Thursday, October 21, 2010

சமையல் மகாராணிகள்

டிஸ்கி - இந்த பதிவு வெறும் நகைசுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது.

பதிவை படித்து விட்டு, 'டாய்ய்ய் தக்குடு!'னு தெலுங்கு பட வில்லன் மாதிரி சவுண்டுடன் யாரும் ஆட்டோ/சுமோ அனுப்ப வேண்டாம்...:)(ஏன்னா தக்குடு சைஸுக்கு சைக்கிளே ரொம்ப ஜாஸ்தி).

தக்குடுவுக்கு சங்கீதமும் சமையலும் ரொம்ப பிடித்தம் உண்டுனு உங்க எல்லாருக்குமே நன்னா தெரியும். அதனால ஆரம்ப காலத்துலேந்தே சமையல் ப்ளாக் நான் ஜாஸ்தி படிக்கர்து உண்டு. சமையல் விஷயத்தோட சேர்ந்து பயங்கர காமெடியாவும் அந்த ப்ளாக்குகள் இருக்கும். அதுல இருக்கும் சில சுவாரசியமான விஷயங்களே இந்த பதிவின் சாரம்.

பெரும்பாலான சமையல் பதிவர்கள் இங்கிலிபீஸ்ல தான் எழுதுவா. ஒரு பெரிய கூட்டமே இருக்கு, இந்த கூட்டம் வேற எந்த ப்ளாக்குக்கும் போகாது, அவாளுக்குள்ளையே தான் மாத்தி மாத்தி mouthwatering,eyes watering,tempting,very nice,- னு கமண்ட் போட்டுப்பா. ஒரு சில நகைச்சுவை பதிவுக்கு மட்டும் ‘போனா போகர்து பொழச்சு போ!’னு கமண்ட் போடுவா. மத்தபடி சமையல் சாராத ஒரு பதிவர் இவாள்டேந்து கமண்ட் வாங்கர்து பிரம்ம பிரயத்தனம் தான். எந்திரன் பட ரிலீஸ் அன்னிக்கி கூட ‘நேந்திரம்பழ கட்லட் செய்வது எப்பிடி?’னு கருமமே கண்ணாக பதிவு போட்டு நம்மை புல்லரிக்க வெச்சுடுவார்கள்.

உன்னை மைனா! என்று தானே அழைத்தேன் நீ

ஏன் உன்னுடைய நைனாவை அழைத்தாய்!


இந்த ரேஞ்சுக்கு கவிதை எழுதி கழுத்தை அறுக்கும் மொக்கை மன்னர்கள் பதிவுக்கு எல்லாம் மறந்து கூட எட்டிபாக்க மாட்டா. இதை எல்லாம் மீறி சமையல் சாராத ஒரு பதிவுக்கு இவாளோட ஆதரவு இருந்ததுன்னா அந்த பதிவர் உண்மைலேயே அதிஷ்டக்காரர்தான். இங்கிலிபீஸ்ல எழுதர்துனால தெற்கு,வடக்கு,கிழக்கு,மேற்கு பாகுபாடு எல்லாம் இதுல இருக்காது. மாட்டிண்டு முழிக்கர்து அவாளோட ரங்கமணி தான். மதுரைக்கார பதிவரோட பதிவை பாத்துட்டு பஞ்சாப் பதிவர் வீட்டுல சிங்கம் மாதிரி இருக்கும் சிங்குகள் இப்போ குழிப்பணியாரம் சாப்டுண்டு இருக்கா! நம்ப ஊர் ராமசாமி/சுப்ரமணியன்கள் எல்லாம் 3 வேளையும் ஆலு பரோட்டா சாப்டுண்டு இருக்கா.

இவா எல்லாரோட ப்ளாக்கோட பெயருமே எதோ 'பாரதவிலாஸ், சந்திரவிலாஸ்' நு ஹோட்டலுக்கு பேர் வெச்ச மாதிரி இவாளோட பேர் மொதல்ல இருக்கும் பின்னாடி ‘கிச்சன்!’னு ஒரு ஸ்பெஷல் பிட்டிங் இருக்கும். இதுல இன்னும் சில பேர் அவாளோட அப்பாவி ஆத்துக்காரர் பேரையும் சேர்த்து போட்டுண்டு எதோ “மணாளனே மங்கையின் பாக்கியம்” ரேஞ்சுக்கு பில்டப்பு குடுப்பா. வரிசையா 4 பேரோட லிங்க் குடுக்கனும்னு கை துறுதுறுனு வருது, ஆனா இதுக்கே தக்குடுவுக்கு தர்ம அடி உறுதி! லிங்க் எல்லாம் குடுத்தா தக்குடுவோட 'அர்னால்ட்' பாடி ஆட்டம் கண்டுபோகும் அதான் பேசாம இருக்கேன்.

எனக்கு தெரிஞ்ச ஒரு சிங்கப்பூர் பதிவரோட ரங்கமணி கிட்ட "ப்ளாக்(Blog) பத்தி என்ன நினைக்கறேள்?"னு கேட்டதுக்கு, “இந்த நூற்றாண்டோட மிகச்சிறந்த ஒரு கண்டுபிடிப்பே ப்ளாக் தான், கல்யாணம் ஆன புதுசுல இட்லிக்கு மொளகா பொடி கேட்டாலே 'திருதிரு'னு முழிப்பா உங்கொக்கா, இப்போ இட்லிக்கு தொட்டுக்க ராஜம்மா(raajmaa) பண்ணலாமா இல்லைனா கண்ணம்மா பண்ணலாமா?னு யோசிக்கர அளவுக்கு பெரியாள் ஆயிட்டானா அதுக்கு இந்த ப்ளாக் தான் காரணம்!”னு சொன்னார். இந்த சிங்கப்பூர் அக்கா எதோ தியான வகுப்பு மாதிரி ரொம்ப அமைதியா ப்ளாக்கை நடத்திண்டு இருந்தா, அங்க போய் சீரியஸ் கூட்டத்துல சிலுக்கு டான்ஸ் ஆடின மாதிரி ஆடிட்டு வந்துடுவேன். இவாளோட ப்ளாக்ல கமண்ட்ஸ் எல்லாம் எப்பிடி இருக்கும்னு நான் சொல்லமறந்துட்டேன்.

