Thursday, September 19, 2013

மறுபடியும் ஒரு பயணம் (Part 2)

Part I படிக்க இங்கே 'க்ளிக்'கவும்

போன் பண்ணினாளே தவிர எனக்கு இவா ரெண்டு பேரும் எப்பிடி வரப்போரானு சந்தேகமாவே இருந்தது. மைனர்வாளை பத்தி உங்க எல்லாருக்குமே நன்னா தெரிஞ்சுருக்கும் இருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கே இன்ட்ரோ பாட்டு போட்டு அறிமுகம் பண்ணிவைக்கர காலகட்டத்துல நாம இருக்கர்தால ஆர் வி எஸ் அண்ணாவை பத்தியும் கொஞ்சம் சொல்லதான் வேண்டியிருக்கு. ஒரு காலத்துல மூனு பக்கத்துக்கு குறைவு இல்லாம தமிழ் பிரவாகமா ஓடும் அகண்ட காவேரி மாதிரி ப்ளாக்ல எழுதிண்டு இருந்தார். கொஞ்சும் சலங்கை படத்துல வரும் ‘சிங்கார வேலனே வேலா’ பாட்டுல வரும் ஜெமினி & சாவித்ரி மாதிரி இவரோட பதிவும் அதுக்கு ரசிகமணியோட கமண்டும் இருக்கும், நடுல T S பாலயா முகசேஷ்ட்டை மாதிரி நாங்களும் கமண்ட் போட்டு ரசிச்சுண்டு இருந்தோம். இவரோட பதிவுகளை எனக்கு தெரிஞ்ச சில நலம்விரும்பிகளுக்கு அனுப்பி வைக்கர்து உண்டு. அந்தமாதிரி ஒரு தடவை இவர் எழுதின போஸ்டை படிச்ச ஒரு மாமா, “தக்குடு! ஆர் வி எஸ்ஸுக்கு ஆனாலும் அசாத்திய தைரியம்டா! கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் சேப்பாயி சிணுங்கினாள்/உரசினாள்னு யாரோ ஒரு ஜலஜா கூட ஜல்ஸா பண்ணினதையெல்லாம் லஜ்ஜையே இல்லாம எழுதியிருக்காரே இந்த மன்னார்குடிக்காரர்! அவாத்து மாமி ஒன்னும் சொல்லமாட்டாளா?”னு வாயை பொளந்தார். “நாசமா போச்சு! ஜலஜாவும் இல்லை வலஜாவும் இல்லை! சேப்பாயி அவரோட கார் மாமா!”னு சொல்லி புரியவச்சேன். சமீபகாலமா மூஞ்சிபுஸ்தகத்துல ஒரு போஸ்பாண்டி மாதிரி பல வாலிபர்களை தன்னோட சுவாரசியமான எழுத்தால் வருத்தபடாம பாத்துக்கரார்.

அடுத்தது நம்ப கோவைசரளா மன்னிக்கவும் அனன்யாக்கா. ஓட்ட டப்பால கோலிக்குண்டை உருட்டிவிட்ட மாதிரி அப்பிடி ஒரு அமைதியான சுபாவம். எல்லாத்தையும் சிரிச்சமுகத்தோட எதிர்கொள்ளும் ஒரு மனப்பக்குவம். ஆத்துக்காரரை எதுக்கெடுத்தாலும் குத்தம் சொல்லும் ஒரு பதிபக்தினு சொல்லிண்டே போகலாம். “மாங்காடு காமாக்ஷி கோவிலுக்கு ஆத்துக்காரரோட போயிட்டு நேரா உங்காத்துக்கு வந்துடறேன் கேட்டையா?”னு போன்ல தகவல் சொன்னா. “கோவிலுக்கு போன இடத்துல புதுசா கல்யாணமானவா மாதிரி வாக்குவாதம் பண்ணிண்டு இருக்காமா ரெண்டுபேரும் சமத்தா வந்துசேருங்கோ!”னு சொல்லிண்டு இருக்கும் போதே மைனர்வாள் “மடிப்பாக்கத்துலேந்து கிளம்பியாச்சு! வந்துண்டே இருக்கேன்!”னு போன்ல பரபரத்தார். இவர் நேரா கிளம்பி ரோட்டை பாத்து வண்டியை ஓட்டிண்டு வந்தா பரவாயில்லை, “புஷ்டியாக இருந்த ஒரு இளம் யுவதி இஷ்டியாக ஒரு யுவனின் முதுகில் பல்லிபோல் ஒட்டிக்கொண்டு வந்தாள்! கீரை வாங்கிக்கொண்டு வந்த வெத்தலை வாய் பாட்டி காரை பாக்காமல் குறுக்கே புகுந்தாள்!”னு வரவழில பாத்ததை எல்லாம் மனசுக்குள்ள அடைகாத்து மூஞ்சிபுஸ்தகத்துல போடர்துக்கு யத்தனம் பண்ணுவாரே அதுதான் கவலை!


