Saturday, March 27, 2010

நினைவெல்லாம் நித்யா!

நானும் எழுத வேண்டாம்னுதான் பார்த்தேன், ஆனா ஆதரவு படுபயங்கரமா இருப்பதால் எழுதிடலாம்னு முடிவு பண்ணியாச்சு. படம் ஆரம்பத்தில் மெதுவாகத்தான் தொடங்குகிறது. கதாநாயகன் ரொம்பவே இளமையாக தோற்றம் அளிக்கிறார். அவருடைய காந்தச்சிரிப்புக்கே நாம வாங்கின டிக்கெட்டு சரியா போச்சு. ஒரு கட்டத்தில் கதாநாயகி குடித்துவிட்டு மிச்சம் வச்ச டம்பளர்லையே கதாநாயகன் குடிக்கும் போது கதாநாயகியோட நம்ம காந்தக் கண்ணழகனுக்கு இருக்கும் அன்யோன்யம் நமக்கு நல்லா புலப்படுகிறது. சன் டீவியில் வெளிவராத முழூ காட்சிகள் இங்கு உள்ளது.

ஆரம்பத்தில் நண்பர்களோட லூட்டி அடிக்கும் கார்த்திக், ஒரு கட்டத்தில் எல்லா நண்பர்களும் பொழைப்பை தேடி போன உடன் தனது தூரத்து சொந்தக்காரரான நிழல்கள் ரவியின் வீட்டில் சில நாள் தங்கிட்டுப் போகலாம்னு ஒரு மலை பிரதேசத்துக்கு வரும் கார்திக் அங்கு ஒரு மலை ஜாதிப் பெண்ணை பார்த்து காதலில் விழுந்து, பல போராட்டத்துக்கு பிறகு எப்படி கை புடிக்கிறார் அதுதான் கதை.

இங்கு நான் சொல்ல வந்தது அந்த படத்தில் வந்த பாடல்களை பத்திதான். எல்லா பாடல்களுமே இனிமையான ஒரு வயசு குழந்தையோட மழலை வார்த்தைகள் போல் எப்போது கேட்டாலும் நமக்கு மகிழ்ச்சியை தரும். அழகான வைகாசி மாதத்தில், மாலை மயங்கும் வேளையில் கல்லிடையில் பாயும் ‘நித்யகன்னி’யான தாமிரபரணியில் காலை நனைத்தபடி ஆள் அரவம் இல்லாத ஒரு பாறையில் அமர்ந்து இருக்கும் போது, எங்கிருந்தோ வரும் ஒரு மெல்லிய புல்லாங்குழல் இசையை ரசிப்பது போன்ற ஒரு உணர்வை எல்லா பாடல்களிலும் நாம் காணலாம். 'பனி விழும் மலர் வனம்' பாடல் இளையராஜாவின் மகுடத்தில் ஒரு வைரம் என்றே சொன்னால் அது மிகையாகாது. ராஜா அதிகம் உபயோகிப்பது வயலினா, தபேலாவா? என்று சண்டை போட்டுக் கொள்பவர்கள் சற்று குழம்பிப் போகும் படியாக இந்தப் பாடலில் இரண்டும் ஒன்றோடு ஒன்று பிணைந்த ஒரு அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அதிலும் ஒரு சரணத்தில் பாடல் வரியோடு சேர்ந்து தபேலாவை உருட்டிய அழகு அடடா! அடடா! .

'கன்னிப் பொண்ணு கை மேல' பாடல் ஒருமாதிரி நாட்டுப்புற பாடல் போலவும் அதே சமயம் தாளக்கட்டும் சிறிதும் பிறலாமல் இருக்கும். பாடலின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டப்பட்டு இருக்கும் அழகு நம்மை பாடலோடு ஒன்றவைக்கிறது. அந்தப்பாடலில் அந்த மணப்பெண் அங்கு ஆடிக்கொண்டு இருக்கும் ஆட்கள் ஒருவர் மீதும் படாமல் மணமகன் இருக்கும் இடத்தை அடைந்து அவனுக்கு மாலை இட வேண்டும். மாப்பிளைவீட்டார் குறுக்கும் நெடுக்குமாக வளையவந்து கொண்டே இருப்பார்கள், அதை எல்லாம் தாண்டி அவங்க கோவம் வராமல் பொறுமையா போய் இலக்கை அடையனும். இந்த கலோபரத்துக்கு நடுவில் கார்திக் அவரோட வண்டியை நைசாக ஓட்டிவிட்டு வந்துவிடுவார்.

