Thursday, April 21, 2011

சாஸ்தா ப்ரீதி

ஐயப்பன் உம்மாச்சிக்கு நடக்கும் வெகு விமர்சையான ஒரு பூஜை இந்த சாஸ்தா ப்ரீதி. பூஜை சம்பந்தமான விஷயம் எல்லாம் உம்மாச்சி ப்ளாக்ல நாம தனியா பாக்கலாம். இந்த பதிவுல நாம பார்கப்போவது அந்த விழால நடக்கும் கலாட்டாக்கள்.

குத்துக்கல் தெருல ஒரு புள்ளையாண்டானுக்கு சாஸ்தா ப்ரீதினு சொல்ல வராது சாஸ்தா வரைக்கும் ஒழுங்கா சொல்லுவான் அதுக்கப்புறம் ப்ரீதியை ப்ரீத்தி ஆக்கிடுவான். “ப்ரித்தியும் இல்லை! சுவீட்டியும் இல்லை! நீ ஐயப்ப பூஜைனு சொன்னாபோரும்டாப்பா!”னு அந்த தெரு மாமா ‘சிடுசிடு’னு எரிஞ்சு விழுவார் (அந்த மாமாவோட சீமந்தபுத்திரியோட பேர் ப்ரீத்தி). கல்லிடை காஸ்மோபொலிடன் சிட்டில இருக்கும் எல்லா அக்ரஹாரங்களும் ஒத்துமையா கொண்டாடும் ஒரு விழான்னே இதை சொல்லலாம்.18 அக்ரஹாரம் சேர்ந்த தொகுப்புக்கு கரந்தையார்பாளையம் சமூகம்னு பேர். 18 அக்ரஹாரத்துக்கும் தனி தனியா தர்மாதிகாரியா அந்த தெருல இருக்கும் ஒரு மாமா இருப்பார்.சமூகத்தோட நிர்வாகம் சுழற்சி முறைல ஒவ்வொரு கிராமமா சுத்தி வரும்.சமூகத்துக்கு தனியா ஒரு பெரிய தொகை வங்கில உண்டு. அதுலேந்து வரும் வட்டியை வெச்சுண்டு ஒரு வருஷம் முழுசும் வரும் பொது விஷேஷங்களை கழிக்கனும்.அதுல முக்கியமான ஒரு விஷேஷம் இந்த சாஸ்தா ப்ரீதி. இந்த விஷேஷம் முடிஞ்சு தான் சமூகத்தோட பொறுப்பை அடுத்த கிராமத்துகாராளுக்கு மாத்தி குடுப்பா. பொதுவா வடக்கு தமிழ் நாடு முழுசும் ராம நவமி,கிருஷ்ணஜெயந்தி இந்த மாதிரி உத்ஸவம் தான் ஜாஸ்தி. தெற்கதான் அதுவும் நெல்லை மாவட்டத்தை சுத்தி உள்ள பிரதேசங்கள்ல தான் ஹரிஹரசுதனுக்கு வழிபாடுகள் ஜாஸ்தி (என்ன இருந்தாலும் மலையாளதேசம் பக்கமோ இல்லையோ!).

