Thursday, June 2, 2011

அம்மா புடவை

மொத்தமே 4 அடி உயரம் கூட இருக்கமாட்டா அந்த மாமி. சதாசர்வகாலமும் மடிசார் புடவைதான் கட்டிண்டு இருப்பா. கொஞ்சம் கூட ஒரு படாடோபமே இல்லாதைக்கி ரெண்டு கைலயும் ஒரே ஒரு வளையல் தான் போட்டுண்டு இருப்பா. 60 வயசுனு சொல்லர்துக்கு இல்லாம 3 பேர் பாக்கர ஆத்து வேலையெல்லாம் தனி ஆளாவே பாத்துடுவா. அவாத்து மாமா வாத்தியார்(புரோகிதர்). அவாத்துல சட்னி எல்லாம் அரைச்சதுக்கு அப்புறம் தாளிச்சு கொட்டர்துக்கு கவலையே படவேண்டாம் கடுகையும் உளுத்தம்பருப்பையும் மாமாவோட முகத்துல போட்டாலே வெடிச்சுடும், அந்த அளவுக்கு கோபமே வராத மனுஷர். 6 பிள்ளைகள் 5 பொண்கொழந்தேள் 13 பேரன்கள் 12 பேத்திகள் ஆறு கொள்ளுப்பேரன்/பேத்திகள்னு பெரிய சம்சாரி.

இவ்ளோ பேர் இருந்தாலும் அந்த மாமி யார்கிட்டயும் அளவுக்கு அதிகமா பாசம் வைக்கமாட்டா. எல்லாரும் அவாளுக்கு ஒன்னுதான். அந்த மாமி பேசர்தை எல்லாம் பாத்தாக்க எதோ யோகி மாதிரி நமக்கு தோணும். விஷக்காய்ச்சலே வந்தாலும் அசராம 4.30 மணிக்கு வாசல் தெளிப்பா. அவாளோட மனோ வலிமை அசாத்யமானது. எனக்கு அந்த மாமியை ரொம்ப பிடிக்கும். என்னோட அம்மா மாதிரி உரிமையா அவாள்ட பேசுவேன். துண்டை கட்டிண்டு உடம்பு பூரா விபூதி இட்டுண்டு பண்டாரம் மாதிரி இருக்கும் என்னை பாத்தாக்க அந்த மாமிக்கும் சிரிப்பு சிரிப்பா வரும். ஆவணியாவட்டம் அன்னிக்கி வாத்யார் மாமாவை நமஸ்காரம் பண்ண போனா இந்த மாமி வாத்யார் மாமாவோட பையை நோண்டி ஒரு பத்து ரூபாயை அவருக்கு தெரியாம எட்டா மடிச்சு பழத்தோட அடில வச்சு ஆசையா தருவா. அவாத்து மாமா பூஜை பண்ணும் கோவிலுக்கு கொழக்கட்டை பண்ணினா தனியா 2 எடுத்து வெச்சுருந்து அவாத்தை நான் தாண்டி போகும் போது "இங்க வாடா கோந்தை"னு கூப்பிட்டு தருவா. அந்த மாமி ரொம்ப பிரமாதமான ருசியோட பண்ணியும் இருக்கமாட்டா, ஆனாலும் ஆசையோட அவா தரும் போது வாங்கிக்கவே ரொம்ப ஆசையா இருக்கும்.

சில வஸ்துக்களை நாம அதோட விலையை வெச்சோ,ருசியை வெச்சோ அளக்க முடியாது. அந்த வகைல அந்த மாமி பாசத்தோட தரும் மாத்ரு பாவம் தான் எனக்கு ரொம்ப ரொம்ப பெரிசா தெரியும். கல்யாணம் ஆகி ரொம்ப வருஷமா சந்தான பாக்கியம் இல்லாத ஒரு அம்மாவுக்கு ஒரு குழந்தையை பார்க்கும்போது அவாளோட கண்ணுல ஒரு அழகான வாத்சல்யம் தெரியும். வெறும் குங்குமம் மட்டுமே இட்டுக்கும் இந்த மாமியோட வதனத்திலும் அந்த பூரிப்பை உணர்ந்ததுண்டு.

அம்மா - எல்லா சாமானையும் எடுத்து வச்சுண்டையாடா? சோப்புடப்பா எடுத்துவைச்சையா? பெங்களூர்ல எப்போதுமே தனுப்பா இருக்குமாமே, ஸ்வட்டரும் ஷாலும் வெச்சுக்கோடா கோந்தை!

