Friday, July 30, 2010

ஷகிராவும் கவுண்டமணியும்.....

இந்த ஊருக்கு(Doha) வந்த புதுசுல கண்ணை கட்டி விட்ட மாதிரி இருந்தது, இப்போ கொஞ்சூண்டு கண்ணை அவுத்து விட்ட மாதிரி இருக்கு அவ்ளோதான். ஊருக்கே ஏசி போட்ட மாதிரி கண்ணுக்கு குளுர்ச்சியா ( நான் மரத்தை சொன்னேன்)இருக்கும் பூலோக சொர்க்கம் பெங்களூர்லேந்து வந்ததால் கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது. ஆனால் நான் வந்த சமயம் இங்கையும் குளிர்காலமா இருந்ததால தக்குடு தப்பிச்சான்.



ஆபிஸுக்கு போனா அங்க எல்லாம் ஒரே ஷேக்கு மயமா இருந்தது (பின்ன என்ன 3/4 போட்ட பிகரா இருக்கும்?னு நக்கல் அடிக்க வேண்டாம்). கடைசியா என்னோட உயரதிகாரியை பாத்து 'கும்புடுக்கரேன் எஜமான்!'னு சொன்னேன் (இங்க்லிபீஸ்ல ரிப்போர்ட் பண்ணர்துன்னு சொல்லுவாங்க). அதுக்கு அப்புறம் என்னோட சீட்டுக்கு போனா பக்கத்து சீட்ல ஒரு சூடான்காரார், கொஞ்சம் தள்ளி இன்னொரு ஷேக்கு உக்காச்சுண்டு இருந்தார். சாப்டாமா கூட இருக்க முடியும், ஆனா பக்கத்துல உள்ளவாளோட பேசாம மட்டும் திருனெல்வேலிகாரனால இருக்க முடியாது. பக்கத்தாதுல பாம் வெடிச்சாலும் எட்டிப்பாக்காம ப்ளாக்ல ‘பாதுஷா செய்வது எப்படி?’ன்னு படிச்சுண்டு இருக்கர்துக்கு நான் என்ன சிட்டில உள்ளவனா??

எங்க ஊரா இருந்தா, அண்ணாச்சி! என்னா வெயிலு அடிக்கி!னு மெதுவா ஆரம்பிச்சோம்னா 30 நிமிஷத்துக்கு குறைவு இல்லாம அண்ணாச்சி நம்ப கூட பேசுவார். அந்த கதை எல்லாம் இங்க நடக்காதுன்னு எனக்கு நன்னாவே தெரியும். சூடான்காரர் நல்ல ஆறடி ஒசரத்தோட கூடை பந்தாட்ட வீரர் மாதிரி இருந்தார். மெதுவா அவர்ட்டதான் பேச்சு குடுக்க ஆரம்பிச்சேன். இருந்தாலும் ரொம்ப எல்லாம் ஸ்னேகம் ஆகலை. நம்ப ஊர்ல எல்லா பயலும் கிரிக்கெட் பைத்தியம் புடிச்சு அலையற மாதிரி இங்க உள்ளவாளுக்கு எல்லாம் கால்பந்தாட்டம்னா உசுரு. தச்சுமம்முவுக்கு நம்ப மாவுடு தொட்டுக்கர மாதிரி இவா எல்லாருக்கும் புட்பால் இருந்தா போதும்..

உலககோப்பை போட்டி நடந்த போது இவாளோட கோட்டியின் உச்சகட்டத்தை பாக்க முடிஞ்சுது. ‘இந்தவாட்டி for ஆப்ரிக்கா!’னு முடியும் கால்பந்தாட்டத்தோட அந்த விளம்பரப் பாட்டுக்கு நடுல 'ங்கொக்கா மக்கா, ங்கொக்கா மக்கா'னு வரும் அந்த வரியை கேட்டவுடன் எனக்கு ஆச்சர்யமா இருந்தது. எங்கையோ ஆப்பிரிக்கால இருக்கும் பாப் பாடகி ஷகிரா (பேரை கவனமா வாசிங்கடே!) நம்ப கவுண்டமணியோட ரசிகையா?னு ஆச்சர்யமா இருந்தது. கூர்மையா கேட்டதுக்கு அப்புறம்தான் அது 'ங்கொக்கா மக்கா’ இல்லை ‘வக்கா வக்கா!’னு மனசுல ஆச்சு

