Thursday, November 3, 2011

சாந்தி மிஸ்

“பூரா துனியாமே சிர்ஃப் ஏக் கஹானிஹை!”னு மத்யமமான குரல்ல சாந்தி மிஸ் வாசிக்க ஆரம்பிச்சாலே எனக்கு கை கால் எல்லாம் உதறல் எடுக்கும். அவாளோட நவாப்பழ கண்ணை உருட்டி உருட்டி முழிச்சுண்டு "இது முதல் கா-வா இல்லைனா இரண்டாவது கா-வா?" கேட்கும் போது, “நாலு ‘கா’ நாலு ‘தா’ எல்லாம் எந்த பிரகஸ்பதி கண்டுபிடுச்சான்!”னு மனசுக்குள்ள திட்டிண்டே அழர்துக்கு தயார் ஆயிடுவேன். சாந்தி மிஸ் என்னோட இரண்டாம் கிளாஸ் ஹிந்தி மிஸ். ஹிந்தியோட அருமை பெருமை எல்லாம் தெரியாத அந்த சின்ன வயசுல சாந்தா மிஸ்ஸை பாத்தாலே கோவம் கோவமா வரும். என்னை மாதிரியே ஹிந்தியை கச்சுவிஷமா பாவிச்ச ரகுதாத்தாக்கள் எல்லாருக்கும் ஹிந்தி பீரியடுக்கு முன்னாடி திடீர் திடீர்னு வயத்துவலி வரும். கொஞ்ச நாளைக்குதான் அந்த நடிப்பு செல்லுபடியாச்சு அதுக்கு அப்புறம் மாத்தி யோசிக்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டோம்.

சாந்தி மிஸ் பாக்கர்துக்கு அகஸ்தியராட்டம் இருந்தாலும் கைல இருக்கும் விரல் எல்லாம் உடும்பு. நம்ப தொடைல வச்சு நிமிட்ட ஆரம்பிச்சானா ‘ஆ’-ல ஆரம்பிச்சு சிலுக்கு மாதிரி ‘ஹாஆஆஆ!’ வரைக்கும் கத்தி அழுதாலும் விடமாட்டா. என்னோட அண்ணா போட்டுண்டு குடுக்கும் பழைய யூனிபார்ம் ட்ராயர் தான் நான் போட்டுப்பேன். 5 வருஷ பழைய ட்ராயர்ங்கர்தால அது 90-ல வந்த படங்கள்ல கிளைமாக்ஸ்ல ஹீரோவோட அம்மாவையும், ஆத்துக்காரியையும் நடு ஹால்ல கட்டி வச்சுட்டு, வில்லன் ப்ளூ லேபில் பாட்டில்ல விட்டு வச்ச நன்னாரி சர்பத்தை குடிச்சுண்டு இருக்கும் போது ‘ஜிகுஜிகு’ லைட்டுக்கு நடுல ஜிங்க் ஜிங்குனு ஆடும் ‘டிஸ்கோ’ சாந்தியோட டைட் டிராயரை இரவல் வாங்கிண்டு வந்து போட்டுண்ட மாதிரி இருக்கும். அர்ஜுனனோட கண்ணுக்கு எப்பிடி கிளியோட கண்ணு மட்டும் தெரியுமோ அதே மாதிரி சாந்தி மிஸ்ஸுக்கும் என்னோட தொடைதான் எப்போதும் தெரியும்.சந்தோஷ காலங்கள்!! :))

எத்தனை நாளைக்கு தான் வலியை தாங்கமுடியும். நாங்க படிச்ச அந்த நர்சரி ஸ்கூலுக்கு ஒரு பாரம்பரியமே உண்டு. காலேஜ் முடிச்சுட்டு “குரு திசை வந்தவிட்டு வரன் பாக்கலாம் ஓய்ய்!”னு கோட்டை தெரு ஜோசியர் சொன்ன வார்த்தைக்கு கட்டுப்பட்டு 'பாங்க்' மாப்பிள்ளை வரவரைக்கும் கல்யாணத்துக்கு வரன் பாக்கர்தை நிப்பாடி வச்சுருக்கும் அக்ரஹார அக்காக்கள் தான் பெரும்பாலும் அங்க டீச்சரா இருப்பா. சம்பளம்னு ஒன்னும் பெரிசா வந்துடாது. தேங்காய்மூடிக்கு பதிலா 200 ரூபாய் குடுத்தா பெரிய விஷயம். ஆனா நல்ல மனசோட கரசேவை பண்ணர மாதிரி இந்த ஸ்கூல்ல ஏ பி சி டி சொல்லி குடுத்த எல்லா டீச்சராக்காவுக்கும் ஒழுங்கா சந்தியாவந்தனம் பண்ணி சனிக்கிழமை சுந்தரகாண்டம் வாசிக்கர நல்ல குணமான ‘சுந்தரபாண்டியபுரம் ஸ்டேட் பாங்க்’ மாப்பிள்ளையோ இல்லைனா ‘கருங்குளம் ஆடிட்டர்’ மாப்பிள்ளையோ நிச்சயமா வந்து கல்யாணம் பண்ணிண்டு போய் ராணி மாதிரி வச்சு காப்பாத்துவா. மத்த மிஸ் மாதிரி சாந்தி மிஸ் கல்யாணம் ஆகி போயிடுவானு காத்துண்டு இருக்கர்துலையும் பிரயோஜனம் இல்லை. ஏன்னா சாந்தி மிஸ்ஸாத்துல எல்லாரும் பீஷ்மருக்கு தூரத்து சொந்தக்காரா. வேற வழியில்லாம பள்ளிக்கூடத்தையே மாத்திட்டேன்.