"இத்தனை நாளா சாம்பாரை சின்ன பர்னர்லதான் பண்ணிண்டு இருந்தேன், பெரிய பர்னரை சின்னதா வெச்சும் பண்ணலாம்ங்கர்து புதிய தகவல், நிச்சயமா ட்ரை பண்ணிட்டு சொல்லரேன்"

"அந்த பாசிப்பருப்பு டால் வெச்சுருக்கும் வாளி ரொம்ப நன்னா இருக்கு! எங்க வாங்கினை? அக்காவோட பதில் - லூசுதான் கடைலேந்து எல்லாம் வாங்கும், என்னோட தோழி வீட்ல இருந்தது, நைசா லவட்டிண்டு வந்துட்டேன்."

என்னோட பெங்களூர் தோஸ்த் ஒருத்தி கல்யாணம் ஆகி துபாய்க்கு வந்த புதுசுல சமையலே தெரியாம முழிச்சா, “ஒங்க தோஸ்துக்கு மாங்கல்யம் கட்டினதுக்கு 1 வாரமா மாகி(Maagi) போட்டே என்னை பழி வாங்கிண்டு இருக்கா!”னு அவளோட ஆத்துக்காரர் என்கிட்ட ஒரே பொலம்பல். பால் காய்ச்சுவது எப்படி?னு ஆரம்பிச்சு பாஸந்தி செய்வது எப்படி வரைக்கும் அழகா சொல்லி இருப்பா, கவலையே படாதே!னு சொல்லி அவளுக்கு இந்த கோஷ்டியோட லிங்கை அனுப்பி வெச்சேன். இப்போ சாயங்காலம் டீ குடிக்கர்த்துக்கே முந்திரி பக்கோடா செய்யற அளவுக்கு பெரிய சமையல் ரவுடி ஆயிட்டா அந்த பெங்களூர் ரவுடி!..:) அவளோட ரங்கமணிதான் பாவம், 'டெஸ்டிங் லேப்'ல மாட்டிண்ட எலி மாதிரி ஆயிட்டார்.


இன்னோரு சிங்கப்பூர் பதிவரோட பேரே பயங்கர காமெடியா இருக்கும், ஆனா நான் கேட்டதுக்கு அந்தம்மா அந்த பேரை ஒரு ‘டெரெர்’ எபக்டுக்காக வெச்சுருக்கேன்!னு சொல்லி காமெடி பண்ணினா. படம் காட்டர்துல இவாளை மிஞ்ச யாராலையும் முடியாது, கேஸ் அடுப்பை பத்த வைகர்துலேந்து கருவேப்பிலை தூவர்து வரைக்கும் தெளிவா படம் போடுவார்கள். சமீபத்துல வாசிச்ச 2 பதிவுல தேங்குழல்ல இருந்த ஜீரகம், ரிப்பன் பக்கோடால இருந்த கடுகு இதெல்லாம் கூட தெளிவா இருந்தது, பி.சி.ஸ்ரீராம் தோத்துப் போவார். "இந்த டம்பளர் சரவணாபவன் ஹோட்டலில் திருடப்பட்டது"னு எழுதி இருக்கற மாதிரி இவாளோட எல்லா பதார்த்த போட்டோலையும் இவாளோட பேரும் இருக்கும். அப்பிடியும் 'விடாகொண்டன் கொடாகொண்டன்' கதை மாதிரி சில நாளேடுகள் இவாளோட ப்ளாக் போட்டோவை இவாளுக்கு தெரியாம ஆட்டையை போட்டுடராங்க.


தக்குடு ப்ளாக் தொடங்கின புதுசுல என்னோட நலவிரும்பிகள் சிலபல யோசனைகள் எல்லாம் எனக்கு குடுத்துண்டு இருந்தா. அதுல பிரதானமான யோசனை தக்குடு ப்ளாக்கை எதாவது ஒரு திரட்டில இணைக்கர்து. எனக்கு திரட்டினா என்னன்னே தெரியாது முதல்ல, எனக்கு தெரிஞ்ச ஒரே திரட்டி எனக்கு பிடிச்ச திரட்டி பால் மட்டும் தான். அப்புறம் அவா சொன்னது கொஞ்சம் புரிஞ்சு அந்த திரட்டில போய் பார்த்தேன். ‘அட ராமா!’னு ஆயிடுத்து எனக்கு. ஒருத்தருக்கொருத்தர் ஒரே பழி சண்டை அதுல, அக்கா,ஆத்தா!னு திட்டி திட்டி பதிவு போட்டுக்கரா. பிரபல பதிவர் அது! இது!னு ஈகோ பிரச்சனை வேற இதுல. இதுக்கு நடுல பெண்ணியம்,ஆணியம்,வெங்காயம்,பெருங்காயம்னு ஒரு குரூப் மைக் புடிச்சு சவுண்ட் விட்டுண்டு இருக்கு.