அப்பா - எப்போதும் குளுந்து விரைச்சாக்க பனியன் ஜட்டி எல்லாம் எப்பிடி காயும்? கூட ரெண்டு பனியன் ஜட்டி வெச்சுக்கோடா! பெரியவன் கொஞ்சம் கோவக்காரன், அவன் எதாவது சொன்னாக்க, சரி!னு கேளு! அவனை படுத்தாதைக்கி இரு! துட்டை பாத்து செலவழி!

அம்மா - சின்னவன்கிட்ட கோபப்படாதே! சத்தம் போடாதே!னு பெரியன்ட சொல்லி இருக்கேன் நீயும் சமத்தா இரு கோந்தை! துட்டை பத்தி பாக்காதே! வேளாவேளைக்கு ஒழுங்கா வயிறு நிறைய சாப்பிடு.

அப்பா - பட்டாசாலைக்கு போய் உம்புள்ளை என்னத்தையோ தூக்கிண்டு வருது பாருடீ!

மேல சொன்ன சம்பாஷனை எல்லாம் அடியேன் பெங்களூர் கிளம்பும் போது அம்மாப்பாட்ட இருந்து வந்தது. சம்பாஷனைக்கு நடுல கர்மஸ்ரத்தையா நான் தூக்கிண்டு வந்து பை உள்ள வெச்சுண்டது எங்க அம்மாவோட பழைய காட்டன் புடவை. இத்தனை வயசுக்கு அப்புறம் புடவைல தாச்சுண்டா பெங்களூர்ல இருக்கரவா எல்லாம் கேலி பண்ணமாட்டாளா கோந்தை?னு கேட்டுண்டு இருக்கும் போது அவளோட கண்ணுல ஜலம் வர ஆரம்பிச்சாச்சு. (வலது கண்ணுக்கு தெரியாம இடது கண்ணால எங்கையாவது கண்ணீர் விட முடியுமோ? அவள் கண் லவலேசம் மாறும் போதே நேக்கும் தெரிஞ்சாச்சு..)

ராத்ரி தூங்கர்துக்கு அம்மாவோட புடவையை விடவும் செளகர்யமான ஒரு வஸ்து லோகத்துலேயே கிடையாது. ராத்ரி படுக்கைல படுத்துண்டு அம்மா புடவையை மோந்து பாத்த உடனே ரம்யமா ஒரு தூக்கம் வரும் பாருங்கோ! அதுக்கு ஈடுஇணை கிடையாது. நன்னா பெருக்கி மொழுகின மண்வாசனை வீசும் கொல்லம் செங்கல் தரையும் அம்மா புடவையும் இருந்தாக்கா தூக்கம் வராதவாளுக்கு கூட வரும். அதனால தான் பெங்களூருக்கும் அதை தூக்கிண்டு போனேன். அதுல தாச்சுண்டா அம்மா மடில படுத்துக்கர மாதிரி ஒரு திருப்தி கிட்டும்.

போன வருஷம் தோஹாவுக்கு வந்த புதுசுல தனியா ஒரு வீட்ல தூக்கி போட்டுட்டா. பெரிய சூரப்புலியாட்டமா தலையை ரெண்டு பக்கமும் ஆட்டி அந்த வீட்டை ஒத்துண்டாச்சு ஆனா பேச்சுதுணைக்கு ஒருத்தரும் இல்லாம, சண்டை போட்டு செல்லமா 4 அடி குடுக்க அண்ணாவும் இல்லாம கோட்டி பிடிச்ச மாதிரி ஆயிடுத்து. அங்க இருந்த டிவியை நோண்டி பாத்ததுல ஒரே ஒரு ஹிந்தி சேனல் வந்தது. ராத்ரி சாப்டுட்டு படம் பார்க்க உக்காசுண்டா 'தாரே சமீன் பர்' அமீர்கான் நடிச்ச படம் போட்டான். அதுல ஒரு புள்ளையாண்டான் நம்பளை மாதிரியே படிக்காம ஊரை சுத்திண்டு தத்தாரியா வந்ததை பாத்த உடனே "என் இனமடா நீ"னு சொல்லிட்டு சுவாரசியமா பார்க ஆரம்பிச்சா அந்த புள்ளையாண்டனும் சரியான அம்மா கோண்டு!..:)அம்மா கோண்டு....:)

