Friday, July 9, 2010

மலையாள ப(ப்ப)டம்

ரொம்ப நாள் ஆச்சு சினிமா பக்கம் தலை வச்சு படுத்து, தமிழ் சினிமா தெலுங்கை விட மிஞ்சிருத்து, பொம்ணாட்டிகளுக்கு ஆறடிக்கூந்தல் இருக்கோ இல்லையோ, டாய்! டோய்!னு கர்ணகொடூரமா கத்திண்டு வரும் வில்லனின் அடியாட்கள் எல்லாருக்கும் இருக்கு(எல்லாரும் வாட்டிகா ஹேராயில் தலைக்கு தேய்ச்சுக்கராளோ?). இந்த காரணங்களால் சினிமாவே பாக்கர்து கிடையாது.

இந்த மாதிரி சமயத்தில் என்னோட ஒரு நண்பன் எனக்கு போன் பண்ணி, ஒரு மலையாளப்படம் இருக்கு, புது ப்ரிண்ட்! வேணுமா?னு கேட்டான். எனக்கு வயத்தை கலக்கிருத்து. இதே வார்த்தைகளை காலேஜ்ல படிக்கும் போது என் நண்பர்கள் அவாளுக்குள்ள பேசி நான் கேட்டுருக்கேன். ஒருவேளை 'அப்புக்குட்டனும் ஸ்வப்னதிவசமும்'-ங்கர மாதிரி ஏடாகூடமா படத்தை தந்துட்டா என்ன பண்ணர்து?னு கொஞ்சம் பயம். (ஹலோ அந்த பேர்ல ஒரு படமும் கிடையாது, கோப்ஸ் மாதிரி உடனே ஆன்லைன்ல அந்த படம் இருக்கானு தேடாதீங்கோ..:) ).


அதெல்லம் இல்லை, மம்முட்டி நடிச்ச படம்தான்!னு அவன் துண்டை போட்டு தாண்டி சத்தியம் பண்ணினதுக்கு அப்பரம் வாங்கி பார்த்தேன். வீட்டை தாண்டி வருவாயா, ரோட்டை தாண்டி வருவாயா? விபீஷணன்,கும்பகர்ணன்,புலி, கரடி போன்ற படம் பத்தி எல்லாம் உங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் 'லவுட் ஸ்பீக்கர்'ங்கர அந்த படம் பத்தி சில தகவல்கள் இந்த பதிவில். மம்முட்டி இதுல ஒரு கிராமத்தானாக வரார். கிராமத்தானுக்குரிய லக்ஷணமான வாயை அகலமா திறந்து பேசர்து, ரேடியோ கேட்பது, தலை வாராம இருக்கர்து, மலபார் பீடியை காதில் செருகி வத்திருப்பது போன்ற எல்லாம் இந்த கதாபாத்ரத்துல இருக்கு.எல்லாத்தையும் விட கிராமத்து மனுஷா ‘லொட லொட’நு பேசினாலும் பாசக்கார பயலுக என்பதை எல்லா இடத்திலும் நிரூபிக்கிறார்.



தக்காளி இல்லாம எப்படி தக்காளி ரசம் பண்ண முடியாதோ அதே மாதிரி ஒரு சீன்லையாவது சுகுமாரி(அனுபவம் மிக்க நல்ல திரை நடிகை)இல்லாம மலையாள படம் கிடையாது. முதல் சீன்லையே டாக்டரா வராங்க அந்த அம்மா. கதை இதுதான், தோப்பளாங்குறிச்சி(இடுக்கி ஜில்லா)லேந்து நகரத்துக்கு கொஞ்சம் காசு சம்பாத்யம் பண்ணனும்னு மைக்(மம்முட்டி) வரார். வந்த இடத்துல அமெரிக்காலேந்து நாப்பது வருஷம் கழிச்சு வந்த மேனனுக்கு தன்னுடைய ஒரு கிட்னியை தரமுன்வரார் கதானாயகன்.

