Wednesday, March 11, 2020

கொரோனாவும் மாமியாரும்

எல்லாம் இந்த சைனாகாரனால வந்தது! தண்டவாளத்துல போகும் ரயிலையும்பறக்கர்துல ப்ளைட்டையும் தவிர எல்லா கருமத்தையும் திண்ணா கரோனா/கரீனா/ மரீனா எல்லா மண்ணாங்கட்டியும் வரத் தான் செய்யும்.  டிராபிக் சிக்னல்ல முன்னாடி இருக்கும் டொயோட்டா கரோலா காரோட பின்பக்கம் அதோட பேரை எழுத்து கூட்டி வாசிக்க பாத்தா கொரோனானு வாசிக்கர அளவுக்கு கொரோனா பீதி எல்லா இடத்துலையும் பரவி இருக்கு. யாரைபாத்தாலும் கொரோனாவே பேச்சு. நாங்க இருக்கும் ஊர்ல ஏற்கனவே 13 நாடுகள்லேந்து வரும் விமானத்தை நிறுத்தியாச்சு இப்ப போதாகுறைக்கு பள்ளிக்கூடத்தையும் காலவரையின்றி மூடியாச்சு. இந்தியால விழிப்புணர்ச்சியை கொண்டு வரேன் பேர்வழினு எல்லா பயலுகளும் பீதியை கிளப்பிவிடறானுங்க. முந்தா நேத்திக்கி ஸ்கூல் மூடியாச்சுனு சொன்னவுடனே எல்லாபயலுகளும் சாயங்காலமே கடைகன்னிகள்ல புகுந்து வண்டிவண்டியா சாமான் வாங்க ஆரம்பிச்சுட்டா. நானும் தங்கமணியும் வழக்கமா போகும் கடைல எப்போதும் அத்வைதாவும் விஷ்வஜித்தும் கண்ணாம்பூச்சி விளையாடர அளவுக்கு விஷ்ராந்தியா இருக்கும்பில் போடும் பிலிபைன்ஸ் பொண்ணு கிட்ட ‘ஒன்னோட தோடு நன்னா இருக்கே’னு செளஜன்யமா பேசிண்டே வேலைபாக்கர அளவுக்கு காத்தாடிண்டு இருக்கும். திடீர் பீதிலஎதோ கல்யாணமண்டபம் மாதிரி ஜேஜே!னு கூட்டம். என்னவோ ஒரு வருஷத்துக்கு மகாபாரதத்துல வரும் அஞ்யாத வாசம் பண்ண போகரவா மாதிரி வண்டிவண்டியா சாமான்அனேகமா நூடுல்ஸ் பாக்கேட் இனிமே சைனாலேந்து ஸ்டாக் வந்தாதான் உண்டுனு சொல்லும் படியா 4 டஜன் நூடுல்ஸ்25 சேஷே சூப்பால்பவுடர் 10 கிலோனு லிஸ்ட் போயிண்டு இருந்தது. அரிசி பருப்பு ஜாஸ்தியா வாங்கினா பரவாயில்லைகாணாதுகண்ட மாதிரி டிஷூ பேப்பர் ரோலை எல்லாரும் ஒரு டஜன் வாங்கி வண்டில அடுக்கி வச்சுருந்தா.  ‘அடுத்த ஒரு வாரத்துக்கு பஞ்சாயத்துபோர்ட்ல ஜலம் வராதுனு எதாவது சொல்லியிக்காலா என்ன?  ‘சுந்தரபாண்டியபுரத்து தேங்கா எண்ணெய் பக்ஷணத்தை மொத்தமா வாங்கிண்டு போகர மாதிரி ஒரு டஜன் டிஷூ பேப்பர் டப்பாவை வச்சு ஆத்துல என்ன பண்ணுவா!’னு தங்கமணி கிட்ட கேட்டதுக்கு வழக்கம் போல ‘வாயைமூடிண்டு வாங்கோ!’னு சொல்லிட்டா.

