Thursday, October 28, 2010

தீபாவளி சில்க்

மைசூர் சில்க் தெரியும் காட்டன் சில்க் தெரியும் அது என்ன தீபாவளி சில்க்?னு நெத்தியை சுருக்கிண்டு படிக்க வந்தவாதான் நீங்கனு எனக்குத் தெரியும்...:) சின்ன வயசுலேந்தே தக்குடுவோட தீபாவளி ட்ரெஸ்ஸை தக்குடுவோட அம்மாதான் செலக்ட் பண்ணுவா. என்னோட அம்மா என்ன எடுத்துண்டு வராளோ அதை அப்பிடியே போட்டுப்பேன். அம்மாவுக்கு அந்த ட்ரெஸ் பிடிச்சுருக்கு, அதை விட வேற என்னவேனும் அப்பிடிங்கர்து என்னோட எண்ணம்.

தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னாடி, “எல்லாராத்துலையும் அந்த குழந்தேள்தான் அவாளுக்கு வெணும்கர ட்ரெஸ்ஸை பாத்து எடுத்துக்கர்து, நம்பாத்துல மட்டும் தான் தலைகீழா இருக்கு!”னு எங்க அம்மா ஒரே பொலம்பல். சொல்லி வெச்ச மாதிரி என்னோட நண்பன் ஒருத்தன் ப்ருகஸ்பதி மாதிரி வந்து சேர்ந்தான். நல்லதா ஒரு பாண்டும் சட்டையும் எடுக்கனும் தக்குடு! நீ வந்து எனக்கு செலக்ட் பண்ணி குடேன்!னு ராகம் போட்டான். எங்க அம்மாவுக்கு கூட கொஞ்சம் கோவம் வந்துருத்து, "தனக்கு ஒரு சட்டை எடுத்துக்க தெரியாத இந்த கோமாளி ஊர்ல இருக்கரவா எல்லாருக்கும் சேவகம் பண்ணீண்டு அலையர்து"னு சொல்லிட்டு, இந்த தடவை நீ தான் உன்னோட ட்ரெஸ்ஸை எடுத்துக்கனும்!னு கண்டிப்பா சொல்லிட்டா. பனியன் பட்டாபட்டி மாதிரியான பெரிய உடை வகையெல்லாம் கல்லிடைலயே கிட்டும், அம்பைல என்னோட பனியன் சைஸ் கிடையாது, அவன்ட்ட இருக்கற சைஸ் பனியன் போடுண்டா அது பொம்ணாட்டிகளோட ஷிம்மி மாதிரி இருக்கும். அதனால சட்டை பாண்ட் மட்டும் எடுக்கர்த்துக்கு அம்பைக்கு கிளம்பி போயாச்சு.

கடைக்கு போன கொஞ்ச நேரத்துலேயே என்னோட நண்பனுக்கு செலக்ட் பண்ணிட்டேன். இது போக அங்க ட்ரெஸ் எடுக்க வந்துருந்தா ஆம்பூர் பிகர்கள் ரெண்டு பேருக்கு ‘நச்ச்’னு ஒரு சல்வார் டிசைனும் சைகைலயே செலக்ட் பண்ணி குடுத்தாச்சு (இதெல்லாம் ஒரு பப்ளிக் சர்வீஸ் மாதிரி). நாங்க ஜவுளி வாங்கிட்டு திரும்பினா ஒரு சுமாரான பிகர் கைல ஒரு மைக்கை வெச்சுண்டு அங்க வந்தவா எல்லார்டையும் எதோ கேட்டுண்டு இருந்தது.

அந்த காலகட்டத்துல தான் நெல்லை மாவட்டத்துல சூரியன் FM ரேடியோ பிரபலம் ஆக ஆரம்பிச்சி இருந்தது. நம்பள்ட போன்ல எல்லாம் கேட்டுட்டு நமக்கு பிடிச்ச ஒரு பாட்டு போடுவா. எங்க தெருல ஒரு மாமாட்ட இதை மாதிரி பேட்டி எல்லாம் எடுத்துட்டு “என்ன பாட்டு வேணும்!”னு கேட்டதுக்கு அந்த மாமா மல மல மருதமலே! பாட்டு போடுங்கோ!னு நம்ப RVS அண்ணா மாதிரி ஜொள்ளினார். அவா மும்தாஜோட மருதமலை பாட்டு போடர்த்துக்கு பதிலா மதுரை சோமு அவர்கள் பாடின “மருதமலை மாமணியே முருகையா!”வை போட்டுட்டா. அதுக்கப்பரம் அந்த மாமாவை தெருல எங்க பாத்தாலும் பசங்க எல்லாம் ஒன்னு சேர்ந்து கோரஸ்ஸா 'அழகிய சந்தனம்! அழகிய குங்குமம்! டிண்டக்கு டிக்டக்கு டிண்டக்கு டிக்டக்கு"னு மியூசிக்கோட பாட ஆரம்பிச்சிடுவோம்.