இந்த படத்துல க்ரேசி சிங்கும்(லகாண் பட நாயகி) ஒரு கதாபாத்ரமா வரா. கதானாயகினு எல்லாம் சொல்ல முடியாது. கண்களால் கவிதை சொல்லும் க்ரேசிசிங் இந்த படத்துல ரொம்ப யதார்த்தமா நடிச்சுருக்கா. தமிழ் சினிமாவா இருந்தா க்ரேசி சிங்குக்கு ஜிங்குனு ஒரு சின்னக் கொழந்தேள் ட்ரஸ்ஸை போட்டுவிட்டு சுவிட்சர்லாந்து பனிக்கு நடுல புரட்டி எடுத்துருப்பாங்க.



மலையாளிகளுக்கே ஊர் பெருமை ரொம்ப ஜாஸ்தி. இந்த படத்தில் மம்முட்டியும் எதுக்கு எடுத்தாலும் தோப்பளாங்குறிச்சி! தோப்பளாங்குறிச்சி!னு உதாரணம் சொல்லறார். வயசான மேனனோட பழைய நினைவுகள் எல்லாம் கொல்லத்துல படமாக்கி இருக்கா. கொல்லம் கேரளால ஒரு அழகான இடம். 5 தடவை அங்க நான் போய்ருக்கேன். கொல்லம் மலை பாதைக்கு நடுல ஹோண்டா சிட்டி கார் ஆடி ஆடி வரும் அழகே அழகு! 6 டஜன் கதானாயகிகள் இருந்தாலும், ஐஸ் குட்டி கண்ணுலையே நிக்கரா, நெஞ்சுலையே விக்கரா!னு வாய் விட்டு ஜொள்ளி வாங்கிக் கட்டிக்கும் ரங்கு போல, எத்தனை கார் வந்தாலும் ஹோண்டா சிட்டியோட அழகுக்கு இணையாகாது.

நிற்க, படத்துல இல்லாத விஷயம் எதெல்லாம்னு சொல்ல வேண்டாமா, பாண்டிய மன்னனின் ஐயத்தை தீர்த்த வரிகளோ என எண்ணும் படியான,

//சிங்காரி நாத்தனார்! சிங்கிள் டீயை ஆத்தினாள்! கோடு போட்ட க்ளாசிலே எனக்கு ஊத்தினாள்// - போன்ற வரிகளை உடைய குத்துப் பாட்டு, குலுக்கு நடனம் எதுவும் இந்த படத்தில் இல்லைங்கர்து ஒரு முக்கியமான பாய்ண்ட்.

கதானாயகன் பஞ்ச் டயலாக் பேசி மொக்கை போட மாட்டார்.

கதானாயகனும், கதானாயகியும் கையை கோர்த்துண்டு கனவுல சிங்கப்பூர்ல (வாய் வழியா பூங்கொத்தி விடும்) சிங்கம் பக்கத்துலயோ அல்லது ஆஸ்திரேலியாவின் ஓப்ரா ஹவுஸ் பக்கதுலையோ பாட்டுப் பாடி நடனம் ஆடமாட்டார்கள்.

முக்கியமான விஷயம், படம் முடிஞ்சு இயக்குனர் பேரை மட்டும் போடாம 'ஜெயராஜ் மற்றும் அணி'னு போட்டது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

நம்பாத்து பட்டாசாலைல(அர்த்தம் தெரியும்னு நினைக்கறேன்) அம்மா சமைச்சு வெச்ச சுண்டக்காய் வத்தக்குழம்புக்கு சுட்ட அப்பளாத்தை தொட்டுண்டு, ஓடும் க்ரைண்டர் சத்ததுக்கு நடுவில் அம்மாவோட பேசிண்டே சாப்பிடுவது போன்ற ஒரு யதார்த்தமான படம்.

(குறிப்பு - க்ரைண்டர் ஓடும் போது சத்தம் வருதுன்னா அப்போ க்ரைண்டர்ல உளுந்து ஓடிண்டு இருக்குனு புரிஞ்சுக்கனும், அரிசி ஓடும் போது சத்தம் வராது. அரிசி உளுந்தோட தரம் & ரேசியோவை வச்சும், எவ்ளோ நேரம் ஊறவைக்கறோம்ங்கர்தை பொறுத்தும், இடையில் விடப்படும் தண்ணியை பொறுத்தும், அரைக்கப்படும் நேரத்தை பொறுத்தும், மாவை ஒன்னுசேர கலப்பவரின் கையை பொறுத்தும் தான் இட்லியின் தரம் அமையும். இதுல எதாவது ஒன்னு மிஸ் ஆனாலும் உங்க மிஸ்ஸஸ் செய்யும் இட்லி இட்டிலி ஆகிவிடும். அப்புறம் 'இட்லி சரியா வரலை'னு சில பேர் மாதிரி போஸ்ட் போட வேண்டியது தான்...:P)

39 comments:

எல் கே said...

