இந்த தடவை கல்லிடை காஸ்மோபொலிடன் சிட்டில சதுர்த்தி
உத்ஸவத்துல ஸ்பெஷலா என்ன பண்ணலாம்னு எல்லாரும் மண்டையை போட்டு கசக்கி எடுத்து கடைசில
கண்டு பிடிச்சதுதான் ' நவகுண்ட நவக்கிரஹ மஹாயக்ஞம்'. ஒரே குழப்பம். பத்தாயிரம் மோதக ஹோமம் தொடங்கி லெக்ஷ்மி ஹோமம் துர்கா ஹோமம்னு எல்லாமே
பண்ணிமுடிச்சதால புதுசா என்ன பண்ணலாம்னு யோசிச்சு கடைசில முடிவு பண்ணினதுதான் இந்த
நவகுண்டம். தெரு மாமாக்களுக்கும் பரம சந்தோஷம். “எல்லா கிரகமும் நம்மை பிடிச்சு ஆட்டர்து
ஓய்! அதனால எல்லா கிரகத்துக்கும் ஒரு ஓமத்தை பண்ணிட வேண்டியது தான்”னு ஒரு மாமா தீர்மானமா
பேசிண்டு இருக்கும் போது பக்கத்துல இருந்த மாமா ‘உங்காத்து மாமி கூப்படரா ஓய்ய்!’னு
சொல்லவும், ‘இந்த கிரகம் ஜென்மத்துக்கும் என்னை பிடிச்சு ஆட்டர்து, என்ன பரிகாரம் பண்ணர்துன்னே
தெரியலை ஓய்!!’னு முனுமுனுத்துண்டே அந்த மாமா போனாராம். ஒன்பது கிரஹத்துக்கும் தனித்
தனியா ஹோமகுண்டம்,தனித்தனியா மூனு வாத்தியார், தனித்தனியா பூர்ணாஹுதினு தடபுடல் ஏற்பாடு பண்ணி இருந்தா. தெருவே ஜேஜேனு இருந்தது.
நானும் தங்கமணி & அத்வைதா சகிதமா ஊர்ல போய் இறங்கிட்டேன்.
காஷ்மீர் பிரச்சனை எப்பிடி ஓயாம இருக்கோ அதே மாதிரி
கும்பா மாமிக்கும் அவாத்து மாட்டுப்பொண்ணுக்கும் பிரச்சனை இன்னும் ஓயரபாடா இல்லை. இந்த
தடவையும் சண்டை மண்டை உடஞ்சுண்டு இருந்தது. அவாத்து மாட்டுப்பொண் இல்லாத சமயமா அவாத்துக்கு
போயிட்டு கும்பா மாமிக்கு சிலபல ராஜதந்திர ஆலோசனைகள் சொன்னேன். “மாமி! எப்ப பாத்தாலும்
பைட் சீனே போட்டுண்டு இருந்தா படம் சுவாரசியப்படாது. சில செண்டிமண்ட் சீன் & லாலே லா
சீன் அதோட சேர்த்து சில ரொமான்ஸ் எல்லாம் இருந்தா தான் நன்னா இருக்கும்”னு சொல்லிண்டு
இருக்கும்போதே மாமிக்கு வெட்கம் வந்துருத்து. “ரொமான்ஸ் எல்லாம் முடிஞ்சு தான் மணியா
பேரன் வந்தாசேடா!”னு மாமி முடிக்கர்துக்கு முன்னாடியே, “நான் அதை சொல்லலை மாமி! உங்களுக்கும்
மாட்டுபொண்ணுக்கும் நடுல பாசமான லாலே லா!”வை சொன்னேன். மாமியும் எல்லாத்துக்கும் மண்டையை
ஆட்டிட்டு சாயங்காலமே அவா கழுத்துல இருந்த ரெட்டைவடம் செயினை மா.பொண்ணுக்கு போட்டுவிட்டு
அழகு பாத்து இருக்கா. அவாளோட மா.பொண்ணும், “செயின் என்னோட கழுத்துக்கு அளவெடுத்து பண்ணின
மாதிரி இருக்குனு” சொல்லிட்டு கழுத்தோட போட்டுண்டு போயிட்டா. இப்ப செயினை எப்பிடி திரும்பி
வாங்கர்துன்னு தெரியாம கும்பா மாமி முழிச்சுண்டு இருக்கா.
