Saturday, March 20, 2010
நிம்'ஸ் ஐலண்டு ( Nim's Island)
இரவு எட்டுமணி தருவாய், ஒவ்வொரு சானலாக மாத்திக் கிட்டே இருந்தேன். எல்லாம் விளங்காத நிகழ்ச்சியாகவே இருந்தது. கடைசியாக MBC 3 கார்ட்டூன் சானலுக்கு நான் மாத்தவும், அங்க 'டென்...டடடேன்'னு பேர் போட்டு ஒரு படம் ஆரம்பிக்கவும் சரியா இருந்தது. அந்த படத்தை பத்தி கொஞ்சம் இங்க சொல்லலாம்னு இருக்கேன்..
படத்தோட பேருக்கு ஏத்தமாதிரி ஒரு கடற்கரைல ஒரு சின்னப்பொண்ணு கடல்வாழ் பிராணியான சீல் கூட விளையாடிட்டு இருக்கு. அந்த பொண்ணொட அப்பா ஒரு விஞ்ஞானி. அந்த குட்டித்தீவுக்கு பயணம் பண்ணி வரும்போதே கப்பல் திமிங்கலத்தால தாக்கப்பட்டு அவரோட தங்கமணி காலமாயிடுவாங்க. அந்தத் தீவுல ஒரு பழைய குட்டி எரிமலையும் இருக்கும். ஆனா அதுலேந்து குளம்பு எல்லாம் வராது. இந்த அப்பா பொண்ணுக்கு அந்த பக்கமா நாலு மாசத்துக்கு ஒரு தடவை வரும் ஒரு நண்பரோட கப்பல் மூலமா தேவையான சாமான்கள் மற்றும் புஸ்தகம் எல்லாம் வரும். அந்த புஸ்தகங்களோட சேர்ந்து அந்த குட்டிப்பொண்ணுக்கு 'அலேக்ஸ் ரோவர்'னு ஒரு புஸ்தகமும் வரும். அந்த கதாபாத்திரம் எப்படின்னா, போராட்டம் நிறைந்த பயணங்கள் செய்யும் ஒரு ஆளு தன்னோட அனுபவங்களை விவரிக்கர்து மாதிரியான ஒரு புஸ்தகம்.
அந்த பொண்ணுக்கு அந்த கதாபாத்திரம்தான் ஆதர்ஸ நாயகன். ஹாரிபார்ட்டர் புக்கு மாதிரி அந்த ஆளோட எல்லா புக்கையும் அந்தப்பொண்ணு விடாம படிச்சுண்டு வருது. இந்த சமயத்துலதான் இயக்குனர் ஒரே சமயத்துல இரண்டு விதமான கதைகளை கொண்டுவந்து அதை ஒரு இடத்தில் சேர்க்கிறார். திடீர்னு ஒரு நாள் அந்த விஞ்ஞானிக்கு ஒரு ஆசை வருது. தனது ஒரு முக்கியமான ஒரு ஆராய்ச்சிக்காக கடலுக்கு நடுவில் அவருக்கு செல்ல வேண்டும். சன்டீவியில் தீபாவளிக்கோ/பொங்களுக்கோ நிச்சியமா ஒரு நிகழ்ச்சி இருக்கும் ' நமிதாவுடன் ஒரு நாள்'. கடைசியில் போய் பார்த்தா, அப்பா சொல்லிச்சு! அம்மா வந்திச்சு!னு சங்கத்தமிழை சங்கை நெறித்துக் கொண்டிருப்பாள் நமிதா. அது மாதிரி இந்த கதையிலும் அந்த விஞ்ஞானி அப்பா, தன் மகளிடம் போய், ‘கடலுக்கு நடுவில் ஒரு நாள்’ அப்பா தங்கிட்டு வரப்போறேன். நீ சமத்தா இங்க விளையாடிண்டு இருக்கனும் சரியா!னு சொல்லரார். அந்தப் பொண்ணும் சரி டாடி! போய்ட்டு பத்ரமா வந்துருங்கோ!னு சொல்லி டாட்டா எல்லாம் காட்டி அனுப்பி வைக்கும். அதே சமயத்தில் அந்த பொண்ணுக்கு புடிச்ச அந்த கதாசிரியர் அலேக்ஸ் ரோவர் எரிமலைகள் நிறைந்த ஒரு பகுதில பயணம் பண்ணுவது மாதிரி எழுதனும்னு ரூம் போட்டு யோசிச்சுக்கிட்டு இருப்பாங்க. இந்த இடத்துல அந்த கதாசிரியரை பத்தி கொஞ்சம் நமக்கு தெரியனும்.
