புதுசா வந்துருக்கேளா?? எழுத்துத்தேர்வு 1
வினாத்தாளை ஒரு HR பிகர்தான் வந்து எல்லோருக்கும் வினியோகம் செய்தது. எனக்கு மட்டும் All the best! எல்லாம் சொல்லி தந்தது. HR பிகரின் ID card ‘ல எழுத்து சைஸ் குட்டியூண்டா இருந்ததால், ஷ்வேதா நாராயணன்!னு போட்டிருந்த அதோட பெயர் எல்லாம் நான் பார்க்க முயற்சி செய்யவே இல்லை(ப்ளட் குரூப் கூட எதோ B+னு பார்த்த ஞாபகம்). பக்கத்து டேபிள்காரன் வினாத்தாளை கையில் வாங்கி அதை திறக்காமல் ஒரு கையால் தொட்டுக்கொண்டு, எதோ ‘நாகாஸ்திரம்’ விடப்போற கர்ணன் மாதிரி கண்ணை மூடிக்கொண்டு ஸ்லோகம் எல்லாம் சொல்ல ஆரம்பித்துவிட்டாண். நானே பெரிய பழம், இவன் நம்பளவிட பெரிய ‘ஞானப்பழமா’ இருப்பான் போலருக்கே?? நு எனக்கு ஆச்சர்யமா இருந்தது.
அவனை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டே நானும் என்னுடைய வினாத்தாளை திறந்து வாசிக்கத் தொடங்கினேன். ஒரு 125 கேள்விகள் அதில் இருந்தது.ஆங்கிலஇலக்கணம்,மொழித்திறன்,வார்த்தைபயன்பாடு,கணிதம்,அறிவுக்கூர்மை சோதனை என்று பல தலைப்புகளின் கீழ் கேள்விகளை சரமாரியாக கேட்டு வைத்திருந்தார்கள். நான் முதலில் எனக்குத் தெரிந்த 55 கேள்விகளுக்கான பதில்களை ‘டிக்’ செய்ய ஆரம்பித்தேன். என்னுடைய டேபிளில் இருந்தவன் வேக வேகமாக டிக் செய்து கொண்டிருந்தான். சில சமயங்களில், கணிதம் எல்லாம் ஒரு தாளில் போட்டுப் பார்த்து பின்பு டிக் செய்தான்(ம்ம்ம், முடி இருக்கிற சீமாட்டி வலக்கொண்டையும் போட்டுக்கலாம், இடக்கொண்டையும் போட்டுக்கலாம்). அந்தப் பையனுக்கு கொஞ்சம் கூட டேபிள் மேனர்ஸே தெரியவில்லையே?? என்று நான் ஆச்சர்யப்பட்டேன். பரிட்சையெல்லாம் ஒரு Team Effort-டோட செய்யவேண்டிய ஒரு வேலை. ஆனால் அந்தப் பையன் நான் இருப்பதையே கவனிக்கவில்லை.
இருந்தாலும் நான் விடாமல், நீ எழுதி முடிச்சோனே பேப்பரை எங்கிட்ட தா! நீ எல்லாம் கரெக்டா எழுதிருக்கையா?னு நான் செக் பண்ணி தரேன்! என்றேன். அதுக்கும் அந்த ‘இடிச்சபுளி’ பதிலே சொல்லலை,. அந்த சமயத்தில்தான் நான் ஒரு விஷயத்தை கவனித்தேன். நான் உக்காசுண்டு இருந்த டேபிளுக்கு குறுக்கு வாக்கில் ஆறாவது டேபிளில் ஒரு தேவதை, ஆம்! அது என்னோட முகத்தை பார்த்துக்கொண்டிருந்தது. சே!சே! இதெல்லாம் வெறும் மனப்பிராந்திடா தக்குடு!னு மனசுக்குள்ள சொல்லிக்கொண்டு மீண்டும் எனது வினாத்தாளுக்குள் மூழ்கினேன். என்னோட டேபிள்காரன் எழுதற வேகத்தை பார்த்தா, நேத்திக்கு மாலைமுரசு-ல மாதிரி வினாத்தாள்ல வந்த கேள்விகளே வந்து, பரிட்சை எழுதும் +2 மாணவன் போல இருந்தது. மீண்டும் என்னை யாரோ நோட்டம் விடுவது போல மனதிற்குத் தோன்றியது.
இந்த முறையும் அதே பிகர்தான், இந்த முறை என்னைப் பார்த்து சிரிக்க வேறு செய்தது. என்ன்ன்ன்ன்ன்னடா இது!னு எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. பச்சைக்கிளிக்கே பச்சைகலர் டிரஸ் போட்ட மாதிரி பச்சைக்கலர் சல்வார், நாலு நாளைக்கு முன்னாடி வைத்த மருதாணியால் சிவந்த உள்ளங்கை,காதில் ஒரு சிறிய தங்கவளையம், வலது கையில் ஒரே ஒரு தங்க வளையல்,இடது கையில் இரண்டு சென்டிமீட்டர் விட்டமுடைய ஒரு குட்டி கைகடிகாரம் அதற்கு உள்ளே சாதாரண முள் இல்லாமல் ஒரு சிறிய குக்கூ பறவையே முள்ளாக இருந்தது. 4.5 ஆரோக்யா பாலை இரண்டு லிட்டர் வாங்கி, அதை குக்கரில் விட்டு, கட்டிதட்டாமல் கிண்டி, 1:2(பால்:ஜீனி) விகிதத்தில் ஜீனி சேர்த்து வந்த திரட்டிப்பாலை,புதிதாக வாங்கிய ஒரு வெள்ளித்தட்டில் போட்டு, அதை அவள் உக்காசுண்டு இருந்த டேபிளில் அவளுக்கு அருகில் வைத்தால்,வெள்ளித்தட்டு&திரட்டிப்பால் இரண்டுமே கொஞ்சம் கறுப்பாகத் தெரியும். சுண்ட வேண்டும் என்று நம்ப மனசுக்குள் நினைத்தாலே ரத்தம் வந்து விடுமோ? என்று எண்ணும் வண்ணம் இருந்தாள். ஆறு டேபிளுக்கு அப்பால் இருந்ததால் தெளிவாக என்னால் அவளை பார்க்கமுடியவில்லை. பரிட்சை அறையில் ரோஜாப்பூ! கைக்கு எட்டும் தொலைவில் நிலவு! கண்ணுக்கு எட்டாத தொலைவில் அவள் அப்பா! என்று பல கவிதை புத்தக டைட்டில் எல்லாம் கன்னா! பின்னா!னு மூளையில் உதயமானது.
நம்ப VGr-ருக்கு பிடிச்ச தாம்பரம் பொண்கள்தான் இந்த டெஸ்டை எல்லாம் கிளியர் பண்ணமுடியும்!எவ்ளோ யோசிச்சும், ஆறு தலைமுறைக்கு முன்னாடி இருந்த தாத்தா,பாட்டி பேரெல்லாம் நினைவுக்கு வந்ததே தவிர சரியான விடைகள் அகப்படவில்லை அதனால், மிச்சம் இருந்த கேள்விகள் அனைத்தும் இங்கி! பிங்கி! பாங்கி! என்னும் நவீன விஞ்ஞான அறிவியல் முறைப்படி குலதெய்வம் பெருவேம்புடையாரின் உதவியுடன் டிக் செய்யப்பட்டது. நம்ப கர்ணமகாராஜா பேப்பரை குடுப்பதற்கு முன்பும் ‘ப்ரம்மாஸ்திரம்’ விடப்போவது போல் ஸ்லோகம் எல்லாம் சொல்லிவிட்டுத்தான் கொடுத்தான். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு யாரெல்லாம் அடுத்த சுற்றுக்கு செல்லப்போகிறார்கள் என்ற லிஸ்டை வாசித்தார்கள். நான் எதிர்பார்த்ததை போலவே என்னுடைய பெயர் அதில் இல்லை. இன்டர்வ்யூவுக்கு வந்த 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தியையே உங்களுக்கு போதிய தகுதி இல்லை!னு சொல்லி ஓவரா thoughtsஐ apply பண்ணினவாளோட ஞாபகம்தான் வந்தது. மனதிற்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும், பச்சைக்கிளியை பார்த்த சந்தோஷத்தில் மனதை தேற்றிக் கொண்டேன். அறையை விட்டு பல்பு வாங்கிய அனைவரும் வெளியே வந்தோம். சோர்வாக இருந்தவனுக்கு சூப் குடுத்தது போல, ஹாய்! என்று யாரோ புல்லாங்குழலில் வாசித்தார்கள். திரும்பிப் பார்த்தால் விரும்பிப் பார்க்க முயன்ற பச்சைக்கிளி.....! I am வைஷ்ணவி! (உண்மைப்பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்று அறிமுகம் செய்துகொண்டாள். பக்கத்தில் அவளுடைய அப்பா/அண்ணன்(அதாவது நம்ப மச்சான்)இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு நானும் ஒரு ஹாய்! சொல்லிவிட்டு, I am தக்குடு! என்று continue செய்தேன். தூரத்தில் பார்க்கும் போது மயில் போல் இருந்தாலும், அவளுடைய குரல் குயில் போலத்தான் இருந்தது, இதனால் என் மனம் ரயில் போல அவளைத் தொடர்ந்தது.
நீங்களாவது செலக்ட் ஆவேள்னு நினைச்சேன்! இது உரிமையோடு அன்பான குரலில் பச்சக்கிளி, நானும் அப்படித்தான் நினைச்சேன், ஆனா என்னோட டேபிள்காரன் ரொம்பமோசம்!இது நான்தான். நான் டிருப்ளிகேன்ல இருக்கேன்! என்றாள்( நினச்சேன்! மூக்கு கருடன் மாதிரி இவ்ளோ தீர்க்கமா இருக்கும் போதே ------ வீட்டு அழகாதான் இருக்கனும்!னு மனசு பேசியது). அப்பா பேரு பார்த்தசாரதியா??னு 'இந்தியன்' கவுண்டமணி மாதிரி கேட்கவேண்டும் என்று வாய்வரைக்கும் வந்துவிட்டது, கச்சேரிக்கு பங்கம் விளையுமோ? என்ற பயத்தில் அமுக்கிவிட்டேன். பொண்களுக்கு அவாளோட நைனாவை மட்டும் நக்கல் அடிச்சா தாங்கிக்கவே முடியாது, இது முக்கியமான பாலபாடம். அவள் பேசும் போது, 3 ராஜேஷ் வைத்யா வீணை, 4 ரமணி ப்ளூட் மோஹன ராகத்தில் ஒன்றாக வாசிப்பது போல இருந்தது. கச்சேரி நல்லபடியாக சென்றுகொண்டிருக்கும் போது, மேலே தூக்கிப்போட்டு பிடிக்கத்தவறிய விக்கு வினாயகராமின் கடம் டமார்!னு கீழே போட்டு உடைத்தது போல எங்கண்ணன் வந்து சேர்ந்தான்.