ஆடி மாச சனிக்கிழமைல இந்த விஷேஷமும் அதை தொடர்ந்து சுமாரா 5000 பேருக்கு போஜனமும் நடக்கும், அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை சூரிய நாராயண பூஜை & போஜனம். இந்த போஜன சாலைலதான் வேடிக்கை வினோதம் எல்லாம் அரங்கேரும். சமூகத்து பொறுப்பை சுருக்கமா கிழினு சொல்லுவா. 2 யானை பொம்மை, 2 கைவிளக்கு, பட்டுத்துணியில் சுத்தின பழைய ஏட்டிச்சுவடி - இதுதான் எங்களுக்கு தெரிஞ்ச கிழி. “கிழி இந்த கிராமத்துலேந்து அந்த கிராமத்துக்கு மாறர்து!”னு சொல்லிப்பா. சக்கப்பழம் ஹரீஷ், “கிளி நம்ம கிராமத்துக்கு எப்ப வரும்?”னு கேப்பான். ‘ஆகாஸத்தை பாத்துண்டே இருடா கோந்தை! கிளி காக்காய் எல்லாம் வரும்!”னு அகிலா மாமி நக்கல் அடிப்பா. சாஸ்தா ப்ரீதி முடிஞ்சு ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் கிழி வாங்கின கிராமத்துக்காரா கிழி சாமான் எல்லாத்தையும் மேளதாளத்தோட அவா தெருவுக்கு கொண்டு போவா. எங்க தெருல இந்த யானை பொம்மையை கைல கொண்டு வரர்துக்குனு ஸ்பெஷலா ஒரு மாமா இருக்கார்...:)கிழி சாமான்

ஐயப்பனுக்கு பாயாசம் தான் மஹா நைவேத்யம் மேலும் எல்லாருக்கும் பந்திலையும் தாராளமா பாயாசம் பரிமாறனும், இந்த சிட்டில எல்லாம் பந்தில ஒரு மொட்டை கிண்ணத்துல வைக்கர மாதிரி இருந்தா மொத்தமே 2 வாளி பாயாசம் இருந்தா போதும், இங்க கதையே வேற. ஒரு வரிசைக்கு 'கிள்ளு' பாயாசம் பரிமாறவே பெரிய வாளியால ஒரு வாளி பாயாசம் வேணும். எங்க தெரு பீப்பி மாமா,சந்தனகும்பா மாமி எல்லாம் கோதால குதிச்சாக்க 3/4 வாளி பாயாசம் அவாளுக்கே காலி ஆயிடும்..;) சாஸ்தா ப்ரீதிக்கு பாயாசம் பண்ணர்த்துக்கு ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய வெண்கல உருளி உண்டு, சும்மா குத்துமதிப்பா எல்லாம் சாமான் போட முடியாது இத்தனை வாளி ஜலம்,இத்தனை வட்டு வெல்லம்&தேங்காய்,இத்தனை பக்கா அரிசி,முந்திரினு கணக்கு எல்லாம் உண்டு. அந்த விஷயம் எல்லாம் உருளியோட உள்பக்கம் செதுக்கி வச்சுருக்கா.உருளி இவ்ளோ பெரிசு இருக்கும்....:)

கிழிக்கார கிராமத்தை சேர்ந்தவா தான் பாயாசத்துக்கு யத்தனம் பண்ணி குடுக்கனும். 7 மணி நேரம் ஆகும் பாயாசம் பண்ணி முடிக்கவே. அதனால எங்க தெரு கிழியின் போது காலங்காத்தால 2.45 மணிக்கு எழுந்து குளிச்சுட்டு மேற்கு கோடில இருக்கும் எங்க தெருக்காரா எல்லாரும் Bare body-யோட ஐயப்பனோட பேர் பாடிண்டே தெருலேந்து கிளம்பி கிழக்கு கோடில இருக்கும் கோவிலுக்கு ‘பளபளக்கும் விபூதி, பளிச்சிடும் கோபி’னு ரகம் ரகமா வானர சேனை கைவீச்சும் கால்வீச்சுமா போவோம். எங்க தெருல ஜாம்பவான் மாதிரி வயசான தாத்தா மாமாவும் இருப்பார் 2 ஆம் கிளாஸ் படிக்கும் சிண்டுவும் இருக்கும். போகும் வழி முழுசும் சும்மா போகமாட்டோம். பெருமாள் கோவில் வாசல்,சன்னதி தெரு ஆரம்பம்,டாக்டராத்துக்கு பக்கத்துல எல்லாம் ‘சாமியேய்ய்ய்ய்ய்ய்! சரணமய்யப்பா!’னு சரணம் போட்டு ஆத்துல முன்னடிக்க அளில தூங்கிண்டு இருக்கும் சன்னதி தெரு மாமா மாமிகள் “வானரபட்டாளம் பாயாசம் வைக்கர்துக்கு கிளம்பிருத்துகள்!”னு அவா வாய்ல விழுந்துட்டுத்தான் போவோம்.