ஆஹா இவன் நம்பளை அழவிட்டுருவான் போலருக்கே!னு நினைச்சுண்டு இருக்கும் போதே அந்த செல்லபையனை ஹாஸ்டல்ல விட்டுட்டு போகர்துக்கு மனசே இல்லாம அந்த அம்மா கார்ல போக, இந்த பக்கம் ஹாஸ்டல்ல அவாளோட செல்லக்குட்டி விக்கி விக்கி அழ, ஒரு பாட்டை வேற போட எல்லாத்தையும் பாத்த நம்ப மனசுல இடி! கண்ணுல மழை! ஓஓஓஓஓ!னு அழ ஆரம்பிச்சவன் தான் . அது ஏன் எல்லா சோதனையும் கடைசில பிறக்கும் கொழந்தேளுக்கே வருது?னு நினைச்சு நினைச்சு ஒரே அழுகை. ஒரு மாதிரி அந்த பையன் அவனோட அம்மாட்ட சேந்ததுக்கு அப்புறம் தான் மனசு சமாதானம் ஆச்சு.

மூனு நாள் முன்னாடி அம்மாட்ட போன்ல பேசிண்டு இருக்கும் போது, “வாத்யாராத்து மாமி போய்ட்டா கோந்தை!”னு எங்க அம்மா சொன்னது மட்டும் தான் காதுல விழுந்தது. கம்ப்யூட்டர் திரைல யாரோ ஜலத்தை வாரி விட்ட மாதிரி இருந்தது. என்ன??னு யோசிக்கும் போதே என்னோட கன்னத்துல தாரை தாரையா சில துளிகள் தரையை நோக்கி ஓடிண்டு இருக்கு. அப்புறம் என்ன? மூக்கு சிந்தி நிம்மதியா அழர்துக்கு ‘நின்னையே கதி என்று’ பாத்ரூமை தஞ்சம் அடைஞ்சேன்.

எல்லாம் இந்த அம்மா புடவையால வந்தது........................

58 comments:

Anonymous said...

Super

RVS said...

தக்குடு... டச்சிங்... டச்சிங்... இதையே நான் அம்மா வாசனைன்னு சொல்லுவேன். ரொம்ப அழுகாச்சியா இருக்குப்பா..

Anonymous said...

இன்னா நடக்குது இங்கே. பையன் ரொம்பவே சென்டிமென்டா பதிவு போடறானே. சம்திங் இருக்கு. கேடிக்கா, கொஞ்சம் என்னானு துப்பறிஞ்சு சொல்லுங்கப்பா.

meenamuthu said...

அய்யோ தக்குடு(சமத்து கோந்தைய நெனச்சா)எனக்கும் அழுகாச்சியா வருதே:(

lata raja said...

அடடா, அம்மா கோண்டுன்னு சொல்லிட்டு புடவை பட்டி எல்லாம் எழுதினப்புறம் கடைசில இப்டி மாமியோட காலமானதை சொல்லி அழ வச்சுட்டியே தக்குடு.மாமி ஆத்மா சாந்தி அடையட்டுமப்பா.

பத்மநாபன் said...

உருக்க வச்சுட்டே தக்குடு....

வெண்கல கடை said...

//அவாத்துல சட்னி எல்லாம் அரைச்சதுக்கு அப்புறம் தாளிச்சு கொட்டர்துக்கு கவலையே படவேண்டாம் கடுகையும் உளுத்தம்பருப்பையும் மாமாவோட முகத்துல போட்டாலே வெடிச்சுடும்//
தக்குடு என்னதான் நீங்க அழுகாச்சி பதிவு போட்ருந்தாலும் ...எனக்கு இன்னும் இத படிச்சப்போ வந்த சிரிப்பு அடங்கல...nice post

Anonymous said...

One your best post Thakkudu!!! Hats off to you.
Vidya akka.

Vasagan said...

அம்மா புடவை செண்டிமெண்ட் எனக்கும் உண்டு, அந்த காட்டன் புடவை யில் உள்ள softness மற்றும் அதில் நாம் உணரும் அவர்கள் வாசனை எப்பொழுதும் அவர்கள் நம் உடன் இருப்பதை போல் இருக்கும். அம்மா நினைவை வரவைத்து விட்டாய். அவர்கள் இறந்த பிறகு இப்போது மனைவின் புடவை.