அதை மாதிரி இந்த பொண்ணும் சூரியன் FM போலருக்குனு நெனச்சுண்டு எங்க கிட்ட வந்தவுடனே பேச ஆரம்பிச்சோம், கூட ஒரு வீடியோ காமிராகாரர் வேற இருந்தார், எனக்கு அப்பவே கொஞ்சம் சந்தேகம், ரேடியோவுக்கு எதுக்கு காமிரானு கொஞ்சம் யோசிச்சேன். அப்புறம் அந்த பிகர், எத்தனை வருஷமா இந்த கடைக்கு வந்துண்டு இருக்கீங்க சார்?னு ஆரம்பிச்சா, எனக்கு முதல்லேந்தே நக்கல் நையாண்டி கொஞ்சம் உண்டு, 4 - 5 வருஷமாவே வரணும்னு ஆசைதான் ஆனா இந்த கடை ஆரம்பிச்சே ஒரு வருஷம் தான் ஆகர்தால இதுதான் முதல் தடவை!னு பதில் சொன்னேன். ஓக்கே சார்! உங்களுக்கு எந்த பாட்டு போடனும்?னு கேட்டா. இது வரைக்கும் பேசாம இருந்த என்னோட நண்பன் படக்குனு ‘ரெட்’ படத்துலேந்து கண்ணை பறிக்கும் சூரியனோ ரெட்! போடுங்கோ!னு சொன்னான்.




அவன் ஒரு அஜீத் ரசிகன், ரெட் படம் வந்து 3 மாசத்துக்கு யாரு என்ன சொன்னாலும் ஏ அது! ஏ அது!னு சொல்லிண்டு இருந்தான், மேலும் வலது கையை மடக்கி மசக்கையா இருக்கர பொம்ணாட்டிகள் மாதிரி இடுப்புலையே வச்சுண்டு இருந்தான். ஒரு தடவை வடக்குமாடத் தெரு பொண்ணு வத்சலாவை பாத்து “ஒல்லிக்குச்சி உடம்புக்காரி”னு பாடிண்டு இருக்கும் போது அந்த பொண்ணோட அம்மா “ஜம்போ ஜானகி மாமி” திடீர்னு அங்க வந்து தலையில் அடிச்சே இவனை சாய்ச்சுபுட்டா. யாராவது போட்டோ வீடியோ எடுக்கரானு தெரிஞ்சா போதும், ‘ஒரு நிமிஷம் மாமா!’னு சொல்லிட்டு வேகமா ஆத்துக்கு போய்ட்டு வந்துட்டு, ‘போட்டோ எடுக்கரா இல்லையா அதான் நல்ல செண்ட் அடிச்சுண்டு வந்தேன்!’னு சொல்லக்கூடிய புத்திசாலிப்பய(தக்குடுவோட நண்பன் பின்ன எப்பிடி இருப்பான்?னு கேக்கக்கூடாது)

எனக்கு “நீங்கள் கேட்டவை” படத்துலேந்து “அடியே! மனம் நில்லுனா நிக்காதடி!” பாட்டு வேணும்னு கேட்டேன். எதாவது ஒன்னு சொல்லுங்க!னு அந்த பிகர் சொல்லிடுத்து. அஜித் ரசிகனை ஒரு மாதிரி சாந்தப்படுத்தி என்னோட பாட்டே போடுங்கோ!னு சொல்லிட்டேன்.

அடுத்த நாள் தெருல நடந்து போனா எல்லாரும் தக்குடு கலக்கிட்டை! தக்குடு ஜமாய்ச்சுட்டை! பாட்டு செம சூப்பர்!னு கமண்ட் அடிச்சா. விசாரிச்சதுல அந்த பேட்டி வந்தது ரேடியோ இல்லை எதோ மயில்/குயில் நு ஒரு லோக்கல் TV சேனல்லையாம். அன்னிக்கினு பாத்து எல்லா மாமா மாமிகளும் அந்த சேனலை பாத்துண்டு இருந்துருக்கா. இந்த பாட்டு நிகழ்ச்சிக்கு அப்பரம் தான் எங்க ஊர் மாமிகள் சுந்தரபாண்டியபுரம் பெருமாள் கோவில்ல ஊஞ்சல் உத்சவத்துக்கு பாடின நிகழ்ச்சி வரப்போகர்துன்னு எந்த மாமியோ கிளப்பிவிட்டதுல தக்குடு மாட்டிண்டான். ஒரு மாமா ஒரு படி மேல போய் “தக்குடு நீயும் சிலுக்கு ரசிகனா?”னு புரளியை கிளப்பிட்டார். அடுத்த தடவை “நேத்து ராத்திரி யம்ம்ம்ம்மா" கேளு!னு அட்வைஸ் வேற பண்ணினார். அவர் சொன்னதுக்கு அப்புறம் தான் அந்த(அடியே! மனம் நில்லுனா நிக்காதடி!” ) பாட்டுல சிலுக்கு ஆடுவாங்கர விஷயமே தக்குடுவுக்கு தெரியும் ( பாஸ்டன் நாட்டாமை ப்ளாக் மேல சத்தியமா!).