எனக்கு புட்பால் பத்தி ஒன்னுமே தெரியாது, பெனால்டினு சொன்னா எனக்கு எங்க ஊர்ல எலக்ட்ரிசிட்டி பில் கட்டலைன்னா, 15 தேதிக்கு அப்புறம் காக்கி டவுசர் போட்ட ஒரு மாமா வந்து அவாத்து பீஸ்கட்டையை பிடிங்குண்டு போவார். பில்+50 ரூவா அபராதம் கட்டினாதான் திருப்பி கரண்ட் வரும். இதுதான் எனக்கு தெரிஞ்ச பெனால்டி. (இப்போ எல்லா வீட்டு பீஸ் கட்டையையும் நிரந்தரமா ஆற்காடு மாமா பிடிங்கி வச்சுருக்கார்னு கேள்விப் பட்டேன்)

கார்னர்நு சொன்னா எனக்கு என்னோட பெங்களூர் ஆபிஸ்தான் ஞாபகம் வரும். முதல் ப்ளோர்ல கதவை திறந்தோன்னே 'கன்னிமூலகணபதி' மாதிரி கார்னர்ல சக்கப்பழமா ஒரு டில்லி பிகர் ரோலிங் சேர் நிறைஞ்சு உக்காசுண்டு இருப்பா. அதுதான் எனக்குத் தெரிஞ்ச ஒரே கார்னர்.

இங்க உள்ளவா கூட பேசனும்னா புட்பால் பத்தி பேசினா போதும்னு புரிஞ்சது. 10 அடி நகருவதற்குள் 10 தடவை பாஸ் பண்ணி கொண்டு போகர்து ஸ்பெயின் அணியோட சிறப்பாம்சம். வெறும் 3 பாஸ்ல 70 அடி வரைக்கும் கொண்டு போகர்து ஜெர்மனியோட திறமை. ஆக்ரோஷமான அணி அர்ஜெண்டினா- இந்த மாதிரி பல விஷயங்களை பிட்டு போடுவதற்கு உபயோகமாகும்னு தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன்.

இந்த மாதிரி ஒரு சமயத்துல தான் ஒரு நாள் அந்த சூடான் காரர்ட மெதுவா ஒரு பிட்டை போட்டேன். அரை இறுதிப் போட்டிக்கு பிரேசிலும் இல்லை, அர்ஜெண்டினாவும் இல்லை இனிமே புட்பால் பாத்து என்ன பிரயோஜனம்? னு மெதுவா ஆரம்பிச்சேன்.(லீவு அன்னிக்கு லேடிஸ் காலேஜ் வாசல்ல காத்துக் கிடந்து என்ன பிரயோஜனம்!னு மனசுக்குள்ள சொல்லிண்டேன்). அவர் கையை டேபிள்ல வச்சுண்டு தலையை டேபிள்ல சாய்ச்சுண்டு இருந்தார். பக்கத்துல போய் பாத்தா கேவி! கேவி! ஒரே அழுகை. (வடிவேல் குரலில்)தாய்ப் பாசத்துல இவர் நம்பளை மிஞ்சிடுவார் போலருக்கே!!னு நினைச்சுண்டே அவரோட முதுகை தடவி குடுத்து, அவர் கழுத்துல இருந்த டையை வச்சு அவர் கண்ணை எல்லாம் துடைச்சு விட்டு சமாதானம் பண்ணர்துக்குள்ள போதும்! போதும்!னு ஆயிடுத்து.

