Friday, July 2, 2010

குண்டலமே! குண்ண்ண்டலமே!

தலைப்பை ராமராஜனோட செண்பகமே! பாட்டு மாதிரி பீலிங்கோடு வாசித்துக் கொள்ளவும். தலைப்பை பாத்தவுடன் பன்னீர் சோடா,கேரட் சாதம் பத்தி எல்லாம் எழுதின சிலபேர் நக்கலா சிரிக்கலாம், ஆனா பொதுமக்களுக்கு சேவை பண்ண வந்துட்டு அதுக்கெல்லாம் பயப்படமுடியுமா? ரைட்டு, இட்லி மாமி மாதிரி ஓவர் பில்டப்பு (தமிழில் அலப்பறைனு சொல்லுவா) குடுக்காம மேட்டருக்கு வரேன்.

குண்டலத்துக்கும் தக்குடுவுக்கும் உள்ள தொடர்பை பாக்கர்துக்கு கி.பி பத்தாம் நூற்றாண்டெல்லாம் போக வேண்டாம், தக்குடு கல்லிடை வீதிகளில் விளையாடிய பருவத்துக்கு போனாலே போதும். எங்க தெருல 65 வீடு, ‘உங்காத்து குக்கர் நாலு விசில் அடுச்சுருத்தே! இன்னும் கேஸை அணைக்கலையா?’னு பக்கத்தாத்து மாமி விசாரித்துக் கொள்ளும் அளவுக்கு அன்யோன்யம்(முகம் குடுத்து பேசத் தெரியாத சிட்டி மக்கள் மாதிரி கிடையாது). எங்க தெருல ஒரே பேருல 3 மாமிகள் இருந்தா. கரெக்டான மாமியை பிக்ஸ் பண்ணி அவாத்துக்கு போகர்துக்குள்ள எல்லாருக்கும் போதும்! போதும்!னு ஆயிடும். மூனு பேருக்கும் பொதுவான அந்த பேரு கோமா மாமி! மூனு பேருமே கண்ணாடி போட்டுண்டு இருப்பா, அதிர்ஷ்ட வசமா ஒரு கோமா மாமியாத்து மாமாவுக்கு கோவில்பட்டிக்கு மாத்தல் ஆகி அவா போய்ட்டா, ஆனா இந்த கோமா மாமி குழப்பம் தீர்ந்தபாடா இல்லை. மிச்சம் இருந்த ரெண்டு கோமா மாமியாத்து மாமாவும் பாங்க்ல வேலை பாத்துண்டு இருந்தா, அதனால பாங்க் கோமா மாமினு ஒருத்தரை மட்டும் பிரிக்க முடியாது. ரெண்டு பேருக்குமே 2 வாயாடி பொண்கொழந்தேள்(தக்குடுவுக்கு அக்கா வயசு அவாளுக்கு). இந்த கோமா மாமி குழப்பம் தீர்ந்தபாடா இல்லை.

அப்போதான் நான் ஒரு கோமா மாமியாத்து வெள்ளிக்கிழமை பூஜைக்கு தக்கரப்பொங்கல்(தக்குடு பாஷைல சர்க்கரை பொங்கல்) வாங்கிக்கர்துக்கு போனென். அன்னிக்கு அந்த மாமி காதுல குண்டலம் போட்டுண்டு இருந்தா, அதை பாத்துட்டு, ‘மாமி! இந்த தெருலையே உங்களுக்குதான் குண்டலம் ப்ரமாதமா இருக்கு!’னு ஒரு பிட்டை போட்டேன். ஒரு கரண்டி எக்ஸ்ட்ரா சக்கப் பொங்கலுக்காக இவ்ளோ பெரிய பிட்டாடா?என்பது போல அவாத்து மாமா படிச்சுண்டு இருந்த ஹிந்து பேப்பரை கீழே இறக்கிட்டு என்னை ஒரு பார்வை பாத்தார். ஆனா கோமா மாமிக்கு வாயெல்லம் பல்லு, அதுக்கு அப்பரம் சதா சர்வகாலமும்(எண்ணை தேச்சுக் குளிக்கும் நாள் தவிர) குண்டல பூஷணியாக அந்த மாமி தெருல வளைய வர ஆரம்பிச்சா. அந்த மாமிக்கு ‘குண்டல’ கோமா மாமி!னு பட்டப்பேர் வச்சுட்டேன். தெருல இருக்கர எல்லாருக்கும் ஒரு பெரிய குழப்பம் தீர்ந்த திருப்தி. இன்னோரு கோமா மாமிக்கு ‘ஸ்டைல்’கோமா மாமி!னு பெயர் சூட்டப்பட்டது(அந்த மாமி பயங்கரமா ஸ்டைல் பண்ணுவா).