மஹானுபாவர்களுடன் அடியேன் :)

ஒரு வழியா மைனர்வாள் தம்பதி சமேதராய் வந்து காட்சி குடுத்தார். காங்கிரஸ் காரியகமிட்டி மீட்டிங் அடண்ட் பண்ணர்துக்கு மார்டன் ஜீன்ஸ்ல வந்தமாதிரி தேசியக்கொடியை நெஞ்சில் குத்திண்டு வந்திருந்தார். இவர் வந்து அடுத்த ஐந்தாவது நிமிஷம் நம்ப லட்சிய தம்பதிகள் வந்து சேர்ந்தா. இவாள்ளாம் பெரிய ரைட்டர்ஸ் மாமா! கன்னாபின்னானு எழுதி தள்ளுவா!னு சொல்லி என்னோட மாமனார் & மாமியார் கிட்ட அறிமுகம் பண்ணி வச்சேன். ‘எதை பத்தி எல்லாம் எழுதுவா?’னு மெதுவா என்கிட்ட கேட்டார். ‘என்ன இப்படி கேட்டுட்டேள்! இவா எழுதாத ஏரியாவே கிடையாது சுருக்கமா சொல்லனும்னா இவா எழுதலைனா அது ஏரியாவே கிடையாது!’னு சொல்லிட்டு அரை லோட்டா ஜலத்தை குடிச்சுண்டு இருக்கும் போது ‘இவா எல்லாம் உங்களுக்கு எப்பிடி தெரியும்’னு எங்க மாமனார் அடுத்த கேள்வியை கேக்கவும் எனக்கு புரை ஏறிடுத்து. நானும் எழுதுவேன்னு சொல்லபோக, அவர் ஆசையா என்னோட ப்ளாக்கை திறந்து பாத்தா எல்லாம் பக்கத்தாத்து வம்பு எதிர்தாத்து வம்பாதான் இருக்கும் போதா குறைக்கு சிலுக்கு வேற நடுல வந்து ஒரு டான்ஸ் ஆடிட்டு போயிருப்பா.

‘இவாளோட எழுத்துக்கு நான் பரமவிசிறி. அதனால தான் பாக்க வந்துருக்கா!’னு சொல்லி சமாளிக்கர்துக்குள்ள போதும் போதும்னு ஆயிடுத்து. மைனர்வாளோட தர்மபத்தினி பக்கத்துல இருந்ததாலயோ என்னவோ தெரியலை மைனர்வாள்கிட்ட அப்பிடி ஒரு பவ்யம்! பேசர்தும் அவ்ளோ ஜாக்ரதையா பேசினார். அனன்யாக்காவாத்து மாமாவை இப்பதான் முதல் தடவையா பாக்கறேன். அசாத்தியமான பொறுமை. ரொம்ப நேரத்துக்கு கலகலனு எல்லாரும் பேசிண்டு இருந்தா. சாதாரணமான ஆரம்பிச்ச வம்பு ஒரு கட்டத்துல சோழமண்டல/பாண்டிய மண்டல பாடல்பெற்ற சிவஸ்தலங்கள் வழியா பயணம் பண்ணி பாலக்காடு கோயம்புத்தூர் எல்லாம் போய் கல்லிடை வந்து சென்னைக்கு திரும்பினது. சம்பந்தமே இல்லாம எவ்ளோ நேரமா பேசிண்டு இருக்கானு எங்க தங்கமணி ஆத்துல எல்லாரும் ஆச்சரியமா பாத்தா. பொதுவா இந்த மாதிரி நாட்டுக்கு அவசியமான டிஸ்கஷன் எல்லாம் TRC மாமாவாத்து அடுக்களைல டிக்காஷன் இறங்கிடுத்தானு பாத்துட்டுதான் ஆரம்பிப்போம். ஆனா பாருங்கோ! முன்னாடி எல்லாம் ஸ்டேட் ஸ்டேட்டா சுத்திண்டு இருந்த மனுஷர் இப்பெல்லாம் சிங்கபூர் மலேசியானு சுத்திண்டு இருக்கார்.

