Saturday, March 13, 2010

ஆடு பார்கலாம் ஆடு 5

புதிதாக வந்தவர்களுக்கு - Part 1 Part 2 Part 3 Part 4

அன்று வந்ததும் இதே நிலா! புரட்சித்தலைவரோட பாடல் ஒலித்தது, எனக்கு இருந்த பதட்டத்தில் ஆடனுமா? பாடனுமா?னு தெரியாமல் ‘டடட்டா!’ என்று சத்தமாக பாடிக்கொண்டே (கத்திக்கொண்டே) ஓடிப்போய் கூட ஆடிண்டு இருந்தவன் இடுப்பை வளைத்துப் பிடித்து(நல்ல்ல்ல்ல்லவேளைடீ! நாம தப்பிச்சோம்! என்று Bombey sisters குசுகுசுத்துக்கொண்டனர்), அவனுடைய இடது உள்ளங்கையை என்னுடைய வலது உள்ளங்கையால் இறுக்கமாக பிடித்துக் கொண்டு ‘லகாண்’ படத்துல அந்த வெள்ளைகாரி அமீர்கானோட yes! i am in loooooooooooove!னு பாடிண்டே ஆடுவது மாதிரி ரொம்ப ரொமான்டிக்கா சுத்தி சுத்தி ஆட ஆரம்பிச்சுட்டோம்(டேன்). Base மட்டத்தோடு பில்டிங்கும் பயங்கரமாக ஆட்டம் கண்டதால் யாரையாவது கைதாங்கலா புடிச்சுக்கனும் போல இருந்தது அதான் அந்த step- க்கு காரணம்.

போனாப்போகுது என்று நம்பியாரும், உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையின் ஓரத்தில் டிரைவர் & கண்டக்டர் மாமா ஓசி டிபன் சாப்பிட, எட்டுமணி நேர தொடர்பயணத்திற்கு பிறகு, உச்சா மணம் கமழும்(!!!??) ஒரு அறுசுவை(???!!) உணவு விடுதி முன்பாக, நடு இரவில் நிறுத்தப்படும் ஒரு அரசுப்பேருந்து போல, ஒரு வழியா டேப்பை நிறுத்தினான். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா!னு நானும் நிறுத்தினேன். இவ்ளோ போராட்டத்துக்கு நடுவிலும் ஒரு மந்தகாச புன்னகையை(அவ்வ்வ்வ்வ்........) என்னேட முகத்துல maintain பண்ணினேன்(தக்குடு! மீசைல மண் ஒட்டலடா!!!..:)) நம்ப ரவிவர்மா சொன்ன மாதிரி finishing -ல ஒரு வணக்கம் எல்லாம் சொல்லிட்டு வந்துட்டோம். சிரிப்புச்சத்தமும், கைதட்டலும் நிற்க நாலு நிமிஷம் ஆச்சு. (அடுத்தவன் திண்டாடி தெருவுல நின்னா, நம்ப மக்களுக்குத்தான் எத்தனை ஆனந்தம்!!!!)

நாலு ஜட்ஜுல ஒரு ஜட்ஜு மைக்கில் எங்களை மீண்டும் மேடைக்கு அழைத்தார். உங்க டான்ஸ் அவாளுக்கு ரொம்ம்ம்ம்ம்ப புடிச்சு போச்சாம்! அதான் திருப்பி ஒரு தரவை ஆடற்துக்கு கூப்பட்ரா! என்று Bombey sister’s வளிப்பு காட்டினார்கள். குழப்பத்தோடையே மேடைக்கு போனா அந்த நக்கீரர், எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகனும்! என்றார். முதல்ல ஆடின பரதத்துல(அப்ப நான் ஆடினதுதான் பரதமா????) ஸ்லோகம் நடராஜர் பத்தினது, ஆனா நீ ஏன் கிருஷ்ணர் அபிநயமும் காட்டிணாய்?? என்று கேட்டார். நானும் சளைக்காம ‘ஜெயாடிவி’ புகழ் சங்கீத வித்வான் நெய்வேலி சந்தானகோபாலகிருஷ்ணன் மாதிரி, அந்த லாஸ்டு லைனை நீங்க நன்னா கவனிச்சேள்னா உங்களுக்கு புரியும்! பார்வதிபரமேஷ்வரோ!னா அது நடராஜரை குறிக்கும் அதே சமயம் பார்வதீப ரமேஷ்வரோ!னா அது உள்ளம்கவர் கள்வனை குறிக்கும்! அப்படீன்னு ஒரு மினி உபன்யாசம் செய்தேன்(எப்பையோ தெய்வத்தின் குரல்!ல படிச்சது). அவ்ளோதான்! அந்த ஜட்ஜு flauttuu, அதுக்கப்பரம் அவர் போட்ட மார்கை பாத்துட்டு பக்கத்துல இருந்த ஜட்ஜுக்கு மூச்சே நின்னு போச்சு! (யாரெல்லம் ‘மூச்சா’ நின்னுபோச்சு!னு வாசிச்சேள்?) அனேகமா அவர் ‘தில்லுமுல்லு’ தேங்காய் சீனிவாசன் மாதிரி 95 மார்க்(பத்துக்கு) போட்டாரோ என்னமோ??...:)