1)குண்டலத்துல பல மாடல்கள் இருக்கு, எல்லா மாடலுமே எல்லாருக்கும் பொருந்தி வருவது இல்லை. அவாளோட முகத்தை பொறுத்து வித்யாசப்படும்.
2)இதை எல்லாம் விட முக்கியமான விஷயம் குண்டலம் போட்டுக்கரவா உம்மனாமூஞ்சியா இல்லாம ஒரு மில்லியன்டாலர் புன்னகையோட(எவன்டா அங்க!இளிச்ச வாய்!னு வாசிக்கர்து?) இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
3)கண்ணு முழி நல்ல நவாப்பழம் மாதிரி இருக்கரவாளுக்கு குண்டலம் முகத்தோட பொருத்தின மாதிரி அம்சமா இருக்கும்.


4)குண்டலம் அதுவா முகத்தோட இயல்பான அசைவுனால ஆடினாதான் நன்னா இருக்கும், சில பேர் வேணும்னே அதை ஆட்டர்துக்காகவே மண்டையை மண்டையை ஆட்டி முயற்ச்சி பண்ணுவா, அப்படி பண்ணவே கூடாது.5)குண்டலம் போட்டுக்கர்துக்கு ஒரு வயது வரம்பு உண்டு, பக்கத்தாத்து காயத்ரி அக்கா அவாளோட குழந்தைக்கு குண்டல கோமா மாமியை காமிச்சு மம்மு ஊட்டர அளவுக்கு எல்லாம் வெச்சுக்காம கெளரவமா ஆறு கல் வைரத்தோடுக்கு மாறிக்கர்து உஜிதம். (ஊருக்கு போகும் போது அந்த மாமிக்கு எடுத்து சொல்லனும், தக்குடு சொன்னாதான் அந்த மாமி காதுலையே வாங்கிப்பா). இன்னும் அந்த கோமா மாமி குண்டலத்தை கழுட்டலை என்பது உபரி தகவல்.

இந்த மாதிரி ஒரு சமுதாய விழிப்புணர்வு(!!??) பதிவு போடப்போறேன்னு சொன்னவுடன் கால நேரம் பாக்காம போட்டோ எல்லாம் அனுப்பி வெச்ச என்னோட தோஸ்த் ‘துபாய்’ செளம்யாவுக்கு ஒரு சலாம்! தாங்க்யூ! செளம்யாமவ்ளே!...:)

குறிப்பு - பெரிய ஜவுளிக்கடை முழுவதும் துணிமணிகள் இருந்தாலும் எல்லாத்தையும் முதலாளியா உபயோகபடுத்தறார்? அதை மாதிரி இந்த பதிவுல உள்ள வர்ணனைக்கும் தக்குடுவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தக்குடுவுக்கு பொம்ணாட்டிகள் சமாசாரத்துல எல்லாம் அவ்வளவா இஷ்டமே கிடையாது அப்படிங்கர விஷயம் உங்க எல்லாருக்குமே நன்னா தெரியும் . இருந்தாலும் புதுசா வாசிக்கர்துக்கு வந்தவா யாராவது, 'ஓஓஓ! இந்தப் பிள்ளை ஏன் இப்படி எழுதியிருக்கு?'னு குழம்பிடக்கூடாது இல்லையா அதுக்குதான் இந்த குஸ்கி மன்னிக்கவும் டிஸ்கி).

பொது நலன் கருதி வெளியிட்டவர்,
'உங்கள் பாசத்துக்குரிய' தக்குடு

40 comments:

ஆயில்யன் said...

எனக்கு ரொம்ப புடிக்கும் இந்த ஸ்டைல் குண்டலம்

[ஹிஸ்டரி ஜியோகிராபியெல்லாம் டக்கரா அந்தந்த இடத்துல யூசு பண்றீங்கோ தக்குடு கலக்குங்க :)]

துளசி கோபால் said...

விடிஞ்சது வெள்ளாமை.

அந்த குஸ்கியைச் சொன்னேன்.

எப்படியோ தக்குடுவுக்கு சீக்கிரம் கால்கட்டுப் போட்டாச்சரி:-)

Sowm said...