உன்னை பிடித்தப் பத்து படத்தை பத்தி எழுதின , இப்படி ஒரு படத்தை மட்டும் எழுதின என்ன ஞாயம்?

இருந்தாலும் இட்லிய பத்தி நீ சொன்னதல உன்னை விட்டுடறேன்

வல்லிசிம்ஹன் said...

தக்குடு ,இட்லி மாவு அம்மா அரைக்கிற அழகை மிஸ் பண்றேளோ:(
அதான் ஆவணி வருதே. டோந்ட் வொர்ரி.
மம்முட்டி மம்முட்டிதான்.மலையாளப்படம் படம்:)

Geetha Sambasivam said...

தாக்குடு, தெரியாத்தனமா வந்துட்டேன், இட்லி நன்னா இருக்கணும்னா ஊற வைக்கிறதிலேயும் ரகசியம் இருக்காக்கும்ட்டியா???

Geetha Sambasivam said...

நீ தோஹாவுக்குப் போனாலும் போனே, பதிவெல்லாம் சாப்பாடு பத்தியே இருக்கு! ஒழுங்காச் சமைச்சுச் சாப்பிடு, இல்லைனா கல்யாணம் பண்ணிக்கோ! :P:P:P:P

ஷைலஜா said...

எந்தா மோனே சுகந்தன்னே?:) பின்னே வரும் கொறச்சி பணி உண்டு!

ஷைலஜா said...

குண்டலம்க்கு பின்னூட்டம் போடமுடியாம போயிடுத்து கண்ஸ்! இனிமேலும் அங்க போனா அது பழையகுண்டலமாயிடாதா?:) நாங்கல்லாம் அழகா ஜிமிக்கின்னு சொல்வோம்! குண்டலமாம் குண்டலம்!

எல் கே said...

//ஒழுங்காச் சமைச்சுச் சாப்பிடு, இல்லைனா கல்யாணம் பண்ணிக்கோ!//

rendume onnuthan.. eppadium ivanku varapora thangamaniku samaika theriyaporathu illa .. ivanthaane samaikkanum

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//ஹலோ அந்த பேர்ல ஒரு படமும் கிடையாது, கோப்ஸ் மாதிரி உடனே ஆன்லைன்ல அந்த படம் இருக்கானு தேடாதீங்கோ//
கோப்ஸ்... உனக்கு எதிரி வெளில இல்ல...ஹா ஹா ஹா

//தக்காளி இல்லாம எப்படி தக்காளி ரசம் பண்ண முடியாதோ //
தத்துவம் நம்பர் 10001 ....

//அம்மா சமைச்சு வெச்ச சுண்டக்காய் வத்தக்குழம்புக்கு சுட்ட அப்பளாத்தை தொட்டுண்டு, ஓடும் க்ரைண்டர் சத்ததுக்கு நடுவில் அம்மாவோட பேசிண்டே சாப்பிடுவது போன்ற ஒரு யதார்த்தமான படம்//
ஆஹா.. ஏன் இப்படி எல்லாம் ஊர் ஞாபகத்தை கிளப்பி விடற.... ஹும்...


ஆஹா... உனக்கு குண்டலம் psychology தான் தெரியும்னு பாத்தா grinder psychology கூட நல்லா தெரியும் போல.. (எனக்கு இட்லி தெரியாதுன்னு நான் மொதலே ஓத்துட்டேன்.. சோ நோ back கமெண்ட்ஸ் ஒகே...ஹா ஹா அஹ)

Jeyashris Kitchen said...

titlea parthavudan konjam bayandhu poiten.
i totally agree with Geetha sambasivam.
seekeram kayanam panniko.
oru cinema vimarsanam padicha tripthi.

vgr said...

ennapa idu...yara kushi padutha ippadi oru post ;) ?

மதுரையம்பதி said...

இட்லி நினைவு ஆட்டிப்படைக்கிறதா கணேசரே?...:)

கீதாம்மா சொன்னாமாதிரிச் செய்துடுங்க...அதான் இதற்கு ஒரே மருந்து. :)

vanathy said...

super movie review!

