Thursday, January 20, 2011

எழுதும் கைக்கு.......

எல்லாரும் செளக்கியமா இருக்கேளா? ரொம்ப நாளாவே மனசுல ஒரு எண்ணம் ஓடிண்டு இருக்கு. சில பேரோட எழுத்தை வாசிக்கும் போது அத்தனை சந்தோஷமாவும்,சுவாரசியமாவும் இருக்கு. கிராமங்கள்ல ஒரு வழக்கம் உண்டு, யாராவது நன்னா சமைச்சு இருந்தானாக்க "சமைச்ச கைக்கு வைரவளையே போடலாம்"னு ஒரு சந்தோஷ வார்த்தை சொல்லுவார் மாமா, அந்த மாமியும் ரொம்ப சந்தோஷப் பட்டுப்பா. அதே மாதிரி நல்ல சுவாரசியமான சில வித்வான்களுக்கு தோஹால உருக்கின பசும்தங்கத்தால் கங்கணம் போடலாம்னு ஆசை. தக்குடு ஒட்டகம் மேச்சி வாங்கர சம்பளத்துல எல்லா வித்வான்களுக்கும் மரியாதை பண்ணமுடியாதுங்கர்துனால நம்ப ஷோபா மேடம், சுபா மேடம் & ‘Techops’ மாமி எல்லாரும் உபயதாரர்கள்.




1)கள்ள கிருஷ்ணர்

இந்த வித்வான் சரியான கள்ள கிருஷ்ணர். சாதாரண விஷயத்தை கூட சுவாரசியமா ஆக்கர்துல கெட்டிக்காரர். ஒபாமா மாமா மாதிரி அவுக்காத டையும்,சிரிச்ச முகமுமா காட்சி அளிப்பார். எழுதாத விஷயமே கிடையாது. டிசம்பர் சீசன்ல ஆபோகியை ஆரோஹணத்துல பிடிச்சு பந்துகவராளியை அவரோஹணத்துல விட்டு நடுல நாட்டையை தொட்டுட்டு இவர் பண்ணின 'தர்பார்' 'கனடா' வரைக்கும் கேட்டது. அரக்கு பாவாடை போட்ட பொண்ணை சைக்கிள் ஹண்டில் பார்ல உக்கார வெச்சு இவர் பொங்கலுக்கு சைக்கிள் ஓட்டின கதை அவ்ளோ அழகா இருக்கும். ‘சுவாரசியமே உயிர் மூச்சு’ என்ற பிரிவின் கீழ் இந்த யசோதையின் இளஞ்சிங்கத்துக்கு கமண்ட் போடுவதை கலையாகவும், நயமாகவும் செய்யும் ‘ரசிகமணி’ அவர்கள் கரங்களால் கங்கணம் அணிவிக்கப்படுகிறது.

2)பொல்லாத கொழந்தை

இந்த குழந்தை மகாபொல்லாது,அம்மா திட்டினது,வலிப்பு காட்டினது,கோவப் பட்டதுனு எல்லாத்தையும் அழகு தமிழ்ல பதிவா போட்டு சிரிக்கும். அரங்கத்து அரசனின் நடை தான் அழகுனு கேள்விப் பட்டதுண்டு, இந்த பெண்மனியோட தமிழ் நடை பாத்ததுக்கு அப்புறம் அரங்கத்து அடியவர்கள் எது பண்ணினாலும் அழகுதான் போலருக்குனு தெரிந்தது. இவர் கல்லூரி வந்ததுக்கு அப்புறம் கத்துண்ட தமிழே எல்லாரையும் மயங்கச் செய்வது அதிசயமான உண்மை. இவாளோட மொழி நடையில் அனைவரும் வியப்பதுண்டு. இந்த அரங்கத்து சுட்டிப் பெண்ணுக்கு 'மொழியில் நடை அழகு'என்ற பிரிவின் கீழ், கண்ணப்பா! ராஜப்பா!னு திருக்கண்ணமுதை விடவும் இனிமையான மொழி பழகக் கூடிய 'திருக்குறுங்குடி' வல்லியம்மாவின் தங்க கரங்களால் வளை அணிவிக்கப்படுகிறது.