வல்லிசிம்ஹன் said...

SORRY ma THAKKUDU. PAAVAM ANTHA MAAMIYODA KUZHANTHAIKAL. UNNAIYUM SERTHTHUTHAAN SOLREN.

ENGA AMMAA PUDAVAI INNUM ENKITTA IRUKKU.

கவிநயா said...

how chweet! கோந்தைக்கு சுத்தி போடணும் :)
சேலை கட்டற பொண்ணா பார்த்து கட்டிக்கவும்!
(I mean - கல்யாணம் கட்டிக்கவும் :)

மாமிக்காக என்னுடைய பிரார்த்தனைகள்.

siva said...

me the firstu...

ambi nanavey post podrel...thisti sutthipodungoo..

Shanthi said...

Touching story. Best of the posts.

Anonymous said...

eppodhum sirikka airikka padikka kedaikkum. ippdi azha azha padikrathu idhuthan first time. ivvalavu poo madhiri manasu ulla ungalukku thaguntha vazhkai thunai kidaikka vazhthukkal. maamikkaga enadu praarthanaigal.sasisuga203@yahoo.co.in

வெங்கட் நாகராஜ் said...

அம்மான்னா அம்மாதான் தக்குடு... பாசமுள்ள வாத்தியாராத்து மாமி பற்றி படித்து விட்டு, நடுவில் அம்மா பற்றி எழுதி, கடைசியில் மாமி போன விஷயம் படித்தவுடன் சோகம் வந்து அப்பிக் கொண்டுவிட்டது....

நல்ல பகிர்வு.

திவா said...

கவிநயாஆஆஆஆ! :-)))))))

jeyashrisuresh said...

nice post thakkudu, i am sure u will write a post titled"wife's duppatta" when ur wife go for delivery.
Let the mami's soul rest in peace.

Anonymous said...

http://www.youtube.com/watch?v=ZWgj6I0YGxE
Shobha

இராஜராஜேஸ்வரி said...

என் மகனுக்கும் இந்த புடவை சென்டிமெண்ட் உண்டுதான். வெளிநாட்டில் இருக்கும் மகனின் நினைவு ஒவ்வொரு மணித்துளியிலும்.
அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

Anonymous said...

என்ன ஒய் தக்குடு அதிகமாவெ அழுகாச்சி காமிக்கிராய். எல்லாம் இன்னும் ஆறு மாதம்தான்.
----H.கண்ணன் ---

Anonymous said...

Konjam kuRumbu; konjam nakkal ivatrukkup pinnaal niRaya 'vikkalum' iruppathu purigiRathu! thakkuduvin aaLumaiyai veLippaduththum pathivu!
¦¸¡ïºõ ÌÚõÒ; ¦¸¡ïºõ ¿ì¸ø þÅüÚìÌô À¢ýÉ¡ø ¿¢È 'Å¢ì¸Öõ' þÕôÀÐ Ò¡¢¸¢ÈÐ! ¾ìÌÎÅ¢ý ¬Ù¨Á¨Â ¦ÅÇ¢ôÀÎòÐõ À¾¢×!-subu

SRINIVAS GOPALAN said...

Is this ur first senti post?

Chella Nilaa said...

Forgot to bring Amma's saree to US. Missing it sooo much after reading your post now! :(

Mahi said...

மறைந்தவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தனைகள்!

அப்பப்ப சடன் ஷாக் பதிவுகள் குடுத்துடறீங்க தக்குடு.

Gopikaa Ramanan said...

Nice post thakkudu...ungaluku serious-aah kuda ezhutha varuma?! Well...so touching it was!

Anonymous said...

Yethana naaliku amma podavai vaasam???????? Konja naliku apparam :-)

Centimenta aaramichu tragedy la mudichitu….antha maami athma santhi adaya yen prarthanigal.

'Techops' mami

KParthasarathi said...

மனதை மிகவும் நெகிழ வைத்தது உங்களுடைய பகிர்வு.
அப்படியே கண்ணெதிரில் நிற்கின்றது நீங்கள் விவரித்த உருக்கமான சம்பவங்கள்

The Kid said...

love your blog :-)

Lakshmi said...

தக்குடு, உங்களை வலைச்சரத்தில் அறிமுகம்
செய்திருக்கேன். நேரம் கிடைக்கும் போது வந்து
பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_07.html

அப்பாவி தங்கமணி said...

