Part I இவட உண்டு..:)
'ப்ளவுஸ்' சங்கரனுக்கு ஒரு அண்ணா உண்டு, அவன் பேர் என்ன "உ@ பா%$#டை பாலாஜியா?"னு நக்கல் அடிக்காதீங்கோ. அவனுக்கு அந்த மாதிரி எதுவும் பட்டப்பெயர் எல்லாம் கிடையாது அவன் பேரு பாலு. சங்கரனுக்கு நேர் எதிர்மாறான ஆளு அவனோட அண்ணா, சுறுசுறுப்புன்னா அப்பிடி ஒரு சுறுசுறுப்பு. எங்க தெரு கிரிக்கெட் டீம்ல அவனை எடுக்கர்த்துக்கு பயங்கர போட்டியே நடக்கும், சுருக்கமா சொல்லனும்னா கெளதம் கம்பீர் மாதிரி ஆளு, நான் சங்கரன் எல்லாம் கங்குலி மாதிரி சீண்டுவார் இல்லாம இருப்போம். எப்ப பார்த்தாலும் டக் அவுட் ஆனா யாரு எடுப்பா? கிரிக்கெட் மட்டும் இல்லை, கோலிக்காய்,கபடி,பம்பரம்,கிட்டி புல்லுனு எல்லாத்துலையும் பாலு ஆல்-ரவுண்டர். 4 மீட்டர் பம்பரக்கயர் வெச்சு சுத்தினாலும் சங்கரனோட பம்பரம் தலை மாத்திதான் சுத்தும், பாலு அருனாக்கயிரை வெச்சு சுத்தி விட்டாலும் ப்ரமாதமா சுத்தும், சில சமயம் கயரே இல்லாம கையாலையே அகிலா மாமியாத்து திண்ணைல சுத்தி விட்டு 'கோஸ்' எடுத்துடுவான்.
'மைனர்' குஞ்சுமணி!..:)
என்னோட தோஸ்த் சங்கரனுக்கு ஒரு வினோதமான ஒரு குணாதிசியம் உண்டு. புதுசா ஒரு இங்கிலிபீஸ் வார்த்தையை கேட்டுட்டா போதும் ஒரு வாரத்துக்கு அந்த வார்த்தை இல்லாம எதுவும் பேச ஆரம்பிக்க மாட்டான். எங்க தெருல யாரும் இங்கிலிபீஸ் எல்லாம் பேச மாட்டா, ஆனா இந்த பாம்பே,டில்லி,பெங்களூர்லேந்து லீவுக்கு வரும் பையன்கள்/பொண்ணுகள் தான் அதெல்லாம் பேசும். ஹிந்தி எல்லாம் அவ்ளோவா கவனிக்க மாட்டான், ஆனா இங்கிலிபீஸ் வார்த்தை எல்லாம் கூர்மையா கவனிப்பான். ஒரு தடவை ‘சந்தனக்கும்பா’ மாமியாத்துக்கு வந்துருந்த அவாளோட பேத்தி கெளசல்யா எதோ பேசும் போது Ofcourse நு சொல்லிட்டா, அவ்ளோதான் அந்த வார்த்தையை ‘லபக்’னு பிடிச்சுண்டுட்டான் சங்கரன்.
ஒரு வாரத்துக்கு யார் கிட்ட பேசினாலும் Ofcourse இல்லாம பேசலை. எங்காத்து மாமாவை பாத்தியா கோந்தை?னு கேட்ட மாமிக்கு, “Ofcourse மாமா முடுக்குல திருட்டு தம் அடிச்சுண்டு இருக்கார்”னு பதில் சொன்னான். அதே மாதிரி "Ofcourse அகிலா மாமி வாய்க்காலுக்கு குளிக்க போயிருக்கா!” “Ofcourse கோவில்ல தீபாராதனை ஆரம்பிச்சாச்சு! Ofcourse கிச்சா மாமா அடுக்களைல தலப்பா கட்டிண்டு இட்லி வாத்துண்டு இருக்கார்”னு எல்லாத்துலையும் Ofcourse மயம் தான். இங்கிலீபீஸ் பரிட்சைல இவன் வாங்கி இருந்த 22/100 மார்க்கை பாத்துட்டு கடுப்பான எங்க இங்கிலீபீஸ் டீச்சர் கோவத்தோட "என்னை பாத்தா கேனச்சி மாதிரி இருக்காடா உனக்கு?னு கேட்டதுக்கும் வழக்கம் போல “Ofcourse அப்பிடி எல்லாம் இல்லை டீச்சர்!”னு சொல்லி முடிக்கவும் அந்த டீச்சர் பரோட்டா மாஸ்டர் மாதிரி இவனை பிச்சு எறிஞ்சுட்டா. அதுக்கு அப்புறம் தான் அந்த வார்த்தையை விட்டான்.
