புதுசா வந்திருந்தா அவங்களுக்கு Part1 Part2
இந்த போட்டிக்கு நாம பாட்டெல்லாம் select பண்ணமுடியாது, அவா என்ன போடறாளோ அதுக்கு நாம ஆடனும்! என்றார்கள். ( இதுக்கு நீ ஒரு பெரிய பாறாங்கல்லை என்னோட தலைல போட்டுருக்கலாம்!னு சொல்லனும் போல இருந்தது) இந்தப் பக்கம் திரும்பினால் அரை லிட்டர் விளக்கெண்ணையை ஒரே கல்ப்புல குடித்து விட்டு வந்தது போன்ற ஒரு முகத்துடன் நம்ப பசங்க நின்று கொண்டு இருந்தார்கள். அது வந்து! என்று நான் ஆரம்பிப்பதற்கு முன்பே, எல்லாம் நாங்களும் கேட்டுண்டுதான் இருந்தோம்! என்று ஒரு ‘குலே பகவாலி’ சுரத்தே இல்லாமல் வழிமறித்து சொன்னான். ஆனா நம்ப டான்ஸ் இரண்டாவதுதான்! அப்படினு நான் Project Maneger மாதிரி சொல்லும்போதே, என்னது நம்ப டான்ஸா? எங்க டான்ஸ் அண்ணே! என்று இன்னொரு ‘குலேபகவாலி’ பயங்கர கடுப்போடு சொன்னான்.
நாங்க பேசிக்கிட்டு இருக்கும் போதே முதல் Team ஆடத்துவங்கியது, நாங்களும் கூர்ந்து கவனிக்க தொடங்கினோம்.
சைடுல நின்று கொண்டிருந்த நம்பியார்(ஏன்????னு பின்னாடி உங்களுக்கே புரியும்)கேசட்டை டேப்புக்குள் போட்டு பொத்தானை அழுத்தினான். அழகு மலர் ஆட!னு நம்ப ரேவதி வெள்ளை புடவை,சலங்கை எல்லாம் கட்டிண்டு ராமேஷ்வரம் கோவில் பிரகாரத்துல வளச்சு வளச்சு ஆடுவாங்களே! அதே பாட்டுதான். பரத நாட்டியம்ல! என்று சிங்கம்பட்டிகாரன்(ஆமாம், எங்களோட ‘கரகாட்டக்காரன்’ டீம் மெம்பர்ஸ் எல்லாரும் களத்தில் இருந்தார்கள்) சவுண்டு விட்டாண். டான்ஸ் டீம்ல இருந்த ஒரு கண்மணி, எனக்கு பரதம் எல்லாம் தெரியாது அண்ணே!னு மெதுவாக ஆரம்பித்தான். அடுத்த இரண்டாவது நிமிஷம், பா! பா! பக்கம் வா!னு ஒரு டிஸ்கோ பாடல் மேடையில் ஒலித்துக் கொண்டிருந்தது. எங்களுக்கு ஒரே குழப்பம். என்ன சொல்ல வராய்ங்கனே புரிய வில்லை.
இந்தப்பக்கம் திரும்பி பார்த்தா எங்க டான்ஸ் குரூப்ல இரண்டு டிக்கட்டை காணும். மொத்தமே மூனுபேர்தானேடா இருக்கீங்க! அப்படினு புலம்பிக்கொண்டே நாங்கள் அவர்களை தேடத் துவங்கினோம். நேரா ஓசி சமோசாவை நொசிக்கிக்கொண்டிருந்த அறிவிப்பாளர்ட போய், நல்லா இருப்பீங்க! எங்க டீமை கடைசி டீமா போடுங்க! அப்படினு கெஞ்சிக் கேட்டு கொண்டேன். அதெல்லாம் நடக்காத காரியம்! என்று மூத்தபதிவர்கள் போல பயங்கரமா பிஸ்து காட்டினார் அவர். அபிவாதயே! சொல்லி அவருக்கு நமஸ்காரம் மட்டும்தான் பண்ணலை, மற்ற அணிகள் இதற்கு ஒத்துக்கொண்டதால் வேறு வழி இல்லாமல் எங்க டீமை கடைசீல போட்டார் அந்த புண்ணியாத்மா.
காணாமப் போன நாதாரிகளை தேடுவதற்கு சிங்கம்பட்டிகாரன் தலைமைல ஒரு தனிப்படை போர்கால அடிப்படையில் அமைக்கப்பட்டு முடுக்கி விடப்பட்டது. இதற்கு நடுவில் மேலும் இரண்டு அணிகள் போட்டிலேந்து விலகி விட்டதாக Bombay sisters’ la ஒரு கொழந்தை வந்து தூது சொன்னது. டபக்குனு, எந்த டென்ஷனுமே இல்லாமல் POLO தின்றுகொண்டிருந்த கண்மணிட்ட போய் Solo-வா ஆட முடியுமா?னு கேட்டேன். அவன் பழையபடி பார்ட்னர் இல்லாம ஆடர்து ரொம்ப கஷ்டம்னே! என்று பழைய பல்லவியையே பாடினான். அறிவிப்பாளர் வேறு ரெண்டுபேர் குறைந்த பட்சம்!னு ரூல்ஸ் ராமானுஜம் போல பேசினார்.