கோவிலுக்கு போனதுக்கு அப்புறம் பயபக்தியா சன்னதில நமஸ்காரம் எல்லாம் பண்ணிட்டு பவ்யமா நின்னாக்க எங்க தெரு தர்மகர்த்தா தலைமைல ஒரு டீம் மீட்டிங் நடக்கும். அவர் வானரத்தோட வயது & தேஹபராக்ரமத்தை பொறுத்து வேலையை பிரிச்சு குடுப்பார். ஒரு கோஷ்டி வாய்க்கால்லேந்து வாளி வாளியா ஜலம் எடுத்துண்டு வரும்,இன்னொரு கோஷ்டி 300 தேங்காயை குடுமி பிச்சு குடுக்கும்,ஒரு அணி அதை கண்ணுல கீறாம லாவமகா உடைச்சு குடுக்கும் ( நம்ப டிபார்ட்மண்ட்), இன்னொரு டீம் அதை அழகா துருவும் (வயசான சில மாமாக்கள் “கைல பட்டுக்காம துருவுங்கோடா கோந்தேளா!”னு வாஞ்சையோட வார்னிங் குடுத்துண்டே இருப்பா), துருவின தேங்காய் பூவை கோடித்துண்டுல போட்டு தீர்த்தம் சேர்த்து சேர்த்து 15 வாளி பால் எடுக்கனும். எல்லாம் ரெடி பண்ணி வெச்சுண்டு அடுப்புக்கு பூஜை எல்லாம் பண்ணி ‘நளமகாராஜா’ நானா மாமா அடுப்பை மூட்டி உருளில அரிசி கொதிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் நல்ல ஆஜானுபாஹுவா இருக்கும் 4 பேர் 8 அடி நீளம் உள்ள ரெண்டு துடுப்பை வெச்சுண்டு எதிரெதிரா கிண்ட ஆரம்பிப்பா. (ரொட்டிசால்னா சேகர் அதுல கெட்டிக்காரன்)

கோவில் வெளிபிரகாரத்துலதான் தட்டி பந்தல் போட்டு பூஜை நடக்கும். இந்த பூஜைல மட்டும் பாத்தேள்னா எல்லா மாமா/மாமிமார்களும் எதோ சுதந்திரதின அணிவகுப்பு மாதிரி அழகா வரிசை வரிசையா உக்காச்சுண்டு இருப்பா. பூஜை முடிஞ்சு தீபாராதனை ஆன உடனே 'டபக்'னு Aboutturn போட்டு பந்திக்கு உக்காரனுமே அதுக்குத்தான் இந்த ஒழுங்கு..:). எதோ பிரச்சனைக்காக சண்டை போட்ட கோமா மாமிக்கு பக்கத்துல இடம் கிடைச்சாலும் "கோவில்னா எல்லாரும் வந்துபோகத்தான்டி செய்வா! அவாத்து திண்ணைல போயா என்னோட ப்ரு@#%தை வச்சு உக்காரப்போறேன்"னு தனக்குத் தானே சால்ஜாப்பு சொல்லிண்டே உக்காசுண்டு சாப்பிடும் சினிமா மாமியின் காமெடியை பாக்கர்து கண் கொள்ளா காட்சியா இருக்கும்.

முடுக்கு 'மூச்சா' மாமா இதுக்கு மேல ஒரு படி போய் என்ன சொல்லுவார் தெரியுமோ??

(கல்லிடை மாமா மாமிகள் கலாட்டா தொடரும்)................:)

35 comments:

Chitra said...