இந்த சம்பவத்துக்கு அப்புறம் அந்தப் பய இங்கிலிபீஸை கூர்ந்து கவனிச்சாலே எனக்கு திக் திக்னு இருக்கும், இவன் ஏடாகூடமா எதாவது சொல்லி எனக்கும் சேர்த்து தர்ம அடி விழுந்துடுமோனு பயந்துண்டே இருந்தேன். சங்கரன் ஆத்துல ஏற்கனவே நான் சொன்ன மாதிரி தெலுங்கு ரொம்ப நன்னா இருக்கும். போயிஸ்தானு! போன்ஜிஸ்தானு! ஒச்சாயினு! உன்னாலு! அவுனு! இன்டிகே! சேஸ்தானு! பப்பு புலுசு! மஜ்ஜே புலுசு! இதெல்லாம் அவாத்துல நான் கத்துண்ட சுந்தர தெலுங்கு வார்த்தைகள். ஒரு தடவை அவனோட அம்மா எதோ கேட்டதுக்கு “வந்தாச்சு அம்மா!”னு பதில் சொல்ல எத்தனிச்சு அது "வந்துஸ்தானு அவ்வா!"னு தமிலுங்கு ஆயிடுத்து. இனிமே தெலுங்கு பேசினா வடை,பாயாசம் எதுவும் கிடையாதுனு சங்கரன் சொல்லிட்டான். வடைக்கு முன்னாடி தெலுங்கு எனக்கு பெரிசா படாததால அத்தோட தெலுங்குக்கு பை பை சொல்லிட்டேன்.
மார்கழி மாச பஜனை 30 நாள் முடிஞ்சு கடைசி நாள்(பொங்கலுக்கு முந்தினம்) ராத்ரி பஜனை சமாப்தி நடக்கும். அதுக்கு பக்கத்து ஊர்லேந்து எல்லாம் பாகவதர்கள் வருவா. ராத்ரி 8.30 மணிக்கு மேலதான் 'ததரினன்னனா'னு பஜனையை ஸ்டார்ட் மியூசிக் பண்ணுவா. அதுக்கு முன்னாடி பாகவதர்கள் எல்லாருக்கும் ஆஹாரம் ஏற்பாடு பண்ணி இருப்பா. நாங்க தான் பரிமாறுவோம். அந்த சமயத்துல எங்க தெருல ஒரு மாமா ஆத்துக்கு பாம்பேலேந்து தீப்தி வந்து இருந்தா.
அவளுக்கு எல்லாமே அதிசியம் தான். வாய்க்கால்,வாசல்ல போடும் கோலம்,மாமி வெச்சுக்கும் பூ,மாமாவோட பஞ்சகச்சம்,பிள்ளையார் கோவில் மணி,பம்பரம்,கோவில் சுண்டல்/பொங்கல் எல்லாமே அதிசய வஸ்துதான் அவளுக்கு. எங்க கூட பரிமாறும் இடத்துல தீப்தியும் நின்னுண்டு இருந்தது. அப்போ அந்த பக்கம் வந்த மாமா மெதுவா ஒரு வடையை எடுத்து அவரோட பேரன் கைல குடுத்தார். அதை பாத்துட்டு தீப்தி what is this yaa?னு சங்கரன் கிட்ட கேட்டு தொலச்சுருத்து, அவ்ளோதான் சங்கரனுகுள்ள தூங்கிண்டு இருந்த இங்கிலிபீஸ் பூதம் வெளில வந்துடுத்து, “இதுதான் ஷாப் கோக்குனட் டு(tu)க்கு! வே பிளையார் ட(da)க்கு!”னு ஜுனூன் ரேஞ்சுக்கு ஒரு பழமொழியை டிரான்ஸலேட் பண்ணி சொல்ல, அந்த பொண்ணு 10 நிமிஷம் சிரிச்சது.