சிங்கம்பெட்டிக்காரன் கிங்கு! காணாமல் போன நாதாரிகள் ஒரு வகுப்பரைக்குள் கதவை உள் பக்கமாக தள்ளிட்டுக்கொண்டு இருப்பதை கண்டுபிடித்து என்கிட்ட வந்து சொல்லிட்டான். நானும் போய், இறைவா தாள் திறவாய்! என் தலைவா தாள் திறவாய்! அப்படினு திருநாவுக்கரசர் மாதிரி என்னல்லாமோ சொல்லி பார்த்தேன். ம்ம்ம்ம்.... ஒன்னும் நடக்கலை. டஷ்ஷ்ஷ்ஷ்ஷ்னு! பக்கத்து ரூம்லேந்து அவர்கள் அணிக்கு மேக்கப் போட்டுக் கொண்டிருந்த ஒரு காயத்ரி (KRS அண்ணா, ஒரு பேச்சுக்குதான் இந்த பெயர், பின்னூட்டத்துல வந்து, அப்புறம் நம்ப காயத்ரி செளக்கியமா!னு எல்லாம் நோண்டக்கூடாது) தான் வெளியே வந்ததே தவிர, நாதாரிகள் வரவில்லை. நான் மிகவும் பதட்டமான சூழ்நிலையில் இருந்ததால், அந்த பிகர் அணிந்திருந்த தும்பை பூ நிறத்திலான பெரிய வெள்ளை நிற கவுன்,விரலில் போட்டிருந்த ரோஸ் கலர் நையில் பாலிஷ் என்று எதையுமே சரியாக கவனிக்க வில்லை.கதவை திறந்து வெளியே வந்தா நான் எதாவது சொல்லி அவங்களை மேடைக்கு அனுப்பிவிடுவேன் என்ற பயத்தில் நாதாரிகள் வெளில வரவே இல்லை.
வம்பா ஒரு பரிசு போகுமே!னு எனக்கு கவலை துளைத்து எடுத்தது. ஏதோ யோசனை வந்தவன் போல நம்ப Bombey sister’s பக்கம் திரும்பும் போதே, இல்லை!!! நீங்க தப்பா புரிஞ்சுண்டேள்!னு ‘சேது’ அபியோட டயலாக் எல்லாம் கொழந்தேள் பேசினார்கள்(எங்க ஊர் பொண்ணுங்க பயங்கரமான முன்ஜாக்கிரதை முனியம்மாக்கள்). இதற்கு நடுவில் பல அணிகள் நம்பியாரின் அதீதமான ‘மிக்ஸிங்’ முன்னால் தாக்குபிடிக்க முடியாமல் துண்டை காணும், துணியை காணும்! என்று மேடையை விட்டு பாதியிலேயே வெளியேறிக் கொண்டிருந்தனர். ஒன்று மட்டும் எனக்குத் தெளிவாக புரிந்தது. அவர்கள் போடும் எல்லா பாட்டுக்கும் தாக்குப் பிடித்து நம்ம அணி மேடையில் நின்று விட்டாலே நமக்கு எப்படியும் ஒரு பரிசு நிச்சயம்!(இதற்குப் பெயர்தான் வியூகம் அமைப்பது).
‘தோல்வி’ என்பது உறுதியாகத் தெரிந்த பின்னும் போர்க்களத்தில் இறுதி வரை போராடுபவனே உண்மையான வீரன்! என்று சாணக்கிய நீதி சொல்கிறது. பாதியில் விட்டுவிட்டு ஓடிய நபர்களுக்கு நரகம் கூட கிடைக்காது! மொக்கை என்று தெரிந்த பின்னும் பதிவு போடுபவரே உண்மையான பதிவர்!என்று பல ‘கோட்ஸ்’ மனதில் அநியாயத்துக்கு ப்ளாஷ் ஆனது.
அந்த சமயத்தில்தான் எனக்கு அந்த விபரீத யோசனை தோன்றியது.
இனிமேதான் ஆட்டமே!..................:)
16 comments:
//அந்த சமயத்தில்தான் எனக்கு அந்த விபரீத யோசனை தோன்றியது.
இனிமேதான் ஆட்டமே!..................:)//
ஏன் நீயே டான்ஸ் ஆடினியா
//எந்த டென்ஷனுமே இல்லாமல் POLO தின்றுகொண்டிருந்த கண்மணிட்ட போய் Solo-வா ஆட முடியுமா?னு கேட்டேன். அவன் பழையபடி பார்ட்னர் இல்லாம ஆடர்து ரொம்ப கஷ்டம்னே!////
அத்தினி கலவர டைமிங்கலயும் ரைமிங்காத்தான் கொஸ்டீனு கெளம்புது !
:)
ada rama! inikum first illiya?
//அந்த சமயத்தில்தான் எனக்கு அந்த விபரீத யோசனை தோன்றியது. //
appo idhu varaikum thoninadhu ellam?? :P
@porkudi akka
just 20 mins nan munditen
அப்புறம்?
