Showing posts with label பெண்களூர். Show all posts
Showing posts with label பெண்களூர். Show all posts

Thursday, March 24, 2016

பெண்களூர் டாப்ஸ்

ஹும்ம்ம்ம்! அது ஒரு காலம்! எம் ஜீ ரோட்ல இருக்கும் ஒரு பெரிய கம்பெனில வேலைக்கு சேர்ந்து அப்ப தான் டிரெயினிங் முடிஞ்சு ஒரு டீம்ல போட்டு இருந்தா. இந்த மாதிரி கம்பெனிகள்ல எல்லாமே ஒரு விஷயம் பொதுவா இருக்கும். 20 மாடி கட்டிடத்துல ஒவ்வொரு தளத்துலையும் நடு ஹால்ல 8 கடிகாரம் மாட்டி வச்சுருப்பா ஒவ்வொரு கடிகாரத்துக்கு கீழயும் நியூயார்க்,சிங்கப்பூர்,ஜப்பான்,ஆஸ்திரேலியா,துபாய், லண்டன்னு எழுதி வச்சுருப்பா. என்னை மாதிரி புதுசா வேலைக்கு சேர்ந்த அப்ரண்டிசுகளும் அடேங்கப்பா! எல்லா ஊர்லையும் நம்ப கம்பெனிக்கு பிராஞ்ச் இருக்கு போல! பெரிய்ய்ய்ய கம்பெனிதான் போலருக்கு!னு பெருமைக்கு காலரை தூக்கி விட்டுப்போம். உண்மை என்னான்னா அமெரிக்கால ஒபாமா எழுந்தாச்சா,லண்டன்ல துரைமார்கள் இப்ப பல்லு விளக்கியாச்சா? துபாய்ல சேக்கு கக்கா போயாச்சா?னு தெரிஞ்சுக்கர்துக்காகதான் அந்த எட்டு கடிகாரம்னு ஆறு மாசம் கழிச்சுதான் புரிஞ்சது. இருந்தாலும் ஊருக்கு போகும் போது இப்ப லண்டன்ல சாயங்காலம் காபி குடிச்சுட்டு பக்ஷணம் திண்கர சமயம் தெரியுமா?னு பெருமை பீத்தர்துக்கு உபகாரமா இருக்கும். 