இதெல்லாம் விட பெரிய காமெடி, ப்ளஸ் ஓட்டு! மைனஸ் வோட்டு!னு ஒரு குரூப் வோட்டை எண்ணிண்டு இருக்கர்தையே பொழப்பா வெச்சுண்டு இருந்தது. ஆத்தாடி! இந்த பொழப்புக்கு பதிலா தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டில சேர்ந்து தலைவர் ஆயிடலாம்னு (அங்க எல்லாருமே தலைவர் தானாமே?) முடிவு பண்ணிட்டேன் (நம்ப வேட்டியை மட்டும் ஜாக்ரதையா பாத்துக்கனும்..:)) தக்குடுவோட களம் நகைச்சுவை & குழந்தை தனமான ஆன்மிகம். அதனால எந்த திரட்டிலையும் சேரவேண்டாம்னு தீர்மானம் பண்ணினேன். ஆளே இல்லாத ஊருக்கு டீ ஆத்தினாலும் பரவாயில்லை வியாபாரத்தை கொண்டு போயிடலாம்னு முடிவு பண்ணினேன். ஆனா கடவுளோட அருளால நல்ல மனுஷா கொஞ்சம் பேர் இந்த கடை பக்கம் வந்து போயிண்டு இருக்கா. அதுலையும் ரொம்ம்ம்ப நல்ல மனுஷா எல்லாம் கமண்டும் போட்டுண்டு இருக்கா!!(ஸப்ப்ப்ப்ப்ப்பா! ஒரு கமண்ட் வாங்கர்துக்கு நம்ப இட்லி மாமி மாதிரி எவ்ளோ தில்லாலங்கடி வேலை எல்லாம் பண்ணவேண்டி இருக்கு!)...:)

59 comments:

Subhashini said...

அருமையான பதிவு தக்குடு முதலிலே ஏதோ உள்குத்து இருக்கறா மாதிரி இருந்தாலும் முடிவு சுபமா இருக்கு
Subha

RAKS KITCHEN said...

Yen ungalukku yezhudha vera yosanai kedaikalaiyo ??

jeyashrisuresh said...

adhudaanae!! edula labelvera, "singapore samayal" .

Shobha said...

வழக்கம் போல நல்ல நகைச்சுவை . உள்குத்து, வெளிக்குத்து, கும்மாங்குத்து எல்லாமே தெளிவா இருக்கு. :)
உன் சிங்கப்பூர் அத்திம்பேருக்கு , இட்டிலிக்கு ராஜம்மா காம்பிநேஷனுக்கே இத்தனை நக்கல் , இன்னும் வெங்காய சாம்பார் சாப்பிட்டா ? அதுதான் அக்கா அதெல்லாம் பண்ணறதில்லை .
ஷோபா

jeyashrisuresh said...

//கேஸ் அடுப்பை பத்த வைகர்துலேந்து கருவேப்பிலை தூவர்து வரைக்கும் தெளிவா படம் போடுவார்கள். சமீபத்துல வாசிச்ச 2 பதிவுல தேங்குழல்ல இருந்த ஜீரகம், ரிப்பன் பக்கோடால இருந்த கடுகு இதெல்லாம் கூட தெளிவா இருந்தது, பி.சி.ஸ்ரீராம் தோத்துப் போவார். //
thakkudu, thenkuzhalla jeeragam ok, adhuenna ribon pakodala kadugu.naanna korvaiya poi solla po

ஆயில்யன் said...

//மாத்தி மாத்தி mouthwatering,eyes watering,tempting,very nice,- னு கமண்ட் போட்டுப்பா///

பாஸ் அப்புறம் யம்மி யம்மின்னு கூவுவாங்களே! இன்னும் ஏகப்பட்ட வெரைட்டீஸ் இருக்கு ! அங்கிட்டு போய் உங்க சமையல் மிகச்சிறப்பாக இருந்தது நான் செய்து பார்த்தேன் அழகாகவும் வந்திருந்தது ! ரேஞ்சுக்கு கமெண்ட் போட்டா கடுப்பாயிடுவாங்க :)))))))

ஆயில்யன் said...

//adhuenna ribon pakodala kadugu.naanna korvaiya poi solla po //

எஸ் ! எஸ் ! ரிப்பன் பகோடால கடுக்கு வரவே வராது வந்தா அந்த பார்முலா தப்பு தப்பு! :)

வேணும்ன்னா சீரகத்தை ரெண்டு வாட்டி ரிப்பிட்டேய்ய்ய் போடுங்க தக்குடு!

ஆயில்யன் said...

குத்து மதிப்பா ஒரு லிங்க் புடிச்சு போயிட்டேன்!

ம்ஹுக்கும் பொறாமை தக்குடு உமக்கு!

நல்லாத்தான் சமையல் பதிவுகளெல்லாம் போட்ட்டிருக்காங்க! என் கண்ணுல பட்டது 3 இட்டிலி அது மேல லேசா தூவப்பட்ட/கொட்டியிருக்கும் சாம்பார் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சூப்பர் ! :)

வல்லிசிம்ஹன் said...

தக்குடு, வசமா மாட்டிகொண்டாயப்பா,.
தோஹா வரை ஆட்டொ வராதுன்னு தைரியமா:)

அரைச்ச மாவையே அரைக்கிற பதிவுதான் போரடிக்கும். புதுசா இருந்தால் நல்லதுதானே.
வத்தக் குழம்புன்னு ஒரு பதிவு போட்டால் கஷ்டம்தான்.:)

எஸ்.கே said...

மாட்னீங்க! நல்லா மாட்னீங்க! :-)
ஆனா செம காமெடி! சாதாரணமா பேசுற மாதிரியே நல்ல நகைச்சுவையா எழுதறீங்க! வாழ்த்துக்கள்!

Nithu Bala said...

hahaha..bayangarama research ellam panni ezhuthi irukeenka!!!

இங்கிலிபீஸ்ல எழுதர்துனால தெற்கு,வடக்கு,கிழக்கு,மேற்கு பாகுபாடு எல்லாம் இதுல இருக்காது. மாட்டிண்டு முழிக்கர்து அவாளோட ரங்கமணி தான்// hahaha..unmai..unmai..

Chitra said...

பதிவை படித்து விட்டு, 'டாய்ய்ய் தக்குடு!'னு தெலுங்கு பட வில்லன் மாதிரி சவுண்டுடன் யாரும் ஆட்டோ/சுமோ அனுப்ப வேண்டாம்...:)(ஏன்னா தக்குடு சைஸுக்கு சைக்கிளே ரொம்ப ஜாஸ்தி).