அந்த கதாசிரியப் பெண்மணி ஒரு காகிதப்புலி, அதாவது அவங்க வீட்டை விட்டு கூட வெளியே வந்தது கிடையாது. அவ்ளோ பயம்! தனியா வீட்டுக்குள்ளையே உக்காச்சுண்டு உலகம் பூரா பயணம் பண்ணின மாதிரி கதை அளந்து கொண்டிருப்பார்கள். பத்து இட்லியை ஒரே சிட்டிங்கில் அமுக்கமட்டுமே தெரிந்திருந்தும், என்னமோ பல வருஷங்களாக மாவாட்டின மாதிரி, என்னிடம் முழுவிவரத்தையும் கேட்டுக்கொண்டு,கிரைன்டர் படம் எல்லாம் போட்டு “மாவாட்டுவது எப்படி!”னு தனியாக ஒரு பதிவு போட்ட ஒன்னாம் நம்பர் தில்லாலங்கடியான எங்க அண்ணன் மாதிரினு கூட சொல்லலாம்.
நம்ப ஊர் படம் மாதிரி அவரோட கற்பனை கதாபாத்திரமான 'அலேக்ஸ் ரோவர்' மட்டும் அடிக்கடி தனியாக இருக்கும் அந்த கதாசிரியப் பெண்மணி யிடம் பேசுவது போல காட்சிகளை இயக்குனர் அமைத்திருப்பார். யாரோ ஒரு நண்பர் மூலமாக நம்ப விஞ்ஞானிக்கு எரிமலை பத்தி நல்லா தெரியும்னு கேள்விப்பட்டு, அந்த கதாசிரியர் ஒரு மெயில் அனுப்ப, மெயில் பெயரில் இருந்த 'அலேக்ஸ் ரோவர்'ரை பார்த்து ஆர்வக்கோளாரில் அந்த மெயிலுக்கு அந்த குட்டிப் பொண்ணு அப்பா ஊர்ல இல்லை, ஆனா நான் போய் அந்த எரிமலையை பாத்துட்டு வந்து பதில் அனுப்பரேன்!னு பதில் சொல்லிட்டு, போய் பாத்துட்டும் வந்துவிடும். இதற்கு நடுவில் அந்த தீவுக்கு ஒரு கப்பல் நிறைய சுற்றுலாபயணிகள் வந்து இறங்கி விடுவார்கள். குட்டிப்பொண்ணு அவங்களை தீவுலேந்து விரட்டியடிக்க தன் நண்பர்களான சீல்,ஓணான் போன்ற மிருகங்களோடு களம் இறங்கி ஒரு ராமனாராயணன் எபக்டு கொடுக்கிறது.
கடலுக்குள் போன விஞ்ஞானி புயலில் சிக்கி நடுக்கடலில் உதவிக்காக திண்டாடிக்கொண்டு இருப்பார். கதாசிரியப் பெண்மணி மெயிலில் உங்க வயசு என்ன?னு குட்டிப்பொண்ணு கிட்ட கேட்க, எனக்கு பத்து வயசுதான் ஆகுது, கடலுக்குள் போன அப்பாவையும் ஆளைகாணும், உங்களால முடிஞ்சா ஒரு எட்டு வந்துபாத்துட்டு போகமுடியுமா?னு மெயில் அனுப்புது. பலத்த மனப்போராட்டத்திற்குப் பிறகு அந்த தீவுக்கு போய்த்தான் பார்ப்போமே!னு தன்னுடைய மனசாட்சியான 'அலெக்ஸ் ரோவர்' சகிதமா கிளம்புகிறார். போகும் இடத்தில் கிடைக்குமோ? கிடைக்காதோ?னு சந்தேகத்தில் நார்த்தங்காய் ஊறுகாய், பருப்புப்பொடி, புளிக்காய்ச்சல், குழம்புப்பொடி எல்லாம் ஞாபகமாக எடுத்துக்கொண்டு போய், விமான நிலையத்தில் சுங்க இலாக்கா தடியன் எல்லாத்தையும் புடிங்கி குப்பைத்தொட்டியில் போடும் இடத்தில் அவர் மீது நமக்கு பரிதாபம்தான் வருகிறது. கஷ்டப்பட்டு அந்தம்மா விட்டை விட்டு வெளில முதல் தடவையா வருவதால், அறியாதவன் ஆம்பளை புள்ளை பெத்த கதையா அவளுக்கு வாந்தி, வாந்தியா வருது.