3)சிரிப்பு வித்துவான்

முதல் முறையாக பெயரை வாசித்தவுடன் 'கிலுக்' என்று சிரிக்க வைக்கும் வித்தை தெரிந்த கல்லிடையின் மாப்பிள்ளை. நாலு வரியை வாசிச்சதுமே இது டுபுக்கோட டச்நு வாசகர்களை உணரச்செய்த ஒரு படைப்பாளி.சுயஎள்ளல், நையாண்டி, நக்கல், கிண்டல் ,உணர்ச்சிகள் என்று வழங்கி தனது ஆயிக்கணக்கான வாசகர்களை மகிழ்வித்து வரும் ஒரு சிரிப்பு வித்துவான். ரத்த பாசத்தையும் தாண்டிய ஒரு ஈர்ப்பு அவரிடம் எனக்கு உண்டு. இவருடைய புகழ் பரப்பும் கழகத்தின் நிரந்தரத் தலைவரும், ‘என்றும் அன்புடன்’ போட்டு போட்டு கைசிவந்த நமது பாசத்துகுரிய பாஸ்டன் நாட்டாமையின் திருக்கரங்களால் வித்துவானுக்கு ஸ்வர்ணகங்கணம் அணிவிக்கப்படுகிறது.

4)மதுரை மங்கை

பார்பதற்கு சாது போல் தெரிந்தாலும் சிங்கப்பூரிலேயே மிகப்பெரிய சமையல் வித்தகி இந்த அம்மையார். இவாளோட வழங்கும் விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும், சும்மா தட்டுல போட்டு ஒரு போட்டோவை போட்டு ஆச்சுசுசுசு!னு ஆக்காம ரொம்ப அழகாவும் நேர்த்தியாகவும், சாதாரணமானவாளுக்கு கூட புரிய மாதிரியான செய்முறைகள் (சமையல் முடிந்த உடன் அடுப்பை அணைக்கவும்னு கூட போடுவா சில சமயம்) அப்பிடினு சொல்லிண்டே போகலாம். சமீபத்துல எதோ ஒரு பதார்த்தத்துக்கு அடில கூரை புடவை, பக்கத்துல வளையல் எல்லாம் வச்சு இவா எடுத்த போட்டோ என்னோட மனக்கண்கள்ல இன்னும் அப்பிடியே இருக்கு. "அழகான பாகசாலை" என்ற பிரிவின் கீழ் இந்த சமையல் வித்வானுக்கு அதே துறையில் படம் போட்டு பட்டையை கிளப்பும் இன்னோரு சிங்கப்பூர் சமையல் வித்தகியான ராஜி அக்காவின் கைகளால் கங்கணம் அணிவிக்கப்படுகிறது.

5)சிறுவாணியின் சிறு வாணி

உணர்ச்சிப் பிழம்பா கதை எழுதுவதில் ஜித்தி(ஜித்தனுக்கு பெண்பால்). மாவு பொங்காமல் வார்த்ததால் இவருடைய இட்லி எல்லாமே இட்டிலி ஆன கதை உலகமே அறியும். அதன் மூலம் புகழின் உச்சிக்கே சென்று ‘இட்லி மாமி’ என்ற நீங்காத பட்டத்துடன் உலா வரும் கோவையின் ‘குசுப்புக்கார’ பெண்மணி. இவரால் 300 பக்கத்துக்கு கதை எழுதவும் முடியும் மூனு வரியில் கவிதை எழுதவும் இயலும். கதை விடுவதில் வல்லவியான இவருக்கு "காதலுடன் க(வி)தை" என்ற பிரிவின் கீழ் துடுக்குத் தனமான கமண்டுகளில் சிறந்தவரும், கணேஷ் வசந்துக்கு மீண்டும் உயிர் தந்து குட்டி சுஜாதாவானவரும் ஆன சியாட்டில் சிங்காரியின் ராசியான கைகளால் ஸ்வர்ணவளை அணிவிக்கப்படுகிறது.




