Friday, April 16, 2010

திரட்டிப் பால்

பால்கோவா என்று அழைக்கப்படும் திரட்டிப்பால் செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை கொஞ்சம் பார்க்கலாமா??

என்னடா இது பால்கோவா பத்திதான் எல்லாரும் எழுதியாச்சே?னு எல்லாம் சொல்லக்கூடாது, சுப்ரமணியபுரம் படத்துல வரும் 'கண்கள் இரண்டால்' பாட்டு 5000 தடவை நாம ஏற்கனவே கேட்டு இருந்தாலும் 5001-வது தடவை போடும்போதும் ஆர்வத்தோட பாக்கறோம் இல்லையா? அதே மாதிரி திரட்டிபாலை பத்தியும் படிங்கோ எல்லாரும்..:)

தேவையான சாமான்கள் :

பால் - 2 லிட்டர் ( நன்னா திக்கா உள்ள பாலா இருந்தா நல்லது)
ஜீனி - 200- 400 கிராம் வரை(தேவையை பொருத்து உபயோகிக்கலாம், 200 கிராம் மினிமம் போட வேண்டும்)
ஏலக்காய் - பவுடர் செய்தது 2 தேக்கரண்டி (தேவைப்பட்டால் மட்டுமே)

செய்முறை :

பண்ணப்போகும் சாமான் எந்த விக்னமும் இல்லாமல் நல்ல படியாக வரவேண்டும்!னு தொப்பையப்பரை பிரார்தனை பண்ணின்டு காஸ் அடுப்பில் அடிப்பாகம் நன்னா காத்ரமா உள்ள சுத்தமான ஒரு வானலியை அடுப்பில் (சின்ன பர்னர்) வைக்கவும். பாலை அதில் சிந்தாமல் மெதுவாக விட்டுட்டு, 10 நிமிஷம் ஆனதுக்கு அப்பரம் மெதுவாக ஒரு கரண்டியால் கிளர ஆரம்பிக்கவும். நன்னா திரண்டு வந்ததுக்கு அப்பரம் ஜீனியை (தேவைப்பட்டால் கொஞ்சம் ஏலக்காய் பவுடரையும் சேர்த்துக் கொள்ளலாம்)அதில் போட்டு நன்னா கிளரிவிடவும். ஜீனி போட்டதுக்கு அப்பரம் ரொம்ப நேரம் அடுப்புல வச்சுண்டு இருக்காம அதை பக்குவமா (கைல எல்லாம் சுட்டுக்காம) கீழே இறக்கி வைத்து சூடு ஆறிய பிறகு உம்மாச்சி முன்னால் வச்சு ஒரு நமஸ்காரம் பண்ணிட்டு(பகவானே! இதை சாப்பட்ரவாளுக்கு ஒன்னும் ஆகாம நீதான் பாத்துக்கனும்). அப்பரம் குட்டி குட்டி கிண்ணத்துல போட்டு சாப்பிட கொடுக்கலாம்.

சில பேருக்கு இப்படி இருந்தா பிடிக்கும்



சில பேருக்கு இப்படித்தான் இருக்கனும்





கவனிக்க வேண்டிய விஷயங்கள்

1, திரட்டிப்பால் சர்வ ஜாக்கர்தையாக பண்ண வேண்டிய ஒரு ஸ்வீட் வகை, அதனால் வானலியில் பாலை வச்சுட்டு கடுகு வாங்க போனேன், பெருங்காயம் வாங்க போனேன்னு சில பேர் மாதிரி போனா அப்பரம் திரும்பி வரும் போது பாத்திரம் மட்டும்தான் இருக்கும்....:)
2, பால் நன்னா சூடானதுக்கு அப்பரம் கரண்டியை வச்சு ஒரு இயல்பான வேகத்தில் கிளர வேண்டும். சரியா சொல்லனும்னா இந்த பாட்ல வர சங்கராபரண ராகத்துக்கு தாளம் போடர மாதிரி அந்த வேகம் இருக்கனும். அதே சமயம் பால் நன்னா கெட்டியானதுக்கு அப்பரம் வேகத்தை குறைத்துக் கொள்ளலாம். ஆரம்ப நிலையில் கட்டி தட்டாமல் ஒழுங்கா கிளரவில்லை என்றால் அப்பரம் அந்த வஸ்துவை பால்கோவாவுக்கும் பதிலா 'கல்கோனா'னு தான் எல்லாரும் சொல்லுவா...:)
3, ---யர் மலர்- நு ஒரு பொம்னாட்டிகள் புஸ்தகம் உண்டு, அதுல எல்லா பக்கத்துலையும் சின்ன பெட்டிகளுக்குள் சேலம் ராதிகா, சங்கரன்கோவில் கோமதி போன்ற பெயர்களில் நிறையா பேர் யோசனைகளா அள்ளி விட்டு இருப்பாங்க, உதாரணத்துக்கு // நேத்திக்கு பர்த்துடே கேக் பண்ணும் போது செர்ரி பழம் இல்லைனு கடைசி நிமிஷத்துலதான் தெரிஞ்சது, அப்பரம் ஒரு குட்டி மொளகா வத்தலோட காம்பை எடுத்துட்டு அந்த மொளகா பழத்தையே கேக்குக்கு நடுவில் அலங்காரமா வச்சுட்டேண். அழகா இருக்கு!னு எல்லாரும் பாராட்டியதோடு அல்லாமல், அதையே என்னோட மாமியாருக்கும் கொடுத்ததால் அவங்களும் அடுத்த நாளே ஊருக்கு கிளம்பிவிட்டார்கள், நீங்களும் ட்ரை பண்ணி பாக்கலாமே??//னு அள்ளி விடுவார்கள். அதைமாதிரி யோஜனைகளை எல்லாம் இந்த திரட்டிப்பாலில் முயற்சி செய்து அதை பாழாக்க வேண்டாம். திரட்டிப்பாலுக்கு எந்த அலங்காரமும் வேண்டாம்.
4, மூடி இல்லாத குக்கர்தான் திரட்டிப்பால் செய்ய பெஸ்டு, இல்லைனா உங்க கல்யாணத்துக்கு அல்லது உங்க மாமியார் சீதனமா குடுத்த வெண்கல உருளி ஒசரத்துல பரண்ல இருந்தா அதை உங்க வீட்டு ரங்கமணியின் உதவியுடன் கீழே கொண்டு வரவும்.. குக்கர் பாத்திரத்திலும் சில பிரச்சனை உண்டு, உள்பக்கம் கருக்காத குக்கரா இருக்கனும், புளி, எலுமிச்சை தோடு போட்டு சாதம் வடிச்சு வண்டிமை கலர்ல உள்ள குக்கர் பாத்ரத்துல பண்ணினா அப்பரம் திரட்டிப்பால் யமஸ்வரூபத்தில் இருக்கும்.

