லோக விவஹாரங்களில் சிக்கித் தவிக்கும் ஆத்மா கூட ஒரு வகையில் பண்டாரம் தான். பரமாத்மாவின் பரபிரம்ம ஸ்வரூபத்தில் லயிப்பதற்கு பண்டாரமான ஜீவாத்மா பாடாய்படுகிறது.... இப்படி எல்லாம் எழுதர்துக்கு நான் என்ன மாதங்கி மேடமா?..:P தலைப்பு & ஆரம்ப வரியை பாத்துட்டு பயந்து ஓடிராதீங்கோ! அகிலா மாமி சொல்ற மாதிரி "கெட்டிக்காரன் பொய் எட்டு நாளைக்கு" . வரப் போகும் மேட்டர் என்னவோ உங்களுக்கு பழக்கமான விஷயம் தான் எப்போதும் பழைய ஹார்லிக்ஸ் பாட்டில்ல வரும் அம்மாவோட நார்தங்காய் ஊறுகாய் சில தடவை காம்ப்ளான் பாட்டில்ல போட்டு வருதோல்லியோ! அதை மாதிரி வெச்சுக்கோங்கோளேன்!..:)
ஒருத்தர் பார்த்த உடனே சிரிச்ச முகத்தோட செளக்கியமா இருக்கேளா? ஆத்துல எல்லாரும் செளக்கியம் தானே?னு வாஞ்சையோட ஜாரிச்சாக்க அவா திருனெல்வேலிக்காரா!னு ரொம்ப ஈஸியா கண்டுபிடிச்சுடலாம். இன்னிக்கும் எங்க தெருலேந்து பெங்களூருக்கு கல்யாணம் ஆகி போன ஒரு மாமி ஊருக்கு வந்தாக்க, தெரு முக்குலேந்து அவாத்தை கார் தொடர்துக்குள்ள சுமாரா ஒரு 50 செளக்கியமாவது கேட்டுட்டு தான் ஆத்துக்குள்ள காலடி எடுத்து வைப்பா. மிச்சம் மீதி இருக்கும் ‘செளக்கியமா?’ சாயங்காலம் தொடரும். செளக்கியமா கேக்கும் போது அவாளோட வலது உள்ளங்கை ஆசிர்வாத அபினயத்துல இருக்கும். "செளக்கியமா மாமி!"னு அவாளுக்கு ஒரு பட்டப்பெயரே உண்டு. இந்த மாதிரியான மாமிகளால் சீராட்டி பாராட்டி வளர்க்கப்பட்டதாலையோ என்னமோ எனக்கும் இந்த வியாதி உண்டு. “ஹே! வாட்ஸ் அஃப்?”னு கேட்டாலும் “நான் செளக்கியம்! உங்காத்துல எல்லாரும் செளக்கியமா!” தான் பதிலா டைப் அடிப்பேன்.
இப்ப இருக்கர ஜோலில வந்து சேரும் போது என்னொட உயரதிகாரி ஒரு தமிழர்னு தெரிஞ்ச போது கொஞ்சம் ஆசுவாசமா இருந்தது. இருந்தாலும் என்னோட தலைவர் ஆபிஸ்ல வெச்சு தமிழ்ல பேச மாட்டார். வெள்ளக்காரன் பேசக்கூடிய 'அக்மார்க்' இங்கிலீஷ்ல தான் சம்சாரிப்பார். அபூர்வமா சில சமயம் தமிழ்ல ரெண்டு வார்த்தை பேசுவார். அதுவும் வில்லங்கமா தான் இருக்கும். கரெக்டா சுச்சா போகர இடத்துல வெச்சுதான் “டிபன் சாப்பிட்டையா தக்குடு?”னு செந்தில் மாதிரி ஜாரிப்பார். ஒரு தடவை அவர் கேக்கர்துக்கு முன்னாடி முந்திண்டு நான் "இன்னிக்கி என்ன டிபன்?"னு கேட்டதுக்கு அப்புறம் அவர் கேக்கர்து கிடையாது. மத்தவா யார் கிட்டையும் “செளக்கியமா?” இங்க்லீஷ்ல கூட கேக்க முடியாது. அரபில கேகர்துக்கு நேக்கு அரபி தெரியாது. இருந்தாலும் நித்யம் ஒரு ஷேக்கும் நானும் (அசடுவழிஞ்சுண்டு) சிரிச்சுப்போம். அதுக்கு அப்புறம் நம்ப சூடான் சிங்கத்துகிட்ட கேட்டு அரபில "செளக்கியமா இருக்கேளா? உங்காளோட ஆத்துக்காரி(கள்)& குழந்தேள் எல்லாம் செளக்கியமா?"னு அவா பாஷைல கேக்கர்துக்கு பழகிண்டேன்.