சபாலக்க்ஷணமே இல்லாமல், என்னடா டெஸ்டு ஒவுட்டா? என்று கத்தினான். அது அவளுக்கும் பொருந்தும் என்பதால் பச்சக்கிளியோட வதனம் அவமானத்தால் இருண்டுவிட்டது. நான் வரேன்!னு சொல்லிட்டு வைஷ்ணவி நகர்ந்தாள். நாங்களும் கம்பேனியின் வாசல் கதவு வரை வந்துவிட்டோம். நான் இந்த பக்கமா போகணும்! என்று சோகமாக சொன்னாள் அவள். எங்கண்ணன் விடாமல், நாங்க அந்த பக்கமா போகனும் என்றான். நான் அவனிடம், நாமளும் டிரிப்ளிகேன் வழியா போய் வெஸ்டு மாம்பலம் போக எதுவும் வழி இல்லையா?னு கேட்டேன். ஒரு முப்பதுகிலோமீட்டர் சுத்திப்போனாலும் பரவாயில்லை!னு சொன்னென்.
அதுக்குள்ள கிளி பறந்து போய்டுத்து. “நீ டெஸ்டு பெயில் ஆனது கூட எனக்கு வருத்தம் இல்லைடா! ஆனா வெளிய வரும்போது ஒரு பிகரோட வந்த பாத்தியா! அதுதான்டா எனக்கு கோவம்!”னு கத்தினான் உடன்பிறப்பு. வடபழனியிலிருந்து வெஸ்டு மாம்பலம் வரைக்கும் மெட்ராஸ் வெயிலில் ‘தண்டி யாத்திரை’ மாதிரி என்னை நடத்தியே கூட்டிக்கொண்டு போய், காலையில் கொடுத்த ஆட்டோ காசை சமன்செய்தான். இதன் பிறகு, “வேலையே கிடைக்காமல் கல்லிடைக்குறிச்சி திண்ணையை தண்டிண்டு இருந்தாலும் இருப்பேனே தவிர, தண்ணி இல்லாத இந்த பொட்டக்காடான மெட்ராஸ் ஊர்ல மட்டும் வேலை பார்க்கமாட்டேன்!”னு ஒரு சபதம் செஞ்சுட்டு ஊருக்கு வந்துட்டேன். இந்த வேலை கிடைக்கலைனாலும் பிற்காலத்தில் வேற ஒரு நல்ல வேலைக்கு பரிக்க்ஷை எழுத இந்த அனுபவம்(அதாவது பரிக்க்ஷை அனுபவம்) உபகாரமா இருந்தது.
பச்சக்கிளியோட அப்பா, எதாவது 'பன்'திண்கற ஒரு அமெரிக்கா மாப்ளைக்கோ(பூனைக்கோ), அல்லது காலங்கார்த்தால ஏழு மணிக்கே 'ஓட்ஸ்' கஞ்சியும் ஒரு வாழைப்பழமும் சாப்டுட்டு, தங்கமணிக்கு டாட்டா! கூட சொல்லாமல், லாப்டாப்பையும் தொங்கவிட்டுண்டு, காலில் கஞ்சியை கொட்டிக்கொண்டது போல 'டுயூப்' ரயிலை பிடிப்பதற்கு ஓடும் ஒரு லண்டன் மாப்ளைக்கோதான் நிச்சயமா பச்சக்கிளியை கல்யாணம் பண்ணி கொடுத்திருப்பார்....:(
அம்மாடி வைஷூ குட்டி, நீ எங்க இருந்தாலும் சந்தோஷமா இருக்கனும்!னு இந்த அண்ணா(வரலாறு முக்கியம் அமைச்சரே!!!) ஆசிர்வாதம் பண்ணரேன்மா!....(அவ்வ்வ்வ்வ்வ்......)
இப்படிக்கு,
அண்ணனின் சதியால் கிளியை கோட்டைவிட்ட ‘அப்பாவி’ தக்குடு
குறிப்பு - எழுத்துத்தேர்வுக்குச் செல்லும் வாலிபர்கள் தயவுசெய்து தனியாகவே செல்லவும், அண்ணன் & அக்கா போன்ற அனுகூல சத்ருக்களை கூட்டிக்கொண்டு செல்ல வேண்டாம்.
116 comments:
தக்குடு நீ வர்ணிக்கற விதத்தை பார்த்தால் பேசாம ஒரு தமிழ் படத்துக்கு வசனம் எழுத போலாம். அவ்வளவு வர்ணனை (ஜொல்ஸ்) உன் பதிவுல கால வைக்க முடியல வழுக்கறது ஒரேடியா
அத்திம்பேர் போன்ற ஆட்களையும் கூடி செல்ல வேண்டாம்
ஆச்சரியமா இருக்கே !!
அது எப்படி சத்ய யுகம் (க்ருத யுகம்), த்ரேத யுகம், த்வாபர யுகம்
காலத்திலே நீங்க எழுதின ப்ளாக்கிலே இருந்த அதே பதிவை திரும்பவும்
கலியுகத்திலும் மீள் பதிவா போட்டிருக்கேள் !!!
பந்தங்கள் சிலவை ஜனம ஜன்மாந்திரமா தொடரும் என்பார்களே !!
ஒன்று கூடப்புறந்தவா.
இன்னொன்று கூடப்பறக்கற துடிச்சவா !!
போனால் போகட்டும் போடா....
வைஷ்ணவி இல்லைன்னாலும்
எங்க தக்குடியோட மூக்குக்கும் முழிக்கும் ஒரு
வானவில் வரும். பாரடா !!
சுப்பு ரத்தினம்.
//பச்சைக்கிளிக்கே பச்சைகலர் டிரஸ் போட்ட மாதிரி பச்சைக்கலர் சல்வார், நாலு நாளைக்கு முன்னாடி வைத்த மருதாணியால் சிவந்த உள்ளங்கை,காதில் ஒரு சிறிய தங்கவளையம், வலது கையில் ஒரே ஒரு தங்க வளையல்,இடது கையில் இரண்டு சென்டிமீட்டர் விட்டமுடைய ஒரு குட்டி கைகடிகாரம் அதற்கு உள்ளே சாதாரண முள் இல்லாமல் ஒரு சிறிய குக்கூ பறவையே முள்ளாக இருந்தது./
பாஸ் அனேகமா அமெரிக்கவோ/லண்டனோ சொல்லமுடியாது ப்ளாக் மூலமா ரீ-எண்ட்ரீ கொடுத்து பாசமலர் ரேஞ்சுக்கு அழத்தான் போறீங்க :))))
அட அட.. என்னமா ஒரு வர்ணனை..
அந்தப் பச்சைக்கிளிக்கொரு
பால்கோவா கொடுத்து
பெஞ்சினில் அமர வைத்தேன்!!!
அந்தப் பச்சைக்கிளியிடம்
மெல்ல நகர்ந்து
ஆசையை சொல்லி வைத்தேன் !!
அப்போ வந்தானே ஒரு கிராதகன்
அவன் செய்தானே ஒரு பாதகம்!!
ஆரம்ப காலத்திலேயே கொஞ்சம் ஓவராத்தான் ஆட்டம் போட்டிருக்கீங்க போல! அதான் இப்ப தக்குடு @ தோஹா ஹய்யோ ஹய்யோ ! :))))
ஆயில்யன்
@
தோஹா
http://www.youtube.com/watch?v=yJk1ITDQCaY
" ஏன்னா ! சமீபத்திலே அமெரிக்காவுக்கு சென்றபோது ஒரு கலை நிகழ்ச்சிலே ஒரு பொண்ணு
அழறதை இல்லை பாடறதைப் பாத்தோமே !!
' எங்கே எனது கவிதை அப்படின்னு ....'
ஒருவேளை அவளா இருக்குமோ ?? எதுக்கும் தக்குடுவை ஒரு விசா எடுத்துண்டு அண்ணாவையும்
கூட்டிண்டு அமெரிக்கா போய் பார்க்கச் சொல்லுங்கோ !! "
அந்தப்புள்ள அண்ணா நம்பர் இருந்தா கொடுங்கோ... நானே ஃபோன் போட்டு சொல்றேன்.
மீனாட்சி பாட்டி.
பச்சைக்கிளிக்கே பச்சைகலர் டிரஸ் போட்ட மாதிரி பச்சைக்கலர் சல்வார், நாலு நாளைக்கு முன்னாடி வைத்த மருதாணியால் சிவந்த உள்ளங்கை,காதில் ஒரு சிறிய தங்கவளையம், வலது கையில் ஒரே ஒரு தங்க வளையல்,இடது கையில் இரண்டு சென்டிமீட்டர் விட்டமுடைய ஒரு குட்டி கைகடிகாரம் அதற்கு உள்ளே சாதாரண முள் இல்லாமல் ஒரு சிறிய குக்கூ பறவையே முள்ளாக இருந்தது.
intha concentrationa written examla kattiiruntha selection agirukkalam. pakathula irukkaravana parakku parthundu irunthuttum, paccha kilizhi enna panrathunu partha ippadi than agum adhukku akkaraiya vantha annava gopa pattu enna panna?
//நானே பெரிய பழம், இவன் நம்பளவிட பெரிய........//
ம்ம்....பலா பழமா? :))
//அறிவுக்கூர்மை சோதனை//
நல்ல திருபாச்சி அறுவாளா எடுத்து சீவி கூர் ஆக்கிடுங்க தக்குடு.:))
//நான் முதலில் எனக்குத் தெரிந்த 55 கேள்விகளுக்கான பதில்களை ‘டிக்’ செய்ய ஆரம்பித்தேன். //
கண்ணுக்கு தெரிஞ்சவா? இல்ல பதில் தெரிஞ்சவா?