திரட்டிப்பாலை பத்தி சொல்லிட்டு பெருமாளை பத்தி சொல்லலைனா அது 'தில்லானா' பாடாமல் முடிச்ச கச்சேரி மாதிரி ஆயிடும் . திரட்டிப்பால்னு சொன்னாலே எனக்கு எங்க ஊர் பெருமாள்தான் நினைவுக்கு வருவார். சித்ரா பெளர்ணமி தேர் திருவிழா கழிஞ்சு சுவாமி நேர தாமிரபரணிக்கு ஆராட்டுக்கு போய்விடுவார். இரவு எட்டு மணி அளவில் பூம்பல்லாக்கில் தாயார் சகிதமாக ஆடி வரும் அழகே அழகு! ஊருக்குள் வரும் ஸ்வாமிக்கு மாமிகள் எல்லாரும் நிவைத்யம் பண்ணர்துக்காக பழம், தாம்பூலத்தோட திரட்டிப்பாலும் பண்ணி கொண்டு வந்துருப்பா, சில மாமிகள் நிவைத்யம் ஆனதுக்கு அப்பரம் யாருக்கும் தரமாட்டா, சில மாமிகள்( நம்ப வல்லியம்மா/ கீதாம்மா மாதிரி) கண்ணா! ராஜப்பா! தக்குடு! இந்தா கோந்தை!னு என்னை தேடி வந்து தருவார்கள்.சில மாமிகள் அம்மா மாதிரி எனக்கு வாய்லயே நேரடியாக ஊட்டியெல்லாம் கூட விட்டுருக்கா, இது மாதிரி பல மாமிகள்/மாமிகளோட அழகான பொண்கள் கையால திரட்டிப்பாலை சாப்பிட்டுக் கொண்டு பெருமாளையும் சேவிச்சுண்டே ஜூனியர் பெருமாள் மாதிரி நானும் கல்லிடை நகர வீதிகளில் உலா வந்ததுதான் நினைவுக்கு வருகிறது.





பி.கு - திரட்டிப்பால் பண்ணிட்டு, ஓ! தக்குடு இல்லையே இதை டேஸ்ட் பண்ணர்துக்கு!!னு வருத்தப்பட வேண்டாம். நான் உங்காத்துக்கு வரும் போது எனக்கு பண்ணி தாங்கோ சரியா???...:)

88 comments:

எல் கே said...

me the first :)

எல் கே said...

//நன்னா திக்கா உள்ள பாலா இருந்தா நல்லது)//
எவ்ளோ திக்கா இருக்கனும் ??
//(பகவானே! இதை சாப்பட்ரவாளுக்கு ஒன்னும் ஆகாம நீதான் பாத்துக்கனும்).//
பண்ணி உனக்குதான தர போறேன் அப்புறம் எனக்கு என்ன கவலை

// திரட்டிப்பாலுக்கு எந்த அலங்காரமும் வேண்டாம்.//
திரட்டிபாளுக்கு மட்டும்தானா ?

ஆயில்யன் said...

திரட்டி பால் - அது வேறு பால்கோவா வேறு ஆச்சே பாஸ்! [குழப்பத்துடன்]

இல்ல என்னான்னு நினைச்சுக்கிட்டு நீங்க செஞ்சீங்க?

GEETHA ACHAL said...

எப்படி தக்குடி..நீங்கள் சொல்வது போல 5001 முறை படித்தாலும், உங்கள் குறீப்பு அருமை...சூப்ப்ர்ப் விளக்கம்...திரட்டி பாலுக்கு இவ்வளவு விளக்கம் அருமை...சூப்ப்பர்ப்...

மதுரையம்பதி said...

இதெல்லாம் கொஞ்சம் டூமச்சா தெரியல்ல? :)

Ananya Mahadevan said...

பாஸந்தியை திரட்டிப்பால்ன்னு புருடா விட்ட தக்குடுவை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த அழகுல கடுகு வாங்கப்போன அப்பாவிபொண்ணைப்பத்தி நக்கல் என்ன வேண்டிக்கிடக்கு?க்ர்ர்ர்ர்ர்.. கீத்தாமாமீ... ஹெல்....ப்!
அந்த கடுகு மேட்டரைத்தவிர ஜூப்பர் போஸ்டு

//இது மாதிரி பல மாமிகள்/மாமிகளோட அழகான பொண்கள் கையால திரட்டிப்பாலை சாப்பிட்டுக் கொண்டு பெருமாளையும் சேவிச்சுண்டே ஜூனியர் பெருமாள் மாதிரி நானும் கல்லிடை நகர வீதிகளில் உலா வந்ததுதான் நினைவுக்கு வருகிறது//
சந்தடி சாக்குல தன்னையே பெருமாள்ன்னு சொல்லிண்டாச்சு.. இனி உனக்கு அர்ச்சனை தான்!எஞ்சாய்...

Ananya Mahadevan said...

கடுகு மேட்டரை கண்டிக்க கடுகவே வந்து கீத்தா மாமி காக்க!

Kavinaya said...

தக்குடு, திரட்டுப் பால வேற, பால்கோவா வேற இல்லையோ? ஆயில்யன் போல எனக்கும் குழப்பம் :)

// நேத்திக்கு பர்த்துடே கேக் பண்ணும் போது செர்ரி பழம் இல்லைனு கடைசி நிமிஷத்துலதான் தெரிஞ்சது, அப்பரம் ஒரு குட்டி மொளகா வத்தலோட காம்பை எடுத்துட்டு அந்த மொளகா பழத்தையே கேக்குக்கு நடுவில் அலங்காரமா வச்சுட்டேண். அழகா இருக்கு!னு எல்லாரும் பாராட்டியதோடு அல்லாமல், அதையே என்னோட மாமியாருக்கும் கொடுத்ததால் அவங்களும் அடுத்த நாளே ஊருக்கு கிளம்பிவிட்டார்கள், நீங்களும் ட்ரை பண்ணி பாக்கலாமே??//

ஹாஹா. ஆப்பீச்ல பக்கத்தில் இருக்கவங்க திரும்பிப் பாக்கிற அளவு சிரிப்பு (ஆனா பக்கத்தில் இருக்கிறவங்கல்லாம் இன்னும் வரல ஹிஹி :)

பூப்பல்லக்கு கன ஜோர். ஜூப்பரா எழுதறீங்க.

