Friday, July 16, 2010

கார்ப்ரேட் கச்சேரி

நாலு நாள் முன்னாடி தானைத்தலைவர் மஹாராஜபுரம் சந்தானம் அவர்களோட கச்சேரி ஒன்னு கேட்டுன்டு இருக்கும் போது என்னோட பெங்களூர் ஆபிஸ் ஞாபகம் வந்துருத்து. அதை பத்திதான் இந்த பதிவு.....:)

சங்கீத கோஷ்டிக்கும் ஆபிஸ் கோஷ்டிக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. அதுவும் இந்த கான்பரன்ஸ் கால் நடக்கும் போது பல காமெடியும் சேர்ந்து நடக்கும். அமேரிக்கா/லண்டன் துரைமார்கள் கூட நம்ப ப்ராஜக்ட் மேனேஜர் பேசும்போதுதான் இவ்ளோ கூத்தும். PM நடுல கொஞ்சம் மூச்சு விட்டு, அக்கம் குடிக்கும் போதெல்லாம் யா! யா! யெஸ் நு சொல்லி சமாளிக்கர்துக்கு ஒரு டீம் லீட் எப்போதும் ரெடியா இருப்பார். PM- க்கும் அந்த டீம் லீடுக்கும் ஒரு நல்ல புரிந்துணர்வு இருக்கும்.

கச்சேரிகள்ல வயலின் வித்வான் ரொம்ப முக்கியமானவர். பாட்டு வித்வான் பாடும் ராகம் முழுவதையும் வாங்கி வாசிக்கும் திறமை உள்ளவர். வயலின் வித்வான் வாசிக்கும் இந்த நேரத்தில் தான் பாட்டு வித்வான் கூஜாலேந்து ஏலம் பச்சக்கர்பூரம் போட்ட பாலை ரெண்டு டம்ப்ளர் உள்ள தள்ளிட்டு தெம்பாயிப்பார். ராகத்துக்கு அதிகம் முக்கியத்துவம் தரும் வித்வான்கள் வயலினுக்கு அதிக நேரம் தங்கள் கச்சேரியில் நேரம் ஒதுக்குவார்கள். பஞ்சரத்ன க்ருதியில் கூட 'ஜகதானந்த காரகா'வில் முதலில் வயலின் வித்வான் வர்ணம் வாசிக்க பின்பு அதை சந்தானம் பாடி அதன் பின்பு பாடல் வரியை பாடுவார். ராகத்தோட கட்டில் நல்ல புலமை இருக்கும் வித்வான் மட்டுமே வர்ணம் பாடமுடியும். சந்தானத்துக்கு இதெல்லாம் இடது கையால் டீ குடிக்கர மாதிரி.

சில சமயங்கள்ல நம்ப PM, பாட்டி வடை சுட்ட கதை லெவலுக்கு இறங்கி ஒரு விஷயத்தை சொல்லி புரியவைக்க முயற்சி பண்ணினாலும், அந்த பக்கம் இருக்கும் துரைமார்கள் 'சந்தைக்கு போனும்! ஆத்தா திட்டும்! காசு குடு!'னு சொன்னதையே சொல்லிண்டு இருப்பா. அந்த மாதிரி சமயத்துல அதிரடியாக அதே சமயம் அன்பாகவும் சொல்லி துரையை ஒத்துக்க வைக்கர்துக்கு டீம்ல ஒரு ஆளு இருப்பார். அந்த மாதிரி ஆள் கூடயும் PM-க்கு ஒரு நல்ல புரிந்துணர்வு இருக்கும்.

கச்சேரியில் ம்ருதங்க வித்வான் முக்கியமான ஒரு அங்கம். கச்சேரி கேக்கரவாளை தூங்காம பாத்துக்கர பொறுப்பு இவரை சேர்ந்தது. தாளத்துக்கு அதிகம் முக்கியத்துவம் தரும் பாட்டு வித்வானும் ம்ருதங்க வித்வானும் கண்களால் பேசிக் கொள்வதை மேடையில் நாம் பார்க்கலாம். 'சிந்துபைரவி'-ல டில்லி கணேஷோட கண் ஜாடைகள் எல்லாம் நீங்க பாத்துருக்கேளா?. சில பேர் ம்ருதங்கம் நல்ல அடிக்கரார்!னு சொல்லுவா, அது ரொம்ப தப்பான வார்த்தை ப்ரயோகம். சாப்ட வரேளா!ங்கர்துக்கும் கொட்டிக்க வரேளா!ங்கர்துக்கும் எவ்ளோ வித்யாசம் உண்டோ அதை மாதிரி..:) ம்ருதங்கத்துல ராகம் வாசிக்க முடியாது, தாளம் தான் வாசிக்க முடியும். வயலின்ல தான் ராகம் வாசிக்க முடியும்.