இந்தப்பக்கம் நடுக்கடலில் தவிக்கும் விஞ்ஞானிக்கு நிம்ஸ்சோட நண்பனான ஒரு கொக்கு உதவி எல்லாம் பண்ணுது. எல்லாம் பண்ணி முடிச்சு கிளம்பும் சமயத்தில் மறுபடியும் ஒரு புயல் அடிச்சு, அவர் முடிடிடிடிடியலை!னு ஆயிடுவார். நம்ப கதாசிரியர் அம்மணியும் ஒரு வழியா பல போராட்டத்துக்கு பிறகு இந்த தீவுக்கு வந்து குட்டிப்பொண்ணை கட்டிகொண்டு இரவு தூங்கி மறுனாள் எழும்போது நம்ப விஞ்ஞானியும் ஒருமாதிரி சமாளிச்சு வந்துவிடுகிறார். கடற்கரையில் தன் மகளோடு நிற்கும் அந்த கதாசிரியப்பெண்மணியை பார்த்தவுடன், நாம் எதிர்பார்பது போலவே, அவருடைய கண்ணுக்கும், அம்மணியோட கண்ணுக்கும் ஜிங்சக்!ஜிங்சக்! ஆகிவிடுகிறது.
வித்தியாசமான கதை இல்லைனு நாம சொன்னாலும், இயக்குனர் அதை படமாக்கியுள்ள விதம் நம்மை படத்தோட ஒன்ற வைக்குது. கடலுக்கு நடுவில் வரும் புயல் காட்சிகள் துரைகள் படத்துக்கே உரிய முறையில் மிரட்டும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது. மேலும் சில இடங்கள்ல அந்த குட்டிப்பொண்ணு தன் கண்களாலையே தனிமை, பிரிவு, எதிர்பார்ப்பு, ஏக்கம், கோவம்னு எல்லா உணர்ச்சிகளையும் காமிச்சு நம்பளை பிரமிப்பில் ஆழ்த்துது. ஒத்த மரத்துக் குரங்கா உக்காசுண்டு இருக்கும் எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது. உங்களுக்கு ஒரு வேளை புடிக்கவில்லை என்றால் , டாய் தக்குடு!னு கத்த/திட்டவேண்டாம்.
குறிப்பு – 2008-ல் வெளிவந்த படத்துக்கு இப்பொ ஏன்டா விமர்சனம் எழுதரை?னு கோவிக்கவேண்டாம், சமீபத்தில் வெளிவந்த படம்தான் எழுத வேண்டும் என்றால், 'ஜக ஜகா சாமியாரின் சல்லாப லீலைகள்' படம் பத்திதான் நான் எழுதனும்....:)
Labels:
திரை விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
35 comments:
மிகப்பெருந்தன்மையுடன் இந்த வடை பொற்கொடிக்கு விட்டுக்கொடுக்கப்படுகிறது :P
hahaha!
that "hahaha" was for ananya's. '08 la vandha padathuku review.. haiyo haiyo.. mandabathula ezhudhi thara yaarum illaiyo? :P
ஏனப்பா வயசான படத்துக்கெல்லாம் ....
//ஒரு பழைய குட்டி எரிமலையும் இருக்கும். ஆனா அதுலேந்து குளம்பு எல்லாம் வராது///
ஏன் அங்க குதிரை இல்லியா?
அந்த குழம்பா இருந்தா ஏன் எரியிற மலையில எண்ணெயை தாளிச்சு குழம்பு வைக்கமாட்டாங்களா? :)))))
//கிரைன்டர் படம் எல்லாம் போட்டு “மாவாட்டுவது எப்படி!”னு தனியாக ஒரு பதிவு போட்ட ஒன்னாம் நம்பர் தில்லாலங்கடியான எங்க அண்ணன் மாதிரினு கூட சொல்லலாம்./
நோ! நோ வன்முறை பிரயோகம் கூடாது!
அம்பி பேரவையிலேர்ந்து அப்புறம் போர் ஆட்டம் நடத்துவோம்!
//சமீபத்தில் வெளிவந்த படம்தான் எழுத வேண்டும் என்றால், 'ஜக ஜகா சாமியாரின் சல்லாப லீலைகள்' படம் பத்திதான் நான் எழுதனும்....:) //
நாங்கவெயிட்டீங்!