(கல்லிடை மாமா மாமிகள் கலாட்டா தொடரும்)


.... அவங்களை எல்லாம் கலாட்டா என்ற பெயரில், நல்லா கலாய்த்து எடுக்கிறார், தக்குடு.... நடத்துங்க..... நடத்துங்க....

Porkodi (பொற்கொடி) said...

இன்னும் உங்க குடும்பத்துல அண்ணன் தம்பி யாராவது பாக்கி இருந்தா அவர்களையும் உடனே வந்து எழுத சொல்லவும். எனக்கு இப்ப பாதி கல்லிடை மேப் தான் தெரிஞ்சுருக்குன்னு நினைக்கிறேன்!

வெங்கட் நாகராஜ் said...

தொடரட்டும் கலாட்டா!

Madhuram said...

Romba interestinga irukku thakkudu padikaradhukku. Kallidaila pirandhu idhellam paarakalaiyennu enga vachiduthu post. Super!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

ஏன்டா தக்குடு, (ஹி ஹி) எல்லாமே புதுசு. இரண்டு தடவைகள் வாசித்த பின்னர் கூட பாதிக்கு மேல புரியல. அவ்வ்வ்வ்வ்வ்வ் திருப்ப படிக்க வேண்டும். பீ.டி.எஃப் பைலாக சேர்த்து வைச்சிருக்கேன்.

வல்லிசிம்ஹன் said...

டாப் கிளாஸ் . அப்படியே எனக்கும் ஒரு கப் பாயசம் வேணுமே.
படம் அழகு. பதிவின் வார்த்தைகள் அழகு. இப்படி எல்லாம் இருக்கிற ஊருக்குப் போகாம எங்கயோ
கிளம்பி வரோமேனு தோணறது. காலத்தின் கட்டாயம் தான்.
இத தனை மாமா மாமிகளும் உன் ப்லாகைப்படிக்க மாட்டாங்கர தைரியமா தக்குடு:)))))
எப்படியோ இருக்கட்டும் வெள்ளிக்கிழமை விருப்து இனிப்பாக இருந்தது. ஐயப்பா சரணம்.


--

ஆயில்யன் said...

//என்ன இருந்தாலும் மலையாளதேசம் பக்கமோ இல்லையோ!//

சம்மதிச்சு!

ஏதேது விட்டா நீங்களாவே பிச்சுக்கிட்டு போயி ஜாயிண்ட் அடிச்சிடுவேள் போலிருக்கு முதல்ல கவர்மெண்ட் கண்காணிக்க ஜொள்ளணும்!


//இத தனை மாமா மாமிகளும் உன் ப்லாகைப்படிக்க மாட்டாங்கர தைரியமா தக்குடு//
வல்லியம்மா அதெல்லாம் நாமதான் ஏற்பாடு செஞ்சு தரணும் பயபுள்ள ஆகஸ்ட்லே அவ்விட எத்தும்போல் செம கவனிப்பு நிச்சயம் :)

RVS said...

மு.மூ மாமா என்ன பண்ணுவார் ன்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆவலா இருக்கு கோந்தே!
பாயாசம் பண்றதுல நீ கெட்டிக்காரனோ? இந்தப் பதிவே பாயாசம் மாதிரி தான் இருக்கு..
ப்ரீத்தி கிளி நல்லா இருந்தது...
அடுத்த பதிவு வெள்ளிக்கிழமை தானா? ;-))

Sriram Qatar said...

பாயாசத்தை வெச்சிண்டு பல பேர் மானத்த வாங்கரீரே?
யப்பா.. கல்லிடை குறிச்சி காரா யாராவது இவரோட அக்க போர தடுத்து நிறுத்துங்கப்பா. இல்லேனா கல்லிடை மாமா மாமீக்களோட மொத்த மானத்தையும் இவர் ஒருத்தரே வாங்கிருவார்.
Its interesting post.

lata raja said...

