Thursday, September 12, 2013

மறுபடியும் ஒரு பயணம்

ஹ்ம்ம்ம்ம்ம்ம்! சீன பயணி யுவான்சுவாங் மாதிரி ஊருக்கு போனா தான் என்னைமாதிரி ஏழைபாழைங்க போஸ்ட் எழுதமுடியர்து. முதல்ல ஒரு சந்தோஷமான சமாசாரத்தை சொல்லிக்கறேன் ஜூலை மாசம் பத்தாம் தேதி அடியேனுக்கு ஒரு பெண் குழந்தை ஆசிர்வாதமாகியிருக்கு. அவளை பாத்துட்டுவரலாம்னுதான் இந்த பயணம். குழந்தை பிறந்த செய்தி கேட்டதுலேந்து ‘எப்படாப்பா அதோட முகத்தை பாக்கபோறோம்’னு பட்டுண்டு வந்தது. “வெளி நாட்டுல வேலை பாத்தா இதுதான் ஒரு அசெளகரியம்! இந்த நிலைமை யாருக்கும் வரகூடாது”னு சராசரி வெளி நாடுவாழ் NRI இந்தியன் மாதிரி போலி ஒப்பாரி வைக்கர்துக்கு நான் தயாரா இல்லை. இதெல்லாம் உண்டுனு தெரிஞ்சுதானே கடலை தாண்டிவந்துருக்கு! அப்புறம் என்ன கண்ணை கசக்கிண்டு சின்னப்புள்ளத்தனமா? பிளைட்ல மட்டும் எப்ப ஏறினாலும் ஒரு பிரச்சனை நமக்கு முன்னாடி ஏறி உக்காசுண்டு நமக்காக காத்துண்டு இருக்கு. இந்த தடவை முதல்ல ‘ஆய்புவன்’ல புக் பண்ணி அப்புறம் கடைசி சமயத்துல கத்தார் ஏர்வேஸுக்கு மாத்தினதால கடைசி சீட்தான் கிடைச்சது. போய் உக்காசுண்டா பக்கத்துல கறுப்பு கலர் ட்ரெஸ் போட்ட ரெண்டு பொம்ணாட்டிகள்.

அம்மாவும் பொண்ணும் மாதிரி இருந்தா. ‘யாரேன் இருந்துட்டுபோறா நமக்கு என்ன வந்தது?’னு நான் இருக்கும் போதுதான் அந்தம்மா தோள்ல மாட்டியிருந்த கோணிப்பைலேந்து(ஹேண்ட் பேக்னும் சொல்லலாம்) கத்தார் பாஸ்போர்ட்டை வெளில எடுத்தது. “ஆத்த்த்தாடி! இந்தம்மாவும் பொண்ணும் லோக்கல் ஆளுங்களா? நான் தொலைஞ்சேன்டா இன்னிக்கி!”னு மனசுக்குள்ள சொல்லிண்டேன். நாம தெரியாம தூங்கி விழுந்தாலோ இல்லைனா அந்தம்மா தூங்கி விழுந்தாலோ நம்ம முதுகுலதான் தர்ம அடி விழும். ஏர்ஹோஸ்டஸ் கிட்ட “காபி/டீ போடர இடத்துல ஒரு முக்காலி இருந்தாலும் பரவாயில்லை கமாண்டோ சேர் போட்டா கூட போதும் உனக்கு பேச்சாட்டு துணைக்கு அங்க வந்து உக்காசுக்கறேன் இந்த இடத்தை மாத்திகுடும்மா!”னு கெஞ்சிண்டு இருக்கும் போது எனக்கு இடதுபக்கமா ஜென்னலோர ரெண்டு சீட்டுக்கு ஒரு தம்பதிகள் வந்து உக்காசுண்டா.

