டிஸ்கி - இந்த பதிவு வெறும் நகைசுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது.
பதிவை படித்து விட்டு, 'டாய்ய்ய் தக்குடு!'னு தெலுங்கு பட வில்லன் மாதிரி சவுண்டுடன் யாரும் ஆட்டோ/சுமோ அனுப்ப வேண்டாம்...:)(ஏன்னா தக்குடு சைஸுக்கு சைக்கிளே ரொம்ப ஜாஸ்தி).
தக்குடுவுக்கு சங்கீதமும் சமையலும் ரொம்ப பிடித்தம் உண்டுனு உங்க எல்லாருக்குமே நன்னா தெரியும். அதனால ஆரம்ப காலத்துலேந்தே சமையல் ப்ளாக் நான் ஜாஸ்தி படிக்கர்து உண்டு. சமையல் விஷயத்தோட சேர்ந்து பயங்கர காமெடியாவும் அந்த ப்ளாக்குகள் இருக்கும். அதுல இருக்கும் சில சுவாரசியமான விஷயங்களே இந்த பதிவின் சாரம்.
பெரும்பாலான சமையல் பதிவர்கள் இங்கிலிபீஸ்ல தான் எழுதுவா. ஒரு பெரிய கூட்டமே இருக்கு, இந்த கூட்டம் வேற எந்த ப்ளாக்குக்கும் போகாது, அவாளுக்குள்ளையே தான் மாத்தி மாத்தி mouthwatering,eyes watering,tempting,very nice,- னு கமண்ட் போட்டுப்பா. ஒரு சில நகைச்சுவை பதிவுக்கு மட்டும் ‘போனா போகர்து பொழச்சு போ!’னு கமண்ட் போடுவா. மத்தபடி சமையல் சாராத ஒரு பதிவர் இவாள்டேந்து கமண்ட் வாங்கர்து பிரம்ம பிரயத்தனம் தான். எந்திரன் பட ரிலீஸ் அன்னிக்கி கூட ‘நேந்திரம்பழ கட்லட் செய்வது எப்பிடி?’னு கருமமே கண்ணாக பதிவு போட்டு நம்மை புல்லரிக்க வெச்சுடுவார்கள்.
உன்னை மைனா! என்று தானே அழைத்தேன் நீ
ஏன் உன்னுடைய நைனாவை அழைத்தாய்! –
இந்த ரேஞ்சுக்கு கவிதை எழுதி கழுத்தை அறுக்கும் மொக்கை மன்னர்கள் பதிவுக்கு எல்லாம் மறந்து கூட எட்டிபாக்க மாட்டா. இதை எல்லாம் மீறி சமையல் சாராத ஒரு பதிவுக்கு இவாளோட ஆதரவு இருந்ததுன்னா அந்த பதிவர் உண்மைலேயே அதிஷ்டக்காரர்தான். இங்கிலிபீஸ்ல எழுதர்துனால தெற்கு,வடக்கு,கிழக்கு,மேற்கு பாகுபாடு எல்லாம் இதுல இருக்காது. மாட்டிண்டு முழிக்கர்து அவாளோட ரங்கமணி தான். மதுரைக்கார பதிவரோட பதிவை பாத்துட்டு பஞ்சாப் பதிவர் வீட்டுல சிங்கம் மாதிரி இருக்கும் சிங்குகள் இப்போ குழிப்பணியாரம் சாப்டுண்டு இருக்கா! நம்ப ஊர் ராமசாமி/சுப்ரமணியன்கள் எல்லாம் 3 வேளையும் ஆலு பரோட்டா சாப்டுண்டு இருக்கா.
இவா எல்லாரோட ப்ளாக்கோட பெயருமே எதோ 'பாரதவிலாஸ், சந்திரவிலாஸ்' நு ஹோட்டலுக்கு பேர் வெச்ச மாதிரி இவாளோட பேர் மொதல்ல இருக்கும் பின்னாடி ‘கிச்சன்!’னு ஒரு ஸ்பெஷல் பிட்டிங் இருக்கும். இதுல இன்னும் சில பேர் அவாளோட அப்பாவி ஆத்துக்காரர் பேரையும் சேர்த்து போட்டுண்டு எதோ “மணாளனே மங்கையின் பாக்கியம்” ரேஞ்சுக்கு பில்டப்பு குடுப்பா. வரிசையா 4 பேரோட லிங்க் குடுக்கனும்னு கை துறுதுறுனு வருது, ஆனா இதுக்கே தக்குடுவுக்கு தர்ம அடி உறுதி! லிங்க் எல்லாம் குடுத்தா தக்குடுவோட 'அர்னால்ட்' பாடி ஆட்டம் கண்டுபோகும் அதான் பேசாம இருக்கேன்.