சில பேர் டீம்ல இருக்கர்தே தெரியாது. என்னமோ ஆள் எண்ணிக்கைக்கு அவனும் இருக்கான்னு எல்லாரும் நினைச்சுண்டு இருப்பா. முக்கியமான ஒரு கால் அன்னிக்கு அவர் உடம்பு சரியில்லாம லீவு போடும் போதுதான் அவரோட அருமை தெரியும். அவர் எவ்ளோ முக்கியமானவர்ங்கர்து அப்போதான் எல்லாருக்கும் தெரிய வரும்.கச்சேரில பாட்டு வித்வான் பின்னாடி பரப்பிரம்மம் மாதிரி முகத்துல எந்த ரியாக்ஷனும் காட்டாம ஒக்காசுண்டு ஒருத்தர் தம்புரா போட்டுண்டு இருப்பா. சில கச்சேரிகள்ல தம்புரா போடும் ஆள் டாப் டக்கரா இருப்பா என்பது உப தகவல்...:). அதுக்கு பேர் ஸ்ருதி( நம்ப பாஸ்டன் நாட்டாமைக்கு அவர் ஸ்கூல் படிக்கர சமயத்துல சைட் அடிச்ச மூனாவது பெஞ்சுல நாலாவது பொண்ணோட பேர் ஞாபகத்துக்கு வந்தா அதுக்கு தக்குடு பொறுப்பல்ல..:P). எவ்ளோ பெரிய சங்கீத கலா நிதியா இருந்தாலும் ஸ்ருதிப்பெட்டி இல்லாம பாடமாட்டா. கிழக்கு கடற்கரை சாலை மாதிரி நன்னா விசாலமா இருக்கர ரோட்ல நடுல கோடு இல்லைனா எப்படி வண்டி ஓட்ட முடியாதோ அது போல ஸ்ருதி இல்லாம பாட முடியாது. இப்பெல்லாம் எல்லாருமே ஸ்ருதி பெட்டிதான் வச்சுக்கரா. சில பேர் மட்டும்தான் 'பப்'கையெல்லாம் வச்ச ஒரு குத்து விளக்கை தம்புராவுக்கு உக்காத்தரா.

எல்லாருமா கஷ்டப்பட்டு ஒரு ப்ராஜக்டை பண்ணி முடிச்சாலும். ‘நாங்க உங்க வேலையை செஞ்சுமுடிச்சுட்டோம்!’னு துரை கிட்ட நம்ப PM தான் சொல்லுவார். வாட் இஸ் த ஸ்டேடஸ்?னு நித்யம் பத்து தடவை கேட்டதை தவிர அவர் அந்த ப்ராஜக்ட்ல எந்த ஆணியுமே புடுங்கலைங்கர்து எல்லாருக்குமே தெரியும் தான். மனசாட்சியே இல்லாம இந்தாளு நாங்க செஞ்சோம்!னு சொல்றார் பாருடா!னு புதுசா வேலைக்கு சேர்ந்த அப்ரன்டிஸ்கள் புலம்புவதையும் நாம கேட்டுருக்கோம். ம்ம்ம்ம்ம்.....என்ன பண்ண முடியும்?? நமக்கு கோடிங் தட்டர்து மட்டும்தான் வேலை, அவருக்கு எவ்ளோ போப்பு(தக்குடு பாஷையில் பொறுப்பு)இருக்கு?னு சொல்லி சீனியர்கள் விளக்குவார்கள்.

