Thursday, January 21, 2021

அப்பா

 

கழிஞ்ச 2020 வருஷம் எல்லாருக்குமே ஒரு மறக்க முடியாத வருஷமா ஆயிடுத்து. 2020 மார்ச் மாசம் மெதுவா ஆரம்பிச்சு டிசம்பருக்குள்ள எல்லாரையும் சோழியை சொலட்டி போடரமாதிரி போட்டுட்டு பாகம் இரண்டு வேணுமானு கண் சிமிட்டி பயம் காட்டிண்டு இருக்கு. எல்லாருக்கும் எதாவது ஒரு வழில பாதிப்பு. ஒரு சிலருக்கு ஜோலி போச்சு, ஒருசிலரோட சோலியே முடிஞ்சு போச்சு, ஒருசிலரோ “சாவுபயத்தை கண்ணுல காட்டிட்டான் பரமா!”னு சொல்லும்படியா சாவின் விளிம்புக்கே போய் திரும்பி வந்துருக்கா. இப்படி ஒரு நிலைமையை நாம யாருமே எதிர்பாக்கலை. போதும்டா சாமி!னு சொல்லும்படியா ஆயாச்சு. முழு வருஷமும் மாஸ்க் போடர்துலையும், கையை அலம்பர்துலையும், சானிடைசர் போடர்துலையும் கழிச்சாச்சு. இந்த வருஷத்தின் ஆரம்பத்துலேந்து அப்பாவை பத்தின கவலையும் பயமும் ரொம்ப ஜாஸ்தியா இருந்தது. அவருக்கு ஏற்கனவே கிளக்கோமாவால 2012லேந்து கண் பார்வை கிடையாது. அவர்பாட்டுக்கு ஆத்துக்குள்ள நடமாடிண்டு இருந்தார். கடைசி ரெண்டு வருஷமாதான் சோடியம் & யூரியா கிரியேட்டின் அவரை படுத்த ஆரம்பிச்சது. அம்மாவோட பலத்துல தான் இத்தனை நாள் சமாளிக்க முடிஞ்சது. கண்ணுக்கு கண்ணாக இருந்து பாத்துண்டா. போன மாசம் 9ம் தேதி இரவு அப்பாவுக்கு சிவலோகப் பிராப்தி கிடைத்தது.

 

ராத்திரியே விஷயம் தெரிந்தாலும் எப்பிடி போகர்துனு தெரியாம எல்லாரையும் மாதிரி நானும் கொஞ்சம் திண்டாடினேன். லீவு கிடைச்சாலும் ப்ளைட் டிக்கெட் கிடைக்கனும். எல்லாத்துக்கும் நடுல கொரொனா டெஸ்ட் எடுத்தா தான் ஏர்போர்ட் உள்ளையே போக முடியும். ஆண்டவன் அனுக்கிரஹத்தில் எல்லா தடைகளையும் தாண்டி ஒரு நாளில் கல்லிடை போயிட்டேன். அண்ணா அமெரிக்காவில் இருந்து வந்து சேர ஐந்து நாள் ஆச்சு. அவன் வந்ததுக்கு அப்புறம் தாமிரபரணி நதிக்கரையில் வைத்து எல்லா காரியங்களும் செய்ய ஆரம்பிச்சோம். எங்க அப்பாவுக்கு கண் பார்வை நன்னா இருந்த வரைக்கும் ஒரு நாள் கூட ஆத்தங்கரை போகாம இருந்தது கிடையாது. நெல்லை மாவட்ட மக்களுக்கு இந்த ஆத்தங்கரை கிறுக்கு கொஞ்சம் ஜாஸ்தி. "என்ன ஆனாலும் நம்ப ஆத்துல வச்சு ஆகனும், நம்ப ஆத்தங்கரைல வச்சு கிடைக்கனும்"னு சொல்லும் பழக்கம் இங்கு சாதாரணம். அவர் நினைச்ச மாதிரியே அவருக்கு அந்த நதியில் கிடைத்தது.