ரொம்ப நெருங்கின சொந்தக்காரா கிட்டகூட இந்த அளவுக்கு நாம பேசுவோமா அப்பிடிங்கர்து சந்தேகம்தான்! தொட்டுக்கோ தொடச்சுக்கோ!னு இருக்கும் சொந்தங்களுக்கு நடுல இது ஒரு வித்தியாசமான உலகம் தான்! எப்பிடியாவது அடுத்த தடவை அடப்பாவி தங்கமணியோட அப்பாவி ரெங்கமணியையும் சந்திக்கனும்.

கல்லிடை சாஸ்தா ப்ரீதி அடுத்த போஸ்ட்ல தான் பாக்கனும்!

12 comments:

Gopikaa said...

சூப்பர் போஸ்ட் தக்குடு. உங்க மாமனார் நல்ல வேளை உங்க ப்ளாக் - ஐ உங்கள் கல்யாணத்திற்கு முன் பார்க்க வில்லை :)

அந்த புகைப்படத்தில் அனைவர் முகத்திலும் ஒரு சந்தோசம் இருப்பது ரொம்பவே அழகாய் இருக்கிறது.

Ananya Mahadevan said...

Great da.. lovely and cherishable moments! Enjoyed every bit of your writing! Esp RVS :)

Kavinaya said...

அழகான சந்திப்பும், புகைப்படமும். நன்றி தக்குடு :)

வல்லிசிம்ஹன் said...

நல்ல சந்திப்பு. நால பெயர். அத்வைதா முத்துலக்ஷ்மிக்கு எங்கள் ஆசிகள்.

சொர்ணமும் முத்துக்களுமாக உங்கள் வாழ்க்கை ஜ்வலிக்கட்டும்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//இவா எழுதாத ஏரியாவே கிடையாது சுருக்கமா சொல்லனும்னா இவா எழுதலைனா அது ஏரியாவே கிடையாது!’//
ஹ ஹ இது சூப்பர்

//அவர் ஆசையா என்னோட ப்ளாக்கை திறந்து பாத்தா//
இப்ப பாத்து என்ன பண்றது? எல்லாம் முன்னமேயே விசாரிசுருக்கணும்...:)

//சம்பந்தமே இல்லாம எவ்ளோ நேரமா பேசிண்டு இருக்கானு எங்க தங்கமணி ஆத்துல எல்லாரும் ஆச்சரியமா பாத்தா//
நாங்க வருஷகணக்கா ப்ளாக்ல இப்படி தான் எழுதறோம்னு சொல்லி இருக்கலாமே..:)

//அடுத்த தடவை அடப்பாவி தங்கமணியோட அப்பாவி ரெங்கமணியையும் சந்திக்கனும்//
பாப்போம் பாப்போம்... நீயும் சொல்லிட்டே தான் இருக்க...:)

சுசி said...

போட்டோ ஜோரா இருக்கு. ஆனா பாரேன் இவாளாம் அவா profile page ல்ல போட்டிருக்கிற போட்டோ க்கும் நேர்ல பாக்கறதுக்கும் சம்பந்தமே இல்ல. அதனால உன் கல்யாணத்துல யாரையும் அடையாளம் கண்டுபிடிக்க முடியலை. :(((

ஆனா நீ profile போட்டோல்ல இருக்கிற மாதிரியே வாலா இருக்க. :))))

நான் தான் அப்பவே சொன்னேனே உன் கல்யாணத்துக்கு உன் பதிவுகளை எல்லாம் சி.டி யா போட்டு திருமண மலரா எல்லோருக்கும் தரணும்ன்னு. அப்போ உன் மாமனாருக்கு தெரிஞ்சிருக்கும். :))))

கௌதமன் said...

நல்லா இருக்கு. நான் இரசித்த பகுதிகளை, அ.த பட்டியலிட்டுவிட்டார்.

ADHI VENKAT said...

குழந்தை பெயர் அழகா இருக்கு. அத்வைதா முத்துலெக்ஷ்மி...

உங்களைத் தவிர போட்டோல இருக்கற எல்லாரையும் பார்த்திருக்கேன்.

பதிவு ஜோர்.

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா இது செம சந்திப்பா இருந்திருக்குமே.... :)

வாழ்த்துகள் தக்குடு.

மனம் திறந்து ...(மதி) said...

அத்வைதாவை அளவிலா அன்புடன் வரவேற்கிறோம்! அவள் பெற்றோரின் பெருமகிழ்ச்சியில் பங்கு கொள்கிறோம்! :-)

Unknown said...

தக்குடு சார்...... இந்த சந்திப்பு உங்களது மனதை தொட்டது இந்த பதிவின் ஒவ்வொரு எழுத்திலும் தெரிகிறது.

Subhashini said...

Super thakkudu

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)