அப்புறம் தான் தெரிஞ்சது அந்த ஆளு பிரேசில் & அர்ஜெண்டினாவோட கன்னாபின்னா ரசிகர்னு. நல்ல வேளை பிரேசிலை பத்தி கேவலமா எதாவது சொல்லியிருந்தென்னா என்னோட பல்லை ஒடச்சு இருப்பார் அந்த சூடான் சிங்கம். பல்லும் வாயும் தப்பிச்சது குலதெய்வம் பெருவேம்புடையார் புண்ணியத்துலதான்...:). அதுக்கு அப்புறம் அந்த சூடான் சிங்கம் தக்குடுவுக்கு பயங்கர தோஸ்த் ஆயிட்டார். இரண்டு வாரம் என்னோட ஆபிஸ் கார் டிரைவர் லீவு போட்டப்போ கூட இவர்தான் கால் டாக்ஸி மாதிரி தினமும் என்னை பிக்கப்பு, ட்ராப்பு எல்லாம் ஓசிலையே பண்ணினார்.

இங்க உள்ள ஷேக்கு கூட நான் இங்க்லீஷ்ல பேசின கதையை தனியா ஒரு பதிவா போடலாம்னு இருக்கேன்.

விரைவில் உங்கள் அபிமான ப்ரவுசர்களில் எதிர்பாருங்கள் 'ஓமணக் குட்டி டான்ஸ்'

34 comments:

ஆயில்யன் said...

//ப்போ எல்லா வீட்டு பீஸ் கட்டையையும் நிரந்தரமா ஆற்காடு மாமா பிடிங்கி வச்சுருக்கார்னு கேள்விப் பட்டேன்//

வேணாம் தக்குடு வேணாம் ஊருக்கு போறச்ச இந்த மாரி பேசப்பிடாது புரிஞ்சுதா?:)))))))))

ambi said...

தக்குடு, உனக்கு ஷேக் டிரஸ் நல்லா இருக்கு. (ஒகே, ஷ்டார்ட் மியூசிக்) :p

தக்குடு said...

@ அம்பி அண்ணா - அது எங்க ஆபிஸ்ல உள்ள ஒரு ஷேக் நண்பர்....:)

@ All - மக்களே! புரளியை கண்டு ஏமாறவேண்டாம்!!....;)

BalajiVenkat said...

////ஒரு டில்லி பிகர் ரோலிங் சேர் நிறைஞ்சு உக்காசுண்டு இருப்பா//// :P

நல்லா இருக்கு ... ஜமாய் ....

Unknown said...

Hey Thakudu, Very entertaining article...Comparing Shakira and Namma Goundamani ws really hilarious :-)

Anonymous said...

"பக்கத்தாதுல பாம் வெடிச்சாலும் எட்டிப்பாக்காம ப்ளாக்ல ‘பாதுஷா செய்வது எப்படி?’ன்னு படிச்சுண்டு இருக்கர்துக்கு நான் என்ன சிட்டில உள்ளவனா??"

இந்த குசும்பு தானே வேண்டாங்கிரே ..

தக்குடு உங்க இந்த பதிவு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு ..ரசித்தேன் சிரித்தேன் ..



"இங்க உள்ள ஷேக்கு கூட நான் இங்க்லீஷ்ல பேசின கதையை தனியா ஒரு பதிவா போடலாம்னு இருக்கேன்."

சீக்ரமா போடறிங்களா படிக்க ஆவலோட வெய்டிங் ..

ஷைலஜா said...

தக்குடு! எதார்த்தமாய் அழகா எழுதறே ரசிச்சேன்.

எல் கே said...

//என்னோட பல்லை ஒடச்சு இருப்பார் அந்த சூடான் சிங்கம். பல்லும் வாயும் தப்பிச்சது குலதெய்வம் பெருவேம்புடையார் புண்ணியத்துலதான்..///

vada pocche...

எல் கே said...

//இங்க உள்ள ஷேக்கு கூட நான் இங்க்லீஷ்ல பேசின கதையை தனியா ஒரு பதிவா போடலாம்னு இருக்கேன்.//

ithu veraya

எல் கே said...