தக்குடு said...

@ - பத்து படம் எல்லாம் தாங்காது சாமி! ...:)

@ வல்லி அம்மா - நீங்களும் மம்முட்டி ரசிகையா?? ஆமாம் ஆவணியில் அம்மாவை பாக்கலாம்...:)

@ கீதா மேடம் - தங்களின் கருத்துக்கு நன்றி!..:)

@ ஷைலஜா அக்கா - கோழப்பமில்லை கேட்டோ!! அதுக்கு சேர்த்து இங்க கமண்ட் போட்ருங்கோ...:)

@ LK - கரெக்டா சொன்னீங்க ...:)

@ அடப்பாவி தங்ஸ்- தக்குடுவுக்கு இன்னும் பல சைக்காலஜி தெரியும். போக போக புரியும்..:)

@ ஜெயஷ்ரீ அக்கா - பயம் வேண்டாம், எல்லாரும் பயம் இல்லாம தக்குடு பதிவை படிக்கலாம்....:)

@ VGR - யாரையும் குஷி படுத்த இல்லை. ஏடாகூடாமா எதுவும் யோசிக்க வேண்டாம்..:P

@ ம'பதி அண்ணா - இங்க ஆரியாஸ் போனா அழகான மல்லிகை இட்லி கிட்டும்...:)

@ வானதி - ரொம்ப நாள் ஆச்சு நம்ப கடை பக்கம் வந்து...:)

Anonymous said...

ஹி ஹி. கிரைடர் பத்தி எல்லாம் பையனுக்குத் தெரியறது. ஏதோ சொல்ல வருகிற‌ மாதிரி இருக்கு. என்னான்னு தான் புரியல. அப்புறம் இட்லி மாமி விழுந்தும் மீசையில் மண் ஒட்டலன்னு எவ்ளோ அழகா சொல்லிட்டு போய்ட்டாங்கோ. பெரிய தில்லாலங்கடி தான்.

Kavinaya said...

//தமிழ் சினிமாவா இருந்தா க்ரேசி சிங்குக்கு ஜிங்குனு ஒரு சின்னக் கொழந்தேள் ட்ரஸ்ஸை போட்டுவிட்டு சுவிட்சர்லாந்து பனிக்கு நடுல புரட்டி எடுத்துருப்பாங்க.//

:)))

என்ன இருந்தாலும் பொது அறிவு ஜாஸ்திதான் எங்க தக்குடுவுக்கு...

குப்பை கொட்ட வர்றவங்களுக்கு மாவரைக்க தெரிஞ்சிருக்கணும்னு அவசியம் இல்லைன்னு சொல்லாம சொல்றாப்ல இருக்கு... :)))

பனித்துளி சங்கர் said...

வேற்று மொழியிலும் ஒரு புதுமையான திரை பார்வையோ! நடக்கட்டம் .. பகிர்வுக்கு நன்றி

Unknown said...

A practical review...Good one Thakkudu :-)

pinkyrose said...

பாண்டி சார் உங்க கமெண்ட் காணுமே?( விட மாட்டம்ல!) :)))

Harini Nagarajan said...

aamam neenga rombaaaaaa nalla payyannu nekku purinchuduthu! :P

Porkodi (பொற்கொடி) said...

எந்த மாதிரியான பதிவா இருந்தாலும் ஜொள்ளாறு அடங்காம ஓடுது, ஜீன்சை மடக்கி விட்டு நடக்க வேண்டியிருக்கு.. :)

Anonymous said...

Dear Thakkudu, malayala padam yellam paakka aarambichaachaa?..:)kootu pootta glassla ungalukku uuthinaalaa??(yengenthuthaan ungalukkunu lines yellam kadaikkarthoo).yatharthamaana padamgarthai vathakkolamboodaiyum,grinderoodaiyum cmpr panni ippothaan padikkaren..;) good one thakkudu.
///ப்ரண்ட் ஆத்துக்கு குண்டலம் போட்டுண்டு போனேளா அப்பரம்? இனிமே குண்டலம் பாக்கும் போதெல்லாம் தக்குடு ஞாபகம் வரும்...;)// aamaam pootundu poonen, yellarum rooomba nanna irukkunu sonna, ungalaithaan nenasunden..:)kundalam is suitable only for sarees or chudithar also? intha doubtaiyum thakkudutaiyee keelu!nu ammathaan sonna..;)
vgr anna solra maathiri yaaraiyoo kushi kadutha try pannara maathiri irukkey?? what is the matter??..:P
@ Porkodi madam - compare to our thakkudu's old articles, ithu konjam jollu cummyyathaan irukku...:) (sorry thakkudu, yellarukkum naaney reply panniduven poolarukku..:) )

Ranjani Iyer

எல் கே said...

