Thursday, April 14, 2011

இரண்டாவது சுதந்திர போராட்டம்.

எங்கிருந்தோ வந்த வெள்ளைக்காரன் இந்தியாவோட வளங்களையும்,மக்களையும் அட்டைபூச்சி மாதிரி உரிஞ்சுண்டு இருந்தான். பொறுக்கமுடியாம நம்ப மக்கள் திலகர் வழில ஒரு பிரிவாவும்,காந்தி வழில ஒரு பிரிவாவும் தொடர்ந்து போராடி கடைசில வெள்ளக்காரன் கிட்ட இருந்து சுதந்திரமும் கிடைச்சுது. அந்த போராட்டத்தை சுதந்திரப் போராட்டம்னு சொல்லுவோம். 63 வருஷம் கழிச்சி இப்போ இரண்டாவது சுதந்திர போராட்டம் தொடங்கியாச்சு. நமக்கு உள்ளயே இருக்கும் சில அட்டைபூச்சிகளுக்கு எதிரான போராட்டம் இது.1947

ஒரு பக்கம் நாடு அபரிமிதமான வளர்ச்சியை எட்டிண்டு இருக்கு, இன்னொரு பக்கம் சோத்துக்கு வழி இல்லாம செத்துப்போறவாளோட எண்ணிக்கையும் ஜாஸ்தி ஆகிண்டே இருக்கு. நமக்கெல்லாம் ஆச்சர்யமா இருக்கலாம், ஆனால் இதுதான் நிதர்சனமான உண்மை. சமூக-பொருளாதார வல்லுனர்களால பல காரணங்கள் எடுத்து சொல்லப்பட்டாலும், பிரதானமான காரணம் லஞ்சம் & பொதுப் பணத்தில் ஊழல் இது இரண்டும் தான் முக்கிய காரணங்கள். அபரிமிதமான மக்கள்தொகையும் பெரும் சவாலா இருக்கு. “வாழும் வீட்டுக்கு ஒரு பெண்குட்டியும்,வைக்கோல்போருக்கு ஒரு கன்னுகுட்டியும் மதி!”னு ஒரு மலையாள வசனம் உண்டு. அதுமாதிரி ஊழலோட தீ கொஞ்சம் கொஞ்சமா பரவி தேசம் முழுசும் பத்திண்டு எரியர்து.

நாட்டோட செலவ செழிப்பை எல்லாம் ஒரு சில விஷக்கிருமிகள் கபளீகரம் பண்ணிக்கர்துனால நாடு அடைய வேண்டிய வளர்ச்சி வலுக்கட்டாயமா தடுக்கப்படர்து. மக்களோட அறியாமை தான் இதுக்கு எல்லாம் காரணம். அற்பமான விஷயங்கள்ல எல்லாம் நம்ப மனசு மயங்கி போய் இருக்கு. உடன்பிறப்பே! உளுத்தம்பருப்பே!னு சொல்லியாச்சுன்னா உடனே இங்க உள்ளவாளுக்கு வாயும் வயிரும் நிறையர்து. மண்ணாங்கட்டியாட்டமா மக்கள் இருக்கர்துனால தப்பு பண்ணரவாளுக்கும் செளகர்யமா இருக்கு.

