Tuesday, February 2, 2010

நாகராஜசோழன் பரம்பரையில்..... மற்றுமோர் MLA

பல வருடங்களாக ஒரு Blog ஆரம்பிக்க வேண்டும் என்று ஒரு ஆசை. எப்படியோ ஒரு Blog ஆரம்பிசாச்சு...:) இனிமேல் அடுத்த கவலை எப்படி எழுதுவது??? டுபுக்கு,அபி அப்பா, பொற்கேடி, கைபுள்ளை,இலவச கொத்தனார், அம்பி(போனா போகுது)இவர்களை போல நகைசுவை எழுதலாமா?? அல்லது பதிவுலக சூராவலி கீதா மேடம்,திராச ஐயா,மதுரையம்பதி அண்ணா,KRS அண்ணா, திவா அண்ணா போல ஆன்மீகம் எழுதலாமா?? அல்லது பாஸ்டன் ஸ்ரீராம்,ஆயில்யன்,மு.கார்த்திகேயன் போல பொதுவாக எழுதலாமா?? என்று பல யோசனைகள். அப்பால நமக்கு என்ன வருமோ அத மட்டும் எழுதுவோம்னு பொதுக்குழுல முடிவு பண்ணியாச்சு. உங்க இஷ்டம் போல வந்து துப்பிடு போகலாம்.

பதிவுலகில் ஏற்கனவே பதிவுகள் எழுதியிருப்பதால் கொஞ்சம் பயம் இல்லாமல் எழுதலாம். எனது முந்தைய பதிவுகள்.... கவிதை, பக்தி I, பக்தி II, இது தவிர பல பதிவுகள்(narayana! narayana!)

Note - இதுவரை போலிசாமியார்,தம்பி,அம்பியின் தம்பி போன்ற புனைபெயர்களில் பின்னூட்டம் இட்டு வந்ததும் யாந்தான்

26 comments:

திவா said...

இது தவிர பல பதிவுகள்(narayana! narayana!)
ஓஹோ அப்படின்னா அம்பி ப்ளாகிலே எழுதின பலதை மறு ஆராய்ச்சி செய்யணுமா? :-))
எந்த பதிவிலே பாவனா பத்தி எழுதலையோ அதெல்லாம் தம்பிதா? இல்லை வைஸி வெர்ஸா?
எப்படியானாலும் போகட்டும். நல்வரவு!
(govinda govinda!)

Porkodi (பொற்கொடி) said...

ada kadavule neengalum rowdya? naatula rowdy kootam jasthiya pochu..! ennudaiya peyarai kolai pannadhukku, inime inga.... adikkadi varuven.

kalankathala 4 manikku vandhu comment podaren, ennoda kadamai unarchikku ellarum serndhu edavadhu vizha edukka poringla illiya?

nalvaravu nalvaravu! ungalukkum blog ulagileye nalla thangamani amaiya vazhthukkal! (innum thangu varalai ennum ninaipil..)

கீதா சாம்பசிவம் said...

ம்ம்ம்ம் அண்ணாச்சிக்கு எழுதிக் கொடுத்தது நீங்க தான்னு பப்ளிக்கா ஒத்துண்டாச்சு இல்லை???
அம்பி, அம்பி, மூஞ்சியை எங்கே கொண்டு வச்சுக்கப் போறீங்க?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இந்த அழகிலே என்னை கிண்டலா???? தம்பி வந்து நல்லா மாட்டி விட்டாச்சு, அப்பாடா, இன்னிக்கு ராத்திரி நல்லாத் தூங்கலாம்.

கீதா சாம்பசிவம் said...

முதல்லே இந்த வேர்ட் வெரிஃபிகேஷனை எடு கணேசா, அப்புறம் என்ன இது ஜி3 பண்ண முடியலை, ஜி3 பண்ணாமல் எப்படி கமெண்டறதாம்???

கீதா சாம்பசிவம் said...

follow up follow up kodukkirathe illai, eppovanum koduppen, unnodathu something special.

sriram said...

வருக வெல்க...

//இதுவரை போலிசாமியார்,தம்பி,அம்பியின் தம்பி போன்ற புனைபெயர்களில் பின்னூட்டம் இட்டு வந்ததும் யாந்தான்//

ஆமா இப்ப மட்டும் பேரைச் சொல்லிட்டீங்களாக்கும், பேரைச் சொல்லுங்க தக்குடு பாண்டி

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//பதிவுலக சூராவலி கீதா மேடம்//

சூரா-வலி ன்னு வேணும்ன்னே தானே ஸ்பெல்லிங் மிஷ்டேக்கு பண்ணீங்க? :))

கீதாம்மாவுக்கு தேங்காய் ஒடைச்சி பதிவு ஆரம்பிக்கணும்-ன்னு வேண்டுதலா தம்பி! ஜமாய்! :))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

தக்குடுபாண்டி - பேரே ச்சும்மா அதிருதுல்ல? :)

தக்குடுபாண்டி - பெயர்க் காரணம் கூறுக!

