உனக்குமாடா??னு கேட்டார். முதல்ல கொஞ்சம் வருத்தமாதான் இருந்தது, அப்புறம், நம்ப அப்பா, நம்பளை திட்ரார், இதுல வருத்தப்பட என்ன இருக்கு??னு எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன். அவ்வளவு வருத்ததுக்கு நடுவிலும் எங்க அண்ணனையும் சேர்த்து திட்டியதால் எங்கப்பா மேல எனக்கு கோபமே வரலை. பில்கேட்ஸுக்கும் கணக்குதான் வரலையாம்பா!னு பரிதாபமாக முகத்தை வச்சுண்டு சொல்லுவேன்.

இப்படியே ரெண்டு மூனு தடவை கணக்குல கப்பு எல்லாம் வாங்கி +2 வந்தாச்சு. கல்யாணம் ஆகி புக்காதுக்கு போனதுக்கு அப்புறம் சமையலெல்லாம் பண்ணனுமே!னு நிச்சயதார்தம் ஆன ஒரு பொம்னாட்டி திடீர்னு கவலைப்படுவது போல, +2 பொதுத்தேர்வுல நல்ல மார்க் வாங்கனுமே!னு கவலையெல்லம் எனக்கு வந்தது. பைனல் பரிட்சைக்கு முப்பது நாள் முன்பிலிருந்தே, ஒரு வைராக்யத்தோட இந்த தடவை ஜம்முலேந்து, ஒரு மத்யப்பிரதேஷ் வரைக்குமாவது வந்துடனும்!னு சங்கல்பத்தோட கடம் தட்ட ஆரம்பிச்சேன். அம்பாளோட புண்ணியத்துல(TRC மாமா, பக்கத்துல உக்காந்து பரிட்சை எழுதின பொண்ணானு! எல்லாம் கலாய்க்கக்கூடாது) ஒரு 140 மார்க் கணக்குலயும்,200 மார்க் காமர்ஸ்லையும்,189 மார்க் அக்கவுண்டன்சிலயும், இந்தியப் பொருளாதாரம் அந்த சமயம் உலக அளவில் கொஞ்சம் மந்தமாக இருந்ததால் எக்கனாமிக்ஸ்ல ஒரு 160தும் வாங்கினேன்.

“நீ ஒரு நாளும் கணக்குல பாஸாகப் போவது கிடையாது!”னு என்னொட கணக்கு வாத்தியார் பரிபூர்ணமாக ஆசிர்வாதம் பண்ணின முகூர்த்தம், இன்று நான் சொல்லும் பரிந்துரையை நம்பி மில்லியன் கணக்குல டாலரையும், பவுண்டையும் கொட்டி முதலீடு செய்யர்துக்கு அமெரிக்காகாரனும், லண்டன் துரைகளும்(டுபுக்கு அண்ணாச்சி! நான் உங்களை சொல்லவில்லை,நீங்க ‘கிஸான்விகாஸ்’ பத்திரம்னு எனக்கு தெரியாதா??) தயாராக இருக்கிறார்கள். குலதெய்வம் பெருவேம்புடையார் தான் அவாளையெல்லாம் காப்பாற்ற வேண்டும்.


இப்பொழுதும் அந்த கணக்கு வாத்தியார் ‘ரிவர்ஸ் கியரில்’ அடிக்கடி வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்.

49 comments:

எல் கே said...

//கண்ணம்மா! கண்ணம்மா!னு உருகிய முண்டாசுக் கவியிடம் லயித்து விட்டது.///
நீ படிக்கல அதுக்கு என் அவர இழுக்கற

எல் கே said...

//இன்று நான் சொல்லும் பரிந்துரையை நம்பி மில்லியன் கணக்குல டாலரையும், பவுண்டையும் கொட்டி முதலீடு செய்யர்துக்கு///
நீ எங்க போடற . இந்த பொட்டிதான போட்டு சொல்லுது

ஆயில்யன் said...

கணக்கு பத்தி சொல்லி உம்மையே நீர் டேமேஜ் செஞ்சுக்கிட்டிருக்கீங்களோன்னு நினைச்சுகிட்டு வந்தா பலத்த அடி & டேமேஜ் ---->>> அம்பிக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஆயில்யன் said...