எனக்கு தெரிஞ்ச ஒரு சிங்கப்பூர் பதிவரோட ரங்கமணி கிட்ட "ப்ளாக்(Blog) பத்தி என்ன நினைக்கறேள்?"னு கேட்டதுக்கு, “இந்த நூற்றாண்டோட மிகச்சிறந்த ஒரு கண்டுபிடிப்பே ப்ளாக் தான், கல்யாணம் ஆன புதுசுல இட்லிக்கு மொளகா பொடி கேட்டாலே 'திருதிரு'னு முழிப்பா உங்கொக்கா, இப்போ இட்லிக்கு தொட்டுக்க ராஜம்மா(raajmaa) பண்ணலாமா இல்லைனா கண்ணம்மா பண்ணலாமா?னு யோசிக்கர அளவுக்கு பெரியாள் ஆயிட்டானா அதுக்கு இந்த ப்ளாக் தான் காரணம்!”னு சொன்னார். இந்த சிங்கப்பூர் அக்கா எதோ தியான வகுப்பு மாதிரி ரொம்ப அமைதியா ப்ளாக்கை நடத்திண்டு இருந்தா, அங்க போய் சீரியஸ் கூட்டத்துல சிலுக்கு டான்ஸ் ஆடின மாதிரி ஆடிட்டு வந்துடுவேன். இவாளோட ப்ளாக்ல கமண்ட்ஸ் எல்லாம் எப்பிடி இருக்கும்னு நான் சொல்லமறந்துட்டேன்.
"இத்தனை நாளா சாம்பாரை சின்ன பர்னர்லதான் பண்ணிண்டு இருந்தேன், பெரிய பர்னரை சின்னதா வெச்சும் பண்ணலாம்ங்கர்து புதிய தகவல், நிச்சயமா ட்ரை பண்ணிட்டு சொல்லரேன்"
"அந்த பாசிப்பருப்பு டால் வெச்சுருக்கும் வாளி ரொம்ப நன்னா இருக்கு! எங்க வாங்கினை? அக்காவோட பதில் - லூசுதான் கடைலேந்து எல்லாம் வாங்கும், என்னோட தோழி வீட்ல இருந்தது, நைசா லவட்டிண்டு வந்துட்டேன்."
என்னோட பெங்களூர் தோஸ்த் ஒருத்தி கல்யாணம் ஆகி துபாய்க்கு வந்த புதுசுல சமையலே தெரியாம முழிச்சா, “ஒங்க தோஸ்துக்கு மாங்கல்யம் கட்டினதுக்கு 1 வாரமா மாகி(Maagi) போட்டே என்னை பழி வாங்கிண்டு இருக்கா!”னு அவளோட ஆத்துக்காரர் என்கிட்ட ஒரே பொலம்பல். பால் காய்ச்சுவது எப்படி?னு ஆரம்பிச்சு பாஸந்தி செய்வது எப்படி வரைக்கும் அழகா சொல்லி இருப்பா, கவலையே படாதே!னு சொல்லி அவளுக்கு இந்த கோஷ்டியோட லிங்கை அனுப்பி வெச்சேன். இப்போ சாயங்காலம் டீ குடிக்கர்த்துக்கே முந்திரி பக்கோடா செய்யற அளவுக்கு பெரிய சமையல் ரவுடி ஆயிட்டா அந்த பெங்களூர் ரவுடி!..:) அவளோட ரங்கமணிதான் பாவம், 'டெஸ்டிங் லேப்'ல மாட்டிண்ட எலி மாதிரி ஆயிட்டார்.