அந்த பக்கம் ஓசி காபி குடிக்க வந்த ஒரு மாமா "குழந்தேளா, பாகவதாளை எல்லாம் நல்ல கவனிங்கோடா, பாகவத சேவை ரொம்ப ஒசத்தி!னு ப்ளேட் போட்டுட்டு போனார். அவர் போனதுக்கு அப்புறம் பாகவதசேவைனா என்னது?னு தீப்தி கேள்வி கேட்டது. “வாடி என் வானரமே!”னு மனசுக்குள்ள சொல்லிண்டு ஹரிகுட்டி உடனே புளுக ஆரம்பிச்சான். “லெமன் சேவை தேங்காய் சேவை மாதிரி ஒரு வகை, அதை சாப்டா தொண்டை கனீர்னு ஆயிடும், போய் அந்த காபி குடிச்ச மாமா கிட்ட பாகவத சேவை வாளி எங்க இருக்கு?னு கேட்டா சொல்லுவார்"னு சிரிக்காம சொல்லிட்டான்.
பாகவத சேவை..:)
தீப்தியும் போய் அந்த மாமாகிட்ட கேட்க, மாமா தன்னை தான் எடக்கு பண்ணர்து போலருக்கு!னு நினைச்சுண்டு "இந்த காலத்துல குழந்தேளுக்கு சின்னவா பெரியவா வித்தியாசமே இல்லாம போச்சு ஹைய்"னு சொல்லிட்டு போய்ட்டார். பஜனை சமாப்தில ஆரம்பம் எல்லாம் ரொம்ப போரடிக்கும், தீப ப்ரதக்ஷிணம் வரும் போதுதான் நன்னா இருக்கும், ஆம்பளேள் எல்லாருக்கும் நெத்தில எண்ணைல குழைச்ச குங்குமத்தை மார்வாடி மாதிரி நீளமா இட்டு விடுவா. தீபத்தை சுத்தி எல்லா மாமாவும் “ரிங்கா ரிங்கா ரோஸஸ்” மாதிரி ஆடுவா. கடைசில ஆஞ்சனேயர் உத்ஸவம் பாடும் போது எங்க குரூப்ல இருக்கும் ஒரு வானரத்துக்கு நெஜமான ஆஞ்சனேயர் வேஷம் போடுவா. கூடுதலா 4 வடை கிடைக்கும்னு ஆசை பட்டு ‘சக்கப்பழம்’ ஹரீஷ் அந்த வேஷத்தை போடுண்டு வந்தான். அந்த டிரஸ் போட்டுண்டா கடிச்சுபிடிங்கும் அதனால நான் போட்டுக்கலை. ஒரு சின்ன தட்டவொட்டிலேந்து பஜனை நடக்கர இடத்துக்குள்ள பொண்கொழந்தேள் உக்காச்சுண்டு இருக்கர இடத்துல 'தொமார்'னு குதிச்சு சக்கப்பழம் ஸ்பெஷல் எபக்ட் எல்லாம் குடுத்தான்.
ரிங்கா ரிங்கா ரோஸஸ்!...:)
ஆஞ்சனேயரோட மகிமையை பாத்தேளா?னு சொல்லிண்டே பாகவதர் கன்னத்துல போட்டுண்டார். ஆனா பொறாமை பிடிச்ச அகிலா மாமி, “இந்த ஆஞ்சனேயர் நித்யமே இப்படித்தான் குதிப்பார், இன்னிக்கி வாலோட இருக்கார் அவ்ளோதான் வித்தியாசம்!”னு சொல்லவும் எல்லாரும் சிரிச்சா. பொண்கொழந்தேள் பக்கம் குதிச்சதை வெச்சே வேஷம் கட்டி இருக்கர்து சக்கப்பழம்!னு எல்லா மாமிகளும் கண்டுபிடிச்சுட்டா. அதுக்கு அப்புறம் ஆஞ்சனேயர் சகிதமா போய் பாதில ஆத்துக்கு தூங்கப் போன “ஹைப்பர்லிங்” மாமி,”சினிமா” மாமி ஆத்துக்கு எல்லாம் போய் பெல் அடிச்சு எழுப்பிட்டு வருவோம். பஜனை முடிவுல பத்தைலேந்து வரும் ஒரு பாகவதர் “தேஹிலா!தேஹிலா! ஜோகிராத்தராவோ!”னு ஒரு மராட்டி அபங்கம் பாடுவார். எங்க கூட்டத்துக்கு எல்லாம் அதுதான் குத்துப் பாட்டு, அவர் பாடமறந்தாலும் நாங்க விடாம ‘மாமா தேஹிலா! மாமா தேஹிலா!’னு அவரை நச்சரிச்சு பாடச் சொல்லி பாண்டுரெங்கன் மாதிரி இடுப்புல(எங்க இடுப்புல) கை வெச்சுண்டு குதிப்போம் (அப்ப தான் நல்ல பசி வந்து ராத்ரி 2.45 மணிக்கும் நிறையா புளியோதரை சாப்ட முடியும்).
