சிலபல ஆபிஸ் பஞ்சாயத்துகளால மூனு வாரம் எழுத முடியலை. அதுக்கு தக்குடுவை எல்லாரும் மன்னிச்சுக்கோங்கோ! கோந்தைக்கு என்ன ஆச்சு? என்ன ஆச்சு?னு மெயில் மேல மெயில் போட்டு ஜாரிச்ச அண்ணா/அக்காமார்களுக்கு அன்பு வணக்கங்கள்!ரொம்ம்ம்ம்ம்ம்ப நாளைக்கு முன்னாடி என்னோட தோஸ்த் கோபிகா ஒரு தொடர் பதிவு எழுத சொல்லி இருந்தாங்க. ஒரு வழியா இப்ப எழுதலாம்னு நினைக்கிறேன்.
மீண்டும் JKB....:)
1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?
i) குழந்தைகளோட அல்லது குழந்தை மாதிரி மனசு உள்ள நல்ல மனுஷா கூட சகவாசம்.
ii) எந்த விதமான பற்றும் இல்லாம, தெரியாத ஊர்ல தெரியாத மனுஷாளுக்கு நடுல பரதேசியாட்டமா நாலு முழ வேஷ்டி & துண்டுடன் மெளன நிலைல நடமாடர்து.
iii) அதிகாலை நேரத்தில் யாரும் இல்லாத இடத்துல உக்காசுண்டு கீச்சீடும் பறவை சத்தத்துக்கு நடுவில் ஆத்தங்கரைல இருக்கும் ஜலத்தை வேடிக்கை பார்ப்பது
2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?
i) சம்பந்தா சம்பந்தம் இல்லாம பேசக்கூடிய பேச்சு.
ii) அழியக்கூடிய அற்பமான விஷயங்களில் அதிகம் நாட்டம் உள்ள படிச்ச மேதாவிகளோட சவகாசம்.
iii) அடுத்தவாளோட மனசு நோகும் படியான வார்த்தைகள்
3) பயப்படும் மூன்று விஷயங்கள்
i) டாக்டர் போடும் ஊசி (இதுனாலையே எங்க ஊர் டாக்டர் முத்துக்குமரனை 'குத்து'குமரன்னு தான் சொல்லுவேன்).
ii) நான் கார் ஓட்டும் போது ரோட்ல வரும் பெரிய கார்கள்.
iii) என்னோட கணக்கு வாத்தியாரரின் கோபம் (போன ஜென்மத்துல புரோட்டா கடைல மாஸ்டரா இருந்துருப்பார் போலருக்கு)
4) உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?
i) +2-ல என்னோட கணக்கு வாத்தியார் நடத்தின கணக்கு.
ii) வெள்ளக்காரன் ஏன் கக்கா போனா ஜலத்தை உபயோகப்படுத்தாம பேப்பர்ல துடைச்சுக்கரான். (சிரிக்காதீங்கோ! நிஜமாவே புரியலை).
iii) பொம்ணாட்டிகள் ஏன் “அப்புறம் ஒன்னுமில்லை ஒன்னுமில்லை!”னு சொல்லிட்டு அதுக்கப்புறம் ஒரு மணி நேரம் பேசிண்டு இருக்கா!
5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
i) ஒரு ஆரஞ்சு மிட்டாய்
ii) ஒட்டகத்துக்கு ஷாம்பூ வாங்கின கணக்கு எழுதின ஒரு பைல்
iii) அழி லப்பரோட கூடின ஒரு பென்சில்
6) உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?
i) கிரேஸிமோஹனின் வசனம்,டாம் & ஜெர்ரி, Mr. Bean
ii) அண்ணாபிள்ளையோட பேச்சு & சேட்டை
iii) கத்திரிக்காய்க்கு இங்கிலிஷ்ல என்னது?னு கேட்ட டீச்சர் கிட்ட, 'K A T H R I K A I'-நு பதில் சொன்ன என்னோட தோஸ்த் ப்ளவுஸ் சங்கரன்.