......இங்கேயே புரை ஏற அளவுக்கு சிரிச்சேன்...... தக்குடு, அவங்க கையில மாட்டினீங்க ..... தக்குடு வைத்து கொத்து பரோட்டா செய்வது எப்படி என்று தான் அடுத்து வருமோ.....
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

அநன்யா மஹாதேவன் said...

dey romba naal kazhichu rasichu sirichen! thanks for this write up.. (galattaa pannradhukku vishayame aapadaleye!!! :P)
kaalam thaan idhukku badhil sollanum.. nokkum oru naa aambadaiyaal varuvaale.. appo theriyum sedhi!

கவிநயா said...

//இந்த சிங்கப்பூர் அக்கா எதோ தியான வகுப்பு மாதிரி ரொம்ப அமைதியா ப்ளாக்கை நடத்திண்டு இருந்தா, அங்க போய் சீரியஸ் கூட்டத்துல சிலுக்கு டான்ஸ் ஆடின மாதிரி ஆடிட்டு வந்துடுவேன்.//

தக்குடு டச் :) சூப்பர். சிரிச்சு சிரிச்சு...

தக்குடு வாழ்க!

(ஆட்டோ வரதுக்குள்ள ப்ளேன் புடிச்சு ஓடி விடவும்!)

அப்பாவி தங்கமணி said...

//ஏன்னா தக்குடு சைஸுக்கு சைக்கிளே ரொம்ப ஜாஸ்தி).//
அட அட அட... தன்னடக்க சிங்கம்னு ஒரு பட்டம் தயாராயிட்டு இருக்காம்... உனக்கு தானா அது... சரி சரி

//ஒரு பெரிய கூட்டமே இருக்கு, இந்த கூட்டம் வேற எந்த ப்ளாக்குக்கும் போகாது//
ஹலோ....அப்படி எல்லாம் இல்ல... என் ப்ளாக்க்கு நெறைய கிட்சன் ப்ளாக் பிரெண்ட்ஸ் வர்றதுண்டு... இரு போட்டு தரேன்... சைக்கிள் இல்ல Cyclone ஏ வரும் உங்க வீட்டுக்கு...

//மதுரைக்கார பதிவரோட பதிவை பாத்துட்டு பஞ்சாப் பதிவர் வீட்டுல சிங்கம் மாதிரி இருக்கும் சிங்குகள் இப்போ குழிப்பணியாரம் சாப்டுண்டு இருக்கா! நம்ப ஊர் ராமசாமி/சுப்ரமணியன்கள் எல்லாம் 3 வேளையும் ஆலு பரோட்டா சாப்டுண்டு இருக்கா//
அதுக்கு பேரு தான் unity in diversity ... ஸ்கூல் காலத்துல civics civics னு ஒரு சப்ஜெக்ட் இருக்குமே படிச்சதில்லையா... பெண்கள் எல்லாம் படிச்சதை இப்படி செயல் படுத்தறாங்க... உங்கள போல இல்ல... (ஹா ஹா ஹா... இப்ப என்ன சொல்லுவ..)

அப்பாவி தங்கமணி said...

//வரிசையா 4 பேரோட லிங்க் குடுக்கனும்னு கை துறுதுறுனு வருது//
ஒகே... டன்.... hospital ல எல்லாம் புக் பண்ணி வெச்சுட்டயா ஏற்கனவே... ஹா ஹா ஹா

//"இத்தனை நாளா சாம்பாரை சின்ன பர்னர்லதான் பண்ணிண்டு இருந்தேன், பெரிய பர்னரை சின்னதா வெச்சும் பண்ணலாம்ங்கர்து புதிய தகவல், நிச்சயமா ட்ரை பண்ணிட்டு சொல்லரேன்"

"அந்த பாசிப்பருப்பு டால் வெச்சுருக்கும் வாளி ரொம்ப நன்னா இருக்கு! எங்க வாங்கினை? அக்காவோட பதில் - லூசுதான் கடைலேந்து எல்லாம் வாங்கும், என்னோட தோழி வீட்ல இருந்தது, நைசா லவட்டிண்டு வந்துட்டேன்." //

திட்டவும் தோணுது...ஆனா ஆபீஸ்ல உக்காந்து கெக்க பிக்கனு சிரிக்கறேன்... யாரும் பாத்து "லூசாநீ" னு கேக்க போறது உறுதி. இதுக்கு தான் உன் போஸ்ட் நான் ஆபீஸ்ல படிக்கறதில்ல

//இப்போ சாயங்காலம் டீ குடிக்கர்த்துக்கே முந்திரி பக்கோடா செய்யற அளவுக்கு பெரிய சமையல் ரவுடி ஆயிட்டா அந்த பெங்களூர் ரவுடி//

இப்பவாச்சும் புரிஞ்சுக்கோ... எத்தனை பேரு வாழ்க்கைல வெளக்கேத்தி வெச்சுருக்காங்க இவங்கன்னு

அப்பாவி தங்கமணி said...

//ஸப்ப்ப்ப்ப்ப்பா! ஒரு கமண்ட் வாங்கர்துக்கு நம்ப இட்லி மாமி மாதிரி எவ்ளோ தில்லாலங்கடி வேலை எல்லாம் பண்ணவேண்டி இருக்கு//

இரு இரு இன்னைக்கே பார்சல் அனுப்பறேன்...
(ஹலோ நாங்கெல்லாம் போஸ்ட்ஐ விட பெருசா கமெண்ட் எழுதற வம்சமாக்கும்... )

எல்லாம் சரி... நீ எதுக்கு இந்த ப்ளாக் பக்கமெல்லாம் போன... ரெசிபி பிடிக்க தானே... உண்மைய ஒத்துக்கோ

jeyashrisuresh said...

Appavi thangamani madam,Thanks for ur wonderful comments.
Enna thakkudu badila kannom.

vgr said...

konjam general knowledge thevainu nenakren inda postai rasika...

keep writing!

jeyashrisuresh said...

படம் காட்டர்துல இவாளை மிஞ்ச யாராலையும் முடியாது//
Unnamadiri "ummachi padam"nu title pottu silk smitha padam kattrathukku edhu evallovo mel. Unnaku romba poramaiya pochu.