அண்ணாமலையான் said...

பேச்சலருக்குமா?

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

Super receipe.. Sonna vidham innum super..

kalakkalaa irukku...unga eluththu nadai.. :D :D

best wishes..!

வல்லிசிம்ஹன் said...

ஓஹோ! இப்படித்தான் திரட்டிப் பால் பண்ணனுமா. அது ஏன் மஞ்சள் கலர்ல இருக்குப்பா:) பழுப்பான்னா இருக்கணும்!

ஆயில்யன் சொல்கிற மாதிரி ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா வேற இல்லையா.
சரி இப்போ கொஞ்ச நாட்கள் கழிச்சு ஊருக்கு வரும்போது திரட்டிப்பால் கண்டிப்பா செய்து தரேன். அண்ணாக்குக் கேசரி. தம்பிக்குப் பால்கோவாவா:0
)

அதென்னது கண்கள் இரண்டால் பாட்டுக்கு மட்டும் அவ்வளவு அத்தனை மகிமை!!
ஏனெனில் நானும் அதை ஆயிரம் தடைவையாவது கேட்டிருப்பேன்

Madhuram said...

என்ன ஸார் உங்க அனுபவத்துக்கு நீங்க அல்வா கின்றது எப்படி, குடுக்கிறது எப்படினு தானே எழுதணும்! இப்படி எல்லாம் எழுதினா நீங்க குழந்தை னு நம்பிடுவேனா?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஏன் இந்த கொலைவெறி? நாட்டாமை, கேக்க மாட்டீங்களா?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...
This comment has been removed by the author.
அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...
This comment has been removed by the author.
sriram said...

//அப்பாவி தங்கமணி said...
ஏன் இந்த கொலைவெறி? நாட்டாமை, கேக்க மாட்டீங்களா//

இதோ வந்துட்டேன்...

தக்குடு, ஏன் இந்த வேண்டாத வேலை???
திரட்டிப் பால், பால் கோவா, பாஸந்தி இந்த மூணுக்கும் வித்தியாசம் தெரியாத நீங்க ஏன் சமையல் குறிப்பு எல்லாம் எழுதறீங்க? இதுல நான் வேற உங்களுக்கு சமையலும் சங்கீதமும் நல்லாவே வருதுன்னு சொல்லித் தொலைச்சிட்டேன்.

ஒரு தத்துவம் - அதே மாவுல செஞ்சாலும் தோசை வேறு இட்லி வேறு.

சமையல் குறிப்பு எழுதியே ஆகணும்னா, வெந்நீர் வைப்பது எப்படி, தயிர் பண்ணுவது எப்படி , உருளை நறுக்குவது எப்படின்னு எழுதுங்க.

இதுக்கு மேல வேணும்னா அநன்யா கிட்டயோ இல்ல அப்பாவி தங்கமணிகிட்டயோ டியூஷன் எடுத்துக்கோங்க..
கேடி கிட்ட மட்டும் வேணாம், அவங்களுக்கு வெந்நீரே ஒழுங்கா வெக்கத் தெரியாது... ஹி ஹி

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

எல் கே said...

//கேடி கிட்ட மட்டும் வேணாம், அவங்களுக்கு வெந்நீரே ஒழுங்கா வெக்கத் தெரியாது... ஹி ஹி//

i like it
//Ananthi said...

Super receipe.. Sonna vidham innum super.. //
suttham

எல் கே said...

/உங்க அனுபவத்துக்கு நீங்க அல்வா கின்றது எப்படி, குடுக்கிறது எப்படினு தானே எழுதணும்! இப்படி எல்லாம் எழுதினா நீங்க குழந்தை னு நம்பிடுவேனா?//
repeatttttttttttt :):):):):):)

எல் கே said...

//அநன்யா கிட்டயோ இல்ல அப்பாவி தங்க//

ohh avanga nalla samaipangala

vgr said...

i don't think the item's name, recipe or the pictures have anything in common :)

But dude, hilarious to read!!!

sriram said...

//ohh avanga nalla samaipangala//

யாருக்குத் தெரியும்?? சும்மா கோத்து விடறதுதான்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Ananya Mahadevan said...

//உருளை நறுக்குவது எப்படின்னு// ஸ்ரீராமண்ணா இதெல்லாம் தக்குடுவுக்கு ரொம்ப ஹெவி சிலபஸ். வென்னீர், தயிர், ஊறுகாய் போடுறது(பாக்கெட்ல கிடைக்குமே அதை வாங்கி பாட்டில்ல போடுறது),நெய் (இதுவும் அதே டெக்னிக்-கடையில் வாங்கி டப்பாவில் போட்டு வைப்பது)இதோட தான் நிறுத்திக்கணும். உருளை எல்லாம் நறுக்க தெரியாது குழந்தைக்கு!

Ananya Mahadevan said...

//Ananthi said...

Super receipe.. Sonna vidham innum super.. //
suttham

எல்.கே.. முதல்வாட்டியா ஒரு உருப்படியான கமெண்டு போட்டு இருக்கே.. வாழ்த்துக்கள்.

Ananya Mahadevan said...

ஸ்ரீராமண்ணா..

//யாருக்குத் தெரியும்?? சும்மா கோத்து விடறதுதான்//


X-(((

Ananya Mahadevan said...

//i don't think the item's name, recipe or the pictures have anything in common//very well said VGR - ivar thaandaa manidhan! nenjuratthoda intha padhivai pathi comment panni irukkaar.. vaazhthukkal!

Chitra said...

இந்த ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா? இல்ல, உங்க இடுகை படிக்க நல்லா ஜாலியா இருக்கு - நம்பி செய்து பார்க்கலாம்னு .......

vgr said...
This comment has been removed by the author.
vgr said...

@ Ananya - Thanks!! Satyameva Jeyate!

Anonymous said...