Thakudupandi :-)Kundalame...Kundalame...Article starting super aa irukku...Thanks a lot fr mentioning my name in it...Thakudu ki Jai :-)

Meenakshi Sankaran said...

எல்லார் தெருவிலேயும் ஒரு கோமா மாமி இருப்பா போல இருக்கு. :-) அவாள நீங்க விவரிக்கரதுலேர்ந்து பார்த்தா ரொம்ப பரிச்சயமானவா மாதிரி தோனரா.

சூப்பர் பதிவு. காதுல போடற குண்டலத்த வச்சுண்டு கிருபானந்தவாரியார் ஸ்டைல்ல ஒரு குட்டி கதாகாலட்சேபமே பண்ணிட்டேளே! பேஷ் பேஷ்.

pinkyrose said...

kandu pidichi vanthutomla.....

அநன்யா மஹாதேவன் said...

//சூப்பர் பதிவு. காதுல போடற குண்டலத்த வச்சுண்டு கிருபானந்தவாரியார் ஸ்டைல்ல ஒரு குட்டி கதாகாலட்சேபமே பண்ணிட்டேளே! பேஷ் பேஷ்.// அதே அதே! பேஷ் பேஷ், ரொம்பப்பிரமாதம் போ!

அநன்யா மஹாதேவன் said...

தக்குடு,
நீ வர வர முன் ஜாக்கிரதை முத்தன்னாவா போயிட்டியேடா கோந்தே????
// ரெண்டு பேருக்குமே 2 வாயாடி பொண்கொழந்தேள்(தக்குடுவுக்கு அக்கா வயசு அவாளுக்கு)// இதைத்தான் சொன்னேன்.. க்கும்! :P

அநன்யா மஹாதேவன் said...

// சில பேர் வேணும்னே அதை ஆட்டர்துக்காகவே மண்டையை மண்டையை ஆட்டி முயற்ச்சி பண்ணுவா, அப்படி பண்ணவே கூடாது.// சுதா ரகுநாதனை தாறுமாறா விமர்சனம் பண்ணினத்துக்கு உன்னை வன்மையா கண்டிக்கறேன் ட்டியா?கிர்ர்ர்ர்!

அநன்யா மஹாதேவன் said...

உண்மையா சொல்லணும்னா ரொம்ப நாளா உன்கிட்டே இருந்து இந்த மாதிரி ஒரு பதிவை நான் எதிர்ப்பார்த்துண்டு தான் இருந்தேன். இருந்தாலும், இவ்ளோ சிம்பிளா முடிச்சுட்டியேன்னு நேக்கு மனசே கேக்கறதில்லை கோந்தே! கொஞ்சம் கூடி விலாவாரியா பார்ட் 2 ஏதற ஐடியா உண்டோ? :P

கவிநயா said...

தக்குடு, என்ன சொல்றதுன்னே தெரியலை போங்கோ... குண்டலப் பதிவு ஜூப்பர். குண்டலத்தை நீ...ட்டாம கச்சிதமாவும் வெச்சிட்டேள் :) சீக்கிரம் குண்டலவாணி சமேதரா உங்களப் பார்க்கணும். ஏற்பாடு பண்ணுங்கோ! :)))

jeyashrisuresh said...

super post thakkudu. unnoda kundala researchkku jay.
athuenna eppavumae unnai kulandhayaivae mention pannare!!

வித்தியாசமான கடவுள் said...

//அதை மாதிரி இந்த பதிவுல உள்ள வர்ணனைக்கும் தக்குடுவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தக்குடுவுக்கு பொம்ணாட்டிகள் சமாசாரத்துல எல்லாம் அவ்வளவா இஷ்டமே கிடையாது அப்படிங்கர விஷயம் உங்க எல்லாருக்குமே நன்னா தெரியும் . இருந்தாலும் புதுசா வாசிக்கர்துக்கு வந்தவா யாராவது, 'ஓஓஓ! இந்தப் பிள்ளை ஏன் இப்படி எழுதியிருக்கு?'னு குழம்பிடக்கூடாது இல்லையா அதுக்குதான் இந்த குஸ்கி மன்னிக்கவும் டிஸ்கி).//கண்ணு... இப்படி எல்லாம் சொல்லிட்டா நீ உத்தம புத்திரன் ஆகிட முடியாதப்பு... கேசரியே கிண்டுனாலும் அம்பியின் அல்வாவிற்கு இணை இல்லை என்பது போல, எத்தனை டிஸ்கி போட்டாலும் தக்குடுவின் குறும்பு கரும்பு ஆகாது...