@ranjani

sareeku best .. chudi is also ok but not for jeans ppl like kedi...


jkoncham muttai kannu iruntha innum nalla porunthum

King Vishy said...

First visit here.. Loved reading your language :) Felt like I was back at West Mambalam, away from all the "hogi"s, "banni"s and "maadi"s!

sriram said...

தக்குடு, இதெல்லாம் மொக்கைப் படம். அஞ்சரைக்குள்ள வண்டி, லயனம் மாதிரி எவர்கிரீன் / அமர காவிய படங்களெல்லாம் மலையாளத்தில வந்திருக்கு. கண்டிப்பா பார்த்திருப்பேன்னுத் தெரியும், மறுபடியும் ஒருமுறை பாத்துட்டு விமர்சனம் எழுது..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

தக்குடு said...

@ அனாமிகா - ஆமாம், நம்ப இட்லி மாமி ஒரு பெரிய தில்லாலங்கடிதான்...;)

@ கவினயா அக்கா - நான் என்ன சொல்லி இருக்கேன், நீங்க என்ன புரிஞ்சுண்டு இருக்கேள்??..:)

@ பனித்துளி - வாங்க சார்.....:)

@ துபாய் செளம்யா - தாங்க்ஸ் கேட்டோ!!...:)

@ பிங்கி - விடா கொண்டன் கதை தெரியுமா உங்களுக்கு??..:)

@ ஹரிணி - நிஜமாவே நல்ல பையந்தான் மேடம்.

@ பொற்கேடி - ஜொள்ளா அப்படின்னா என்னது??...:)

@ ரஞ்ஜனி - நீங்க கேட்டதால சொல்லறேன். பட்டுப் புடவைக்கு ப்ரமாதமா இருக்கும், சுடிதார்லையும் பார்மலா ஜரிகைலாம் வச்ச மாதிரி உள்ளதுக்கு போட்டுக்கலாம். பாட்டியாலா ஸ்டைலுக்கு எல்லாம் சூட் ஆகாது.(இவ்ளோ தெரியுமா?னு நக்கல் எல்லாம் அடிக்க கூடாது)..:) VGR அண்ணா சொல்லர்தை எல்லாம் காதுல வாங்க வேண்டாம்...:) பேசாம நான் போஸ்ட் போடரேன், நீங்க பதில் போடுங்கோ எல்லாருக்கும்..:)

@LK - யோவ் LK, உம்ம பேரு தக்குடுவா? அதான் கடை மொதலாளி குத்துக்கல் மாதிரி இருக்கேனே, அப்பரம் என்ன??..:PP போய் புள்ள குட்டியை படிக்க வைக்கர வழியை பாருங்கோ!!..:)

@ விஷ்வா - வாங்க சார், சென்னாகிதிரா, ஏனு சமாசாரா??..:)( நானும் 3 வருஷம் பெங்களூர் வாசிதான்)

@ பாஸ்டன் நாட்டாமை - ஹலோ, நீங்க வாரா வாரம் பார்க்கும் படம் எல்லாம் மத்தவாளும் பாத்துருப்பாங்கனு எதிர்பார்க்க முடியாது...;PP

subu said...

Passed by chance...You have an interesting style of writing!

Matangi Mawley said...

naan oru theevira mohanlal fan apdingarathunaalayo ennavo.. avalovaa mammootty movies paaththathey illa! devasuram/vaanaprastham/thanmaatra/spadikam/bharatham/kaattaththe kilikkodu(athula esp. oru azhagaana paattu- gopike nin viral, brindavana saarangaa nu nenakkaraen) pondra cinema vukkellaam nadula ithu saathaaranamnu thaan sollanum.

enna ordinary movie-yaa irunthaalum, athula oru highlight add panni epdiyo hit aakkidaraar thakkudu!

