ஹும்ம்ம்ம்! அது ஒரு காலம்! எம் ஜீ ரோட்ல இருக்கும் ஒரு
பெரிய கம்பெனில வேலைக்கு சேர்ந்து அப்ப தான் டிரெயினிங் முடிஞ்சு ஒரு டீம்ல போட்டு
இருந்தா. இந்த மாதிரி கம்பெனிகள்ல எல்லாமே ஒரு விஷயம் பொதுவா இருக்கும். 20 மாடி கட்டிடத்துல ஒவ்வொரு தளத்துலையும் நடு ஹால்ல 8 கடிகாரம் மாட்டி வச்சுருப்பா ஒவ்வொரு கடிகாரத்துக்கு கீழயும் நியூயார்க்,சிங்கப்பூர்,ஜப்பான்,ஆஸ்திரேலியா,துபாய், லண்டன்னு எழுதி வச்சுருப்பா. என்னை மாதிரி புதுசா வேலைக்கு சேர்ந்த அப்ரண்டிசுகளும் அடேங்கப்பா! எல்லா ஊர்லையும் நம்ப கம்பெனிக்கு பிராஞ்ச் இருக்கு போல! பெரிய்ய்ய்ய கம்பெனிதான் போலருக்கு!னு பெருமைக்கு காலரை தூக்கி விட்டுப்போம். உண்மை என்னான்னா அமெரிக்கால ஒபாமா எழுந்தாச்சா,லண்டன்ல துரைமார்கள் இப்ப பல்லு விளக்கியாச்சா? துபாய்ல சேக்கு கக்கா போயாச்சா?னு தெரிஞ்சுக்கர்துக்காகதான் அந்த எட்டு கடிகாரம்னு ஆறு மாசம் கழிச்சுதான் புரிஞ்சது. இருந்தாலும் ஊருக்கு போகும் போது இப்ப லண்டன்ல சாயங்காலம் காபி குடிச்சுட்டு பக்ஷணம் திண்கர சமயம் தெரியுமா?னு பெருமை பீத்தர்துக்கு உபகாரமா இருக்கும்.
இத்தனை நாட்டு பகல் ராத்திரினு நாம மாடா உழைச்சாலும்
வருஷ கடைசில அப்ரைசல்ல, ‘குளோபல் எக்கனாமிக் டிப்ரஷன்! ஆன்சைட் மேனேஜருக்கு உக்காரும்
இடத்துல ஆப்ரேஷன்!’னு சொல்லி தேங்காமூடியும் ஒரு தொண்னைல கொண்டைகடலை சுண்டலும் கைல
குடுத்து ‘சர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம்!’னு சொல்லி அனுப்பிடுவா. நாமலும் ‘போன
தடவை வெறும் தேங்காமூடி தான் இந்த தடவை பரவாயில்லை சுண்டலும் தந்தாளே!’னு மனசை தேத்திண்டு
மறுபடியும் லண்டன் துரைக்கு How can i help you? மெயில் அனுப்பி விசுவாசத்தை காட்ட
ஆரம்பிச்சுடுவோம். ‘ஹோம்வொர்க் சீக்கரம் எழுதி முடிச்சா ஐஸ் வாங்கி குடுப்பேன்!’னு
ஸ்கூல் குழந்தேளை ஏமாத்தர மாதிரி வருஷ கடைசில ஆபிஸ்ல இருக்கும் எல்லா சமத்துகளையும்
ஒரு பஸ்ல ஏத்தி ஊருக்கு ஒதுக்கு புறமா ஓசூர் போற வழில இருக்கும் ஒரு ரிசார்டுல கொண்டு
போய் இறக்குவா. அந்த ரிசார்ட்டுல மீனா வந்து “சரக்கு வச்சுருக்கேன்! இறக்கி வச்சுருக்கேன்!”னு
பாடிண்டே ஆடாதது ஒன்னுதான் பாக்கினு சொல்லும்படியா எல்லா வசதியும் பண்ணி வச்சுருப்பா.
ஒரு பெரிய்ய்ய்ய அண்டா நிறைய ஐஸ்கட்டியை போட்டு அது நிறையா பீர் பாட்டிலை ரொப்பி வச்சுருப்பா.
எங்க ஆபிஸ் பார்ட்டில முக்கால் காலுக்கு ஜீன்ஸ் டவுசர் போட்ட ஒரு டில்லி பிகர் தான்
முதல்ல பாட்டிலை எடுத்து ஒரே மடக்குல பானகம் குடிக்கர மாதிரி குடிச்சு ஆரம்பிச்சு வச்சது.