ஒரு நாள் திடீர்னு தலைவர் என்கிட்ட வந்து “நாளைக்கு மத்தியானம் நம்பாத்துல சாப்பிட வந்துடு தக்குடு! அக்கா சொல்ல சொன்னா!”னு சொன்னார். “ஓஓஓ! அதுக்கென்ன பேஷா வந்துடலாமே!”னு சொல்லிட்டு அடுத்த நாள் அவாளுக்கும் எனக்கும் தெரிஞ்ச இன்னொரு பாச்சிலரையும் சேர்ந்து அழைச்சுண்டு ஒரு டஜன் வாழைப்பழத்தோட அவாத்துக்கு போனேன். அவாத்துக்கு போனதுக்கு அப்புறம் தான் தெரியர்து அவரோட தங்கமணி திருனெல்வேலி ஜில்லா!னு. அப்புறம் என்ன, 'அக்க்க்க்க்க்க்கா!' 'தம்ம்ம்ம்ம்ம்ம்பி!'னு ஒரே பாசமழைதான் போங்கோ! டென்னிஸ் மாட்ச் அம்பையர் மாதிரி என்னோட தலைவர் எங்க ரெண்டு பேர் முகத்தையும் மாத்தி மாத்தி பாத்துண்டு இருந்தார். வெறும் நெத்தியா சாப்பிட உக்கார வேண்டாமே!னு கால் அலம்பிட்டு நெத்தி நிறைய விபூதி இட்டுண்டு சாப்பிட ஹாலுக்கு போனா "அச்சு அசல் அதே மாதிரி இருக்கான் கோந்தை"னு அந்த அக்கா தனக்கு தானெ சொல்லிண்டா. ஒருவழியா திருனெல்வேலி கதை எல்லாம் பேசி முடிச்சுட்டு சாப்பிட போன இடத்துல நாலடி நீளத்துக்கு ஒரு இலை எனக்கு போட்டு இருந்தா அந்த அக்கா, இலையோட ஒரு பக்கத்துல 2 பேர் உக்காசுண்டு அடுத்த பக்கத்துல சாப்பிடர மாதிரி அகலம். எங்க ஊர் அக்காக்களுக்கே அபாரமான சகோதர பாசம் உண்டு.
அவாளொட ரங்கமணிக்கு டிபன் இலை மாதிரி ஒன்னை போட்டுட்டு "இலையவா சாப்பிடபோறேள்!"னு சொல்லி அவரோட வாயை அடச்சுட்டா. பால் பாயாசம் சகிதமா பிரமாதமான சாப்பாடு. எல்லாம் நல்லபடியா போயிண்டு இருக்கும் போது எங்க தலைவர் “பட்டூ! திடீர்னு எதுக்கு தக்குடுவை சாப்பிட கூப்பிட்டை?”னு கேட்டார். அந்த சமயம் நான் தக்காளி ரசத்துக்குள்ள முங்கி குளிச்சுண்டு இருந்தேன். “என்னோட ஜாதகத்துல கேது திசை நடக்கர்தாம், அதனால இந்த மாசம் உடம்பை படுத்தும்!னு ஆத்து ஜோசியர் சொல்லி இருக்கார். பரிஹாரமா திருவண்ணாமைல இருக்கும் ரெண்டு பண்டாரத்துக்கு என்னோட கையாலையே அன்னதானம் பண்ணனுமாம், திடீர்னு பண்டாரத்துக்கு எங்க போகர்து?னு கவலையா இருந்தது அப்போ தான் தக்குடு ஞாபகம் வந்தது!”னு அக்கா முகமலர்ச்சியோட சொல்லவும் என்னோட கூட வந்த புள்ளையாண்டானுக்கு புரை ஏறிடுத்து. அதோட சாப்பாட்டை நிப்பாட்டிட்டு "அப்ப நான் தான் அந்த ரெண்டாவது பண்டாரமா?"னு கேக்கர மாதிரி என்னை பாத்து முறைச்சான். பார்வையாலையே பால்பாயாசத்தை காட்டி " "நன்ன்ன்னா இருப்பை! நான் இன்னும் பாயாசம் விட்டுக்கலை, காரியத்தை கெடுத்துடாதே!"னு சொன்னேன். “எக்கேடும் கெட்டு போ!”னு சொல்லர மாதிரி என்னை பாத்துட்டு அவன் அமைதி ஆயிட்டான். அந்த "அச்சு அசல்" டயலாக்கோட தாத்பர்யம் எனக்கு அப்பதான் விளங்கித்து.