கச்சேரியிலும் எல்லாருமே உயிரை குடுத்து உழைச்சாலும் பாடும் அந்த நபரைதான் சங்கீத வித்வான்!னு எல்லாரும் சொல்லுவா. மத்தவா எல்லாருக்கும் ம்ருதங்க வித்வான்! கடம் வித்வான்! வயலின் வித்வான்!னு தான் பேர். எதனாலன்னா பாட்டு வித்வானுக்கு எல்லாத்துலையுமே ஒரு புலமை இருக்கும். எப்போ தனியாவர்தனத்துக்கு நேரம் குடுக்கனும், எந்த வரிசைல பாட்டு பாடி கச்சேரியை கொண்டு போகனும், சபைல இருக்கரவாளோட ரசனை & புலமை என்ன போன்ற எல்லா விஷயமும் தெரிவதால் தான் அவர் சங்கீத வித்வான்.

35 comments:

ஆயில்யன் said...

எல்லாருக்கும் கொஞ்சம் கொஞ்சம் பொறுப்பை பிரிச்சு/பிச்சு கொடுத்துட்டு ஹாயா உக்காந்திருட்டு பைனல் தீம் போது ஒண்ணா சேர்ந்து ஒப்பேத்திட்டு போற எல்லாருமே வித்வான்கள்தான் :)) சங்கீத வித்வான்/புராஜெக்ட் வித்வான்/ எட்செட்ரா எட்செட்ரா டக்குடு ரொம்ப ஃப்ரீ டைம் கிடைக்கிது போல கம்பேரிசன் போஸ்ட்டெல்லாம் வருது ரைட்டு !

sandhya said...

"கச்சேரியிலும் எல்லாருமே உயிரை குடுத்து உழைச்சாலும் பாடும் அந்த நபரைதான் சங்கீத வித்வான்!னு எல்லாரும் சொல்லுவா. மத்தவா எல்லாருக்கும் ம்ருதங்க வித்வான்! கடம் வித்வான்! வயலின் வித்வான்!னு தான் பேர். எதனாலன்னா பாட்டு வித்வானுக்கு எல்லாத்துலையுமே ஒரு புலமை இருக்கும். எப்போ தனியாவர்தனத்துக்கு நேரம் குடுக்கனும், எந்த வரிசைல பாட்டு பாடி கச்சேரியை கொண்டு போகனும், சபைல இருக்கரவாளோட ரசனை & புலமை என்ன போன்ற எல்லா விஷயமும் தெரிவதால் தான் அவர் சங்கீத வித்வான்."

அப்பாடா இந்த முடிவு சொல்லறதுக்கு தானே ரூம் போட்டு யோசிச்சிங்க ...

ambi said...

சில பேர் தனித் தவில் மாதிரி, வித்வானே இல்லாட்டியும் வாசிச்சுட்டு சன்மானத்த வாங்கிண்டு போயிண்டே இருப்பாங்க.

கத்ரி கோபால் நாத் மாதிரி தனிச்சு மிளிர்வாங்க.


டீம்ல சில பேர் இப்படி தான் இன்டிவிஜுவல் கான்ட்ரிபியூட்டர்னு இருப்பாங்க. அவங்க உண்டு அவங்க வேலையுண்டுன்னு இருப்பாங்க. இவங்க என்னத்த கிழிக்கறாங்க?னும் டீம்ல சில பேருக்கு தோணும், ஆனா இவங்க இல்லாமயும் முடியாது. :))

இவாளாம் பைஃயர் எக்ஸ்டிங்குஷர் மாதிரி. எப்பவும் சும்மாவே இருக்கே?னு நினைப்போம். தீப்பிடிச்சா தான் அதன் அருமை தெரியும்.

பதிவு பரவாயில்லை, (சிலபல எழுத்துப் பிழை தவிர்த்து) :))

ஆயில்யன் said...

//இவாளாம் பைஃயர் எக்ஸ்டிங்குஷர் மாதிரி. எப்பவும் சும்மாவே இருக்கே?னு நினைப்போம். தீப்பிடிச்சா தான் அதன் அருமை தெரியும். ///

ஜூப்பர் எச்சாம்பிள் :))

Kousalya said...

//சபைல இருக்கரவாளோட ரசனை & புலமை என்ன போன்ற எல்லா விஷயமும் தெரிவதால் தான் அவர் சங்கீத வித்வான்.//

sarithaan....!!