//கன்னிமூலகணபதி' மாதிரி கார்னர்ல சக்கப்பழமா ஒரு டில்லி பிகர் ரோலிங் சேர் நிறைஞ்சு உக்காசுண்டு இருப்பா//

pillyar unnai mannika maattar

சுசி said...

//ஆபிஸுக்கு போனா அங்க எல்லாம் ஒரே ஷேக்கு மயமா இருந்தது//

அய் ஜாலி.. எல்லா ஃப்ளேவரும் கிடைக்குமா??

எங்க ஆஃபீஸ் மோசம். காஃபி மெஷின் தான் வச்சிருக்காங்க. மில்க் ஷேக்லாம் கிடையாது :))

Matangi Mawley said...

unga office paththi neenga solratha paaththaa etho "boys high school" mathiri irukku.. co education illayaa?? iyyo paavam!

sriram said...

நல்ல பதிவு, பகிர்ந்தமைக்கு நன்றி...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//( நான் மரத்தை சொன்னேன்)//
நம்பறோம்..நம்பறோம்...

//பேசாம மட்டும் திருனெல்வேலிகாரனால இருக்க முடியாது//
ஓ... அப்படியா...

//பக்கத்தாதுல பாம் வெடிச்சாலும் எட்டிப்பாக்காம ப்ளாக்ல ‘பாதுஷா செய்வது எப்படி?’ன்னு படிச்சுண்டு இருக்கர்துக்கு நான் என்ன சிட்டில உள்ளவனா?? //
ஹா ஹா ஹா... சூப்பர் ...

//எங்கையோ ஆப்பிரிக்கால இருக்கும் பாப் பாடகி ஷகிரா (பேரை கவனமா வாசிங்கடே!) நம்ப கவுண்டமணியோட ரசிகையா?னு ஆச்சர்யமா இருந்தது//
இந்த விசயம் கௌண்டருக்கு தெரியுமா...

//இப்போ எல்லா வீட்டு பீஸ் கட்டையையும் நிரந்தரமா ஆற்காடு மாமா பிடிங்கி வச்சுருக்கார்னு கேள்விப் பட்டேன்//
ஏர்போர்ட் வாசல்லையே நிக்கறாங்களாம்... போங்க சார் போங்க

//இங்க உள்ள ஷேக்கு கூட நான் இங்க்லீஷ்ல பேசின கதையை தனியா ஒரு பதிவா போடலாம்னு இருக்கேன்//
ஒரு பதிவென்ன பத்து கூட போடலாம்...

vgr said...

ஊருக்கே ஏசி போட்ட மாதிரி கண்ணுக்கு குளுர்ச்சியா ( நான் மரத்தை சொன்னேன்)இருக்கும் பூலோக சொர்க்கம் பெங்களூர்லேந்து வந்ததால் கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது.

Bengaluril ponnu edum pathurikiya...edarkaga inda alaviku meeriya pugazhchi..?

Boologa Swargam Bengalura? Ada paavi...piranda man pasam konjam kooda illaye....

nijamave adu unnoda velai panravanoda photo va?

Chitra said...

இங்க உள்ள ஷேக்கு கூட நான் இங்க்லீஷ்ல பேசின கதையை தனியா ஒரு பதிவா போடலாம்னு இருக்கேன்.


...EageRly waitinguuuuuu!!!!

எல் கே said...

//நல்ல பதிவு, பகிர்ந்தமைக்கு நன்றி.../

best comment

meenamuthu said...

ஒரே தமாஷ்!மிக ரசித்தேன்.. :))

அவ்...ளோ தூரம் வந்து என் தாலாட்டை பாராட்டியதற்கு நன்றி..ப்பா...!

Jeyashris Kitchen said...

pesama oru shake ponna parthu kalyanam panniko thakkudu.Innum neriya post podalam.
As usuall nice write up with great sense of humor.
நான் மரத்தை தன் சொன்னேன்னு சொல்லுன்போ தே தெரியலையே ,நி அதை சொல்லலை நு

பத்மநாபன் said...