நேத்திக்கு காத்தால வந்த லேட்டஸ்ட் மாடல் நோக்கியா போன் வாங்கி உபயோகிக்கனும்னு நமக்கு தெரியர்து, ஆனா 63 வருஷத்துக்கு முன்னாடி முழுக்க முழுக்க வெள்ளக்காரன் சட்டத்தை அப்பிடியே பாத்து ஈஅடிச்சான்காப்பியாட்டமா அடிச்சி நாம எழுதி வச்ச சட்டதிட்டங்கள் எதுலையும் மாற்றம் கொண்டுவரனும்னு யாருக்கும் தோணவே மாட்டேங்கர்து. ‘லூசுமாதிரி பேசாதே தக்குடு! சட்டத்துல திருத்தம் எல்லாம் ஆட்சில உள்ளவானா கொண்டு வரணும்!’னு சொல்லுவேள். நன்னா செளக்கியமா திடுகுதத்தம் பண்ணின்டு இருக்கும் கசவாளிகள் என்னிக்காவது திருத்தம் கொண்டு வந்து அவா தலைல அவாளே மண்ணை அள்ளி போட்டுப்பாளா? கிரைண்டர் தரேன்! மிக்ஸி தரேன்!னு செக்ஸியா அறிக்கை விடும் அட்டைபூச்சிகளை பாத்து பல்லை இளிக்கும் புள்ளைபூச்சிகளாதான் நாம இருக்கோம். இதை எல்லாம் தந்துட்டு சூப்பரா நம்ப தலைல மொளகாயை அரைச்சுட்டு போறா எல்லாரும்.இயந்திர அரைப்பானோ இல்லைனா கலப்பானோ எதுவா இருந்தாலும் ஆற்காட்டார் பீஸ்கட்டையை நிரந்தரமா பிடிங்கி வச்சுருந்தா ஒன்னும் பண்ணமுடியாதுடே!உண்மையான சிங்கம்!

ஜனனாயகம் எல்லாம் ஒன்னும் இங்க கிடையாது பழையபடி மன்னராட்சி முறைதான் நடந்துண்டு இருக்கு. மத்தில இத்தாலி மகாராணியோட ஆட்சி, மாநிலத்துல ராஜராஜசோழன் ஆட்சி(மறுபடியும் மன்னார்குடி ஆட்சி வரும்னு சொல்லுண்டு இருக்கா எல்லாரும்). கடைசி வரைக்கும் மக்களாட்சி மட்டும் வரவே மாட்டேங்கர்து. இது எல்லாத்துக்கும் சங்கு ஊதற மாதிரி அன்னா ஹசாரேனு ஒரு புண்ணியவான் சில காரியங்கள் பண்ணின்டு வரர்து கொஞ்சம் சந்தோஷமா இருக்கு. அவர் சொல்லறபடி லோக்பால் மசோதா நிறைவேத்தியாச்சுன்னா ஊழல் பண்ணும் ஊதாரிகளுக்கு அடிக்கப்படும் முதல் சாவுமணி.

நம்ப எல்லாருக்குமே பல வருஷமாவே யாருக்காவது ஒருத்தருக்கு வாழ்க! சொல்லி சொல்லி பழக்கம் ஆயிடுத்து, எப்போதும் போடர வாழ்க!வை கொஞ்ச காலத்துக்கு அன்னா ஹசாரேவுக்கு நாம எல்லாம் போட்டாக்க புண்ணியமா போகும்.
ஒரு ஜெயம் கிடைச்சாச்சுன்னா அதை வெச்சுண்டு அடுத்தடுத்து பல போராட்டம் பண்ணுவேன்!னு உற்சாகமா சொல்லியிருக்கார் அந்த நல்லவர், அவரை நம்ப அரசியல்வியாதிகள் கிட்டேர்ந்து தள்ளிவெச்சு பத்திரமா பாத்துக்க வேண்டியது நம்மளோட கடமை. அந்த நல்ல மனிதருக்கு நோயற்ற வாழ்வையும்,ஆரோக்யமான உடலையும் அளிக்க உம்மாச்சியை பிரார்த்திக்கிறேன். எரியர்தை பிடுங்கினா கொதிக்கர்து தானா அடங்கும்ங்கர கதையா நமக்கு போராட்டகுணமே இருக்கமாட்டேங்கர்து. IPL பாக்கலைனா அகிலமே அஸ்தமிச்சு போயிடும்னு ஆர்பரிக்கும் இளைய சமுதாயத்தையும், சினிமாகாராளை பாத்த உடனே வேலையை விட்டுட்டு இடுப்புல கையை வச்சுண்டு வேடிக்கை பாக்கும் சமூகத்தையும் வெச்சுண்டு போராட்டம் பண்ணர்து அப்படிங்கர்து ஓட்டை வாளி, அறுந்த கயிறை வெச்சுண்டு கிணத்துல ஜலம் எடுக்க போன கதைதான்.2011