அந்த பாட்டுல மேளம் வாசிப்பு நன்னா இருக்கும், நான் அதுக்குத்தான் கேட்டேன். ஆனா எல்லா பயலும் கலாய்ச்சுட்டான்.

இது நடந்து 3 வாரம் கழிச்சி ஒரு நாள் காத்தால பக்கத்தத்து மாமி அவசரமா வந்து “தக்குடு! சீக்கரம் வாடா கோந்தை!”னு நக்கல் சிரிப்போட கூப்பிடா. அவாத்து மாமாவை நெட்டுவாக்காளி கொட்டிர்த்து போலருக்கு அதான் மாமி சந்தோஷமா சிரிச்சுண்டே வரானு நினைச்சுண்டே அவாத்துக்கு போனா அங்க அவாத்து மாமா டிவில டான்ஸ் மாஸ்டர் ‘புலியூர்’ சரோஜாவோட பேட்டியை ஆர்வமா கேட்டுண்டு இருந்தார். என்னவோ நானும் அவரும் ஒரு செட்டு மாதிரி அவர் பக்கத்துல உக்காச்சுக்க சொன்னார். ஒரு சந்தர்பத்துல சிலுக்குக்கு நடனம் சொல்லி குடுத்த அனுபவம் பத்தி பேச ஆரம்பிச்சா அந்த மாஸ்டர். சிலுக்கு பேரை கேட்டவுடனே அந்த மாமா அல்மோஸ்ட் டிவிக்கு உள்ளையே போய்ட்டார். “சிலுக்குக்கு டான்ஸ் சொல்லிகுடுக்கர்து ரொம்ப கஷ்டம், அவளோட இடுப்பு வளையவே வளையாது!”னு ஆவலாதி சொல்லிண்டு இருந்தா. “சிலுக்கோட இடுப்பு வளைஞ்சா என்ன? வளையாட்டி என்ன? பாதி கண்ணை மூடிண்டு ஒரு பார்வை பாப்பா பாரு!! அடா! அடா! அடா! அதுக்கே ஊர்க்காடுல இருக்கர எல்லா வயலையும் அவபேருக்கு எழுதி வைக்கலாம்”னு மாமா பெரிய வர்ணனையே பண்ண ஆரம்பிச்சுட்டார். அவாத்து மாமி "கஷ்ட காலம்"னு தலைல அடிச்சுண்டு போனா. “எல்லாம் சரி இதுக்கு எதுக்கு என்னை கூட்டிண்டு வந்தேள்?”னு நான் என்னோட பால் வடியும் முகத்தோட பாவமா கேட்டேன். “என்னடா இப்படி சொல்லிட்டை! நம்ப தெருலையே எனக்கு அப்புறம் சிலுக்கு பத்தி நல்ல விஷயம் தெரிஞ்சவன் நீ தானே அதான் கூட்டிண்டு வர சொன்னேன்!”னு ஒரு குண்டை தூக்கி போட்டார்.

இதுதான் “தீபாவளி சில்க்” கதை, தக்குடு இன்னும் எதாவது சொல்லுவானா?னு நம்ப TechOps மாமி மாதிரி ஆர்வமா எதிர்பாத்துண்டு இருக்காம போய் தீபாவளிக்கு ஜவுளி எடுக்கர வேலையை பாருங்கோ எல்லாரும்!...:)

குறிப்பு - யாரெல்லாம் கமண்ட் போடாம இந்த போஸ்ட்டை படிக்கராளோ அவாளுக்கு எல்லாம் இந்த தீபாவளி சிலுக்கு கதை படிச்ச புண்ணியம் முழுசா கிடைக்காது!!...:)

42 comments:

Jeyashris Kitchen said...

nee silka vidaradha illai.diwali spl enna thakkudu?

Jeyashris Kitchen said...

dohalayum un public service continue agardha thakkudu

ஆயில்யன் said...

//“ஒல்லிக்குச்சி உடம்புக்காரி”னு பாடிண்டு இருக்கும் போது அந்த பொண்ணோட அம்மா “ஜம்போ ஜானகி மாமி” திடீர்னு அங்க வந்து தலையில் அடிச்சே இவனை சாய்ச்சுபுட்டா. /

LOL:))))))))))))))

ஓய் ஊருக்குபோறச்ச திரும்ப அதே ஜம்போ மாமி உம்மை அட்டாக் செய்யாதிருக்க ஆண்டவனைவேண்டிக்கிடறோம்

ஆயில்யன் said...