//பரிட்சையெல்லாம் ஒரு Team Effort-டோட செய்யவேண்டிய ஒரு வேலை.//
எது...அவன் எழுத எழுத நாம பார்த்து எழுதுவோமே அதுவா? அதுக்கு பேரு டீம் எஃப்ர்ட் இல்ல தக்குடு...ஈ அடிச்சாங் காப்பின்னு அதெ சொல்லுவா....
//வெளிய வரும்போது ஒரு பிகரோட வந்த பாத்தியா! அதுதான்டா எனக்கு கோவம்!”னு கத்தினான் உடன்பிறப்பு//
அதானே பார்த்தேன்...காதில், மூக்கில் என்று புகை அதிகமாயிருக்கும் உடன்பிறப்புக்கு :)
//மீண்டும் எனது வினாத்தாளுக்குள் மூழ்கினேன்.//
விடைத்தாளுக்குக்குள்ளதான் நாம போவே முடியாதே...சோ...வினாத்தாளுக்குள்ளதான் முழ்(ழி)கனும்...
//அது என்னோட முகத்தை பார்த்துக்கொண்டிருந்தது.//
May be same pinch?.... உங்களைமாதிரியே பக்கத்து சீட் ஹெல்ப் கெடைக்கலையோ என்னவோ....
ரொம்ப அனுபவிச்சு எழுதறேள்...வாழ்த்துக்கள் தக்குடு !
//காதில் ஒரு சிறிய தங்கவளையம்//
குண்டலம் இல்ல? :P
//அவளுக்கு அருகில் வைத்தால்,வெள்ளித்தட்டு&திரட்டிப்பால் இரண்டுமே கொஞ்சம் கறுப்பாகத் தெரியும்.//
வெள்ளித்தட்டு உங்க ரிஃப்ளக்ஷன்.... ம்ம்...திரட்டிப்பால் நீங்க காந்த விட்டுட்டதால... கரெக்ட்தானே?
//பொண்களுக்கு அவாளோட நைனாவை மட்டும் நக்கல் அடிச்சா தாங்கிக்கவே முடியாது, இது முக்கியமான பாலபாடம்//
அடாடா... :)
// தண்ணி இல்லாத இந்த பொட்டக்காடான மெட்ராஸ் ஊர்ல மட்டும் வேலை பார்க்கமாட்டேன்!”னு ஒரு சபதம் செஞ்சுட்டு ஊருக்கு வந்துட்டேன். //
சூப்பரு...அதான் செழிப்பான பெங்களூர் வாழ்க்கை அமைந்ததுக்குக் காரணம்.. :)
தக்குடு த(அ)ம்பி,
ஆனந்த விகடன்ல தொடர் கதை எழுத முயற்சி பண்ணலாம். அவ்ளோ நன்னா இருக்கு. முடிஞ்சா கொஞ்சம் வயத்து வலி மாத்திரை அனுப்புங்கோ!!.
ரூம் ல த(அ)ம்பி ராகவன் கக்கு பிக்குன்னு சிரிச்சுண்டே இருந்தான். என்னடான்னு பாத்தா, உங்க ப்ளாக் தான் காரணம்.
பச்ச கிளியா அணு அணுவா அலசிட்டு, ஒண்ணும் சரியா தெரியலேன்னு சொல்றது, ரொம்பவே ஓவர். !!!!!
//எவ்ளோ யோசிச்சும், ஆறு தலைமுறைக்கு முன்னாடி இருந்த தாத்தா,பாட்டி பேரெல்லாம் நினைவுக்கு வந்ததே தவிர சரியான விடைகள் அகப்படவில்லை //
அதெயே எழுத வேண்டியதுதானே? ஏன்னா.. என் பிரெண்ட் எக்ஸாம் எழுதும்போது இப்படிதான் இன்விஷிலேட்டர் சொன்னாராம்... கேட்ட கேள்விக்கு பதில் எழுதுபான்னு.. பிரெண்டு கேட்டு இருக்கான்...அது சரி..அப்போ எனக்கு தெரிஞசத எல்லாம் எங்க எழுதறதாம்ன்னு...:))
//இதனால் என் மனம் ரயில் போல அவளைத் தொடர்ந்தது.//
தடம் பொரளாமா இருந்தா செரிதான்... அக்ஸிடெண்ட் எதும் ஆயிடலியே? :))
அவள் பேசும் போது, 3 ராஜேஷ் வைத்யா //வீணை, 4 ரமணி ப்ளூட் மோஹன ராகத்தில் ஒன்றாக வாசிப்பது போல இருந்தது. கச்சேரி நல்லபடியாக சென்றுகொண்டிருக்கும் போது, மேலே தூக்கிப்போட்டு பிடிக்கத்தவறிய விக்கு வினாயகராமின் கடம் டமார்!னு கீழே போட்டு உடைத்தது போல எங்கண்ணன் வந்து சேர்ந்தான்.//
கடைசியா...கதரி கோபால்நாத்... எதும் வாசிச்சாரா? :))
//“வேலையே கிடைக்காமல் கல்லிடைக்குறிச்சி திண்ணையை தண்டிண்டு இருந்தாலும் இருப்பேனே தவிர, தண்ணி இல்லாத இந்த பொட்டக்காடான மெட்ராஸ் ஊர்ல மட்டும் வேலை பார்க்கமாட்டேன்!”னு ஒரு சபதம் செஞ்சுட்டு ஊருக்கு வந்துட்டேன்.//
பச்சக்கிளி மெட்ராஸ்லனா இருக்கு.... ஓ... சீ..சீ... இந்த பழம் புளிக்கும்... ஸடைலா? :))
//குறிப்பு - எழுத்துத்தேர்வுக்குச் செல்லும் வாலிபர்கள் தயவுசெய்து தனியாகவே செல்லவும், அண்ணன் & அக்கா போன்ற அனுகூல சத்ருக்களை கூட்டிக்கொண்டு செல்ல வேண்டாம்.//
செரி... ஆமா... எழுத்துத்தேர்வுக்குச் செல்லும் வாலிபிகளுக்கு என்ன குறிப்பு? ”தயவுசெய்து அப்பா, அண்ணன் போன்ற திடநாராயணர்கள் துணையோடே செல்லவும்...தக்குடு மாதிரி ஜொள்ளர்களிடம் இருந்து தப்பிக்கன்னு” உங்க அண்ணா சொல்றார்..:P
சரி..வந்த வேலை முடிஞ்சது... வரட்டா? :))பின் குறிப்பு: கடந்த இரண்டு, முணூ போஸ்ட்க்கு பின்னூட்டம் போட நீங்க குடுத்த பணம் பத்தாத காரணத்தால நான் இப்படி பண்ணலன்னு தாழ்மையோட சொல்லிக்கறேன்...
Thakkudu,,kadaisiya climax vanthaacha...rombha feel pannatha da ambi thakkudu intha interview illaina innoru interview...interview la fail aaitoemnu oru sogame illama antha pachaikiliya varnikkarathukagave intha post poetrukayae paa angathaan nee nikara... unga annan correct ah sollirukkaru unga annan maadhiri irkka aaluga kooda poelam aana unna maathiri oru jollu truck ah kooda kootittu poegave koodathu..
//ஒருவேளை அவளா இருக்குமோ ?? எதுக்கும் தக்குடுவை ஒரு விசா எடுத்துண்டு அண்ணாவையும்
கூட்டிண்டு அமெரிக்கா போய் பார்க்கச் சொல்லுங்கோ !! "//
எதுக்கு திரும்பவும் அண்ணாஆஆ? ஓருதரம் தண்டி யாத்திரை பத்தாதா... தக்குடுக்கு..:))))) அமெரிக்கால இருந்து நடந்தா காலு பழுத்துறும் ...ஹா...ஹா....ஹா...
உங்கண்ணன் நீ ஜிகிடியோட வந்ததுக்காக அல்ல; அந்த பச்சைக்கிளி இத்தனை நாள் தன் கண்ணுல படாம உன் கண்ணுக்கு மட்டும் சரியா தட்டுப்பட்டுருக்கேன்னு தான் வயிறு எரிஞ்சிருப்பான்னு நான் யாரிடமும் சத்தியமா சொல்ல மாட்டேன்...
அப்புறம் "பச்சைகிளிகள் தோளோடு; பாட்டுக்கிளியோ மடியோடு"ன்னு பாட்டு பாடிக்கிட்டே ஒட்டகத்தை விட்டுடாதே... அப்புறம் ஷேக் நம்மளை ஒட்டகமா மாத்திடுவானுங்க...
//அந்த சமயத்தில்தான் நான் ஒரு விஷயத்தை கவனித்தேன். நான் உக்காசுண்டு இருந்த டேபிளுக்கு குறுக்கு வாக்கில் ஆறாவது டேபிளில் ஒரு தேவதை, ஆம்! அது என்னோட முகத்தை பார்த்துக்கொண்டிருந்தது.//
ஆமா, முத்திப்போன வயசுல இப்படி பிரெஷர் எழுதுற பரீட்சை எழுத வந்திருக்கேன்னு பார்த்திருப்பா... நீ தான் யானைப்பழமாச்சே...
4.5 ஆரோக்யா பால் கலருன்னு சொன்னே... ஆனால், இதயம் நல்லெண்ணெய் உடம்புன்னு சொல்லாமல் விட்டுட்டே பார்த்தியா...
//ஆறு தலைமுறைக்கு முன்னாடி இருந்த தாத்தா,பாட்டி பேரெல்லாம் நினைவுக்கு வந்ததே தவிர சரியான விடைகள் அகப்படவில்லை அதனால், மிச்சம் இருந்த கேள்விகள் அனைத்தும் இங்கி! பிங்கி! பாங்கி! என்னும் நவீன விஞ்ஞான அறிவியல் முறைப்படி குலதெய்வம் பெருவேம்புடையாரின் உதவியுடன் டிக் செய்யப்பட்டது.//
ஊருக்கு போன பின்னாடி திருவாளர் கோவிந்தனின் அர்ச்சனையில், இந்த தாத்தா பாட்டி எல்லாம் கண்ணு முன்னாடியே வந்து நின்னுருப்பாங்களே!!! அப்புறம் இப்படியா சங்கத்து ரகசியங்களை போட்டு உடைக்கிறது (விஞ்ஞான தத்துவம்)...