ஒரு பெரிய கூட்டமே இருக்கு, இந்த கூட்டம் வேற எந்த ப்ளாக்குக்கும் போகாது//
hello unnoda ella postkkum naan vandhu comment podren, neenga eppadi???. enga posta read panra unnake ivallavu kozhupunna, sapdra enngalluku evvalavu irrukum.

Subhashini said...

நல்லா மாட்டிண்டுட்டையே தக்குடு கமெண்ட்ஸ் எல்லாம் தூள் மரியாதையா பதில் போட்டு விடு
Subha

தக்குடுபாண்டி said...

@ சுபாஷினி மேடம் - நன்னிஹை!!..:)

@ ராஜி மேடம் - ஹா ஹா ஹா. மெயில் அனுப்பி வாழ்த்தின்டு இருக்காங்க எல்லாரும்..:)

@ ஜெய்ஷ்ரீ அக்கா - அந்த லேபில் போட்டதுல உங்களுக்கு பரமசந்தோஷம்தான்னு எனக்கு தெரியும்..:)

@ ஷோபா அக்கா - நையாண்டி போஸ்டுக்கு எல்லாம் முதல் ஆளா வந்து தக்குடுவை வாரிவிட வந்துடுவேளே!!..:)

@ ஜெய்ஷ்ரீ அக்கா - ரிப்பன் பக்கோடா டவுட்டை நம்ப ராஜி மேடமிடம் கேக்கவும்..:)

@ ஆயில்யன் - வாங்க ஆயிலு! சமையல் சம்பந்தமா எது எழுதினாலும் உம்ம ஆதரவு படுபயங்கரமா இருக்குயா!!..:)

@ வல்லியம்மா - அதெல்லாம் ஒன்னும் இல்லை, இவா எல்லாருக்குமே தக்குடு செல்லப்பிள்ளை, அதனால ஒன்னும் ஆகாது..:)

@SK - வாங்க மனோதத்துவ நிபுணரே!! நன்னிஹை..:)

@ நிது பாலா - அந்த ரெண்டாவது கமண்ட் உங்க ஆத்துக்காரர் போட்டது மாதிரி இருக்கே?? செளக்கியமா நீங்க? ரொம்ப நாள் ஆச்சுப்பா உங்களை பாத்து!..;)

@ சித்ரா அக்கா - ரெம்ப சந்தோஷம் அக்கா, சத்தம் போட்டு சிரிச்சு பரமசாதுவான சாலமன் அண்ணாவை பயம் காட்டாதீங்கோ!!..:)

jeyashrisuresh said...

hey thakkudu, idhuku dhan posta paddikkanumgardhu, adhu kadugu illa milagu powder

Matangi Mawley said...

unga "theratti paal" recepie-ye ungalukku samayal blog ezhutha license koduththuduththu... unga sense of humour is very appetizing...

aana yen avaa maththa blog-ku poga maattaannu nekku puriyalai?

தக்குடுபாண்டி said...

@ அனன்யா அக்கா - நீங்க சிரிச்சதுல இந்த குழந்தைக்கு ரொம்ப சந்தோஷம்கேட்டையா!!

@ கவினயா அக்கா - ரொம்ப சந்தோஷம்பா!!..:)

@ இட்லி மாமி - அதான் சொன்னேனே அதிர்ஷ்டக்காராளுக்கு கமண்ட் கிட்டும்!னு..:) அந்த பெண்ணியம்! வெங்காயம்! வரி உங்களுக்குத்தான் இட்லி மாமி!..:P உங்களால நிச்சயமா தக்குடுவை திட்ட முடியாது, ஏன்னா தக்குடுதான் உங்க தம்பியாச்சே!!..:) நான் தான் ஒத்துக்கறேனே படிக்கத்தன் போனேன்னு, இருந்தாலும் நம்ப நக்கல் புத்தி போக மாட்டேங்கர்து..:)

@ ஜெய்ஷ்ரீ அக்கா - :)

@VGR - ஆமாம், இது சமையல் பத்தினது...;P

@ ஜெய்ஷ்ரீ அக்கா - அதான் சொன்னேனே யோகக்காராளுக்கு மட்டும் கமண்ட் கிட்டும்!னு...:P

@ சுபா மேடம் - :)

@ மாதங்கி - ரொம்ப தாங்க்ஸ் மாதங்கி! அவா கோஷ்டிகளுக்கு கமண்ட் போடவே அவாளுக்கு நேரம் இல்லை, அவ்ளோ பிஸி அவா...;)

Mrs.Menagasathia said...

ஐயோ தக்குடு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது..இதுல உள்குத்து எதுவும் இல்லையே..அப்பாவி அக்கா சூப்பர்ர் கமெண்ட்ஸ்..எங்களை சிரிக்க வச்ச உங்களுக்கு அப்பாவியின் இட்லி+கேசரி பார்சல் அனுப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்..

தெய்வசுகந்தி said...

ஹா ஹா ஹா!! அடி வாங்க ரெடியாத்தான் இருக்கீங்க போல:-)!

Mahi said...

ப்ளாக் வந்து விவரம் சொல்லி,இங்கே அழைத்து வந்ததுக்கு நன்றிங்க தக்குடு! நல்லா சிரிச்சேன்.:)
ரிப்பன் பகோடா படிச்சதுமே யாரு கிச்சனை சொல்றீங்கன்னு கண்டுபுடிச்சிட்டேன்.;)

வஞ்சப் புகழ்ச்சியா நிறைய சொல்லி இருந்தாலும் குக்கிங் ப்ளாகர்ஸ் பல வீட்டு சமையலறைகள்ள விளக்கேத்தி வச்சிருக்காங்க என்ற உண்மையை மறக்கவேண்டாம்.:)

அப்புறம்,என்னையும் குக்கிங் ப்ளாகர் லிஸ்ட்ல வச்சிருக்கீங்களா என்ன????!!!!

Mahi said...