//கிரைன்டர் படம் எல்லாம் போட்டு “மாவாட்டுவது எப்படி!”னு தனியாக ஒரு பதிவு போட்ட ஒன்னாம் நம்பர் தில்லாலங்கடியான //
எனக்கு இப்போ ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!
உங்க ரெண்டு பேர்-ல யாரு ஸ்டாலின்? யாரு அழகிரி? :))
//ஒத்த மரத்துக் குரங்கா உக்காசுண்டு இருக்கும் எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது//
வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சும்!
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்! :)
//அந்த குட்டிப்பொண்ணு தன் கண்களாலையே தனிமை, பிரிவு, எதிர்பார்ப்பு, ஏக்கம், கோவம்னு எல்லா உணர்ச்சிகளையும் காமிச்சு நம்பளை பிரமிப்பில் ஆழ்த்துது//
I strongly object to the non-mentioning of the movie's heroine, Breslin. Ippo avanguLukku vayasu 25! :)
She was one of the youngest actress to be nominated for the Academy Awards at that time!
Actually she was the one who acted in Night Shyamalan's movie, Signs too! - at the age of 5! Very talented and kinda homely smile too!
Btw, நிம் பல்லிகளை வைத்து, ஏதோ எரிமலை எஃபெக்ட் எல்லாம் கொடுத்து டூரிஸ்ட்டுளைத் துரத்துவாளே! அதையெல்லாம் ஏன் சொல்லலை? என்ன மாதிரி சீன் அது? இதுக்குத் தான் இந்த மாதிரிப் பதிவுக்கெல்லாம் மாவாட்டும் பதிவர் வேணம்ங்கிறது! :)
எங்கே போச்சு நான் போட்ட லாங் கமெண்டு? திருப்பியும் எல்லாம் டைப்படிக்க முடியாது போப்பா..
தக்குடு பாண்டி, படக்கதை சூப்பர். நீங்க சொன்ன விதம் அப்படி. எப்படிக் கஷ்டப்பட்டாலும் சரியா அந்தப் பொண்ணுக்கு அம்மா அப்பா கிடைத்தாச்சு.
அதுசரி நடுல அம்பியை வேற வம்புக்கு இழுக்கணுமா:)
ஆமாம் ,இப்படி அழகா எழுதறீங்களேஇதை முன்னாலியே ஆரம்பிச்சிரூக்கலாமே
படம் கிடைத்தால் பார்க்கிறேன்..
namakum padatukum rombaaaaaa distance.. so no comments abt post.. but kittatatta midnitela pathiva potta takkuduku ennoda kandanangal
// kittatatta midnitela pathiva potta takkuduku ennoda kandanangal//
LK க்கு வடை கிடைக்காத வயத்தெரிச்சல் போல இருக்கு!
ஒத்த மரத்துக் குரங்கா உக்காசுண்டு இருக்கும் எனக்கு //
அம்பி! கவனித்து ஆவன செய்யவும்!
@ அனன்யா - உங்களோட பெருந்தன்மையை நினைச்சா புல்லரிக்குது...:)
@ கேடி & மலை வாத்தியார் - ஒருத்தன் படிக்காத வரைக்கும் அந்த பேப்பர் அவனுக்கு அது அன்றய பேப்பர்தான்....:) எனக்கு அது புதிய படம் அவ்ளோதான்...:)
@ ஆயில்யன் - வாங்க சார், ஒரு மாதிரி இந்த வாரம் கொஞ்சம் ப்ரீ ஆயிட்டீங்க போலருக்கு...:)
@ ஆயில்யன் - ஆசைதான் உங்களுக்கு...:)
@ KRS anna - அதை பொதுக்குழு கூடி முடிவு செய்யும்...:)
@ KRS anna - எல்லா கதையையும் நானே சொல்லியிருந்தா, நீங்க வந்துரிப்பீங்களா?? அதான் சொல்லலை...:)
@ வல்லியம்மா - வரவேண்டும் வல்லியம்மா, எல்லாம் உங்க கிட்ட கத்துக்கிட்டதுதான். என்ன இருந்தாலும் உங்க மாதிரி சொல்ல முடியாது. அடிக்கடி இந்த சின்னக்குழந்தையோட கடை பக்கம் வந்து போகனும்...:)