இத்தனை நாட்டு பகல் ராத்திரினு நாம மாடா உழைச்சாலும் வருஷ கடைசில அப்ரைசல்ல, ‘குளோபல் எக்கனாமிக் டிப்ரஷன்! ஆன்சைட் மேனேஜருக்கு உக்காரும் இடத்துல ஆப்ரேஷன்!’னு சொல்லி தேங்காமூடியும் ஒரு தொண்னைல கொண்டைகடலை சுண்டலும் கைல குடுத்து ‘சர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம்!’னு சொல்லி அனுப்பிடுவா. நாமலும் ‘போன தடவை வெறும் தேங்காமூடி தான் இந்த தடவை பரவாயில்லை சுண்டலும் தந்தாளே!’னு மனசை தேத்திண்டு மறுபடியும் லண்டன் துரைக்கு How can i help you? மெயில் அனுப்பி விசுவாசத்தை காட்ட ஆரம்பிச்சுடுவோம். ‘ஹோம்வொர்க் சீக்கரம் எழுதி முடிச்சா ஐஸ் வாங்கி குடுப்பேன்!’னு ஸ்கூல் குழந்தேளை ஏமாத்தர மாதிரி வருஷ கடைசில ஆபிஸ்ல இருக்கும் எல்லா சமத்துகளையும் ஒரு பஸ்ல ஏத்தி ஊருக்கு ஒதுக்கு புறமா ஓசூர் போற வழில இருக்கும் ஒரு ரிசார்டுல கொண்டு போய் இறக்குவா. அந்த ரிசார்ட்டுல மீனா வந்து “சரக்கு வச்சுருக்கேன்! இறக்கி வச்சுருக்கேன்!”னு பாடிண்டே ஆடாதது ஒன்னுதான் பாக்கினு சொல்லும்படியா எல்லா வசதியும் பண்ணி வச்சுருப்பா. ஒரு பெரிய்ய்ய்ய அண்டா நிறைய ஐஸ்கட்டியை போட்டு அது நிறையா பீர் பாட்டிலை ரொப்பி வச்சுருப்பா. எங்க ஆபிஸ் பார்ட்டில முக்கால் காலுக்கு ஜீன்ஸ் டவுசர் போட்ட ஒரு டில்லி பிகர் தான் முதல்ல பாட்டிலை எடுத்து ஒரே மடக்குல பானகம் குடிக்கர மாதிரி குடிச்சு ஆரம்பிச்சு வச்சது. மத்தவா எல்லாரும் உடனே ஜோதில ஐக்கியம் ஆக ஆரம்பிச்சா, என்னை மாதிரி கோஷ்டிகள் மேங்கோ ஜூஸும் லேஸ் சிப்ஸும் நொசுக்கிண்டே டில்லி பிகர் இதுவரைக்கும் எத்தனை பாட்டில் உள்ள தள்ளினானு உக்காந்து கணக்கு போட்டுண்டு இருந்தோம்.                                                                                                                                         
இந்த மாதிரி கலகலப்பா பொழுது கழிஞ்சுண்டு இருக்கும் போது ஒரு நாள் எங்க டீம்ல இருந்த ஒரு ஆந்திரா அக்காவுக்கு அன்னிக்கி பொறந்த நாள்னு சொல்லி டீம்ல இருந்த எல்லார்கிட்டையும் தலைக்கு 100 ரூவா வசூல் பண்ணிண்டு இருந்தா. தண்டல் மாதிரி கட்டாயமா குடுத்தே ஆகனும் சுருக்கமா சொல்லணும்னா வட்டியில்லாத கடன். நம்மோட பொறந்த நாள் அன்னிக்கு இதே மாதிரி ரூவா போட்டு சட்டையோ டீ சர்டோ எடுத்து தருவா. எங்க டீம்ல இருந்த ஒரு அக்காவும் பக்கத்து டீம்ல இருந்த ஒரு பாலக்காடு அக்காவும் சேர்ந்து கமர்ஷியல் தெருவுக்கு போய் ஒரு டாப்ஸ் எடுத்துண்டு வந்து குடுத்தா. ஆந்திரா அக்காவும் உடனே போய் புது டாப்ஸை போட்டுண்டு வந்து பெருமையா நின்னா. வழக்கம் போல வாயை வச்சுண்டு சும்மா இருக்காம “எங்க ஊர் ரைஸ்மில்லுல ஈரமாவு மிஷினுக்கு மேல கட்டிதொங்க விட்ட துணி மாதிரி இருக்கு இதுக்கு போய் 600 ரூவாயா!”னு கேட்டுட்டேன். அவ்வளவுதான் அந்த ஆந்திரா அக்கா திரும்ப போய் டாப்ஸை கவர்ல போட்டு கொண்டு வந்து பாலக்காடு கைல குடுத்து ‘எனக்கு இது வேண்டாம் வேற மாத்தி குடுங்கோ!’னு சொல்ல மொத்த அக்காக்களோட கோவமும் என் மேல திரும்பிடுத்து. ‘இந்த பட்ஜெட்டுக்குள்ள அப்பிடி என்னதான் இவன் எடுக்கறான்னு பாப்போமே!’னு சொல்லிண்டே என்னை இழுத்துண்டு போய் ஒரு ஆட்டோல ஏத்தி ரெண்டு பக்கமும் ரெண்டு பேர் தப்பிக்க முடியாம உக்காந்துண்டு துணி வாங்கின கடைக்கு கூட்டிண்டு போயிட்டா.