//அய்யையோ! லவ்வெல்லாம் இல்லை///

அட நாங்கதான் கேக்கவேயில்லியே ! [மீ த நாட் இன்சைடு த குதிர்]

ஆயில்யன் said...

//அதுக்காக நான் எங்க அண்ணன் மாதிரி கணக்குல அடிமுட்டாள் எல்லாம் கிடையாது//

வன்மையாக கண்டிக்கிறோம்!

தக்குடுவின் அண்ணன் பேரவை
தோஹா

ஆயில்யன் said...

//தொகைனுன்கணிதம்//

தொகை நுண் கணிதம்ன்னு பிரிச்சு படிச்சா ஈசியா இருக்கு இல்லாட்டி வாயெல்லாம் விண்ணு விண்ணுன்னு வலிக்கிது பாஸ் :(((

மெளலி (மதுரையம்பதி) said...

//இன்று நான் சொல்லும் பரிந்துரையை நம்பி மில்லியன் கணக்குல டாலரையும், பவுண்டையும் கொட்டி முதலீடு செய்யர்துக்கு///
எல்.கே சொல்லியிருப்பதை அப்படியே வழிமொழியறேன்...இப்ப ஏதோ நீங்க போடற மாதிரிச் சொல்றீங்க?. :)

மெளலி (மதுரையம்பதி) said...

// கல்யாணம் ஆகி புக்காதுக்கு போனதுக்கு அப்புறம் சமையலெல்லாம் பண்ணனுமே!னு நிச்சயதார்தம் ஆன ஒரு பொம்னாட்டி திடீர்னு கவலைப்படுவது போல//

ஏனுங்க...எங்க பார்த்தீங்க இதெல்லாம்..:)...முன்ன காலத்துல நடந்ததை எல்லாம் சொல்றீங்களோ?... :)

Ananya Mahadevan said...

//ஆரஞ்சு மிட்டாய் போச்சே!னு எனக்கு ரொம்ப வருத்தம்//அதானேப்பார்த்தேன்!

//நம்ப அப்பா, நம்பளை திட்ரார், இதுல வருத்தப்பட என்ன இருக்கு// ஆஹா ஆஹா, உன்னோட Analytical capabilities ஐ நினைச்சா அப்படியே புல்லரிக்கறது போ! வெக்கம் மானம் சூடு சொரணை.. ம்ஹும்..

ஆராக்கும் சொன்னா இண்டிக்ரேஷன், டிஃபரென்ஸியேஷன் எல்லாம் யூஸ்லெஸ்ன்னு? நீயா நெனைச்சுண்டா என்ன பண்றது?

ஒரு விஷயம் தெரியலைன்னா பஹிரங்கரமா ப்ளாக் போஸ்டு போட்டு பல்பு வாங்கப்டாது கேட்டியா?
நான் நினைச்சேன் உனக்கு மேத்ஸ் மிஸ்ஸா இருக்கும், அதும் குண்டலம் போட்டுண்டு வர்ற மேத்ஸ் மிஸ்ஸை பார்த்துண்டே நீ பாடத்தை கோட்டை விட்டுட்டேன்னு..
ஆனா ஒண்ணு தக்குடு- சேம் பிஞ்ச்! எனக்கும் டிபரென்ஸியேஷன் இண்டெக்ரேஷன்ன்னா அலர்ஜி!

Geetha Sambasivam said...