7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?
i) கோபிகாவோட கேள்விக்கு பதில் எழுதிண்டு இருக்கேன்.
ii) ராக்ஸ்ஸ்ஸ் அக்காவோட தேங்கா சாத போட்டோவை பாத்து பொறாமை பட்டுண்டு இருக்கேன்.
iii) வெள்ளிக்கிழமை கருங்குளம் மாமா & கல்லிடை மாமியாத்து ஓசி சாப்பாட்டுல என்ன ஸ்வீட் போடபோறாளோ?னு யோசனையும் ஓடிண்டு இருக்கு
8) வாழ் நாள் முடிவதர்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
i)நல்ல பிரகாசமான அறிவு இருந்தும் பண வசதி இல்லாததால படிக்கர்துக்கு கஷ்டப்படும் 4 குழந்தேளுக்கு உபகாரமா எதாவது செய்யனும்.
ii)குருனாதரிடம் வாங்கிண்ட உம்மாச்சி மந்த்ரம் இரண்டையும் அக்ஷரலக்ஷம் நிஷ்சிந்தையா ஜபம் பண்ணனும்.
iii)ஒரு புஸ்தகமாவது எழுதனும்
9) உங்களால் செய்யமுடியக்கூடிய மூன்று விஷயங்கள்?
i)நீங்க எவ்ளோ தூரத்துல இருந்தாலும் உங்காத்து ஹாலுக்கே வந்து நீங்க சந்தோஷிக்கும் படியா உங்க கூட செளஜன்யமா பேசர மாதிரியான உணர்வு வரும்படியா எழுத முடியும்.
ii)இனிமே ஒன்னுமே செய்ய முடியாது!னு தலைல கை வெச்சு உக்காந்த ஒரு ஆளை கூட படிப்படியான தேற்றுதல் மூலமா வாழ்க்கைல மறுபடியும் ஒரு நம்பிக்கையை உண்டாக்கும் படியா பேசவும் எழுதவும் முடியும்.
iii)எந்த இடத்துக்கு போனாலும் அந்த இடத்துல சந்தோஷமான ஒரு சூழலை உண்டாக்க முடியும். (“இன்னும் கொஞ்சம் பாயாசம் விடுங்கோ அக்கா!”னு கூச்சம் இல்லாம கேட்டு வாங்கி சாப்பிட தெரியும்)..:)
10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
i) கர்ண கொடூரமா இருக்கும்படியான வரிகள் & இசை உள்ள பாடல்கள், ஸ்வரம் சரி இல்லாத மந்திரங்கள்
ii) தன்னம்பிக்கையை தளர்த்தும் படியான பேச்சுகள்
iii) நமக்காக ஒரு துரும்பை கூட நகர்தாத மனிதர்கள் செய்யும் தேவை இல்லாத உபதேசங்கள்
11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
i) வயலின் வாசிக்கனும் ரொம்ப ஆசை உண்டு. கண்ணை உருட்டிண்டு & தலையை ஆட்டிண்டு மிருதங்கம் வாசிக்கவும் ஆசை...;)
ii) அரபி மொழி பேச & எழுத ஆசை.
iii) பொறுமை
12) பிடிச்ச மூன்று உணவு வகை?
i) ஸ்வீட் பத்தி தனியா கேள்வி இல்லாததால திரட்டிப்பாலை முதல்ல சொல்லிக்கறேன். (ஸ்வீட்லேந்து ஆரம்பிக்கனுமோல்லியோ!)
ii) அம்மா கையால செய்யும் அடை-அவியல்,புளிஉப்புமா,பொரிச்ச குழம்பு,தாளகம் & etc etc
iii) நல்ல பசில இருக்கும் போது பரிமாறும் தச்சு மம்மு + வத்தக் குழம்பு + வடு மாங்காய் (பக்கத்துல உக்காசுண்டு யாராவது தென்னையோலை விசிறியால அழகா வீசிவிட்டா இன்னும் செளக்கியமா இருக்கும்)
13) அடிக்கடி முனுமுனுக்கும் மூன்று பாடல்கள்?
i) எம் எஸ் அம்மாவோட ‘குறையொன்றுமில்லை’, மஹாராஜபுரத்தோட ‘ஜகதானந்தகாரகா’, ரஞ்ஜனி & காயத்ரியோட ‘என்ன சொல்லி அழைத்தால்’
ii) சுப்பிரமணியபுரத்துலேந்து "கண்கள் இரண்டால்"
iii) ஹே ஹேனதோ யாசுதே! - குரு(ஹிந்தி)ல வரும் அருமையான கஸல்
14) பிடித்த மூன்று படங்கள்?