'ரோஜாவை தாலாட்டும் தென்றல்' பாடலின் தாளக்கட்டு நம்மை யாரோ இயல்பான வேகத்தில் ஒரு ஊஞ்சலில் வைத்து ஆட்டுவது போன்ற ஒரு அனுபவத்தை நமக்கு ஏற்படுத்தும். சங்கீதத்தில் அதுதான் ஒரு ஆச்சர்யம், எத்தனை முறை கேட்டாலும் நமக்கு திகட்டவே திகட்டாது. பெண்களூர் ரெட்டிகள் வீட்டு கல்யாணங்களில் உண்மையாகவே குறைந்த பட்சம் பதினாறு விதமான ஸ்வீட் வகைள் பரிமாறுவார்கள். பஸ் ஸ்டாண்டில் ஒரு பிகராவது வராதா என்று ஏங்கிக் கொண்டிருப்பவன் முன்னால் ஒரு நல்ல லேடிஸ் காலேஜ் பஸ் நிறைய பிகர்கள் வந்து இறங்கியதுன்னா, அவன் எதை அள்ள, எதை தள்ள? நு தெரியாமல் குழம்பிவிடுவது போல், நம்மாள எல்லாத்தையும் சாப்டவும் முடியாது, ஆனா சாப்டாம இருக்கவும் முடியாது.. ஆனால் இந்த படத்தில் எல்லா பாடல்களுமே அருமையாக இருக்கும் போதிலும் நமக்கு திகட்டாத ஒரு மனனிலையே நிலவுகிறது என்றால் அதன் பெருமை அனைத்தும் அதன் பாடலாசிரியரையும், இசையமைப்பாளரையுமே சாரும்.

நான் இந்த படத்தில் வரும் பாடல்களை பத்திதான் ரொம்ப நாளா எழுதனும்னு நினைச்சுண்டு இருந்தேன்பா! இதுல எந்த நுண்ணரசியலும் கிடையாது....:)

கோப்ஸ், ஆயில்யன் மாதிரி வேறு யாரெல்லாம் நாக்கை சப்புக் கொட்டிண்டு வந்து 'கப்பு' வாங்கிய முகத்தோட அசடு வழிஞ்சுண்டு, 'எனக்கு அப்பையே தெரியும்!'னு உங்களுக்கு நீங்களே சமாதானம் சொல்லிண்டு என்னை திட்டினீர்கள்??? ஒழுங்கா வந்து கமண்ட்ல போட்டா நாங்களும் உங்க கூட சேர்ந்து சிரிப்போம்ல....:)

23 comments:

ஆயில்யன் said...

//நினைவெல்லாம் நித்யா!//

பதிவெல்லாம் படிக்கல பட் டைட்டில் என்னமோ ஊர்ல இருக்கிற உடன்பிறப்புக்கு சொல்லுற சேதி மாதிரியே இருக்கு சீக்கிரம் ஆகட்டும் :)))

ஆயில்யன் said...

//ஒரு நல்ல லேடிஸ் காலேஜ் பஸ் நிறைய பிகர்கள் வந்து இறங்கியதுன்னா, அவன் எதை அள்ள, எதை தள்ள? நு தெரியாமல் குழம்பிவிடுவது போல்//

நினைப்புத்தான் ஆல்வேஸ் கெடுக்கும் பொழப்பை ! யூ நோ ? ஐ திங்க் யூ டோண்ட் நோ

அதான் இப்பிடி :))))) [அவசரத்தில ஆங்கிலமெல்லாம் வந்திருச்சேன்னு என்னை தமிழன் இல்லைன்னு மட்டும் சொல்லிடாதீங்க ராசா ]

ஆயில்யன் said...

//நான் இந்த படம் பத்திதான் ரொம்ப நாளா எழுதனும்னு நினைச்சுண்டு இருந்தேன்பா!//


நினைச்சுக்கிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் இருந்திருக்கலாம் !

ஆயில்யன் said...

//கோப்ஸ், ஆயில்யன் மாதிரி வேறு யாரெல்லாம் நாக்கை சப்புக் கொட்டிண்டு வந்து 'கப்பு' வாங்கிய முகத்தோட அசடு வழிஞ்சுண்டு, 'எனக்கு அப்பையே தெரியும்!'னு உங்களுக்கு நீங்களே சமாதானம் சொல்லிண்டு என்னை திட்டினீர்கள்???//

பார்த்தீங்களா மக்களே?

எப்புடி டேமேஜ் ஆயிருக்கேன் !

தி. ரா. ச.(T.R.C.) said...

பெண்களூர் ரெட்டிகள் வீட்டு கல்யாணங்களில் உண்மையாகவே குறைந்த பட்சம் பதினாறு விதமான ஸ்வீட் வகைள் பரிமாறுவார்கள். பஸ் ஸ்டாண்டில் ஒரு பிகராவது வராதா என்று ஏங்கிக் கொண்டிருப்பவன் முன்னால் ஒரு நல்ல லேடிஸ் காலேஜ் பஸ் நிறைய பிகர்கள் வந்து இறங்கியதுன்னா, அவன் எதை அள்ள, எதை தள்ள? நு தெரி
யாமல் குழம்பிவிடுவது போல்

தக்குடூ நீ எங்கேயோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ போயிட்டே. டுபுக்கு மரியாதையா இவனுக்கு கொடுத்த பட்டத்தை திருப்பி வாங்கிடுங்கோ

அடுத்தது சங்கம் கால ஹிந்தி பட விமர்ச்னமா?