ரொம்ப நாளாவே நானும் ப்ளவுஸ் சங்கரனும் அந்த பாட்டு ‘தேஹிலா!’னு தெரியாமா “கோகிலா! கோகிலா!”னு உச்சஸ்தாயில பாடிண்டு இருந்தோம். அந்த பத்தை பாகவதர் தான் “கோகிலாவும் இல்லை! அகிலாவும் இல்லை!”னு சத்தம் போட்டுட்டு தேஹிலாவுக்கு மாத்திவிட்டார். 2009 செப்டம்பர்ல கல்லிடைல அம்மாவோட நாத்தனாரோட மச்சினராத்துக்கு எதேச்சையா வந்த சங்கரனை பாத்தேன். மெட்ராஸ்ல நல்ல உத்யோகத்துல இருக்கான். பழைய கதை எல்லாம் அவனோட பேசிண்டு இருக்கும் போது.....
யான் - பஜனை பத்தி ஞாபகம் இருக்காடா?
சங்கரன் – Ofcourse, மறக்க முடியுமாடா தக்குடு!
யான் - :))
33 comments:
இப்படி cute ஆக குட்டீஸ் போட்டோ போட்டப்புறம் ..... நான் எங்கே உங்கள் பதிவை வாசிக்கிறது? அந்த போட்டோவையே இன்னும் பார்த்துக்கிட்டு இருக்கிறேன்.... செம.... !
andha kutties picture is my favorite! was my desktop for a while! :))))
//செப்டம்பர்ல கல்லிடைல அம்மாவோட நாத்தனாரோட மச்சினராத்துக்கு// of course! :P
//'மைனர்' குஞ்சுமணி!..:)//
Kuttis Photo too good... அநியாயத்துக்கு கியூட்...not able to move eyes from them...
//தலப்பா கட்டிண்டு இட்லி வாத்துண்டு இருக்கார்//
ஒருவேள அப்படி செஞ்சா இட்லி நல்லா வருமோ? சும்மா ஒரு டவுட் தான்... (ஹ்ம்ம்... என் பிரச்சன எனக்கு)
//சுந்தர தெலுங்கு வார்த்தைகள்//
தெலுகு கொலை பண்ணிட்டு சுந்தர தெலுங்கா? கேக்க ஆள் இல்லையோன்னோ? பேசு பேசு...
//மாமா ஆத்துக்கு பாம்பேலேந்து தீப்தி வந்து இருந்தா//
ஹீரோயின் என்ட்ரியா? ஹா ஹா
சூப்பர் சேவை... பார்த்தாலே பசி வரும் போல இருக்கு... எந்த கடைல (ப்ளாக்ல) திருடின (போட்டோ)?
//ரிங்கா ரிங்கா ரோஸஸ்!...:)//
பாக்கெட் புல் ஆப் வடையா? நல்லா இருக்கே உங்க ஊர் பாட்டு...
//தேஹிலா!’னு தெரியாமா “கோகிலா! கோகிலா!”னு உச்சஸ்தாயில பாடிண்டு இருந்தோம்//
ஹா ஹா ஹா...