i) திருவிளையாடல், எங்கவீட்டு பிள்ளை, நாயகன்
ii) லவுட் ஸ்பீக்கர்(மலையாளம்),மங்காரு மழே(கன்னடம்), மஹதீரா(தெலுங்கு)
iii) தாரே ஜமீன் பர், கிஸ்னா, Jeb we met (ஹிந்தி)
15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூனு விஷயம்?
i)திருப்தியான மனசு
ii)மனசை வருடும் அருமையான சங்கீதம்
iii)கல்லிடை, தாமிரபரணியின் நினைவுகள் & ரசிப்புத் தன்மை உள்ள நண்பர்கள்
16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?
i) மன்னார்குடி மைனர் - ஒவ்வொரு வார்த்தைலையும் சுவாரசியம் சேர்க்க கூடிய சுவாரசிய திலகமான இவர் எழுதினார்னா ரொம்ப சந்தோஷப்படுவேன். அற்புதமான ‘கலா’ரசிகர் இவர்(இந்த இடத்தில கலா என்பது யாரையும் குறிப்பிடுவது அல்ல என்பதை ரசிகமணி அவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்)..:)
ii) சிங்கப்பூர் ஜெய்ஷ்ரீ அக்கா - எங்க ஊர் பள்ளிக்கூட கெமிஸ்ட்ரி லாபுக்கு அப்புறம் அக்காவோட அடுக்களைதான் பல ஆய்வுகள் கண்ட ஒரு இடம். எப்போதும் “குங்குமபூ போண்டா செய்வது எப்பிடி?”னு எழுதும் இவர் “குங்க் ஃபூ பாண்டா” படத்துக்கு விமர்சனம் எழுதர மாதிரி நினைச்சுண்டு இந்த பதிவை நம்ப அக்கா எழுதனும்னு கேட்டுக்கறேன்.அக்காவோட கோஷ்டில இருக்கரவா எல்லாரும் இதை தொடர்ந்து எழுத ஆரம்பிச்சா 2 வருஷத்துக்கு எழுத ஆட்கள் வெச்சுருக்கா. (அடுத்த எலெக்ஷன்ல 'இலுப்பகரண்டி' சின்னத்தோட சிங்கப்பூர்ல நிக்க போகர்தா கேள்விப்பட்டேன்!..:) Based on your international readers, you can write it in english.
iii) மாதங்கி - 'ஓலை குடிசை! ஒற்றை ஜன்னல்!திடீரென்று மின்னல்!'னு கவிதை எழுதி எல்லாரோட கழுத்தை அறுக்கும் ஆட்களுக்கு நடுல இவா எழுதும் எழுத்து நடையே ஒரு கவிதை மாதிரி இருக்கும். ‘மேம் சாஃப்!’னு ரொம்ப மரியாதையா இவாளை கூப்பிடுவேன். "மேம் சாஃப்! இந்த பதிவை உங்க ஸ்டைல்ல நீங்க எழுதி அதை நாங்க எல்லாரும் படிக்கனும்
39 comments:
ஹை! நானு ஃபர்ஷ்டு :)
தக்குடு எங்கேயோ போயிட்டே! ஒன் ஒசரத்துக்கு அண்ணாந்து கூடப் பார்க்க முடியாதுப்பா, என்னாலெல்லாம்...
தக்குடு, அம்மாவுடைய ஆசிகளோட, என்னென்னிக்கும் ரொம்ப நல்லாருக்கணும்!
படிக்க நல்லா சுவாரஸ்யமாக இருந்தது.
//நல்ல பசில இருக்கும் போது பரிமாறும் தச்சு மம்மு + வத்தக் குழம்பு + வடு மாங்காய் (பக்கத்துல உக்காசுண்டு யாராவது தென்னையோலை விசிறியால அழகா வீசிவிட்டா இன்னும் செளக்கியமா இருக்கும்)
//
அடடா....சூப்பர்!
பாராட்டுக்கள்.
தக்குடு!
என்ன இது மினி இன்டர்வியூ குடுத்துட்டேள்?!
வரபோற ஆத்துக்காரிக்கு ரொம்ப சௌகரியமாயிருக்கும்!
-பருப்பு ஆசிரியர்
Arumai, arumai, arumai...varapporavO padikkanum idhai...link anuppinayaa thakkudu?