ஹசாரே ஒன்னும் அவருக்கு பென்ஷன் கிடைக்கலைன்னு போராட்டம் பண்ணலை, நாம எல்லாம் எதிர்காலத்துல டென்ஷன் இல்லாம இருக்கனும்னு ப்ராணனை விட்டுண்டு இருக்கார். உலககோப்பை இறுதிப்போட்டில அலைமோதின கூட்டத்தை மாதிரி 10 மடங்கு கூட்டம் நாடு முழுவதும் அவருக்கு ஆதரவா இறங்கி போராட்டம் பண்ணினாதான் நாம எல்லாரும் ஜீவிச்சு இருக்கமுடியும். விளையாட்டு,ஆடல்,பாடல் இதை மாதிரி எந்த விஷயமும் நம்மோட போராட்ட குணத்தை மழுங்கடிச்சுர கூடாது,சேதுபந்தனத்துல அணில் கூட தன்னால முடிஞ்ச அளவுக்கு உபகாரம் பண்ணின மாதிரி நாம எல்லாரும் ஒன்னு சேர்ந்து இந்த விஷயத்துக்கு போராடியே தீரவேண்டிய கட்டாய நிலைமைல இருக்கோம். இதை விட்டுட்டு "கிரிக்கெட் ஒரு மதம் அதில் @#&ன் கடவுள்"னு வெட்டி வசனம் பேசிண்டு இருந்தாக்க, உருவிண்டு போகும் நம்ம வேட்டியை கூட நம்மாள காப்பாத்திக்க முடியாது.

ஜெய்ஹிந்த்! வந்தே மாதரம்!

27 comments:

அப்பாவி தங்கமணி said...

Very thoughful timely post... hats off... :)))

பத்மநாபன் said...

இந்த ஊழலிருந்து மீளும் சுதந்திரப் போராட்டம் எல்லா வகையிலும் வெற்றி பெறவேண்டும்....
அன்னா அஸாரே கூறியது போல் அந்த சட்டத்தை அமல்படுத்திய பிறகு தான் உண்மையான போராட்டம்.. ஊழலில் ஊறிய மட்டைகளை உரிப்பது அவ்வளவு சாதாரணமல்ல.... நம்பிக்கையோடு போராட வேண்டும் ....நல்ல பதிவிற்கு நல்வாழ்த்துக்கள்....

Chitra said...

சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்!ஜெய்ஹிந்த்! வந்தே மாதரம்! :-)

Vasagan said...

இப்பொழுது அவருக்கு கிடைத்திருக்கும் ஆதரவே ஒரு நல்ல நம்பிக்கை, இது மேலும் வளரும், வளரவேண்டும்...
நம்பிகையுடன்
சங்கர்

lata raja said...

I support Anna too:) Super Like to this post!

Mahi said...

நல்ல பதிவு தக்குடு! அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு பெருகிட்டேதான் வருகிறது. பிறந்திருக்கும் கரவருஷம் அதை நல்லவழியில் வளர்க்கட்டும்!

தி. ரா. ச.(T.R.C.) said...

நல்ல பதிவு தக்குடு.
நல்ல பதிவிற்கு நல்வாழ்த்துக்கள்

ஞாஞளஙலாழன் said...

>உலககோப்பை இறுதிப்போட்டில அலைமோதின >கூட்டத்தை மாதிரி 10 மடங்கு கூட்டம்

பத்து நாடுகளுக்கு மட்டுமே தெரிந்த ஒரு விளையாட்டில் உலக கோப்பை நடத்தும் நமக்கு நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மெச்சூரிட்டி சீக்கிரம் வர வேண்டும்.

வித்தியாசமான கடவுள் said...
This comment has been removed by the author.
வித்தியாசமான கடவுள் said...
This comment has been removed by the author.
வித்தியாசமான கடவுள் said...