Fab india அப்பிடிங்கர அந்த கடைல காட்டன் டாப்ஸ் செக்ஷன்ல போய் தோண்டி துளாவ ஆரம்பிச்சேன். ஒரு கட்டத்துக்கு மேல அந்த சேல்ஸ்மேனுக்கு பொறுமை போய் இந்த அஞ்சு அலமார் முழுசும் நீங்க சொன்னது தான்! எடுத்துண்டு தொலைங்கோ!னு சொல்லிட்டு போனார். எனக்கு ஒரு பக்கம் பகீர் பகீர்னு இருந்தது. எங்க ஊர்ல தெருவுக்கு 10 பேர் பெண்களூர்ல தான் வேலை பாக்கரா. இவாளை பாக்கர்துக்கு வரும் அவாளோட அப்பா அம்மா பக்கத்து தெருல இருக்கும் பஞ்சமுக ஆஞ்சனேயரை சேவிச்சுண்டு சும்மா இருக்காம ரோட்ல தான் எங்கையாவது லாந்திண்டு இருப்பா. அவா கண்ணுல டாப்ஸும் கையுமா நான் மாட்டினேன்னா அதோட ஜோலி முடிஞ்சது. ஊருக்கு STD போட்டு “ஓஓஓ! விஷயம் தெரியுமாடி ! நம்ப தக்குடு பெண்களூர்ல யாரோ ஒரு பொண்ணு கூட கையை பிடிச்சுண்டு சுத்திண்டு இருக்கான். அந்த பொண்ணும் சாணா சுருணை மாதிரி ஒரு டிரெஸ் போட்டுண்டு இவன் மேல ஈசிண்டே இருந்தா!”னு ஒன்னுக்கு பத்தா கொளுத்தி போட்டுருவா. இந்த விஷயம் ஒவ்வொரு மாமியோட வாய் வழியா எங்க அம்மாகிட்ட போகும் போது “அவனுக்கு கல்யாணமே ஆயிடுத்தாமே!!” அப்பிடிங்கர நிலைமைல வந்து நிக்கும். இந்த பதட்டத்துக்கு நடுல ஆந்திரா அக்காவுக்கு சூப்பர் டிசைன்ல ஒரு டாப்ஸ் எடுத்து முடிச்சுட்டு திரும்பினா அங்க ஒரு காஜல் அகர்வால் காட்டன் டாப்ஸை பத்தி ஒரு காட்டான் கிட்ட கேட்டுண்டு இருந்தா. அவன் எல்லாத்துக்கும் போனை பாத்துண்டே ‘டிக்கே! டிக்கே!’னு சொல்லிண்டு இருந்தான்.

அவளுக்கும் நான் தேடின குமியலுக்கு நடுல இருந்து ஒரு பிங்க் கலரை எடுத்து குடுத்து உபகாரம் பண்ணும்படியா ஆயிடுத்து. சேல்ஸ்மேன் கிட்ட  “நெக்ஸ்ட் நைட்டி தேக்னா சாயே!”னு காஜல் அகர்வால் சொல்லவும் ‘ஆத்தாடி’னு ஓடியே வந்துட்டேன். அதுக்கு அப்புறம் மூனு வருஷத்துக்கு டீம்ல/ பக்கத்து டீம்ல யாருக்கு பொறந்த நாள்னாலும் டாப்ஸ் எடுக்கர செலக்ஷன் கமிட்டில நிரந்தரமா போட்டு சாகடிச்சா. போன வாரம் தங்கமணிக்கு இங்க இருக்கும் ஒரு மால்ல டிரெஸ் எடுத்துண்டு இருக்கும் போது “உங்களுக்கு டாப்ஸை பத்தி என்ன தெரியும்?”னு ஒரு கேள்வி கேட்கவும் இவ்ளோ விஷயம் ஞாபகம் வந்துடுத்து. ஹும்ம்ம்ம்! அது ஒரு காலம்!............

Thursday, July 14, 2011

கண்டக்டர்


வரலெக்ஷ்மி பூஜை ஸ்பெஷல் போஸ்ட் சுந்தரி உம்மாச்சி ப்ளாக்ல படிக்க தவறாதீகள்!!


Part 1 Part 2

பெண்களூர்ல நாங்க தங்கி இருந்த வீட்டை சுத்தி நாலு நாலு சப்பாத்தி பிகர்களா சேர்ந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தா. அதுவும் இல்லைனா 10 - 12 பிகர்களை உள்ளடக்கிய பேயிங் கெஸ்ட்டா இருக்கும். பொறாமை பிடிச்ச சில பேர் நாங்க தான் இதுக்கு நடுல தங்கினோம்னு மாத்தியும் சொல்லர்து உண்டு. எங்களோடுது வீடுனு சொல்லர்தை விட மொட்டை மாடில வடிவமைக்கப்பட்ட அழகான கிளி கூண்டுனு சொல்லலாம். வீட்டோட சொந்தக்காரர் ரெட்டிகாரு! ஒன்னாம் தேதிலேந்து அஞ்சாம் தேதிக்கு உள்ள ஏழுகுண்டலவாடுவை பாத்துட்டு வந்து நமக்கு லட்டு ப்ரசாதமும் தருவார். திருப்பதில கோஷம் போடற மாதியே எங்களையும் பக்திபரவசத்தோட கூப்பிடுவார். எங்க அண்ணா பேரையும் என் பேரையும் முழுசா கூப்பிடர்துல அவருக்கு சொல்லமுடியாத ஆனந்தம்.