எனக்கு தெரிஞ்சு போச்சு. கடைசியில தமிழ் சினிமா மாதிரி நீயே போய் தத்தக்கா பித்தக்கான்னு ஆடி, ப்ரைஸ் குடுத்தான்னு சொல்லப்போறே? அதானே? வெய்ட்டீஸ், ஃப்ரிஜ் ல பூ இருக்கு, அதை எடுத்து காதுல வெச்சுண்டுடறேன். பேசுறாங்கய்யா.. பேச்சு..
இந்த பதிவுல எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப சிரிப்பு வரவழைச்ச இடம் - நாதாரிகளை வெளியில் கொண்டு வர நீ எடுத்த முயற்சியும் அவர்களைத்தவிர, நீ கவனிக்கத்தவறிய அந்த தும்பைப்பூ கவுனும் ரோஸ் கலர் நெயில்பாலீஷூம். கூடவே பாம்பே சிஷ்டர்ஸின் சேது வசனமும்! கலக்கல்.. போ போ போயிகிட்டே இரு!
அப்புறம் நம்ப காயத்ரி செளக்கியமா!
" என்று மூத்தபதிவர்கள் போல பயங்கரமா பிஸ்து காட்டினார்"
மொக்கை என்று தெரிந்த பின்னும் பதிவு போடுபவரே உண்மையான பதிவர்
இப்படியெல்லாம் சொன்னா எங்களுக்கு தெரியாது கிர்ர்ர்ர்ர்ர்னு பேரு யாருன்னு சொல்லு.என்னா இப்போ புதுசு உனக்கு பக்கத்து ஊரிலேயே அப்படி இருத்தர் இருப்பாதாக செவி வழி செய்தி வந்தது
இந்த பதிவுல எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப சிரிப்பு வரவழைச்ச இடம் - நாதாரிகளை வெளியில் கொண்டு வர நீ எடுத்த முயற்சியும் அவர்களைத்தவிர, நீ கவனிக்கத்தவறிய அந்த தும்பைப்பூ கவுனும் ரோஸ் கலர் நெயில்பாலீஷூம். கூடவே பாம்பே சிஷ்டர்ஸின் சேது வசனமும்! கலக்கல்.. போ போ போயிகிட்டே இரு
அனன்யா அக்கா தம்பியயைபத்தி இப்போதான் உனக்குத்தெரியுமா என்னோட பதிவிலே போய் படி அப்பவே 30 10 2006 சொன்னேன்
ஏம்பா கணேஷ் வீட்டுக்கு எந்தப்பக்கம் போனோம்" என்று திரும்பிப் பார்த்தால் நம்ப ஆளுக்கு பயங்கர வரவேற்பு." ஹாய் கணேஷ் எப்போ வந்தே" என்று பஸ் ஸ்டாப்பில் ஒரு பெண் கணேஸனை கலக்கிக்கொண்டு இருந்தாள். நான் ஓரமாக முன் கை நீண்டால்தான் முழங்கை நீளமுடியும் என்று நின்றேன்
நல்ல தரிசனம்.வெளியே வந்து பிரசாதம் வாங்கிக்கொண்டு திரும்பிப் பார்த்தால் நம்ம ஆளை மறுபடியும் காணவில்லை. பார்த்தால் அங்கே ஒரு பெண் ஆஞ்சநேயரை சுற்றிக்கொண்டு இருந்தாள். நம்ம ஆள் அவளைச் சுற்றிக்கொண்டு இருந்தான் ."சார் என்னோட காலேஜிலே படித்தவள்" என்றான்."சரி.... சரி".... என்றேன்.
தக்குடு நல்ல சஸ்பென்ஸ் வேறே கொடுத்கிட்டே பார்க்கலாம்
எனக்குத் தெரிந்த கணேசனை தேடிக்கிட்டே இருக்கேன் இந்த ப்ளாக்ல...:)
@ LK - நீங்க எல்லாம் கிளைமாக்ஸ்லேந்து படம் பாக்கும் கோஷ்டியா??...:)
@ ஆயில்யன் - வருகைக்கு நன்றி ஆயில்யன்
@ கேடி - வந்து வடையை கொத்திண்டு போய்ட்டார்...:)
@ மலை வாத்தியார் - வருகைக்கு நன்னி,,,:)
@ அனன்யா அக்கா - சரியான அவசரக்குடுக்கையா இருப்பேள் போலருக்கு???...:)
@ டுபுக்கு - காயத்ரிக்கு என்ன பரம செளக்கியமா இருப்பா...:)
@ TRC sir- அம்பத்தூர் எஸ்டேட் கூட மோதனும்னா நேரடியாக மோதவும், கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்கவேண்டாம்...:)
@ TRC sir - இன்னொரு தடவை உங்களை பாபனாசம் மலைக்கு நடத்தியே கூட்டிண்டு போனாதான் நீங்க சரியா இருப்பேள்...:)
@ மதுரையம்பதி அண்ணா - அவன் கிடைக்கவே மாட்டான் கவலை வேண்டாம்......:)
@ கேடி - LK வந்து வடையை கொத்திண்டு போய்ட்டார்...:)
Post a Comment
யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)