Neeyum thirattuppaal fan??? adadaada, namma katchi; apram amma pannina edhuvum....mansai thottutta pO!
உனக்கு ஏன் Mr.Bean பிடிக்கும்னு எனக்கு தெரியும்... அந்த மூஞ்சில அம்பி மூஞ்சை ஒட்ட வச்சு, எல்லா சேட்டையையும் பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பே தான?
//நல்ல பசில இருக்கும் போது பரிமாறும் தச்சு மம்மு + வத்தக் குழம்பு + வடு மாங்காய்//
பசியே இல்லாத நேரத்துலேயும் பசிய தூண்டுறியே கண்ணா...
//தாமிரபரணியின் நினைவுகள்//
நிச்சயமா உங்க வீட்டுல இருந்த அந்த ரெண்டு நாளை மறக்கவே முடியாதுடா...
//“இன்னும் கொஞ்சம் பாயாசம் விடுங்கோ அக்கா!”னு கூச்சம் இல்லாம கேட்டு வாங்கி சாப்பிட தெரியும்//
மகனே, அடுத்த தடவை இந்தியா வந்துட்டு தகவல் இல்லாம எஸ்கேப் ஆன தொலைச்சுடுவேன்... வந்து உன் அண்ணி கையால சாப்பாடு சாப்பிட்டு தான் போற...
//அதிகாலை நேரத்தில் யாரும் இல்லாத இடத்துல உக்காசுண்டு கீச்சீடும் பறவை சத்தத்துக்கு நடுவில் ஆத்தங்கரைல இருக்கும் ஜலத்தை வேடிக்கை பார்ப்பது//
இப்போ வீட்டுக்கு பின்னாடி அவ்வளவா தண்ணி ஓடலைன்னு அம்மா சொன்னதா தாத்தா சொன்னார்...
ME THE FISTU...
Hi Thakkudu
Welcome back.Very interesting post, ellame nanna solli irukke, unvayasila 1st question kku 2nd option vendaame, enakku pidikkalai.
Shobha
நல்ல கேள்விகளுக்கு உங்களது அருமையான பதில்கள் தக்குடு.... அம்மா கையால, தச்சு மம்மு + வத்தக்குழம்பு.... ம்ம்ம்ம்... சீக்கிரமே திருச்சி போகணும் போல ஆயிடுத்து...
//i)நல்ல பிரகாசமான அறிவு இருந்தும் பண வசதி இல்லாததால படிக்கர்துக்கு கஷ்டப்படும் 4 குழந்தேளுக்கு உபகாரமா எதாவது செய்யனும்.
ii)குருனாதரிடம் வாங்கிண்ட உம்மாச்சி மந்த்ரம் இரண்டையும் அக்ஷரலக்ஷம் நிஷ்சிந்தையா ஜபம் பண்ணனும்.
iii)ஒரு புஸ்தகமாவது எழுதனும்//
இது எல்லாம் நிறைவேற வழ்த்துகிறேன்.....
வாழ்த்துகிறேன்
தக்குடு
சமீபமாத்தான் உங்க பதிவுகள படிக்கிறேன். ரொம்ப யதார்த்தமா எழுதறீங்க.
//பொம்ணாட்டிகள் ஏன் “அப்புறம் ஒன்னுமில்லை ஒன்னுமில்லை!”னு சொல்லிட்டு அதுக்கப்புறம் ஒரு மணி நேரம் பேசிண்டு இருக்கா//
பொம்மனாட்டிகள் எல்லாம் ரொம்ப பேசாம இருந்தா அந்த லோகத்த கற்பனை பண்ணி பாருங்கோ! அப்புறம் உங்களுக்கு எல்லாம் ஏது entertainment? எல்லாம் ஒரு கல்யாணத்த பண்ணிட்டா சரி ஆயிடும்!
கோந்தே அன்புக்கு நன்றி! நீயும் கலக்'கலா' எழுதியிருக்கே! எந்தக் கலான்னு நீ ஒன்னும் ரசிகமணியை தூண்டவேண்டாம். அவரே என்னைப் பார்த்து "உன்னை நானறிவேன்.. என்னையன்றி யாரறிவார்...." ன்னு பாடிண்டு இருக்கார். தொடர் பதிவா.. அடுத்த வாரமும் இன்னொரு கமிட்மென்ட் இருக்கு. முடிஞ்சா இதை அதுல எழுதறேன்.. ஓ.கே. உனக்கும் சேர்த்து விளம்பரமா.... ஓ.கே வா...