அதுக்காக வாடைகையை கம்மி பண்ணிடலை, எப்போதும் எங்க அண்ணாவுக்கு விண்டு குடுக்கும் லட்டுல கூட கொஞ்சம் லட்டு கிட்டித்து அவ்வளவுதான்!. ரெட்டி எப்போதுமே துட்டு விஷயத்துல ரொம்ப கெட்டி. வாரக் கடைசில எங்களுக்கு ஒரே போக்கிடம் பக்கத்துல இருந்த போஃரம் மால் தான். போகும் போது நிச்சயமா எங்க அண்ணா நடத்தி தான் கூட்டிண்டு போவான். திரும்பி வரும் போது சில சமயம் நல்ல மனசு இருந்தா பஸ்ல ஏறுவான். ஆனா அந்த ஊர்ல நடந்து போகர்தும் ஒரு தனி சுகம் தான் தெரியுமோ! அந்த ஊர்ல தொடர்ந்து பத்து நிமிஷம் நடந்தேள்னா நிச்சயமா ஒரு பார்க் வந்துடும். எங்க ஆத்துலேந்து நாங்க நடந்து போகும் முப்பது நிமிஷத்துக்குள்ள இரண்டு பார்க் வரும்னா பாருங்கோளேன். ‘மாப்ளே! மாப்ளே!’னு இரண்டு பேரும் மாறி மாறி பேசிண்டே நடந்துடுவோம்.

அவா ஊர்ல சாயங்கால சமயம் நாம மணி பாக்கர்துக்கு கடிகாரத்தை பாக்கனுங்கர அவசியமே இல்லை. பார்க்ல இருக்கரவா உக்காசுண்டு இருக்கும் பொஷிஷனை வெச்சே கண்டு பிடிச்சுடலாம். ரோட்லேந்து பாத்தேள்னா பார்க்ல இருக்கும் சிமெண்ட் சார்ல ஜோடிகள் கலகலனு சிரிச்சு பேசிண்டு இருந்தா அஞ்சரை மணினு அர்த்தம். ஆறு மணினா பையன் பொண்ணோட கையை புடுச்சுண்டு ஜோசியம் சொல்லிண்டு இருப்பான். ஒருத்தர் மடில ஒருத்தர் தலை வெச்சு தாசுண்டாச்சுன்னா ஆறறை மணி ஆயாச்சுனு அர்த்தம். ‘அதுக்கப்புறம்! அதுக்கப்புறம்!’னு ஏழு மணியை பாக்கர்த்துக்கு எல்லாரும் நாக்கை சப்பு கொட்டாதீங்கோ! ஏன்னா ஏழு மணிக்கு அந்த ஜோடி கிளம்பி போய் அடுத்த ஜோடி வந்துடும். "ஹே தக்குடு! இதை எல்லாம் எதுக்கு நீ பாத்துண்டு இருந்தாய்?"னு சிரிக்காதீங்கோ! எதிர்காலத்துல பொதுஅறிவு சம்பந்தமா எழுதனுமேங்கர கடமை உணர்ச்சிதான் காரணம். இதை விட சுவாரசியமான விஷயம் என்னன்னா, ஏகப்பட்ட பேர் அந்த சமயம் பார்க்ல அரை டவுசரை போட்டுண்டு கைவீச்சும் கால்வீச்சுமா வாக்கிங் பண்ணிண்டு இருப்பா. எதுவுமே நடக்காத மாதிரி வளையவரும் மத்திய மந்திரிகள் மாதிரி இதை கண்டுக்கவே மாட்டா.