கண்ணு... மயிலுல ஆண் மயிலு தான் அழகு... பெண் மயில் கண்றாவியா இருக்கும்... இதுவும் அப்படி தானா?
//நீங்களாவது செலக்ட் ஆவேள்னு நினைச்சேன்!//
கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்னு பாட்டு பாடிக்கிட்டே இருந்தா எப்படிட செலக்ட் ஆவீங்க... (டுபுக்கு, என்னை பாக்காம ஒழுங்கா பேப்பரை பாத்து பரீட்சை எழுதி இருந்தா ஒழுங்கா பாஸ் ஆகி இருக்கலாம்; அத்தை விட்டு நான் திரும்பி பார்த்ததுக்காக வச்ச கண்ணு வாங்காம என்னையே பாத்துகிட்டு இருந்தா எப்படிடா பாஸ் ஆவேன்னு தானே கேட்டுச்சு அந்த பொண்ணு)...
//“நீ டெஸ்டு பெயில் ஆனது கூட எனக்கு வருத்தம் இல்லைடா! ஆனா வெளிய வரும்போது ஒரு பிகரோட வந்த பாத்தியா! அதுதான்டா எனக்கு கோவம்!”னு கத்தினான் உடன்பிறப்பு.//
உங்க அண்ணிக்கு இந்த விஷயம் தெரியுமா???
//பச்சக்கிளியோட அப்பா, எதாவது 'பன்'திண்கற ஒரு அமெரிக்கா மாப்ளைக்கோ(பூனைக்கோ), அல்லது காலங்கார்த்தால ஏழு மணிக்கே 'ஓட்ஸ்' கஞ்சியும் ஒரு வாழைப்பழமும் சாப்டுட்டு, தங்கமணிக்கு டாட்டா! கூட சொல்லாமல், லாப்டாப்பையும் தொங்கவிட்டுண்டு, காலில் கஞ்சியை கொட்டிக்கொண்டது போல 'டுயூப்' ரயிலை பிடிப்பதற்கு ஓடும் ஒரு லண்டன் மாப்ளைக்கோதான் நிச்சயமா பச்சக்கிளியை கல்யாணம் பண்ணி கொடுத்திருப்பார்....:(//
நல்ல வேளை ஒட்டகப்பாலும், நோன்பு கஞ்சியும் குடிக்காமல் தப்பிச்சுகிடுச்ச்சே அந்த பொண்ணு...
எவ்ளோ யோசிச்சும், ஆறு தலைமுறைக்கு முன்னாடி இருந்த ////தாத்தா,பாட்டி பேரெல்லாம் நினைவுக்கு வந்ததே தவிர சரியான விடைகள் அகப்படவில்லை அதனால், மிச்சம் இருந்த கேள்விகள் அனைத்தும் இங்கி! பிங்கி! பாங்கி! என்னும் நவீன விஞ்ஞான அறிவியல் முறைப்படி குலதெய்வம் பெருவேம்புடையாரின் உதவியுடன் டிக் செய்யப்பட்டது. ////
...... ha,ha,ha,ha,ha.... totally hilarious!
எனக்கு கோவ கோவமா வருது! நீங்க அம்பி எல்லாம் எப்போ பதிவு போடறீங்கன்னே தெரியல ஆனா எப்போ வந்து பாத்தாலும் 30 கமெண்ட் ஏற்கனவே இருக்கு! என்ன அக்கிரமம் இது? நான் வந்து துப்புவதற்கு ஒரு மோட்டிவேஷன் வேண்டாமா எனக்கு?
இந்த பாஸ்டன் சார் ப்லாக்குலயும் இதே கதை தான், ஒரு மாசம் கழிச்சு பதிவு எழுதினாலும் கும்மி 1 மணி நேரத்தில் முடிஞ்சுருது! என்னை மாதிரி ஏழை பாழைங்க சோத்துக்கு என்ன பண்ணுவோம்?!
//இப்படிக்கு,
அண்ணனின் சதியால் கிளியை கோட்டைவிட்ட ‘அப்பாவி’ தக்குடு//
அப்பாவின்ர பேரை நான் patentright வாங்கி வெச்சுண்டுருக்கேன். அதை இப்படி அடபாவிக எல்லாம் யூஸ் பண்றதை வன்மையாக கண்டிக்கிறேன்........கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
@ பொற்கொடி - உங்கள் கருத்தும் குமுறலும் மிக மிக ஞாயமானது. நாம் இதை இப்படியே விடுவது சரி இல்லை என கருதுகிறேன். விரைவில் நமது கழக பொதுக்குழுவை கூடி சில தீர்மானங்களை நிறைவேற்றி வேண்டி உள்ளது..... இப்படிக்கு சக கழக கண்மணி அப்பாவி தங்கமணி
ஹாஹாஹா! தக்குடு, போஸ்ட் சூப்பர். ஃபுல் வி.வி.சி.
ஆனா நீங்க நிசமாவே அடப்பாவியான அப்பாவி தான். அம்பிக்கு இருக்கற சாமர்த்தியம் உங்களுக்கு இல்லன்னு திருப்பியும் நிரூபிக்கறீங்களே! அவரு மன்னி சிக்கற வரை அம்பியா இருந்துட்டு இப்போ பூரிக்கட்டை தவிர பெரிசா வேற ஒண்ணும் நடக்காதுங்கற தில்லுல் ரெமோ ஆகிண்டு இருக்கார் (அதாவது வலையுலகத்துல, நிஜத்துல நான் சொல்லவே வேண்டாம்). நீங்க என்னடான்னா.. (இல்ல ஒருவேளை தோஹாவிலே ஏற்கனவே..?)
அடடே கவித்தலைவி அ.த.! இங்க தான் இருக்கீங்களா? வீட்டுல எல்லாரும் நலமா? இன்னிக்கு என்ன சமையல்?
//நானே பெரிய பழம்//
நான் சொல்வது எல்லாம் பொய். பொய் தவிர வேறு எதுவும் இல்லை (இந்த பதிவ படிச்சப்பரமும் நீங்க பழம்னு நாங்க நம்பனும்.....சரி சரி....)
//ஆறு டேபிளுக்கு அப்பால் இருந்ததால் தெளிவாக என்னால் அவளை பார்க்கமுடியவில்லை//
ஆறு டேபிள் தள்ளி இருந்தே ரெண்டு சென்டிமீட்டர் வாட்ச் எல்லாம் தெரியறதா.... overpowerkaasia னு உங்க கண்ல ஏதோ வியாதின்னு நெனைக்கிறேன்...
// Porkodi (பொற்கொடி) said...
அடடே கவித்தலைவி அ.த.! இங்க தான் இருக்கீங்களா? வீட்டுல எல்லாரும் நலமா? இன்னிக்கு என்ன சமையல்? //
நல்ல இருக்கேனுங்க அம்மணி... நீங்க நலமா.. சமையல் காத்தால எப்பவும் போல பிரட் சாண்ட்விச் தான். அங்க எப்படிங்க? மதியத்துக்கு வேணா பருப்பு சாதம் இருக்கு, சாப்பிடலாம் வாங்க கொடி... (சும்மா கேட்ட பாவத்துக்கு....அப்படின்னு எல்லாம் சொல்ல கூடாது....)
//வெள்ளித்தட்டு&திரட்டிப்பால் இரண்டுமே கொஞ்சம் கறுப்பாகத் தெரியும்//
திரட்டிப்பால் விளம்பரம் இன்னுமா முடியல... பெருமாளே காப்பாத்து....
எனக்கு இப்ப தானே 6 மணி ஆகுது.. இனிமே தான் எல்லாமே யோசிக்கணும்.. :) பருப்பு சாதமா, அதுக்கு போய் போட்டிக்கு வருவேனா, நல்ல நிதானமா நெய் விட்டு சாப்பிடுங்க. ஆமா அதை எப்படி லன்ச் பாக்ஸ்ல எடுத்துட்டு போவீங்க?!
(தக்குடு, இனிமேல் இந்த மாதிரி கொள்ளு பதிவு எல்லாம் எழுதினா, கமெண்ட் செக்சன் இதான் கதி, தெரிஞ்சுதோ?)
//(தக்குடு, இனிமேல் இந்த மாதிரி கொள்ளு பதிவு எல்லாம் எழுதினா, கமெண்ட் செக்சன் இதான் கதி, தெரிஞ்சுதோ?)//
ஹா ஹா ஹா... சூப்பர்.... பருப்பு சாதம் எப்பவும் போல டிபன் பாக்ஸ்ல தான்... ஒகே ஒகே நோ டென்ஷன்... அது எப்படின்னு கேட்டீகன்னா.... (ஐயோ... தக்குடு நாகஸ்த்ரம் வருது... மீ எஸ்கேப்....)
தக்குடு... சிரிச்சி மாளலை.. எப்படி இப்பூடி??
அம்பி : இதுக்கு மேல ஒருத்தனால வெக்கத்தை விட்டு எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேக்கமுடியாது? நீங்க பொண்ணு பாக்கறீங்களா இல்ல கழகத் தலைவர்ங்கற முறையில் கழகக் கண்மணி தக்குடுவுக்கு நான் பொண்ணு பாக்கவா?
நான் பாத்தா Christina / Emily / Kimberly இப்படித்தான் இருக்கும் பரவாயில்லயா??
கேடி / அப்பாவி - டுபுக்கு சார் தொறத்தி விட்டுடாருன்னு இங்க கடையைப் போட்டுட்டீங்களா??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
Super post Thakkudu. Varnanai la kalakitta. LK solra maadhiri overa vazhukkudhu enakku.
Ippa veetula niraiya aani pidingukittu irukken. Porumaiaya vandhu comment ezhudharen.
AT solra madhiri Thakkudu onnum pazham madhiri theriyala. Pazham thinnu kottai podara aalu madhiri dhaan theriyudhu. Edhukku thevai illam indha (namba mudiyadha) thannadakkam.
Ennoda Rangamani kooda kaalaila verum oats kanji dhaan saapiduvaaru. Sir romba diet conscious.
//தக்குடு... சிரிச்சி மாளலை.. எப்படி இப்பூடி??