// வந்த புதுசுல கண்ணை கட்டி விட்ட மாதிரி இருந்தது, இப்போ கொஞ்சூண்டு கண்ணை அவுத்து விட்ட மாதிரி இருக்கு அவ்ளோதான்// எனக்கும் அப்படித்தான் இருந்தது தக்குடு.. இங்கிலிசு பேசுன கதையும் சிக்கிரம் போடுங்க....என்னதது பதிவ படிக்கவிடாம என்னாவோ ஒமனா, டான்சுன்னு..தக்குடு எங்கிற பச்சிளம் பாலகனுக்கு தெரிந்துதான் இதெல்லாம் நடக்குதா?

GEETHA ACHAL said...

//பக்கத்தாதுல பாம் வெடிச்சாலும் எட்டிப்பாக்காம ப்ளாக்ல ‘பாதுஷா செய்வது எப்படி?’ன்னு படிச்சுண்டு இருக்கர்துக்கு நான் என்ன சிட்டில உள்ளவனா??//பயங்கர தமாஷா இருக்கு...நல்லா எழுதி இருக்கின்றிங்க...

தி. ரா. ச.(T.R.C.) said...

தக்குடு எப்படியோ உனக்கு கார், டிரைவர் எல்லாம் இருக்குன்னு அம்பிக்கு தெரியப்படுத்தனும் அதுக்குதானே போஸ்ட் ஹும் நடத்து ராஜா.

மதுரையம்பதி said...

உள்ளேனய்யா சொல்லிக்கறேன். :)

Shobha said...

//பக்கத்தாதுல பாம் வெடிச்சாலும் எட்டிப்பாக்காம ப்ளாக்ல ‘பாதுஷா செய்வது எப்படி?’ன்னு படிச்சுண்டு இருக்கர்துக்கு நான் என்ன சிட்டில உள்ளவனா??//

அம்பிக்கு கேசரி தம்பிக்கு பாதுஷாவா?

Shobha said...

கோந்தே ஓமனக்குட்டியாக்கும் , ஓமணக்குட்டி அல்லா கேட்டையா!!

Anonymous said...

Dear Thakkudu, innemey unga blogai officela vechu open pannavey koodathuppa, correcta badusha portion varumpoothu yennoda PM vanthuttar, sirikkavum mudiyaama,atakkavum mudiyaama asadu valinjundu irunthen. morachuttu poonaar yenga PM..:( today again kai automatica unga blogai open panniduthu..:) boston sir cmmt,podhikaila letter poottavalukku reply pannina maathiri irukku..:) LOL . shakira part,badhusha,tie vechu kannu thodachathu yellam chanceyy illai. Abt ur delhi sakkappalam pigar, my amma is still laughing...:)

Ranjani Iyer

தக்குடு said...

@ ஆயிலு - ஊருக்கு போய் இறங்கும் போதே ஒரு மஞ்சள் துண்டை தோள்ல போடுண்டுதானே போவேன்..;))

@ பாலாஜி - முழுப் பதிவுல டில்லி பிகர் மேலதான் உங்க கண் போலருக்கு??..;))

@ செளம்யா அக்கா - நன்னிஹை!!..:)

@ சந்தியா அக்கா - //சீக்ரமா போடறிங்களா படிக்க ஆவலோட வெய்டிங்// வழக்கம் போல எதாவது ஒரு வெள்ளிக் கிழமைல வெளிவரும்...:))

@ ஷைலஜா அக்கா - சந்தோஷம்பா!!..:)

@ LK - பிள்ளையார் எல்லாம் இதை கண்டுக்க மாட்டார்...:PP

@ சுசி - நக்கலு???...:)

தக்குடு said...