//அந்த பாட்டுல மேளம் வாசிப்பு நன்னா இருக்கும், நான் அதுக்குத்தான் கேட்டேன். ஆனா எல்லா பயலும் கலாய்ச்சுட்டான்/

அடியே ஜில்லு! மேளம் வாசிப்பு வேணும்ன்னா தில்லான மோகனாம்பாள்ல கேட்டிருக்கணும் !

பை தி பை வாங்களேன் தோஹாவுல ஜவுளி எடுத்திட்டுவர்லாம் ”மல்லுக்கள் கூட்டத்தின் மத்தியில் ஜொள்ளுடன் தக்குடு டைட்டில்ல அடுத்த போஸ்டிடலாம்!”

RVS said...

ஆர்.வி.எஸ். ஒரு பாவமும் அறியாத கோந்தே... அவனை இழுத்து ஏம்ப்பா சந்தில விடற .... அது வாயில்லாபூச்சி.. ஆத்துலேயே ஆம்படையாளுக்கு அடங்கி ஒடுங்கி வேலை பார்த்துண்டு இருக்கு. இந்த ஜொள்ளு மேட்டர் தெரிஞ்சுது வாசப்படி ஏத்தமட்டாப்பா.

Subhashini said...

உம்மாச்சி படம் தீபாவளி சில்க், ஹ்ம்ம் போற போக்கே நன்னா இல்லையையே கோந்தை தக்குடு எங்கெங்கும் சில்க்கு மயமான்னா இருக்கு
பதிவு சூப்பர்
Subha

RVS said...

அந்த தீபாவளிக்கு ஷிம்மி வாங்கி போட்டுண்டு... எங்காத்துக்கு பொம்மனாட்டி கொழந்தை இல்லா குறய தக்குடு தீத்துட்டாண்டிம்மா... அப்படின்னு அம்மா பெருமையா பக்கத்தாத்து மாமி கிட்ட சொன்னதை ஏன் போடலை. ;-)

Subhashini said...

//(அடியே! மனம் நில்லுனா நிக்காதடி!” ) பாட்டுல சிலுக்கு ஆடுவாங்கர விஷயமே தக்குடுவுக்கு தெரியும்//
Ithai naanga nambanum!!!

Subha

Techops Mami said...

Thankkudu.....
thangalla.........naan villuthu vilunthu sirichi yenaku nalla adi pattuduthu....

Pona blog la naan sona mathiri nee Siluka vida maatai pola iruku...(maama correcta taan una soli iruka..) supera irunthuthu...

Happy Deepavali.

Subhashini said...

//அம்மாவுக்கு அந்த ட்ரெஸ் பிடிச்சுருக்கு, அதை விட வேற எண்ணவேனும் அப்பிடிங்கர்து என்னோட எண்ணம்.//

ஒரு வார்த்தை சொன்னாலும் திரு வார்த்தையா சொல்லிட்டாய் இதுக்காக மன்னிசாச்சு
Subha

Meena Sankaran said...

பக்கத்தாத்து மாமாவுக்கு பக்கத்துல சேர் போட்டு சரிசமமா உக்கார்ற அளவுக்கு பெரிய ஆளாயிட்டா தக்குடு? எல்லாம் அந்த சில்கோட அனுக்ரஹம் தான் உனக்கு. God is great!

mightymaverick said...

தனக்கு சட்டை பேண்ட் எடுடான்னு சொல்லி காசு கொடுத்து விட்டா, யாரோ ஒரு பொண்ணுக்கு சல்வார் எடுத்து கொடுத்துட்டு வந்திட்டியேன்னு ஆத்துல பின்கட்டுல வச்சு அடுத்தநாள் பின்னு பின்னுன்னு முத்து மாமியும், அம்பியும் (அம்பி பொறாமையில பின்னியது...) பின்னியதை விட்டுட்டியே தம்பி...



மத்தள பாட்டுன்னா, திருவிளையாடல் படத்தில் வரும் "பாட்டும் நானே; பாவமும் நானே" பாடல் கேட்டிருக்கலாம்... இல்லாட்டி தஞ்சாவூரு மேளம் பாட்டு கேட்டிருக்கலாம் (தில்லானா மோகனாம்பாளில் நாயனம் என்பது ஆயிலுக்கு தெரியாது போல). அதை விட்டுட்டு சிலுக்கு குலுக்கிய பாடலை கேட்டுட்டு சும்மா இந்த பூனைக்கு பால் கூட குடிக்க தெரியாதுன்னு என்ன ஒரு நடிப்பு...



//‘போட்டோ எடுக்கரா இல்லையா அதான் நல்ல செண்ட் அடிச்சுண்டு வந்தேன்!'//



இது உங்க வீட்டுக்கு நாங்க வந்தப்போ தக்குடு பின்கட்டுல இருந்து பேசுன வசனமாச்சே...