Idli maavu araikkaratha paththi nekku onnumey theriyaathu! but neenga sonna piraku thaan "ithula ivalavu samaachaaram irkkaa"nu nenachchaen!

ellaarum rasichchom!

Anonymous said...

Hello

//ஹி ஹி. கிரைடர் பத்தி எல்லாம் பையனுக்குத் தெரியறது. ஏதோ சொல்ல வருகிற‌ மாதிரி இருக்கு. என்னான்னு தான் புரியல. //

Answer to this statement first.

=))

எல் கே said...

//யோவ் LK, உம்ம பேரு தக்குடுவா? //

தக்குடு LK nu pera matthikaren

தக்குடு said...

kavinaya akka comment...

//@ கவினயா அக்கா - நான் என்ன சொல்லி இருக்கேன், நீங்க என்ன புரிஞ்சுண்டு இருக்கேள்??..:)//

உங்களுக்குத்தான் புரியலை :)

'குப்பை கொட்ட வர்றவ'ன்னு பொண்டாட்டியை சொன்னேன்... :)

Anonymous said...

கேரளா சேட்டன் , சேச்சிகளுக்கே இப்போ மலையாள படத்தை விட தமிழ் படமும் , ஹிந்தி படமும்தான் பிடிக்குதாம்.இட்லி சூப்பரா இருக்குங்கோ...aazhndha anubavamo?

Meena Sankaran said...

தக்குடு,

//நம்பாத்து பட்டாசாலைல(அர்த்தம் தெரியும்னு நினைக்கறேன்) அம்மா சமைச்சு வெச்ச சுண்டக்காய் வத்தக்குழம்புக்கு சுட்ட அப்பளாத்தை தொட்டுண்டு//

வத்தக்குழம்பை பகவான் அருளிய தீர்த்தமா நினைக்கிற என்னை மாதிரி ஜீவன்கள் கிட்டே இப்படி ஒரு டைலாக் அடிக்கலாமா? உங்க தயவுல ஜொள்ளோழுக மம்முட்டி சினிமா விமர்சனம் படிச்சு முடிச்சேன். நன்றி தக்குடு.:-))

தக்குடு said...

@ சுப்பு சார் - முதல் வருகைக்கு நன்னி...:)

@ மாதங்கி - எனக்கும் மோஹன்லால் பிடிக்கும், 2 இட்லியை கன்னத்தில் அடக்கி வெச்ச மாதிரி இருப்பார்..:) ஆமாம் இட்லி மாவு பெரிய சமாசாரம்தான்..:)

@ அனாமிகா - ஓய் மின்னல்! வில்லங்கமான கேள்வியானா இருக்கு..:)

@LK - உங்க ஆணியை மட்டும் புடுங்கினா போதும்...:P

@ கவினயா அக்கா - :)))

@ பாரதி - ஓ! அது ஷெரி!!..:)

@ மீனா அக்கா - ஜொள்ளு வத்தக்குழம்புக்கா அல்லது மம்முட்டிக்கா??...:))

Swathi said...

Very nice post, i like your way of putting things, even reviews.

தக்குடு said...

@ swathi - dank u madam!!...:)

Matangi Mawley said...

"எனக்கும் மோஹன்லால் பிடிக்கும், 2 இட்லியை கன்னத்தில் அடக்கி வெச்ச மாதிரி இருப்பார்.."


LAALETTAAAAA!!!! Maappu sollikkaraen... aanaa ennaala sirikkaama irukka mudiyalaaa!!!

semma comedy thakkudu sir... ellaarum romba rasichchom!

தக்குடு said...

@ Matangi - sorry yellam vendampaa, mathavaala sirikka vechu paakkarthuthaan thakkuduvooda main agendaveyy!!...:)))

ahmm, yesusme! //LAALETTAAAAA!!!!// ithu yaarunnu sollavey illaiyee?? name suuuperaa irukku, illa oru general knowledgeukkuthaan me asking..:P

Matangi Mawley said...

Mohanlal-a "lal-aetta" nnu "with due respect" sonnaen... ippo thakkudunnaa "thakkudu-aetta"... "caetch mai boint"?

தக்குடு said...

//"thakkudu-aetta"... "caetch mai boint"?//

gOat it!!..:)(in malayalam 'got' apdithaan solluvaa yellarum)..:)

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)