பின்னிட்டடா! பூ வச்சுட்டடா! என்று ஒரே பாராட்டு மழை. அறுபதுக்கும் மேற்பட்டவர்கள்(சில பிகர்களும் அதில் அடக்கம் ஹி..ஹி) வந்து கை குலுக்கியதில்(உலுக்கியதில்!னே வாசிக்கலாம்) தோள்பட்டை வலிவந்துவிட்டது. அந்த போட்டியில் முதல் பரிசு கிடைச்சது மட்டும் இல்லாம 'சிறந்த பொழுதுபோக்கு அணி' அப்படினு ஒரு special பரிசு வேறு கிடைத்தது. நம்ப கழக கண்மணிகளும் பல பரிசுகளை வாங்கி குவித்திருந்தனர். சிங்கம்பட்டிகாரன் இரண்டாம் பரிசும், ரவிவர்மா முதல் பரிசும்(அவனுக்கு வந்த ஓவியத்தலைப்பு என்ன தெரியுமா?? மிக்கிமவுஸ். வராட்டாலும் அவன் அதோடசாயல்லதான் எதாவது ஒன்னு வரைவான் என்பது வேறு விஷயம்) வாங்கியிருந்தனர். அதெல்லாம் இருக்கட்டும் Bombey sister’s என்ன வாங்கினா??! அப்படின்னு நீங்க எல்லாரும் சத்தமா கோரஸா கேட்பது என் காதுல விழுந்தாச்சு. அவர்களுக்கு இரண்டாம் பரிசு (என்ன ஒரு அநியாயம்!) கிடைத்தது(பச்சைக்கல் வச்ச குண்டலமெல்லாம் போட்டுக்கொண்டு வந்தும்!!!!) அப்புறம் அவாள்டையே விசாரித்ததில்(‘வறுத்ததில்’னும் வாசிக்கலாம்), தென்காசி பையன் ஒருத்தன் ‘சங்கீத ஜாதி முல்லை!’ பாட்டை தம் கட்டி பாடிவிட்டான் என்பது தெரிந்தது. கவலைபடாதீங்கோ! அடுத்த தடவை சிவப்புக்கல் குண்டலத்தோடு வந்து முயற்சி பண்ணுங்கோ!னு அணியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அவாளுக்கு ஆறுதல் சொன்னேன்.