நம்பி செய்யலாம். பால்கோவா செய்ய நல்ல அடி கனமான சட்டியும். பாலும், சீனியும் போரும். கொஞ்சம் ஏலக்காய் போட்டுன்டா இன்னும் நன்னா இருக்கும். மிளகாயை செரி ஆக பாவித்தது கிளாஸ்.

எல் கே said...

//எல்.கே.. முதல்வாட்டியா ஒரு உருப்படியான கமெண்டு போட்டு இருக்கே.. வாழ்த்துக்கள்.//
dankss
//இல்ல, உங்க இடுகை படிக்க நல்லா ஜாலியா இருக்கு - //
ithoda niruthikkanum. senju paarthu appuram thakkuduku autolam anupa koodathu

Geetha Sambasivam said...

//க்ர்ர்ர்ர்ர்.. கீத்தாமாமீ... ஹெல்....ப்!
அந்த கடுகு மேட்டரைத்தவிர ஜூப்பர் போஸ்டு

கடுகு மேட்டரை கண்டிக்க கடுகவே வந்து கீத்தா மாமி காக்க!//

வந்துட்டேனே, வெறும் அநன்யா, நேத்திக்கு நீங்க என்னைத் திரும்பிக்கூடப் பார்க்கலையாக்கும், அப்படியும் போனாப் போறதுனு வந்துட்டேனே!

//பிரார்தனை பண்ணின்டு
வானலியை
அப்பரம்
கிளர
ஆரிய

சாப்பட்ரவாளுக்கு ஒன்னும்
அப்பரம் //

ஒரே ஒரு சின்ன பாராவிலே இத்தனை தப்பு தக்குடு. முதல்லே லக்ஷம் முறை இம்பொசிஷன் எழுது. பாவம் அப்பாவி அநன்யாவை வம்புக்கு இழுத்திருக்கே, என்னையும் என்னமோ உனக்குத் திரட்டிப் பால் கொடுக்கிறதே ஜன்ம சாபல்யம்னு நினைச்சுண்டிருக்கே! க்ர்ர்ர்ர்ர் திரட்டிப் பால் உனக்கு யாரு கொடுக்கப் போறா? கனவெல்லாம் காணாதே

Geetha Sambasivam said...

verum Ananya, வீட்டு வேலையிலே உதவி செய்யற பொண்ணு வந்துட்டா, நான் போயிட்டு மிச்சத்தை அப்புறமா வந்து கவனிச்சுக்கறேன். நீங்க கவலையே படாதீங்கோ! கேட்டேளா???

Porkodi (பொற்கொடி) said...

//திரட்டிப்பால் பண்ணிட்டு, ஓ! தக்குடு இல்லையே இதை டேஸ்ட் பண்ணர்துக்கு!!னு வருத்தப்பட வேண்டாம். நான் உங்காத்துக்கு வரும் போது எனக்கு பண்ணி தாங்கோ சரியா???...:) //

ஸப்பா இப்பவே கண்ணக் கட்டுதே!

@மதுரம்: கைய குடுங்க, நீங்க நல்லா சமைக்க மட்டுமில்ல காலையும் வாரி விடுறீங்க, ஐ லைக் இட்! :)))

//
//கேடி கிட்ட மட்டும் வேணாம், அவங்களுக்கு வெந்நீரே ஒழுங்கா வெக்கத் தெரியாது... ஹி ஹி//

i like it//

@பா.ஸ்ரீ & எல்.கே, ‍ ரெண்டு பேரும் உங்களுக்கு பிடிச்சதெல்லாம் இன்னிக்கே சாப்பிட்டுருங்க, நாளைக்கு ஆட்டோ வந்ததும் கூச்சல் போட்டு ஊரை கூட்டாம‌ அதுல ஏறிடணும், சரியா?

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@LK

////Ananthi said...

Super receipe.. Sonna vidham innum super.. //
suttham

எல்.கே.. முதல்வாட்டியா ஒரு உருப்படியான கமெண்டு போட்டு இருக்கே.. வாழ்த்துக்கள்.//

ungalukku enna prachna.. ungala vida oruththar azhaga elutharanganna sonna porukkaliyoo?? :P :P

எல் கே said...

//ungalukku enna prachna.. ungala vida oruththar azhaga elutharanganna sonna porukkaliyoo?? :P :P/

ippa yara solrenga neenga?? ananyavathana??

தக்குடு said...

மக்களே! இங்க நான் சொல்லியிருப்பது சில அடிப்படை சமையல் விஷயம் தெரிந்தவர்களை மனதில் வச்சுண்டுதான், ஆனால் நிறைய பேருக்கு நான் எலுமிச்சை சாறு,புளி உருண்டை பத்தி எல்லாம் சொல்லவில்லை என்பதால் இது திரட்டிப்பால் இல்லையோ?னு சந்தேகமா இருக்கு, திருநெல்வேலி பக்கம் எல்லாம் அதிகாலையில் கறந்த பாலை வாங்கி காய்ச்சாமல் வைத்திருந்து நண்பகல் 11 மணி தருவாயில் திரட்டிப்பால் கிண்டத் தொடங்கினால் தானாகவே அது திரளத் தொடங்கும். இதன் அடிப்படையில் அடியேனுக்கு தெரிஞ்சதை எழுதினேன். இதை மனதில் வைத்துக் கொண்டு படிக்கவும்....:)

தக்குடு said...

@ LK - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

@ ஆயில்யன் - ஹாஹாஹா....:)

@ கீதா - என்ன இருந்தாலும் உங்க அளவுக்கு என்னால எழுதமுடியாது...:) முதல் வருகைக்கு நன்றி அம்மா!

@ ம'பதி அண்ணா - வருகைக்கு நன்றி!...:)

@ அனன்யா - வாங்க 'கடுகு' அனன்யா! நீங்க அப்பாவியா??? joke of this year....:)

@ கவினயா அக்கா - வீட்ல பண்ணினா திரட்டிப்பால் கடைல வாங்கினா பால்கோவா! இப்பொ புரிஞ்சுதா??...:) பூபல்லாக்கை நீங்க மட்டும்தான் அக்கா தரிசனம் பண்ணியிருக்கேள்! நன்றி!

மலை வாத்தியார் - இதனால் அனைவருக்கும் நம்ப வாத்தியார் சொல்ல விரும்புவது என்னன்னா, அவரு பாச்சிலர்தான் இன்னும் கல்யாணம் ஆகலை!...:)

@ ஆனந்தி அக்கா - ரொம்ப சந்தோஷம் அக்கா!