மதுரையம்பதி said...

அடக்கொடுமையே, ஏனிந்தக் கொலைவெறி உங்களுக்கு? :)

pinkyrose said...

ஆமா என்னானு பின்னூட்டம் போட?

வல்லிசிம்ஹன் said...

தனிக் கச்சேரி செய்யறது கஷ்டமாச்சே. எல்லாரும் சேர்ந்து உழைச்சால்தான்
களைகட்டும்.
இருந்தாலும் தலைக்குத்தான் பெருமை போய்ச்சேரும்.
ஒரு கைத்தாளம் போட,ஒரு கை
மிருதங்கம் ஒருகை
வயலின் இன்னோரு கை.
இருந்தும் பாடுகிறவருக்கே பெருமை. இன்னாரோட கச்சேரின்னு தானெ எல்லோரும் போகிறா.
நல்ல பதிவு தக்குடு.

நாங்க கூட எழுதறோம். ஆனா இவ்வளவு விஸ்தாரமா ஆவர்த்தனம் செய்ய இன்னும் கத்துக்கலை:))

sriram said...

என் கூட ஸ்ருதிங்கற பேருல யாரும் படிக்கலைங்கறதையும் நான் நாட்டாமை இல்லை என்கிற வரலாற்று உண்மையையும் இங்கு பதிகிறேன்.
தவிர, எனக்கும் சங்கீதத்துக்குமான தூரம் ரெங்கராமன்களுக்கும் ஜொள்ளில்லாத எழுத்துக்குமான தூரம். எனவே மீ தெ எஸ்கேப்பு

என்றும் அன்புடன்
பாஸ்ட்ன் ஸ்ரீராம்

vgr said...

TKP, enna achu unaku?

subu said...

Yes! Vithuwan thaan Kaththuvaan!

jeyashrisuresh said...

நல்ல பதிவு. கச்சேரில மட்டும் இல்ல ,வீட்டிலயும் இதே நிலைமை தான் .
நல்ல பதிவுக்கு நன்றி

Shobha said...

அப்ப தம்புரா போடறவர் தம்புரா வித்வானா ?
ஷோபா

நரசிம்மரின் நாலாயிரம் said...

கச்சேரியிலும் எல்லாருமே உயிரை குடுத்து உழைச்சாலும் பாடும் அந்த நபரைதான் சங்கீத வித்வான்!னு எல்லாரும் சொல்லுவா::)))

srithaan.. aamaaam ....!!
ellaarum sangeetha vitvaannu solla mudiyumaa,,,

Anonymous said...

Dear Thakkudu,neenga nambuveelaanu yenakku theriyaathu. last wednesdaythaan i thought,//intha manushar music pathi yeluthi yevloo naal aachchu, yethaavathu music related yelutha koodaathaa?//nu . this week paathaa oru full kacheri with aalaabanai...:)) Thakkuduvukku telepathi yellam theriyumoo?? Post romba nanna irukku thakkudu. inemey yenga PM paatha yenakku siripputhaan varum.

@ valli madam - correct madam, namba thakkuduvooda thaniyaavarthanam always entertaining only....:)

Ranjani Iyer
Int national thakkudu fan's association

vanathy said...

தக்குடு,
எனக்கும் சங்கீதத்துக்கும் ஆகவே ஆகாது. சினிமா பாட்டு என்றால் கொள்ளை விருப்பம். ஆனால், இந்த மேடையில் நடக்கும் கச்சேரிகள் ஒன்றுமே விளங்காது. நீங்கள் இரண்டையும் ஒப்பிட்டு எழுதிய விதம் அருமை.

Gayathri said...

சார்வாள் சங்கீத ஞானம் எப்படின்னு எனக்கு இப்போ தெரியுது அதை விட..ஆபீஸ் ல நடக்கற இந்த ஆணிபுடுங்கற ஞானம் அமோகமா இருக்கு.
இப்படிலாம் தான் ஜாலியா இருக்குமா ஆபீஸ்நா???
நான் எண்ணத்த கண்டேன்..படிக்க படிக்க சிரிப்பு வந்தது..
எதார்த்தமான உண்மையை சந்கீத்த்தோட ஒப்பிட்டு அழகா சொல்லிருக்கேள்...