6)அமெரிக்க அம்பாள்

ஆர்ப்பாட்டமில்லாத பதிவுகளால் நெஞ்சை வருடுபவர். அழகான தாளக் கட்டுடன் கூடிய பாடல் வரிகளை உம்மாச்சிக்காக மட்டும் எழுதுபவர். கோதையின் பதிவுகளில் உயிர் பெற்ற கோதையாய் பாதைகளில் தென்படும் வார்த்தை கோலங்களில் நம் மனம் நிறைவதை கண்கூடாக உணரலாம். இந்த அபிராமியின் ரசிகைக்கு மரியாதை செய்ய பெரியப் பெரிய வித்வான்களை கூட்டிண்டு வந்தாலும், அவாளுக்கு மிகவும் பிடித்த நயாபைசாவுக்கு ப்ரயோஜமில்லாத ஒரு வெத்துவேட்டுப் பயலோட கையால வளை போட்டுண்டா ரொம்ப சந்தோஷப் படுவார்கள் என்பதால் அந்த பித்துக்குளியின் கைகளால் அழகான வளை அணிவிக்கப்படுகிறது.

36 comments:

Jeyashris Kitchen said...

indiya tholaikatchikalil mudal muraiyaga, thakku ne ellarayum to some extent paaratiirukae.
Nice post and thanks for the bangles.though the size is not fitting for me ,will keep it in my show case

paravasthu sundar said...

vooran veettu neyye en pondaati kaiyennu mathavaala vechu nagai podura Mr thakkudu.
nanna samatha economics a handle panrel. Athukku umakke oru thanga valaiayal panni podanum. valaiayal? kanganam ok

Anonymous said...

ஆஹா கலக்கிட்டியே தக்குடு...அடுத்ததடவை வைர நெக்லஸ் கொடுக்கிற ஐடியா இருக்கறபோதாவது என்னை நினைச்சிக்கோப்பா...இல்லேன்னா காசி ஹல்வா கட் ஆம்மா:)

ஷைலஜா

Shobha said...

ஸ்பான்சர்ஸ் கிட்ட முன் அனுமதி பெறவில்லை இந்த முறை மன்னிக்கப்பட்டு இனி முன் அனுமதி பெறவேண்டும் என்று எச்சரிக்கிறேன் .
சரியான தேர்வு என்பதால் இம்முறை ஸ்பான்சர் செய்யப்படும் .
ஷோபா

வெங்கட் நாகராஜ் said...

கொடுத்தவர்களுக்கும் பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள். :)))

பத்மநாபன் said...

பெரும்பாலான கங்கணங்கள் எனது தொடர் ரசிப்புகளின் கைகளை அலங்கரிக்க செல்வதில் மகிழ்ச்சி , புதிய ருசிப்புகளையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி..

சுவாராசியத்திலகம்...மூச்சுவிடாமல் பேச்சுவிடும் தீராத விளையாட்டு பிள்ளை...மன்னார் குடி மைனருக்கு மனம் திறந்த பாராட்டு...

அரங்கத்து பெண்மணிக்கு மழலைத்தமிழோடு பரமபத தமிழும் அழகாக வரும்...இப்பொழுது இசை டிக்காஷன் இறங்கிங்கொண்டிருக்கிறது... பாராட்டுகள்..

சிரித்து சிரித்து சிரிப்பு சிறையில் இடும் வித்துவானுக்கு இல்லாத விருதா... , முத்து,மணி, பவளத்தோடு கங்கணம் பரிந்துரைத்த தக்குடுக்கு நன்றி.... சின்ன வாத்தியாருக்கு பாராட்டு,,

எங்கூரு அம்மணி , ஒரே ஒரு புள்ளி வைத்து, கையெடுக்காமால் ஒன்பது கோலங்கள் எழுத்தில் வரையும் வல்லமை பெற்ற கைக்கு கங்கணம் சரியான தேர்வு....வாழ்த்துகள்

பரிசு பெற்ற மற்ற பதிவர்களின் அறிமுகத்திற்கு மீண்டும் நன்றி..விரைவில் படிக்கிறேன்....