@ LK - உங்களுக்கு அனன்யா பதில் சொல்லி இருக்காங்க பாருங்க...:)
@ திவா அண்ணா- உண்மைதான், எங்க அண்ணன் கூட நான் இருந்த வரைக்கும் தனிமைனா என்னனே எனக்கு தெரியாது, என்னதான் அவன் என்னை எல்லா சமயத்திலும் ஏமாத்தினாலும் அவன் இல்லாம இருக்கர்து கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு...:)
@ ஆயில்யன் - //அம்பி பேரவையிலேர்ந்து அப்புறம் போர் ஆட்டம் நடத்துவோம்//
நெல்லை சைடுல எல்லாம் திடீர் திடீர்னு எதாவது ஒரு கந்தசாமி பாண்டியன் பேரவை, கருப்பசாமி பாண்டியன் பேரவைனு ஆரம்பிச்சு சிங்கம் புலி படம் போட்ட ஒரு கொடியும் பஸ்ஸ்டாண்டுல ஏத்திருவாங்க, இதுல என்ன காமடின்னா அந்த கொடிகம்பத்துல சிவப்பு பெயின்டால ஒரு அருவாள் படமும் வரைஞ்சுருக்கும், கொடிக்கம்பை யாராவது டச் பண்ணினா என்ன ஆகும்னு அதை வச்சே புரிஞ்சுக்கனும். நான் அங்கேந்து வந்த ஆளு...:)
//நான் அங்கேந்து வந்த ஆளு...:)// ஹல்லோ அந்த அரிவாளை கையில புடிச்சுக்கிட்டு குந்தியிருக்கிற ஆளு நாங்க தெரியும்லல் (எக்ஸ்ட்ரா சவுண்ட் எபெக்ட் கொடுங்கப்பா)
iththanai per angerunthu vanthu irukkeengala?
Ayilyan neega Maayavaramnu enru ninaiththene!!!
நான் பெரிய கமெண்டுன்னு சொன்னேன் இல்லையா தக்குடு, அதென்னன்னா, அந்த குட்டிப்பொண்ணு குண்டலம் எல்லாம் போட்டுக்கலையா, இல்லே நீ வழக்கம் போல குண்டலத்தை கவனிக்காம அவள் கவுன்,நெயில் பாலிஷ்,ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் பார்த்துண்டு இருந்தியா?
//சந்தேகத்தில் நார்த்தங்காய் ஊறுகாய், பருப்புப்பொடி, புளிக்காய்ச்சல், குழம்புப்பொடி எல்லாம் ஞாபகமாக எடுத்துக்கொண்டு // போஸ்டு போடும்போது நல்ல பசின்னு சொல்லு!
//நாம் எதிர்பார்பது போலவே, அவருடைய கண்ணுக்கும், அம்மணியோட கண்ணுக்கும் ஜிங்சக்!ஜிங்சக்! ஆகிவிடுகிறது. // இதுக்கும் உன் தேசிய கீதச்சவுண்டு தானா? முடியல.
//ஒத்த மரத்துக் குரங்கா உக்காசுண்டு இருக்கும் எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது//அதான் யாரும் கண்டுக்க மாட்டேங்கறாளே? இப்படி சூஸகமா சொன்னாலும் யாரும் புரிஞ்சுக்க மாட்டேங்கிறா.. என்ன பண்றது?
நானும் அந்த படம் பாத்தேன். அந்த குட்டி பொண்ணுகாகவே (Abigail Breslin ) இன்னொரு தரம் பாக்கலாம். அத்தன அழகான அபிநயம் நடிப்பு. உங்க விமர்சனம் அதை இன்னும் அழகாக்கிடுச்சு. Sandra Bullock (படத்துல எழுத்தாளர்) //நார்த்தங்காய் ஊறுகாய், பருப்புப்பொடி, புளிக்காய்ச்சல், குழம்புப்பொடி// இது எல்லாம் பாத்து அவங்க உங்க மேல case போடா போறதா கேள்விப்பட்டேன், நிஜமா தக்குடுபாண்டி
MBC 3 la cartoon thaaney poduvaaaga?
//'ஜக ஜகா சாமியாரின் சல்லாப லீலைகள்' படம் பத்திதான் நான் எழுதனும்....:) //
photo vudan potta innum comment yerum :)
பொட்டியை பார்த்துட்டேன், ஆனா உள்ள என்ன போடறதுன்னு தெரியத்தான் ரொம்ப நேரம் ஆயிருச்சு :) நல்லா விமர்சனம் எழுதறீங்களே!
சீக்கிரமே குடும்பியாக வாழ்த்துகள்!