தெருல ஒரு ‘டோல்கேட்’ மாமா இருக்கார். போரவா வரவா
ஒருத்தரை விடர்து இல்லை. கேள்வியா கேட்டு கழுத்தருக்கரார். படிச்சு முடிச்சவாளா இருந்தா
எப்ப வேலைக்கு போகப்போரை?னு கேக்கரார்.வேலைக்கு போகரவாகிட்ட ‘எந்த கம்பெனில வேலை?’னு கேட்டா கூட பரவாயில்லை ‘எவ்ளோ
சம்பளம்?’னு சத்தமா கேக்கறார். “சம்பளம் எங்க தராங்க சுண்டலும் சக்கரபொங்கலுமா குடுத்து
ஏமாத்தராங்க!”னு வாய்விட்டு சொல்லமுடியுமா. இதாவது பரவாயில்லை ‘தொலைஞ்சுபோகர்து போ!’னு
விடலாம் ஆனா ‘உங்காத்து பொண்ணுக்கு கல்யாணம் பாக்கர்தா உத்தேசமே இல்லையா?’ ‘கல்யாணம்
கழிஞ்சு 3 வருஷம் ஆச்சே விஷேஷம் உண்டா?’னு கேட்டு தர்மசங்கடப் படுத்தறார். இவருக்கு பயந்தே பாதிபேர் தெரிச்சு ஓடறா. போன
வருஷம் எங்க மாமியாரை பாத்துட்டு ‘இது யாருடே?
இது யாருடே?’னு கேட்டுண்டே இருந்தார். “எங்க
மாமனாரோட அப்பாவோட மூத்த மாட்டுப்பொண்னோட ரெண்டாவது ஓர்படி!”னு சொல்லிட்டு நடையும்
ஓட்டமுமா இடத்தை காலிபண்ணிட்டேன். இவ்ளோ குழப்பி இருக்கோமே மனுஷன் இம்சிக்கமாட்டார்னு
பாத்தா சாயங்காலம் மறக்காம “உன்னோட மாமனாரோட கூடபொறந்தவா மொத்தம் எத்தனை பேர்?”னு மறுபடியும் ஆரப்பிக்கரார்.
ஒன்பது ஹோமகுண்டத்துக்கு பக்கத்துலையும் ஒரு தம்பதியை
சங்கல்பம் பண்ணிக்க ஒக்காத்தினா! நானும் தங்கமணியும் ஒரு கிரகத்துக்கு சங்கல்பம் பண்ணிண்டோம்.
வாத்தியார் மாமா சங்கல்பம் சொல்லிண்டு இருக்கும் போது ஒரு மாமி "எங்க அப்பா அம்மா
பேர் நக்ஷத்ரமும் சொல்லலாமா மாமா?"னு கேட்டார். உன்னோட பேரை சொன்னாலே எல்லா கிரகமும் ஓடிரும் உங்க அப்பாம்மா பேரை
வேற சொல்லனுமா?னு அவாத்து மாமா ஏழரையை கூட்டிண்டு இருந்தார். ரெண்டு வாத்தியார் அவாளுக்குள்ள பேசிண்டு
இருந்தா. “போனவாரம் போன ஜோலில எஜமானனுக்கு காதே கேக்கலை ஓய்! பிராஜாபத்தியம் பவித்ரம்!னு
சொல்லசொன்னா, "பிராஜாபத்தியம் பைத்தியம்!”னு சொல்றான் என்னத்த சொல்லர்து !'னு பொலம்பிண்டு
இருந்தார். எல்லா மாமியும் புல் மேக்கப்புல
வந்துருந்தா, அதுலையும் சிலமாமிகள் மாமாவை வச்சு அவாளோட வயசை ஜட்ஜ் பண்ணிடகூடாதுனு முன்னெச்சரிக்கையா
அவாத்து மாமாவுக்கும் 'டை' அடிச்சுவிட்டு கூட்டிண்டு வந்திருந்தா. சுக்கிரனோட ஹோமகுண்டத்துல
இருந்த வாத்தியார் மாமாவுக்கு எல்லா கிரகத்தோட புகையும் போயிண்டு இருந்தது. எல்லரும்
சுக்கிரனோட குண்டத்துல விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ணிட்டு சனி கிரகம் பக்கத்துல
வரும்போது ஓ பன்னீர்செல்வம் மாதிரி பயபக்தியா பம்மிட்டு போனா. “சனியோட பார்வை குரு
மேல இருக்கு போலருக்கே?”னு ஒரு மாமா இன்னொரு மாமாவை ஜாடைமாடையா பேசி சிரிச்சுண்டு இருந்தார்.
16 comments:
//பக்கத்துல இருந்த மாமா ‘உங்காத்து மாமி கூப்படரா ஓய்ய்!’னு சொல்லவும், ‘இந்த கிரகம் ஜென்மத்துக்கும் என்னை பிடிச்சு ஆட்டர்து, என்ன பரிகாரம் பண்ணர்துன்னே தெரியலை ஓய்!!’னு முனுமுனுத்துண்டே அந்த மாமா போனாராம்.//
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !
>>>>>
//ரெண்டு வாத்தியார் அவாளுக்குள்ள பேசிண்டு இருந்தா. “போனவாரம் போன ஜோலில எஜமானனுக்கு காதே கேக்கலை ஓய்! பிராஜாபத்தியம் பவித்ரம்!னு சொல்லசொன்னா, "பிராஜாபத்தியம் பைத்தியம்!”னு சொல்றான் என்னத்த சொல்லர்து !'னு பொலம்பிண்டு இருந்தார். //
:))))) நல்லவேளை ..... பிரஜாபதிப் பைத்தியம்ன்னு சொல்லாமல் போனாரே :)))))
>>>>>
//எல்லா மாமியும் புல் மேக்கப்புல வந்துருந்தா, அதுலையும் சிலமாமிகள் மாமாவை வச்சு அவாளோட வயசை ஜட்ஜ் பண்ணிடகூடாதுனு முன்னெச்சரிக்கையா அவாத்து மாமாவுக்கும் 'டை' அடிச்சுவிட்டு கூட்டிண்டு வந்திருந்தா.//
சூப்பரான ஐடியாவாக உள்ளது :)
>>>>>
//“நீ சொன்னதை நம்பித் தான் என்னோட ரெட்டைவட செயினை அவுத்து போட்டேன் ஒழுங்கு மரியாமரியாதையா திருப்பி தரர்துக்கு ஐடியா குடு!”னு கும்பா மாமி மிரட்டின மிரட்டுல, நேரா அவாத்து நாட்டுபொண்ணு கிட்ட போய் "இந்த செயின்ல உங்களை பாக்கர்துக்கு அப்பிடியே உங்க மாமியார் மாதிரியே இருக்கு!"னு ஒரு குண்டை போட்டேன், அவ்ளோதான் சாயங்காலமே மாமி கழுத்துக்கு செயின் வாபஸ் வந்துருத்து. மாமிக்கு வாயெல்லாம் பல்லு, “என்ன சொன்னை? என்ன சொன்னை?”னு என்னை பிடுங்கி எடுத்தா.தலைவர் ஸ்டெயில்ல "உண்மையை சொன்னேன்"னு சொல்லிட்டு எஸ்கேப் ஆயிட்டேன்//
நீண்ட நாட்களுக்குப்பின் அருமையோ அருமையான நகைச்சுவை விருந்தினைச் சாப்பிட்டதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது.
பகிர்வுக்குப் பாராட்டுகள், வாழ்த்துகள் + நன்றிகள்.
(சற்றே தாமதமான .... இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்)
ரொம்ப நாளைக்கு அப்பறமா பார்க்கறேன் ...சவக்கியமா தாக்குடு ?
மாலி ,// மாதங்கி ...
அப்பா! ஒருவழியா எழுதினீங்களே. சூப்பர். நிறைய எழுதுங்களேன். ரொம்ப மிஸ் பண்ணுறோம்
அப்பா! ஒருவழியா எழுதினீங்களே. சூப்பர். நிறைய எழுதுங்களேன். ரொம்ப மிஸ் பண்ணுறோம்
செம ரைட்டப். கலக்கல்.
ஸூப்பர்
ஆஹா, 2016 முடியறதுக்குள்ள ஒரு போஸ்ட் வருமானு நெனச்சுட்டு இருந்தேன். சூப்பர், உன்னோட ஸ்டைலை படிச்சே நாளாச்சு. ஹோமம் எல்லாம் நல்லபடியா நடந்தது கேட்டு சந்தோஷம். ஒரு வழியா நானும் 2015 உன்னோட கோவை விசிட் போஸ்ட் போட்டுட்டேன். அளவா தான் டேமேஜ் பண்ணி இருக்கேன், போய் பாரு :)
நீ எந்த கிரகத்துக்கு இன்சார்ஜா இருந்தன்னு கடைசி வரைக்கும் சொல்லவே இல்லீயே !!!! :) :) போகட்டும் மாமியோட சங்கிலிய நல்லபடியா வாங்கி குடுத்தியோ நீ பொழச்ச. As usual sooper writeup. Wishing you and your family a very happy diwali.
பல வருடங்களாயிற்று தக்குடு. என்னை நினைவிருக்கிறதோ அறியேன்.
ரசித்து படித்து சிரித்து மகிழ்ந்தேன்.
அந்த ரெட்டைவட செயின் விவகாரம் நெனச்சு நெனச்சு சிரிச்சுக்குறேன்.
வாழ்த்துக்கள்
வை கோ சார் - வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி!
மாதங்கி - பாங்க் மேடம் செளக்கியமா இருக்கேளா? அடியேன் பரமசெளக்கியம்!
வசந்தி மேடம் - முயற்சி பண்ணரேன்! வால்மார்ட்ல எல்லாரும் செளக்கியமா? :)
கோமதி மேடம் - நன்றி!
மதுரையம்பதி அண்ணா - தன்யன் ஆனேன்!
இட்லி மாமி - 2017 க்கு போஸ்ட் போட்டாச்சா?னு அடுத்த கமண்ட் போடுங்கோ! :P
தா.தலைவி - ராகு கிரகம் நமக்கு! அடுத்த தீபாவளியே வந்துருத்து!
சிவா - நல்லா இருக்கீங்களா கவிஞரே!
"அப்பாவி தங்கமணி" பிளாக் உள்ள போக முடியுதானு ட்ரை பண்ணி பாரு மொதல்ல. பிளாக்'ஐ கிளோஸ் பண்ணி ரெம்ப நாளாச்சு, இதுல அடுத்த போஸ்ட் எங்க இருந்து போட...:)
Missing you & your kid Thakkadu
-Koma
How is Bhakya-Lakshmi?
Post a Comment
யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)