தக்குடு என்றால் என்ன?
பாண்டி என்றால் என்ன?

யாரும் தடுக்குபாண்டி-ன்னு வாய் தவறிப் படிச்சிறாதீக!
இது தக்குடுபாண்டி! தக்குடுபாண்டி :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

போன பின்னூட்டத்தில் இருக்குற ஒவ்வொரு வரியும் தனித் தனி பின்னூட்டமா போடணும் தான் பார்த்தேன்! (கீதாம்மா பின்னூட்ட டெக்னிக்)

ஆனா word verification வந்து பேஜார் பண்ணுது!

எலே...நாங்களும் ரவுடி தான், word verification-ஐ தூக்கு!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ungalukkum blog ulagileye nalla thangamani amaiya vazhthukkal!//

பொற்கொடி யக்கோவ்...
காலைக் காட்டுங்க!
ஒரு வாசகம்-னாலும் திருவாசகம் தான்!

இப்படியெல்லாம் ஆசிர்வாதம் பண்ண ஒரு திவா சாருக்கோ, கீதாம்மாவுக்கோ தோனிச்சா? :)
பொற்கொடியே எங்கள் கோழிக் கொடி, சேவல் கொடி எல்லாம்! :)

யப்பா தம்பி...
நீ ப்ளாக் ஆரம்பிச்ச காரணம் புரிஞ்சி போச்சி!
வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! :)

தி. ரா. ச.(T.R.C.) said...

வாழ்க வளமுடன் அகத்தியர் அருவி மாதிரி கொட்டட்டும்.அண்ணா அடக்கம் ஆரூயிர் என்று முடிவு கட்டியபின் வந்த தங்கக்தம்பியே வா.பொற்கொடி கத்தாலே 4 மணிக்கேன்னு கதை யெல்லாம் விடாதே.தோஹா சாமியார்ன்னு வெச்சுருக்கலாம்

தக்குடுபாண்டி said...

@ திவா அண்ணா - ஒங்க இஷ்டம்! நான் ஒன்னும் சொல்லலைப்பா!....:)

@ கேடி - அதுக்குதான் அந்த idea வே...:)
நல்லாயிருக்கும்மா உன்னோட ஆசிர்வாதம்.(வீட்ல உக்காசுண்டு யோசிப்பாங்களோ????.:)

@ கீதா மேடம் - எடுத்தாச்சு!

@ பாஸ்டன் அண்ணா - நம்ப பேரு.... தம்பியா இருந்தாலும் நமக்கு வச்சது ஒரு அண்ணனோட பேரு!...:)இப்ப புரிஞ்சுதா!!

@ கே ர் ஸ் அண்ணா - எப்படி டைப் பண்ணினாலும் வலினுதான் வருது...:)

@ கே ர் ஸ் - /ungalukkum blog ulagileye nalla thangamani amaiya vazhthukkal/ அதனாலதான் கேடினு கூப்டேன்...;)

தக்குடுபாண்டி என்பது தங்கத்தமிழும் ஒய்யார மலையாளமும் கலந்த ஒரு பெயர்.(எங்க ஊரு கேரளா பார்டர்ல இருக்கு). சுட்டி குழந்தைகளை அப்படி கொஞ்சுவார்கள்(ஸ்ப்பா.......தொண்டை வத்தி போச்சு)

@ TRC சார் - அகத்தியர் அருவி இன்னும் மறக்கலை போலருக்கு!...:) நன்றி!

தக்குடுபாண்டி said...

@ kodi - /innum thangu varalai ennum ninaipil../ me shtill young so no thangu(யப்பா!முக்கியமான ஒரு பதில் விட்டுபோச்சு!அதான் தனி commentu)

கீதா சாம்பசிவம் said...

@ கே ர் ஸ் அண்ணா - எப்படி டைப் பண்ணினாலும் வலினுதான் வருது...:)//

akkiramama illai?? எனக்கு சூறாவளி னு நல்லா தட்டச்ச வருதே?? :P:P:P:P YOU TOO BRUTUS??????????????????

கீதா சாம்பசிவம் said...

@ kodi - /innum thangu varalai ennum ninaipil../ me shtill young so no thangu//

grrrrrrrr 4 much ஆக இருக்கே?? :P:P:P:P:P:P:P:P

ambi said...

@தம்பி, ஆபிஸ்ல ரெம்ப வெட்டியா இருக்கியா? பிளாக் எல்லாம் ஆரம்பிச்சு இருக்கியே அதான் கேட்டேன். :)))

@கீதா பாட்டி, மெளலி அண்ணா பதிவுக்கு கூட லிங்க் இருக்கு, அதனால் அவருக்கும் இவன் தான் எழுதி தரான்னு சொல்லுவீங்க போலிருக்கே. :))

நீங்க கூட தான் தனி மெயிலில் கண்ணடித்து கொண்டிருக்கும் நடராஜர் சிலை எங்க இருக்கு? அந்த ஊர் எங்க இருக்கு?னு கேட்டு கேட்டு எழுதறீங்க. நான் மூச்சு விட்ருப்பேனா? :))

@பொற்கேடி, பத்த வெச்சியே பரட்ட. அவன் நிம்மதியா இருக்கறது உனக்கு பிடிக்கலையா? :))உனக்கு முன்னாடியே திவாண்ணா நடு இரவு ரெண்டு மணிக்கு கமண்டி இருக்கார் பாரு. :p

@தி.ரா.ச. சார், இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்குமே? :p
கேடி எப்படி கலர் கலரா ரீல் விட்டு இருக்கா பாருங்க.. :))

கீதா சாம்பசிவம் said...