தம்பி... ஊழல் பண்ணுற அரசியல்வாதிகள் கண்ணுக்கு தெரியிறமாதிரி இலையில உக்காந்திருக்க பூச்சிகள்... இவர்களைவிட ஆபத்தானவர்கள் வேரில் கண்ணுக்கு தெரியாமல் உக்காந்திருக்கிற பூச்சிகள்... அது நம்மைப்போல காமன் மேன் தான்... Bike-ல போய்கிட்டு இருக்கும் பொது signal jump பண்ணா court-ல போய் ரூ.300/- தண்டம் அழணும்; அதுக்கு பதிலா ஒரு ரூ.50/- ஐ காவல்காரருக்கு வெட்டினா, என்னோட குத்தம் மன்னிக்கப்பட்டு நான் எனது பயணத்தை தொடரலாம். ஆக என்னோட தப்பை சரி பண்ணாத வரையில மேல இருக்க தப்பை சரி பண்ண முடியாது... ஏன்னா அந்த டானாக்காரரு அம்பது ரூபா லஞ்சம் வாங்குறதுக்கு ஐயாயிரம் செலவழிச்சு அந்த வேலையில சேந்திருப்பாரு... அவருக்கு மேலே இருக்கவரு அதை விட கொஞ்சம் கூட... இப்படி தான் மேலே வரைக்கும் லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகிறது... அதனால கீழே இருக்க பூச்சிகளை சரி பண்ணினால், மேலே இருக்க பூச்சிகள் தானா சரியாகிடும்... அதனால அண்ணா ஹஜாரேவை ஆதரிப்பதை விட, கீழ் மட்டத்தில் நம்மை நாம் சரிபண்ணிக்கொண்டாலே போதும்... எல்லாம் சரியாகிடும்...

இராஜராஜேஸ்வரி said...

வாழும் வீட்டுக்கு ஒரு பெண்குட்டியும்,வைக்கோல்போருக்கு ஒரு கன்னுகுட்டியும் மதி!”னு ஒரு மலையாள வசனம் உண்டு. //
பழமொழி அருமை. தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Lakshmi said...

தக்குடுவுக்கு இப்படில்லாம் கூட பதிவு போடத்தெரியுமா? சூப்பர்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பதிவு தக்குடு. தேவையானதும் கூட.

vgr said...

Well, Well, Well...neeya neeya neeya idu :)

Jokes apart, Unless we throw our selfish attitude...nothing will happen....

Than velai, pugazh, panam idulaye kuriyaga irukum makkala vachundu...onnum kizhika ilayadu...

vidhas said...

Great post thakkudu!! Jai hind!!!Vande matharam!!

Matangi Mawley said...

All we wanted was a spark... and someone to lead the way... Many people, including, yours truly, had lost trust on the Gandhigiri way of solving issues. But the man proved us all wrong!

Good post!

RVS said...

அ'ண்ணா' என்றே எழுதலாமாம்.. எழுத்தாளர் இரா.முருகன் முகப்புஸ்தகத்தில் சொல்லியிருக்கார்.
அற்புதமான பதிவு தக்குடு. நெருக்கி எல்லா பாயிண்டும் கவர் பண்ணியிருக்கே. வாழ்த்துக்கள்.
யாருக்காவது வாழ்க போட்ட கும்பல் ஆகையால்.. இந்தப் பதிவிற்காக "தக்குடு வாழ்க!" ;-))

மோகன்ஜி said...

//வாழும் வீட்டுக்கு ஒரு பெண்குட்டியும்,வைக்கோல்போருக்கு ஒரு கன்னுகுட்டியும் மதி!”னு ஒரு மலையாள வசனம் உண்டு. //

அழகா சொன்னீங்க தக்குடு.! காலம் மாறும். மாற்றுவோம். நம்பிக்கை வைப்போம் இத்தகு எழுச்சிகளில்.. நம் ஒத்துழைப்பையும் கொடுப்போம்.

சிவகுமாரன் said...