அதுக்காக நான் எங்க அண்ணன் மாதிரி கணக்குல அடிமுட்டாள் எல்லாம் கிடையாது(கீதா பாட்டி வீட்டுல இன்னிக்கி பால் பாயாசம்தான்!). ரூபாய் எண்ணிக்கை சம்பந்தமான எல்லா கணக்கும் ஒழுங்காக வந்தது. ஆனால் இந்த வகை நுண் கணிதம், தொகை நுண் கணிதம்(integeral calculus) போன்ற பகுதிகள் தலை கீழாக நின்னு பாத்தாலும் கொஞ்சம் கூட மண்டைல ஏறவே இல்லை. வாழ்க்கைக்கு சிறிதும் பயன்படாத பகுதிகள் என்று அந்த பகுதிகளை கண்டாலே எனக்கு எரிச்சலும், கோபமுமாய் வரும்(நம்ப மீராஜாஸ்மின் சொல்லுவது போல,இதெல்லாம் எவன்யா கண்டுபுடுச்சது???). எட்டாம்கிளாஸ் படிக்கர காலத்திலேயே எங்கப்பாட்ட நூறு ரூபாய் கட்டு ஒன்னு வாங்கி அதை சிதறாமல்/பதறாமல் எப்படி எண்ணுவது!னு எல்லாம் சுயஆர்வத்துல கற்றுக்கொண்டேன். எங்க அண்ணா ரூபாய் எண்ணும் அழகை பாத்துண்டே இருக்கலாம். அவன் கைல ஒரு அம்பது தாள் உள்ள ஒரு ரூபாய் கட்டை குடுத்து எண்ணச் சொன்னா போதும், நடுல மூனு நோட்டை கீழே விட்டுவிடுவான். எல்லாம் முடிச்சு நாப்பத்தஞ்சு தாள் இருக்கு!னு கரெக்டா தப்பா சொல்லுவான். நல்ல வேளை இப்பொ அவன் வேலை பார்க்கர(அப்படித்தான் சொல்றான்) கம்பெனியில் சம்பளத்தை பாங்க் அக்கவுண்ட்ல வரவு வைக்கிறார்கள், கவர்ல போட்டு குடுத்தா மூனு நாள் ஆகும் அவன் எண்ணி முடிக்க, மேலும் எங்கிட்ட வந்து, ஒரு நாலாயிரம் ரூபாய் எங்ங்ங்ங்ங்கையோ இடிக்குது மாப்ளெ!னு வேற சொல்லுவான்//அதுக்காக நான் எங்க அண்ணன் மாதிரி கணக்குல அடிமுட்டாள் எல்லாம் கிடையாது(கீதா பாட்டி வீட்டுல இன்னிக்கி பால் பாயாசம்தான்!). ரூபாய் எண்ணிக்கை சம்பந்தமான எல்லா கணக்கும் ஒழுங்காக வந்தது. ஆனால் இந்த வகை நுண் கணிதம், தொகை நுண் கணிதம்(integeral calculus) போன்ற பகுதிகள் தலை கீழாக நின்னு பாத்தாலும் கொஞ்சம் கூட மண்டைல ஏறவே இல்லை. வாழ்க்கைக்கு சிறிதும் பயன்படாத பகுதிகள் என்று அந்த பகுதிகளை கண்டாலே எனக்கு எரிச்சலும், கோபமுமாய் வரும்(நம்ப மீராஜாஸ்மின் சொல்லுவது போல,இதெல்லாம் எவன்யா கண்டுபுடுச்சது???). எட்டாம்கிளாஸ் படிக்கர காலத்திலேயே எங்கப்பாட்ட நூறு ரூபாய் கட்டு ஒன்னு வாங்கி அதை சிதறாமல்/பதறாமல் எப்படி எண்ணுவது!னு எல்லாம் சுயஆர்வத்துல கற்றுக்கொண்டேன். எங்க அண்ணா ரூபாய் எண்ணும் அழகை பாத்துண்டே இருக்கலாம். அவன் கைல ஒரு அம்பது தாள் உள்ள ஒரு ரூபாய் கட்டை குடுத்து எண்ணச் சொன்னா போதும், நடுல மூனு நோட்டை கீழே விட்டுவிடுவான். எல்லாம் முடிச்சு நாப்பத்தஞ்சு தாள் இருக்கு!னு கரெக்டா தப்பா சொல்லுவான். நல்ல வேளை இப்பொ அவன் வேலை பார்க்கர(அப்படித்தான் சொல்றான்) கம்பெனியில் சம்பளத்தை பாங்க் அக்கவுண்ட்ல வரவு வைக்கிறார்கள், கவர்ல போட்டு குடுத்தா மூனு நாள் ஆகும் அவன் எண்ணி முடிக்க, மேலும் எங்கிட்ட வந்து, ஒரு நாலாயிரம் ரூபாய் எங்ங்ங்ங்ங்கையோ இடிக்குது மாப்ளெ!னு வேற சொல்லுவான்

hihihiஇந்த பாரா மொத்தமும் ஹைலைட் செய்திருக்கவேண்டாமோ?> அருமையான பொன்னெழுத்துக்களால் பொறிக்கவேண்டிய வரிகள்.