மத்தவா எல்லாரும் உடனே ஜோதில ஐக்கியம் ஆக ஆரம்பிச்சா, என்னை மாதிரி கோஷ்டிகள் மேங்கோ
ஜூஸும் லேஸ் சிப்ஸும் நொசுக்கிண்டே டில்லி பிகர் இதுவரைக்கும் எத்தனை பாட்டில் உள்ள
தள்ளினானு உக்காந்து கணக்கு போட்டுண்டு இருந்தோம்.
இந்த மாதிரி கலகலப்பா பொழுது கழிஞ்சுண்டு இருக்கும்
போது ஒரு நாள் எங்க டீம்ல இருந்த ஒரு ஆந்திரா அக்காவுக்கு அன்னிக்கி பொறந்த நாள்னு
சொல்லி டீம்ல இருந்த எல்லார்கிட்டையும் தலைக்கு 100 ரூவா வசூல் பண்ணிண்டு இருந்தா.
தண்டல் மாதிரி கட்டாயமா குடுத்தே ஆகனும் சுருக்கமா சொல்லணும்னா வட்டியில்லாத கடன்.
நம்மோட பொறந்த நாள் அன்னிக்கு இதே மாதிரி ரூவா போட்டு சட்டையோ டீ சர்டோ எடுத்து தருவா.
எங்க டீம்ல இருந்த ஒரு அக்காவும் பக்கத்து டீம்ல இருந்த ஒரு பாலக்காடு அக்காவும் சேர்ந்து
கமர்ஷியல் தெருவுக்கு போய் ஒரு டாப்ஸ் எடுத்துண்டு வந்து குடுத்தா. ஆந்திரா அக்காவும்
உடனே போய் புது டாப்ஸை போட்டுண்டு வந்து பெருமையா நின்னா. வழக்கம் போல வாயை வச்சுண்டு
சும்மா இருக்காம “எங்க ஊர் ரைஸ்மில்லுல ஈரமாவு மிஷினுக்கு மேல கட்டிதொங்க விட்ட துணி
மாதிரி இருக்கு இதுக்கு போய் 600 ரூவாயா!”னு கேட்டுட்டேன். அவ்வளவுதான் அந்த ஆந்திரா
அக்கா திரும்ப போய் டாப்ஸை கவர்ல போட்டு கொண்டு வந்து பாலக்காடு கைல குடுத்து ‘எனக்கு
இது வேண்டாம் வேற மாத்தி குடுங்கோ!’னு சொல்ல மொத்த அக்காக்களோட கோவமும் என் மேல திரும்பிடுத்து.
‘இந்த பட்ஜெட்டுக்குள்ள அப்பிடி என்னதான் இவன் எடுக்கறான்னு பாப்போமே!’னு சொல்லிண்டே
என்னை இழுத்துண்டு போய் ஒரு ஆட்டோல ஏத்தி ரெண்டு பக்கமும் ரெண்டு பேர் தப்பிக்க முடியாம
உக்காந்துண்டு துணி வாங்கின கடைக்கு கூட்டிண்டு போயிட்டா.
Fab india அப்பிடிங்கர அந்த கடைல காட்டன் டாப்ஸ் செக்ஷன்ல
போய் தோண்டி துளாவ ஆரம்பிச்சேன். ஒரு கட்டத்துக்கு மேல அந்த சேல்ஸ்மேனுக்கு பொறுமை
போய் இந்த அஞ்சு அலமார் முழுசும் நீங்க சொன்னது தான்! எடுத்துண்டு தொலைங்கோ!னு சொல்லிட்டு
போனார். எனக்கு ஒரு பக்கம் பகீர் பகீர்னு இருந்தது. எங்க ஊர்ல தெருவுக்கு 10 பேர் பெண்களூர்ல
தான் வேலை பாக்கரா. இவாளை பாக்கர்துக்கு வரும் அவாளோட அப்பா அம்மா பக்கத்து தெருல இருக்கும்
பஞ்சமுக ஆஞ்சனேயரை சேவிச்சுண்டு சும்மா இருக்காம ரோட்ல தான் எங்கையாவது லாந்திண்டு
இருப்பா. அவா கண்ணுல டாப்ஸும் கையுமா நான் மாட்டினேன்னா அதோட ஜோலி முடிஞ்சது. ஊருக்கு
STD போட்டு “ஓஓஓ! விஷயம் தெரியுமாடி ! நம்ப தக்குடு பெண்களூர்ல யாரோ ஒரு பொண்ணு கூட
கையை பிடிச்சுண்டு சுத்திண்டு இருக்கான். அந்த பொண்ணும் சாணா சுருணை மாதிரி ஒரு டிரெஸ்
போட்டுண்டு இவன் மேல ஈசிண்டே இருந்தா!”னு ஒன்னுக்கு பத்தா கொளுத்தி போட்டுருவா.
