Thursday, April 7, 2011

பதிவுலகில் தக்குடு

ரொம்ம்ம்ம்ம்ம்ப நாளைக்கு முன்னாடி நம்ப வல்லி அம்மா 'ஒரு தொடர்பதிவு எழுதுடா கோந்தை!'னு பாசத்தோட அழைச்சுருந்தாங்க, வழக்கம் போல தக்குடுவோட உலகமஹா சோம்பேரித்தனத்தால எழுதவே முடியலை. அதனால அதை இப்ப எழுதலாம்னு இருக்கேன்.என் மனசோட ரூபம்....:)

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
தக்குடு

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

ஆரம்பத்துல இது என்னோட பெயரா இல்லாம இருந்தது, இப்போ இதுவே என்னோட பேர் ஆயிடுத்து, இந்த பேரை வைக்கர்த்துக்கு ப்ரத்யேகமான காரணம் எல்லாம் ஒன்னும் கிடையாது, எங்க அண்ணாவோட புள்ளையாண்டானை நான் அப்பிடிதான் கூப்பிடுவேன். அவனும் 3 மாச குழந்தையா இருக்கும் போதே தக்குடு!னு கூப்டாச்சுன்னா 'யே!'னு ஒரு சத்தம் குடுத்துட்டு அழகா சிரிப்பான். "எண்ணச்சிதறல்! படிக்கறவாளோட கதறல்!"னு எல்லாம் பேர் வைச்சுண்டு அடுத்தவா ப்ராணனை வாங்க வேண்டாம்னு தான் இந்த பேர். இந்த பேரை முடிவு பண்ணர்த்துக்குள்ள நான் பட்டபாடு நாய் கூட படாது. புலிகுட்டி பாண்டியன்,எலிகுஞ்சு டாக்டர் & சிலபல பேர் எல்லாம் லிஸ்ட்ல வெச்சுருந்தேன், நம்ப மனுஷா முழூபேரை சொல்லி கூப்பிடவே மாட்டா, புலிகுட்டி பேரை எப்பிடி பிரிச்சாலும் பிரச்சனை எதுவும் வராது ஆனா இரண்டாவது பேரை பிரிக்க ஆரம்பிச்சா நிலைமை கவலைக்கிடமாயிடும். அதனால தக்குடுபாண்டினு பேர் வெச்சு இப்போ அது தக்குடு ஆயிடுத்து.

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி?

என்னவோ அபூர்வராகங்கள் படத்துல காலடி எடுத்து வச்ச ரஜினி கிட்ட கேக்கர மாதிரி கேக்கரேளே? நிச்சயமா நான் எழுதர்து எல்லாம் எந்த பத்திரிக்கைலையும் போடமாட்டானு நன்னா தெரியும் (ஆனந்த விகடன்ல வரும் அளவுக்கு நாம என்ன இட்லி மாமி மாதிரி பெரிய எழுத்தாளரா), அந்த சமயத்துல தான் கூகிளாண்டவர் ஓசில தரார்னு கேள்விப் பட்டு எழுத ஆரம்பிச்சேன். நாமதான் ஓசில ஓசி குடுக்கர்தா சொன்னா ஓட்டையே போட்டுருவோமே இல்லையா! பெரிய்ய்ய்ய்ய இலக்கியத்தரம் எல்லாம் இதுல இருக்காது, ஆனா பக்கத்தாத்து திண்ணைல உக்காச்சுண்டு வம்பளந்த ஒரு அல்ப சந்தோஷமாவது படிக்கரவாளுக்கு கிடைக்காதா?னு ஒரு நம்பிக்கைல ஓடிண்டு இருக்கு.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