நீ சொன்ன பாட்டும், சினிமாவும் எனக்கும் பிடிக்கும். ஜப் வீ மெட் தமிழ் வர்ஷன் பார்த்துட்டு ஏண்டா பார்த்தோம்ன்னு ஆயிடுத்து... கர்ண கொடூரம். சினிமால பணக்கார வேஷம் போடறத்துக்கும் ஒரு முகவெட்டு தேவைப்படுது. பரத்து தம்பிகிட்ட அது சுத்தமா இல்லை.. ;-)))
ஓ.கே. நெக்ஸ்ட் மீட் பண்றேன்.... ;-))
Romba supera interestinga eludiirruka,super post.
Aana kaidicila aapu vachitiyae thakkudu. I know only about cooking, ippdi unna madiri interesting a ennaku onnum varadey:(
ஒரு சில விஷயங்கள் நீங்க எழுதிருக்கறது-- ரொம்பவே அழகா இருக்கு-- உங்க ரசனைய ரொம்ப அழகா வெளி கொண்டு வராப்ல இருந்துது... முக்கியமா-- அதிகாலைஆத்தங்கர ஜலம்/தயிர் சாதம்+வத்த கொழம்பு+வடு மாங்கா...
"இனிமே ஒன்னுமே செய்ய முடியாது!னு தலைல கை வெச்சு உக்காந்த ஒரு ஆளை கூட படிப்படியான தேற்றுதல் மூலமா வாழ்க்கைல மறுபடியும் ஒரு நம்பிக்கையை உண்டாக்கும் படியா பேசவும் எழுதவும் முடியும்." ---- இந்த ஒரு talent போருமே! படிக்கவே ரொம்ப நன்னா இருந்துது!
ஒரே ஒரு கேள்வி...
"பொம்ணாட்டிகள் ஏன் “அப்புறம் ஒன்னுமில்லை ஒன்னுமில்லை!”னு சொல்லிட்டு அதுக்கப்புறம் ஒரு மணி நேரம் பேசிண்டு இருக்கா!" .... phone bill ஜாஸ்தி ஆறதோ?? :P ;)
PS : தாளகம்-னா?
இந்த பதிவை எழுத தூண்டியவங்களுக்கு முதல் நன்றி… ஒன்பதாம் கேள்விக்கான பதிலில் வெளிப்பட்ட தன்னம்பிக்கை எல்லா பதிலிலும் இருந்தது..கூடவே குலுங்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவை….. அட்டகாசம்.
நம்ம ம.மை படிக்கறப்ப என்ன பண்ணினார்ன்னு அவரது வகுப்புத்தோழர் என்னிடம் ரகசியமா சொன்னது உன்னிடம் ரகசியமா…. ஒரு கட்டுரையில் காலா காலத்துக்கு ன்னு வர்ற இடத்தில் கலாகலாத்துக்கு எழுதி கலா ரசிப்பை அப்பட்டமா வெளிப்படுத்தியிருக்காரு…
இதுக்கென்ன கலா ய்க்க போகிறாரோ……
Good to know more about you through this post...I think nee un 'would be' kaaga yezhudhirpiyo? Adhellam yeppavo pesi mudichirpeenga..still :)
ரொம்ப அருமையா எழுதியிருக்காய் கோந்தை. அந்த தன்னம்பிக்கை பார்ட் நேக்கு ரொம்ப பிடிச்சுது.
அன்புடன்
சுபா
very interesting.... Yaaam arindha blooogkugaliley... thakkudu pol veru ethuvum ennai kavarnthathu illai... thakkudu neeeeedoooooozhi vaazha vaazthukkal..
anbudan Mathi.
kandupidichu vanthudomla:)
Sriniji realy super!!! remba interesting aana aaaaaalu:))
especially this:::
//நீங்க எவ்ளோ தூரத்துல இருந்தாலும் உங்காத்து ஹாலுக்கே வந்து நீங்க சந்தோஷிக்கும் படியா உங்க கூட செளஜன்யமா பேசர மாதிரியான உணர்வு வரும்படியா எழுத முடியும்.