என்னைப்போல் ஒருவர்..:)
நான் கொஞ்சம் நிதானமாதான் சாப்பிடுவேன். முதல் பந்தில உக்காசுண்டா இரண்டாம் பந்தில உள்ளவா கூடதான் தச்சுமம்மு சாப்பிட முடியும். நிதானமா நான் சாப்பிட்டு முடிக்கர நேரம் அந்த அக்கா “நோக்கு திரட்டிபால் பிடிக்குமா?”னு கேட்டுண்டே வந்து இலைல போட்டா. “நன்னா கேட்டேள்! சாப்பாட்டுக்கு பதில் அதையே போட்டு இருந்தா கூட சாப்பிடுவேன்!”னு சொல்லிண்டே பெருமாள் கோவில் தீர்த்தம் மாதிரி மூனு தடவை வாங்கி நொசுக்கிண்டு இருக்கும் போது என்னோட தலைவர் கை அலம்பிட்டு வந்தார். “பட்டூ! எனக்கு திரட்டிபாலை கண்ணுலையே காட்டலையேடீ!”னு பரிதாபமா என்னை பாத்துண்டே கேட்டார். அக்கா அதை காதுலையே வாங்கிக்கலை. "கேது திசைக்கு 48 நாளைக்கு ஒரு பண்டாரத்துக்கு பால்கோவா கிண்டி குடுக்கனும்னு ஒரு பரிஹாரம் உண்டே உங்காத்து ஜோசியருக்கு தெரியாதா அக்கா?"னு கேட்டுபாக்க ஒரு நப்பாசை இருந்தாலும் என்னோட உயரதிகாரிக்கு பயந்து வாயை திறக்கலை.
அந்த அக்காவுக்கு நல்ல கைராசி! எந்த நேரத்துல "ஸ்டார்ட் மியூசிக்" பண்ணினாளோ, இப்ப வாராவாரம் அன்னதானம் நடக்கர்து. கருங்குளம் மாமாவாத்துல மாமி ஆஞ்சனேயருக்கு வடை மாலை சாத்தர அன்னிக்கு எல்லாம் எனக்கும் சாப்பாடு போடரா, என்ன விஷயம்னே புரியமாட்டேங்கர்து. "என்ன்னமோடா கோந்தை! ஆஞ்சனேயர் பூஜைல நீ வந்து சாப்பிட்டா மனசுக்கு ஒரு திருப்தி!"னு அந்த மாமி சொல்லிண்டு இருக்கும் போதே "ரெண்டே ரெண்டு வடை போடுங்கோ!"னு சொல்லி நைசா அஞ்சாவது வடைக்கு அடி போட்டுருவேன்..:) "கோந்தை!அடுத்த வாரம் சாப்பிட வந்துடு கேட்டையா!”னு பாலக்காடு மாமி ஒரு பக்கம் போன் பண்ண, போதாகுறைக்கு இப்ப கல்லிடைலேந்து வேற ஒரு அக்கா லிஸ்ட்ல சேர்ந்துருக்கா. எப்பிடியோ போங்கோ! பகவான் படி அளக்கறார்!..:)
போன வருஷம் சதுர்த்திக்கு பெங்களூர்லேந்து கல்லிடை வந்த “செளக்கியமா மாமி”யோட கார்ல ஓடிண்டு இருந்த பாட்டை கேட்ட உடனே தெருல எல்லாருக்கும் சிரிப்பு வந்துடுத்து. நித்யஷ்ரீ மஹாதேவனோட கனீர் குரல்ல "செளக்கியமா? கண்ணே செளக்கியமா?"னு பாடித்துன்னா எல்லாரும் சிரிக்க மாட்டாளா!!!
39 comments:
பண்டாரம்னு சொன்னாச் சொல்லிட்டுப் போறா போங்கோ!சுசி ருசியா,வகை வகையாச் சாப்பாடு, அதுவும் தல வாழ எலையில போடறவா என்ன வேணாக் கூப்பிடட்டும்.