//Ofcourse, மறக்க முடியுமாடா தக்குடு!// ரெம்ப நல்லவர் போல இருக்கே... நேத்தைக்கு ஒரு பேச்சு இன்னிக்கி ஒரு பேச்சு இல்ல...எப்பவும் ofcourse ஒரே பேச்சு தான் போல... ஹா ஹா ஹா
நீ சங்கரன் பத்தி எழுதின போஸ்டை அவருக்கு மெயில் அனுப்பனும்
பொங்கலன்னிக்கு பொங்கி பொங்கி சிரிக்க பண்ணிட்டியே....
of course சங்கரனிடம் சிக்கிப்படும் பாட்டை நினைத்தாலே பொங்குது சிரிப்பு..
குட்டி பையனின் ஒரு விரல் அழைப்பும் ,குட்டிப்பெண்ணின் வெட்கமான சினுங்கலும்..படம்னா படம்...
//ஆஞ்சனேயர் நித்யமே இப்படித்தான் குதிப்பார், இன்னிக்கி வாலோட இருக்கார் // அகிலா மாமியோட டைமிங் இருக்கே.. அடிதூள்..
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
திருப்பி வர்றேன் ...சிரிக்க வச்சே மீண்டும் மீண்டும் மீண்டும் இழுத்திரும் இந்த பதிவு...
TKP, part II is good. sankaran address kodu..anupi vaikanam:) idu post A+ polaruke ;)
-vgr
இந்த குட்டி உங்களுக்கு தெரிஞ்சவாளா? ரொம்ப க்யூட். இதற்கு முதலும் எங்கேயோ இந்த படத்தைப் பார்த்தேன். இந்த வயசிலேயே எவ்ளோ வெட்கம் அந்த குட்டியிடம். க்யூட் க்யூட் க்யூட்.
அடே அடே மத்த குட்டி வாண்டு அவளுக்கு கிச்சு கிச்சு மூட்டறானா? அவரோட ஸ்டைலப்பாரு. வளர்ந்தானா எத்தனை பொண்ணுங்கள மயக்குவானோ தெரியல. அவ்ளோ க்யூட்
குட்டிஸ் ரொம்ப cuteஆக இருக்காங்க...சூப்பர்ப்..
//ரிங்கா ரிங்கா ரோஸஸ்!...:)//இது ரொம்ப ஒவர் தக்குடு..
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்....
Of Course எனக்கும் ரொம்ப பிடிச்சிருந்துது.. கொஞ்ச நாழி சிரிச்சுட்டு கமென்ட் போடறேன்.
தேஹிலா... அகிலாவா கேட்டுதுன்னு உண்மையை ஒப்புத்துண்டத்துக்கு நன்னி ஹை!!
பாகவத சேவை எங்களுக்கும் தேவை தக்குடு... ப்ளீஸ். ;-)
//யான்// பினிஷிங் டச் வேறயா.. சூப்பர்.. ;-) ;-)
திரு தக்குடு அவர்களுக்கு, இனிமே உங்க பகிர்வெல்லாம் நான் படிக்கப்போவதில்லை...
அட அலுவலகத்தில் படிக்கப்போவதில்லைன்னு சொல்ல வந்தேன். கூட வேலை செய்யற சர்தார்ஜி, நமக்குதான் பகல் 12 மணிக்கு ஒரு மாதிரி ஆகும், இவனுக்கு என்ன ஆச்சுன்னு ஒரு மாதிரி பார்க்கறான் - நான் விழுந்து விழுந்து தனியா சிரிக்கறத பார்த்து...
வீட்டுல போய் இன்னும் கொஞ்சம் விழறேன்...
//கடைசில ஆஞ்சனேயர் உத்ஸவம் பாடும் போது எங்க குரூப்ல இருக்கும் ஒரு வானரத்துக்கு நெஜமான ஆஞ்சனேயர் வேஷம் போடுவா./
:))))))))))))))))
பொங்கல் நல்வாழ்த்துகள் தக்குடு! :) - ரிங்கா ரிங்கா ரேசஸ் டைட்டில் கொடுத்திருக்கிறதை கண்டிப்பா,அந்த ஆடிக்கிட்டிருக்கிற மக்கள்ஸ் பார்த்தாங்கன்னா உம்மை நிக்கவைச்சு கும்மிடுவாங்க ! :))
மார்கழியும் முடிஞ்சது. தக்குடு பஜன் மஹாத்மியம் எழுதினதும் பக்காவா வந்திருக்கு. இந்தக் குட்டீஸ் போட்டோ தேடறதே தக்குடு பையனுக்கு வேலையாப் போச்சே:)
சீக்கிரம் வகைக்கு ரெண்டா தக்குடு சாம்ராஜ்யத்துக்கு இவர்கள் வரணும். முதலில் தங்ஸ் வரட்டும்.