மால்ல போய் நின்னுண்டு வேடிக்கை பாக்கர்து ஒரு நல்ல பொழுதுபோக்கு! அப்போ அங்க போய் ஒன்னுமே வாங்கமாட்டேளா?னு தானே கேக்கறேள்.எனக்கு வேண்டிய சாமான்செட்டு எதுவுமே அங்க கிட்டாது. நம்ப சாமான்செட்டெல்லாம் கல்லிடை காஸ்மோபொலிடன்ல மட்டும் தான் கிட்டும். பத்து ரூபா சாமானை ஐனூறு ரூபாய் குடுத்து லூசுதான் வாங்கும். ஒரு ரூபாயை ஒரு ரூபாயா பாக்கக் கூடாது, அதுக்குள்ள 20 ஆரஞ்சு மிட்டாய் இருக்குங்கற ஓர்மை வேணும்னு என்னோட தோஸ்த் ப்ளவுஸ் சங்கரனும் நானும் அடிக்கடி சின்னவயசுலையே சொல்லிப்போம். சப்பாத்தி பிகர்கள் & பிகர்களோட மண்டகப்படி உபயதாரர்(அதான்பா பாய் ஃப்ரண்ட்)அடிக்கும் லூட்டி காமெடியா இருக்கும். அந்த பிகர் “ஏ சாய்யே! ஓ சாய்யே!”னு கண்ணுக்கு தெரியர எல்லா வஸ்துவையும் வாங்கி தரசொல்லும். பிகரை கூட்டிண்டு வந்த மாக்கானும் சிரிக்கர மாதிரியே முகத்தை வெச்சுண்டு மனசுக்குள் கதறி அழுதுண்டே வாங்கி குடுப்பான். சில ஜோடிகளை பாத்தாக்க பையன் நல்ல வாட்டசாட்டமா கடோத்கஜன் மாதிரி இருப்பான், ஆனா அந்த பிகர் "என்னை தூக்கி விடு! எங்க அக்காளை ஏத்தி வுடு!"னு சொல்லும்படியா இருப்பா.

அதென்னவோ இந்த பொண்கொழந்தேளுக்கு கரடி பொம்மையை பாத்தாக்க ஏன் தான் இப்படி ஒரு பைத்தியமோ. ஒருவேளை அவாளோட அப்பா மாதிரியே இருக்கர்தால இருக்குமோ? “சோஓஓஓஒ ச்வீட்ட்ட்ட்ட்ட்ட்!”னு சொல்லிண்டு அதை கட்டிபுடிக்கர அழகை பாக்கனுமே! பேசாம கரடியா பொறந்துருந்தா ஜென்ம சாபல்யம் கிடைச்சுருக்கும்!னு அதை வாங்கிகுடுக்கும் பையன்கள் பரிதாபமா முழிப்பான். கரடி வாங்கமுடியாட்டியும் ஒரு நாகுட்டி பொம்மையாவது வாங்காம விடமாட்டா. அனேகமா எல்லா பைத்தியங்களும் இப்போ குங்க் ஃபூ பாண்டா கரடி பொம்மைக்கு shift ஆகி இருக்கும்னு நினைக்கறேன்.



பர்ர்ர்ர்ர்ர்கர்....;)

அங்க வியாபாரம் பண்ணும் பர்க்கர் பிசா பக்கத்துல எல்லாம் தலை வெச்சு கூட படுக்கமாட்டோம். நாலு பன்-னை ஒன்னு மேல ஒன்னு அடுக்கி வச்சு அதை ஒரே கடில கடிக்கர்துக்கு ஒவ்வொருத்தரும் வாயை பொளப்பா பாருங்கோ!!! பகவானே! வாயா இல்லைனா கொல்லம் ரயில்ல வரும் மலை குகையா!னு நமக்கு சந்தேகமா இருக்கும். இதே மாதிரி எப்ப பாத்தாலும் வாயை பொளந்துண்டு இருந்தாக்க ராமாயணத்துல வரும் கபந்தன் மாதிரி வாய் ஆயிடாதோ?னு எங்க அண்ணா கிட்ட சந்தேகம் கேப்பேன். பர்க்கர்,பிசா எல்லாம் வெள்ளக்காராளோட தேசத்துல உள்ள சீதோஷணத்தை மனசுல வெச்சுண்டு ஸ்ருஷ்டிக்கப்பட்ட வஸ்துக்கள். நம்ப ஊர்ல அடிக்கர வெயிலுக்கும் மழைக்கும் ஏத்த மாதிரியான இட்லி தோசை தான் நமக்கு சரியா இருக்கும். ஒரு விஷயம் கவனிச்சேளோ? நம்ப ஊர்ல இருக்கும் சமத்துகள் எல்லாம் பிசா,பர்க்கருக்கு ஆளா பறக்கர்து. கனடால இருக்கர சிலபேருக்கு இட்லி மாவு பொங்கலையே!னு கவலை பிடுங்கி திண்கர்து. ஹம்ம்ம்ம்ம்ம்! என்ன பண்ணமுடியும். அவாஅவா பண்ணின கர்மா....:))



பஸ்ல வரும் பராசக்தி!!