அம்பி : இதுக்கு மேல ஒருத்தனால வெக்கத்தை விட்டு எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேக்கமுடியாது? நீங்க பொண்ணு பாக்கறீங்களா இல்ல கழகத் தலைவர்ங்கற முறையில் கழகக் கண்மணி தக்குடுவுக்கு நான் பொண்ணு பாக்கவா?
நான் பாத்தா Christina / Emily / Kimberly இப்படித்தான் இருக்கும் பரவாயில்லயா??//
Sriram sir, enakku ennamo Thakkudu already ponnu ellam paarthu erpaadu panni vachirukkira madhiri dhaan thonudhu. Idhu madhiri ellam lead kudutha veetula pechu arambipaanga medhuva mattera sollalaamnu idea pannikittu irukiraru. Paavam avanga veetula ivara innum kuzhandhai nu nambikittu namba thakkudu thakunoondu paiyan avanuku ippa enna kalyanathukku avasaram nu pesama irukanga nu ninaikiren.
Nambala madhiri youth ukku (appavi thangamani post la unga comment padichen, andha baadhippu dhaan) dhaane theriyum innoru youthoda manasu!
@ Sriraam said
//கேடி / அப்பாவி - டுபுக்கு சார் தொறத்தி விட்டுடாருன்னு இங்க கடையைப் போட்டுட்டீங்களா//
நாட்டாம... இவரும் தொரத்தினா இருக்கவே இருக்கு உங்க ப்ளாக்? என்ன நான் சொல்றது சரியா? (சரி சரி ஓடாதீங்க....)
@ மதுரம்
கைய குடுங்க... சூப்பர் சூப்பர் சூப்பர்.... கரெக்ட்ஆ சொன்னிங்க? எல்லாம் சும்மா act தான் இவரு?
tkp, aha..aha...enna oru varnanai. tamil vilayadu!!!
'Tambaram Pongal' title ku kizha kandippa poda vendiya varthaigal ivai tham. Ana ipadi vaishnavi pera pottu inda varnanai ya public a ezhudama...konjam save panni vanchurunda future ku helpful irundurukum :)
But the post was funny from start to end as usual. Great!!!!
@appavi thangamani: idha naan romba naal munnadiye guess pannitten. Ovovoru post layuma accidentala appadi amaiyum? Nambara madhiriye illa.
//தூரத்தில் பார்க்கும் போது மயில் போல் இருந்தாலும், அவளுடைய குரல் குயில் போலத்தான் இருந்தது, இதனால் என் மனம் ரயில் போல அவளைத் தொடர்ந்தது.//
அடடா.. என்ன ஒரு ரைமிங்.. :D :D
Aanalum noku romba dhairyam Thakkudhu. Nee paatuka ippadi overa varnanai ellam panra. unaku vara pora Thangamani engala madhiri appaviya (rangamani enna pannalum adjust pannikira madhiri)irundha parava illa. Idhellam padichuttu Pudhu Pudhu Arthangal Geetha madhiri aayida pora, jakiradhai. Unga Dubukku annan madhiri samarthiyama kalyanam panindu, kuzhandhai kutti pethundu, thangamani aseervaadhathoda "jolli thirindha kaalam" nu dhairyama (?) ezhudha aarambi. Ennavo thambiya poitta, naan solradha sollitten. Apparam ivvalavu akkanga irundhu enna prayojanam yaarum enaku advice pannave illenu pallu mela nakka pottu pesa koodadhu sollitten. Enna right dhaane Appavi?
@ Mathuram said //Enna right dhaane Appavi?//
ஒரு வாசகம்னாலும் திருவாசகம் தான் போங்கோ மதுரம்... கலக்கல் (நம்ம கட்சிக்கு ஆள் சேந்துண்டே போறது... சூப்பர் சூப்பர்)
மதுரம்,
Sir எல்லாம் வேண்டாமே...
எனக்கு உங்கள விட் அஞ்சு வயசு கம்மி, ஸ்ரீராம்னே கூப்பிடலாம்.. நீங்களும் இவங்களைப் பாத்து (கேடி / அ(ட)ப்பாவி தங்கமணி / டுபுக்கு பிரதர்ஸ்) கெட்டுப்போயி நாட்டமைன்னெல்லா சொல்லப் படாது..
நான் ரொம்ப அப்பாவிங்க, நீங்க சொன்ன கோணத்தில எனக்கு யோசிக்கத் தெரியல பாருங்க, நான் பாட்டுக்கு பொண்ணு பாக்கட்டுமான்னு கேக்கறேன்..
கழகத்துக்கு வெல்கம். கழகத்தில நீங்களும் நானும் மட்டும்தான் யூத்து, மத்தது மூணும் (அடப்பாவி, கேடி, அநன்யா) Aunties, அம்பி மாமா, டுபுக்கு மாமா மற்றும் பிஞ்சில பழுத்தது தக்குடு. அப்படித்தான் நீங்களும் நானும் இனிமே சொல்லணும், டீல் ஒகேன்னா, கழகத்துக்குள்ளே நீங்களும் நானும் ஒரு கோஷ்டி. டீலா நோ டீலா
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
Hilarious post, thanks for visiting my blog.
@ Sriram: Enna aalaalukku appavi appavi solreenga? Andha vaarthaiku arthame illama pochu. Sriram, naan ungalukku Samaadhaana Pura nu dhaan peru vachen, Dubukku/Kodi post padichittu.
Ennai youthu nu solliteenga, apparam goshti seraama iruppena. Deal dhaan.
நன்றி மதுரம்
அப்பாடா.. பதிவுலத்தில வெற்றிகரமா ஒரு கழகத்தையும் அதுக்குள்ள ஒரு கோஷ்டியையும் உருவாக்கிட்டேன், அடுத்து காங்கிரஸ் கட்சியில சேர்ந்து (இளைஞர் காங்கிரஸ் - அது ரொம்ப முக்கியம்) ஒரு பதவிய பிடிச்சிட வேண்டியதுதான்.
டுபுக்கு / கேடி மேட்டர் - நீங்க இன்னுமா அத மறக்கல??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
Congress la goshti thagaraaru romba jaasthi. Adhula nammalaala neendhi velila varamudiyadhu. Naama Captain katchila join pannidalaam. Adhu ippa dhaan oru madhiri form aagittu varudhu. Inception stage leye join panna dhaan innum 30-40 varushathula ilaingyar anila thalaivar aaga mudiyum.
ஓகே மதுரம் அப்படியே செஞ்சிடலாம்..
@ Sriram
நாட்டாம... இதெல்லாம் என்ன கொடும? யாரு அப்பாவி? நீங்களா? (பொற்கொடிடிடிடிடிடிடிடி where r uuuuuuuuuuuuuuuuuuuuuuu?)
யூத் பத்தி என்னமோ சொன்னாப்ல இருந்தது.... இதெல்லாம் அந்த ஆண்டவனுக்கே அடுக்காது. கட்சி கோஷ்டி என்னதிது.... கஷ்டம்டா சாமி... முடியல...
@ மதுரம்
நீங்களுமா? ஏன்பா இப்படி? அதுவும் கேப்டன் கட்சியா? சாமி.... இது ஆவறதில்ல.... நாங்க தனி கட்சி ஆரம்பிக்கறோம், என்ன சொல்றீங்க பொற்கொடி? எப்படிஎப்படி முப்பது நாப்பது வருஷம் இளைனர் அணி தலைமையா? எதுக்கும் ஒரு அளவு இல்லையா சிஸ்டர்?
அனன்யா & பொற்கொடி - சீக்கரம் வாங்க நிலைமை கை கால் தலை எல்லாம் மீறி போயிட்டு இருக்கு
சே ஒரு நாள் ஆணி புடுங்கலாம்னு நினைச்சாலே போதும்.. கும்மி ஸ்டார்ட் ஆகிடுது :)
அட ராமச்சந்திரா.. அதுக்குள்ள கழகத்துக்குள்ள உட்கட்சி பூசலா? கட்சிக்குள் கலகம் செய்தமைக்காக பாஸ்டனின் அடிப்படை உறுப்பினர் பதவி பறிக்கப்படுகிறது. ஆனா வயதில் மூத்தவரின் அனுபவம் நமக்கும் தேவை என்பதை கருத்தில் கொண்டு அவரை சீனியர் சிட்டிசன் கழகத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ண சொல்லி மேலிடத்து உத்தரவு. எல்லாம் ஜனநாயக முறைப்படி எடுத்த முடிவுதேங்.
பயப்படாதீங்க அ.த! கட்சி கழகம்னு வரும்போது இதெல்லாம் சகஜம்னு எங்கப்பா எனக்கு சொல்லி குடுத்துருக்காரு. நாளைக்கு எல்லார் வீட்டுக்கும் பிரியாணி பொட்டலம் அனுப்பிச்சுட்டா சரியாயிடும்!
/அப்படித்தான் நீங்களும் நானும் இனிமே சொல்லணும், டீல் ஒகேன்னா, கழகத்துக்குள்ளே நீங்களும் நானும் ஒரு கோஷ்டி.//
நாட்டாமை பாத்து, அப்புறம் தங்கபாலு வாயை திறந்தாலே எல்லாரும் சிரிக்கற மாதிரி ஆகிட போவுது உங்க நிலமையும்! சிவனேன்னு சொம்பை வெச்சுட்டு உட்காராம இது தேவையான்னு தக்குடு வேற கேள்வி மேல கேள்வி கேப்பார். அன்பான எச்சரிக்கை அவ்வளவு தான் :)
சீனியர் சிட்டிசன் கழகத்துக்கு transfer ஆ? கி கி கி கி கி ........ ஒண்ணும் இல்ல... சும்மா சீனியர் மாதிரி சிரிச்சு பாத்தேன்.... ஸ்ரீராமருக்கே சத்திய சோதனையா.......? கி கி கி கி கி.......
கொடி, பிரியாணி பொட்டலமா? அது சரி... நமக்கு மதுரைங்களா சிஸ்டர்.... ? சும்மா கேட்டேன்...
தக்குடு நாட்டமைய கேள்வி கேக்க போறாரா இல்ல நம்மள எல்லாம் மொத்தமா ஊர (ப்ளாக்) விட்டு தள்ளி வெக்க போறாரான்னு தெரிஞ்சுக்க stay tuned.... he will be back from sleep tomorrow... until then உங்களிடம் இருந்து வடை சாரி விடை பெறுவது உங்கள் அபிமான அப்பாவி.... அப்பாவி... அப்பாவி...