நான் சும்மாவே Home Sick Case... உன்னோட போஸ்ட் படிச்சு அன்னைக்கி கமெண்ட் போட கூட மூட் இல்ல... பேசாம போயிட்டேன்... இனி எப்ப பாக்கறதோ அம்மாவை... :((

vgr said...

sentimento sentimentaisyaha!
sentimentadi sentimentemu!
sentimentamaha!!!

(Mis)Chief Editor said...

இந்த மாதிரி அம்மா கோண்டுகள் நாளைக்கே ஒருத்தியை கை பிடிச்சப்புறமா மாறிப் போயி, 'அவ' பின்னாடியே அலையும்கள்...!! தக்குடு! நீங்களும் அப்டி ஆகறதுக்கு நெறையா சான்ஸ் இருக்கு!!'அம்மா' செண்டிமெண்டை வெச்சிக்கிட்டு எவ்ளோ எழுதினாலும் சூப்பரோ சூப்பரா 'வள்ளல் 'வரும்! அதுக்கு நானும் விதி விலக்கல்ல! ஒண்ணை இங்கே போட்டாச்சு!

-பருப்பு ஆசிரியர்

Matangi Mawley said...

antha maami.... :(

enakku therinja oru aunty-yoda gyaabagam vanthuduththu... avaalukkum kozhanthaikal mela thani affinity... antha aunty ippo illa... athanaala konjam extra sad-aa irunthuthu...

rooooommmmmbbbba seekram comment pottitten...!

தி. ரா. ச.(T.R.C.) said...

கோட்டி பிடிச்ச மாதிரி ஆயிடுத்து. correct ippo vantha pothu paathene

தி. ரா. ச.(T.R.C.) said...

ராத்ரி தூங்கர்துக்கு அம்மாவோட புடவையை விடவும் செளகர்யமான ஒரு வஸ்து லோகத்துலேயே கிடையாது
சரியாச் சொன்னே கணேசா. நானும் இதே மாத்ரிதான். அம்மா போய் 47 வருஷம் ஆனாலும் இன்னிக்கும் அம்மா வாங்கித்தந்த அதே எவெர்சில்வெர் பிளேட்தான் சாப்பாட்டுக்கு

bandhu said...

pretty nice!

Madhuram said...

Thakkudu enga poitta?

தக்குடு said...

@ அனானி - நன்னிஹை!!

@ மைனர்வாள் - அதே! அதே!..:)

@ சுனாமி - சம்திங் சம்திங் எல்லாம் ராஜஸ்தான்ல தான் இருக்கு..:PP

@ மீனா அக்கா - செளக்கியமா அக்கா??

@ நைஜீரியா மாமி - என்ன பண்ணர்து சொல்லுங்கோ!!..:((

@ ரசிகமணி - :(

@ வெண்கல கடை - சேட்டை தான் உங்களுக்கு!..:P

@ வித்யா அக்கா - நன்னிஹை!

@ வாசகன் மாமா - உண்மையை ஒத்துக்க தைரியம் வேணும் அது நம்ப ரெண்டு பேருக்கும் இருக்கு மாமா..:)

@ வல்லிம்மா - ஓஹோ!! லக்கிதான் நீங்க

@ கவினயா அக்கா - சிரிக்கவா வைக்கறேள்?? அடி கிட்டும் உங்களுக்கு!!..:))

@ சிவா - ராஇட்டு சார்!!..:)

@ 'பாங்க்' மாமி - நன்னிஹை! நீங்க சொன்னா சரிதான்..:)

@ சசி மேடம் - உங்களோட நல்ல மனசுக்கு ரொம்ப நன்றி!!

@ வெங்கட் அண்ணா - தாங்கீஸ்!!

@ திவா அண்ணா - :))

தக்குடு said...

@ ஜெய்ஷ்ரீ அக்கா - போட்டா போச்சு அவ்ளோ தானே!!..:)

@ ஷோபா மாமி - அடிபொலி பாட்டு!!

@ ராஜி அக்கா - அந்த நினைவு இருந்தா மனசுல நிறையா பாசம் உள்ளவனா இருப்பான் உங்க பிள்ளை!!

@ கண்ணாண்ணா - :)))

@ சுப்பு சார் - :)))

@ கோபாலன் அண்ணா - ஏற்கனவே அண்ணாச்சி பதிவு போட்டு இருக்கேன்.