ஒன்னுமே பண்ணலை!னு தான் சொல்லனும். எவ்வளவோ பண்ணி இருக்கலாம். க்ஷண பொழுதுல குழாயடி சண்டை போடும் எதாவது ஒரு குழுமத்துல சேர்ந்து இருக்கலாம்,தெரிஞ்சவா தெரியாதவானு இல்லாம சகட்டு மேனிக்கு எல்லா ப்ளாக்குக்கும் போய் "அருமையாக சொன்னீர்கள்! எருமையாக நின்றீர்கள்!"னு ஒரு பிட்டை போட்டு இருக்கலாம், எல்லா ப்ளாக்கையும் பாலோ பண்ணி அவாளையும் வலுக்கட்டாயமா என்னோட ப்ளாக்கை பாலோ பண்ண வச்சு இருக்கலாம், ஆனா இது எதுவுமே தெரியாத அசடா போயிட்டேன். தெரிஞ்சவாளுக்கு மட்டும் மெயில் அனுப்பி வெச்சுண்டு இருக்கேன். அவ்ளோதான் நம்ப பிரயத்தனம்...:) பரஸ்பர முதுகு சொரிதல் & பதில் மரியாதை முயற்சிகளில் நமக்கு இஷ்டம் இல்லை.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

கேள்வியே தப்பு, சொந்த விஷயங்கள் தான் முழுமூச்சா ஓடிண்டு இருக்கு. கதை எல்லாம் எழுத மேல்மாடில நெறைய சரக்கு இருக்கனும் . நடுல நடுல மானே! தேனே! போட்டு கவிதை எழுதர்த்துக்கு என்ன தக்குடு?னு தானே கேக்கரேள்? மானே தேனேக்கு நடுல போடர்த்துக்கு எதாவது வேணுமே அதுக்கு எங்க போகர்து??( நாம என்ன சிவகுமரனா கவிதை எல்லாம் பொலந்துகட்டர்துக்கு)..:)

விஷேஷமான காரணம் எல்லம் கிடையாது, பின்னாடி வரப் போற எதிர்கால சந்ததிகளுக்கு திரட்டிபாலும்,குண்டலமும் போய்சேரனுமோ இல்லையோ! அதுக்குதான் எழுதர்து.

நிறைய பேருக்கு திரட்டிபால்,குண்டலம்,சிலுக்கு பத்தி கேட்கும்/பார்க்கும் போது தக்குடு ஞாபகம் வந்து ஒரு குட்டி சிரிப்பு அவா முகத்துல வருது இல்லையா! அதுதான் விளைவு...:)

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பொழுதுபோக்கா எழுத ஆரம்பிச்சு இப்போ நிறைய சம்பாத்யமும் பண்ணியாச்சு. எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாத தங்கமான மனுஷாளோட இதயங்கள்ல தக்குடுவுக்கு கிடைச்ச குட்டியூண்டு இடம் தான் நான் சொன்ன சம்பாத்யம். ஒரு விஷயம் தெரியுமோ உங்களுக்கு? இந்த ஓசிபேப்பர் படிக்கரவாள்ல நிறையா பேர் இந்தியாவுக்கு தக்குடு வரும் போது ஆசையா அவாத்துக்கு கூப்பிட்டு வயிறு நிறையா சாப்பாடு போடறா! சென்னை கலாக்ஷேத்ரா பக்கத்துல இருக்கும் ஒரு ஆத்துல சாப்பிட்டு முடிச்சுட்டு என்னால நடக்கவே முடியலைனா பாத்துக்கோங்கோ!அமெரிக்கா,சிங்கப்பூர்,லண்டன்,கனடா எங்க போனாலும் சொந்தக்காரா ஆத்துக்கு போகாமையே 4 நாள் சாப்பாடு போட்டு ஆதரிக்கர்த்துக்கு ஆசையோட காத்துண்டு இருக்கும் அண்ணாமார்கள்,அக்காமார்கள்களோட அன்பான இதயங்கள் தான் தக்குடு பண்ணின சம்பாத்யம்...:)

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

நமக்கு 2 வலைபதிவு இருக்கு மாசத்துல 3 வெள்ளிக்கிழமை தக்குடு ப்ளாக்லையும் ஒரு பதிவு உம்மாச்சி காப்பாத்து ப்ளாக்லையும் எழுதிண்டு இருக்கேன்.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