ரவுண்ட் நெக் டீசர்ட் போட்ட அந்த மாமா கிட்ட மெதுவா ‘மேடம் என்னோட இடத்துல உக்காசுண்டாங்கன்னா நான் உங்க பக்கத்துல வந்துடுவேன்னு பக்கத்துல இருக்கும் பொம்ணாட்டியை கண்காட்டிண்டே நான் முடிக்கர்துக்குள்ள “நோ நோ நாங்க சேர்ந்து வந்துருக்கோம்!”னு பதில் சொல்லிட்டு ஜன்னல் வழியா வெளில எட்டிபாத்துண்டா. ‘தாராளமா சேர்ந்து வாங்கோளேன்! யாருவேண்டாம்னா? இப்ப என்ன டைவர்ஸ்ஸா வாங்க சொன்னேன்? நாலு மணி நேரம் 2 அடி தூரத்துல உக்காசுண்டு பிரயாணம் பண்ணகூடாதா? மாமியோட அக்கா பையனுக்கு மெட்ராஸ்ல கல்யாணம்/ ஒன்னுவிட்ட மாமாவோட ஷட்யப்தபூர்த்தினு மாமாவை ஒரு மாசம் விட்டுட்டு ஜாலியா ஊருக்கு போகும் போது ஒன்னும் தெரியாது. இங்க மாமா பருப்புபொடில ஆரம்பிச்சு மூக்குபொடி சாதம் வரைக்கும் எதையாவது சாப்பிட்டு உயிரை கைல பிடிச்சுண்டு இருப்பார். நாம ஒரு ஆத்திர அவசரத்துக்கு பிளைட்ல கேட்கும்போதுதான் என்னவோ மூனாறுக்கு ஹனிமூன் வந்தவா மாதிரி கையை பிடிச்சுண்டு பேசிண்டு வருவா.

பக்கத்து வரிசைகாரர்கிட்ட கெஞ்சர்தை விட லோக்கல் பொம்ணாட்டிகள் கிட்ட ‘டப்பா’ இங்க்லீஷ்ல “யூ லைக் மை மதர் ஆண்ட் யுவர் டாட்டர் லைக் மை சிஸ்டர்! சிஸ்டர் சன்னுக்கு மை மடில தான் காது குத்திங்க்! ஆல் ஆர் சேம் சேம் பாமிலி”னு சொல்லும்போதே அந்த புண்ணியவதி என்னோட குழந்தை மனசை புரிஞ்சுண்டு ‘நோ பிராபளம் யூ சிட் ஐ சிட்!’னு சொல்லி அனுமதி குடுத்தாங்க.( பொதுவா இங்க இருக்கர மனுஷா கிட்ட Past particible/ verb/ future continuous tense இதெல்லாம் போட்டு பேசினா கடைசில “யாரு பெத்த புள்ளையோ! அய்யோ பாவம்!”னு சொல்லற மாதிரி ஒரு பரிதாப பார்வை பாத்துட்டு ‘மாஃபி இங்கிலீஷ்!’னு சொல்லிடுவா). அதுக்கு அப்புறம் பைசா நகர் சாய்ஞ்ச கோபுரம் மாதிரி இடதுபக்கமா சாய்ஞ்சுண்டே 4 மணிக்கூர் பிரயாணம் பண்ணினேன். எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் பக்கத்து வரிசை மாமா மெதுவா ‘தோஹால எத்தனை வருஷமா இருக்கேள்?’னு ஆரம்பிச்சார். “சீட் மாத்தி குடுக்க வக்கில்லை, முகரகட்டைக்கு பேச்சு என்ன வேண்டியிருக்கு பேச்சு?”னு ‘நறுக்’னு கேக்கும் எங்க ஊர் மாமிகளை மனசுல நினைச்சுண்டே “கொஞ்சம் வருஷம் ஆச்சு!”னு சுரத்தே இல்லாம பதில் சொன்னேன். நீங்க எங்க வேலைபாக்கறேள்?னு நான் கேட்காமையே அவர் ஒரு தனியார் இன்ஷுரன்ஸ் கம்பெனி பெயரை சொன்னார். “என்னடா எலி அம்மணமா போகுதே”னு எனக்கு முதல்லையே கொஞ்சம் சம்சியம் உண்டு, அந்த மனுஷன் கிட்ட அதுக்கு அப்புறம் ஒரு வார்த்தை பேசலையே.