Andha kolam potta kaiyukkae namaskaram pannaraen...eththanai azhaga irukku...ovvoru viseshamum padikkarachchae oru paravasam...ooora vittu veliyila irukkaravaalukku ellam indha post oru round oorukku koottindu poidum:)
Keep it up and awaiting the thodarchchi!

Anonymous said...

ippave payasam sapta madhiri sweeta irukku. romba nalla post adutha part eppo varum nu kaaka kaaka vachuduthu!sasisuga

Anonymous said...

matrum padangal arumai, kolam potta kai yaro? avlavu nanaa iruku.achu kothapla...sasisuga203

தக்குடு said...

ஹலோ எல்லாருமா கோலம் போட்டது யாரு? யாரு?னு தக்குடு வாயை பிடுங்காதீங்கோ! அதை போட்டது முதலியப்பபுரம் தெருல யாரோ ஒரு மாமியும் அவாளோட பொண்ணும்னு எல்லாம் எனக்கு தெரியாது...;)))

பத்மநாபன் said...

பாயாச தயாரிப்பின் நேர்முக வர்ணனை சிரி சிரின்னு சிரிக்க வச்சுருச்சு,,,, தொடரட்டும்..

எல்லாம் கத்தார்ல இருக்கற தைரியத்தில , மாமாக்களையும் மாமிக்களையும் வாரித் தள்ளியிருக்கே....அடுத்த லீவுக்கு ஊருக்கு போறப்ப பெரிய அபிஷேகம் காத்திருக்கு... அதுலயும் பீப்பி மாமாவும்,சந்தனகும்பா மாமியும் ஸ்பெஷல் எற்பாடோட இருக்கறதா கேள்வி.

SRINIVAS GOPALAN said...

தக்குடு
ஊர் நினைவை கிளறி விட்டுட்டாய். எங்கள் குலதெய்வம் அரியநாயகிபுரம் சாஸ்தாக்கு ஒரு சின்ன அளவில் பாயாசம் வைத்து அங்குள்ள எல்லோருக்கும் கொடுக்கிறோம்.
பொதுவா இந்த கிழி லாஜிக் நிறைய இடங்களில் பின் பற்றுகிறார்கள். உடுப்பி போன்ற இடங்களில் கோயில் நிர்வாகம் 2 வருஷத்திற்கு ஒரு முறை 8 மடங்களுக்குள் சுழற்சி முறையில் மாறும். அங்கும் இந்த உரிமை மாறும் preparation நன்றாக இருக்கும். எல்லாருக்கும் வாய்ப்பு கிடைக்குமே.
பாயாசம் தயாரிக்கறதில் ஒரு டீம் வொர்க் இருக்கே. இப்படி நல்லா வேலை பார்த்து, சமைத்து, பூஜை முடிந்து சாப்பிட்ட பிறகு மதியம் ஒரு தூக்கம் வருமே அது ஒரு சொர்க்கம்.
பார்த்து - ஊர் பக்கம் போகும் போது நீ இப்படி எழுதி இருக்கறது தெரிஞ்சு உங்க ஊர் மாமாக்களே தங்களோட பொண்ண கொடுத்துட போறா. எங்க ஊர்ல கல்லிடை பொண்ணுங்கன்னா ஒரே ஓட்டம் ஓடிடுவோம் :) நீ அப்படி தப்பிக்க முடியாது.

vgr said...

oho appadiya...

Matangi Mawley said...

ivalo matter irukkaa oru paayasaththula!? aetho live-aa padam paakkaraapla irunthathu- unga narration! :)

vidhas said...

engala yellam kaladi juruchikey kotindu poiyta thakkudu!! kolam potta kaikku un stylea valayal vangi koduthudu :-), mu mu mama enna pannar nnu therunika adutha varam varakum wait pannanum Hm

geetha santhanam said...