அண்ணா வழியில் சென்று அழிந்தது போதும்.
அன்னா வழியில் சென்று அழிப்போம் ஊழலை .
நன்றி தக்குடு

மனம் திறந்து... (மதி) said...
This comment has been removed by the author.
மனம் திறந்து... (மதி) said...

/அவருக்கு ஆதரவா இறங்கி போராட்டம் பண்ணினாதான் நாம எல்லாரும் ஜீவிச்சு இருக்கமுடியும். விளையாட்டு,ஆடல்,பாடல் இதை மாதிரி எந்த விஷயமும் நம்மோட போராட்ட குணத்தை மழுங்கடிச்சுர கூடாது,சேதுபந்தனத்துல அணில் கூட தன்னால முடிஞ்ச அளவுக்கு உபகாரம் பண்ணின மாதிரி நாம எல்லாரும் ஒன்னு சேர்ந்து இந்த விஷயத்துக்கு போராடியே தீரவேண்டிய கட்டாய நிலைமைல இருக்கோம்//

தென்னாட்டு அன்னா உங்கள் வடிவத்தில் தெரிகிறார், கண்முன்னே! சபாஷ், தக்குடு! நான் ரெடி...நீங்க ரெடியா? :)))

Arun Ambie said...

Super Like

தக்குடு said...

@ இட்லி மாமி - நன்னிஹை!..:)

@ ரசிகமணி - :))

@ சித்ரா அக்கா - வாழ்த்துக்கள் அக்கா!..:)

@ வாசகன் சார் - :))

@ லதா மாமி - மூஞ்சி புஸ்தகத்தோட வாசனை இங்கையும் லைக்கா??..:P

@ மஹி - ஆமாம் மஹி..:)

@ TRC மாமா - :))

@ ஞாஞளங்லாழன் - சாமீமீமீ! உங்க பேர் டைப்பர்த்துக்குள்ள நாக்கு தள்ளுது..:P

@ விகடவுள் - உண்மைதான்...

தக்குடு said...

@ ராஜி அக்கா - நன்னிஹை!..:)

@ லக்ஷ்மி மாமி - :P

@ வெங்கட் அண்ணா - நன்னிஹை!

@vgr - கரெக்டு வாத்தியாரே! சீக்கரம் தோஹா அமெரிக்கால ஆணி புடுங்கர்தை விட்டுட்டு இந்தியா போய் போராடுவோம்..:P

@ வித்யா அக்கா - :))

@ மாதங்கி - அதெய்! அதெய்! சபாபதெய்!..:)

@ மைனர்வாள் - :))

@ மோஹன்ஜி - பழமொழியை ரசிச்சோ?..:)

@ சிவகுமரா - நீங்க பேசினாலே கவிதைதான்யா..:)

@ மதி - கமண்ட்ல பதிவு போடற ஆள் வந்தாச்சுடோய்!..:)

@ அருண் அம்பி - :))

Anonymous said...

Mr.Thakudu,

This is the best post I have ever read in your blog. Chanakya said in ardasastra that any society which is always involved in recreation will lose its charm and will be captured by the enemies.Our society is addicted with cricket,cinema and technical addictions like mobiles and ipods etc.

We must come out of it. every illiterate person in remote village is also having a cellphone and knows how to operate it. But they dont have basic education and a feel of proud about agriculture.Everyone is irresponsible and selfish. Every Indian must know our real history, Not the false history which our students are learning today.

தக்குடு said...

@ அனானி சார்/மேடம், சாணக்கியரோட விஷயம் எல்லாம் சொல்லி கலக்கிட்டேள். டிட்டு/பிட்டுனு உங்க செல்லப்பெயரையாவது போட்டு இருக்கலாம்..:) ஆனால் நீங்க சொன்ன விஷயம் அனைத்துமே உண்மை. ஐபோன் இல்லைனா உங்களை ஐந்தறிவு ஜந்து மாதிரி தான் பாக்கரா இப்ப எல்லாம்..:(

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)