:)....verum siripputhaan thakkudu, ennamOnnu ninaikkadhae!Paal payasam, Thirattuppaal...Al marai paalaa?
Boss!
என்ன ஏன் boss உங்க பண்டார கும்பலோட கூட்டு செத்துக்கறேல்? தேமேன்னு நாம்பாட்டுக்கு ஏதோ தட்டு தடுமாறி எழுதிண்டுருக்கேன்...
"கொஞ்சம் வசன நடையா எழுதறேன்... இருந்தாலும் புலவன்-ன்னு ஒத்துன்றுக்காங்க... அதையும் கெடுக்கலாம்-னு பாக்கறியா"
- ன்னு தருமி, புலவரா வந்த சிவன்-கிட்ட சொல்றாப்ல-- நாலு பேர் ஏதோ போனா போறது-ன்னு- என்னையும் மதிச்சு comment போட்டு-- blog அ ஓட்டிண்டுருக்கா...
Why boss ? ஏன் இந்த "கொலை வெறி"-ன்னு நன்னா உங்க கிட்ட சண்ட பிடிக்கலாம்-னு நெனைச்சேன்... மேட்டர் அ படிச்சப்ரம்...போனா போறது போ- ன்னு தோணிடுத்து...
December கு அப்புறம் பாத்துக்கலாம்... பழைய கணக்கு-வழக்கெல்லாம்! :P ;)
'மகா பக்கியான தக்குடு கூட ...' என்று ஒரு பிரயோகம் சென்ற வருடம் ஒரு ப்ளாக்ல படிச்ச ஞாபகம் இப்போ வருது. இப்படி சிரிக்க வைக்கும் தக்குடு - எப்படி இருந்தாலும் வாழ்க!
எப்படியோ நல்ல சாப்பாடு கிடைக்கிறதா? வாழ்க...
அட பண்டாரம்னு சொன்னா என்ன, வாய்க்கு ருசியா வாராவாரம் சாப்பாடு கிடைக்கறதோன்னோ தக்குடு... எஞ்சாய் மாடி!
“சௌக்கியமா மாமி!” ஒருத்தர விடறது இல்ல போல....
பண்டாரமோ பணியாரமோ... பாயசம் சகிதம் விருந்து கிடைச்சதே... ஹ்ம்ம்... இந்த ஊர்ல ஒரு அக்காவும் இப்படி இல்லையேனு வருத்தம் தான் எனக்கு...:))
வழக்கம் போல தக்குடு ஸ்டைல்'ல கலக்கல் போஸ்ட்... thoroughly enjoyed every line..:)
சௌக்கியமா மாமி சௌக்கியமா?...:)
சுவையான சாப்பாடு போலவே சூப்பர் காமெடி தான்
//கரெக்டா சுச்சா போகர இடத்துல வெச்சுதான் “டிபன் சாப்பிட்டையா தக்குடு?”னு செந்தில் மாதிரி ஜாரிப்பார்.//
//திடீர்னு பண்டாரத்துக்கு எங்க போகர்து?னு கவலையா இருந்தது அப்போ தான் தக்குடு ஞாபகம் வந்தது!”//
// “நோக்கு திரட்டிபால் பிடிக்குமா?”னு கேட்டுண்டே வந்து இலைல போட்டா. “நன்னா கேட்டேள்! சாப்பாட்டுக்கு பதில் அதையே போட்டு இருந்தா கூட சாப்பிடுவேன்!”//
//"கேது திசைக்கு 48 நாளைக்கு ஒரு பண்டாரத்துக்கு பால்கோவா கிண்டி குடுக்கனும்னு ஒரு பரிஹாரம் உண்டே உங்காத்து ஜோசியருக்கு தெரியாதா அக்கா?"னு கேட்டுபாக்க ஒரு நப்பாசை இருந்தாலும் என்னோட உயரதிகாரிக்கு பயந்து வாயை திறக்கலை.//
நன்றாக ரஸித்தேன். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
//அந்த "அச்சு அசல்" டயலாக்கோட தாத்பர்யம் எனக்கு அப்பதான் விளக்கித்து//
Idha padichuttu romba sirichen Thakkudu. Unbelievable! Romba romba thanks Thakkudu, ippadi sirikka vaikkiradhukku.