தனியாக ஜெயிப்பதை விட, அணியாக ஜெயிப்பதில் வரும் சந்தோஷமே தனிதான்! பலதடவை என்னுடைய தனிப்பட்ட வெற்றி வாய்ப்புக்களை அணியின் வெற்றிக்காக தியாகம் செய்யும் பாக்கியம் எனக்கு கிட்டியது. பரிசளிப்பு விழாவிற்கு சிட்டிலேந்து(அதாவது கல்லிடைகுறிச்சிலேந்து)ஒரு பிரபலமான டாக்டர் வந்திருந்தார்(அவரது மகள் என்னோட பள்ளித்தோழி!). நம்பளோட ஆனந்த தாண்டவத்தை அவரும் பாத்துருக்கார்(போட்டோலாம் வேற புடிச்சு எனக்கு ஒரு copy எல்லாம் தந்தார். அதன் பிறகு பல வருடங்கள் வழியில் எங்கு பார்த்தாலும் அவருடைய ‘டாடா இண்டிகா’ காரை நிறுத்தி ஓசி லிப்ட் எல்லாம் கொடுத்தார்). மேலும் ஊர்ல நாலு பெரிய மனுஷாளோட பழக்கம் எல்லாம் கிடைத்தது. இதன்பிறகு பல மாதங்கள் குக்கிராமத்துல(அம்பாசமுத்திரத்துல!னு நீங்களே வாசிச்சுட்டீங்களே!! very good)பல தடவை என்னை பார்ததும் குபீர் சிரிப்பு/நக்கல் சிரிப்பு சிரித்த அடையாளம் தெரியாத/தெரிந்த நண்பர்கள் ஏராளம்! ஏராளம்! நானும் பெரிய பெரிய நாட்டிய மேதைகள் வாழ்கையில் இதெல்லாம் ஜகஜம்!னு திருப்பி சிரிச்சுட்டு போயிருவேன்.

சில சமயம் மாப்பிள்ளையோட அத்தைபாட்டிக்கு ரவா உப்புமாவும் பிடித்துப் போவது உண்டு........:)

(உப தகவல்) – சிங்கம்பட்டிக்காரன் மதுரையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறான், ரவிவர்மாவுக்கு ரயில்வேயில் வேலை கிடைத்து கோவில்பட்டி அருகே ஒரு ரயில் நிலையத்தில் நிக்காத ரயிலுக்கு எல்லாம் கொடி காட்டிக்கொண்டு இருக்கிறான். சரக்கு ரயில் பெட்டியில் எல்லாம் எதாவது வரைஞ்சு வைடா மாப்ளே! இந்தியா பூரா எல்லாரும் பார்ப்பா!னு அவனுக்கு நான் ஆலோசனை வழங்கியுள்ளேன். Bombey sister’s la ஒருத்தருக்கு டும்! டும்! டும்! முடிஞ்சு இப்பொ 'வள்ளி கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்!னு ‘காவடிச்சிந்து’ பாடி அவாளோட புள்ளையை தாலாட்டுவதாக நினைத்துக்கொண்டு அதை தூங்கவிடாமல் தொல்லை செய்து கொண்டிருக்கிறார், இன்னொருத்தருக்கு வலை வீசி மாப்பிள்ளை தேடிக் கொண்டிருப்பதாக கேள்வி. நமக்கு இந்த ஊர் வம்பு பேசுவதே புடிக்காது, அதனால இதை பத்தி நமக்கென்ன வேண்டாத கவலை எல்லாம்...:)

ஆட்டம் இப்போதைக்கு ஓய்ந்தது!

23 comments:

LK said...

//பலதடவை என்னுடைய தனிப்பட்ட வெற்றி வாய்ப்புக்களை அணியின் வெற்றிக்காக தியாகம் செய்யும் பாக்கியம் எனக்கு கிட்டியது.//

ithellam romba overu solliputten

அநன்யா மஹாதேவன் said...

Where is My Vadai? x-(

அடுத்த தடவை சிவப்புக்கல் குண்டலத்தோடு வந்து முயற்சி பண்ணுங்கோ - அதானே பார்த்தேன், என்னடா இந்த வாரம் குண்டல மஹிமை வர்லியேன்னு! வந்துடுத்து!
”நம்பளோட ஆனந்த தாண்டவத்தை ” - பெரிய நடராஜர், ஆனந்த தாண்டவம் ஆடினரே!!!
ஆமா, கல்லிடை மெட்ரோபாலிஸ், அம்பை குக்கிராமம்.

எங்கள் தங்கத்தலைவரின் ஊரைப்பற்றி இப்படி தரக்குறைவாகப் பேசியதை கன்னாபின்னா என்று ஆட்சேபிக்கிறேன்.

ஆடு பார்க்கலாம் ஆடு அவ்ளோ தானா? :((
அடுத்து என்ன?
நமக்கு இந்த ஊர் வம்பு பேசுவதே புடிக்காது- ஆமாமா, நீ ரெம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நல்லவன்!

Porkodi (பொற்கொடி) said...

yov LK enna akramam idhu!!! post pottu 18 minutes thaanya aagudhu!