Appavi, enakku thalaiya suthudhu! Arasiyal evvalavu kashtamana vishayam nu ippa dhaan puriyudhu.
Porkodi, ingeyum nammala ban pannida poraanga. Apparam kummi.blogspot.com nu start panna vendiyadhu dhaan.
//அவளுக்கு அருகில் வைத்தால்,வெள்ளித்தட்டு&திரட்டிப்பால் இரண்டுமே கொஞ்சம் கறுப்பாகத் தெரியும். சுண்ட வேண்டும் என்று நம்ப மனசுக்குள் நினைத்தாலே ரத்தம் வந்து விடுமோ? என்று எண்ணும் வண்ணம் இருந்தாள்.///
ஏன்?? பொண்ணு கறுப்பா இருந்தா என்னவாம்???? அக்கிரமமா இல்லை????
தொடர
:-))
thakkuds... enna ravusu? ennaa ragalai? sirichu sirichu vayatha vali po..
adhuvum andha team effort, anna pannina sadhi, idhellam padichappo vedi sirippu.
nee ellam appaavi thakkudu? nambitten. nadathu rasa...
Superb post...roombha interesting ga irukku..evlo naal miss pannniten entha blog ga..following your blog..vera entha arumaya post tayum miss panna venam-la..old post ellam enaiku padichadaren..thanks for visiting my blog..
கலக்கல் அ(த)ம்பி பாஸ்!
நான் அவனிடம், நாமளும் டிரிப்ளிகேன் வழியா போய் வெஸ்டு மாம்பலம் போக எதுவும் வழி இல்லையா?னு கேட்டேன். ஒரு முப்பதுகிலோமீட்டர் சுத்திப்போனாலும் பரவாயில்லை!னு சொன்னென்
நீ பேசாம மடிபாக்கம் வழியா போகலாம்ன்னு சொல்லியிருந்தா அண்ணனே டாக்சியிலே கூட்டிண்டு போயிருப்பார்
என் அருமை நண்பர்களே, இந்த பதிவு மற்றும் முந்தய பதிவுக்கும் நீங்கள் அளித்து வரும் ஊக்கம்/ஆதரவு என்னை பிரமிப்புடன் கூடிய மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் பல!
என்றும் வம்புடன்,
தக்குடு
@ LK - வாருமைய்யா, வடை கவ்வும் வீரா!! வசனம் எல்லாம் நமக்கு எழுத வராது, 3 நாடகம் இயக்கி நடிச்சுருக்கேன் அவ்ளோதான்..:) athimber பாய்ண்ட் நோட்டட்..;)
@ சூரி மாமா - நாம எதுனாலும் பேசி தீத்துக்கலாம், எனக்கு ஆதரவா நீங்க குரல் கொடுப்பேள்னு நம்பித்தான் உங்களுக்கு அபிவாதயே சொல்லி நமஸ்காரம் எல்லாம் பண்ணியிருக்கேன், கவுத்திராதீங்கோ!..:)
@ ஆயில்யன் - ஒரு கதைக்கே அசந்துட்டா எப்புடி, நாங்கெல்லாம் யாரு??..:)
@ ராகவ் - பாட்டு நன்னா இருக்கு ராகவ்!!..:)
@ ஆயிலு - சித்தப்பு, ஏற்கனவே பெங்களூர்ல ஒரு ஆட்டம் போட்டுட்டுதான் வந்துருக்கோம்...;) அது தனிகதையா வரும்..;)
@ மீனாட்சி பாட்டி - நாம எல்லாம் ஒரு குரூப் பாட்டி, நீங்க எனக்குதான் சப்போர்ட் பண்ணனும் சரியா??..:)
@ சோமா - மேடம், என்னோட கதை உங்களுக்கு சந்தோஷமா இருக்கு இல்லையா??..:)இருக்கட்டும், இருக்கட்டும்!
@ விஜய் - அண்ணா, ஏன் இந்த கொலைவெறி, நாம எல்லாம் ஒரு ஊருக்கு உள்ள இருக்கோம், மொத்த பதிவையும் கொத்து புரோட்டா மாதிரி கட் பண்ணி கமண்டினா இந்த குட்டி குழந்தை எப்புடி பதில் சொல்ல முடியும்?? உங்க அன்புக்கு ஆயிரம் நன்றிகள் அண்ணா!
@ ம'பதி அண்ணா - அதேதான் அண்ணா...;)
பூர்வஜென்மத்துல புண்ணியம் பண்ணினவாளுக்குத்தான் பெங்களூர்ல இருக்கர்துக்கு சான்ஸ் கிட்டும்..;)
@ ரிஷான் - காமிடி பண்ற மாதிரி இருக்கே??..:)
@ பரவஸ்து அண்ணா - பெரிய ஆட்கள் எல்லாம் கடை பக்கம் வந்தா பயமானா இருக்கு, முதல் வருகைக்கு நன்னி அண்ணா! அடிக்கடி வரவும்..;)
@ சத்யா - என்ன சிரிப்பு அங்க???..:)
@ வித்யாசமான கடவுள் - வருகைக்கும் கருத்துக்கும் நன்னி..;)
@ சித்ரா அக்கா - எல்லாம் உங்க ஆசிதான்...;)
@ கேடி & அடப்பவி தங்க்ஸ் - கழகத்துக்குள்ள கலகம் வரலாமா?? நாம எல்லாம் ஒரு குடும்பம்..;)
@ கேடி - //நீங்க என்னடான்னா.. (இல்ல ஒருவேளை தோஹாவிலே ஏற்கனவே..?)
//அடப்பாவி, புதுசா ஒரு புரளியை கிளப்பி விடாதம்மா! பொண்ணெல்லாம் ஒன்னும் பாத்து வைக்கலை..;)
Dude!! That Brahmastram and Nagastram was too good!! I was ROTFL..... Keep up the gud work
nerya kummi miss panniten inniku start panren
Interesting-a irukku.
'Mudi irukura seematti' its a pudumozhi for me.. AAmmmmaaa andha photo-la irukkara ponnu yaaru?
ippodhan started reading all your posts one by one! naanum adhutha post poda inspirational-a dhan irukku, aaannnaaa..these days held up lots of work (pudu aani pudungaren for a change) adhan. thanks for visiting my blog.
hahahah thakkudu sir ithellam summa ululuvaiku thana sonnenga...unmaila entha figureum ungala thirumbi parkathula hehe ;) Sare, sare pogatum ponga ulgathula illatha figurea :) Pachakili illati oru thogai mayil ;) Aana unga ezhuthu nadai enaku romba familira....aana yaaruthunu theriyala but wonderful!!! Pesama dhoha, poha ellam vitutu kadai ezhithina enna???
திரட்டிப்பால் விளம்பரம் இன்னுமா முடியல... பெருமாளே காப்பாத்து....
Repeattu!!!!!!
We still don't have internet. Something is wrong with the router or our connection.
நெட் இல்லாததால எதுவுமே படிக்க முடியல. இப்ப தான் யூனிவேசிட்டியில் உக்காந்து படிச்சிட்டு இருக்கேன். எதுக்கு கொமன்ட் போடுறது எதை விடுறதுனு தெரியல. நான் சொல்வது ஒன்னு தான். எங்க போவது என்றாலும் தனியா போங்கோ. கண்ணையும் காதையும் திறந்து வச்சுண்டு இருந்தா நிறைய ரசிக்க இருக்கும். நண்பர்களுடன் சுத்துறது ஒரு சுகம்னா, தூர பயணங்களுக்கு தனியா போறது இன்னொரு சுகம். நிறைய பேர்களை அறிஞ்சுக்கலாம். வாரத்தில ஒரு நாள் தனியா போய் பார்க்கில் ஒரு மணி நேரம் உக்காந்து / சின்ன பசங்களோட விளையாடிட்டு (யாருன்னே தெரியாதவங்க) வீட்டுக்கு வரும் போது, வரும் புத்துணர்ச்சி வேற எதிலும் கிடைக்காது. ஒஃப் கோர்ஸ், பசங்களுக்கு சைட் அடிக்க கூட நல்ல நேரம் தனியா போறப்போ தான் கிடைக்கும். (கேள்வி பட்டது. ஹா ஹா.)
என்னோட எழுத்தில தான் நான் டென்ஷன் பார்ட்டி மாதிரி தோணும். நான் ரொம்ப கூல் ஆக்கும். அட நம்புங்கப்பா.
அன்புடன் அனாமிகா. =))
//னு எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. பச்சைக்கிளிக்கே பச்சைகலர் டிரஸ் போட்ட மாதிரி பச்சைக்கலர் சல்வார், நாலு நாளைக்கு முன்னாடி வைத்த மருதாணியால் சிவந்த உள்ளங்கை,காதில் ஒரு சிறிய தங்கவளையம், வலது கையில் ஒரே ஒரு தங்க வளையல்,இடது கையில் இரண்டு சென்டிமீட்டர் விட்டமுடைய ஒரு குட்டி கைகடிகாரம் அதற்கு உள்ளே சாதாரண முள் இல்லாமல் ஒரு சிறிய குக்கூ பறவையே முள்ளாக இருந்தது//
கேட்க ஆள் இல்ல'னு நினைச்சிட்டீங்களே.... இந்த புள்ளி விவரத்த பார்த்தா நீங்க ஆறு டேபிள் தள்ளி இருக்கிற மாதிரி இல்லயே... எனக்கு என்னமோ அந்த பச்சை கலர் பாப்பா *-------*'ல அல்லது பக்கத்துல உட்கார்ந்து இருப்பீங்கனு பச்சி சொல்லுது...