இந்த விஷயம் ஒவ்வொரு மாமியோட வாய் வழியா எங்க அம்மாகிட்ட போகும் போது “அவனுக்கு கல்யாணமே
ஆயிடுத்தாமே!!” அப்பிடிங்கர நிலைமைல வந்து நிக்கும். இந்த பதட்டத்துக்கு நடுல ஆந்திரா
அக்காவுக்கு சூப்பர் டிசைன்ல ஒரு டாப்ஸ் எடுத்து முடிச்சுட்டு திரும்பினா அங்க ஒரு
காஜல் அகர்வால் காட்டன் டாப்ஸை பத்தி ஒரு காட்டான் கிட்ட கேட்டுண்டு இருந்தா. அவன்
எல்லாத்துக்கும் போனை பாத்துண்டே ‘டிக்கே! டிக்கே!’னு சொல்லிண்டு இருந்தான்.
12 comments:
அருமையான உதாரணங்களுடன் சூப்பர் பதிவு.
மிகவும் ரஸித்த இடங்கள்:
பெண்களூர்,
மத்தவா எல்லாரும் உடனே ஜோதில ஐக்கியம் ஆக ஆரம்பிச்சா,
“எங்க ஊர் ரைஸ்மில்லுல ஈரமாவு மிஷினுக்கு மேல கட்டிதொங்க விட்ட துணி மாதிரி இருக்கு இதுக்கு போய் 600 ரூவாயா!”னு,
நம்ப தக்குடு பெண்களூர்ல யாரோ ஒரு பொண்ணு கூட கையை பிடிச்சுண்டு சுத்திண்டு இருக்கான். அந்த பொண்ணும் சாணா சுருணை மாதிரி ஒரு டிரெஸ் போட்டுண்டு இவன் மேல ஈசிண்டே இருந்தா!”னு
அதுக்கு அப்புறம் மூனு வருஷத்துக்கு டீம்ல/ பக்கத்து டீம்ல யாருக்கு பொறந்த நாள்னாலும் டாப்ஸ் எடுக்கர செலக்ஷன் கமிட்டில நிரந்தரமா போட்டு சாகடிச்சா,
“உங்களுக்கு டாப்ஸை பத்தி என்ன தெரியும்?”னு
பாராட்டுகள், வாழ்த்துகள். நகைச்சுவையான பகிர்வுக்கு நன்றிகள்.
இத்தனை சுவாரஸ்யமா இயல்பா
அழகா ஒரு பதிவைப் படிச்சு எத்தனை நாளாச்சு /
தக்குடு இனியாவது தொடர்ந்து எழுத
வேண்டுகிறோம்
வாழ்த்துக்களுடன்...
Thakkudu semmai...:))
தக்குடுவை மீண்டும் பார்ப்பதில் மிக சந்தோஷம். தங்கமணி ப்ளாக் எல்லாம் படிப்பார்களோ. அத்வைதா கூட ஆரம்பிச்சுடும். என்ன சரளமா வருகிறது எழுத்து.
ஃபாப் இண்டியால சாணாசுருணை கூட ஏக விலை இருக்கும்னு ஊர்ல சொல்லிடுங்கோ. நன்றி மா.நல்ல சுவை.
:-)))
Ha ha ha, had a gud laugh after a long time. Welcome back thambbrrii :)
By the way, thangamani kettappa nee idhai solli irundhaa vandha reaction vechu innum rendu post vandhu irukkume brother :):) :)
To follow :)
என்னை இழுத்துண்டு போய் ஒரு ஆட்டோல ஏத்தி ரெண்டு பக்கமும் ரெண்டு பேர் தப்பிக்க முடியாம உக்காந்துண்டு
தக்குடு உனக்கு எங்கேயோ மச்சம்டா கண்னு
அந்த குசும்பு போகவில்லை ஸூப்பர் டா
Super sir.inimelavathu continueva write maduree
சான்ஸே இல்லை. உன்னை அடிச்சுக்க ஆளே இல்லை. நீ அடிச்சு ஆடு தம்பி ������ மீரா அக்கா
Malarum Ninivugal - Marakkamudiyuma . Any way nice
Bro excellent!!!
Post a Comment
யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)