ஏன் இல்லாம நிறையா உண்டு, சிலபேரோட எழுத்தை எல்லாம் படிக்கும் போது "இவாளால மட்டும் எப்பிடி இவ்ளோ அழகா எழுத முடியர்து?"னு பொறாமை பட்ட சமயங்கள் நிறையா உண்டு. ஒருத்தரை சொல்லி ஒருத்தரை சொல்லாம விட்டாக்க அது கஷ்டமா போகும். இங்க வந்துட்டு யாரும் வருத்தத்தோட போககூடாது, வேணும்னா என்னோட கமண்ட் செக்ஷனை கூர்ந்து கவனிச்சு போய் அவாளை படிச்சு பாருங்கோ தெரியும்!..:)(ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா! ஒரு வழியா சமாளிச்சாச்சு)

யார் மேலையும் கோவம் எல்லாம் எனக்கு கிடையாது. நமக்கு தோதா உள்ளவா கூட சேர்ந்துக்க வேண்டியதுதான், சம்பந்தாசம்பந்தம் இல்லாத பதிவை எல்லாம் படிச்சுட்டு கோவப்படர்துல பிரயோஜனம் இல்லை.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி!

முதல் பதிவுக்கே 26 கமண்ட் போட்டு திக்குமுக்காட பண்ணின அன்பான மக்கள் இருக்கர்துனால தனிப்பட்ட முறைல யாரையும் சொல்லமுடியாது. திவா அண்ணா முதல் கமண்ட் போட்டார்னு வேணும்னா சொல்லலாம்...;)

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்!

ஹலோ சொல்லவேண்டியதை எல்லாத்தையும் இங்க சொல்லிட்டா அப்புறம் போஸ்ட் எப்பிடி போடர்து...:)(இனிமே சொல்லர்த்துக்கு என்ன பாக்கி இருக்கு?னு எல்லாரும் சொல்லுவேள்னு தக்குடு அறிவான்)

2010லையே இந்த தொடர் பதிவை எல்லாரும் எழுதியாச்சு, அதனால யாரை அடுத்து எழுத அழைக்கர்துன்னே தெரியலை. எழுதாதவா யாராவது இருந்தேள்னா தக்குடு எழுத சொன்னான்!னு போட்டு(மறக்காம நம்ப கடைக்கு ஒரு லிங்க்கையும் குடுங்கடே!) எழுதிடுங்கோ!

குறிப்பு - 50 ரன் அடிச்சதுக்கு அப்புறம் பேட்டை தூக்க மறந்து போனவா 54 போஸ்ட் வந்ததுக்கு அப்புறம் காமிக்க எதாவது ரூல் இருக்கா? மன்னார்குடியின் மஹேந்தர்சிங் தோனி!! கொஞ்சம் ஜாரிச்சு சொல்லுங்கோளேன்...:)

40 comments:

திவா said...

:-))

அப்பாவி தங்கமணி said...

//என் மனசோட ரூபம்....//
தக்குடுவாள்(ல்) சூப்பர்...:)))

//ஆனந்த விகடன்ல வரும் அளவுக்கு நாம என்ன இட்லி மாமி மாதிரி பெரிய எழுத்தாளரா//
ஏதோ தப்பி தவறி ஒரு ரெண்டு வாட்டி விகடன்ல மறதியா போட்டுட்டாங்கன்னு உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும்...:)))
(BTW தேங்க்ஸ் பார் தி விளம்பரம்...:)))

//அருமையாக சொன்னீர்கள்! எருமையாக நின்றீர்கள்//
ஹா ஹா ஹா...க்ளாஸ்..:))

//எல்லா ப்ளாக்கையும் பாலோ பண்ணி அவாளையும் வலுக்கட்டாயமா என்னோட ப்ளாக்கை பாலோ பண்ண வச்சு இருக்கலாம்//
என்னை திட்டற மாதிரி இருக்கே... பிரமையோ...:))

//ஆனா இது எதுவுமே தெரியாத அசடா போயிட்டேன்//
அட அட அட...என்னா ஒரு பால் வடியும் முகம்னு ஊருக்கே தெரியுமே...:)