இங்க இருக்கர கூட்டம் பத்தாதுனு நிறையா பேர் அவாளோட தோழர்/தோழிக்கு எல்லாம் போன் போட்டு ‘கடைக்கு போய் சாமான் வாங்குங்கோ!’னு சமூகபணி ஆத்திண்டு இருந்தா. நம ஊர்ல இருக்கர மாதிரி, “மாசி மாசம் ரெண்டாம் செவ்வாய் கிழமை ஆத்துக்காரியோட தங்கைக்கு ப்ளூ கலர் சுடிதார் வாங்கி குடுங்கோ! உங்களுக்கு மச்சினியே இல்லாட்டியும் ஒன்னுவிட்ட மச்சினிக்காவது எடுத்து குடுத்தே ஆகனும்! குடுக்காட்டி அடுத்த ஜென்மத்துலையும் உங்களுக்கு இதே ஆத்துக்காரிதான் வருவா! னு தலைல பாறாங்கல்லை போடற மாதிரி ஒரு மெசேஜை அனுப்பிட்டு மேற்கொண்டும் “உண்மையான தமிழனா இருந்தா இதை 50 பேருக்கு ஷேர் பண்ணு!”னு வாட்ஸப்ல புரளியை கிளப்பி விட்டா அடுத்த நாளே மாமியாரத்துலேந்து தேடிண்டு வந்துடுவா. வக்கில்’வண்டு’ முருகனையே கூட்டிண்டு வந்தாலும் ஜாமின்ல வரமுடியாது. இத்தாலில எல்லாரோட தாலியையும் அறுத்துண்டு இருக்கு. இந்த ரணகளத்துக்கு நடுல கேரளாவுல ஒரு சேட்டன் குடும்பம் இத்தாலிக்கு போய் ஊர் சுத்திட்டு வந்துருக்காகொச்சின் ஏர்போர்ட்லையும் மொட்டையா ‘ஞான் ஐரோப்பா டூர் போய் வந்து!’னு சொல்லிட்டு ஊரை பாத்து போயிட்டா. இப்ப பார்த்தா 12 டிக்கெட்டுக்கு கொரோனாவாம் என்னத்தை சொல்ல. இந்தியாவுக்கு எல்லா வைரஸும் இத்தாலிலேந்து தான் இறக்குமதி ஆகர்து.




இதுக்கு நடுல எங்க மாமியார் நேத்திக்கி சாயங்காலம் வீடியோ கால் பண்ணி தங்கமணிகிட்ட பேசிண்டு இருக்கும் போது நடுல என்னை பாத்துட்டு “மாப்ளே! ஆபீஸ்ல இனிமே யாரையும் கட்டிபிடிச்சு முத்தம் குடுக்காதீங்கோ! எல்லா இடத்துலையும் ஒரே இன்பெக்ஸனா இருக்காம்!”னு சொல்லி அவாளோட பங்குக்கு கிளப்பி விட்டுட்டா. ‘ எனக்கு தெரியாம ஆபீஸ்ல யாரை கட்டிபிடிச்சுண்டு இருக்கேள்?னு தங்கமணி முறைக்க, ‘அய்யையோ நான் யாரையும் கட்டிபிடிக்கலை!’னு தங்கமணியை சமாதானம் பண்ணர்துக்குள்ள போதும்டா சாமி!னு ஆயிடுத்து. போன தடவை ஊருக்கு போகும் போது எங்க மாமியார் சொன்ன துபாய் புடவையை மறந்துட்டேன் வாஸ்தவம் தான் அதுக்காக இப்படியா கோர்த்துவிடுவாகொரோனாவால உலகப் பொருளாதாரமே அடி வாங்கும் போது இந்த அப்பாவி தக்குடு எம்மாத்திரம்!  ஐ நா சபைல பேசி சீக்கரம் இந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல முடிவு எடுங்கோ!

12 comments:

Angel said...