@ வல்லியம்மா - பாலோட தன்மையை பொறுத்து கொஞ்சம் கலர் மாறும் அம்மா! கண்கள் இரண்டால் பாட்டு உங்களுக்கும் பிடிக்குமா?? உங்கள் மனது& குரல் இன்னும் சின்னப் பெண்ணாகவே இருக்கு அம்மா!...:)

@ மதுரம் அம்மா - இந்த குட்டி குழந்தையை கலாய்க்கக் கூடாது ....;)

@ அடப்பாவி - எல்லாதுக்கும் நாட்டாமையை கூப்டா எப்பிடி??...:) வருகைக்கு நன்னி அக்கா!...:)

@ பாஸ்டன் நாட்டாமை - தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்னி! (பொதிகை டிவி எதிரொலி மாதிரி எங்களுக்கு கஷ்டமான கேள்வி எல்லாம் வந்தா அடுத்த கடிதம் படிக்க சொல்லிடுவோம்...:)) ஹம், அடுத்த கடிதம் யாரு எழுதி இருக்காங்க??...:)

தக்குடு said...

@ ஒப்பாரிப் புலவர் & 'கடுகு'அனன்யா - திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டுல ஒரு கோஷ்டி உண்டு, சாந்தி ஸ்வீட்ஸ் ஸ்டால் அப்படிங்கர பேர்லயே எல்லாரும் கடை வச்சுருப்பா! உண்மையான சாந்தி ஸ்வீட்ஸுக்கு போகும் வாடிக்கையாளர்களை எல்லாம் எப்படியாவது போகவிடாம பண்ணனும்னு துஷ்பிரசாரம் பண்ணுவா! அது மாதிரி நீங்க ரெண்டு பேரும் எவ்ளவோ போராடிதான் பாக்கரீங்க...;)

@ Vgr - thanks dude !

@ பாஸ்டன் நாட்டாமை - :::)))))

@ சித்ரா அக்கா - ஏன் இந்த சந்தேகம் உங்களுக்கு?? நீங்க எதை ஆக்கிப் போட்டாலும் மறு பேச்சு பேசாமல் சாப்பிடும் எங்க சாலமன் அண்ணா இருக்கும் போது உங்களுக்கு என்ன கவலை??

@ அனாமிகா அக்கா - நீங்களாவது நம்புரீங்களே ரொம்ப சந்தோஷம் அக்கா!

@ கீதா பாட்டி - நீங்க இப்படியே குத்தம் சொல்லிண்டு இருங்கோ! தங்களுடைய ஒளவையார் காலத்து தமிழ் நடைல நான் இங்க எழுதினா ஒருத்தரும் வர மாட்டா! ஸ்வாமியோட பூம்பல்லாக்கு நன்னா இருக்குனு 'ஆன்மீக பெட்டகம்' வாய்லேந்து வரும்னு நான் எதிர்பார்த்தேன், ஆனா கைலாய யாத்திரை போனபோதே காப்பி கிடைக்கலைனு குத்தம் சொன்னவா கண்ணுக்கு பல்லாக்கா தெரியப் போகுது??...:)

@ கேடி - //ஸப்பா இப்பவே கண்ணக் கட்டுதே!
// தண்ணியக் குடிங்கோ!...:)

ஆட்டோவோ சுமோவோ சீக்கரம் அனுப்பு என் பாசமலரே! அண்ணாவோட கடைல வியாபாரத்தை கெடுக்கரா இவா எல்லாரும்...:)

@ ஆனந்தி அக்கா - நல்லா சத்தமா கேளுங்கோ அக்கா! இரண்டு பேருக்கும் காதுல பொகையா வருது!...:)

@ LK - /ippa yara solrenga neenga?? ananyavathana??/ உம்மையும் சேர்த்துதான்யா!...:)

sury siva said...

பால்கோவா , பால் பாயசம் அப்படின்னு சொல்லி
தமிழ் நாட்டிலே ஆத்து பொம்மனாட்டிகள் எல்லாரையும்
கிண்டல் பண்றேளோ அப்படின்னு மனசுலே ஒரு சம்சயம்
வந்துடுத்து. பரவாயில்லை.
நகைச்சுவை அப்படின்னு நினச்சுண்டு ஒரு தரம்
மனசுக்குள்ளே சிரிச்சுட்டேன்.

அது சரி. தோஹா அப்படின்னு எழுதியிருக்கேளே !
தக்குடி பாண்டி யா ! அது என்ன பேரு !! தோஹாவிலே
என்ன உத்யோகம் !!

இப்பதான் நான் உங்க ஊருக்கும் வந்து இருக்கேன். உங்க பதிவுக்கும்
வந்து இருக்கேன். தோஹாவிலே ஒரு தமிழ் நாட்டுக்காரர்
வலையிலே இருக்கார். ரொம்ப சந்தோஷம்.

எங்கயாவது சந்திப்போம். ஆமாம். தமிழ் நாட்டுக்காரா நெறயா பேரு இந்தியன்
சூபர் மார்கெட்டிலே சுத்தி சுத்தி வரா. நீங்க தான் தக்குடி பாண்டின்னு எப்படி
கண்டு பிடிக்கறது !! தெரியல்லையே !!
கையிலே அந்த பாயசமா ! பால் கோவா வா!
அத எதுக்கும் வச்சுண்டு இருங்க.


சுப்பு தாத்தா.
தற்சமயம் தோஹா.

Geetha Sambasivam said...

நம்ம அம்மாஞ்சி அம்பி அங்கிளோட சொந்தத் தம்பி

Geetha Sambasivam said...
This comment has been removed by a blog administrator.
sury siva said...
This comment has been removed by a blog administrator.
Geetha Sambasivam said...

தக்குடு, கேட்டியா?? நீ நமஸ்தேஸ்து மஹா மாயே உச்சரிச்சுண்டு வரணுமாக்கும்! கேட்டையா???:P

சூரி சார், அதுக்கும் மேலே அவனுக்குத் தெரியுமாக்கும்!

(ச்சேசே, இந்த அநன்யாவோட மத்தியானம் சாட்டினது தப்பாப் போயிடுத்தாக்கும்! இந்த பாலக்காட்டுத் தமிழ் விடமாட்டேங்கறதாக்கும்!) :)))))))))

Vijay said...