கலக்கல் தொடர வாழ்த்துக்கள்..

LK said...

தக்குடு கண்ணா, இது என்ன உங்க ஆபிஸ்ல நடக்கற கச்சேரியா ?? இப்படி சொல்லி இருக்கற? இதெல்லாம் எல்லா ஆபிச்லையும் நடக்காது

@காயத்ரி
இப்படிலாம் ஜாலியலாம் இருக்காது

தக்குடுபாண்டி said...

@ LK - //இதெல்லாம் எல்லா ஆபிச்லையும் நடக்காது // உங்க chennai ஆபிஸ் மாதிரியே எல்லா ஆபிஸும் இருக்குமா என்ன? பெங்களூர்ல எல்லா ஆபிஸும் இப்படித்தான் ஜாலியா இருக்கும். சென்னைலதான் எல்லாரும் எரிஞ்சு விழுவாங்க...:PP

@ காயத்ரி மேடம் - இப்படித்தான் ஜாலியா இருக்கும்...:)

King Vishy said...

Yenna oru comparison! conference call and carnatic music! Saarvaal romba free-ya irukkinreero? :)

Wanted to read more, but takku nu mudinjuruchu :(

அப்பாவி தங்கமணி said...

ஹா ஹா அஹ,....தெய்வமே எப்படி இப்படி எல்லாம் comparision .... corporate கச்சேரி கலக்கல் கச்சேரி... (நித்யஸ்ரீ பாவம் விட்டுடேன்)
nice detail போஸ்ட்...

Ananthi said...

நல்ல பதிவுங்க.. பகிர்வுக்கு நன்றி :-)

பத்மநாபன் said...

சங்கித கச்சேரியையும் , அலுவலக மேலாண்மையும் கணப்பொருத்தமாக ஸ்ருதி சுத்தமாக , எல்லா சங்கதிகளையும் வைத்து ஓப்பிட்டது ``சபாஷ் `` பலே போட வைக்கிறது.

பிரசன்னா said...

நம்ப பாஸ்தான் வித்துவானா.. ஆனா அவர் எப்போமே கத்துவான் :)

Krishnaveni said...

nice comparison Thakkudu, very well written, sirikka sirikka ezhuthrenga....all the very best

Chitra said...

எப்போ தனியாவர்தனத்துக்கு நேரம் குடுக்கனும், எந்த வரிசைல பாட்டு பாடி கச்சேரியை கொண்டு போகனும், சபைல இருக்கரவாளோட ரசனை & புலமை என்ன போன்ற எல்லா விஷயமும் தெரிவதால் தான் அவர் சங்கீத வித்வான்.

...... கச்சேரி களை கட்ட ஒரு சங்கீத பாடம் நடத்திட்டீங்க!

Harini Sree said...

Ippa thaana puriyarthu neenga yen karnadaga sangeetham paakarelnu. Sangeetham paakara per-la sangeethava sight adichu irukkel!

தக்குடுபாண்டி said...

@ ஆயிலு - ப்ரீ டைம் எல்லாம் இல்லை, அதே நேரம்தான் கிட்டுகிறது....:)

@ சந்தியா மேடம் - வாங்க மேடம்!!...:)

@ அம்பி - வாடா! மூத்த பதிவர்! என்னோட கடைக்கு எல்லாம் நீங்க வர மாட்டேளே? அதிசயமா இருக்கு??..:)

@ ஆயிலு - ஜிங்ஜக்!...:)

@ கெளசல்யா - வாங்க லேடி மைகேல் ஜாக்சன் மேடம்!..:)

@ ம'பதி அண்ணா - நீங்க வருவேள்னு எனக்கு தெரியுமே!!..:)

@ பிங்கி மேடம் - நக்கலூ??..:)

@ வல்லி அம்மா - நீங்க எல்லாம் ஆவர்தனம் பண்ணவே வேண்டாம் அம்மா, மேடைல வந்து உக்காசுண்டாளே போதும், கைதட்டுதான்...:)

@ பாஸ்டன் நாட்டாமை - அப்போ சைட் அடிச்ச பொண்ணோட உண்மையான பேரு சொல்லக்கூடாதா??..:) என்ன சொன்னாலும் நீங்க நாட்டாமை என்பதே உண்மை! வேணும்னா கேடி கிட்டயும் டுபுக்கு சார்டையும் கேக்கலாம்...:)

@VGR - குழந்தை அழுதது!!...:PP

@ சுப்பு சார் - :)))

தக்குடுபாண்டி said...