Poetry said...

Nice read! A huge thought process on these Kundalam? Enga oorla Jimikki nnu sollunvanga!

Porkodi (பொற்கொடி) said...

நீங்களும் சிக்னல் மேல சிக்னல் குடுக்கறீங்க ஆனாலும் ஒருத்தரும் உங்க வீட்டுல கண்டுக்க மாட்டேங்கறாங்க போல.. பேசாம வாயை விட்டு வெளிப்படையா கேட்டுருங்க தக்குடு.. எதுக்கு இப்படி இடுகைக்கு இடுகை கஸ்டபட்டுக்கினு.. :P

vgr said...

oii,

inelerundu umma pera TKP lerundu TPS[Thar Perumai Singam] ngura patta peyaroda serkalam nu pakren. neer sammadithal mattume :))

andengappa enna oru panjayathu panirukeer ya neer. 2 koma mami oda identity crisis solve panna singame... vazhga nee!!

But post nanna iruku...ida madiriye than vara varam ezhudanum ;)

Sudha Raghunathan photo va pottutu, vayadu varamarai pathi sonnadukum edavadu sammandam iruka ;)?

Ama, adu peru kundalama? jhimiki nu solla matta? Sor kutramum illa porut kutramum illai. nan nenakren kadil aniyum evayume kundalam than nu :)

un post padichu enna mari araichi ellam panna vendiriku....happpa...

Good one!! Keep writing.

Harini Sree said...

ada raamaaa ivara kaapatha yaarume illaya??? mookku kannu kaathunu avar varnichunde poraare! Inthak kodumaya kekka yaarume illayaa??? :P

Anonymous said...

Oh my god. I could access to your site finally :D:D:D I missed reading your posts. Going to read the rest.

////சூப்பர் பதிவு. காதுல போடற குண்டலத்த வச்சுண்டு கிருபானந்தவாரியார் ஸ்டைல்ல ஒரு குட்டி கதாகாலட்சேபமே பண்ணிட்டேளே! பேஷ் பேஷ்.// அதே அதே! பேஷ் பேஷ், ரொம்பப்பிரமாதம் போ!//

REPEATTU!!!!!!!!!!!!!!!!!!!!!!

Matangi Mawley said...

enga side-la atha "jimikki"mbom... i like jimikki... aanaa ipdi nerayaa tips koduththathukku thanks! nerayaave kaththukka vendiya vishayangal thaan thakkudu ezhutharaar! 6 table ku annanda irukkara ponnoda kai gadigaaraththula chinna mullukku bathilaa cuckoo bird irukkungaratha correct-aa ganichchu sollara thakkudu kittaernthu namba nerayaavey kaththukkanum!

PS: antha pin kurippukku enna artham? engaathla yaarukkumey neenga ezhuthirukkara pin kurippu puriyavey illa!

LK said...

thakkudu blogla mattum cament podara ananyava kandikiren

பிரசன்னா said...

//சில பேர் வேணும்னே அதை ஆட்டர்துக்காகவே மண்டையை மண்டையை ஆட்டி//
ஹ ஹ ஹ..


//பொம்ணாட்டிகள் சமாசாரத்துல எல்லாம் அவ்வளவா இஷ்டமே கிடையாது அப்படிங்கர விஷயம் உங்க எல்லாருக்குமே நன்னா தெரியும்//

இல்லையே அப்படி யாரும் நெனைக்கிற மாதிரி தகவல் இல்லையே :)

Chitra said...

:-) Very nice post! pics are nice too. :-)

வல்லிசிம்ஹன் said...

தக்குடு ப்லாக்ல மட்டும் கமெண்ட் ஓடற??
:))0எல்.கே. ப்ரமாதம். குண்டலபேசின்னு உங்களுக்குப் பெயர் வரப் போகிறது தக்குடு.

மாதங்கி, தக்குடுவை எந்தரெஸ்டாராண்டில பார்த்தேள்.:)
இவ்வளவு நுணுக்கமாப் பொண்களோட கைக்கடிகாரத்தை வேற நோட்டீஸ் பண்ணுவாரா!!!

GEETHA ACHAL said...

குண்டலம் வச்சு ஒரு பதிவா...ஆனாலும் படங்களை அருமை...காலங்காத்தாலே இப்படி படங்களி காமித்து வாங்க சொல்லறாபோல இருக்கே தக்குடு...

Matangi Mawley said...