லொட லொடனு பேசர்து இருக்கட்டும் முதல்ல குழந்தையை பாத்தியா? குழந்தை செளக்கியமா?னு பாசத்தோட கேட்கும் உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி! அம்மாவும் பொண்ணும் ஆண்டவன் அருளால் செளக்கியம்! குழந்தையோட முகஜாடை தக்குடுவை கலர் ஜராக்ஸ் எடுத்த மாதிரி இருக்கு. என்னை மாதிரி வாயாடியா வந்துடுமோ!னு தங்கமணிக்கு இப்பவே கவலையா இருக்கு. கல்லிடை காஸ்மோபொலிடனுக்கு போய் தாமிரபரணி ஜலத்தை ஒரு வாய் குடிச்சா என் பொண்ணரசியும் வாயாடியாதான் வருவா. இதுல கவலைபடர்துக்கு என்ன இருக்கு?னு சமாதானம் சொன்னேன். குழந்தைக்கு நாமகரணம் முடிஞ்சதுக்கு அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு பதிவுலக ‘கோவைசரளா’ அனன்யாக்காவும் மன்னார்குடி ‘மைனர்வாள்’ ஆர் வி எஸ் அண்ணாவும் பாக்கர்துக்கு வரர்தா போன் பண்ணி சொன்னா.
போன் பண்ணினாளே தவிர.................. (தொடரும்)

அடுத்த வாரம் - பாலக்காடு, மன்னார்குடி சந்திப்பு & கல்லிடை சாஸ்தா ப்ரீதி வர்ணனை (விஜய் டிவி ‘ஆபிஸ்’ சீரியல் மாதிரி ‘நாளை’னு இரண்டு சீன் ஓட்டினாதான் நாலு மனுஷா எட்டிப்பாப்பா)

24 comments:

R. Jagannathan said...

Though we don't know each other in person, you have become a known person to me by your blogs. There is another connection between us - I worked in Doha (19 yrs) and you are now in Doha!

My hearty congratulations to you and your wife on the birth of your little angel. May God Bless her.

-R. J.

இராஜராஜேஸ்வரி said...

ஜூலை மாசம் பத்தாம் தேதி அடியேனுக்கு ஒரு பெண் குழந்தை ஆசிர்வாதமாகியிருக்கு.//

மன நிறைவான வாழ்த்துகள்..!

Angel said...

ஹாய் தக்குடு :))

அன்பான இனிய வாழ்த்துக்கள் குட்டி இளவரசியின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் .

Angel akka .

ஸ்ரீராம். said...

வாழ்த்துகள் தக்குடு. குழந்தைக்கும் எங்கள் வாழ்த்துகள்.

//“சீட் மாத்தி குடுக்க வக்கில்லை, முகரகட்டைக்கு பேச்சு என்ன வேண்டியிருக்கு பேச்சு?”னு ‘நறுக்’னு//

அதானே!

கௌதமன் said...

வாழ்த்துகள்; ஆசீர்வாதம்.
அந்த ஆளிடம் இன்னும் கொஞ்சம் பேசியிருந்தால், உங்களிடம் ஒரு பாலிசி விற்றிருப்பாரோ? :-)

வெங்கட் நாகராஜ் said...

புதிய வரவிற்கு வாழ்த்துகள் தக்குடு.....

அந்த ஆள் பாலிசி விற்றிருப்பாரோ? :)))

Unknown said...

Yay... Congrats to both of you!!! What is the name of her? My best wishes to you guys. Enjoy!!

Mahi said...