//இந்த ஓசிபேப்பர் படிக்கரவாள்ல நிறையா பேர் இந்தியாவுக்கு தக்குடு வரும் போது ஆசையா அவாத்துக்கு கூப்பிட்டு வயிறு நிறையா சாப்பாடு போடறா//
ஹும்...எனக்கு சிங்கள் டீ கூட கிடைக்கல... எங்க இவள கூப்பிட்டா அங்கயும் வந்து "ஜில்லுனு ஒரு டீ"னு எதுனா ஆரம்பிச்சுடுவாளோனு எல்லாரும் எஸ்கேப் ஆய்ட்டாங்க போல இருக்கு...ஹ்ம்ம்...:)))

//சம்பந்தாசம்பந்தம் இல்லாத பதிவை எல்லாம் படிச்சுட்டு கோவப்படர்துல பிரயோஜனம் இல்லை//
சேம் ப்ளட்...:))

vgr said...

hehe...

-vgr

Matangi Mawley said...

boss,

oru oorla- oru paiyan irunthaanaam. avan school-la poi paadamellaam padichchaanaam. aanaa exam-ku avan "thennamaraththai patri katturai 300 vaarthaikalil ezhuthavum" ngara question onnu thaan padichchuttu ponaanaam. aanaa ques. paper paaththa avanukku orey shock-aam! "pasu maattai patri katturai 300 vaarthaikalil ezhuthavum" nu kettuttaalaam! paiyanukku seththa neram enna pannarathunne theriyalayaam! odane kanna moodindu oru nimisham avanoda class teacher -a vendindaanaam. apram avan ezhuthinaanaam. "pasu maadu thenna maraththula katti irunthathu-nnu"...

namma country PM, Manmohan Singh kooda unga kitta tution padikkanum polarukke, question ku answer eppudi pannanum-nu!! :P

RVS said...

மாதங்கியோட கமென்ட் சூப்பர் அப்படின்னு என்னோட கமெண்ட்டை ஆரம்பிக்கக் கூடாதுன்னு ரூல்ஸ் எதுவும் இல்லையே!
நூறு நூறா அடிக்க போறவாளுக்கு அம்பத்தி நாளுக்கு பேட்டை தூக்கி காமிக்கணுமா என்ன? தேவையே இல்லை.
கேள்விக்கு பதில் எப்படி சொல்லனும்ன்னு இந்த உலகமே உங்ககிட்ட தான் கத்துக்கணும் ராசா..
இந்த அகாலத்துல இதுக்கு மேல சொல்றதுக்கு எதுவும் இல்லை. ;-))

ஆயில்யன் said...

//எங்க போனாலும் சொந்தக்காரா ஆத்துக்கு போகாமையே 4 நாள் சாப்பாடு போட்டு ஆதரிக்கர்த்துக்கு ஆசையோட காத்துண்டு இருக்கும் அண்ணாமார்கள்,அக்காமார்கள்களோட அன்பான இதயங்கள் தான் /

ஸேம் ப்ளட்டு! :)

கவிநயா said...

தக்குடு பேரும் மனசோட ரூபமும் வெகு பொருத்தம் :)

4- வது கேள்விக்கான பதிலை ரொம்ப ரசிச்சேன் :)

lata raja said...

Aamaam niraiya sambaadhichchaachchu...padikkaravaaloda idhayaththula thuliyoondu idam...sathyamaana vaarthai....Adhukkaagavae padhivu ezhudha mudiyum...Super post:)

Chitra said...

தக்குடு, இவ்வளவு சீக்கிரமாக தொடர் பதிவு எழுதிட்டேளே ...இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து எழுதி இருந்தால், புச்சு புச்சா தொடர்பதிவு எழுதுறாளேனு எல்லோரும் நினைக்க ஆரம்பிச்சிருப்பா...

SRINIVAS GOPALAN said...

சித்ரா பௌர்ணமி சமயத்துல திரட்டிப்பால் சொல்லி ஊரை ஞாபகப் படுத்திட்டியே.
உன் ப்ளாக் படிச்சா கல்லிடைகுறிச்சி குசும்பு குறைவில்லாம கிடைக்கறது. வாழ்க வளமுடன்.

SRINIVAS GOPALAN said...

கர வருஷப் பிறப்பிற்கு புத்தாண்டு வாழ்த்துக்கள். அடுத்த வருஷம் நீ 1+1 ஆகணும்.