ஹாஹாஆ :) கொரோனவையும் மறக்கடிச்சு போக வைக்கிறது தக்குடுவின் எழுத்து :)
விழுந்து புரண்டு சிரிச்சிட்டிருக்கேன் தக்குடு :)
எங்க ஊரிலும் எல்லாம் மோசம் எல்லாம் நம்மூர் ஸ்டைலில் வணக்கம் வைக்கிறாங்க :))

திவாண்ணா said...

:-)))) rompa NaaLAchcho ezuthi?

மெளலி (மதுரையம்பதி) said...

சூப்பர்

lata raja said...

Romba naalaikkappuram post pOttirukkae. Naana vaai virtue sirichchaen.

Vaishnavi said...

Yella viruses from Italy la yendha oru arasiyalum illa thana

vidhas said...

LOL. Awesome thakkudu. After a long time i am reading your blog. As usual amazing

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இதுக்கு நடுல எங்க மாமியார் நேத்திக்கி சாயங்காலம் வீடியோ கால் பண்ணி தங்கமணிகிட்ட பேசிண்டு இருக்கும் போது, நடுல என்னை பாத்துட்டு “மாப்ளே! ஆபீஸ்ல இனிமே யாரையும் கட்டிபிடிச்சு முத்தம் குடுக்காதீங்கோ! எல்லா இடத்துலையும் ஒரே இன்பெக்ஸனா இருக்காம்!”னு சொல்லி அவாளோட பங்குக்கு கிளப்பி விட்டுட்டா. //

ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! மாப்பிள்ளையை நன்கு புரிந்து வைத்துக்கொண்டுள்ள மாமியார், வாழ்க !

வெங்கட் நாகராஜ் said...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு. மகிழ்ச்சி தக்குடு.

நகைச்சுவை பதிவுகள் உங்களது பக்கத்தில் படிப்பதே மகிழ்ச்சியான விஷயம். தொடரட்டும் பதிவுகள் தக்குடு.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

wow.... Happy to read your post after so long. Diwali Diwali'kku kulikara maadhiri ini Corona Corona'vukku thaan post poduviyo, ha ha ha. Sivanenu irukkara maamiyarai why vambu iluthufying bro :). Ingayum adhe kodumai thaan going on... veetla arai ticket'ai vechu samaalikkradhu corona'vai vida kastama irukku your honour :(

தக்குடு said...

ஏஞ்சல் - நல்லா இருக்கீங்களா மேடம்! இனிமே உலகம் முழுசும் வணக்கம் தான் சொல்லியாகணும்.



திவாண்ணா - ஆமாம் கொஞ்சம் இடைவெளி விழுந்து போச்சு!



மெளலி அண்ணா - நன்றி!



நைஜீரியா மாமி - ரொம்ப சந்தோஷம்! இப்ப எங்க இருக்கேள்?



வைஷ்ணவி - மேடம் நீங்க சரியாதான் படிச்சுருக்கேள்.



வித்யா அக்கா - செளக்கியமா?



வை கோ சார் - அதே அதே



டில்லி அண்ணாச்சி - தங்கள் ஆசிகளுக்கு நன்றி



இட்லி மாமி- கோவிந் மாமா உங்களை வெச்சு சமாளிக்கர்தால கொரோனா ஈசியா இருக்கர்தா சொன்னாராமே?? ;)

Srinivasan J said...

பதிவுக்கு நன்னி ஹய்!
கொரோன - கரோல்லா ஒரு எழுத்து மாறி இருக்கு, வருஷம் முன்னாடி
டாடா ஜிக்கா ஒரு கார்க்கு நாமகரணம் பண்ண அப்பறம் டியாகோ மாத்திட்டா

நல்ல ஜோசியக்காரா கிட்ட கேட்டு காருக்கு பேர் வைக்கன்னும்

இ-சி-வாட்-யு-டிட்- தேர்//இந்தியாவுக்கு எல்லா வைரஸும் இத்தாலிலேந்து தான் இறக்குமதி ஆகர்து//

srikanth said...

nice as usual. Please write often. Take care.

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)