@ மாதங்கி - இங்கையும் பொம்ணாட்டிகள் எல்லாம் உண்டு, ஆனா தக்குடு ஏர்போர்ட்ல இறங்கும் போதே, இந்த ஊர்ல இருக்கும் எல்லா பொம்ணாட்டிகளும் என்னோட அக்கா/தங்கச்சி!னு சபதம் எடுத்துருக்கான்..:) (இல்லைனா அடி எவன் வாங்கர்து?)

@ பாஸ்டன் நாட்டாமை - நாட்டாமை, ஆடிக்கு ஒரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை நீங்களும் போஸ்ட் போடத்தானே செய்வேள் அப்ப இருக்கு தீவாளி!..:)

@ அடப்பாவி தங்க்ஸ் - ரொம்ப சந்தோஷம் பா!!..:))

@ VGR - பெங்களூர்ல ஒன்னா, ரெண்டா சொல்லர்துக்கு, எல்லாம் நம்ப கப்பல்தான்..:)
//nijamave adu unnoda velai panravanoda//ஆமாம் நம்ப தோஸ்த் அவர்.

@ சித்ரா அக்கா - ரைட்டு!!..:)

@ LK - :)

@ மீனா அக்கா - சந்தோஷம்பா, இப்போ எல்லாம் ராத்ரி அந்த தாலாட்டு வரிகளை பாடிண்டுதான் தக்குடு தூங்கர்து தெரியுமா??..:)

@ ஜெய்ஷ்ரீ அக்கா - ஷேக்கு பொண்னெல்லாம் நமக்கு தாங்காது அக்கா, தக்குடுவை ஷேக் பண்ணிடுவா..:)

@ பத்பனாபன் சார் - //என்னதது பதிவ படிக்கவிடாம என்னாவோ ஒமனா, டான்சுன்னு// விகல்பமா எதுவும் வராது கவலை படாதீங்கோ சார்!..;)

@ கீதா அக்கா - நன்னிஹை!!..;)

@ TRC சார் - வரும்போதே கொளுத்திவிடர வேலைதானா??..:)

@ ஷோபா அக்கா - தக்குடுவுக்கு திரட்டிப்பால்னா இஷ்டம்!..:)

//கோந்தே ஓமனக்குட்டியாக்கும் , ஓமணக்குட்டி அல்லா கேட்டையா!!// அது வல்லிய ஓமணக் குட்டி அதான் பெரிய 'ணா'...:)

@ ரஞ்ஜனி - அச்சச்சோ! ஜாக்ரதையா படிக்க வேண்டாமாபா!
//Abt ur delhi sakkappalam pigar,// அது ஒன்னும் என்னோட சக்கப்பழ பிகர் கிடையாது...:P

தக்குடு said...

@ M'pathi anna - attendance noted!!..:)

Swathi said...

Romba jollu than Thakkudu, You are comparing shakira with gouthami that is too bad. Nice and interesting post as usual.

Anonymous said...

அப்போ அந்த ஊர்ல கண்ணுக்கு குளிர்ச்சியா எதுவுமே இல்லயோ?(நான் மரத்த கேக்கல?)

Raks said...

நீங்க ரொம்ப நல்லா எழுதுறீங்க... இப்படி நிறையே பேர் சொல்லி அலுத்திருக்கும் உங்களுக்கு,இருந்தாலும் நானும் சொல்லிடறேன் :) நானும் அம்பி சொன்னதை நம்பிட்டேன் முதல்ல :) photo-இவரா அவரு??(தேம்பி தேம்பி அழுதது??)

Sweatha Sanjana said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

அமுதா கிருஷ்ணா said...

ஆனா பக்கத்துல உள்ளவாளோட பேசாம மட்டும் திருனெல்வேலிகாரனால இருக்க முடியாது. பக்கத்தாதுல பாம் வெடிச்சாலும் எட்டிப்பாக்காம ப்ளாக்ல ‘பாதுஷா செய்வது எப்படி?’ன்னு படிச்சுண்டு இருக்கர்துக்கு நான் என்ன சிட்டில உள்ளவனா??

100% உண்மை...

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)