எல்லா கூத்தையும் பாத்துட்டு மாலுக்கு போய் திரும்பி வரும் போது பஸ்ல வருவோம். இந்த ஊர்ல பொம்ணாட்டி கண்டக்டர்கள் ஜாஸ்தி. பாரதி கண்ட புதுமை பெண்களா நம்ப கண்ணுக்கு அவா தெரிவா. கூட்டமா இருந்தா தாண்டி வந்து டிக்கெட் வாங்கமாட்டானு நினைச்சா நாம தான் ஏமாறுவோம். எப்பேர்பட்ட கூட்டமா இருந்தலும் நடுல புகுந்து வந்துடுவா. மரியாதை தெரியாத மெட்ராஸ்ல இருக்கறவா பேசற மாதிரி நீ! வா! போ!னு ஒருமைல பேசினா கர்னாடகாகாரா நம்ப கடவா பல்லை பேத்துடுவா. நம்ப ஊர்ல இருக்கர மாதிரியே பொம்ணாட்டிகளுக்கு தனியா 10 சீட் உண்டு. அது போக மிச்சம் உள்ள சீட்லையும் அவா பாட்டுக்கு வந்து உக்காச்சுப்பா. உங்களுக்கு அன்னிக்கி யோகம் நன்னா இருந்தா ஆரஞ்சு கலர் டீசார்ட் போட்ட ஒரு மார்டன் டிரெஸ் மகாலெட்சுமி உங்க பக்கத்துல வந்து உக்காசுண்டு எம்.பி த்ரீ ப்ளேயர்ல அழகா தலையை ஆட்டி ஹிந்தி பாட்டு கேட்டுண்டு இருக்கும். நாம ஏவிஎம் சரவணன் அப்பச்சி மாதிரி சமத்தா கையை கட்டிண்டு உக்காசுண்டு இருக்கனும்.

கண்டக்டர்கள் அடிக்கடி ‘உளக்கடே பன்ட்ரிரி'னு சொல்லிண்டே இருப்பா. ஆரம்பத்துல அதுக்கு “பன்னி மாதிரி வழியை அடச்சுண்டு நிக்காதீங்கோ!”னு சொல்லறார்தா அடிச்சு விட்ட எங்க அண்ணாவோட கப்சாவை அப்படியே நம்பிட்டேன். கன்னடம் தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் அதோட அர்த்தம் பிடிபட்டது. சேஞ்ச் கொட்ரிரீ!னு ஆம்பளை கண்டக்டர் & பொம்ணாட்டி கண்டக்டர் இரண்டு பேர்கிட்டயும் மரியாதையா நாம கேக்கலாம். முதல் தடவை நான் ஒரு பொம்ணாட்டி கண்டக்டர் கிட்ட திடீர்னு “சேஞ்ச் கொட்ரிரீ!”னு கன்னடத்துல பேசி சில்லரை வாங்கினதும் எங்க அண்ணா பயந்து போயிட்டான். அதுலேந்து என்னோட சேர்ந்து உக்காசுக்க மாட்டான். நாலு சீட்டு தள்ளியே தான் நிப்பான். என்னைக்காவது ஒரு நாள் ஒரு பொம்ணாட்டி கண்டக்டர் கையாள ‘திருசாத்து’ வாங்குவேன்னு எப்போதும் ஆவலா எதிர்பாத்துண்டு இருப்பான். பகவானோட புண்ணியத்துல கடைசி வரைக்கும் அந்த மாதிரி ஆகலை.

பெண்களூர் வாழ்க்கைல மறக்க முடியாத விஷயங்கள் எவ்வளவோ இருந்தாலும் அதுல பல விஷயங்கள் ரயில் பெட்டியின் ஜன்னலோரத்துல எதிர்பக்கமா வேகமா ஓடும் மரங்கள் மாதிரி மறந்து போயிடர்து. ஆனா சில விஷயங்கள் மட்டும் ஜன்னலை தாண்டி முகத்துல தெளிச்ச மழைச்சாரலா நினைவுல நிக்கர்து........

நினைவுகள் உள்ள வரை கனவுகள் தொடரும்..........