தக்குடு
ஒண்ணு தெரியுமோ - பண்டாரமா இருக்கறது ரொம்ப கஷ்டமாக்கும். லௌகீக கவலை எதுவும் படாம அது போக்குல வாழ்க்கைய கழிக்கறது ரொம்ப கஷ்டம். ஸ்தித பிரக்யன். எனக்கென்னவோ நீ சொல்ற வேதம் தான் போற எடத்துல எல்லாம் போஜனம் வாங்கித் தரது. நன்னா இரு.
பண்டாரமா இருக்கவும் ஒரு கொடுப்பினை வேணும்தான் போல...! சாப்பிடரச்சே எதுக்கையேவா எதுக்கு சாப்பிடக் கூப்பிட்டோம்னு சொல்றது... சுவாரஸ்யம்தான்... (வெறும் நெத்தியோட என் சாப்பிடணும்னு நெத்தி நிறைய விபூதியோட...!!!) :))
உனக்கு விருந்து ...எங்களுக்கு வயித்து வலி.... சிச்சு சிச்சு......
பேஷ் பேஷ் :) நன்னா சாப்டேளா??? இப்போ எனக்கும் பாயசம் சாப்டனும் போல இருக்கு..ஆத்துக்கு போய் முதல் வேலை சேமியா பாயசம் பண்றது தான் :)
தக்குடு
ஆத்துல சொல்லி சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோப்பா! அப்புறமா யாரும் இப்படி கூப்பிட்டு படுத்த மாட்டா!!!!
பண்டாரமா நீ! அண்டாராம்.. அண்டா அண்டாவா பாயசம் குடிக்கற ஆளு.. ரைட்டா...
ஒரு ஆத்துக்குள்ளே போய் அந்தாத்து மாமாவுக்கு ஒன்னும் மிச்சம் வைக்காம சாப்பிட்டு வந்ததை எவ்ளோ பேஷா எழுதியிருக்கே!! நீ இன்னும் பெரிய பண்டாரமா வளர்வதற்கு வாழ்த்துக்கள். ;-))
Thakkudu ,
Nanna saappittu engalai nannaa sirikka vachundu iru. Sowkyamaa? Ke Falak Zain?
Thakkudu-ku romba "Paal Thiratti" pola manasu, adhaan engey ponaalum ellorum nalaa kavanitchukuraanga...
Am I right Thakkudu thambi... :-)))
Mathi
ipoothaan theriyarathu enn dobukku unnai SAAMIYAAR nnu koopitaraarnnu
ஹாஹ்ஹா! செம காமெடி போஸ்ட் தக்குடு! அதிலும் /"என்ன்னமோடா கோந்தை! ஆஞ்சனேயர் பூஜைல நீ வந்து சாப்பிட்டா மனசுக்கு ஒரு திருப்தி!"/ :))))))))) :D
ப்ரொஃபைல் போட்டோவைத் தாண்டி தக்குடுவின் நிஜமான தோற்றம் எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணமுடியறது இப்போ!! ;)
//திடீர்னு பண்டாரத்துக்கு எங்க போகர்து?னு கவலையா இருந்தது அப்போ தான் தக்குடு ஞாபகம் வந்தது!”னு// முடியல தக்குடு சிரிப்பை அடக்க முடியல. எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் ....:)) அப்புறம் நீ மத்த பண்டாரங்களை கூப்பிட்டு சாதம் போடணும்....))
அன்புடன்
சுபா
Unkaavathu kuupitu maamam podara..yenaa yarumea koopadarathu illa….enjoy maadi!..:)
'Techops' mami
வாய் விட்டு சிரிசிரின்னு சிரிச்சுட்டேன் பண்டாரம் ஸாரி-தக்குடு.
ஊரு விட்டு ஊரு போனாலும் கர்மாவைத் தொலைக்கமுடியுமா?
பண்டாரம் பதிவு பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருந்தது கோந்தை.