//4.5 ஆரோக்யா பாலை இரண்டு லிட்டர் வாங்கி, அதை குக்கரில் விட்டு, கட்டிதட்டாமல் கிண்டி, 1:2(பால்:ஜீனி) விகிதத்தில் ஜீனி சேர்த்து வந்த திரட்டிப்பாலை,புதிதாக வாங்கிய ஒரு வெள்ளித்தட்டில் போட்டு, அதை அவள் உக்காசுண்டு இருந்த டேபிளில் அவளுக்கு அருகில் வைத்தால்,வெள்ளித்தட்டு&திரட்டிப்பால் இரண்டுமே கொஞ்சம் கறுப்பாகத் தெரியும்//
உங்களுக்கு யாருயா திரட்டிப்பால் செய்ய கற்றுக்கொடுத்தது? ஆ ஊ நா, இந்த திரட்டி முன்பந்தி'ல வந்து சம்மன கால் போட்டு உட்க்காந்துக்கிது :)
//பொண்களுக்கு அவாளோட நைனாவை மட்டும் நக்கல் அடிச்சா தாங்கிக்கவே முடியாது//
நாய்க்குட்டி, அவங்க தூக்கிட்டு வர hand bag, போட்டு இருக்கிற நெயில் பாலிஷ்'னு எதை சொன்னாலும் அப்படி தான் :)
//தக்குடு நீ வர்ணிக்கற விதத்தை பார்த்தால் பேசாம ஒரு தமிழ் படத்துக்கு வசனம் எழுத போலாம். அவ்வளவு வர்ணனை (ஜொல்ஸ்) உன் பதிவுல கால வைக்க முடியல வழுக்கறது ஒரேடியா //
நானும் இதையே தான் நெனச்சேன்.
உங்க கவிதை-ல ஒண்ணு ரெண்டு பாக்கும் பொது எனக்கு TR தான் ஞாபகம் வரார். அப்புறம் அந்த டேபிள் மேட்-ஐ நீங்க "கர்ணன்"நு சொன்னது கொஞ்சம் பொருந்தலை. ஏன்னா கர்ணன் தான் எத கேட்டாலும் குடுப்பாரே. ஆனா அந்த பையனோ பயங்கர காஞ்சனா-ல இருக்கான். விடை தாள கூட தர மறுத்த அவன் எப்படி கர்ணனா இருக்க முடியும்??? யோசிங்க யோசிங்க நல்லா யோசிங்க! :P
@ கேடி & அடப்பாவி அக்கா - அடப்பாவிகளா,கிழக்கே போகும் ரயில் மாதிரி என்னோட ப்ளாக் ஆயிடுத்தே!!!!...:)
@ பாஸ்டன் நாட்டாமை - என்ன இளிப்பு அங்க??..:)
@ மதுரம் அக்கா - நன்னி அக்கா!..:) ஆனா உங்களுக்கு டாட்டா! எல்லாம் ஒழுங்கா சொல்லுவார், இல்லையா??...;)
பொண்ணு எல்லாம் ஒன்னும் பாத்து வைக்கலை அக்கா, நீங்க, பாஸ்டன் நாட்டாமை, அடப்பாவி அக்கா எல்லாரும் 'யூத்'னு யூஸ் பண்ண ஆரம்பிச்சதுக்கு அப்பரம் இப்ப நான் , நம்ப கேடி மாதிரியான நிஜமான யூத்ஸ் எல்லாம் அந்த வார்த்தையை யூஸ் பண்ணவே பயமா இருக்கு...;)
@ அடப்பாவி தங்ஸ் - :))))
@ VGr - சந்தோஷம்பா! ஹலோ, இங்க சொன்னது ஒரு துளிதான், பின்னாடி யூஸ் பண்ணர்துக்கு தனியா ஒன்னு ரெடி பண்ணிடலாம்...;)
@ ஆனந்தி - எல்லாம் உங்க கவிதை எபக்டுதான்...;)
@ மதுரம் அக்கா - அதெல்லாம் நாங்க உஷார்தான், எனக்கு ஒரு ப்ளாக் இருப்பதையே சொல்ல மாட்டேன். இல்லைனா தமிழே வாசிக்கத் தெரியாத ஒரு சாதுவான ஓமணக்குட்டியை புடிச்சுட்டா போச்சு...;)
@ பாஸ்டன் நாட்டாமை & மதுரம் அக்கா - நாட்டாமை, எப்புடி மறக்க முடியும், நீங்க பஞ்சாயத்து பண்ண ட்ரை பண்ணி கடைசில கேடியும் டுபுக்கும் உங்களுக்கு அல்வா கிண்டி குடுத்த கதையை அவ்ளோ ஈசியா மறக்க முடியுமா??...;) மதுரம் அக்கா! கலக்கிட்டேள்!! :)))
@ சுவாதி - நன்னிஹை!!..;)
@ அடப்பாவி& கேடி - நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்துட்டு எனக்கும் சொல்லுங்கோ...;)
@ கீதா பாட்டி - நன்னா பாருங்கோ, வைஷூ அப்படி இருந்தா!னுதான் எழுதியிருக்கேன். கருப்பை பத்தி எதுவுமே நான் சொல்லலை, நீங்களா 'னான் தான் ரவுடி!'னு ஜீப்ல ஏறிண்டா நான் என்ன பண்ண முடியும்...;)
@ அனன்யா அக்கா - நன்னி அக்கா!!..:))
@ நிது பாலா - ரொம்ப சந்தோஷம்பா!!..;)
@ தமிழ் பிரியன் - நன்னிஹை!!!..:)
@ TRC மாமா - நல்ல ஐடியா, ரொம்ப நாள் ஆச்சு உங்களை பாத்து...;(
@ அனானி - :)))
@ லங்கினி - இந்த பக்கம் அடிக்கடி வாங்கோ! நிறையா புதுமொழி கிட்டும்! போட்டோல இருக்கர்துதான் நம்ப பச்சக்கிளி!!..;)ஆணி எப்போதும் இருக்கும் நாமதான் மேனேஜ் பண்ணி வாரம் ஒரு பதிவு ட்ரை பண்ணனும்..;)
@ Life is beautiful - சார் எல்லாம் வேண்டாம், நான் உங்க தம்பி மாதிரிதான், தக்குடு!னு உரிமையா கூப்டுங்கோ!! யாருன்னு யோசிச்சு சொல்லுங்கோ!!..;) //Pesama dhoha, poha ellam vitutu kadai ezhithina enna???//வெறும் ப்ளாக் மட்டும் எழுதறேன்னு சொன்னா யாரு பொண்ணு குடுப்பாங்க??..:)
@ அனாமிகா - வாம்மா மின்னல், ரொம்ப நாளா ஆளையே காணுமே??...:))
@ கோப்ஸ் - வாங்கோ கோப்ஸ், எதுனாலும் நாம தனியா பேசி தீத்துக்கலாம். பப்ளிக் வாட்சிங்க்..;)
@ ஹரிணி - வாங்கோ ஹரிணி, எனக்கு பேப்பர் காட்டாம இருந்தது இடிச்ச புளி, நாகாஸ்திரம் விடர்துக்கு ட்ரை பண்ணினது வேர ஆளு..;) இவ்ளோ டீப்பா லாஜிக் எல்லாம் யோசிச்சு படிப்பேளா என்னோட ப்ளாக்கை??..:)
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா, வந்த கமண்ட் எல்லாத்துக்கும் பதில் போடர்துக்குள்ள கண்ணை கட்டிடுச்சு!!! ஒரு ஜோடா இருந்தா உடைச்சு கொண்டுவாங்கப்பா யாராவது...;)
@thakkudu appidi illa aana yetho padikkum pothe thonithu! avlo thaan! :)
@ மதுரம் அக்கா - அதெல்லாம் நாங்க உஷார்தான், எனக்கு ஒரு ப்ளாக் இருப்பதையே சொல்ல மாட்டேன். இல்லைனா தமிழே வாசிக்கத் தெரியாத ஒரு சாதுவான ஓமணக்குட்டியை புடிச்சுட்டா போச்சு...;)
Oh ho! Pakkava confirm aayiduchu. Nee paathu vachirukkira ponnu oru Omana kuttiya! Doha la nurse vela paarka vandhirukka. Righta?
//ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா, வந்த கமண்ட் எல்லாத்துக்கும் பதில் போடர்துக்குள்ள கண்ணை கட்டிடுச்சு!!! ஒரு ஜோடா இருந்தா உடைச்சு கொண்டுவாங்கப்பா யாராவது...;)//
Sir kindina thirattipaal aayiducha? Idhuke ippadiya? Naalaikku romba pugazh petra ezhuthaalar aanaparam, engala ellam kandukave maattenu ninaikiren.
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா, வந்த கமண்ட் எல்லாத்துக்கும் பதில் போடர்துக்குள்ள கண்ணை கட்டிடுச்சு!!! ஒரு ஜோடா இருந்தா உடைச்சு கொண்டுவாங்கப்பா யாராவது...;)//
romba alatathe, thakkudu, appurama ni appichu nerathile blog ezuthara kathai veliye varum! :P
//. Nee paathu vachirukkira ponnu oru Omana kuttiya! Doha la nurse vela paarka vandhirukka. Righta?//
yaruppa anga ambiku oru maila thattungo... seekiram agattum
Thanks for your lovely comments, thats a nice pic, rest when i learn this lang i ll surely read all your posts
//
Sir kindina thirattipaal aayiducha? Idhuke ippadiya? Naalaikku romba pugazh petra ezhuthaalar aanaparam, engala ellam kandukave maattenu ninaikiren. //
rightuu
சிரிச்சி மாளலை..... Reminds me of my dating with my hubby even in the exam halls and competitive exams:) U should have tried better thakkudu...I didnt mean the exam or team effort but that pachai kiLi:) ok...ok..best wishes for another exam hall..
தக்குடு! கலக்கிட்டீங்க :) இப்படி வி.வி.சி. ரொம்ப நாளாச்சு :)))
அதிலும் அந்த வர்ணனை இருக்கே... பச்சைக்கலர் சல்வார் போட்ட பச்சைக்கிளி பத்தி... அடடா... எங்கயோ போயிட்டீங்க போங்க :) அனுபவிச்சு எழுதறதுன்னா இதுதான் போல :)
@ ஹரிணி - ஓஹோ!! தக்குடு போஸ்ட் எல்லாம் ரொம்ப யோசிச்சு எல்லாம் படிக்கப்பிடாது!!!...:)
@ மதுரம் அக்கா - //Nee paathu vachirukkira ponnu oru Omana kuttiya! Doha la nurse vela paarka vandhirukka//ஏன் இந்த கொலைவெறி உங்களுக்கு???...:)
//Naalaikku romba pugazh petra ezhuthaalar aanaparam// இப்படி உசுப்பேத்தி! உசுப்பேத்தி தான் உடம்பு ரணகளமா இருக்கு...:)
@ கீதா பாட்டி - உங்களை மாதிரி டெய்லியா நான் மொக்கை போஸ்ட் போடரேன், வாரத்துக்கு ஒன்னுதான், அதுவும் எனக்கு லீவு அன்னிக்குதான்...;P
@ LK- :)))
@ sushma - Hey sushma, thanks for your nice comments.