//என்றும் அன்புடன்’ போட்டு போட்டு கைசிவந்த // அன்பால் போட்ட நாட்டமைக்கு கிண்டலா....சொம்பு பக்கத்துல தான் வைத்திருக்கிறார்.

சியாட்டில் சிங்காரிக்கு குட்டி சுஜாதா...சரியான பெயர் தேர்வு .

RVS said...

ரசிகமணி கையால ஒரு அவார்டு... அதுவும் நம்ம தக்குடு கொடுத்து... கண்ல ஜலம் ததும்பறது... சிவாஜி மாதிரி ராகத்தோட டயலாக் பேசி... "தக்குடு... என் நெஞ்சை குளிர வச்சுட்டியே... நீ ஷேமமா இருக்கணும்பா ..
தோஹால திரியிற ஒட்டகம் எல்லாம் நீ கஷ்டப்பட்டு மேய்க்காமலேயே உன் பின்னாடி வரணும்ன்னும்...
அன்னிக்கி முகப் புத்தகத்துல ஒன்னோட சிரிச்ச மூஞ்சியா பார்த்த ஷேக் ரெண்டு பெரும் நாலு எண்ண கிணறு உம்பேர்ல எழுதி வைக்கணும்னும்...
சீக்கிரமா நீ COMPLETE ஆகவும்.... FINISH ஆவும் ஆகணும்ன்னும்...
இந்த கொடுத்துச் சிவந்த கரத்துக்காக நான் உம்மாச்சியை வேண்டிக்கறேன்.. ;-) ;-)

இந்த போஸ்ட்டுக்கு ர.மணி போட்ட கமெண்ட்டை பாத்தியோ.. அப்பப்பா.. பிரவாகமா வருதுப்பா.. ;-)

RVS said...

@பத்மநாபன்
//மன்னார் குடி மைனருக்கு //
மன்னார்குடி தானே எங்கூரு.. இதுல ஒன்னும் உள்குத்தல் இல்லையே... ஊர் பேர்ல குடியே தவிர... நாங்கெல்லாம் புடம் போட்ட சொக்கத் தங்கமாக்கும்.. ;-) ;-)

Subhashini said...

அருமையா செலக்ட் பண்ணினதனால தக்குடுவுக்கு முதல் பாராட்டு. நம்ப டுபுக்கு அண்ணாத்தை, ATM அக்கா பதிவுகள் மட்டும் தான் படிச்சுருக்கேன். இருந்தாலும் தக்குடு சொன்னா சரியா தான் இருக்கும். எல்லோருக்கும் வாழ்த்துக்கள். தக்குடு நம்பாத்து கோந்தை இல்லியா அதனால அவன் சொன்னா ஸ்பான்சர் பண்ணிடவேண்டியது தான் .....:))
அன்புடன்
சுபா

வல்லிசிம்ஹன் said...

நான் ஒண்ணும் கனங்குடி இல்ல செல்லத்தக்குடு:)
குறுங்குடி!!
என்ன ஒரு லாவகமா எழுத்து வருது இந்தப் பிள்ளைக்கு. மாதங்கிக்கு கங்கணம் அணிவிக்கிற பாக்கியத்தை எனக்குக் கொடுத்ததற்கு ரொம்ம்ப ரொம்ப நன்றி ராஜா.
மேலும் இவ்வளவு நல்ல் பதிவர்களையும் அறிமுகப் படுத்தி இருக்கறத்துக்கு மனம் பூரிக்கிறது. குழந்தை நீ ரொம்ப நன்னா இருக்கணும். நீ சொன்ன எல்லாப் பதிவுகளையும் நான் ஃபாலோ செய்யப் போகீறேன்மா. நன்றி ராஜா.

Raks said...

Haha,nice post,yellarayum paaratradhukkum oru manasu venume! 2 valayalla onna nice a naan lavutitten thakkudu ;) hehe...

குறையொன்றுமில்லை. said...