தோஹா வெயில்ல ஒட்டகம் மேச்சு தக்குடுவுக்கு கண்ணு கேட்டுப் போச்சு,கடுகுக்கும் மிளகுக்கும் வித்யாசம் தெரில.:)

சீக்கிரமா ஐ ஸ்பெஷலிஸ்ட்டைப் பாத்து கண்ணாடி போடுங்கோ தக்குடு!

Swathi said...
This comment has been removed by the author.
Swathi said...

Look like you have written this post after researching lot.

jeyashrisuresh said...

correcta sonneenga mahi

Priya said...

Haha, sirichi sirichi yenna yezuthurathu'ne terla..irrunthalum ippadiya yella unmaiyum puttu puttu vaikurathu, che yenga manasu kasta padura madhriya ippadi unmaiya sollurethu,மதுரைக்கார பதிவரோட பதிவை பாத்துட்டு பஞ்சாப் பதிவர் வீட்டுல சிங்கம் மாதிரி இருக்கும் சிங்குகள் இப்போ குழிப்பணியாரம் சாப்டுண்டு இருக்கா! நம்ப ஊர் ராமசாமி/சுப்ரமணியன்கள் எல்லாம் 3 வேளையும் ஆலு பரோட்டா சாப்டுண்டு இருக்கா.

LOllllllllll, yeppadi ippadi ellam..

RVS said...

//உன்னை மைனா! என்று தானே அழைத்தேன் நீ
ஏன் உன்னுடைய நைனாவை அழைத்தாய்! –//
இதை மொக்கை கவிதை என்று சொல்றவாளோட ப்ளாக் ஹேக் ஆக.
தக்குடுவின் விஸ்வரூபம் அப்படின்னு இந்தப் பதிவுக்கு சென்னையிலே அண்ணா ஃபிளைஓவர் பக்கத்துல பிரம்மாண்டமா கட்அவுட் வைக்க ஏற்பாடு பண்ணிண்டு இருக்காலாம். ஆத்துலேர்ந்து டாக்சி வச்சுண்டு போய் பார்த்துட்டு வந்து கமெண்டு போடறேன். அப்புறம் அந்த கிச்சன் கில்லாடிகள் கிட்ட எதுவும் வச்சுக்கவேண்டாம். அவாளோட கை வண்ணத்தை பழிச்சுட்டு கால்வண்ணம் பார்த்துடப் போறீர். இதுக்கு ஆட்டோ வெல்லாம் அனுப்ப மாட்டா ஆட்டம்பாம் தான் அனுப்புவா. அவாத்து "அண்ணா"க்களுக்கு கீ கொடுத்து உங்காத்துக்கு வந்து அட்லீஸ்ட் வாய் வார்த்தையாவாது கேட்டுட்டுப் போவா தோன்றது.
இப்படி ஒரு பதிவு எழுதி எல்லா மாமியையும் உங்காத்துக்கு அழைச்சுண்டு வந்துட்டேள். அடி வாங்க ரெடின்னு நினைக்கறேன். இதுக்கெல்லாம் ஷேக்கு வந்து காப்பாத்த மாட்டான்.
சிரிப்பின் ருசியோடு இருக்கும் ரெசிபி இந்த பதிவு தக்குடு... பேஷ். பேஷ். ரொம்ப நன்னா இருக்கு.

தக்குடுபாண்டி said...

@ மேனகா மேடம் - இட்லி மாமியோட கேசரி இட்லி இரண்டுமே தக்குடுவுக்கு வேண்டாம், அதுக்கு டாட்டா சுமோவே தேவலை..:)

@ சுகந்தி மேடம் - எவ்வளவோ வாங்கியாச்சு, இதை வாங்க மாட்டோமா??..:)

@ மஹி மேடம் - ரிப்பன் பக்கோடாவுக்கும் நம்ப ராக்ஸ் ராஜி மேடத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..:) உங்க மெஜாரிட்டி பதிவு அதுதானே, அதனால நீங்களும் சமையல் மாமி தான்..:P

@ ஸ்வாதி அக்கா - நீங்க மட்டும் தான் ஒரு படைப்பாளியோட(தக்குடுவைதான் சொல்லறேன்) உழைப்பை கவனிக்கறேள்!..:)

@ ஜெய்ஷ்ரீ அக்கா - இது உங்க போஸ்ட் அதனால நீங்களே பதில் சொல்லலாம் அக்கா..:P

@ ப்ரியா மேடம் - ரொம்ப சந்தொஷம்பா! தக்குடு சொன்னதுல ஒன்னு கூட பொய் கடையாது!னு ஒத்துண்ட உங்களுக்கு தக்குடு மாதிரியே குழந்தை மனசு!,,:)

@ RVS அண்ணா - அந்த கவிதை தக்குடுவோடுது தான், ஒரு ப்ளோல வந்துடுத்து..:) எல்லா மாமியும் இங்கதான் இருக்காங்க, ஆனா இந்த பதிவுக்கு தான் ஓசி டீ குடிக்காம கமண்ட் எல்லாம் போடராங்க எல்லாரும்!..:)

Krishnaveni said...

Hilarious writing, Special Thanks to Appavi Thangamani for her excellent reply

Premalatha Aravindhan said...

thanks for calling me to ur site...

Parava ellaiye thakkudu,enga sitela traffic increase panrathuku photo pottu,step vise picture pottu romba hardwork panrom.ana neenga engalapathi pesi,evalavu comments vakitengala.Oru vagaiela v have to thank u for developing our blog by giving hot news...

தி. ரா. ச.(T.R.C.) said...

கடவுளோட அருளால நல்ல மனுஷா கொஞ்சம் பேர் இந்த கடை பக்கம் வந்து போயிண்டு இருக்கா. அதுலையும் ரொம்ம்ம்ப நல்ல மனுஷா எல்லாம் கமண்டும் போட்டுண்டு இருக்கா!

Good post ethukku vampu

அப்பாவி தங்கமணி said...