Geetha Sambasivam said...

இவ்ளோவுக்கும் நான் அக்கவுண்டன்சி, காமர்ஸ் ல எல்லாம் 195, 189 மார்க்(200க்கு) வாங்கிவிடுவேன், ஆனால் இந்த எழவு பிடித்த கணக்குதான் எப்போதும் என்னை பார்த்து கண்ணை அடித்து விட்டுப் போய்விடும்//

ஹிஹிஹி, சேம் ப்ளட், எனக்கும் கணக்குக்கும் ஏழாம் பொருத்தம் நானும் அதான் கணக்கு முக்கியப் பாடமா எடுத்துக்காம, அக்கவுண்டன்சி, காமர்ஸ், எகனாமிக்ஸ் எடுத்துண்டேன். அதிலே எல்லாம் நல்ல மார்க் வந்துடும், வெறும் ஜெனரல் மாதமாடிக்ஸ் அதிலே போய் மார்க் போட இந்தக் கணக்கு டீச்சருக்குக் கசக்கும்! :P:P:P:P ம்ம்ம்ம் எல்லாம் நேரம்!

Geetha Sambasivam said...

தக்குடு, தொடர

soma said...

ஒருவேளை எனக்கு வாய்த்த வாத்தியார்னால கூட இருக்கலாம்
nee padikama ponathukku vatthiyara korai solrereyyeyபில்கேட்ஸுக்கும் கணக்குதான் வரலையாம்பா enpa avaraium onnium onnu serkarey? ippa avaroda potti podumya.

அண்ணாமலையான் said...

புல்லரிச்சு போச்சு...

Chitra said...

//////கரெக்டா தப்பா சொல்லுவான். நல்ல வேளை இப்பொ அவன் வேலை பார்க்கர(அப்படித்தான் சொல்றான்) கம்பெனியில் சம்பளத்தை பாங்க் அக்கவுண்ட்ல வரவு வைக்கிறார்கள், கவர்ல போட்டு குடுத்தா மூனு நாள் ஆகும் அவன் எண்ணி முடிக்க, மேலும் எங்கிட்ட வந்து, ஒரு நாலாயிரம் ரூபாய் எங்ங்ங்ங்ங்கையோ இடிக்குது மாப்ளெ!னு வேற சொல்லுவான்/////



........உங்கள் அண்ணனைப் பற்றி தப்பா, கரக்டா சொல்லிட்டீங்க..... ஹா,ஹா,ஹா,ஹா......
கணக்குக்கும் உங்களுக்கும் உள்ள பிணக்கத்தை நகைச்சுவையுடன் நீங்கள் சொல்லி இருப்பது, கலக்கல்!
பாராட்டுக்கள்!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//(நம்ப மீராஜாஸ்மின் சொல்லுவது போல,இதெல்லாம் எவன்யா கண்டுபுடுச்சது???//

உவமை கூட நடிகை சொன்னது தானா? ஏன்பா இப்படி?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//ஆயில்யன் said...
கணக்கு பத்தி சொல்லி உம்மையே நீர் டேமேஜ் செஞ்சுக்கிட்டிருக்கீங்களோன்னு நினைச்சுகிட்டு வந்தா பலத்த அடி & டேமேஜ் ---->>> அம்பிக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகனும்.... நீங்க பதிவர் அம்பியோட பிரதர்ஆ. ஏன்பா குடும்பத்துல ஒருத்தர் பாக்கி இல்லாம எல்லாரும் ப்ளாக் வெச்சிருக்கேளா?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//இவ்ளோவுக்கும் நான் அக்கவுண்டன்சி, காமர்ஸ் ல எல்லாம் 195, 189 மார்க்(200க்கு) வாங்கிவிடுவேன், ஆனால் இந்த எழவு பிடித்த கணக்குதான் எப்போதும் என்னை பார்த்து கண்ணை அடித்து விட்டுப் போய்விடும். பாஸ் ஆகர்துக்குள்ளையே மேல் மூச்சும் கீழ் மூச்சும் வாங்கும்//

sameblood . இதை சொல்லியே திட்டு வேற விழும். அதுல வாங்கற இல்ல இதுல வாங்கமுடியாதானு. நாம என்னமோ ஆசையா கம்மியா வாங்கராப்ள

M.Rishan Shareef said...