//உனக்கு முன்னாடியே திவாண்ணா நடு இரவு ரெண்டு மணிக்கு கமண்டி இருக்கார் பாரு. :p//

அ.அம்பி, அது அமெரிக்க நேரம், தம்பி ப்ளாகிலே நேரத்தை மாத்தலை போல! ஆனா அவரும் இந்தியாவிலே இல்லையே?? இருக்கட்டும் இருக்கட்டும்! :)))))))))))

அறிவிலி said...

எவ்வளவோ தாங்கிட்டோம். இதையும் தாங்கிக்கறோம். வாங்க.. வாங்க.. வெல்கம்.

கீதா சாம்பசிவம் said...

மெளலி அண்ணா பதிவுக்கு கூட லிங்க் இருக்கு, அதனால் அவருக்கும் இவன் தான் எழுதி தரான்னு சொல்லுவீங்க போலிருக்கே. :))//

ஹிஹிஹி, மெளலீஈஈஈஈஈஈ, என்னமோ காட்டிக்கொடுக்கிறாரே அம்பி, நிஜமா இது??? ஒண்ணுமே சொல்லலையே இது பத்தி??? :)))))))

Porkodi (பொற்கொடி) said...

aha neenga rombave young theridhu, adhan geetha paatiku pottiya aanmiga padhivu podaringla.. :P sari sari kochukadhinga thakkudu, adutha posta podunga.. :D

வல்லிசிம்ஹன் said...

அட ராமா, கடைசில தக்குடு பாண்டி பிள்ளையார் தம்பியா:)
ஐ மீன் முருகனுக்கு அண்ணாவா!!
கலக்கல் தான். ஏமாந்து போயிட்டேனே. அம்பி, தம்பி வம்புக்குப் போகாத,மந்திரம் மட்டுமே சொல்லத் தெரிந்த அப்பாவின்னு நினைச்சேனே.
டுபுக்கு தம்பி தக்குடு ஆயாச்சா:))
பலே பேஷ். நான் ரெடிப்பா. படிக்க. கணேசனுக்கு ஏத்த தங்ஸ் கிடைக்க வாழ்த்துகள்.

கீதா சாம்பசிவம் said...

பலே பேஷ். நான் ரெடிப்பா. படிக்க. கணேசனுக்கு ஏத்த தங்ஸ் கிடைக்க வாழ்த்துகள். //

hihihi, Valli, thakkudu ungalai kupitathe intha asirvatham venumnu thaan.

thakkudu, ippo OKyaa?? :P:P:P:P:P:P

தக்குடுபாண்டி said...

@ வல்லியம்மா - உங்களோட ஆசிர்வாதத்துக்கு நன்னி...:)

@ கீதாம்மா - வயசுலயும் பெரியவா எதாவது சொல்லும்போது நம்ப எதுவும் சொல்லமுடியாது.......:)

மதுரையம்பதி said...

என்னதிது பெரியவர்கள் எல்லோரும் முன்னாடியே வந்திருக்காங்க...எனக்கு மட்டும் இன்னிக்குத்தான் ப்ளாக் ஆரம்பிச்சதே தெரியுது....அதிலும் என்னை வேற வம்பிழுத்திருக்கிறார் அம்பி...:)

இருக்கட்டும், பெரியவர்கள் ஆசிகளில் சொன்னாபோல இணையத்தில் மனையாள் கிடைக்கட்டுமுன்னு நானும் வழிமொழிகிறேன்...

கவிநயா said...

//அம்பி, தம்பி வம்புக்குப் போகாத,மந்திரம் மட்டுமே சொல்லத் தெரிந்த அப்பாவின்னு நினைச்சேனே.//

வல்லிம்மா, நான்கூட அப்படித்தான் நினைச்சிட்டிருந்தேன் :)

கலக்குங்க தம்பி :)

கீதா சாம்பசிவம் said...

//என்னதிது பெரியவர்கள் எல்லோரும் முன்னாடியே வந்திருக்காங்க...எனக்கு மட்டும் இன்னிக்குத்தான் ப்ளாக் ஆரம்பிச்சதே தெரியுது....அதிலும் என்னை வேற வம்பிழுத்திருக்கிறார் அம்பி...:)//

ஹிஹிஹிஹி, மெளலி, கலக்கறீங்களே! அம்பியையும் மெதுவா பெரியவங்க லிஸ்ட்லே சேர்த்ததுக்கு நன்னியோ நன்னி!! ஹாஹ்ஹாஹாஹா!!!!!

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)