மனம் நிறைந்த பொங்கல் நந்நாள் வாழ்த்துகள் தக்குடு.
:-))
// பாகவத சேவை..:)// பசி வேளைல பிடிச்ச ஐட்டம் படம் எல்லாம் போடறியே தக்குடு :)
// 'மைனர்' குஞ்சுமணி!..:)// சின்ன வயசு தக்குடுவோ ? (விளையும் பயிர் முளையிலே )
// ரிங்கா ரிங்கா ரோஸஸ்!...:)// இது சூப்பர்
ஷோபா
அருஞ்சொற் பொருள் :
ப்ளவுஸ் சங்கரன் : திருவாளர் தக்குடு
பம்பர ஆல்ரவுண்டர் : நம்ம அம்பி “தங்கக் கம்பி”
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
paavam boss antha paiyan..(ofcourse, ippo periya uncle-aakiruppar..)! :D
but i really liked 'ringa ringa roses'--- whole- "vaadi en vaanarame" part :D
'seva'-- dool! :D
but ellaathaiyum vida--- 'Minor kunjumani' thaan soooooooooper-dooooooooooper! :D :D :D
Hi thakkadu
Rombave nallaeruku, exact timing of bhajani samabthi - good - H.kannan
thkktu nalla irukku antha photo pesaama pakkam pakkama pesarathu.kuttees 2 m jore
தக்குடு
எங்க ஊர்ல கல்லிடைகுறிச்சி காரா எல்லாம் குசும்பு பிடிச்சவானு சொல்லுவா - அதை அப்படியே prove பண்றே.
எங்காத்துல எல்லாரும் ரசித்து சிரித்தோம்.
வடக்கு அரியநாயகிபுரம் ஸ்ரீனிவாச ஐயர்.
\\\யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)//
Of course..
தெரியறது. நல்லாவே இருக்கு.
Of course, தக்குடு பதிவுன்னா சூப்பராதான் இருக்கும் :)
பாகவத சேவை செய்ய (சாப்பிட) குடுத்து வச்சிருக்கணுமே! :)
ஆஞ்சநேயர் வேஷம் போட்டுண்டு பொம்மனாட்டிஸ் பக்கம் போகக் கூடாது கேட்டேளா... சொல்லி வைங்கோ!
'ஹைப்பர்லிங்' மாமி? பேர் வைக்கிறது கூட ஹைடெக் ஆயிடுத்தே :)
குட்டீஸ் ச்சோ க்யூட். Of course!
super thakuddu, ofcourse comment pass panuven, eppavellam enthamathri natakratha bhajan ellam. taken me to my school days, vairu vallika serchen.
Teacher joke pramadham and the chittu kuttis photo is wonderful
Nice continuation,bagavadha sevai paaka romba nallarku,is there really anything named like that?
@ ரக்ஸ்ஸ்ஸ் அக்கா - //is there really anything named like that? // நீங்க இவ்ளோ அப்பாவியா இருப்பேள்னு எதிர்பார்க்கவே இல்லை(அதுவும் ஜெய்ஷ்ரீ அக்கா கூட தோழியா இருந்தும்). பாகவத சேவைனு ஒரு ரெசிப்பி எல்லாம் நெஜம்மா கிடையாது, அது சாதாரண சேவை தான். உங்க கமண்ட் பாத்துட்டு 'புலுக்'னு சிரிச்சேன்..:)
Super article pongoo! sirippu kollalai yenakku, kikipikinu sirichundeyyy irukken.
Kallidai mami
cute babies..
ரிங்கா ரிங்கா ரோசஸ் :-))))). இதுமட்டும் அவங்களுக்கு தெரிஞ்சது!!.. அப்றம் நடுவால உங்களை உக்காத்திவெச்சு பாடுவாங்க கேட்டேளா :-)))
இப்பத்தான் படிச்சேன் கண்ஸ்..இயல்பான உன்நடை முதல்ல நன்னாருக்கு.. குட்டீஸ் போட்டோ கண்ணுபட்டுடும்.மகாகுறும்பாயிண்டுவரே இப்போல்லாம் அது இந்தப்பதிவிலயும் தெரியறது:) ஆனா ரொம்பவே ரசிச்சேன்!