ஆஹா மிகவும் சுவாரஸ்யமான பதிவு.

Matangi Mawley said...

THANKU!!! Thanku Boss!
athulayum ms. valliyasimhan amma kaiyaala vaanginathula romba santhosham!
namakku intha award-ellaam yaaro tharangarathe romba 'pleasant' aana surprise!
thangam-vikkara vilaikku valaiyal kidachchathula romba santhosham!

yaa.. intha 'singapore samaiyal' post padichchathulernthu antha samaiyal-laam yaar pannaraa nnu therinjukanum-nu romba aasayaa irunthen... :) excellent-aa irukku avaaloda blog.. photo paaththaale antha dish-a panni paaththu(cha..cha.. naama pannuvomaa...?)... amma va panni kodukka solli saapdanum pola irukku! sooper choice, boss!

Thanku, once again! :)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//யசோதையின் இளஞ்சிங்கத்துக்கு//
கலக்கல் intro ... வாழ்த்துக்கள் RVS சார்... ரசிகமணி பட்டம் சூப்பர்.... கண பொருத்தம் பத்மநாபன் அண்ணாவுக்கு...

// அரங்கத்து சுட்டிப் பெண்ணுக்கு 'மொழியில் நடை அழகு'என்ற பிரிவின் கீழ்//
வாட் அ coincidence ? நேத்திக்கி தான் மாதங்கி ப்ளாக்ல இதே போல் ஒரு கமெண்ட் போட்டேன்... உங்க அழகு தமிழ் படிக்கவே இங்க வரேன்னு... சூப்பர்....வல்லிம்மா சூப்பர் selection இந்த honor க்கு

//இது டுபுக்கோட டச்நு வாசகர்களை உணரச்செய்த ஒரு படைப்பாளி//
ஆஹா... பொருத்தம் இது பொருத்தம்... //‘என்றும் அன்புடன்’ போட்டு போட்டு கைசிவந்த நமது பாசத்துகுரிய பாஸ்டன் நாட்டாமையின்// சூப்பர்... ஹா ஹா ஹா...

//"அழகான பாகசாலை" என்ற பிரிவின் கீழ் இந்த சமையல் வித்வானுக்கு //
பொருத்தமான தேர்வு... சூப்பர்... காப்பு போட்டவங்களும் கலக்கல் தேர்வு...

//சிறுவாணியின் சிறு வாணி//
ஆஹா... உள்குத்து ஒண்ணும் இல்லியே.... ஹா ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்...made my day...thank you

// துடுக்குத் தனமான கமண்டுகளில் சிறந்தவரும், கணேஷ் வசந்துக்கு மீண்டும் உயிர் தந்து குட்டி சுஜாதாவானவரும் ஆன சியாட்டில் சிங்காரியின் ராசியான கைகளால் ஸ்வர்ணவளை அணிவிக்கப்படுகிறது//
நன்றி நன்றி நன்றி... பொற்கொடி... கொரியர் எப்ப அனுப்புனீங்க tracking நம்பர் எல்லாம் தனி மெயில்ல வருதா? ஒகே ஒகே... காப்பு களையா இருக்கு... நல்ல selection ... அடுத்த மாச family day gettogether க்கு புதுசு போட்டுக்க வாய்ப்பு... நன்றிங்கோ... (now Porkodi escape...ஹா ஹா ஹா)

//இந்த அபிராமியின் ரசிகைக்கு //
wow... எப்படி இப்படி selection ? அற்புதம்... நீயேவா prize distribution ... ஒகே ஒகே... சூப்பர்...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//எங்கூரு அம்மணி , ஒரே ஒரு புள்ளி வைத்து, கையெடுக்காமால் ஒன்பது கோலங்கள் எழுத்தில் வரையும் வல்லமை பெற்ற கைக்கு கங்கணம் சரியான தேர்வு....வாழ்த்துகள்//
மிக்க நன்றி பத்மநாபன் அண்ணா...