:-)
அருமை !

Porkodi (பொற்கொடி) said...

ipodhaiku attendance. meedhi gummi nalaiku/monday :P

from the title, kanaku na ungluku sunaka? hahaha enaku alwa sapidra madhri :D adhukellam mandaila masala/moolai ellam venume thakkudu :P

Vijay said...

//தலை கீழாக நின்னு பாத்தாலும் கொஞ்சம் கூட மண்டைல ஏறவே இல்லை.//

ஓ, அப்போதான் புக் தலை கிட்ட வரும்ன்னு முடிவு பண்ணீங்களா?

Vijay said...

//கவர்ல போட்டு குடுத்தா மூனு நாள் ஆகும் அவன் எண்ணி முடிக்க,//

ஆத்தாடி, அவ்ளோவா குடுக்கறாங்க? என்னையும் சேர்த்து விட்டுருங்கபா.

Vijay said...

//ஆரஞ்சு மிட்டாய் போச்சே!னு எனக்கு ரொம்ப வருத்தம்//

வடை போச்சே!!!!

Vijay said...

//கையில் மிச்சம் இருந்த சாக்பீஸ் துண்டை,என் பக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்த காட்டுமன்னார்கோவில்காரன் மீது எரிந்தார்.//

அட பாவிங்களா!!!!

Vijay said...

//நிச்சயதார்தம் ஆன ஒரு பொம்னாட்டி//

பொம்னாட்டி? கல்யாணம் ஆக போற பொண்ணு பொம்னாட்டியா? இருக்கு..இருக்கு...சீக்கிறம் சுளுக்கு.

My days(Gops) said...

//எங்கப்பாட்ட நூறு ரூபாய் கட்டு ஒன்னு வாங்கி அதை சிதறாமல்/பதறாமல் எப்படி எண்ணுவது!னு எல்லாம் சுயஆர்வத்துல கற்றுக்கொண்டேன்.//

adhula evlo aaatai'ah poteenganu naann ketkala brother ipavey solliten :)

My days(Gops) said...

//ஒரு 140 மார்க் கணக்குலயும்,//
:o idhu mattum eppadi? tamil padathula vara hero maadhiri, running race la starting'la namma hero sir, kaal thadukki (thakkudu ila) keeley vidhundhu appuram pakkathula nikkira figure kannula thanni'ah paarthadhum oru vegam vivegam ilaamah avaruku vandhu first prize ah 15meter gap'la jeikira maadhiri,

eppadi sir ippadi? avvvvvvvvv.. nalla solluraangai ah detail'ah

My days(Gops) said...

beradher, edhu eppadioh , kanakkula thaan figure ah vuttuteenga aarambathula, life'lai aachum figure'ngala correct ah kanakku panniduveenganu oru nambikadi oda ungaluku oru vaalthu solli, apeeet aagikiren :)

ஷைலஜா said...

//
அதுக்காக நான் எங்க அண்ணன் மாதிரி கணக்குல அடிமுட்டாள் எல்லாம் கிடையாது...///


இதை எப்படி கேசரிதாஸ் பொறுத்துக்கொண்டார்?:):)


////நீ ஒரு நாளும் கணக்குல பாஸாகப் போவது கிடையாது!”னு என்னொட கணக்கு வாத்தியார் பரிபூர்ணமாக ஆசிர்வாதம் பண்ணின முகூர்த்தம், இன்று நான் சொல்லும் பரிந்துரையை நம்பி மில்லியன் கணக்குல டாலரையும், பவுண்டையும் கொட்டி முதலீடு செய்யர்துக்கு அமெரிக்காகாரனும், லண்டன் துரைகளும்(டுபுக்கு அண்ணாச்சி! நான் உங்களை சொல்லவில்லை,நீங்க ‘கிஸான்விகாஸ்’ பத்திரம்னு எனக்கு தெரியாதா??) தயாராக இருக்கிறார்கள்./////



ஓ அவ்ளோ பெரியாளா கன்ஸ்! சொல்லவே இல்ல... :)


//குலதெய்வம் பெருவேம்புடையார் தான் அவாளையெல்லாம் காப்பாற்ற வேண்டும்.//////

கண்ஸ்! காமெடி நல்லாவர்து உனக்கு(ம்). பாராட்டுக்கள்!