@valliyasimhan..

restaurant ellaam illa.. oru post ezhuthirukkaar allavaa- ezhuththu thervunu.. anga varuthu.. ivar "hidden talent" ellaam...

Anonymous said...

Dear Thakkudu, kalakkal post with thakkudu style. i won't wear kundalam(what a name!!)amma alwys telling me to wear that,after reading ur post Tuesday friend aathu functionukku kundalam pootundu poogapooren...:) nee yenna koma mamiyaa? thakkudu sonnathan keeppiyaa?nu amma nakkal adikkaraa...:) Photos selection also excellent. you are back to form. keep it up.

@ vgr - //inelerundu umma pera TKP lerundu TPS[Thar Perumai Singam] ngura patta peyaroda serkalam nu pakren// hello vgr, from international thakku fan clublenthu we are planing to award a 'Dr' title to our thakkudu sir. How much effort he is putting to do all this research? illaiyaa thakkudu!!...:)

Ranjani Iyer

LK said...

thakkudu enna mooku aaraichiku piragau , kundala aaraichihya...

neraya spelling mistake irukuda . tiruthikoo.. varataa

sriram said...

இதெல்லாம் ஒரு பொழப்பு????

இதுக்கு அம்பிக்கு போன் போட்டு - ரொம்ப காஞ்சி கெடக்கறேன், சீக்கிரம் ஒரு பொண்ணைப் பாருங்கன்னு நீ கேட்டிருக்கலாம்..

அம்பி.. இந்த பதிவு FYI and Immediate action

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

அருண் பிரசாத் said...

அய்யா கலக்குறீர் போங்கள்

அப்பாவி தங்கமணி said...

//இட்லி மாமி மாதிரி ஓவர் பில்டப்பு (தமிழில் அலப்பறைனு சொல்லுவா) குடுக்காம மேட்டருக்கு வரேன்//

"தலைப்பை ராமராஜனோட செண்பகமே! பாட்டு மாதிரி பீலிங்கோடு வாசித்துக் கொள்ளவும்" - இதுக்கு பேரு பில்ட் அப் இல்லாம என்னவாம்.... ஏற்கனவே என்னை புல்லுருவினு சொன்ன அனன்யாவுக்கு அதுக்கு நான் விளக்கம் சொன்னதில் அனன்யா ஊரை விட்டே போய்ட்டா... உனக்கு அலப்பறைக்கு விளக்கம் வேணும்னா சொல்லு... (ஹி ஹி ஹி )

அப்பாவி தங்கமணி said...

//ரெண்டு பேருக்குமே 2 வாயாடி பொண்கொழந்தேள்(தக்குடுவுக்கு அக்கா வயசு அவாளுக்கு).//

வர வர ரெம்ப தெளிவா ஆய்ட்டு இருக்க நீ....

அப்பாவி தங்கமணி said...

//(அந்த மாமி பயங்கரமா ஸ்டைல் பண்ணுவா)//

பாலைவனத்துல கோட் சூட் போடறவா இதை சொல்ல கூடாதுன்னு நினைக்கிறேன்... மக்களே, நீங்க எல்லாரும் என்ன சொல்றீங்க?

அப்பாவி தங்கமணி said...

//தக்குடு சொன்னாதான் அந்த மாமி காதுலையே வாங்கிப்பா)..//

அத்தனை பெரிய குண்டலம் போட்டா... காதுல எங்க வாங்கறது... காது இல்ல அவங்களை வாங்கிடும்.... லாஜிக் இடிக்குதே பாஸ்...

அப்பாவி தங்கமணி said...

//பெரிய ஜவுளிக்கடை முழுவதும் துணிமணிகள் இருந்தாலும் எல்லாத்தையும் முதலாளியா உபயோகபடுத்தறார்? //

உவமேயம்... உவமானம்.... எல்லாம் முடியல தக்குடு முடியல....

அப்பாவி தங்கமணி said...

//அநன்யா மஹாதேவன் said... கொஞ்சம் கூடி விலாவாரியா பார்ட் 2 ஏதற ஐடியா உண்டோ?//

அனன்யா... சென்னைல வெயில் கூடயோ... ஏன் இப்படி சொந்த செலவுல slow poison கேக்கற? (ஹி ஹி ஹி )

goma said...

குண்டலத்துக்குள் இத்தனை விஷயமா.....
வரி விடாமல் வாசித்தேன்.

ரொம்ப நன்னா எழுதியிருக்கேள்

தக்குடுபாண்டி said...