//jeyashrisuresh said...
Appavi thangamani madam,Thanks for ur wonderful comments.
Enna thakkudu badila kannom//

ஜெயஸ்ரீ மேடம், நன்றி நன்றி நன்றி... தக்குடுவ பத்தி தெரியாதா... பதில் எல்லாம் ஈஸ்காபிசம் தான் எப்பவும்... வழக்கம் போல ".... பிராப்திரஸ்து" னு மெரட்டிட்டு போக வேண்டியது தான் நாம....ஹா ஹா ஹா...

அப்பாவி தங்கமணி said...

//Mrs.Menagasathia said...
அப்பாவி அக்கா சூப்பர்ர் கமெண்ட்ஸ்..//

தேங்க்ஸ்ங்க மேனகா

அப்பாவி தங்கமணி said...

//Krishnaveni said...
Hilarious writing, Special Thanks to Appavi Thangamani for her excellent reply//

தேங்க்ஸ் வேணி... பின்ன உங்களை எல்லாம் கிண்டல் பண்ணினா கேட்டுட்டு சும்மாவா இருப்பேன்... ஹா ஹா

தக்குடுபாண்டி said...

@ All - நானும் சமையல் ப்ளாக்கர்ஸுக்கு ஆதரவு தான், நிறையா ஆத்துல இன்னிக்கி அடுப்பு எரியர்தே அவாளாலதான்னு எனக்கும் தெரியும். இருந்தாலும் உங்களை பத்தி யாராவது எழுதும் போது உங்களுக்கு ஒரு சந்தோஷம் கிட்டர்து இல்லையா? அதுக்குத்தான் தக்குடு எழுதினது, மத்தபடி தக்குடு அதிகம் படிக்கர்து சமையல் மாமிகளோட ப்ளாக் தான்...:)

jeyashrisuresh said...

APPAVI THANGAMANI MADAM, THANKS A LOT.
ENNA THAKKUDU, kaidaiseela pottapodula jagavangitayae nee

jeyashrisuresh said...

solomon pappaiya pattimandram pona effect irruku thakkudu.

Mahi said...

/உங்களுக்கு ஒரு சந்தோஷம் கிட்டர்து இல்லையா? அதுக்குத்தான் தக்குடு எழுதினது, மத்தபடி தக்குடு அதிகம் படிக்கர்து சமையல் மாமிகளோட ப்ளாக் தான்...:) / ஹாஹ்ஹா! இப்பூடி அந்தர்பல்டி அடிச்சுட்டீங்களே தக்குடு?? :):)

நாங்கள்லாம் இத சீரியஸ் மேட்டரா எடுத்துக்கல,பயப்படவாண்டாம்,ஓக்கேவா?? ;)

"மேடம்"-லாம் வேண்டாம்,மஹின்னே கூப்டுங்க.

பத்மநாபன் said...

தக்குடு ...சிரிப்பு நின்னு கமெண்ட் போட இவ்வளவு நாழி ஆயடறதுடா அம்பி..

சிங்கு குழிப்பணியாரமும்.. நம்மூர் ஆளுங்க ஆலு பரோட்டா சாப்பிடறதும் ரெசிபியாலே தான் ..வாஸ்தவம் தான்..இப்பெல்லாம் சூடு தண்னி வைக்கிறதுக்கே எந்த மாமி ரெசிபி போட்டிருக்கான்னு நிறைய மாமிகள் தேடிட்டு இருக்கா......

Techops mami said...

sari nee yetho pudusa samayal tips solla poren paathan...kadasila samayal sites thaaktiyea Thakkudu.

Aana unaku romba thanadakam chaasthi..

yenga ponalum nee siluka vida mata poola iruku?

அப்பாதுரை said...

சிரிச்சு வயிறு புண்ணாயிடுத்து.
>>>எந்திரன் பட ரிலீஸ் அன்னிக்கி கூட ‘நேந்திரம்பழ கட்லட் செய்வது எப்பிடி?’

jeyashrisuresh said...

super mahi

தக்குடுபாண்டி said...

@ கிருஷ்ணவேனி மேடம் - ரொம்ப சந்தோஷம்பா!..:)

@ பிரேமா மேடம் - //Oru vagaiela v have to thank u for developing our blog by giving hot news// உங்க ஒருத்தருக்கு தான் தக்குடுவோட நல்ல மனசு புரிஞ்சுருக்கு மேடம்!..:)

@ TRC சார் - அந்த பயம் இருக்கட்டும்!!..:)

@ இட்லி மாமி - அசந்தா என்னோட ப்ளாக்கையே ஆட்டையை போட்டுடுவேள் போலருக்கே!!..:) பதில் கமண்ட் எல்லாம் போட்டுருக்கேளே அதை சொன்னேன்..:)

@ ஜெய்ஷ்ரீ அக்கா - சிவன் கோவிலுக்கு போனா எலாரும் சண்டிகேஸ்வரர் சன்னதில போய் கைதட்டிட்டு வருவா, அதை மாதிரி இங்க வரவா எல்லாரும் ஒரு தடவை 'அடப்பாவி' தங்கமணிக்கு நன்றி சொல்லிண்டு இருக்கா!! 'அப்பாவி தங்கமணி' அவாளோட பட்டப்பெயர். ஒழுங்கா எல்லாரும் 'இட்லி மாமி!'னு மரியாதையா கூப்டுங்கோ!!..:)

@ மஹி - தக்குடுவுக்கு பயமே கிடையாது, பயம் இருந்தா இந்த மாதிரி ஒரு போஸ்ட் போட முடியுமா??..:)

@ பத்பனாபன் அண்ணா - ரொம்ப சந்தோஷம் அண்ணா!..:)

@ Techops மாமி - //samayal sites thaaktiyea Thakkudu// ஹலோ இப்பதான் ஒரு மாதிரி பேசி சரிபண்ணி இருக்கேன், கொழப்பிவிட்டுராதீங்கோ!! //yenga ponalum nee siluka vida mata poola iruku// ஷோபா அக்காவோட கழுகு கண்ணுக்கு கூட தெரியாத சிலுக்கு மேட்டர் உங்களுக்கு மட்டும் எப்பிடிதெரிஞ்சது?? உங்காத்து மாமா சிலுக்கு ரசிகரோ?னு தக்குடுவுக்கு சந்தேகமா இருக்கு!!..:)

@ அப்பாதுரை - நன்னிஹை!!..:)

@ ஜெய்ஷ்ரீ அக்கா - உசுப்பேத்திவிடர்தே வேலையா போச்சு உங்களுக்கு!..:)

PriyaVaasu said...