உனக்கு பட்டாபட்டியே பேண்ட் மாதிரி தானே (அவங்க ஊரு பட்டாப்பட்டி எல்லாம் தக்குடுவோட கணுக்கால் உயரம் வரும்.)... அப்புறம் ஏன் உனக்கு உங்க ஊரிலேயே கிடைக்காது??? பனியனும், குழந்தைகள் போடுற டி-சர்ட் ரேஞ்சுல போட்டா அம்பைலேயோ நெல்லை சீமைலேயோ எப்படி கிடைக்கும்???

Shobha said...

//அம்மாவுக்கு அந்த ட்ரெஸ் பிடிச்சுருக்கு, அதை விட வேற என்னவேனும் அப்பிடிங்கர்து என்னோட எண்ணம்.//
தக்குடுவின் மாத்ரு பக்திக்கு ஒரு ' ஓ' போட்டுக்கறேன் . :)

//ஆம்பூர் பிகர்கள் ரெண்டு பேருக்கு ‘நச்ச்’னு ஒரு சல்வார் டிசைனும் சைகைலயே செலக்ட் பண்ணி குடுத்தாச்சு (இதெல்லாம் ஒரு பப்ளிக் சர்வீஸ் மாதிரி)//
அது!!
//டி.எம்.ஸ் பாடின “மருதமலை மாமணியே முருகையா!”வை போட்டுட்டா. //
இதைப் பாடினது மதுரை சோமு
//அந்த பாட்டுல மேளம் வாசிப்பு நன்னா இருக்கும், நான் அதுக்குத்தான் கேட்டேன்.//
பின்ன தக்குடு பாவம் , குழந்தையாச்சே !

Shobha said...

//“என்னடா இப்படி சொல்லிட்டை! நம்ப தெருலையே எனக்கு அப்புறம் சிலுக்கு பத்தி நல்ல விஷயம் தெரிஞ்சவன் நீ தானே அதான் கூட்டிண்டு வர சொன்னேன்!”னு ஒரு குண்டை தூக்கி போட்டார்.//

அவுக புரிஞ்சுக்கிட்டாக இல்ல :))
ஆனாலும் தக்குடு உன் வயசுக்கு நீ ஒரு மும்தாஜ் பாட்டோ இல்லை ரகசியா பாட்டோ கேட்டிருக்கலாம் , இப்பிடி மாமாவுக்கெல்லாம் கம்பெனி குடுக்கறா மாதிரி ஆயிடுத்து பாத்தியா!!!

Sowmya said...

நான் கூட, தீபாவளி பட்டு புடவை பத்தி தான் இருக்கும்னு நினைச்சு வந்தா....

அடியே ...பாட்டுல சில்க் நடிச்சிருக்கானு கூட தெரியாதுன்னு ...நடிச்ச நடிப்பு இருக்கே..சில்க் தோத்துட்டா... :D

சில்க் ஸ்மிதா இப்போ இருந்து இதெல்லாம் படிக்காம போய்ட்டாளே...:(

Superb post..Enjoyed it to the core...

Sara vedi... !!!!

Chitra said...

யாராவது போட்டோ வீடியோ எடுக்கரானு தெரிஞ்சா போதும், ‘ஒரு நிமிஷம் மாமா!’னு சொல்லிட்டு வேகமா ஆத்துக்கு போய்ட்டு வந்துட்டு, ‘போட்டோ எடுக்கரா இல்லையா அதான் நல்ல செண்ட் அடிச்சுண்டு வந்தேன்!’னு சொல்லக்கூடிய புத்திசாலிப்பய(தக்குடுவோட நண்பன் பின்ன எப்பிடி இருப்பான்?னு கேக்கக்கூடாது)


.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,..... அமர்க்களமான நட்பு!

sriram said...

//பாஸ்டன் நாட்டாமை ப்ளாக் மேல சத்தியமா//
தக்குடு நீ ஜொள்ளு விட்ட ஒவ்வொரு விசயத்துக்கும் என்னை ஏன் வம்புக்கு இழுக்கறே.. போதா கொறைக்கு இந்த வாட்டி RVS ஐயும் சேத்து வம்பு பண்றே.. :)

//யாரெல்லாம் கமண்ட் போடாம இந்த போஸ்ட்டை படிக்கராளோ அவாளுக்கு எல்லாம் இந்த தீபாவளி சிலுக்கு கதை படிச்ச புண்ணியம் முழுசா கிடைக்காது//
கமெண்ட் வாங்க பயபுள்ள என்னெவெல்லாம் பண்ணுது??? :)

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Swathi said...

Nice post, what your Deepavali plan. Looks like another super post in cooking there. I enjoyed reading the post and got good laugh.

vgr said...

TKP, Happy Deepavali!!!

post...mudiala...sssssssppaaaaaaaaa...

RVS said...