சாஸ்தா ப்ரீதி விவரங்கள் சுவாரஸ்யம். இத்தனைப் பெரிய பாத்திரத்தில் பாயசமா? ஆச்சர்யமாக இருக்கு.

Shanthi said...

சாஸ்தா ப்ரீதி.... mmh. Kovai ninaivugal. Angey ellam ore jorra indha vizha nadakkum. Ingey madras -la onnum kidayadhu.

Vasagan said...

ENAKKU ORU VALLZHI PAYASAM ANNUPU THAKKUDU.

\முதலியப்பபுரம் தெருல யாரோ ஒரு மாமியும் அவாளோட பொண்ணும்னு எல்லாம் எனக்கு தெரியாது...;)))\

NAMPITTOM

Search Begins said...

Swamie sharanam Ayyappa!! Super swami!!!! I Just remember the way u started telling me stories... I m a grt fan of ur "கொஞ்சம் குறும்பு! கொஞ்சம் நக்கல்!" stories... Keep going!!! :)

கீதா சாம்பசிவம் said...

எங்க ஊரு வைக்கத்தஷ்டமிப் பாயாசம் கதையாத் தான் இருக்கு, குறைஞ்சது ஆறுபேராவது தூக்கிண்டு வருவா பாயாசப் பாத்திரத்தை! சமாராதனை முடிஞ்சு பனிரண்டு மணி ஒரு மணிக்குச் சாப்பாடு ஆரம்பிச்சா, சாயங்காலம் ஆறுமணி வரை நடக்கும். இதிலே மாவிளக்குப் போடறவா வேறே, சாப்பிட்ட இலையிலே அங்கப் பிரதக்ஷிணம் பண்றவானு அமர்க்களமா இருக்கும், ஹூம் அந்த நாளும் வந்திடாதோனு தான் இருக்கு.

ஸ்ரீநிவாசகோபாலன் சொல்லி வந்தேன். தக்குடு இதுக்கெல்லாம் நான் ஆஜராயிடுவேன். ஜிமிக்கியைப் பார்த்தால் தான் பிடிக்கலை! :P மலரும் நினைவுகளைப்பரிமாறிக்கலாமே. என் கல்யாணத்திலே சமாராதனைக்கே குறைஞ்சது 200 பேர் சாப்பிட்டிருப்பா. இப்போ நாங்க ரெண்டு பேரும் தான்! :(

தக்குடு said...

@ சித்ரா அக்கா - :))

@ கொடிகுட்டியக்கா - வாங்கோ! வாங்கோ! தலைவலி இப்போ தேவலையா?

@ வெங்கட் அண்ணா - :))

@ மதுரம் அக்கா - அடுத்த லீவுக்கு வரும் போது சொல்லுங்கோ கூட்டிண்டு போறேன்...:)

@ அனாமிகா - உனக்கு புரியாத வரைக்கும் ஷேமம்..:P

@ வல்லிம்மா - நான்குனேரில ஒரு வீடு வாங்கலாமா??..:))

@ ஆயிலு - போய் ஜாயிண்ட் அடிச்சாலும் தப்பு இல்லை ஓய்ய்!!..;))

@ மைனர்வாள் - வாரம் 5 போஸ்ட் போட நான் என்ன மன்னார்குடி மைனரா??..:)

Anonymous said...

@ தக்குடு,
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

தக்குடு said...

@ கோபால் அண்ணா - சரியா சொன்னேள், மத்யானம் ஒரு தூக்கம் வரும் பாருங்கோ, சொர்க்கம் தான் அந்த வாழ்க்கை..:)

@vgr - ஆமாம்

@ மாதங்கி - என்ன இருந்தாலும் எனக்கு தெரிஞ்ச ஒரு அரங்கமா நகரத்து 'இது' மாதிரி சொல்லவே முடியாது..:))

@ வித்யா அக்கா - கல்லிடைல கோலம் போடறவா எல்லாருக்கும் வளையல் வாங்கி போடனும்னா 300 ஜோடி வளையல் வேணும்..:))

@ கீதா மேடம் - ஆமாம் மேடம்...