ஆரம்பத்துலேந்தே எனக்கு வராத விஷயம் எல்லாம் எங்க அண்ணாவுக்கு ரொம்ப நன்னா வரும். வயத்தெரிச்சலை கிளப்பர்துக்குன்னே எதாவது பண்ணுவான். அவன் என்னவோ பெரிய அயோத்தி ராமன் மாதிரியும் நான் அயோக்யராமன் மாதிரியும் வச்சுண்டு,"உங்க அண்ணாவ மாதிரி இருந்தா என்ன?"னு எல்லாரும் கரிச்சுகொட்டுவா. அவன் ஹிந்தில பெரிய்ய்ய அப்பாடேக்கர். தமிழ் நாட்டுக்கு கவர்னரா வரப்போர பஞ்சாப் சிங்குக்கு இவன் தான் பக்கத்துல இருந்து மொழிபெயர்த்து சொல்ல போகர மாதிரி ஹிந்தியை பயங்கரமா படிச்சான். கேட்டா மத்யமா/தோசமானு பரிட்சை பேர் சொல்லி பிலிம் காட்டுவான். நமக்கு ஹிந்திதான் வராதே தவிர தமிழ்ல நல்ல பிடித்தம்/படித்தம் உண்டு. “வாசனை ரோஜா வாடிப் போகலாமா?”வை "வாடி சரோஜா! ஓடி போகலாமா?"னு செயப்பாட்டுவினையா மாத்தி காமிச்சு வினையை விலைகுடுத்து வாங்கின சமயங்கள் ஏராளம்.

படிப்பெல்லாம் முடிச்சு கல்லிடையோட எல்லையை தாண்டி பெண்களூர் வந்ததுக்கு அப்புறம் தான் ரஹதாதாவோட அருமை புரிஞ்சது. இனிமே புரிஞ்சு என்ன பண்ண. எங்க தெரு சினிமா மாமி சொல்ர மாதிரி " நேத்திக்கு சாயங்காலம் கிளம்பி போன நெல்லை எக்ஸ்பிரஸுக்கு இன்னிக்கு டிக்கெட் எடுக்கலையேனு வருத்தப்பட முடியுமோ!"னு எனக்கு நானே சமாதானம் சொல்லிப்பேன். பெண்களூர் ஆபிஸ்ல முக்கால் வாசி பேர் அச்சாஹை! குச்சாஹை!னு தான் பேசிண்டு இருப்பா. அவா எல்லாரையும் ஹை ஹை!னு வாயப்பாத்துண்டு இருப்பேன். அதுவும் குஜாராத் குமரிகள் கொஞ்சி கொஞ்சி ஹிந்தில அகவும்போது தான் எங்க அண்ணாச்சி எதுக்கு ராப்பகலா கண்முழிச்சி ஹிந்தி படிச்சான்னு விளங்கும். பட்லர் ஹிந்தியை வச்சுண்டு ‘டிகே டிகே!’னு சொல்லி ஓட்டிண்டு இருந்தேன்.