Porkodi (பொற்கொடி) said...

indha ananya adhuku mela.. naan inga commenta pulish panradhukulla queuela vandhutanga.. too mcuh i say!

vandhadhe vadai vangalam nu thaan. adhan illainu agiduche? naan aani ellam pidungitu aprama vandhe padikaren.. bookmark panikaren..

அண்ணாமலையான் said...

பட்டய கெளப்புங்க

திவா said...

//ஆடு பார்க்கலாம் ஆடு// ஆடு எங்கேப்பா? கடைசி வரைக்கும் காட்டவே இல்லையே?

அநன்யா மஹாதேவன் said...

// naan inga commenta pulish panradhukulla queuela vandhutanga.. too mcuh i say! //
சொந்த ப்ளாக்ல போஸ்ட்டும் போட்டு வடையும் கவ்வும் பொற்ஸ், உனக்கு எந்த ப்ளாக்ல போஸ்டு போட்டாலும் மூக்குல வேர்த்துடுமா? நாங்கள்ல்லாம் ஒண்ணு ரெண்டு ப்ளாக் தான் பாலோ பண்றோம். நீ? ஊர்ல ஒரு ப்ளாக் உடறதில்லை போல இருக்கே.. இனிமே என் ப்ளாக் ல கூட உனக்கே உனக்குன்னு வடை அல்லாட் பண்ணியூடறேன்.

Dubukku said...
This comment has been removed by the author.
Dubukku said...

//ல மாதங்கள் குக்கிராமத்துல(அம்பாசமுத்திரத்துல!னு நீங்களே வாசிச்சுட்டீங்களே!! very good)//

நாங்க சொன்னதையே உல்டா பண்ணி படத்த ஓட்டாதீங்கப்பா...
...புதுசா எதாவது ட்ரை பண்ணுங்க ராசா முடியும் உங்களால முடியும்....இன்னும் உங்ககிட்டேர்ந்து ரொம்ப எதிர்பார்க்கறேன் :))))))))))

அநன்யா...இவய்ங்க எப்போதுமே இப்படித்தான் ஓட்டறதுக்கு கூட எங்கூரத் தான் காப்பியடிப்பாங்க :))

தக்குடுபாண்டி said...

//ல மாதங்கள் குக்கிராமத்துல(அம்பாசமுத்திரத்துல!னு நீங்களே வாசிச்சுட்டீங்களே!! very good)//
Dear dubukku anna, intha usage unga postla naan paduchathu kadaiyaathu. If it is thr i am sorry..:( neenga solra maathiri 'thaluval/maluval' kathaiyaa aayiduchchu poolarukku...:) LOL

தக்குடுபாண்டி said...

//அநன்யா...இவய்ங்க எப்போதுமே இப்படித்தான் ஓட்டறதுக்கு கூட எங்கூரத் தான் காப்பியடிப்பாங்க :))//

டுபுக்கு அண்ணா, அம்பையும் கல்லிடையும் அத்தைபொண்ணு, மாமா புள்ளை மாதிரி, ஒருத்தரை ஒருத்தர் எப்போதும் கலாய்த்துக்கொண்டேதான் இருப்பார்கள்...:)

//ட்ரை பண்ணுங்க ராசா முடியும் உங்களால முடியும்....இன்னும் உங்ககிட்டேர்ந்து ரொம்ப எதிர்பார்க்கறேன் :))))))))))// முயற்சி பண்ணி பார்க்கறேன்...:)

Vijay said...

//ஆட்டம் இப்போதைக்கு ஓய்ந்தது!//

ஏன்?.....ஏன்.....ஏஏஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்....??????? டொட்டொடடடாயிங்.... டொட்டொடடடாயிங்.... (ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்.... ஏன்?...ஏன்....பீலிங்ஸ்ல படிக்கவும்.

Vijay said...

//இன்னொருத்தருக்கு வலை வீசி மாப்பிள்ளை தேடிக் கொண்டிருப்பதாக கேள்வி//

நம்ம தக்குடு...வலைய தேடி கொண்டிருப்பதாக கேள்வி.நமக்கு இந்த ஊர் வம்பு பேசுவதே புடிக்காது, அதனால இதை பத்தி நமக்கென்ன வேண்டாத கவலை எல்லாம்...:).....:)))..:P

தக்குடுபாண்டி said...