இப்பிடி கேப் இல்லாம ஆளாளுக்கு வந்து வாட்டினா என்னத்துக்கு ஆகறது.த்க்குடு பாவம் இல்லியோ? ம்ம்ம்?.. என்னை மாதிரி லேட்டா வந்தாலும் லேட்ட்ஸ்டா வந்து, “தக்குடு, நீங்க சொன்ன மாதிரி திரட்டிப் பால் செய்து பார்த்தேன்.ஆகா..கா... அட..அட...அட்... தேவாம்ருதமா இருக்கே...எப்பிடி..தக்குடு? எப்பிடி....இது எல்லாம் தானா அப்பிடியே வரதுதான் இல்ல...ம்ம்”ன்னு ஒரு பாராட்டி பேச கூடாது....ம்ம்ம்..தக்குடு...சாரி...லேட் ஆய்ருச்சி...அது வந்து...ம்ம்...கமெண்ட் போட நீ குடுத்து காசில....கொஞ்சம் ......... போட்டு க்ண் அசந்துட்டேன்...இப்ப ஒகே தானே?

My days(Gops) said...

எல்லாம் சரி திரட்டி பாலுக்கு எங்க போறது?

Madhuram said...

என்னாது மதுரம் அம்மாவா? உங்கள சொல்லி தப்பில்ல. எல்லாம் எங்க பாட்டிய சொல்லணும். இப்படி ஒரு பழமான பேரு vachadhukku. என்னை கண்ணாம்பா ஸிஸ்டர் rangeukku ninaichuteenga pola? உங்க ப்ரொஃபைல் இருக்கிற வயசு 2010 க்கும் பொருந்தும் நா அதோட ஒரு 10 வயசு add பண்ணுங்க. அப்பறம் ஒரு 6 வயசு குறைங்க. இவ்வளவு கணக்கு வரும் இல்ல? இல்ல இதுக்கும் calculator வேணுமா?

எல் கே said...

//இவ்வளவு கணக்கு வரும் இல்ல? இல்ல இதுக்கும் calculator வேணுமா//

வராது வராது . பொட்டி வேணும்

தக்குடு said...

@ விஜய் அண்ணா - நமக்குள்ள பேசி தீர்த்துக்கலாம், பப்ளிக் வாட்சிங்க்...;)

@ கோப்ஸ் - போட்டோல இருக்கு இல்ல, அப்பரம் என்ன???...:)

@ மதுரம் அக்கா - அப்புடியா சங்கதி, உங்க வயசு 30நு நான் பப்ளிக்கா சொல்லமாட்டேன் மதுரம் அக்கா!!!...:)

பி,கு - அம்மா என்னும் வார்த்தையை நான் பொதுவா எப்போதுமே பயன்படுத்துவேன், நம்ப மேல பாசமா இருக்கும் எல்லாருமே எனக்கு அம்மா தான், 3 வயசு குட்டிகுழந்தையானாலும் சரி 65 வயசு பெண்மணியானாலும் சரி இயல்பாவே அம்மா!னு கூப்பிட்டுவிடுவேன்.

@ LK - யோவ் LK! உமக்கு வேர வேலையே கிடையாதா??...:)

Anonymous said...

யோ தாத்தா, உனக்கு (உங்களுக்கு) நான் அக்காவா? அந்த ஆட்டோவோ கொஞ்சம் எடுப்பா.

Porkodi (பொற்கொடி) said...

//என்னாது மதுரம் அம்மாவா? உங்கள சொல்லி தப்பில்ல. எல்லாம் எங்க பாட்டிய சொல்லணும். இப்படி ஒரு பழமான பேரு vachadhukku. என்னை கண்ணாம்பா ஸிஸ்டர் rangeukku ninaichuteenga pola? உங்க ப்ரொஃபைல் இருக்கிற வயசு 2010 க்கும் பொருந்தும் நா அதோட ஒரு 10 வயசு add பண்ணுங்க. அப்பறம் ஒரு 6 வயசு குறைங்க. இவ்வளவு கணக்கு வரும் இல்ல? இல்ல இதுக்கும் calculator வேணுமா?//

மதுரம்.. ஒரே சிரிப்பு தான்! நல்லா காமெடி வருதே உங்களுக்கு! :)))

Porkodi (பொற்கொடி) said...

//அம்மா என்னும் வார்த்தையை நான் பொதுவா எப்போதுமே பயன்படுத்துவேன், நம்ப மேல பாசமா இருக்கும் எல்லாருமே எனக்கு அம்மா தான், 3 வயசு குட்டிகுழந்தையானாலும் சரி 65 வயசு பெண்மணியானாலும் சரி இயல்பாவே அம்மா!னு கூப்பிட்டுவிடுவேன்.//

அது சரி வயசானாலே எல்லாரையும் அம்மா அப்பான்னு தாத்தாஸ் சொல்லி கேள்வி பட்டுருக்கேன்..

தக்குடு said...

@ கேடி - ஹலோ கேடி, என்ன சிரிப்பு உங்களுக்கு???...:)

@ அனாமிகா - என்னோட ப்ளாக்ல ஒரே அக்கா'ஸ் கூட்டமா இருக்கர்துனால அதே ப்ளோல(flow'la) உங்களையும் அக்கா!னு சொல்லிட்டேன். இன்று முதல் அன்பு அனாமிகா! என்று நீங்கள் அழைக்கப்படுவீர்கள்...:) யாருப்பா அங்க! அந்த ஆட்டோவை திருப்பி போக சொல்லுப்பா!!..:)

Madhuram said...

//@ மதுரம் அக்கா - அப்புடியா சங்கதி, உங்க வயசு 30நு நான் பப்ளிக்கா சொல்லமாட்டேன் மதுரம் அக்கா!!!...:)?//

தம்பி, இந்த அக்கா இதுக்கெல்லாம் கவலை படர ஆளு கிடையாது!

//மதுரம்.. ஒரே சிரிப்பு தான்! நல்லா காமெடி வருதே உங்களுக்கு! :)))//

பூவொடு சேர்ந்து நார் மணக்கும். அது மாதிரி நினைக்கிறேன்.

vetti said...

Itthanaikkum theratti paal panni saapidara maadhiri appadi enna nalla news? adhai patthi onnumey sollalai? Mangayar malar ellaam padippela? parava illaye....edhaavadhu recipe doubts irundha ungalukku mail anupparen :-)

Geetha Sambasivam said...