GEETHA ACHAL said...

தக்குடு...சித்ரா அக்கா சொன்ன மாதிரி அப்பறம் எழுதி இருந்தால்...எதோ புதிய தொடர் பதிவு என்று எல்லோரும் நினைத்து...திரும்பவும் எழுதி இருப்பாங்க....

//கேள்வியே தப்பு, சொந்த விஷயங்கள் தான் முழுமூச்சா ஓடிண்டு இருக்கு.
//எப்படி தக்குடு...


//நிறைய பேருக்கு திரட்டிபால்,குண்டலம்,சிலுக்கு பத்தி கேட்கும்/பார்க்கும் போது தக்குடு ஞாபகம் வந்து ஒரு குட்டி சிரிப்பு அவா முகத்துல வருது இல்லையா!
//ஆமாம்....ஆமாம்...


//சம்பந்தாசம்பந்தம் இல்லாத பதிவை எல்லாம் படிச்சுட்டு கோவப்படர்துல பிரயோஜனம் இல்லை.

//கரக்டாக சொன்னீங்க...

Anonymous said...

//என்னை திட்டற மாதிரி இருக்கே... பிரமையோ...:))//

No no. No பிரமை. he he

Anonymous said...

/பாத்துக்கோங்கோ!அமெரிக்கா,சிங்கப்பூர்,லண்டன்,கனடா எங்க போனாலும் சொந்தக்காரா ஆத்துக்கு போகாமையே 4 நாள் சாப்பாடு போட்டு ஆதரிக்கர்த்துக்கு ஆசையோட காத்துண்டு இருக்கும்//

Canada? ஏம்ப்பா. கனடாவுக்கு இன்னொரு பேர், இட்லி லான்ட் என்பது தெரியுமா? இட்லிமாமி அங்கே இருக்கான்னு தெரிஞ்சுமா, அங்க போற ஆசை. நீங்க ரொம்ப அப்பாவியோ. ஹா ஹா ஹா.

Sriram Doha said...

//Point.6//மனச தொட்டுடீங்களே தக்குடு.

Sh... said...

Thakkudu, thanks for Krishna's bday wishes. avanukku vivaram puriyarappo, unga message-a avanukku kamikkaren.

வெங்கட் நாகராஜ் said...

:)

தி. ரா. ச.(T.R.C.) said...

கணேசனுக்கு பெயரும் புகழும் வந்தா அது எனக்கு வந்தா மாதிரி உமா மாமி சொல்லச் சொன்னா

Madhuram said...

அமெரிக்கா,சிங்கப்பூர்,லண்டன்,கனடா எங்க போனாலும் சொந்தக்காரா ஆத்துக்கு போகாமையே 4 நாள் சாப்பாடு போட்டு ஆதரிக்கர்த்துக்கு ஆசையோட காத்துண்டு இருக்கும்//

Gopal palpodikku aduthadhu unakku dhaan ella idathuleyum varaverpu thakkudu!

Anonymous said...

Thakkudu!....kelvi yellam yar ketaa?? neeya ketundu yeluthinaya???

'Techops' mami

வல்லிசிம்ஹன் said...

தக்குடு,எப்ப நான் உங்கள் அழைச்சன்னு கூட மறந்து போச்சு:)
இந்த கமெண்ட்த் வரதா அப்படீன்னு பார்த்துட்டே கமெண்ட முடியும்.
சின்னப்பாதாஸ் தாஸ் நீ இப்ப பாஸ் பாஸ்னு பாடலாமா:)

வல்லிசிம்ஹன் said...

ஹைய்யா. காக்கா இந்தக் கமெண்டைத் துக்கிண்டு போகலியே!!! உள்ளத்தில் நல்ல
உள்ளம் எங்க தக்குடு உள்ளம்னு உங்க பதிவு சொல்கிறது. சூப்பர் போஸ்ட்!

Lakshmi said...

நல்லா இருக்கு.

சிவகுமாரன் said...