//சீக்கிரமா நீ COMPLETE ஆகவும்.... FINISH ஆவும் ஆகணும்ன்னும்//
ஹா ஹா ஹா ஹா... கன்னா பின்னா ரிபீட்டு... சூப்பர் RVS சார்...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஒரே ஒரு டவுட்...
கம்மல் ஆராய்ச்சி மூக்கு ஆராய்ச்சி எல்லாம் முடிஞ்சு இப்போ காப்பு ஆராய்ச்சியா? (இல்ல நேயர் விருப்பமா...? ஹா ஹா ஹா) ஜஸ்ட் அ கொஸ்டின்... நோ டென்ஷன்... ஒகே... ஹா ஹா

sury siva said...

தங்கம் கிராம் ரூபா 1900
தக்குடுவோட பதிவுக்கு
தக்க பின்னூட்டம் போடறவாளுக்கு
தள்ளுபடி ரூபா 1000

தோஹாவுக்கு ஓடி வாங்கோ !

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

Porkodi (பொற்கொடி) said...

நான் இந்த பதிவை படிக்கவே இல்லை, அப்பாவியை யாருன்னே எனக்கு தெரியாது.

(தக்குடு அண்ணா இருங்க இருங்க‌ கதைல உங்க கேரக்டர் கொண்டு வந்து போட்டுத் தள்ளறேன்..)

King Vishy said...

Pudhumaiyaana yukthi.. enjoyed reading the post.. and got a bunch of links to peruse too :D Thanks boss!!

@Porkodi.. idhu nalladhukkilla.. kadhaasiriyai-ngra un padhaviya dhushprayogam panna koodaadhu.. pannine, comment-aasiriyargal-ngra enga padhaviya naanga dhushprayogam panna vaendi irukkum.. Mind it! :P

Porkodi (பொற்கொடி) said...

@Vishy: ayyiyo nee edhuku inga vandha??!! :O adhu dushprayogam illa, creative license.. :P

Chitra said...

Anonymous said...

ஆஹா கலக்கிட்டியே தக்குடு...அடுத்ததடவை வைர நெக்லஸ் கொடுக்கிற ஐடியா இருக்கறபோதாவது என்னை நினைச்சிக்கோப்பா.


.....அப்போ, என்னையும் மறந்துராதேடா, அம்பி!

தக்குடு said...

@ ஜெய்ஷ்ரீ அக்கா - ஹலோ, சமயம் கிட்டும் போதெல்லாம் நல்ல விஷய ஞானம் உள்ளவாளை தக்குடு கெளரவப்படுத்த தவறினதே கிடையாது. உங்களோட கை அளவு வாராவாரம் பெரிசாயிண்டே போகர்துன்னு ராக்ஸ்ஸ் என்கிட்ட ஏற்கனவே சொல்லியதால் உங்களுக்கு மட்டும் ப்லெக்ஸி மாடல் கங்கணம் தான் வாங்கி இருக்கேன்...;PP

@ பரவஸ்து அண்ணா - பத்தேளா உங்களுக்கு தான் இந்த நல்ல ஐடியா தோனியிருக்கு...:)

@ ஷைலஜா அக்கா - நீங்க எல்லாம் பெரிரிரிரிய ஆட்கள் அக்கா, உங்களுக்கு மரியாதை பண்ணும் அளவுக்கு தக்குடுவுக்கு யோக்யதை இன்னும் வரலை..:) வைரத்துக்கே எதுக்கு மறுபடியும் வைரம்?..:)

@ ஷோபனா மேடம் - கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கோ மேடம்!...:)

@ வெங்கட் அண்ணா - ரொம்ப சந்தோஷம் பா!..:)

@ ரசிகமணி - இதுக்குத்தான் உங்க கையால மைனருக்கு மரியாதை பண்ணச் சொன்னது, உங்கள் கமண்டை ரசித்தேன்..:)

@ மன்னார்குடி மைனர் - இதுல ஆச்சர்யப்பட ஒன்னுமே இல்லை, அந்த கங்கணம் வித்வத் உள்ள ஒரு வித்வானின் கைகளை அடைந்தது அவ்ளோதான்..:) & உங்க பேரை டைப் பண்ணினாலே ரசிகமணிக்கு குடி தனியாதான் வருதாம் ...:PP

@ சுபா மேடம் - என்ன இருந்தாலும் வள்ளல் வள்ளல் தான்( நான் உங்களை சொன்னேன்). ரொம்ப சந்தோஷம் பா!..:)

தக்குடு said...