அடுத்தது எப்போ? உங்களுக்கு ஒரு தொடர் பதிவுக்கு அழைப்பு வெச்சு இருக்கேன். போய் படிச்சுட்டு சட்டு புட்டுன்னு பதிவ போடுங்க
பின்னூட்டம் எல்லாம் இண்டரஸ்டிங் தக்குடு, :P
தொடர
@ வல்லியம்மா - அட, மறுபடியும் வல்லியம்மா அடியேனோட பதிவில்....:) ஆயில்யன் அருவா அது இதுனு சொல்லி வல்லியம்மாவை பயம்காட்டாதப்பா!!!
@ அனன்யா - குண்டலமா?? அப்படின்னா என்னது?? கைல போடுவாங்களா?? அல்லது கழுத்துல போட்டுப்பாளா?? ....:P
பசி எல்லாம் ஒன்னும் இல்லை, ஒரு ரைமிங்கா இருக்கட்டுமேனுதான்..:)
சூசகமா எல்லாம் ஒன்னும் சொல்லலை.. அண்ணா, வதந்திகளை கண்டு ஏமாறவேண்டாம்.
@ அடப்பாவி தங்கமணி - ஆமாம்...ஆமாம்...:) அந்த எழுத்தாளர் 'தாங்க்ஸ்' சொல்லி எனக்கு மெயில் அனுப்பியாச்சு அல்ரெடி..:)முதல் வருகைக்கு நன்னிஹை!
@ கோப்ஸ் - யோவ் கோப்ஸ், நான் என்ன சன் டீவியா நடத்தறேன் பிட்டு படம் எல்லாம் போடர்துக்கு...:) முதல் வருகைக்கு நன்னிஹை!
@ கவி அக்கா - முதல் வருகைக்கு நன்னி அக்கா! ஏன் இந்த கொலைவெறி??
@ அப்பாவி தங்கமணி - வாங்க மேடம்..:)
@ கீதா மேடம் - எல்லாரும் வழிவிடுங்கப்பா! தலைவி வந்தாச்சு! பின்னுட்டம் மட்டும்தான் சுவாரசியமா இருந்துதா??..:(
ஆஹா - பதிவை பாராட்டுறதா இல்லை பின்னூட்ட கும்மியை பாராட்டுறதா?
நெல்லை மண மணக்க.....வாழ்த்துக்கள், மக்கா!
அடடா, வாங்க சித்ரா மேடம். அருவாள் தேசத்திலேந்து ஆதரவு கூடிக்கிட்டேபோகுது...:) உங்க காலேஜுக்கு ஒரு தடவை நான் வந்துருக்கேன். முதல் வருகைக்கு நன்னிஹை! அடிக்கடி வரவும்.
hi very interesting post,thanks coz happened to watch the movie from the middle.now got the effect of watching it on big screen.
thanks anani friend...;)
தகடு... அப்போ நீ "Stranger than Fiction" படமும் பாக்கொனும்டோய்... இதுக்கு அப்படியே உல்டா... அந்த எழுத்தாளர் பெண்மணி ஒரு சைக்கோ மாதிரி தற்கொலை பண்ணிக்கும் போது ஒருத்தரோட மனோ நிலை எப்படி இருக்கும்னு நேரடியா களத்தில் இறங்கி பாத்து அப்புறமா எழுதுற ஆளு... படம் பாரு... கொஞ்சம் காமெடி நிறைய tragedy உள்ள படம்...
//கிரைன்டர் படம் எல்லாம் போட்டு “மாவாட்டுவது எப்படி!”னு தனியாக ஒரு பதிவு போட்ட ஒன்னாம் நம்பர் தில்லாலங்கடியான //
தகடு... உங்க அண்ணன் படம் போட்டு "அல்வா கொடுப்பது எப்படி" என்று கூட பதிவு எழுதலாம்...
//நான் அங்கேந்து வந்த ஆளு...:)// ஹல்லோ அந்த அரிவாளை கையில புடிச்சுக்கிட்டு குந்தியிருக்கிற ஆளு நாங்க தெரியும்லல் (எக்ஸ்ட்ரா சவுண்ட் எபெக்ட் கொடுங்கப்பா)//
ஆயிலு... லாலே லா லாலி லாலா... இந்த மீஜிக் போதுமா... இல்லாட்டி சூரியன் படத்துல வருமே.... கவுண்டர் பூக்குழி இறங்கும் போது அந்த மீஜிக் வேணுமா?
//தகடு... உங்க அண்ணன் படம் போட்டு "அல்வா கொடுப்பது எப்படி" என்று கூட பதிவு எழுதலாம்...// correctu...:)
Post a Comment
யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)