நன்றி தக்குடு பெரியவாள்ளாம் வந்து போற இடத்துல என்ன அறிமுகப் படுத்தனதுக்கு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களின் இந்த பெயர்க்காரண அறிமுகம் மட்டும் படித்துள்ளேன். நல்ல நகைச்சுவையாக எழுதுவீர்கள் என்று தெரிகிறது. நேரம் கிடைத்தால் மீண்டும் வருவேன். இன்று என் வலைப்பூவுக்கு வந்து பின்னூட்டம் கொடுத்துள்ளதற்கு என் நன்றிகள்.

தொடர்ந்து எழுதித்தள்ளுங்கள். வாழ்த்துக்கள்.

என்னுடைய பெயர் காரணம் படிக்க விரும்பினால் படிக்கலாம். அதிலும் சற்று நகைச்சுவை கலந்திருக்கும்.

http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_09.html

அன்புடன் vgk

இராஜராஜேஸ்வரி said...

பெயர்க்காரணத்திலும் நகைச்சுவைத் திரட்டு.பாராட்டுக்கள்.

Vasagan said...

\அமெரிக்கா,சிங்கப்பூர்,லண்டன்,கனடா எங்க போனாலும் சொந்தக்காரா ஆத்துக்கு போகாமையே 4 நாள் சாப்பாடு போட்டு ஆதரிக்கர்த்துக்கு ஆசையோட காத்துண்டு இருக்கும் அண்ணாமார்கள்,அக்காமார்கள்களோட அன்பான இதயங்கள் தான் தக்குடு பண்ணின சம்பாத்யம்...\

எப்போ கனடா வருகிறாய்.

\சம்பந்தாசம்பந்தம் இல்லாத பதிவை எல்லாம் படிச்சுட்டு கோவப்படர்துல பிரயோஜனம் இல்லை.\

தக்குடு
அருமையாக சொன்னீர்கள்!

எருமையாக நின்றீர்கள்!

Gita Jaishankar said...

Hi thambi, How are you? Thank you very much for the warm wishes. Take care :)

RAKS KITCHEN said...

New template looks fresh thakkudu, HTML padikriyo,keezh postla yedho ooda vitrukiye... :)

Gopikaa Ramanan said...

//தெரிஞ்சவா தெரியாதவானு இல்லாம சகட்டு மேனிக்கு எல்லா ப்ளாக்குக்கும் போய் "அருமையாக சொன்னீர்கள்! எருமையாக நின்றீர்கள்!"னு ஒரு பிட்டை போட்டு இருக்கலாம், //
நான் ரொம்ப நொந்துட்டேன் தக்குடு! :(

Gopikaa Ramanan said...

By the way...was one among the hilarious and super comedy posts i had come across... Keep it up thakkudu :)

சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் said...

நம்ம சைடும் வந்து படிச்சுட்டு ஒரு பின்னூட்டம் போடுங்க>>> அன்புடன் காத்திருக்கிறோம்!!

http://sagamanithan.blogspot.com/

தக்குடு said...

@ திவாண்ணா - :)

@ அப்பாவியோட தங்கமணி - ஓசி சாப்பாடுக்கு எல்லாம் ஒரு முகராசி வேணும் அக்கா!..:)

@ vgr - கி கி

@ மாதங்கி - :PP

@ மைனர்வாள் - உங்களோட ஆசிர்வாதத்துக்கு நன்னி..:)

@ ஆயிலு - தங்கச்சிக்கு உங்க ப்ளாக் பத்தி தெரியுமா??..:P

@ கவினயா அக்கா - நீங்களும் தக்குடு மாதியே சூதுவாது தெரியாதவா அக்கா!..:)

@ லதா மாமி - லிஸ்ட்ல நைஜீரியா விட்டு போயிடுத்து..:)

@ சித்ரா அக்கா - :))

@ கோபாலன் அண்ணா - உங்க ஆசிர்வாதம் போல!..:)

@ கீதா அக்கா - உங்களுக்கும் நினைவு வருதா? சூப்பர்...:)

@ மின்னல் - கரெக்டுதான் கனடா பக்கம் மட்டும் போககூடாது..:)

@ சீராம் அண்ணா - :)

@ ஷ்ஷ் அக்கா - :))

தக்குடு said...