@ சாந்தி மாமி - கோவையும் பாலக்காடு பக்கமோ இல்லையோ!!..:))

@ வாசகன் சார் - :))

@ மகேஷ் - ஐயப்பன் பேரை சொன்ன உடனே வந்துட்டையே..;) ஆமாம், உங்கிட்ட சூடம் மிட்டாய்கு விட ஆரம்பிச்ச கதை இன்னும் முடியலை..:)

@ கீதா பாட்டி - உங்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ எனக்கு எப்பிடி தெரியும்..:P

Arun Ambie said...

வர்ணனை அருமை. ஸாஸ்தா ப்ரீதியை நேரில் கண்டது போலவே இருந்தது. வாழ்த்துக்கள்.

1998 என்று நினைவு... ஸாஸ்தா ப்ரதி... ஸாஸ்தா ப்ரதி என்று சொல்லிக்கொண்டிருந்த ஒரு தாத்தாவிடம் எத்தனை ப்ரதி எடுத்தேள் ஸாஸ்தாவை என்று அப்பாவியாக நான் சந்தேகம் கேட்டு வைக்க... அவருக்கு நெற்றிக்கண் இருந்தால் நான் பஸ்பம் என்ற ரேஞ்சுக்கு முறைத்துவிட்டு நேராக என் தாத்தாவிடம் போனார். "ஏ! சுந்தரம்! ஒம்பேரன் மஹா பொல்லாதாவன்" என்று பத்த வச்சுட்டார். குத்துக்கல் தெருவில் எக்ஸ்ட்ராவா எனக்கே எனக்குன்னு ஒரு எக்ஸ்க்ளூஸிவ் மண்டகப்படி என் தந்தை தலைமையில் நடந்தது!! ஆனாலும் என் சந்தேகத்தை தீக்கர விதமா ப்ரதி கணக்கை இன்னிக்கு வரை யாரும் சொல்லலை :(

அந்தக் கழுத கெடக்கட்டும். லூட்டிக்கு ஒரு அளவு சங்கை இல்லையா? பட்டப்பேர் வைங்கோ தப்பில்லை. அதுக்காக என்னய்யா இது... முடுக்கு மூச்சா மாமா!! கப்படிக்கறது.........

அப்பாவி தங்கமணி said...

//ப்ரித்தியும் இல்லை! சுவீட்டியும் இல்லை//
ஹா ஹா ஹா... அது சரி... உண்மைய சொல்லு... நீ தானே வேணும்னே ப்ரீத்தினு சொன்னது...:)))

//18 அக்ரஹாரம் சேர்ந்த//
ஓ... நம்ப சரத்குமார் சினிமால எல்லாம் 18 பட்டி ஜனங்கனு சொல்றது மாதிரியா... அங்கயும் ஆலமரம்... சொம்பு... பஞ்சாயத்து எல்லாம் உண்டோ... :))

//இருந்தாலும் மலையாளதேசம் பக்கமோ இல்லையோ//
சுத்தி வளைச்சு நீ எங்க வரேன்னு புரிஞ்சு போச்சு பிரதர்... ஒகே ஒகே...:)))

//கிழினு சொல்லுவா//
திருவிளையாடல் படத்துல பொற்கிழி எல்லாம் வருமே... அது போலவோ..?