@வெட்டி, ரெசிபி சந்தேகமா?? தக்குடு சமைச்சே தருவான்! கவலையே வேண்டாம்!

பித்தனின் வாக்கு said...

தக்குடு நல்ல பதிவைக் காமெடியாய் போடலாம் என்றால் எல்லாரும் உன்னைக் காமெடி பண்ணி விட்டார்கள். மாடு கண்றுக்குட்டி போட்டவுடன் செய்தால் அது சீம்பால், அதே மாட்டின் பாலை மூன்று நாள் கழித்து கறந்து கெட்டியாக இருக்கும் போது காய்ச்சி அதில் கெட்டிப்பதத்துக்கு வரும் போது எலுமிச்சை அல்லது சிட்ட்ரிக் சோடா போட்டு கிளறி இறக்கினால் அது திரட்டிப் பால் (அய்யங்கார் ஆத்தில் மட்டும்), கொஞ்சம் மைதா மாவு தூவி கெட்டியாய் அல்வா போன்று இறக்கினால் அது பால்கோவா. அடிப்பிடிக்க வைத்து கறிஞ்சி போய் இறக்கினால் அது தீஞ்ச பால். இது போதுமா?

Anonymous said...

அது!!!! =))

வல்லிசிம்ஹன் said...

Perumaal poo pallaakku paarththutten thakkudu.

Sriraamanujar siththira sariththiram aRputham.

தக்குடு said...

@ மதுரம் அக்கா - உங்க ப்ளாக் எதோ கம்பெனியோட சைட் மாதிரி இருக்கு! பெரீய ஆளுதான் நீங்க...:) //பூவொடு சேர்ந்து நார் மணக்கும்// ஹலோ! அக்காதான் பூ நாந்தான் நார்...:)

@ வெட்டி - //theratti paal panni saapidara maadhiri appadi enna nalla news? // நீங்க புது போஸ்ட் போட்டுருக்கேளே?? அதான் விஷேஷம்...:) //Mangayar malar ellaam padippela? //சும்மா பொழுதுபோக்கா படிச்சது...:)

@ கீதா பாட்டி - உத்ரவாதத்துக்கு நன்னி!!,,,:)

@ பித்தன் அண்ணா - நீங்களே நியாயத்தை கேளுங்கோ அண்ணா! இனிமே பாராட்டு கமண்டுக்கு மட்டும் நான் பதில் சொல்லுவேன், சந்தேகம் எல்லாம் 'சிங்கையின் சிங்கம்' தீர்த்து வைப்பார்...:)

@ அனாமிகா - 'ரெட்' அஜீத் லெவெலுக்கு என்னை மிரட்ரீங்களே?? உங்க பதிவுகளிலும் கோவம் கொப்பளிக்குது, த்வாரகன் சார் நல்ல பொறுமையான மனுஷர்தான் போலருக்கு...:)

@ வல்லியம்மா - அப்பாடி, இப்பையாவது பார்த்தேளே! இனிமே முழுபோஸ்டும் படிக்காம அவசரமா கமண்டி இந்த குழந்தைட்ட சந்தேகம் எல்லாம் கேக்காதீங்கோ சரியா??//poo pallaakku paarththutten thakkudu// அந்த பல்லாக்கு போட்டோ போட்டதே உங்களுக்காகதான் தெரியமா??..:)
//Sriraamanujar siththira sariththiram aRputham.//ரொம்ப சந்தோஷம் அம்மா, நம்ப ராகவ் அனுப்பினார் எனக்கு.

Anonymous said...

ஆமா சார், துவாரகன் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பொறுமையான ஆளு. இல்லன்னா இந்த மாதிரி பெண்ணை சாமளிக்கிறாரே? க‌ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். துவாரகன் என்ட அப்பா. ஏனுங்க கல்யாணம் ஆனவங்க தான் புளொக் எழுதனுமா? அவ்வ்வ்வ்வ்வ்.. இருங்க, உங்கள கவனிச்சுக்கிறேன்.

எவ்ளோ யங் ஹீரோக்கள் வந்தாலும் அஜித் சார் தான் மிஸ்டர்.ஹன்ஸம்.அவருக்காகவே எந்த மொக்க படத்தை வேணும்னாலும் பார்க்கலாம்.)

தக்குடு said...

//ஏனுங்க கல்யாணம் ஆனவங்க தான் புளொக் எழுதனுமா?// அம்மாடி அனாமிகா, நான் அதை பத்தி ஒன்னுமே சொல்லலையே??...:) உங்க கூட மல்லுக்கட்ட நம்மால முடியாதுடா சாமி!...:) 'தல'யோட ரசிகையா நீங்க?? எனக்கும் தலயை புடிக்கும்.

Anonymous said...

//த்வாரகன் சார் நல்ல பொறுமையான மனுஷர்தான் போலருக்கு...:)//
இதுக்கு என்னங்க அர்த்தம். =)) அது தான் கேட்டேன்.

//உங்க பதிவுகளிலும் கோவம் கொப்பளிக்குது,//
கோவமா? நான் ஏதோ ஆதங்கத்தில் கொட்டி தீர்த்தது அதெல்லாம். என்ன கொடுமைங்க இது. உண்மையிலேயே கோவத்தில எழுதினா எப்டி எடுப்பேள்? எங்க வயசில இப்டி தான் சொல்லத் தெரியும். கொஞ்சம் வயசான சொல்ல முறையில ஒரு பக்குவம் வரும். சொல்ற விஷயத்தில் பிழைனு இல்லை; சொல்ற முறையில் மாறும்.

என்ன, அதுக்கு நீங்க இன்னும் 10 வருசம் வெயிட் பண்ண வேணும்

Porkodi (பொற்கொடி) said...

http://wikimaniac.blogspot.com/2010/04/thiratti-paal.html

:)))

Raga said...

cool post :) loved the way u described the "seimurai" unlike other blogs... adding some humor is very interesting :)

innum neraya ezhudhungo! naan already ungaloda fan :D

தக்குடு said...