@ வெங்கட் சார் - :))

@ TRC மாமா - உமா மாமி சொன்னா அது எப்போதுமே ரைட்டுதான்...:)

@ மதுரம் அக்கா - இதுக்கு எல்லாம் கரெக்டா வந்துடுவேளே!!..:PP

@ Techops மாமி - கேள்வி எல்லாம் எல்லாருக்கும் பொது தான் மாமி

@ வல்லிம்மா - நீங்க மறந்தாலும் தக்குடு மறக்கமாட்டான்..;)

@ லெக்ஷ்மியம்மா - :)

@ சிவகுமரன் - :)

@ வைகோ சார் - நன்றி!..:)

@ ராஜி மேடம் - :))

@ வாசகன் அண்ணா - கனடா வந்தா உங்காத்துலதான் சாப்பாடு..:)

@ கீதா அக்கா - செளக்கியம் அக்கா, நீங்க?

@ ராக்ஸ்ஸ்ஸ்ஸ் - உங்க போஸ்ட்ல ஒரு சந்தேகம் கேட்டதுக்கு பதில் சொல்லலையே..:P

@ கோபிகா அக்கா - எதோ உங்க ஆசிர்வாதம் தான்!..:)

@ சகமனிதன் - Done

பத்மநாபன் said...

முதலில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ....
அடுத்து பதிவில் அரைசதம் தாண்டியதற்கு வாழ்த்துக்கள் .....

மனசோட ரூபத்தில் ஆரம்பித்த துள்ளல் எல்லா கேள்விக்கான பதிலிலும் வெளிப்பட்டது ...

அருமை எருமை ....அருமை ( இதை அருமை எருமை லிஸ்டில் சேர்த்துக் கொள்ளவேண்டாம் )....

தக்குடு said...

@ ரசிகமணி - //இதை அருமை எருமை லிஸ்டில் சேர்த்துக் கொள்ளவேண்டாம் // உங்களை அந்த லிஸ்ட்ல வைக்க முடியுமா? பதிவோட ஆதி அந்தம் எல்லாத்தையும் அழகா கோர்த்து மாலை மாதிரி கமண்ட் போடும் ரசிகமணி அல்லவா தாங்கள்!!..:)

vidhas said...

nanna erukku thakkudu, kalashetra pakkathila aru athukku vanthe , sollaveilla, eppo chennai vara ?

தக்குடு said...

@ vidhya akka - கவலையேபடாதீங்கோ அடுத்த தடவை நம்பாத்துக்கு வந்து அக்கா கையால சாப்பிட்டுட்டுத்தான் தக்குடு தோஹா போவான்...:))

geetha santhanam said...

உங்கள் பதிவுகளை நானும் தொடர்ந்து படித்து வருகிறேன். உங்கள் நகைச்சுவை கலந்த நடை இந்தப் பதிவையும் சுவையாக ஆக்கியிருக்கிறது. அது என்ன, தெரிந்தோ தெரியாமலோ என் blog பெயரை ஒரு தாக்கு தாக்கி இருக்கிறீர்களே!!!
//"எண்ணச்சிதறல்! படிக்கறவாளோட கதறல்!"// நடக்கட்டும் நடக்கட்டும். இதற்குத் தண்டனையாக அடுத்து நான் எழுதப் போகும் பதிவுகளைத் தொடர்ந்து கட்டாயமாகப் படித்து கமெண்ட் போடவும். ( i am just kidding. எண்ணச்சிதறலுக்கு rhyming ஆ நீங்கள் எழுதியிருப்பதைப் படித்து ரசித்துச் சிரித்தேன்.)

தக்குடு said...

@ கீதா மேடம், உங்க ப்ளாக்கோட பேர் எண்ணச்சிதறல்நு நேக்கு தெரியவே தெரியாது, நீங்க சொல்லிதான் எனக்கே தெரியும். கோச்சுக்காததுக்கு நன்னிஹை! நான் உங்காத்துக்கு வரர்தை பத்தி ஒன்னும் இல்லை, வந்ததுக்கு அப்புறமா "ஓ இந்த புள்ளையாண்டானை ஏன் தான் வரசொன்னோமோ!"னு வருத்தப்படக்கூடாது!!..:))

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)