சப்பாத்தி பிகர்களும் மாக்கான்களும் என்ன பேசிண்டு இருந்தாலும் கடைசில மங்களம் பாடர்துக்கு மொஹபத்து! மொஹபத்து!னு தான் முடிப்பா. எனக்கு எங்க ஊர் பெருமாள் கோவில்ல நடக்கும் ராபத்து, பகல்பத்து உத்ஸவம் தான் தெரியும். இது என்னவோ புதுசா மொஹபத்து மொஹபத்து!னு பேசிக்கராளே?னு ஆத்மவிசாரம் பண்ணிப்பேன். ஒருவேளை குஜராத்ல இருக்கும் அவா ஊர் பெருமாள் கோவில்ல நடக்கர உத்ஸவமா இருக்குமோ?னு எனக்கு நானே சமாதானம் பண்ணிப்பேன். என்னோட ஆபிஸ் கேஃப்ல கேப் இல்லாம ரொம்ப செளஜன்யமா பக்கத்துல உக்காசுண்டு வரும் ஒரு பம்பாய்காரி ஹிந்தியை மழை மாதிரி பொழிவா. முதல் நாளே அவள்ட , “அம்மாடி கோந்தை! நாங்கெல்லாம் ஹிந்தியை எதிர்த்து ரயில் வராத தண்டவாளமா பாத்து தலையை வச்சு போராட்டம் பண்ணின வீரபரம்பரைல வந்தவா அதனால வெள்ளக்காரன் பாஷைலயே நாம பேசிக்கலாம்”னு சொல்லிட்டேன். புரிஞ்ச மாதிரியே மண்டையை மண்டையை ஆட்டினாளே தவிர விளங்கின மாதிரி தோனலை. ஆரம்பகாலங்கள்ல இங்கிலிபீஸ்ல கிராமர்ல கொஞ்சம் சந்தேகமா இருந்தா அதை கட் பண்ணிட்டு விஷயத்தை மட்டும் தான் சொல்லுவேன்(ஏன்னா வளவளனு பேசர்து நமக்கு பிடிக்காதே). "ஐ டாக்! யூ டாக்! ஒய் மிடில் மிடில் ஹிந்தி டாக்?"னு சொன்னா புரியர்துல என்ன கஷ்டம்னு நேக்கு தெரியலை.

மத்தவா மாதிரி கேலிபண்ணாம நம்ப பம்பாய்காரி நித்யம் ஒரு ஹிந்தி வார்த்தை புதுசா சொல்லிதருவா. அந்த டீலிங் எனக்கு கொஞ்சம் பிடிச்சுருந்தது. இதே மாதிரி சாந்தி மிஸ்ஸும் சொல்லிகுடுத்து இருந்தா நான் எதுக்கு பள்ளிகூடம் மாறபோறேன்? லடுக்கா லடுக்கி!னு தடுக்கி தடுக்கி ஹிந்தி சொல்லிகுடுத்தா. "மேரா ஹாத்து மே தேரா ஹாத்து ஹை! நடுல எவனாவது வந்தா சாத் சாத்னு சாத்து ஹை!!" அப்பிடின்னு கவிதை சொன்னா நம்ப ஆசான் ரசிச்சு கேட்டுப்பாங்க. 5 வருஷம் கம்பவுண்டரா வேலை பாத்தவா டாக்டர் ஆகர மாதிரி அந்த ஹிந்தியை வச்சுண்டு காலஷேபம் பண்ணிண்டு இருக்கேன்.

கழிஞ்ச ஆகஸ்ட்ல எங்க ஊர் பெருமாள் கோவில் கருடன் சன்னதி பக்கத்துல வச்சு சாந்தி மிஸ்ஸை பாத்தேன். “ஜி ப்ரணாம்!”னு அவாளை பாத்து சொன்னவுடனே மிஸ்ஸுக்கு பயங்கர ஆச்சரியம். “கலிகாலம்ங்கர்து சரியாதான் இருக்கு தக்குடு! நீ கூட உருப்படியா ஆயிட்டையே?”னு சொன்னா. அடுத்த க்ஷணமே ‘உங்க அண்ணா செளக்கியமா?’னு ஆர்வமா கேட்டா. ‘ம்ம்! ம்ம்!’னு சொல்லிட்டு நகர்ந்தேன். “அண்ணா செளக்கியமா? ஆட்டுக்குட்டி செளக்கியமா?” மட்டும் நன்னா கேக்க தெரியர்து. என்ன இருந்தாலும் பாம்பே பாம்பே தான்!