மங்குனி அமைச்சர் said...

//ரூபாய் எண்ணிக்கை சம்பந்தமான எல்லா கணக்கும் ஒழுங்காக வந்தது. ஆனால் இந்த வகை நுண் கணிதம், தொகை நுண் கணிதம்(integeral calculus) போன்ற பகுதிகள் தலை கீழாக நின்னு பாத்தாலும் கொஞ்சம் கூட மண்டைல ஏறவே இல்லை.///


சேம் பிளட்

sriram said...

தக்குடு, நான் கொஞ்சம் Different, எனக்கு நல்லா வந்த ஒரே சப்ஜெக்ட் கணக்குதான், Integration நல்லாவே வரும். நெறைய பேருக்கு அலர்ஜியான அல்ஜீப்ராதான் என்னுடைய favorite. ஆன்லைன் டியூஷன் வேணும்னா சொல்லுங்க.

ஆனாலும் அம்பிய இவ்வளவு கலாய்ச்சிருக்க வேணாம், பாவம்..

இதுக்கு அம்பியிடமிருந்து “எதிர்வினை” பதிவு எதிர்பார்க்கிறேன்.. :) (ஐயா இந்த வாரம் ஜாலியா பொழுது போகும்)

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

தக்குடு said...

@ LK - பாரதிக்கும் கணக்கு வராது தெரியுமா உமக்கு??..:)

ஹலோ LK, நாங்க சொன்னதுக்கு அப்பரம்தான் பொட்டி வேலை பாக்கும் தெரியுமா??...:) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

@ ஆயிலு - ஆசைதான்யா உமக்கு!!..:)

தக்குடு அண்னன் பேரவை-நு எல்லாரும் வாசிங்கப்பா!..:) கருத்துக்கு நன்றி ஆயில்யன்.

@ ம'தி அண்ணா - LK-க்கு சொன்ன பதில்தான் உங்களுக்கும்...;)

ஹலோ, மகளிர் அணி தயவுலதான் கடை ஓடிகிட்டு இருக்கு, அதனால கண்டுக்காதீங்கோ!...:) கருத்துக்கு நன்றி.

@ அனன்யா அக்கா - மிஸ்-செல்லாம் ஒன்னும் இல்லை, 'மைக்டைசன்' மாதிரி ஒரு பயில்வாந்தான் கணக்கு வாத்தியார்...:( உங்களுக்கும் கணக்கு வராதுன்னு எனக்கு தெரியும்...:) கருத்துக்கு நன்றி

@ கீதா பாட்டி - நீங்க இந்த போஸ்டுக்கு கமண்டுவேள்னு எனக்கு தெரியும்....:) //வெறும் ஜெனரல் மாதமாடிக்ஸ் அதிலே போய் மார்க் போட இந்தக் கணக்கு டீச்சருக்குக் கசக்கும்! ://எண்பது வருஷம் முன்னாடியே அப்படிதான் இருந்ததா??...:)கருத்துக்கு நன்றி

@ PKKS - வாங்க PKKS, பில்கேட்ஸ் ரொம்ப கெஞ்சி கேட்டுகிட்டதால் அவரோட போட்டி போடுவது கிடையாது...;)கருத்துக்கு நன்றி

@ மலை வாத்தியார் - எல்லா வாத்தியாரும் உங்களை மாதிரி இருக்க முடியுமா??...:)கருத்துக்கு நன்றி

@ சித்ரா அக்கா - 'ராணி கிரீடம்' விருது வாங்கின நம்ப ஊர் அக்காவுக்கு ஒரு ஜோடா உடைச்சு கொண்டுவாங்கப்பா!...:) நன்றி

தக்குடு said...