@ நிலா மேடம் - அச்ச்ச்ச்சோ!! மறந்து போவாளா??..:(

@ மஹி - யான் எந்து செய்யும்??..:(

@ கோபிகா - தக்குடு எழுதினா யாரு சீரியஸா எடுத்துக்கரா?? ஹும்ம்ம்!!..:)

@ Techops மாமி - பாப்போமே!!..:))

@ சாரதி அண்ணா - செளக்கியமா அண்ணா?

@ குழந்தை - :))

@ லெக்ஷ்மி அம்மா - ரொம்ப சந்தோஷம்!!..:)

@ இட்லி மாமி - நீங்க தான் பீலிங்க்ஸ் ஆப் கனடானு லோகத்துக்கே தெரியுமே!!..:)

@VGR - :)))

@ பருப்பு ஆசிரியர் - தங்கள் சித்தப்படியே அமையட்டும்..:))

@ மாதங்கி - நானும் நீங்களும் எப்போதுமே மங்களம் பாட தான் வருவோம்..:))

@ TRC மாமா - சோஓஓஓ ஸ்வீட் மாமா...:))

@ பந்து - நன்னிஹை!!

@ மதுரம் அக்கா - வந்தாச்சு! வந்தாச்சு!..:)

இராஜராஜேஸ்வரி said...

http://blogintamil.blogspot.com/2011/06/2_24.html///


தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். பார்த்து கருத்துரை தெரிவிக்கவும். நன்றி..

கடம்பவன குயில் said...

வலைச்சரத்தில் பார்த்துட்டுதான் உங்க தளத்துக்கு வந்தேன். முதன்முதலில் வந்த என்னை அழவச்சுட்டீங்களே. அப்படியே நிகழ்வுகளை கண்முன் நிப்பாட்டியது தங்கள் கதை. ஃபன்டாஸ்டிக்.

சிவகுமாரன் said...

எனக்கும் அழுகை வந்தது தக்குடு இறுதியில்.
வாத்யார் மாமியின் ஆத்மா சாந்தி அடையட்டும்

kggouthaman said...

நல்ல பதிவு. அம்மா புடவை பற்றி படிக்கும்பொழுது, என்னுடைய தம்பியின் நடவடிக்கைகள் போலவே இருக்கிறது!

RAMVI said...

வணக்கம் தக்குடு என்பதிவிர்க்கு வந்து கருத்து சொன்னதற்க்கு..

உங்கள்து இந்த பதிவை படித்ததும், நான் முதன்முதலில் வேலை கிடைத்து சேலத்தில் லேடிஸ் ஹாஸ்டலில் தங்கிய போது என்க்கிருந்த இதே மனநிலை நினைவுக்கு வந்தது.நமக்கு எததனை வயதானாலும், அம்மாவின் பாசம்,வாத்ஸல்யம்..இதுக்கு இருக்கிற சக்தி தனிதான்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அருமையான வர்ணனைகள். பாராட்டுக்கள்.

மிகவும் பிடித்த வரிகள்:

//சில வஸ்துக்களை நாம அதோட விலையை வெச்சோ,ருசியை வெச்சோ அளக்க முடியாது. அந்த வகைல அந்த மாமி பாசத்தோட தரும் மாத்ரு பாவம் தான் எனக்கு ரொம்ப ரொம்ப பெரிசா தெரியும். கல்யாணம் ஆகி ரொம்ப வருஷமா சந்தான பாக்கியம் இல்லாத ஒரு அம்மாவுக்கு ஒரு குழந்தையை பார்க்கும்போது அவாளோட கண்ணுல ஒரு அழகான வாத்சல்யம் தெரியும். வெறும் குங்குமம் மட்டுமே இட்டுக்கும் இந்த மாமியோட வதனத்திலும் அந்த பூரிப்பை உணர்ந்ததுண்டு. //

அம்மான்னா அம்மா தான்.
மீதியெல்லாமே சும்மா தான்.
படித்ததும் என் அம்மா நினவு வந்து கண்கலங்கினேன்.

பகிர்வுக்கு நன்றி.

தக்குடு said...

@ ராஜி மேடம் - ரொம்ப நன்னிஹை!!..:)

@ குயில் - //கடம்பவன குயில்// பேரே பிரமாதமா இருக்கு போங்கோ!!..:)

@ சிவகுமரன் - வாருங்கள் கவிஞரே! நலமா?