 

அவருக்கு மிகவும் பிடித்தமான இரண்டு விஷயம் சமையல் & சங்கீதம். ராகமா சுவரத்தோட அழகா பாடுவார். அம்மா சமையல் பண்ணும் போது ரேழில உக்கார்ந்தமேனிக்கே, “அதை போட்டுக்கோ! இதை போட்டுக்கோ!”னு செஃப் தாமு மாதிரி குறிப்பு குடுப்பார். கடைசி இரண்டு வருஷத்துல அவரை கட்டிலில் இருந்த எழுப்பனும்னா ரெண்டு விஷயத்தால தான் முடியும் ஒன்னு காமாட்சி ஸ்வீட்ஸ் அல்வா அல்லது மகாராஜபுரம் சந்தானத்தின் ஏதாவது ஒரு பாட்டு(கிட்டத்தட்ட அதுவும் அல்வா மாதிரி தான்). காவிரிக்கரைல இருக்கரவாளுக்கும் தாமிரபரணி கரைல இருக்கரவாளுக்கும் வக்கனை ஜாஸ்தி. ‘எதை போட்டாலும் திங்கர்துக்கு நான் என்ன போக்கத்து போயா இருக்கேன்’ என்று இருவருக்கும் கோவம் வந்துவிடும். அப்பாவும் அதுக்கு விதிவிலக்கல்ல. போன வருடம் சென்னை ராமச்சந்திராவில் ஐசியூவில் இருந்து வெளியில் வந்த போது “பொங்கலும் வடையும் வாங்கிண்டு வாடா!”னு அவர் சொன்ன போது சிரிப்பும் அழுகையும் சேர்ந்தே வந்தது. சின்ன வயதிலிருத்தே அப்பாவிடம் இருந்த முக்கியமான குணங்கள் நேர்மை & வாக்குத் தவறாமை. குடும்பத்தில் ஒரு சமயத்தில் அவருடைய ஒரே சகோதரியின் உரிமைக்காக எல்லா அண்ணன்களையும் பகைத்துக் கொண்ட நேர்மை எங்களுக்கு அம்மாவால் சொல்லிக்குடுக்கப்பட்ட பாடம். “நமக்கு சொந்தமில்லாத பொருள் மீது ஆசை கூடாது, அடுத்தவாளோட பைசா தெருவில் கிடந்தால் அது பேப்பருக்கு சமானம், அடுத்தவன் பைசா நமக்கு வேண்டாம்” இதெல்லாம் அவர் அடிக்கடி உபயோகித்த வார்த்தைகள். வெரும் பேச்சாக இல்லமல் வாழ்ந்தும் காட்டினார். மாவீரன் சிவாஜியின் அம்மா ஜீஜாபாய் பத்தி பாடத்துல தான் படிச்சிருக்கேன் ஆனா அம்மாவோட தைரியம் அதுக்கு நிகரானது. எந்த நிலையிலும் தைரியத்தை கைவிடாத ஒரு ஆளுமை. அப்பாவின் ஆயுளை இத்தனை வருஷம் நீட்டித்து தந்தது அம்மாவின் தைரியமும் தியாகமும் தான்.

 

அவர் மறைந்தாலும் அவரின் நினைவுகள் எங்கள் மனதில் எப்போதும் நீங்காத செல்வமாக நிறைந்து இருக்கும்!!!

24 comments:

Lakshmi Viswam said...

நல்ல வாழ்க்கை பாடம்

Lakshmi Viswam said...

மனதையும் உருக்கியது

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Post படிச்சு மனசு கனத்து போய்டுச்சு தம்பி. நீ சொன்ன மாதிரி சொல்லி வளக்கரதை விட, வாழ்ந்து காட்டுவது தான் மனசுல பதியும், அது வழியில் நம்மையும் செலுத்தும். அப்பா நிறைவான வாழ்வு வாழ்ந்து போய்ட்டார். எப்பவும் இந்த மாதிரி உங்களின் நினைவலைகளில் வாழ்ந்துட்டு தான் இருப்பார். Take care. Pranams to அம்மா 🙏

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Post படிச்சு மனசு கனத்து போய்டுச்சு தம்பி. நீ சொன்ன மாதிரி சொல்லி வளக்கரதை விட, வாழ்ந்து காட்டுவது தான் மனசுல பதியும், அது வழியில் நம்மையும் செலுத்தும். அப்பா நிறைவான வாழ்வு வாழ்ந்து போய்ட்டார். எப்பவும் இந்த மாதிரி உங்களின் நினைவலைகளில் வாழ்ந்துட்டு தான் இருப்பார். Take care. Pranams to அம்மா 🙏

rama said...

அருமையான பதிவு! கல்லிடைக்குறிச்சி எப்படி இருக்கு?