@ அடப்பாவி - நல்லது யாரு சொன்னாலும் நாம எடுத்துக்கனும் அதுவும் மீராஜாஸ்மின் சொன்னா விடமுடியுமா??..:)

// நீங்க பதிவர் அம்பியோட பிரதர்ஆ//ஹை இங்க பாருடா! இப்படியெல்லாம் தெரியாத மாதிரி நடிச்சா நீங்க 'அப்பாவி'னு நாங்க நம்பிருவோமாக்கும்??...:)

//இதை சொல்லியே திட்டு வேற விழும். //சாதனையாளர்கள் வாழ்க்கைல இதெல்லாம் ஜகஜம்தான் என்ன பண்ண முடியும்!...:)

@ ஷெரீப் - முதல் வருகைக்கு நன்றி நண்பரே!

@ கேடி - அதானே! ஆபீஸ்ல போய் ப்ளாக் படிச்சாதானே ஒரு சுவாரசியம்...;) மெசின் மாதிரி மண்டை உள்ள ஆளுக்குதான் கணக்கு வரும், நாங்க எல்லாம் கலைதிறன் கொண்ட படைப்பாளிகள்...:)

@ விஜய் அண்ணா - எல்லாம் ஒரு ரூபாய் நோட்டு பரவாயில்லையா??...:)

//இருக்கு..இருக்கு...சீக்கிறம் சுளுக்கு.//அடி பலமா இருக்கும் போலருக்கே??..:)

@ கோப்ஸ் - ஆட்டையை போட்டா எங்கப்பா பின்னிடுவார்.

கரெக்டுபா, ஒரு பிகர்தான் எனக்கு புரியரமாதிரி கணக்கு சொல்லி குடுத்தது..;) வாழ்த்துக்கு நன்றி! அப்பரம் நீங்க அந்த பொண்ணுகூட பேசினீங்களா இல்லையா??...:)

@ ஷைலஜா அக்கா - உண்மையை பொறுத்துதானே ஆகனும்...:)

//ஓ அவ்ளோ பெரியாளா //எங்கள் இலக்கியபீடமே! உங்க அளவுக்கு எல்லாம் பெரீரீரீய ஆளு இல்லைப்பா!!!!..:) வாழ்த்துக்கு நன்றி!

@ மங்குனி அமைச்சர் - கககபோ அமைச்சரே! முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்னி!

@ பாஸ்டன் நாட்டாமை - நாங்க அக்கவுன்டன்சியை வச்சே தனியாவர்த்தனக் கச்சேரி நடத்தி பொலச்சுக்குவோம்!...:) எதிர்வினை பதிவு வந்துக்கு அப்பரம் நீங்க கையில சொம்போட வந்து பஞ்சாயத்து பண்ணலாம்னு
ரெடியா இருக்கர்தும் எனக்கு தெரியும்....:)

vgr said...

Very funny!

பித்தனின் வாக்கு said...

அச்சு அசல் என் கதையை எழுதி விட்டீர்கள். நானும் பத்தாம் கிளாஸ் வரைக்கும் நல்லாத்தான் போச்சு. அதுக்கு அப்புறம் பிளஸ் ஒன்னில் கணக்கு + சயின்ஸ் எடுத்து கணக்கில் பெயிலான ஹீரோ. இப்ப நான் ஒரு நிறுவனத்தின் முது நிலை நிதி அதிகாரி. இன்னேரு நிறுவனத்தின் நிதி இயக்குனர். இது தான் காலக் கொடுமை என்பது.

துபாய் ராஜா said...

தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு மற்றும் சித்திரை விசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Madhuram said...

Hi, I came here from Dubuku's blog. Unga comments ellam adhula padichirukken, interestinga irukkum. This post was so hilarious. I was able to relate to this post so much because I too was not good in Maths.

Porkodi (பொற்கொடி) said...

//ஆறாவது வகுப்பிலிருந்தே நம்ப மனசு கண்ணம்மா! கண்ணம்மா!னு உருகிய முண்டாசுக் கவியிடம் லயித்து விட்டது. //

இங்க ஆரம்பிச்ச சிரிப்பு..

Porkodi (பொற்கொடி) said...