குறிப்பு - தீபாவளிக்கு ஏது போஸ்ட் போடலை தக்குடு!னு நிறையா பேர் ஜாரிச்சா. தீபாவளி/பொங்கலை ஒட்டி புது போஸ்ட் எதுவும் போடர்து இல்லை. ஏன்னா, மோட்டுவளையை பாத்து நாம கஷ்டப்பட்டு ரூம் போட்டு யோசிச்சு புது போஸ்ட் போட்டா அங்க வந்து “இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!”னு எல்லாரும் சொல்லிட்டு போவா. அதுக்கு பழைய போஸ்ட் போறாதோல்லியோ!! :))

45 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அர்ஜுனனோட கண்ணுக்கு எப்பிடி கிளியோட கண்ணு மட்டும் தெரியுமோ அதே மாதிரி சாந்தி மிஸ்ஸுக்கும் என்னோட தொடைதான் எப்போதும் தெரியும்.//

//மத்த மிஸ் மாதிரி சாந்தி மிஸ் கல்யாணம் ஆகி போயிடுவானு காத்துண்டு இருக்கர்துலையும் பிரயோஜனம் இல்லை. ஏன்னா சாந்தி மிஸ்ஸாத்துல எல்லாரும் பீஷ்மருக்கு தூரத்து சொந்தக்காரா. வேற வழியில்லாம பள்ளிக்கூடத்தையே மாத்திட்டேன். //

பிரமாதம். பாராட்டுக்கள். vgk

கவிநயா said...

//“வாசனை ரோஜா வாடிப் போகலாமா?”வை "வாடி சரோஜா! ஓடி போகலாமா?"னு//

தக்குடு! இதெல்லாம் கொஞ்சம் ரொம்பவே ஓ...வரா இல்லை?!

//மொஹபத்து மொஹபத்து!னு பேசிக்கராளே?னு ஆத்மவிசாரம் பண்ணிப்பேன்.//

எதெதுக்குதான் ஆத்மவிசாரம் பண்றதுன்னு இல்லையா? :) அபிராமி, உன் புள்ளையக் கவனிச்சுக்கோம்மா!

//புது போஸ்ட் போட்டா அங்க வந்து “இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!”னு எல்லாரும் சொல்லிட்டு போவா. அதுக்கு பழைய போஸ்ட் போறாதோல்லியோ!! :))//

சான்ஸே இல்லை! :)

(அடுத்த) தீபாவளி வாழ்த்துகள் தக்குடு!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ச்சே...இந்த ஒரு விசயத்துல மட்டும் நானும் உன் கட்சி தான் தக்குடு... நானும் இந்த ஹிந்திக்கு பயந்துட்டு நாலாவது க்ளாஸ்ல ஸ்கூல் மாறின கேஸ். ஆனா தெரிஞ்ச ரெண்டு அச்சா பாட்சாவை வெச்சு நான் பண்ணின அலப்பறை உனக்கே தெரியும்...:) அதென்ன ஹிந்தி மிஸ்'னாலே கிள்றது... எனக்கு இந்த டவுட் ரெம்ப நாளா உண்டு...:)) சிலுக்கு பத்தி நீ சொல்லாத போஸ்ட் எதுனா இருக்கானு தேடி பாத்தேன் தக்குடு, நோ சான்ஸ்... "பிரிக்கவே முடியாதது?" கேள்விக்கு இனி இந்த பதிலும் சொல்லலாம் போல இருக்கு...:))))

King Vishy said...

Good one..

To be honest - aarambatthula usual level-ku illayo nu thonichu.. but truly and literally laughed out loud in office at:

“வாசனை ரோஜா வாடிப் போகலாமா?”வை "வாடி சரோஜா! ஓடி போகலாமா?"

ஹிந்தியை எதிர்த்து ரயில் வராத தண்டவாளமா பாத்து தலையை வச்சு போராட்டம் பண்ணின வீரபரம்பரைல வந்தவா

கஷ்டப்பட்டு ரூம் போட்டு யோசிச்சு புது போஸ்ட் போட்டா அங்க வந்து “இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!”னு எல்லாரும் சொல்லிட்டு போவா

Ha ha ha.. Last logic - super!! Blog la post poduradhukkum ivlo strategy ya!

Chitra said...

என்னை மாதிரியே ஹிந்தியை கச்சுவிஷமா பாவிச்ச ரகுதாத்தாக்கள் எல்லாருக்கும் ஹிந்தி பீரியடுக்கு முன்னாடி திடீர் திடீர்னு வயத்துவலி வரும்.

......எங்களுக்கு சிரிச்சு சிரிச்சு , வயத்து வலி வருதே.... ஹா,ஹா,ஹா,ஹா....

ஷைலஜா said...