Vaishnavi said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள் எனக் கூறினால் ரொம்ப formal ஆ இருக்கும்.வழக்கமாக உங்கள் பதிவைப் படித்ததும் ஹாஸ்யமா இருக்கும்.இதில் மனது கனத்து விட்டது.அப்பாவின் ஆன்மா சாந்தியடையட்டும்.

Angel said...

அப்பாவை பற்றிய அருமையான நினைவுகளை பகிர்ந்திருக்கிங்க தக்குடு .அறிவுரைகளா சொல்றதைவிட முன்மாதிரியா வாழ்ந்து காட்டுவது சிறப்பு .அதை உங்கள் அப்பா செய்திருக்கிறார் ..

ஸ்ரீராம். said...

அப்பா மறைந்தால் வாழ்க்கையின் பொருளே மறைந்தது போலிருக்கும் என்பது என் அனுபவமும் கூட.  மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள்.  இறைவன் அந்த பலத்தை உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் அருள பிரார்த்திக்கிறேன்.

சுபத்ரா said...

It's an irreparable loss. இன்னும் நிறைய அப்பாவை பத்து எழுதுங்க.

சுபத்ரா said...

It's an irreparable loss. இன்னும் நிறைய அப்பாவை பத்து எழுதுங்க.

வெங்கட் நாகராஜ் said...

அப்பாவின் மறைவு - வருத்தமான விஷயம் தான். அவரது வாழ்க்கை மற்ற அனைவருக்கும் ஒரு எடுத்துக் காட்டு. அடுத்தவர் பொருளுக்கு ஆசைப் படக் கூடாது என்பதை வாழ்ந்து காட்டியவர்...

நலமே விளையட்டும்.

Geetha Sambasivam said...

ஆழ்ந்த வருத்தங்கள். உங்க அப்பா, அம்மாவை நன்றாகத் தெரியும் என்பதால் எங்களுக்கும் இதில் அதிகம் வருத்தம் இருக்கிறது. திரும்பி வர முடியாது என்றாலும் உங்கள் அம்மாவின் தைரியத்தாலும் மன உறுதியாலும் இத்தனை வருஷம் அந்த ஊரில் இருந்திருக்க முடிந்திருக்கிறது. அம்மாவை இனிமேல் கவனமாய்ப் பார்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் இருவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.

A and A said...

My deepest condolences.- Sundarapandiyapurathu Akka

Lakhs71 said...

It is a great loss for all family members especially for your mother as she has faced all the very difficult situations with great brave in deed. All kudos to her for her bravery act. My deepest condolences to you and good deep feeled narrative post.😢😢😢😢😢

Unknown said...

My deepest condolences to the bereaved family members. My close relation with him from childhood as he was good soul admires for his good hospitality and clear voice. I pray for him.-😅😅😅😅

Dubukku said...

முத்து மாமியின் தைரியமும் போராட்டமும் ஜீஜா பாய்க்கு கொஞ்சமும் குறைந்ததல்ல. Total love and respect to her <3 <3 <3

தக்குடு said...

@லக்ஷ்மி - நன்றி

@இட்லி மாமி - நன்றி!

@ ரமா மேடம் - நன்றி!

@ வைஷ்ணவி மேடம் - நன்றி!

@ தேவதை - நன்றி!

@ ராம் - நன்றி!

@ சுபத்ரா - நிச்சயமாக

@ டில்லி அண்ணாச்சி - நன்றி!

@ கீதா மாமி - நன்றி!

@ சுந்தரபாண்டியபுரத்து அக்கா - நன்றி!

@ லக்ஷ்71 - நன்றி!

@unknown - நன்றி!

@ டுபுக்கு அண்ணாச்சி - நன்றி!

radhakrishnan said...

heart felt codelences to u. appa, amma vayathu solla mudiyuma/?

radhakrishnan said...

no post for long time, why?

துபாய் ராஜா said...

ஆழ்ந்த இரங்கல்கள். இப்பேரிழப்பை தாங்கும் மனப்பக்குவத்தை எல்லாம்வல்ல இறைவன் அருள்வாராக்.

Srinivasan J said...

heart felt condolences to u

dubukudisciple said...

Hello how are u

தக்குடு said...

ராதாகிருஷ்ணன் சார் - நன்றி சார்! புது பதிவு போட்டாச்சு!

துபாய் ராஜா - நன்றி! நலமா?

Srinivasan sir - நன்றி சார்!

DD அக்கா - செளக்கியம்! நீங்க?

சுசி said...

ரொம்ப சாரிப்பா. நான் இப்போ தான் பார்த்தேன்.

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)