ஷைலஜா
@ சித்ரா அக்கா - அப்போ பதிவை படிக்கவே இல்லை!!..:((
@ கொடியக்கா - நன்னிஹை!..:)
@ இட்லி மாமி - //ஒருவேள அப்படி செஞ்சா இட்லி நல்லா வருமோ// என்னத்த செஞ்சாலும் உங்க இட்லி ஒழுங்கா வராது...:PP ஆனா நீங்க தலப்பா கட்டிண்டு இட்லி வார்த்தா அந்த போட்டோவை அனுப்பி வைக்கவும்!..;)
@LK - அவனை தான் உங்களுக்கு தெரியாதே!!..:)
@ ரசிகமணி - ரொம்ப சந்தோஷம் அண்ணா!..:)
@ VGR - //idu post A+ polaruke ;)// அப்போ, ரொம்ம்ம்ம்ப நன்னா இருக்கு!னு அர்த்தம் இல்லையா?..:)
@ மின்னல் - ஆத்தா, பதிவையும் கொஞ்சம் படிக்கவும்.
@ கீதா அக்கா - நான் பேசாம குட்டீஸோட போட்டோ மட்டும் போட்டு இருக்கலாம்..:0
@ மன்னார்குடி மைனர் - சில பேருக்கு சில பெயரை கேட்டாலே சந்தோஷமா இருக்கு!!..:P
@ வெங்கட் சார் - ரொம்ப சந்தோஷம் சார்!..:)
@ ஆயிலு - ஆமாம், நல்ல மரியாதை செய்வார்கள்!..;)
@ வல்லிம்மா - உங்க வாயால சொன்னா நிச்சயம் பலிக்கும், ஆனா 4 எல்லாம் தாங்காது!!..:)
@ திவாண்ணா - :))
@ ஷோபா மேடம் - யூ ஆர் ரைட்! சின்ன வயசுல எனக்கு ஒரு கேர்ள் ப்ரண்ட் உண்டு!..:)
@ நாட்டாமை - அம்பிக்கு பம்பரம் சுத்தவே தெரியாது!..:P அவனுக்கு பஞ்சாபி குதிரை தான் தெரியும்!
@ மாதங்கி - அனேகமா மைனர் குஞ்சுமணிக்கு ரசிகர் மன்றம் வந்துடும் போலருக்கு..:)
@ கண்ணன் அண்ணா - சந்தோஷம் அண்ணா!..;0
@ மாமா - :))
@ கோபாலன் சார் - இந்த அரியனாயகி புரத்துக்காராளை பத்தி எங்க ஊர்ல என்ன சொல்லுவா தெரியுமா??..;))
@ குமரன் - :))
@ கவினயா - ஹைப்பர்லிங் மாமிய்ப்ப்ட முழு விபரம் வெகுவிரைவில்...;0
@ வித்யா அக்கா - ரொம்ப சந்தோஷம் அக்கா!..:)
@ சாந்தி மாமி - ஓஹோ!..:)
@ கல்லிடை மாமி - ஆஹா! யாரு கண்ணுல படக்கூடாதுனு நினைச்சேனோ அவா கண்ணுல தான் படர்து. நமக்குள்ள இருக்கனும் எதுனாலும்!..;0
@ அமைதி அக்கா - ஹ ஹ ஆமாம்!..:)
@ ஷைலஜா அக்கா - உங்களுக்கு அம்பி எழுதினாதான் படிக்க டைம் கிடைக்கும் தக்குடுவை எல்லாம் பாப்பேளா!!..;PP
அந்தக்குட்டிக்குழந்தைகள் போட்டோ வெகு ஜோர்.
நல்லா நகைச்சுவையா எழுதியிருக்கேள். ப்ளவுஸ் சங்கரன்னு தலைப்பே சூப்பர், சார்.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
@ gopal sir - thks a lot for your nice words! you can call me Thakkudu! 'sir' yellam vendaam, unga pullai maathiri nenachukkalam!..:)
Post a Comment
யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)