//யானை பொம்மையை கைல கொண்டு வரர்துக்குனு ஸ்பெஷலா ஒரு மாமா//
யானை பொம்மை வெச்சுக்க ஒரு மாமா... யானை மேல ஏற ஒரு தக்குடு... எல்லாம் பிளான் பண்ணித்தான் பண்ராய்ங்க உங்க ஊர்ல... .ஒகே ஒகே...:))

//எங்க தெரு பீப்பி மாமா,சந்தனகும்பா மாமி எல்லாம் கோதால குதிச்சாக்க 3/4 வாளி பாயாசம் அவாளுக்கே காலி ஆயிடும்//
ஊர் பக்கம் போற எண்ணமிருக்கா? இல்ல கேட்டேன்...:)))

//அந்த விஷயம் எல்லாம் உருளியோட உள்பக்கம் செதுக்கி வச்சுருக்கா//
ச்சே...சூப்பர் இல்ல... நாம கடைல வாங்கற சாமான்ல கூட இப்படி ரெசிபி இருந்தா எவ்ளோ சௌகரியம்....ஹ்ம்ம்...:))

//உருளி இவ்ளோ பெரிசு இருக்கும்//
எவ்ளோளோளோளோ பெரியயயயய உருளிளிளிளிளி......(ஹி ஹி... சும்மா தேவயானி ஸ்டைல்ல சொல்லி பாத்தேன்...:)))

//தேஹபராக்ரமத்தை//
ச்சே... ஒரு நிமிஷம் தோஹானு படிச்சுட்டேன்... சரி சரி...நீ மேல சொல்லு....:)))

Lakshmi said...

தக்குடு நானும் கல்லிடை வாசிதான்னு அப்பப்போ உனக்கு சொல்லிண்டே இருக்கேன் கண்டுக்கவே மாட்டேங்கரே. ஒவ்வொரு பதிவிலும் கல்லிடைக்கு அழைச்சுண்டு போயிடரே.

மதுரையம்பதி said...

இன்னிக்குத்தான் தக்குடு இந்த பதிவைப் படிக்க முடிந்தது....மிக அழகு....:)

இராஜராஜேஸ்வரி said...

இந்த பூஜைல மட்டும் பாத்தேள்னா எல்லா மாமா/மாமிமார்களும் எதோ சுதந்திரதின அணிவகுப்பு மாதிரி அழகா வரிசை வரிசையா உக்காச்சுண்டு இருப்பா. /

அழகான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

Jagannathan said...

Lovely piece! I was reminded of my tenure in Bombay. I, a bachelor at that time, used to stay at Matunga and never missed the Paal Paayasam during Onam and Shankaranthi served by Sastha mandali in a school premises and also at the Malayaali mess 'Society'! - Jagannathan

Guwahati Venkat said...

நன்றி. ஒரு முக்கியமான செய்தி அகப்பட்டது. அந்த கிழியில் 'ஒரு ஓலை சுவடி கட்டும்' இருக்கும் என்று எழுதி இருந்தீர்கள் . அதில் என்ன எழுதி உள்ளது . ஏதாவது ஸ்தல புராணம் அல்லது நம்மூர் பற்றிய செய்தி இருந்தால் பகிர வேண்டுகிறேன் .

Guwahati Venkat said...

1970 களில் சாஸ்தா ப்ரீதி தடபுடலாக ஸ்ரீ லக்ஷ்மிச்வாமி கோவிலில் சாப்பிட்டிருக்கிறேன் . அவருக்கு எள்ளுருண்டை பிடிக்கும் என்பதால் அது உள்பட நிறைய பட்சனங்களுடன் சாப்பிட்டிருக்கிறேன் . உருளியின் உள்ளே பாயாசம் பண்ண என்ன என்ன தேவை என்பது பொறிக்கப்பட்டுள்ளது என்பதை படித்து அதிசயித்தேன் . முதலியப்பபுரம் வாய்க்கால் பக்கம் என் வீடு இருந்ததால் பாயாசத்திற்கு பால் புழியும் வைபவத்தில் எதிர் வீட்டு மொட்ட ராமையா மாமாவாத்தில் (வால் ஹரி) பங்கு கொண்டுள்ளேன் . உருளியில் பாயாசம் சாஸ்தா கோவிலில் பண்ணும் அழகையும் கண்டு அதிசயித்தேன் .

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)