@ விக்கி - ரொம்ப சந்தோஷம்பா! நீங்களும் பரிட்சை அறையில் பராக்க பார்த்தவர்கள் சங்கத்து ஆளா???...:))
@ கவினயா அக்கா - ரொம்ப சந்தோஷம்மா! எல்லாம் உங்க ஆசிர்வாதம்தான்...:)
@thakkudu: //ஏன் இந்த கொலைவெறி உங்களுக்கு???...:)
Edho ennala mudinja sevai!
Innum sir Anamika blogla Thayir Sadam post la ennoda comment paarkala pola irukku. Konjam overathaan ottereno unnai? Sari sari romba feel pannadhe, konjam kuraichukiren.
@ Maduram akka - //Konjam overathaan ottereno unnai? Sari sari romba feel pannadhe, konjam kuraichukiren// no problem akka, based on your comments in anamika blog, intha kutty kolanthaiyai(only Thakkudu) neenga yenga poonaalum marakkaama irukkelnu nenaikkum poothu roomba santhoshamaa irukku...:) even our adappavi thangs akka also same.
Adhenna idli exp.? I'll check AT's blog.
Dear Thakkudu,
'Maharajapuram'nu google pannindu irukkumpoothu i got your blog. what a flow?? chanceyyy illai, sirichchu, sirichu yenakku kannula jalam vanthuruthu...:) sat& sunday i will read your all articles.that pachakili varnanai classic one!! comment section fulla drg pannarthukulla kaivali vanthurum poolarukku??(nejamaavey, antha vaishu roomba alagoo??)...:)
Ranjani Iyer
@ Maduram akka - yenna poi paathuttu vantheelaa?? just now naanum pooi read panninen, ungalukkum idly konjam problemthaan poolarukku!!!...:) Hahahaha
@ Ranjani - Hello Madam, Thanks for your first visit and comments. Maharajapuram search பண்ணும்போது அடியேனோட ப்ளாக் கிடைச்சதுன்னா அது என்னக்குத்தான் மகாபாக்யம். //nejamaavey, antha vaishu roomba alagoo?//இதுக்கு பேருதான் போட்டு வாங்கர்தா?? alrdy இங்க என்னொட கண்மணிகள் கலாய்சுண்டு இருக்காங்க மேடம். போதும் முடியல!!!!!!!...:)
AT yoda Idli post paathutten Thakkudu. Ennoda soga kadhaiyum ezhudhitten.
Dear Thakkudu,
soo sweet, orey naalla reply pannitteley! Thks for ur fast reply. apparam intha Madam/Modem yellam vendam ples, Ranjani!nu neenga dhaaraalama yennai kuuppadlaam(ungalaivida 3 yrs naan youngrthaan). I am feeling very happy to put your 100-vathu comment in your blog. Ithey maathiri interestingaa neenga neraiyaa yeluthanum...;)
Ranjani Iyer
@Thakkudu:ungalukkum idly konjam problemthaan poolarukku!!!...:) Hahahaha//
Nee ninaikira madhiri illa thakkudu, ennoda idli problem romba vichithiramanadhu! Ellarum softana idli panna kashtapaduva aana adhu enakku nalla vandhudum. Enakku kallu madhiri idli panna theriyanum.
//எனக்கு மட்டும் All the best! எல்லாம் சொல்லி தந்தது//
ஹயையோ..
//ம்ம்ம், முடி இருக்கிற சீமாட்டி வலக்கொண்டையும் போட்டுக்கலாம், இடக்கொண்டையும் போட்டுக்கலாம்//
:-)))
//இந்த முறையும் அதே பிகர்தான், இந்த முறை என்னைப் பார்த்து சிரிக்க வேறு செய்தது. என்ன்ன்ன்ன்ன்னடா இது!னு எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. பச்சைக்கிளிக்கே பச்சைகலர் டிரஸ் போட்ட மாதிரி பச்சைக்கலர் சல்வார், நாலு நாளைக்கு முன்னாடி வைத்த மருதாணியால் சிவந்த உள்ளங்கை,காதில் ஒரு சிறிய தங்கவளையம், வலது கையில் ஒரே ஒரு தங்க வளையல்,இடது கையில் இரண்டு சென்டிமீட்டர் விட்டமுடைய ஒரு குட்டி கைகடிகாரம் அதற்கு உள்ளே சாதாரண முள் இல்லாமல் ஒரு சிறிய குக்கூ பறவையே முள்ளாக இருந்தது. 4.5 ஆரோக்யா பாலை இரண்டு லிட்டர் வாங்கி, அதை குக்கரில் விட்டு, கட்டிதட்டாமல் கிண்டி, 1:2(பால்:ஜீனி) விகிதத்தில் ஜீனி சேர்த்து வந்த திரட்டிப்பாலை,புதிதாக வாங்கிய ஒரு வெள்ளித்தட்டில் போட்டு, அதை அவள் உக்காசுண்டு இருந்த டேபிளில் அவளுக்கு அருகில் வைத்தால்,வெள்ளித்தட்டு&திரட்டிப்பால் இரண்டுமே கொஞ்சம் கறுப்பாகத் தெரியும். சுண்ட வேண்டும் என்று நம்ப மனசுக்குள் நினைத்தாலே ரத்தம் வந்து விடுமோ? என்று எண்ணும் வண்ணம் இருந்தாள்//
ஷப்பா...
//எழுத்துத்தேர்வுக்குச் செல்லும் வாலிபர்கள் தயவுசெய்து தனியாகவே செல்லவும், அண்ணன் & அக்கா போன்ற அனுகூல சத்ருக்களை கூட்டிக்கொண்டு செல்ல வேண்டாம்//
:)))))
தக்குடு கலக்கிட்டேள் போங்கோ பேஷ் பேஷ் நன்னாயிருக்கு எதிர்பார்க்கவே இல்லை...ஹஹஹஹஹ OMG plz save me.from thakkudus comedy..
verynice THAKKUDU ..!!!keep it up
@ மதுரம் அக்கா - கல் இட்லி ரொம்ப ஈசி, உளுந்தோட ரேசியோவை(கம்மி பண்ணனும்) கொஞ்சம் மாத்திப்பாருங்கோ!!...:)
@ ரஞ்ஜனி - ரொம்ப சந்தோஷம்பா,ஆமாம் 100 வது கமண்ட் உங்களோடுதுதான்.
@ அம்மு - வாங்கோ மேடம்! என்ன நக்கல் சிரிப்பு அங்க??..:)
@ தென்னம்மை - வாங்கோ மேடம்! அடிக்கடி வாங்கோ...:)thanksma!!
Morethan 100 comments வருவதற்கு காரணமான என்னோட அம்மா,அக்காஸ்/தங்கைஸ்& பாட்டி எல்லாரும் தாம்பூலம் எடுத்துக்கோங்கோ! புருஷா எல்லாருக்கும் பட்டாணி சுண்டல் அனன்யா அக்காவாதுல ரெடிஆகி இருக்கு...;) இதுல எந்த க்ரூப்லையும் வராத என்னை மாதிரி சின்ன கொழந்தைகள் மதுரம் அக்கா ப்ளாக்ல போய் குக்கீஸ் சாப்டுங்கோ...:) எல்லாருக்கும் நன்னிஹை!!!...:)
சூப்பரோ சூப்பர் :)
@ Prasanna - Thanks dude!!...:)
Haha thakkudu..
unga post aa vida thaamboolam pramatham :D
Enjoyed it to the core.. !
Some of the superb tit bits I enjoyed
"பரிட்சையெல்லாம் ஒரு Team Effort-டோட செய்யவேண்டிய ஒரு வேலை."
" 4.5 ஆரோக்யா பாலை இரண்டு லிட்டர் வாங்கி, அதை குக்கரில் விட்டு, கட்டிதட்டாமல் கிண்டி, 1:2(பால்:ஜீனி) விகிதத்தில் ஜீனி சேர்த்து வந்த திரட்டிப்பாலை,புதிதாக வாங்கிய ஒரு வெள்ளித்தட்டில் போட்டு, அதை அவள் உக்காசுண்டு இருந்த டேபிளில் அவளுக்கு அருகில் வைத்தால்,வெள்ளித்தட்டு&திரட்டிப்பால் இரண்டுமே கொஞ்சம் கறுப்பாகத் தெரியும். "
"அப்பா பேரு பார்த்தசாரதியா??னு 'இந்தியன்' கவுண்டமணி மாதிரி கேட்கவேண்டும் என்று வாய்வரைக்கும் வந்துவிட்டது,"
நல்ல வேலைக்கு பரிக்க்ஷை எழுத இந்த அனுபவம்(அதாவது பரிக்க்ஷை அனுபவம்) :D
எழுத்துத்தேர்வுக்குச் செல்லும் வாலிபர்கள் தயவுசெய்து தனியாகவே செல்லவும், அண்ணன் & அக்கா போன்ற அனுகூல சத்ருக்களை கூட்டிக்கொண்டு செல்ல வேண்டாம். :D
Superb flow of narration !!
Thank you sowmya madam, pullaiyaarukku thenkai udaicha maathiri 108-vathu comment neengathaan...:)
நல்லா எழுதறீங்க,தக்குடு.
@ asiya omar - thanks for your frst visit and comment..:)
suuuuuuuuppppperrrrrrrrrrrr......
chancey illa...
semma writing...
பலே, பலே! அசத்தலாத்தான் வழிஞ்சிருக்கீர் ஒரு காலத்திலே, என்னை மாதிரியே! நம்ம ஆயில்ஸ் லிங்க் கொடுத்து இங்க வந்து எட்டிப்பார்த்து .... ரசித்தேன்!
@ Tamilan - :)) thank you!
@ Ram - tan q vathyaarey!!..:)
அப்பா...ஹிலாரியஸ்...
அம்பிக்கு நீங்க அண்ணா போலல்ல இருக்கு...
நான் பதிவு எழுதுறதுல சொன்னேன். :)
So late to add comments. Enjoyed every line. - R. J.
Post a Comment
யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)