படத்துல இருக்கறது ரெண்டு பேர்ல யாருன்னு சொல்லவேயில்லியே தக்குடு.
free யா கிடச்சா பினாயிலையே குடிக்கிற கோஷ்டி .. பால் பாயசமும் திரட்டி பாலும் கிடச்சா.. கேக்கவா வேணும்? அடி தூள் கிள்ப்பிட்டேள் தக்குடு ..
serichu serichu vaveruvali vantheduthu, espcially anchaneyare vanthamathri :-), super post,
@ சென்னை பித்தன் - கரெக்டா சொன்னேள் சார்!..:)
@ லதா மாமி - எனக்கும் சிரிப்பு தான்...:)
@ மாதங்கி - கோசுக்காதீங்கோ! ..:)
@ கெளதமன் - வேண்டாதது எல்லாம் ஞாபகத்துல இருக்குமே!!..:P
@ அமுதா மேடம் - ஆமாம் மேடம்!..:)
@ வெங்கட் அண்ணா - அதே அதே...:)
@ இட்லி மாமி - செளக்கியமா மாமி செளக்கியமா இருக்கா மாமி!..:P
@ வை கோ சார் - நான் ரசிச்சு எழுதின இடத்தை எல்லாம் ரசித்ததில் மகிழ்ச்சி...
@ மதுரம் அக்கா - ரொம்ப சந்தோஷம் அக்கா!
@ கோபாலன் அண்ணா - கரெக்டா சொன்னேள். அதுதான் படி அளக்கர்து!
@ ராமண்ணா - ஆமாம், முகராசி வேணும்!..:)
@ ரசிகமணி - :))
@ வெண்கல கடை - உங்க ஆம் எங்க இருக்கு?? ஒரு பொது அறிவுக்கு தான் கேட்டேன்..:)
@ ரமா மாமி - உங்களுக்கு விஷயம் தெரியாத மட்டும் ஷேமம்..:)
@ மைனர் - ஆசிர்வாதத்துக்கு ரொம்ப நன்னி! :)
@ ஷோபா மாமி - :)) ஹம்துல்லா!!
@ மதி - மதி வாழ்க!..:)
@ TRC மாமா - :))
@ மஹி - பப்ளிக்ல வேண்டாம்! மெயில் போடுங்கோ!..:)
@ சுபா மாமி - இன்னும் உங்காத்து சாப்பாடு மிஸ்ஸிங்...:))
@Techops மாமி - இந்த தடவை ஒழுங்கா சப்பாத்தி குருமா பண்ணி வைங்கோ! :)
@ சுந்தர்ஜி - ரசிப்புக்கு நன்னி!
@ சீராம் அண்ணா - :))
@ வித்யா அக்கா - அந்த இடம் உங்களுக்கு பிடிக்கும்னு யான் அறியும் கேட்டோ!..:)
Suuuuper post thakkudu :) Every post of urs make me(or rather anyone who reads it) to laugh heartily! Keep on writing!
Ungalai mathiri ladiesai ellam sumangali, kanya ponnu nu koopitu sapadu podara engaluku yaru podaranu athimbare adikadi kurai patupar ethai padicha avar kurai thernthidum.
nice post.
chennai akka.
Good post romba nanna irundhadhu.sharjah vango nanna sapidalm okva
Guru
பண்டாரம் ஓகே....
ஆனா நீங்க ஜீனி / தீனி பண்டாரம்னு தெரியாம போய்டுத்தே அவாளுக்கு...??!!
இதை சிவாஜி இஷ்டைல்ல சொல்லிபாருங்கோ...சூப்பரா இருக்கும்!
-பருப்பு ஆசிரியர்
//"அச்சு அசல் அதே மாதிரி இருக்கான் கோந்தை"னு// சரி சரி எல்லாத்தையும் பப்ளிக் பண்ணாதீங்கோ தக்குடு.
//என்ன்னமோடா கோந்தை! ஆஞ்சனேயர் பூஜைல நீ வந்து சாப்பிட்டா மனசுக்கு ஒரு திருப்தி!"னு//
வயிறு வலிக்க வலிக்க சிரிச்சேன். கண்ணுல ஜலமே வந்துடுத்துடா கோந்தை. எங்க ஆத்துக்காரர் கூட என்னன்ட ஒரு வார்த்தை இப்படி சொல்லி கண்ணுல ஜலம் வர வச்சதில்லே. தேங்ஸ் தக்குடு. எக்ஸலன்ட் காமெடி.
திரு.தக்குடு, ரொம்ப நாளா நான் உங்க ப்ளாக்ல ஓசி பேப்பர் படிச்சிட்டுருந்தேன். அதோட என் பிரண்ட்சுக்கு எல்லாம் உங்க ப்ளாக்க படிக்க சொல்லிட்டுருந்தேன். நீங்க என் ப்ளாக்ல எழுதுன கமெண்டுக்கு பிறகு ஓசி பேப்பர் படிக்க வெட்கமாருக்கு. அப்புறம் உங்க எழுத்துல உள்ள spontaneous காமெடி பிரமாதம். கவலைய மறக்க வைக்கிற கலகலப்பான எழுத்துக்காரருக்கு எங்கள் தோழிகள் சார்பாகவும் வாழ்த்துக்கள்.