@ அனாமிகா - ஹலோ அனாமிகா, நான் ஒன்னுமே சொல்லப்பா!...:) அப்போ இன்னும் 10 வருஷம் ஆகும் இல்லையா???....:)

@ கேடி - புல்லரிக்குது கேடி, நான் சொன்னதை பார்த்துட்டு நீங்களே இதை ட்ரை பண்ணினேள்னு நினைக்கும் போது பெருமையா இருக்கு...:)

@ ராகா - வாங்கோ ராகா, என்னோட செய்முறையை பாத்துட்டுதான் எல்லாரும் என்னை கலாய்ச்சுருக்கா! நீங்களுமா?? வாரம் ஒரு பதிவு உண்டு நம்ம கடைல, மறக்காம வந்து ஆதரவு தாங்கோ!...:)

Madhuram said...

Thanks for visiting my blog Thakkudu. Adutha recipe eppo? Indha kindradhu, kilaradhu ellam enakku porumai kidaiyadhu, vera edhavadhu en rangukku simplaa podunga.

Indha Indian sweets ellam salava kuzhandhainga madhiri, adha kanne maniye nu pakkathuleye ninnutu konjanum. Neenga vera naduvula kadugu, jeeragam vaanga ponga koodadhu, adhu pakkathileya irukkanumnu ezhudhareenga.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...
This comment has been removed by the author.
Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

Nalla saththamaa kaettaachu...

Andha kelvi kurippa LK-ku thaan..
anga thanae over puhaiyaa varuthu :P :P

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...
This comment has been removed by the author.
எல் கே said...

//Andha kelvi kurippa LK-ku thaan..
anga thanae over puhaiyaa varuthu //

sathhama sollungo enna sonnenga

தக்குடு said...

@ மதுரம் அக்கா - அய்யையோ அடுத்த ரெஸிப்பியா??? இந்த ரெஸிப்பிக்கே எல்லா பயலும் இந்த குழந்தையை தெளிய வச்சு, தெளிய வச்சு கலாய்ச்சுண்டு இருக்கா, மறுபடியுமா?? கிச்சன் கிச்சாவுக்கு கொஞ்ச நாள் ரெஸ்ட்....:)

@ ஆனந்தி அக்கா - அக்கா, காது செவிடா போனவங்க கூட எல்லாம் நமக்கு என்ன பேச்சு?? கண்டுக்காதீங்கோ....:)

@ LK - நல்ல மெசின் வாங்கி காதில் பொருத்திக் கொள்ளவும்...:)

ஷைலஜா said...

என்ன இருந்தாலும் மைபாக்கு உண்டோ மற்ற ஏதும் ஈடு?:)

soma said...

eku nee seithathu milk kova va? illa thirattipala nu oru confusion aeitudhu thirati ballukku coconut venumey? nee add pannalayey? ok thakkudupandi nalla thirattibal avar style la solli irukirer good nalla villakkam samayal kuripula ok ok keep it up

mightymaverick said...

அண்ணனும் தம்பியும், அல்வா கொடுப்பது எப்படி என்று இன்னி வரையில் ஒரு பதிவு கூட போடலியே... ஒருத்தன் கேசரி கிண்டுறான்... ஒருத்தன் பால்கோவா கிண்டுறான்... கலி காலம்டா சாமி...

திவாண்ணா said...

வல்லி அக்கா அங்கே வரும்போது திரட்டுப்பால் ப்ராப்திரஸ்து! பின்னே காக்கா பிடிச்சதுக்கு ஏதாவது வேணாமா? கீ அக்காதான் கண்டிச்சுட்டு ஒண்ணும் கிடையாதுண்டாங்க!
அப்புறம் பேர் என்னவா இருந்தா என்ன? அது சாப்ட நல்லா இருக்கும்.
சுகர் இருக்கேன்னு இவ்வளோ நாள் இங்க வரலை! ஹிஹிஹி!

தக்குடு said...

@ soma madam - hello, you are talking about thengai therattipal, i am talking about paaltherattipal...;) thks for your comment.

@ vidyasamana kadavul - hahahaha...:)

@ Tiva anna - //அப்புறம் பேர் என்னவா இருந்தா என்ன? அது சாப்ட நல்லா இருக்கும்.
// apdi sollungo anna, thanks for your comment...;)

Sowmya said...

Innoru kallidai kurichi kararaa..Besh

Thamirabarani thannila etho irukku !!

Enjoyed ur post !!

தக்குடு said...

@ sowmya madam - :))) do you knw abt kallidaikuruchi alrdy??..:P

Sowmya said...

kallidaikurichi enge nu amba samutharathu kitta ketkalam, kallidai kittaye ketta eppdi :D

தக்குடு said...

//kallidai kittaye ketta eppdi :D // ahaaaa!! sowmya akka nama offlinela pesikkalam. public watching! public watching! yennoda commentsai poluthu pookaama vambukku aala parakkaravaa neraiyaa peeru follow pannindu irukka!...:))) so offline sariyaa??..:)

எல் கே said...

இதோ வந்தாச்சு . எங்க அப்பாவி , பொற்ஸ் கீதா மாமி அண்ட் அனன்யா>>

Sowmya said...

haha thakkudu, really laughing a lot by reading your way of writing ..

You have a bright future too..

Atten : Anandha vikadan

தக்குடு said...

@ sowmya - roomba santhosham sowmya akka, thks for your wishes also....:)

RAJARISHI said...

நான் கூட ஒரு தடவை கோயம்புத்தூர்லே இருக்கும் போது பண்ணினேன்..அஞ்சாறு லிட்டர் இருக்கும்..ஞாபகம் இல்லே..ரொம்ப நேரம் ஆச்சு..அதை எடுத்துண்டு பங்களூர்லே இருக்கற - இபவும்- போனேன்..நான் சர்க்கரைக்கு பதிலா வெல்லம் போட்டேன்.. அம்மா சொல்படி..நிறையா கிடைச்சுது.. சாப்டவே முடியலே..அவ்ளோ திரட்டுப்பால் மறுபடியும் சாபடவே இல்லே....வெங்கட்..

தக்குடு said...

@ Rajarishi - thanks for your first visit and comment...:)

Tumas Tongue Treats said...

Pramaadham Thakkudu. Innum ezhuthungo. Padikka kaathundrukkom

Unknown said...

சாதாரண பாலில் கடைகளில் பாலாடைக்கட்டி செய்து விற்கிறார்கள். அதன் செய்முறை தெரிந்தால் யாராவது சொல்லுங்களேன். PLEASE.

Unknown said...

சாதாரண பாலில் கடைகளில் பாலாடைக்கட்டி செய்து விற்கிறார்கள். அதன் செய்முறை தெரிந்தால் யாராவது சொல்லுங்களேன். PLEASE.

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)