Anniyaayam, mr.thakudu, ippadiya engalai vararthu!!!! nan sirichinde iruken, en paiyan paavam ennai paarthu enna aachumannu ketundu irukan!!!!
Food blog moolama, nanga desa otrumai valarkarom paaru!!!! punjab-le kuzhipaniyaaram and namma oorle Aalu parantha!!!! periya vishayam thane!!!! :)

Vibaas said...

Hi Thakkudu, first time here..thanks to Jeyashri. Hilarious post..but give us some credit okay..kashtappatu samayal kalaiya improve panni photography skill-um improve panrom illa?

Bharat vilas comment - too good :)

Shanthi said...

சமையல் மகாராணின்னு பட்டமும் கொடுத்து தெளிவா படம் போடுவோம்னு உண்மைய ஒத்துண்டதுக்கு நன்றி. சிறப்பான, சிரிப்பான பதிவு. ஒட்டகம் மேய்ச்சு சோத்துக்கு வெண்டி போய்ட்டேன்னு தெரியறது. என்ன பண்றது? எங்க ப்ளாக்கைப்பார்த்து மனசை ஆத்திக்கோ. எப்படியோ ஒன் ப்ளாக் ல கமெண்ட் நெறைய வரதுக்கு நல்ல ஐடியா பண்ணிட்டே. நடத்து. நல்ல நகைச்சுவையை நாங்க ரசிக்கற மாதிரி, நீயும் எங்க சமையல் சுவைகளை ரசிக்க பழகிக்கோ.

lata raja said...

Thakkudu, thamizh samaiyal veliyaarukkum puriyanumnaa englipish thaan orae baashai...aanaalum engala P.C. Sriram-oda oppittadhu konjam jaasthi...naan unnai Kallidai appalam maamigala yaen photo edukkalainnu kaetka ninaichchirundhean...
appram samaiyal blog comment podavae naeram illadha en pondra .....(fill it up with a nice adjective) kku vaera blog padikka naeram odhukka mudiyaamai thaan kaaranam avaala visit pannadhadhu...

Anonymous said...

Dear Thakkudu, yella commentum vanthathukku apparam commentalaamnuthan wait pannindu irunthen.kusumbu&kurumbu pudichaa aaluthaan neenga, but unga narration paathathukku apparam yella mamigalukkum siripputhan varuthey thaviraa kovamey varamaatengarthu, athuthan unga speciality. Antha jeyashri madamthan postla maatinda victimnu avaalooda comments paathaaley theriyarthu..:)

Ranjani Iyer

Meena Sankaran said...

இருந்தாலும் உனக்கு கொஞ்சம் லொள்ல்ஸ் அதிகம் தான் தக்குடு. நன்னா ஜொள்ளு விட்டுண்டு போய் எல்லோர் வீட்டு சமையல் குறிப்பையும் விடாம படிச்சிட்டு இங்க இப்படி ஒரு பிலிமா?

ஜெயஸ்ரீ, அந்த வேப்பங்கோழுந்தையும், முத்தின பாகற்காயையும் சேர்த்து அரைச்சு ஒரு கஞ்சி பண்ணுவியே, அந்த ரெசிபியை மறக்காம தக்குடுவுக்கு இன்னிக்கே அனுப்பிடு சரியா?

எனக்கு ஒரு சந்தேகம். ப்ளாக் உலகத்துல நம்ம ஊர் ஆட்டோ டிரைவர்களால் பிரசித்தமான 'வீட்டுல சொல்லிட்டு வந்துட்டயா' வோட equivalent என்ன? யாராவது தெரிஞ்சா நம்ம தக்குடுவுக்கு கொஞ்சம் சொல்லுங்க பார்ப்போம். :-)

subu said...

True; recipe writing is the most frequent topic... So I surrendered to it by posting a blog titled'subustew'! I enjoyed your toast/post!

தக்குடுபாண்டி said...

@ ப்ரியா மேடம் - ரொம்ப சந்தோஷம்பா!!..:)

@ விபா அக்கா - பேசாம ஜெய்ஷ்ரீ அக்காவை என்னோட ப்ளாக் ப்ரமோடிங் மேனஜரா ஆக்கிடலாமானு யோசிச்சுண்டு இருக்கேன்...;)

@ சாந்தி மேடம் - ரைட்டு மேடம்! அப்பிடியே பண்ணிடலாம்!..:)

@ லதா மேடம் - நானும் அதே தான் சொல்லி இருக்கேன்..:) //podavae naeram illadha en pondra .....(fill it up with a nice adjective// 'என் போன்ற சமையல் மாமிகள்'நு அதை பில் பண்ணிக்கட்டுமா??..:)

@ ரஞ்ஜனி - கரெக்டுதான் ரஞ்ஜனி, இவா யாருக்குமே தக்குடு மேல கோபமே வராது, ஏன்னா......:) ஜெய்ஷ்ரீ அக்கா பத்தின உங்க யூகத்துக்கு நிர்வாகம் பொறுப்பல்ல!!..:)

@ மீனா அக்கா - ஜெய்ஷ்ரீ அக்கா தக்குடுவுக்கு திரட்டிப்பால் மட்டும் தான் பண்ணித்தருவா!!..:)

@ சுப்பு சார் - நல்லா உசுப்பேத்தி விடரீங்க சார்!!..:)

Chella Nilaa said...

யெச்சுஸ்மி - சாப்பாடு ராமன்கள் இருக்கிற வரைக்கும் சமையல் மாமிகள் இருக்கத்தான் செய்வார்கள்... குட் போஸ்ட்!

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)