//ஆரம்பத்துலேந்தே எனக்கு வராத விஷயம் எல்லாம் எங்க அண்ணாவுக்கு ரொம்ப நன்னா வரும். வயத்தெரிச்சலை கிளப்பர்துக்குன்னே எதாவது பண்ணுவான். அவன் என்னவோ பெரிய அயோத்தி ராமன்//////

அம்பிக்கு எப்போவும் முகராசிதான்:)

//அடுத்த க்ஷணமே ‘உங்க அண்ணா செளக்கியமா?’னு ஆர்வமா கேட்டா. ‘ம்ம்! ம்ம்!’னு சொல்லிட்டு நகர்ந்தேன். “அண்ணா செளக்கியமா? ஆட்டுக்குட்டி செளக்கியமா?” மட்டும் நன்னா கேக்க தெரியர்து. என்ன ///


ஹஹ்ஹா:):) அம்பிக்கு கொஞ்சம் அரவிந்தசாமி முகவெட்டு அதான் :):) ஆமா தக்குடு எப்படித்தான் இவ்ளோ பிரம்மாதமா எழுதறியோ? எல்லாம் அண்ணன் காட்டிய வழியம்மா:) அம்பி நலம்தானே?:)

ஸ்ரீராம். said...

சரள நகைச்சுவை தக்குடு. மணிப்ப்ரவாளம். எத்தனை வரிகளை 'கோட்'செய்ய? கடைசி வரி டாப்போ டாப்! அப்புறம் சொல்ல மறந்துட்டேனே...(அடுத்த) தீபாவளி(க்கு) வாழ்த்துகள்!

KParthasarathi said...

படிக்க ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது.

adithyasaravana said...

/சப்பாத்தி பிகர்களும் மாக்கான்களும் என்ன பேசிண்டு இருந்தாலும் கடைசில மங்களம் பாடர்துக்கு மொஹபத்து! மொஹபத்து!னு தான் முடிப்பா/

ஹா ஹா..எப்படி தக்குடு இப்படி? சரி பெண்களூருவில் மொஹப்பத்து செய்ய உனக்கு இன்னும் ஒரு சப்பாத்தி வரைபடமும் சிக்கலையா? பாவம் நீ, இன்னும் எத்தனை காலம் தான் ஏக்கத்தோடையே எழுதப்போறியோ!

துளசி கோபால் said...

ஹாஹாஹாஹா

அதுவும் //ஹிந்தியை எதிர்த்து ரயில் வராத தண்டவாளமா பாத்து தலையை வச்சு போராட்டம் பண்ணின வீரபரம்பரைல வந்தவா...//

யேத்தோ...சூப்பர் ஹை!

வெங்கட் நாகராஜ் said...

ஹிஹிஹி.... நாமும் அதே வீரபரம்பரை தான்.. நெய்வேலி பதினெட்டாம் பிளாக் போஸ்ட் ஆஃபீஸ் ஹிந்தி போர்ட்ல தார் அடித்த பரம்பரை.... :)

தில்லி-ல வந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் தொபுக்கடீர்னு தள்ளி விட்டப்பதான் புரிஞ்சது எவனோ ஹிந்திக்காரன் போட்ட சாபம்னு.... :)

ரசித்தேன்....

வல்லிசிம்ஹன் said...

தக்குசு,அடுத்த மாசம் எப்போ வரப் போறதுன்னு யோசனையில் மொஹபத் வந்துடுத்தோ:)
வரிக்கு வரி சிரிச்சாச்சு. கோட் அன் கோட் சொல்ல சோம்பேறித்தனமா இருக்கு.:)
அத்தனை வரிகளுக்கும் சேர்த்து வரப் போற மாட்டுபொண்ணுக்கு ஆஸீர்வாதங்கள் எழுதிடறேன்:)

குறையொன்றுமில்லை. said...

பகல்பத்து, ராப்பத்தோட முஹப்பத்தையும் சேர்த்துட்டியே? உன்ன, என்ன செய்ஞ்சா தேவலை?

சாந்தி மாரியப்பன் said...

// "ஐ டாக்! யூ டாக்! ஒய் மிடில் மிடில் ஹிந்தி டாக்?//

ச்சான்ஸே இல்லை.. வடிவேலு ஸ்லாங்க்ல படிச்சா இன்னும் ஜூப்பரு :-))

// "மேரா ஹாத்து மே தேரா ஹாத்து ஹை! நடுல எவனாவது வந்தா சாத் சாத்னு சாத்து ஹை!!" //

சிரிச்சு சிரிச்சு வயித்து வலியே வந்துடுச்சு.. எப்டி இப்படியெல்லாம் கவிதையா கொட்றது :-))))))))

அமுதா கிருஷ்ணா said...
This comment has been removed by the author.
அமுதா கிருஷ்ணா said...