@ LK - வருகைக்கும் கருத்துக்கும் நன்னி...:)

@ அனன்யா அக்கா - ஒரு ஊர் சிட்டியா கிராமமா என்பது அந்த ஊரில் இருக்கும் பிகர்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. உங்க தலைவரே கல்லிடைலதான் ஒரு தெளிவான நீரோட்டம் உண்டுனு அவரின் ஆரம்பகால பதிவுகளில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துருக்கார்...:)

@ கேடி - உங்க வீடு நங்கனல்லூர் அனுமார் கோவில் பக்கதில் இருக்கோ??...:)

@ மலை வாத்தியார் - வருகைக்கு நன்னி வாத்தியாரே!!

@ திவா அண்ணா - பலிக்கிடா மாதிரி சிக்கிக்கொண்ட தக்குடுதான் ஆடு...;)

@ அனன்யா அக்கா - நன்றாக சொன்னீர்கள்...:)

@ விஜய் - கவலை வேண்டாம், இதுபோல் பல பதிவுகள் வரும், Bombay sister's sai சமாளிப்பது ரொம்ம்ம்ம்ப கஷ்டம், அதனால் வேண்டாம்...:)

LK said...

//yov LK enna akramam idhu!!! post pottu 18 minutes thaanya aagudhu!/

panthiku munthikanum ammani

தி. ரா. ச.(T.R.C.) said...

@தக்குடு அப்பாடா ஒரு வழியா ஆடிய ஆட்டமென்னன்னு முடிச்சிட்ட.
உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையின் ஓரத்தில் டிரைவர் & கண்டக்டர் மாமா ஓசி டிபன் சாப்பிட, எட்டுமணி நேர தொடர்பயணத்திற்கு பிறகு, உச்சா மணம் கமழும்(!!!??) ஒரு அறுசுவை(???!!) உணவு விடுதி முன்பாக, நடு இரவில் நிறுத்தப்படும் ஒரு அரசுப்பேருந்து போல, ஒரு வழியா டேப்பை நிறுத்தினான். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா

ஜமாய் ராஜா.தோஹாலே சமத்தா இரு . எனக்கென்னவோ நீ இந்த தரம் இந்தியா வந்துட்டு தனியா திரும்பிபோவேன்னு நம்பிக்கையில்லை

தக்குடுபாண்டி said...

@ LK - கடைசியில் என்னோட ப்ளாக் கல்யாணமண்டபம் மாதிரி ஆயாச்சு...:)

@ TRC மாமா - ஏன் இந்த கொலைவெறி....:)

Porkodi (பொற்கொடி) said...

oru vazhiya backlog ellam padichu mudichutten..! ambi ezhudra madhriye iruku apdiye!! (adavadhu ivlo naala neenga thane ambi ku ezhudi kuduthinga so..) :P

தக்குடுபாண்டி said...

@ கேடி - //ivlo naala neenga thane ambi ku ezhudi kuduthinga so..// naan onnum sollalappa!!...:) thaks for reading all the parts finally

அமுதா கிருஷ்ணா said...

ஆட்டம் சூப்பர்...

தக்குடுபாண்டி said...

thanks amudha akka...;)

வித்தியாசமான கடவுள் said...

தகடு... அந்த பேச்சு போட்டி, கவிதை போட்டி மற்றும் இன்ன பிற போட்டியில் கலந்து கொண்ட நீ என்ன வாங்கினேன்னு சொல்லவே இல்ல... உங்க அண்ணன் நாங்க உங்க வீட்டுக்கு வந்த போது வலம் இடமா ஆடுன நடனத்தை (ஸ்ரீ லெப்ட் என்பது ரொம்ப பிரசித்தம்) வைத்தே உன் நடனம் எப்படி இருந்திருக்கும்னு தெரிஞ்சுக்கிட்டேன்... அந்த பாம்பே சிஸ்டர்ல ஒரு பொண்ணுக்கு நீ ரூட் விட்டேன்னு கேள்விப்பட்டேனே... உண்மையா???

தக்குடுபாண்டி said...

@ vidyasamana kadavul - //அந்த பாம்பே சிஸ்டர்ல ஒரு பொண்ணுக்கு நீ ரூட் விட்டேன்னு கேள்விப்பட்டேனே// hahahaha...;)

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)