குட்டிப் பொண்ணுக்கும், அவ அப்பா-அம்மாக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தக்குடு! பாப்பா பேர் என்னன்னு சொல்லவே இல்லை? :)

//“வெளி நாட்டுல வேலை பாத்தா இதுதான் ஒரு அசெளகரியம்! இந்த நிலைமை யாருக்கும் வரகூடாது”னு சராசரி வெளி நாடுவாழ் NRI இந்தியன் மாதிரி போலி ஒப்பாரி வைக்கர்துக்கு நான் தயாரா இல்லை. இதெல்லாம் உண்டுனு தெரிஞ்சுதானே கடலை தாண்டிவந்துருக்கு! அப்புறம் என்ன கண்ணை கசக்கிண்டு சின்னப்புள்ளத்தனமா?// ஸோ ப்ராக்டிகல் தக்குடு! :) பொண்ணு வந்ததும் அப்பா நன்னாவே மெச்சூர்ட் ஆகிட்டர்! ;) :)

ஆனாலும் பொறந்து 2 மாசம் கழிச்சுப் பொண்ணைப் பார்க்க வரது டூ மச்சாக்கும். இப்பவே குட்டிப்பாப்பாக்கு ஒரு மெயிலை அனுப்பிவைக்கிறேன், "அப்பாவை நன்னாகவனி!"- ன்னு! :)

ஓகே தக்குடு, ஹேவ் அ நைஸ் டைம் வித் ஃபேமிலி! சீக்கிரம் அடுத்த பதிவைப் பப்ளிஷ் பண்ணுங்க, அங்க சந்திப்போம்!

சுபத்ரா said...

Hearty Congrats!!!!!!!!!!!!!!!!!

வல்லிசிம்ஹன் said...

குழந்தைக்கு மனம் நிறைந்த ஆசிகள். தக்குடு.

சென்னைஉஇல தான் இருகிறீர்களா.
குழந்தையின் பெயர் சொல்லவில்லையே. இல்லை சொல்லி நான் மறந்துட்டேனா/.
ஹேவ் அ குட் டைம் மா.

Kavinaya said...

//அதுக்கு அப்புறம் பைசா நகர் சாய்ஞ்ச கோபுரம் மாதிரி இடதுபக்கமா சாய்ஞ்சுண்டே//

:) அச்சோ பா....வம் தக்குடுக் கோந்தே! ஆனாலும் புது பாப்பாதான் இப்போ முக்கியம். குட்டிப் பாப்பாக்குக் கட்டி முத்தங்கள்!

Matangi Mawley said...

Congrats Boss! :) My best wishes to the baby girl...

vetti said...

Hey...kutti papa-ku peru enna choose panni irukkel-nu sollavey illaye?!

சுசி said...

நெத்திக்கு மழைக்காக ஸ்கூல் லீவு விட்டுட்டாளா, நானும் குழந்தேளும் உன்னோட உம்மாச்சி ப்ளோக்ல பழைய போஸ்டெல்லாம் திருப்பியும் படிச்சிண்டு இருந்தோம். அப்போ தான், "சுந்தரி" போஸ்ட் படிச்சிட்டு அதே ஞாபகத்தோட படுக்க போனோம்.

குழந்தைகள் கூட கேட்டா, "ஏம்மா இந்த மாமா ரொம்ப நாளாவே எழுதலைன்னு?"

"சுந்தரி"க்கு எங்கள் ஆசிர்வாதங்கள்.

ADHI VENKAT said...

புதிய வரவிற்கான மனம் நிறைந்த வாழ்த்துகள். குழந்தை பெயர் சொல்லலியே?

அடுத்த பதிவை சீக்கிரம் போடுங்கோ...

திவாண்ணா said...

//குழந்தையோட முகஜாடை தக்குடுவை கலர் ஜராக்ஸ் எடுத்த மாதிரி இருக்கு. /// அடடா! பாவமே! உம், போனாப்போறது வுடு!

A and A said...

Congrats! Very happy to hear the news! Share the name of the baby!

Ramya

தக்குடு said...

குழந்தையோட பெயர் முத்துலெக்ஷ்மி (எ) அத்வைதா

Shobha said...

Congrats ! Kuzhanthai un jaadai ya irukku nnu sollikka nee 'Melidathula' permission vanginiya ?