@ கெளதமன் - அப்பிடியா அண்ணா!..:)

@ ரமா அக்கா - வருகைக்கும் கருத்துக்கும் நன்னி! பெங்களூர்ல இருக்கேள் போலருக்கே? நம்ப ஊர்ல எல்லாரும் செளக்கியமா?

@ வை கோ சார் - வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!..:)

Anonymous said...

Ivlo naalum unga bloga miss pannitomennu varuthama irukku. Romba sentiment a irukku. Very nice

angelin said...

very touching .நானும் அம்மா புடவைய எடுத்து வந்துட்டேன் .அதிலயும் சின்னாள பட்டு
புடவை ரொம்ப ரொம்ப soft .அழுகாச்சி அழுகாச்சியா வருது

தக்குடு said...

@ En samayal - Thks a lot for your nice words & first visit to my blog!..:)

@ Angelin - welcome madam!

கவி அழகன் said...

கலக்கலா எழுதியிருக்கிங்க வாழ்த்துக்கள்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஊஹூம்... நான் எங்க பாட்டி பொடவைல தான் தாச்சுப்பேன்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

புரோஹிதரை வாத்யார்ங்கறது திருநெல்வேலி, நாகர்கோவில் வழக்கமாச்சே! சார் வாள் நாகர்கோவிலோ?

தக்குடு said...

@ கவிஅழகன் - நன்றி!!

@ ராமமூர்த்தி சார் - அம்மம்மாவோட புடவைனு சொல்லுங்கோ!..:) அடியேன் திருனெல்வேலி ஜில்லா!!

அமுதா கிருஷ்ணா said...

ம்.பசங்க தான் இப்படி அம்மா புடவையில் தூங்குறாங்கன்னு நினைக்கிறேன்.டச்சிங்...

srividhya Ravikumar said...

Epavum thakudu voda post padicha manasu lesa agum...ana ithu baram akiduthu..

radhakrishnan said...

superb thakkudu,
amma ninaivai kilarivitteerkale.amma ammathan
marrathellam summa (pakkaththil yarum illiye)

தக்குடு said...

@ அமுதா மேடம் - கரெக்டு தான் :)

@ வித்யா அக்கா - சிலசமயம் சோகமும் நல்லது தான் :)

@ ராதாகிருஷ்ணன் சார் - நன்னிஹை!!

கோமதி அரசு said...

சில வஸ்துக்களை நாம அதோட விலையை வெச்சோ,ருசியை வெச்சோ அளக்க முடியாது. அந்த வகைல அந்த மாமி பாசத்தோட தரும் மாத்ரு பாவம் தான் எனக்கு ரொம்ப ரொம்ப பெரிசா தெரியும். //

ஆம் தக்குடு நீங்கள் சொல்வது உண்மை. அன்புடன் கொடுப்பது தான் மனதில் நிக்கும்.

அம்மா புடவையை மோந்து பாத்த உடனே ரம்யமா ஒரு தூக்கம் வரும் பாருங்கோ! அதுக்கு ஈடுஇணை கிடையாது. //

நிச்சியமாய் ஈடு இணை கிடையாது உண்மை, உண்மை.

மூனு நாள் முன்னாடி அம்மாட்ட போன்ல பேசிண்டு இருக்கும் போது, “வாத்யாராத்து மாமி போய்ட்டா கோந்தை!”னு எங்க அம்மா சொன்னது மட்டும் தான் காதுல விழுந்தது. கம்ப்யூட்டர் திரைல யாரோ ஜலத்தை வாரி விட்ட மாதிரி இருந்தது. என்ன??னு யோசிக்கும் போதே என்னோட கன்னத்துல தாரை தாரையா சில துளிகள் தரையை நோக்கி ஓடிண்டு இருக்கு. அப்புறம் என்ன? மூக்கு சிந்தி நிம்மதியா அழர்துக்கு ‘நின்னையே கதி என்று’ பாத்ரூமை தஞ்சம் அடைஞ்சேன். //

அன்பானவர்கள் நம்மை விட்டு பிரிந்தால் அந்த இழப்பு ஈடு செய்ய முடியாது அவர்களை நினைக்கும் போது எல்லாம் கண்கள் அருவியாகும் உண்மை.
மனதை நெகிழ வைத்து விட்டீர்கள்.


Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)