இன்னோரு சிங்கப்பூர் பதிவரோட பேரே பயங்கர காமெடியா இருக்கும், ஆனா நான் கேட்டதுக்கு அந்தம்மா அந்த பேரை ஒரு ‘டெரெர்’ எபக்டுக்காக வெச்சுருக்கேன்!னு சொல்லி காமெடி பண்ணினா. படம் காட்டர்துல இவாளை மிஞ்ச யாராலையும் முடியாது, கேஸ் அடுப்பை பத்த வைகர்துலேந்து கருவேப்பிலை தூவர்து வரைக்கும் தெளிவா படம் போடுவார்கள். சமீபத்துல வாசிச்ச 2 பதிவுல தேங்குழல்ல இருந்த ஜீரகம், ரிப்பன் பக்கோடால இருந்த கடுகு இதெல்லாம் கூட தெளிவா இருந்தது, பி.சி.ஸ்ரீராம் தோத்துப் போவார். "இந்த டம்பளர் சரவணாபவன் ஹோட்டலில் திருடப்பட்டது"னு எழுதி இருக்கற மாதிரி இவாளோட எல்லா பதார்த்த போட்டோலையும் இவாளோட பேரும் இருக்கும். அப்பிடியும் 'விடாகொண்டன் கொடாகொண்டன்' கதை மாதிரி சில நாளேடுகள் இவாளோட ப்ளாக் போட்டோவை இவாளுக்கு தெரியாம ஆட்டையை போட்டுடராங்க.
தக்குடு ப்ளாக் தொடங்கின புதுசுல என்னோட நலவிரும்பிகள் சிலபல யோசனைகள் எல்லாம் எனக்கு குடுத்துண்டு இருந்தா. அதுல பிரதானமான யோசனை தக்குடு ப்ளாக்கை எதாவது ஒரு திரட்டில இணைக்கர்து. எனக்கு திரட்டினா என்னன்னே தெரியாது முதல்ல, எனக்கு தெரிஞ்ச ஒரே திரட்டி எனக்கு பிடிச்ச திரட்டி பால் மட்டும் தான். அப்புறம் அவா சொன்னது கொஞ்சம் புரிஞ்சு அந்த திரட்டில போய் பார்த்தேன். ‘அட ராமா!’னு ஆயிடுத்து எனக்கு. ஒருத்தருக்கொருத்தர் ஒரே பழி சண்டை அதுல, அக்கா,ஆத்தா!னு திட்டி திட்டி பதிவு போட்டுக்கரா. பிரபல பதிவர் அது! இது!னு ஈகோ பிரச்சனை வேற இதுல. இதுக்கு நடுல பெண்ணியம்,ஆணியம்,வெங்காயம்,பெருங்காயம்னு ஒரு குரூப் மைக் புடிச்சு சவுண்ட் விட்டுண்டு இருக்கு.
இதெல்லாம் விட பெரிய காமெடி, ப்ளஸ் ஓட்டு! மைனஸ் வோட்டு!னு ஒரு குரூப் வோட்டை எண்ணிண்டு இருக்கர்தையே பொழப்பா வெச்சுண்டு இருந்தது. ஆத்தாடி! இந்த பொழப்புக்கு பதிலா தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டில சேர்ந்து தலைவர் ஆயிடலாம்னு (அங்க எல்லாருமே தலைவர் தானாமே?) முடிவு பண்ணிட்டேன் (நம்ப வேட்டியை மட்டும் ஜாக்ரதையா பாத்துக்கனும்..:)) தக்குடுவோட களம் நகைச்சுவை & குழந்தை தனமான ஆன்மிகம். அதனால எந்த திரட்டிலையும் சேரவேண்டாம்னு தீர்மானம் பண்ணினேன். ஆளே இல்லாத ஊருக்கு டீ ஆத்தினாலும் பரவாயில்லை வியாபாரத்தை கொண்டு போயிடலாம்னு முடிவு பண்ணினேன். ஆனா கடவுளோட அருளால நல்ல மனுஷா கொஞ்சம் பேர் இந்த கடை பக்கம் வந்து போயிண்டு இருக்கா. அதுலையும் ரொம்ம்ம்ப நல்ல மனுஷா எல்லாம் கமண்டும் போட்டுண்டு இருக்கா!!(ஸப்ப்ப்ப்ப்ப்பா! ஒரு கமண்ட் வாங்கர்துக்கு நம்ப இட்லி மாமி மாதிரி எவ்ளோ தில்லாலங்கடி வேலை எல்லாம் பண்ணவேண்டி இருக்கு!)...:)