@ வல்லிம்மா - பாயிண்ட் நோட்டட்..:) இந்த கமண்ட்லையே எத்தனை ராஜா வந்துருக்கு பாத்தேளா? அதான் வல்லிம்மா..:) அந்த பொல்லாத கோந்தைக்கு நீங்க தான் சரியான ஆள்..:)

@ ரக்ஸ்ஸ்ஸ் அடுக்களை - லவட்ட எல்லாம் வேண்டாம் ரக்ஸ்ஸ், என்னை வைய்யரவாளுக்கே வாங்கி போடும் போது உங்களுக்கு போடமாட்டேனா என்ன?..:)) நன்னிஹை அக்கா!..:0

@ லெக்ஷ்மி அம்மா - ரொம்ப சந்தோஷம் அம்மா!..:)

@ மாதங்கி - ஹா! ஹா! உங்களுக்கு கைல போட்டதுல வல்லிம்மாவுக்கும் சந்தோஷமாம்..:) சிங்கப்பூர் சமையலை அவசரப்பட்டு அதுல உள்ளதுபடி சமைச்சு சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்காதீங்கோ, அது சமைத்துப் பார்! மட்டுமே, சாப்பிட்டு பார்!னு அவா எங்கையுமே சொன்னது இல்லை..:PP

@ இட்லி மாமி - சிறு வாணினு சொன்னதால் உங்களை சின்ன பொண்ணுனு சொல்லிட்டதா தப்பா நினைச்சு வருந்த வேண்டாம். நீங்க ஒரு நு எல்லாருக்குமே தெரியும்..:P
ஆமாம், வளையல் ஆராய்ச்சியோட விளைவு தான் இந்த பதிவு..;P

@ சுப்பு தாத்தா - அதுல ஒரு கங்கணத்துக்கு உங்க நாட்டுப்பொண்(my akka) தான் ஸ்பான்சர் தெரியுமா??..:))

@ சியாட்டில் சிங்காரி - தக்குடுவோட அண்ணானு வாசிச்சேன், அப்போ நீங்க அம்பியை தான் போட்டு தள்ளனும்..:) கரெக்ட்டு எனக்கும் அப்பாவியை யாருன்னே தெரியாது!..:P

@ King vishy - ரொம்ப சந்தோஷம் விச்சு! பெங்களூர்ல எல்லாரும் செளக்கியமா இருக்காளா??..:)

@ கேடி அக்கா - இன்னும் யாரெல்லாம் ஓசி பேப்பர் படிக்கரானே தெரியலை கொடி! தக்குடுவுக்கு ஆடரவு பெங்களூர்ல எப்போதும் உண்டு!..;)

@ சித்ரா அக்கா - உங்க ப்ளாக்ல இனிமே ஒரு அவார்ட் மாட்டர்த்துக்கு இடம் இல்லைங்கர்துனால தான் பாவம் பொழச்சு போகட்டும்னு விட்டுட்டேன்...;)

Shanthi Krishnakumar said...

Kalakkarey thakkudu.. Oru doubt.. Nejamavey valai anupchayaa? illa padaththula thaan awardaa?

vidhya said...

kallakku thakkudu, congrats to all who have received the awards :-)

SRINIVAS GOPALAN said...

ஆஸ்கார் அவார்ட்ஸ் மாதிரி இது தக்குடு அவார்ட்ஸ் போல இருக்கு.
உன்னோட PR skills நன்னா தெரியறது.
இவா போஸ்ட் எல்லாம் இனிமே பாக்க ஆரம்பிக்கறேன்.

vgr said...

Congrats to all. Wishes to you too Thakkudu!!

-vgr

எல் கே said...