அப்பாடி நாட்லே ஞாயம் செத்துடுத்துன்னு நினச்சேன்... ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியே ஆபத்பாந்தவனா ஸ்ரீராம் ரூபத்ல வந்து காப்பத்தறார். தக்குடு ரொம்ப விஷமக் கொடுக்கு... அண்ணா அண்ணான்னு சொல்லியே வம்புல மாட்றது.. கோந்தே ஏக்கத்தில சிலுக்கு புராணமே பாடறதே... ஆராவது கூட்டிண்டு போய் ஒரு சிலுக்கு படம் காட்டிருக்கப் ப்டாதோ.. ;-) ;-)

subu said...

தீபாவளிக்கு sulukku எடுத்தாச்சு!

Kavinaya said...

வர வர சில்க் இல்லாத பதிவே போடறதில்ல இந்த தக்குடு. என்ன ஆச்சோ. உம்மாச்சி.... காப்பாத்து...! :)

பத்மநாபன் said...

தக்குடு யேதார்த்தமா (???? ) அந்த பாட்டு கேட்கபோய் .. மாமாக்களின் சிலுக்கு பைத்தியம் மாமிகளை சுளுக்கு எடுக்க வச்சுருச்சு...

vidhas said...

First time here, enjoyed reading. Arumaya eluthareenaga :-)

தக்குடு said...

@ ஜெய்ஷ்ரீ அக்கா - :)) பக்கத்தாதுல என்ன ஸ்பெஷலோ அதுதான் தக்குடுக்கும் ஸ்பெஷல்..:)

தோஹால எல்லாம் பப்ளிக் சர்வீஸ் பண்ணினா அப்புறம் "டர்ணானா டர்ணா!"னு ஆயிடும்..:)

@Oilயன் - யோவ், ஜவுளி எடுக்க என்னை கூடிண்டு போய்ட்டு நீர் ஜொள்ளு விட்டுட்டு பழியை தக்குடு மேல போடர்த்துக்குதானே இந்த சதிவலை!!..:)

@ RVS anna - அண்ணா, ஆமாம் நீங்க மொளகாப்பழம் போல சமத்துன்னு உங்காத்துல சொல்லிண்டா..:) என்ன நடிப்புடா சாமிமி!!..:P

@ சுபா மேடம் - இதெல்லாம் சும்மா குழந்தேளை விளையாட்டு காட்டர்த்துக்கு..:)

@ அண்ணா - :)) ஆமாம் எங்காத்துல நானும் எங்க அண்ணாவும் தான்..:(

@ சுபா மேடம் - நிச்சயமா நம்பித்தான் ஆகனும், ஏன்னா அது உங்க தலைவிதி!..:))

@ TechOps மாமி - நான் என்னவோ சிலுக்கோட கையை பிடிச்சுண்டு விடாத மாதிரினா பேசிண்டு இருக்கேள்..:P அடி எல்லாம் பட்டுக்கர மாதிரியா சிரிப்பா??..:( //supera irunthuthu...Happy Deepavali.//ரொம்ப சந்தோஷம் பா!..:)

@ சுபா மேடம் - இதை சொல்லலாமா வேண்டாமா?னு யோசிச்சேளோ??..:)

@ மீனா அக்கா - ஆமாம் கரெக்ட்டு!!..:)

@ வி கடவுள் - தில்லானா மோஹனாம்பாள் படத்துல நாதஸ்வரம் மட்டும் கிடையாது. "ஆட்டம் பலமா இருக்கே?"னு சொன்ன டி ஸ் பாலையாவோட மேளமும் உண்டு..:)

@ ஷோபா அக்கா - நீங்க ஒருத்தர்தான் தக்குடுவை நன்னா புரிஞ்சு வெச்சுருக்கேள் அக்கா!

நீங்க சொன்ன மாதிரியே மதுரை சோமுநு மாத்தியாச்சு யெஜமான்!..:)

//தக்குடு உன் வயசுக்கு நீ ஒரு மும்தாஜ் பாட்டோ இல்லை ரகசியா பாட்டோ கேட்டிருக்கலாம் // என்ன இருந்தாலும்........(எதாவது ஒளறி மாட்டிக்கத் தெரிஞ்சேன்)..:)

@ செளம்யா அக்கா - பாங்கோ! பாங்கோ! ரொம்ப நாளைக்கு அப்பரம் வந்துருக்கும் நம்ப செளம்யா அக்காவுக்கு ஒரு ஜோடா கொண்டு வாங்கோ!! நன்னிஹை!!..:)

@ சித்ரா அக்கா - நம்ப செட்டு மாதிரியே!!..:P

Anonymous said...

இன்னும் விட்டா , தக்குடு ஒரு வாத்தியார ஏற்பாடு பண்ணி சிலுக்குக்கு தெவசம் பண்ற அளவுக்கு சிலுக்கு புராணம் பாடி இருக்கார்.என்னமோ தக்குடு ரொம்ப ஏங்கி இருக்கார். சீக்கிரமா ஒரு கால்கட்டு போடச் சொல்லுங்கோ.!!!!!!!

Jeyashris Kitchen said...

@paravasthu, whistle, whistle.. super

Prasanna said...