கோமதி அரசு said...

அம்மாவும் பொண்ணும் ஆண்டவன் அருளால் செளக்கியம்! குழந்தையோட முகஜாடை தக்குடுவை கலர் ஜராக்ஸ் எடுத்த மாதிரி இருக்கு.//

வாழ்த்துக்கள்.
அப்பா ஜாடையாக பெண் இருந்தால் அதிர்ஷ்டம் என்பார்கள். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சி அலைகளைப் பரப்பட்டும் குழந்தை.
வாழ்க வளமுடன்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

இந்த வாட்டியும் ஆயபுவன்'ல தான் போய் இருப்பேன்னு ஆர்வமா படிக்க வந்தேன்... அது சரி ஒரே பிளைட்ல போனா போர் அடிக்கும் இல்லையா உனக்கு...:)


அத்வைதா போட்டோ கேட்டனே எப்ப அனுப்பறதா உத்தேசம்? நீ அனுப்பரதுக்குள்ள அனேகமா அவளே போட்டோ எடுத்து whatsappல ஷேர் பண்ணிடுவா எனக்கு...:)


//பதிவுலக ‘கோவைசரளா’ அனன்யாக்காவும் //

ஹ ஹ ஹ... ஐ லைக் இட்...:)


//விஜய் டிவி ‘ஆபிஸ்’ சீரியல் மாதிரி ‘நாளை’னு இரண்டு சீன் ஓட்டினாதான் நாலு மனுஷா எட்டிப்பாப்பா//

வாஸ்த்துவம் தான்...:) But that serial is nice you know...;)


பாலக்காடு வந்திருக்கே... அங்கிருந்து எட்டி பாக்கற தூரம், எங்க வீட்டுக்கு வரலை... கவனிச்சுக்கறேன்

கோமதி அரசு said...

குழந்தையின் பேர் முத்துலெக்ஷ்மியா! என் மகள் பேரும் அதுதான். ல்க்ஷ்மி வந்தாள் வீட்டுக்கு. இல்லம் மகிழ்ச்சியில் திளைக்கட்டும். முத்துலெக்ஷ்மி என்ற அத்வைதாவிற்கு வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.

தக்குடு said...

@ ஜெகன் மாமா - ரொம்ப சந்தோஷம்! வரிக்கு வரி ரசிக்கும் உங்களை மாதிரியான மனுஷாதான் நான் கிறுக்கர்துக்கு டானிக்! :)

@ ராஜி மேடம் - நன்றி! :)

@ தேவதை அக்கா - சந்தோஷம்! :)

@ சீராம் அண்ணா - :))

@ கெளதமன் சார் - ஆசிக்கு நன்னிஹை :)

@ வெங்கட் அண்ணா - ணம்ப கிட்ட பத்துபைசா பேறாது! :)

@ கவிதா மேடம் - நன்றி மேடம்!

@ மஹி - ரொம்ப சந்தோஷம்!

@ சுபத்ரா - நன்றி மேடம்!

@ கவினயா மேடம் - முத்தம் கூட ரைமிங் :P

@ மாதங்கி - ஓக்கே பாங்க் ஆபிஸர்! :)

@ வெட்டி அக்கா - அத்வைதா :)

@ த.தலைவி - நிச்சயமா எழுதலாம் :)

@ தில்லி அக்கா - போட்டாச்சு :)

@ திவா அண்ணா - அதே தான் :)

@ சுந்தரபாண்டியபுரம் அக்கா - அத்வைதா

@ ஷோபா மேடம் - எல்லாம் வாங்கியாச்சு! :P

@ கோமதி மேடம் - சந்தோஷம்! :)

@ இட்லி மாமி - போட்டோ அனுப்பி வைக்கறேன் இருங்கோ!

துபாய் ராஜா said...

குழந்தை முத்துலெக்ஷ்மி (எ) அத்வைதாவிற்கு வாழ்த்துக்கள்.

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)