//நம்பி மில்லியன் கணக்குல டாலரையும், பவுண்டையும் கொட்டி முதலீடு செய்யர்துக்கு அமெரிக்காகாரனும், லண்டன் துரைகளும்//

இங்க வரை தொடர்ந்தது. :)

Porkodi (பொற்கொடி) said...

ஆனா அதுக்கு அடுத்த வரில எங்க சூப்பர்ஸ்டார் வ‌ருங்கால முதல்வர் டுபுக்கை வம்புக்கு இழுத்ததை நான் கன்னாபின்னாவென கண்டிக்கிறேன். உங்க சொந்தம்னு எல்லம் சொல்லி எஸ்கேப் ஆவ முடியாது, அவரு பொது சொத்து ஆயிட்டாருல்லே? :P

தக்குடு said...

@ Vgr - முதல் வருகைக்கு நன்னிஹை!

@ பித்தனின் வாக்கு - வாங்க சார், நம்பள மாதிரி பெரிய ஆளுங்களுக்கே கணக்குதான் வராது, இப்ப என்ன கப்பலா கவுந்து போச்சு??? அடிக்கடி வந்து போகவும்...:)

@ துபாய் ராஜா - வாங்க ராஜா, நம்ப வீட்ல உள்ளவங்களுக்கும் என்னுடைய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!( நம்ப ஊர்காரர், அந்த உரிமைலதான் நம்ப வீட்ல!னு சொன்னேன்)

@ மதுரம் - வாங்க மேடம், ரொம்ப சந்தோஷம்! நேரம் கிடைக்கும்போது இந்த குழந்தையோட(me only) கடை பக்கமும் வந்து போகவும்...;)

@ கேடி - வாங்க மேடம்! தங்கள் சந்தோஷத்திற்கு நன்னிஹை! டுபுக்கு அண்ணாச்சியை பப்ளிக் ப்ராப்பர்டியாவே ஆக்கியாச்சா??...:)LOL

vetti said...

sorry for the delayed comment....enakkum kanakku-nna semma allergy...college 2nd year-la kooda Maths-la nalla mark vaangalai-nnaa paarungalen...nalla velaiya adhunaala periyya baadhippu edhuvum illa vazhkkaiyila...rettaivaals-ku eppadi solla poren-nu dhaan theriyalail..

Raga said...

ur analogies r awesome! ungaloda appa unga annaniyum serthu thitinadhale neenga sandhosha patingale...adhu super :D... indhu annanuku theriyuma ???

அமுதா கிருஷ்ணா said...

/அப்படித்தான் ஒரு நாள் கிளாஸுக்குள்ள நுழஞ்சவுடனே போர்டுல போய் 0நு எழுதினார். என்னடா இது?? நம்ப மார்க்கை எதுக்கு இப்படி பப்ளிக்கா எழுதிக் காட்டறார்னு/

சூப்பரா எழுதி இருக்க பாண்டி...

தக்குடு said...

@ வெட்டி - சாரி பா, உங்க கமண்ட்ஸ் நான் பாக்கலை, கணக்கு ஒவுட் ஆன கோஷ்டி ஜாஸ்தியா இருக்கும் போலருக்கே??...:)

@ ராகா - ரொம்ப சந்தோஷம்!...:)

@ அமுதா அக்கா - வருகைக்கும் கருத்துக்கும் நன்னிஹை!...:)

mightymaverick said...

உனக்கும் உங்க அண்ணனுக்கும் கணக்கு பாடம் சரியாய் வராது; ஆனால் கணக்கு பண்ணுறது நல்லாவே செய்வீங்கன்னு ஏன்டா இப்படி தண்டோரா???

தக்குடு said...

@ வித்யாசமான கடவுள் - yaaa, yaaa...:)

Gayathri said...

பில்கேட்ஸுக்கும் கணக்குதான் வரலையாம்பா!னு பரிதாபமாக முகத்தை வச்சுண்டு சொல்லுவேன்.

வாவ் இப்படி ஒருவிஷயம் எனக்கு தெரியாம போச்சே.சரி இனி நீங்க நானு பில்கேட்ஸ் லாம் ஒரே செட்டா ஜாலி ROFL hahaha...

தக்குடு said...

@ Gayathri - yaa yaa, namba yellam oreyy setuu...:)

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)