குறும்புக்கார தக்குடு :)

Anonymous said...

Buruda vidarduku alave illaiya...pa....

Matangi Mawley said...

"ஏ அது! ஏ அது!னு சொல்லிண்டு இருந்தான், மேலும் வலது கையை மடக்கி மசக்கையா இருக்கர பொம்ணாட்டிகள் மாதிரி இடுப்புலையே வச்சுண்டு இருந்தான்"...

intha line a padichchuttu- believe it or not- 10 nimisham vidaatha sirichchen!! :D :D nenachchu paakka avvalo comedy! naanum 'Red' padam paaththaen.. but antha thala pose-key oru "puthu dimension" koduththuttael thakkudu inga!! :D semma comedy!

Chance-e-illa! silk unga life-la ivalo maatrangala erpaduththirukkaa ngarathu "rombavey" suuuuuberaaana vishayam!! :P :P

Mahi said...

கொசுவர்த்தி நன்னாவெ சுத்திருக்கேள்! :)
இந்த தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல்??

Krishnaveni said...

Deepavalikku vera matter kedakkalaya? naan etho dress vilambaramnu nenachchean

Priya Srinivasan - I Camp in My Kitchen said...

Title parthutu etho thakudu amma-vuku aathuariko (kalyanam ayiduthonada ambi!!!!) eduthu kudutha pudavai pathi thannu ninaichuten!!!! :)
neenga panra silk bhajanaya ketu!!! antha silk aathma ungaleye suthi suthi varaporathu!!! paarthu thoongum pothu serupu vachindu paduthukongo!!!!

Raks said...

Present sir :):)!!

தக்குடு said...

@ பாஸ்டன் நாட்டாமை - என்ன நாட்டாமை இப்படி சொல்லிட்டீங்க? நீங்கதானே இதுக்கு எல்லாம் குரு..:P இல்லையா பின்ன, 10 டீக்கு காசு குடுத்துட்டு ஒரு டீ ஓசி குடுக்கலாம், இங்க நிலைமை தலை கீழானா இருக்கு, அதான் இந்த டெக்னிக்!..:)

@ ஸ்வாதி அக்கா - ஸ்பெஷலா எல்லாம் ஒன்னும் இல்லை. தீபாவளி அன்னிக்கி போஸ்ட் போட்டா யாரு படிக்க வருவா? அதனால போஸ்ட் சந்தேகம் தான்..:)

@ VGR - உங்களுக்கும் ஹேப்பி தீபாவளி! :))

@ RVS அண்ணா - பாம்பின் கால் பாம்பறியும், அதே மாதிரி RVS-ஐ நாட்டாமை அறிவார்...:)

@ சுப்பு சார் - :))

@ கவினயா அக்கா - :)) காப்பாத்துவார்!

@ பத்பனாபன் அண்ணா - அதே! அதே!..:)

@ Vibaas madam - ரொம்ப சந்தோஷம்பா!!...:)

@ பரவஸ்து அண்ணா - ஏன் இந்த வில்லத்தனம்??..:)

@ ஜெய்ஷ்ரீ அக்கா - என்னதான் சிங்கப்பூர் போனாலும் மதுரை குறும்பு எங்க போகும்!!..:P

@ பிரசன்னா - :)) ஒஹோ!!

@ அனானி - ஒரு விளம்பரம்ம்ம்ம்ம்...:)

@ மாதங்கி - நாலு பேர் சந்தோஷமா மனசு விட்டு சிரிச்சா அதுவே போதும் தக்குடுவுக்கு, வேற என்ன வேனும்??..:) எல்லாம் சரி சிலுக்குங்கர்து யாரு??..:P

@ மஹி - இனிமேதான் யோசிக்கனும்...:)

@ வேணி மேடம் - அதுக்கு தானே டைட்டில் அப்படி வெச்சது!!..:)

@ ப்ரியா மேடம் - எல்லா மாமிகளும் இப்படிதான் நினைப்பாங்கனு தக்குடு அறிவான்..:) கல்யாணம் எல்லாம் ஆயிருந்தா இவ்ளோ சந்தோஷமா எழுத முடியுமா??..:P

@ ராஜி மேடம் - ஹ ஹ ஹ! எனக்கு அர்த்தம் புரிஞ்சதுப்பா!!..:)

Anonymous said...

Dear Thakkudu, ungalai paatha poraamaiyaa irukku. unga imageai yengaathula damage pannanumnu nenachundu nadu halla vechu intha postai(siluku puranam) satham poottu read panninen. Kurumbukkaara kolanthai!nu sirichundey yenga amma solraaley thavira ungalai thittavey maatengaraa..:( yengaathula MGR maathiri aayiteel..:)

Ranjani Iyer

Harini Nagarajan said...

Yepdi ipdi azhagaa neenga panninatha ellaam antha mama panninatha solli kathayaye maathittel?? :P Yennavo pongo! :P

தக்குடு said...