@ ஆயில்யன் - வாங்க சார்!...:)

@ துளசி டீச்சர் - :)) ஏன் இந்த வில்லத்தனம்??

@ செளம்யா - நிச்சயமா மவ்ளே! நீதான் இனிமே நம்ப அஜிஸ்டண்டு...:)

@ மீனாக்ஷி அம்மா - என்ன இருந்தாலும் உங்க அளவுக்கு வராது...:)

@ பிங்கி ரோஸ் - வாங்க மேடம்!

@ அனன்யா அக்கா - நீங்க இந்த மாதிரி எதிர்பாக்கரேள்னு எனக்கும் தெரியும். ஜாக்ரதையா இல்லைனா இங்க உள்ள கோஷ்டிகள் என்னை வச்சு காமடி பண்ணிடும்...:)

@ கவினயா அக்கா - நன்னிஹை!!..:)

@ ஜெய்ஷ்ரீ அக்கா - தாங்க்யூ அக்கா! பிகாஸ் மீ குழந்தை ஒன்லி...:)

@ வி.கடவுள் - :)) ஓக்கே சார்!..:)

@ Poetry - ஜிமிக்கினும் ஒரு பேரு உண்டு, ஆனா தக்குடுவுக்கு குண்டலம்தான் பிடிக்கும்...:)

@ கேடி - சிக்னல் எல்லாம் இல்லை. சிக்கல் குடுக்காதீங்க மேடம்!..:)

தக்குடுபாண்டி said...

@ VGR - உங்க போஸ்ட்ல பண்ணற ஆராய்ச்சியை விடவா இதுல பண்ணப் போறேள்??..:PP பட்டம் பதவி எல்லாம் தக்குடுவுக்கு இஷ்டம் இல்லை.

@ ஹரிணி - ராமா/பாமா யாரும் எதுவும் பண்ன முடியது...;)

@ அனாமிகா - ஆஹா ஓபன் ஆகுதா??? வினை ஆரம்பிச்சுருத்து அப்போ...:)

@ மாதங்கி - ஜிமிக்கினும் சொல்லலாம். பின்குறிப்புதானே முக்கியம், அது புரிலைனா வில்லங்கம்னா...;0

@LK - யோவ், வந்தா பதிவை பத்தி சொல்லும்யா, அனன்யாவுக்கு கண்டனம் ஆட்டுக் குட்டிக்கு கண்டனம்!னு சவுண்ட் விட்டுண்டு....:)

@ பிரசன்னா - நல்ல கேட்டுப் பாருங்கோ....;)

@ சித்ரா அக்கா - நன்னிஹை!...:)

@ வல்லி அம்மா - இந்த மாதங்கி சொல்லர்தை எல்லாம் நம்பாதீங்கோ, எனக்கு அவ்ளோ சூஷனையா எல்லாம் பாக்க தெரியாது..:)

@ கீதா அக்கா - வாங்கி போட்டுக்கோங்கோ!!..:)

@ ரஞ்ஜனி(எ) கோமா மாமி - ப்ரண்ட் ஆத்துக்கு குண்டலம் போட்டுண்டு போனேளா அப்பரம்? இனிமே குண்டலம் பாக்கும் போதெல்லாம் தக்குடு ஞாபகம் வரும்...;)டாக்டர் பட்டம் எல்லாம் வேண்டாம்பா...:)

@ LK - சரிங்க எஜமான்!...:)

@ பாஸ்டன் நாட்டாமை - நீங்க எப்போதும் நல்ல பகிர்வு!னு தானே கமண்ட் போடுவீங்க இப்பொ என்ன ஆச்சு?..:)

@ அருண் - முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்னிஹை...;)

@ அடப்பாவி தங்க்ஸ் - பிறந்த நாள் கழிஞ்சு புல் எனர்ஜியோட வந்துருக்கேள் போலருக்கு??..:) உங்க கிட்ட இருந்து எந்த விளக்கமும் வேண்டாம் மேடம்...;) நம்ப அனன்யா அக்காவுக்காக பார்ட் 2 போட்டுட வேண்டியதுதான்...;)

@ கோமா மேடம் - ரொம்ப சந்தோஷம் பா!..:)

அமைதிச்சாரல் said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்..

http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_07.html

Lakshmi said...

தக்குடு என்னங்கபேரு.பேரைப்போலவே பதிவுகளும்
அகடு, தகடாவே இருக்கே. ம்ம்ம்ம் நடத்துங்க, நடத்துன்ங்க.

siva said...

hahaha..nice

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)