வாழ்த்துக்கள்

Dubukku said...

ஆஹா என்னன்னு சொல்றது....கங்கணத்த பத்திரமா வாங்கிக்கிறேன். மிக்க நன்றி தக்குடு. //ரத்த பாசத்தையும் தாண்டிய ஒரு ஈர்ப்பு அவரிடம் எனக்கு உண்டு. // டச் பண்ணிட்ட தக்குடு :)) நீ அங்க லண்டன்ல ஒரு பொண்ணு பாருங்கோன்னு சொன்னத இனிமே நான் சீரியஸா எடுத்துண்டு உனக்கு இங்க வெள்ளக்கார பெண் தேடறேன் :)))))

Anonymous said...

Dear Thakkudu, woooooow chancey illai, nalla thought process,kankanam designs yellam pramatham. selection & avaalukku neenga kudukkum introvukkakavey yellarum senthu ungalukku oru kankanam podanum.vilunthu vilunthu comment podaravalukkum(yenakkuthaan) oru kankanam pottu irukkalaam, naangalum santhosha paduvom illaiyaa??..:) ples continue ur innovations.

Ranjani Iyer

Kavinaya said...

wow, thakkudu... I am truly touched! தக்குடு கையால வளை போட்டுக்கிற அதிர்ஷ்டம் எனக்கே எனக்கா! ச்சோ ச்வீட். பிறரைப் பாராட்டவே பதிவிட்ட தக்குடு பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாயிரம் ஆண்டுகள் அமோகமாக வாழ்க! பல அருமையான பதிவர்களின் அறிமுகத்துக்கும் மிக்க நன்றிப்பா.

R. Ramesh said...

kalakittingo saru...

தக்குடு said...

@ சாந்தி மாமி - நெஜமா அனுப்பி இருக்கேன் சிங்கப்பூருக்கு, வேணும்னா ஜெய்ஷ்ரி அக்கா கைல பாருங்கோ! ஒரு புது ப்ரேஸ்லெட் இருக்கும்..:))

@ வித்யா அக்கா - தாங்க் யூ!..:)

@ கோபால் சார் - நீங்க வேற, அதெல்லம் ஒன்னும் இல்லை, மீ சாதாரண ஆள் ஒன்லி!..:)

@VGR - டாங்க் யூ!...:)

@LK - நன்னிஹை!..:)

@ டுபுக்கு அண்ணாச்சி - ஓய் அண்ணா, நான் எப்ப ஓய் பொண்ணு பாக்க சொன்னேன்..:PP

@ ரஞ்ஜனி - ஹா! ஹா! உங்களுக்கு வெறும் வளை மட்டும் போதுமா? பெரிய லெவல்ல உங்களுக்கு தரலாம்னு நினைச்சேனே! அது வேண்டாமா உங்களுக்கு!..:)

@ கவினயா அக்கா - பல கோடி நூறாயிரம் எல்லாம் வேண்டாம் அக்கா, இருக்கும் வரைக்கும் 'அவளோட' ஞாபகத்தோட இருந்தா போதும்!..:)

@ ரமேஷ் அண்ணா - தாங்க் யூ சாரே!..:)

சிவகுமாரன் said...

பரிசு வாங்கிய கரங்களுக்கும் வழங்கிய கரங்களுக்கும் , கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு ஒடச்ச தக்குடுக்கும் வாழ்த்துக்கள்.

Mahi said...

காப்பு/கங்கணம்/வளையல் எல்லா டிஸைனும் நல்லா இருக்கு தக்குடு! :)

மரியாதை செய்தவர்களுக்கும்,செய்யப்பட்டவர்களுக்கும் பாராட்டுக்கள்!

Anonymous said...

//பெரிய லெவல்ல உங்களுக்கு தரலாம்னு நினைச்சேனே! அது வேண்டாமா உங்களுக்கு!..:)// athellam onnum vendam. neenga azlaka pesiyee yellaraiyum yemathiduvel.so olunga antha second photola irukkum design mattum vangi thanthaa poothum.

Ranjani Iyer

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)