@ கோபிகா - ரொம்ப சந்தோஷம் பா!
@ சென்னை அக்கா - அத்திம்பேரோட ஆதங்கம் நியானமானது தான் அக்கா..:))
@ குரு அண்ணா - வந்துட்டா போச்சு!..:)
@ பருப்பு ஆசிரியர் - ஆமாம் ஓய்! நன்னா தான் இருக்கு!..:)
@ க.குயில் - உங்களோட பாராட்டு வார்த்தைகளுக்கு ரொம்ப சந்தோஷம் மேடம்..:)
@ மிருணா - நீங்களும் ஓசி பேப்பரா? இப்படியே ஓசி பேப்பர் வியாபாரம் நடத்தினா தக்குடுவோட கடை 'ஓஹோ'னு ஆயிடும். உங்களுக்கும் உங்க தோழிகள் எல்லாருக்கும் தக்குடுவோட நன்றிகள்!..:)
. எனக்கு பண்டாரத்தை நெனச்சப்போ சவுண்டி ஞாபகம்தான் வந்தது. ( IN LIGHTER VEIN!)
தக்குடு நீங்க ரொம்ம்ப கொடுத்து வச்சவர் .
எனக்கே எனக்கான்னு நாங்க இருந்த சிட்டில மருந்துக்கு கூட தமிழர் கிடையாது .ஒரேயொரு ஆலப்புழை நர்ஸ் .எரிசேரி தேங்கபால் பாயசம் கிடைக்கும் ஆசையில் மண் ஏன்னா அவ கணவர் ஜெர்மன்காரர் so she cooks only german food .இப்பவே சொல்லிடறேன் சீக்கிரம் சமைக்க கத்துகோங்க .
என்னை நல்ல சிரிக்க வச்ச பதிவுROFL!! .have a great day.
romba nalla padhivu!unga writing stylenala engalukke payasam sapta santhosham kedachudhu! sasisuga203
சௌக்கியமா தக்குடு? :)
சூப்பர் போஸ்ட்! :)
2 தடவை படிச்சு சிரித்துக் கொண்டிருக்கிறேன்! :)) தோஹாவில் உள்ள திருனெல்வேலி அக்காக்களெல்லாம் கோந்தையை வாரா வாரம் சாப்பிடக் கூட்டுண்டிருப்பாளே! நல்ல பாஸ் அதை விட நல்ல மாமி! குளிச்சு சமையல் பண்றது உங்கள் விருப்பம் என்று ப்ரொஃபைலில் எழுதியிருக்கேள். ’பட்டை’ போட்டுக்கொண்டு (நான் விபூதியைச் சொன்னேன்)விருந்து சாப்பாடு ஒரு கட்டு கட்டுவதும் பிடிக்கும் என்று தெரிந்து கொண்டேன்! அதையும் விட சுவையாக எழுதவும் செய்கிறீர்கள். வாழ்த்துக்கள். - ஜெ.
பண்டாரம்... சிவன் கோயில்களில் இருக்கும் சொத்தை நிலப்புலன்களை, நகை நட்டுக்களை பாதுகாக்கும் வகையறா... சிவனின் பக்தர்கள்... சிவ தொண்டே சிறந்த தொண்டு என கிடைத்த நேரத்தில் சிவ பூஜை செய்து, கிடைத்த இடத்தில் தங்கி கிடைத்த உணவை சாப்பிட்டு சிவனே கதி என கிடப்பவர்கள்.... ஒரு சிலர் அந்த போலிதோற்றத்தில் தின்றே உடல் வளர்ப்போர்களுக்காக ஒட்டு மொத்த இனத்தையும் கேலி கிண்டல் பேசுவது முறையா...? சிவ பக்தர்களை அவமானப்படுத்துவது சிவனுக்கே அவமானம் செய்வது போலீல்லையா?? முருக கடவுள் கூட ஆண்டி பண்டாரம் தோற்றத்தில் இருக்கிறார் அவரையும் அசிங்க படுத்துதால் சாபம் கிடைக்க போகிறது... பார்த்துக்கொள்ளுங்கள்... ஐயரே
Post a Comment
யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)