ii)இனிமே ஒன்னுமே செய்ய முடியாது!னு தலைல கை வெச்சு உக்காந்த ஒரு ஆளை கூட படிப்படியான தேற்றுதல் மூலமா வாழ்க்கைல மறுபடியும் ஒரு நம்பிக்கையை உண்டாக்கும் படியா பேசவும் எழுதவும் முடியும்.
iii)எந்த இடத்துக்கு போனாலும் அந்த இடத்துல சந்தோஷமான ஒரு சூழலை உண்டாக்க முடியும். (“இன்னும் கொஞ்சம் பாயாசம் விடுங்கோ அக்கா!”னு கூச்சம் இல்லாம கேட்டு வாங்கி சாப்பிட தெரியும்)..:)// ellaralaiyum ippadi solla mudiyathu:)
you are great!!!
Banner poster ellam readya sollungoo next flight Doha:)))
Nive
ரகசிய ரசனைகளை சொல்லிய
ரசனையான பதிவு
பாராட்டுக்கள்
தக்கூடு! அழகான கேள்விகள்! அசராத அசத்தல் பதில்கள்.. உன்கள் ரசனை யோசிக்க வைக்கிறது,, வாழ்த்துக்கள்.
Takudu,
un blogai muthal muthallil paditha poothu unnakku epadiyum oru 40 - 50 vayasirukummu ninichen (avalavu anubhava saliya irukennu solla vanthen).
ippothu innamum viyakiren ! konjam poramai kooda padukiren.
Vazhthukkal thambi.
Regards,
Chennai akka.
Good one:-))
இந்தப் பதிவை உங்கள எழுதத் தூண்டினவாளுக்குத்தான் நன்றி சொல்லணும்..
கலக்கிட்டிங்க..
ரொம்பவே ரசிச்சுப் படிச்சேன்
எச்சுமின்னா. நா ஏன் திரும்பி பார்க்கிறேன்? எச்சுமி என் தம்பி பேர் இல்லியோ? அது சரி..அந்த Mr Bean எனக்கும் பிடிக்கும்...ஏதோ நம்ம தூரத்து சொந்தம் கோனேரி ராஜ புரம் அசட்டு அம்பி ஜாடையில் இருக்கிறது ஒரு காரணம்!
மற்றபடி, அந்த தச்சி மம்மு சூப்பர்!
பிடித்த மூன்று படங்கள்?
i) திருவிளையாடல், எங்கவீட்டு பிள்ளை, நாயகன்
ii) லவுட் ஸ்பீக்கர்(மலையாளம்),மங்காரு மழே(கன்னடம்), மஹதீரா(தெலுங்கு)
iii) தாரே ஜமீன் பர், கிஸ்னா, Jeb we met (ஹிந்தி)
இந்திய, தேசிய ஒருமைப்பாட்டு நாள் சிறப்பு விருதுக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படுகிறது! :))
க்குடு
முதல் கேள்வி ரெண்டாவது பாயிண்ட் உன்னை என் நிலைல வெச்சுப் பாத்தேன். :)
நாலாவது கேள்வி ரெண்டாவது பாயிண்ட் - உனக்கும் இதே சந்தேகமா? எங்க போனாலும் ஜலத்தை உபயோகிப்பதை குறைக்கின்றான். வாஷ் பேசின் குழாயில் ஆட்டோமாடிக் நு வெச்சு சமயத்தில் ஜலமே வராது.
பன்னிரெண்டாவது கேள்வி - பதில்கள் அருமை. நல்ல ரசனை இருக்கு உன்கிட்டே.
\நல்ல பிரகாசமான அறிவு இருந்தும் பண வசதி இல்லாததால படிக்கர்துக்கு கஷ்டப்படும் 4 குழந்தேளுக்கு உபகாரமா எதாவது செய்யனும்.\
Yella pathil kalilum unnai mika oyarum thooki kondu pona pathil ithu.
Un nalla manasukku yelam nalapadiaai nadakkum.
//அதிகாலை நேரத்தில் யாரும் இல்லாத இடத்துல உக்காசுண்டு கீச்சீடும் பறவை சத்தத்துக்கு நடுவில் ஆத்தங்கரைல இருக்கும் ஜலத்தை வேடிக்கை பார்ப்பது..//
(மன) பாரத்தை இறக்கி வைக்கும் அருமையான சூழல் .... Nice!!