உங்க ஊரு பாஷை இரண்டு தடவை படித்தால் தான் புரியரது. சரோஜா ஓடி போலாமா நச்..

Priya Srinivasan - I Camp in My Kitchen said...

Kannule thanni vara mathiri sirichachu!!! nan sirikarathu paarthutu enga aathu mamm-kooda, nanum vanthu padikarennu ukandu irukarar!!!!

வாசனை ரோஜா வாடிப் போகலாமா?”வை "வாடி சரோஜா! ஓடி போகலாமா?"னு
chanc-e illai!!!!! ninaichu ninaichu sirikiren!!!!!

RVS said...

வாடி சரோஜாவா? நவம்பர்ல இப்படி ஒன்னு எழுதறதுக்கு ரொம்ப தைரியம் வேணும்.

சிலுக்குவோட நிக்கும்னு பார்த்தா இப்போ டிஸ்கோ சாந்தி வேற...

சாத்து சாத்துன்னு சாத்திட்டப்பா... :-)

R. Jagannathan said...

கொண்டேபுட்டேள்! வாய் விட்டு சிரித்த இடங்கள் அனேகம். நகைச்சுவையும் ஆத்து பாஷையும் நன்னா கைவந்திருக்கு உங்களுக்கு. அந்த காலத்து ‘ரகுதாத்தா’ வை தெரிந்து வைத்திருக்கிறீர்களே! (படம் பெயர் மறந்துவிட்டது.) வாடி சரோஜா..வும், சாத்து சாத்துனு சாத்து ஹையும், ராப்பத்து-பகல் பத்து-மொஹாபத்து வும், ரயில் வராத தண்டவாளமும், டிஸ்கோ சாந்தி ட்ராயரும் .. என்ன சொல்ல? எல்லோரையும் போல ‘சான்ஸே இல்ல!’.

சமீபத்தில் தான் உங்கள் சைட்டுக்கு வந்ததால் அடுத்த சில நாட்களில் பழைய பதிவுகளையும் படித்து விடுவேன். நேற்று ‘பண்டாரம்’ படித்து சிரித்துக் கொண்டிருந்தேன்.

பதிவை படிக்க அழைத்தமைக்கு நன்றி.

ஆமாம், உங்கள் அண்ணா சௌக்கியமா!! - ஜெ.

Shobha said...

Belated Happy Deepavali Thakkudu . Mathapadi post ai 'Ellarukkum' anupinaya? Illai sagattu menikku chapathi, silukku disco nnu eduthu vittrukkiye adunala ketten. :)
Shobha

RAMA RAVI (RAMVI) said...

ஒவ்வொரு வரிக்கும் சிரிச்சு சிரிச்சு வயத்த வலிக்கரது தக்குடு.அருமையா எழுதியிருக்க.எழுத்துல எல்லோரையும் கட்டிப்போட்டுட்ட!!

//"மேரா ஹாத்து மே தேரா ஹாத்து ஹை! நடுல எவனாவது வந்தா சாத் சாத்னு சாத்து ஹை!!" //

இது கூட நன்னயிருக்கு.

சுசி said...

Super ! Go ahead ! போட்டு தாக்கிண்டிருகாய் தம்பி ! எதை சொல்லறதுன்னே தெரியலை, எல்லாமே சூப்பர் !

ஆமா ! நான் சொன்ன தொடர் பதிவு என்னாச்சு ?

vijayalakshmi said...

ayyooo sami.....
Nan thaniya serikaratha parthu engatthu mama payandhupoidar theriyumo?
Irru irru innum oru thadavai padichuttu serikaren........

Shanthi Krishnakumar said...

Vazhakkam pola haasyamaana post... Kalyana velai endha mattula irukku?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அண்ணாவை ஜாரிச்சதா சொல்லு,தக்குடு!

Gopikaa said...

//90-ல வந்த படங்கள்ல கிளைமாக்ஸ்ல ஹீரோவோட அம்மாவையும், ஆத்துக்காரியையும் நடு ஹால்ல கட்டி வச்சுட்டு, வில்லன் ப்ளூ லேபில் பாட்டில்ல விட்டு வச்ச நன்னாரி சர்பத்தை குடிச்சுண்டு இருக்கும் போது ‘ஜிகுஜிகு’ லைட்டுக்கு நடுல ஜிங்க் ஜிங்குனு ஆடும் ‘டிஸ்கோ’ சாந்தியோட டைட் டிராயரை இரவல் வாங்கிண்டு வந்து போட்டுண்ட மாதிரி //

இப்படி ஒரு உவமையா? அப்பப்பா முடியல!