@ Ranjani - ungalukku yethukku intha nambiyar vellai yellam?..;PP

@ Harini - Naan onnum siluku fan kedaiyaathu, but yellarumaa senthu aakittaa!!..:)

Anonymous said...

//நம்பாத்துல மட்டும் தான் தலைகீழா இருக்கு!”னு எங்க அம்மா ஒரே பொலம்பல். //

Irukkathaa pinna.

//அம்பைல என்னோட பனியன் சைஸ் கிடையாது//
Arunaold body aache baniyan size kedikkathu thakkadu.

//கடைக்கு போன கொஞ்ச நேரத்துலேயே என்னோட நண்பனுக்கு செலக்ட் பண்ணிட்டேன்.//
:0!
// இது போக அங்க ட்ரெஸ் எடுக்க வந்துருந்தா ஆம்பூர் பிகர்கள் ரெண்டு பேருக்கு ‘நச்ச்’னு ஒரு சல்வார் டிசைனும் சைகைலயே செலக்ட் பண்ணி குடுத்தாச்சு (இதெல்லாம் ஒரு பப்ளிக் சர்வீஸ் மாதிரி)
//
idhu veraya? - Romba nalla Service.

//நம்பள்ட போன்ல எல்லாம் கேட்டுட்டு நமக்கு பிடிச்ச ஒரு பாட்டு போடுவா.// appadiyaa...

//ரெட் படம் வந்து 3 மாசத்துக்கு யாரு என்ன சொன்னாலும் ஏ அது! ஏ அது!னு சொல்லிண்டு இருந்தான்// Avan avan kasttam avan avanukku. imm irukkattum.

//“ஜம்போ ஜானகி மாமி” திடீர்னு அங்க வந்து தலையில் அடிச்சே இவனை சாய்ச்சுபுட்டா//

Aatthadi veettukku poonathum muthalla Thlamuluganumda saami.

//ஓய் ஊருக்குபோறச்ச திரும்ப அதே ஜம்போ மாமி உம்மை அட்டாக் செய்யாதிருக்க ஆண்டவனைவேண்டிக்கிடறோம் //

aawwwwww! idhu vera irukkaa..

// எதாவது ஒன்னு சொல்லுங்க!னு அந்த பிகர் சொல்லிடுத்து. அஜித் ரசிகனை ஒரு மாதிரி சாந்தப்படுத்தி என்னோட பாட்டே போடுங்கோ!னு சொல்லிட்டேன்.
அடுத்த நாள் தெருல நடந்து போனா எல்லாரும் தக்குடு கலக்கிட்டை! தக்குடு ஜமாய்ச்சுட்டை! பாட்டு செம சூப்பர்!னு கமண்ட் அடிச்சா//

Aayago, Vada pooche.

//“தக்குடு நீயும் சிலுக்கு ரசிகனா?”னு புரளியை கிளப்பிட்டார்// Avar paavam thakkadu pathi mulusaa theriyaatha pochi.

“நேத்து ராத்திரி யம்ம்ம்ம்மா" கேளு!னு அட்வைஸ் வேற பண்ணினார். Ada appavi maamaa...!

//“என்னடா இப்படி சொல்லிட்டை! நம்ப தெருலையே எனக்கு அப்புறம் சிலுக்கு பத்தி நல்ல விஷயம் தெரிஞ்சவன் நீ தானே அதான் கூட்டிண்டு வர சொன்னேன்!”னு ஒரு குண்டை தூக்கி போட்டார். //

Poodu... :)

//சில்க் ஸ்மிதா இப்போ இருந்து இதெல்லாம் படிக்காம போய்ட்டாளே...:(
// Imm... Ava paavam nimmathiyaa thokkumaattindu pooitta. Padikkaravaa thaan paavam.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

// இதெல்லாம் ஒரு பப்ளிக் சர்வீஸ் மாதிரி//
வாழ்க உன் பொதுச்சேவை... கஷ்டம்டா சாமி...

//எல்லாரும் தக்குடு கலக்கிட்டை! தக்குடு ஜமாய்ச்சுட்டை! பாட்டு செம சூப்பர்!னு கமண்ட் அடிச்சா//
என் விருப்பம்ல கேட்டதுகேவா... நீயே பாடி இருந்தா என்ன ஆகும்... கல்லிடை மாநகரம் முழுக்க போஸ்டர் தானோ...

இப்படி ஒரு தீவாளி சில்க் கதைய கேட்டதே இல்ல போ... ஹா ஹா

தக்குடு said...

@ Anony - Boss! yennoda postai vida unga comment perisaa irukku!..:P

@ Idly mami - uurlenthu vanthaudaney pottiyai kooda yeduthu vekkama neeraa yennoda blogukku comment pooda vantha idly mamiku oru oooooo! podungoo yellarum!!..:)))

Look4Reality said...

கலக்குறீங்க தக்குடு...

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)