//எந்த விதமான பற்றும் இல்லாம, தெரியாத ஊர்ல தெரியாத மனுஷாளுக்கு நடுல பரதேசியாட்டமா நாலு முழ வேஷ்டி & துண்டுடன் மெளன நிலைல நடமாடர்து..//
மதுரைல குழந்தையானந்த சுவாமிகள் இப்படி தான் நடமாடி கொண்டிருந்தாராம் !!
//வெள்ளக்காரன் ஏன் கக்கா போனா ஜலத்தை உபயோகப்படுத்தாம பேப்பர்ல துடைச்சுக்கரான்..//
ஓய அண்ணா ! ஐஸ் கட்டி பிரதேசத்தில குளிர்ந்த தண்ணிய கொண்டு கக்கா அலம்பினா ... (நான் சொல்றது அந்த காலத்துல ) அப்புறம் ஓய அந்த இடம் மரத்து போயிடாது ??
//நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்? ....iii) அடுத்தவாளோட மனசு நோகும் படியான வார்த்தைகள்..//
சூப்பரோ சூப்பர் !
//பயப்படும் மூன்று விஷயங்கள் ... ii) நான் கார் ஓட்டும் போது ரோட்ல வரும் பெரிய கார்கள் //
அந்த எதிர்த்தாப்ல வர்ற கார் காரன்னா பயப்படணும். அவன் வேலைய நீர் ஏன் பண்றீர்?
மொத்தத்துல ஒங்க long awaited பதிவு சூப்பர் !
தக்குடு எல்லாக் கேழ்விக்கும் எதேஷ்டமான பதிலா சொல்லிடே கொழந்தே!(83ல் பொறந்துட்டதுனால உரிமையா 18 வயசு பெரியவன்ங்கற முறைல சொல்லிட்டேன் அம்பி. தப்பில்லையே) ஆனா பொதுவாவே லோகத்ல என்ன பேசிக்கறா தெரியுமோ? எல்லா ஆசைகளுக்கும் க.மு. க.பி.ன்னு ரெண்டு காலம் இருக்கு. ரெண்டு காலத்துலயும் ஆசைகள் ஒரே மாதிரியாயிருந்து நெறைவேறவும் செஞ்சா அவாளுக்கு அடுத்த பிறவி கெடையாதாம்.
க.மு.-கல்யாணத்துக்கு முன்னால்.
After long time oru blog…unoda answers rumba pidichiruku..:-)
'Techops' mami
எல்லா மூன்றும் நல்லாயிருக்கு..
//பொம்ணாட்டிகள் ஏன் “அப்புறம் ஒன்னுமில்லை ஒன்னுமில்லை!”னு சொல்லிட்டு அதுக்கப்புறம் ஒரு மணி நேரம் பேசிண்டு இருக்கா//
டைம்லி டவுட் தான்... அதை அவங்ககிட்டயே கேட்டு பாரேன்...:)))
தக்குடு, கல்யாணம் நிச்சயமாயிருச்சா? சொல்லவே இல்ல? ;)
முத்து முத்தா மூணு மூணு பதிலா?? நல்லா இருக்கு!
ரசனையான பகிர்வுக்கு பாராட்டுக்கள்.
Dear All,
Thanks a lot for your wonderful comments & support for this article....:)
@Thakkudu :Ho tcha... i was probably too late to comment.Fantastic answers thakkudu :) And hey yeah... the page hits on my blog have taken a tremendous increase of-late...athukum thanks!
AWESOME POST THAKKUDU.!!! ENJOYED READING
நல்ல பிரகாசமான அறிவு இருந்தும் பண வசதி இல்லாததால படிக்கர்துக்கு கஷ்டப்படும் 4 குழந்தேளுக்கு உபகாரமா எதாவது செய்யனும்.
ii)குருனாதரிடம் வாங்கிண்ட உம்மாச்சி மந்த்ரம் இரண்டையும் அக்ஷரலக்ஷம் நிஷ்சிந்தையா ஜபம் பண்ணனும்.
iii)ஒரு புஸ்தகமாவது எழுதனும்//
நீங்கள் நினைத்தவை நடக்க என் வாழ்த்துக்கள். நல்லதை நினைத்தால் கண்டிப்பாய் நடக்கும் இறைவன் அருளால்.
Post a Comment
யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)