நீ எழுதின ஒவ்வொரு பாராவிற்கும் இரு நிமிடமா வது தொடர்ந்து சிரித்து இருப்பேன்.

Angel said...

Woh Hansane wali baat thi thakkudu

Angel said...

ஓவ்வொரு வரியும் சிரிச்சு சிரிச்சு அப்பப்பா ..சூப்பர் .அடிக்கடி இப்படி சிரிக்க வைங்க.

Anonymous said...

காமெடி கிங் ஆயிட்டே தக்குடு நீ. அப்பப்போ அம்பியை வேற ஆட்டதுக்கு இழுத்துக்கராய். ரொம்ப நன்னா இருக்கு.

அன்புடன்
சுபா

Anonymous said...

Amazing, serichi serich vaithavalli !!!thanks for yet another super comedy blog.wishes for more such funny ones.God Bless.

Anbudan,
Bangalore akka

Mahi said...

/தீபாவளிக்கு ஏது போஸ்ட் போடலை தக்குடு!னு நிறையா பேர் ஜாரிச்சா/ அவ்வ்வ்வ்வ்! யார்ப்பா அவாள்லாம்??!


நானும்தான் இந்தி:) படிச்சேன்,எங்க மிஸ் ரெம்ப நல்லமிஸ் தெரியுமோ?? பொறுமையா சொல்லித்தந்து என்னை கிட்டத்தட்ட 8 எக்ஸாமும் பாஸ் பண்ணவைச்சுட்டாங்க. :)

/என்னோட அண்ணா போட்டுண்டு குடுக்கும் பழைய யூனிபார்ம் ட்ராயர் தான் நான் போட்டுப்பேன். 5 வருஷ பழைய ட்ராயர்ங்கர்தால அது 90-ல வந்த படங்கள்ல கிளைமாக்ஸ்ல ஹீரோவோட அம்மாவையும், ஆத்துக்காரியையும் நடு ஹால்ல கட்டி வச்சுட்டு, வில்லன் ப்ளூ லேபில் பாட்டில்ல விட்டு வச்ச நன்னாரி சர்பத்தை குடிச்சுண்டு இருக்கும் போது ‘ஜிகுஜிகு’ லைட்டுக்கு நடுல ஜிங்க் ஜிங்குனு ஆடும் ‘டிஸ்கோ’ சாந்தியோட டைட் டிராயரை இரவல் வாங்கிண்டு வந்து போட்டுண்ட மாதிரி இருக்கும். / ஒரு டவுசர்:)க்கு 9 வரில வர்ணனை எழுத தக்குடுவத் தவிர யாரால முடியும்?? :)))))))

சீக்கிரம் சரித்திர நாவல்கள் எழுத வாழ்த்துக்கள் அம்பி! :)

இராஜராஜேஸ்வரி said...

வாசனை ரோஜா வாடிப் போகலாமா?”வை "வாடி சரோஜா! ஓடி போகலாமா?"னு செயப்பாட்டுவினையா மாத்தி காமிச்சு வினையை விலைகுடுத்து வாங்கின சமயங்கள் ஏராளம்.


அருமையான சம்பவங்களின் நகைச்சுவைத் தொகுப்பு, பாராட்டுக்கள்..

Murugan said...

Migavum Arumai...

Murugan said...

வாசனை ரோஜா வாடிப் போகலாமா?”வை "வாடி சரோஜா! ஓடி போகலாமா?"

Lalitha Mittal said...

இனி உன் வலைக்கு வருமுன் ஒரு வயித்துவலி மாத்திரை போட்டுக்கணும்னு தீர்மானம் பண்ணிட்டேன் ;சிரிச்சுச்சிரிச்சு வயிறெல்லாம் புண்!

geetha santhanam said...

சாத்து சாத்துன்னு சாத்து ஹை --சூப்பர். சிரித்து மாளவில்லை.

(Mis)Chief Editor said...

அப்பவே 'தொடை'எல்லாம் காமிச்சிண்டு செக்ஸியா இருந்திருப்பேள் போலருக்கே...! ஆக மொத்தத்துல, மிஸ் சாந்தி-யால உங்க சாந்தி மிஸ் ஆச்சுன்னு சொல்லுங்க...!

TechOps mami said...

yepadi thakkadu...yepadi? yepadi unaku matum ipadi yellam thonarthu? chanceea illa...kalakal...ipo improvemnt aa siluku poi disco shanthi vanhuruka...paavam unga anna. avara nee chuma veedarthea illa..saroja oodi poolaama, sahu sathu sathuhai...kalakal...kalidaikuruchi.