@ ஜெய்ஷ்ரீ அக்கா - எதோ உள்குத்து இருக்கர மாதிரி இருக்கே??..:)

@ ஷோபா மேடம் - முதல் வருகைக்கும் நக்கலான கேள்விக்கும் நன்னிஹை....:)) கரக்டு தம்புரா வித்வாந்தான்...:)

@ நரசிம்மர் 4000 - :)))

@ ரஞ்ஜனி - கமண்ட்ல பதிவு போடும் ஆளு நீங்கதான்..:) உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறியதுக்கு ரொம்ப சந்தோஷம்...;)

@ வானதி - குழப்பம் இல்லை, சினிமா பாட்டு எல்லாமே ராகம் அடிப்படையானதுதான்..;)

@ விஷ்வா - அச்சச்சோ! பதிவு பெரிசாயிட கூடாதுன்னு நான் தான் இதோட நிப்பாட்டினேன்....;)

@ அடப்பாவி - நித்யஷ்ரீயை விட்டாச்சு, அவாளுக்கு வலது பக்கம் இருக்கும் தம்புராதான் நம்ப டார்கெட்...:)

@ ஆனந்தி மேடம் - செளக்கியமா மேடம்!!..:)

@ பத்பனாபன் சார் - நன்னிஹை!!...:))

@ பிரசன்னா - :))

@ கிருஷ்ணவேனி மேடம் - ரொம்ப சந்தோஷம் பா!!..:)

@ சித்ரா அக்கா - எல்லாம் உங்க ஆசிதான்...:)

@ ஹரினி - சங்கீதா இல்லாம சஙீதம் எப்பிடி வரும்? அதான்.....;)

Matangi Mawley said...

Oru chinna vacation.. no internet.. athanaala intha post munnaadi paakka mudiyala..

aetho enga projectla nadakkara kooththaellaam nerla paaththu ezhuthinaapleye irukku...

coming to kutcheri..

enakku intha mrudangam thani aavarthanam eppa mudiyarathunnu eppudi intha paadaravaalukku theriyarathunnu puriyavey maattengarathu.. atha neenga aethaavathu post pottu velakkinaa nannaa irukkum..

yaaro sonnaa.. "eppa violin kaarar- veshtiyellaam sari pannindu violin-a kaila eduththukkaraaro appo therinjukkalaam thani aavarthanam mudiyarathunnu"nu.. ippo varaikkum appadithaan yuukichchundu varaen.. athu oralavukku sariyaavey irukku!


good!!!

தி. ரா. ச.(T.R.C.) said...

நல்லாருக்கு அத் என்ன வர்ணம் பாடுவார் ஓ ஸ்வாரததை சொல்லறயா! அதான் அண்ணா சில பல தவறுன்னு சொல்லறானோ.

தக்குடுபாண்டி said...

@ மாதங்கி - வாங்கோ மேடம்!//oru kutty vacation// அதான் ஆளை காணுமா..:) ம்ருதங்க தனியாவர்த்தனம் பத்தி தனியா ஒரு பதிவு போட்டுடலாம்...:) உங்க டெக்னிக் நன்னா இருக்கு...:)

@ TRC சார் - வாங்கோ சிங்கப்பூர் சிங்கம்!...:))

Mrs.Menagasathia said...

என்னாச்சு உங்களுக்கு...

தக்குடுபாண்டி said...

@ Menaka akka - ஒன்னும் ஆகலையே!!! why? போஸ்ட் நன்னா இல்லையா??

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

ஒரு சங்கீத கச்சேரி கேக்கறாப்பல இருக்கு.ஆனா அபஸ்வரம் தட்டறா மாதிரி அங்கங்கே எழுத்துப் பிழை வந்து கண்களை குத்தறது!!

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)