குரு said...

Aha thakudu super engathula ennoda kozhenduluku nan then hindi vathiyar ek kaavmen ek kissan puriyardha

Guru

DaddyAppa said...

Just 3 days...3 யே 3 days . உங்க எல்லா பதிப்பும் படிச்சாச்சு :-) இன்னும் 3 மாசத்துக்கு நோய் வராத அளவுக்கு வாய் விட்டு சிரிச்சாச்சு...உங்க ஊர் பக்கம் வந்ததில்லை. பட் வந்த ஒரு பீலிங்...சூப்பர் ...ஒட்டகம் பத்தி பதிவே இல்லையே...எங்களை கொஞ்சம் DOHA க்கும் கூட்டிண்டு போங்கோளேன் !!!

Geetha Sambasivam said...

ये क्या? आपको तामिल भी नहीं आती तो हिंदी कैसे आयगी?

Geetha Sambasivam said...

to continue

துபாய் ராஜா said...

உங்களுக்கு ஒரு சாந்தி மிஸ்ன்னா. எனக்கொரு மங்களம் மிஸ்...

அருமையான பகிர்வு தக்குடு.

தக்குடு said...

@ வைகோ சார் - நன்றி! :)

@ கவினயாக்கா - :))

@ இட்லி மாமி - நீங்க ஒரு அலப்பறைனு தான் லோகத்துக்கே தெரியுமே!! :P

@ விச்சு - ரொம்ப சந்தோஷம் பா!

@ சித்ரா அக்கா - :))

@ ஷைலஜா அக்கா - இப்ப இருக்கர அரவிந்தசாமியை மாதிரினு சொல்ல வரேளா?? :P

@ sriram அண்ணா - நன்னி ஹை!!

@ பார்தசாரதி சார் - நன்னிஹை...

@ ஆதித்யசரவணா - முதல் வருகைக்கு நன்றி பாஸ்!

@ துளசி ரீச்சர் - பஹூத் தன்யவாத் ஹை!

@ வெங்கட் அண்ணா - ஹிந்திகாரன் சாபம் வாஸ்தவம் தான் :)

@ வல்லிம்மா - கடைசில எல்லா புகழும் நாட்டுப்பொண்ணுக்கு பொயிடுத்தா :)

@ லெக்ஷ்மி மாமி - :)

@ அமைதி அக்கா - எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் :)

@ அமுதா மேடம் - படிக்க படிக்க புரியும்!

தக்குடு said...

@ ப்ரியா அக்கா - செளக்கியமா இருக்கேளா? ரசிச்சதுல ரொம்ப சந்தோஷம்!

@ மைனர்வாள் - என்ன இருந்தாலும் உங்களை மாதிரி வருமா?? :)

@ ஜகன்னாதன் சார் - ரொம்ப மகிழ்ச்சி சார்! ஆதரவுக்கு நன்னிஹை! :)

@ ஷோபா மாமி - போஸ்ட்டை 'அவாளுக்கு' வாசிச்சே காட்டியாச்சு! :P

@ ரமா அக்கா - :))

@ தா.தலைவி அக்கா - தொடர் பதிவுதானெ எழுதறேன். கொஞ்சம் நாள் எடுக்கும்!

@ விஜி மாமி - சிரிச்சா உடம்புக்கு நல்லது தான்.

@ பாங்க் மாமி - நடந்துண்டே இருக்குமா.

@ ராமமூர்த்தி சார் - நீங்களுமா?? :)

@ கோபிகா அக்கா - :))

@ தேவதை - சரிங்க எஜமான்!

@ சுபா மேடம் - :)

@ பெண்களூர் அக்கா - நன்னிஹை!

@ மஹி - குஜ்ஜு பிகர் பத்தி ஒரே ஒரு வார்தை சொல்லியிருந்தா நானும் பிரமாதமா ஹிந்தி படிச்சு இருப்பேன்.

@ ராஜி மேடம் - நன்னிஹை! :)

@ கார்திக் - :)

@ லலிதா மேடம் - ஓஹோ!! :)

@ கீதா மேடம் - :)

@ பருப்பு ஆசிரியர் - கமல் ரசிகர்னு நிரூபிச்சுட்டேள் :P

@ Techops மாமி - :))

@ குரு அண்ணா - புரியர்து!!

@ டாடிஅப்பா - ரொம்ப சந்தோஷம் சார் :)

@ கீதா பாட்டி - @#%$&* :P

@ துபாய் ராஜா - சேம் ப்ளட்னு சொல்லுங்க அப்ப :)

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)