வடை ஏதாவது மிச்சம் இருக்கா?
இதெல்லாம் அப்போ பாத்து எழுதராமாதிரி தெரியலை. இப்போ தினம் ஒரு படம் பாத்து எழுதரா மாதிரிதான் இருக்கு. ஜமாய் ராஜா

அண்ணாமலையான் said...

திரிசூலம்னு ஒரு அற்புதமான படம் இருக்கே?

Kavinaya said...

பொட்டில உள்ளேன் தக்குடு போடத்தான் வந்தேன்! :)

Chitra said...

சைக்கிள் பெடலை, வேகமா மிதிச்சா - காலம் உருண்டு - நீங்கள் 25 வருஷத்துக்கு அப்புறமா உள்ள படங்களை பாக்க ஆரம்பிச்சிடலாம்.

வல்லிசிம்ஹன் said...

நித்யா எங்க இருந்தாலும் வருக.!
அது நிற்க. உண்மையாகவே நல்ல பாடல்கள். காந்தக் குரல் பாலு சார். இளமையான கார்த்திக். தெமேன்னு நடிக்க வந்த அந்த பொண்ணு. இளமையான சித்திரம். தம்பி சொல்ல வரது புரிகிறது. எட்டுகிற காதுகளுக்கு எட்டினால் சரி.:)

திவாண்ணா said...

அடுத்து ஹரிதாஸ் பத்தி விமர்சனம் வருமா?

soma said...

கல்லிடையில் பாயும் ‘நித்யகன்னி’யான தாமிரபரணியில் காலை நனைத்தபடி

thakkudupandiyavathu kulikarathavathu kalai than nanaippan thamiraparani ya parthum kulikatha alu nee than ya unna mathiriyey karthikaium ninaichitery........

கலோபரத்துக்கு நடுவில் கார்திக் அவரோட வண்டியை நைசாக ஓட்டிவிட்டு வந்துவிடுவார்.

unna mathiri thanya nee eluthara heroum irukkaru oc la edhu kidaichalum ottitararu

எல் கே said...

sari rightu aduta invitation print panna time vandiruchi :)
//பஸ் ஸ்டாண்டில் ஒரு பிகராவது வராதா என்று ஏங்கிக் கொண்டிருப்பவன் முன்னால் ஒரு நல்ல லேடிஸ் காலேஜ் பஸ் நிறைய பிகர்கள் வந்து இறங்கியதுன்னா, அவன் எதை அள்ள, எதை தள்ள? நு தெரி
யாமல் குழம்பிவிடுவது போல்
//
ne irukarathu qatar nyabagam vacchuko

Porkodi (பொற்கொடி) said...

ada kadavule.. indha padam vandha podhu naan pirakkave illai( nijamave thaan..)!! :O enna thakkudu vitta gulebagavali vimrasanam poduvinga polarke..!

தக்குடு said...

மக்களே! நித்யாவை பத்தி எழுதினாதான் 'தமிழ் பதிவர்'னு எல்லாரும் சொல்லியதால் நான் எனக்கு தெரிஞ்ச நித்யாவை பத்தி எழுதியிருக்கேன்....:)

My days(Gops) said...

attendance now... pinaaala vandhu kineey keeeran

தக்குடு said...

@ ஆயில்யன் - நீங்க கேட்ட மாதிரியே நித்யாவை பத்தி ஆனந்தமா எழுதியாச்சு...:)

@ TRC மாமா - இப்போதைக்கு சினிமா விமர்சனம் கிடையாது ...:) இந்த பதிவும் பாடல் பற்றியதுதான்.

@ மலை வாத்தியார் - எழுதிட்டா போச்சு...:)

@ கவினயா அக்கா - உங்களை பொட்டிக்குள்ள வரவைக்க நான் பட்டபாடு வீண்போகவில்லை...:)

@ சித்ரா அக்கா - இப்பொ வரும் படம் எல்லாம் பாக்கரமாதிரியா இருக்கு??

@ வல்லியம்மா - நீங்களும் ஆரம்பிச்சாச்சா?? எனக்கு தெரிஞ்ச ஒரே நித்யா கடையத்துல இருக்கா, அவளோட முழூ பெயர் நித்ய நித்ய கல்யாணி, ஸ்வாமி பெயர் மறந்து போயாச்சு, ஆனா அவளோட பெயர் மட்டும் நன்னா ஞாபகம் இருக்கு...:)

@ திவா அண்ணா - எழுதிட்டா போச்சு....:)

@ Pkks - முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்னிஹை!

@ LK - நாங்க அதெல்லாம் இடம் பார்த்துதான் வாசிப்போம்

@ கேடி - குலேபகவாலியும் நல்ல படம்தான்....:)

@ கோப்ஸ் - வருகை குறித்துக்கொள்ளப்பட்டது...:)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நேயர் விருப்பம் - 1940 ல வந்த குலே பகாவலி பற்றி எழுத இயலுமா புலவரே
ஐயோ...யாராச்சும் காப்பாத்துங்க...

Jayashree said...

போன வாரம் ஆத்தா இந்த வாரம் நித்யா வா?பாத்துண்டு இருக்கேன்...........

""எனக்கு தெரிஞ்ச ஒரே நித்யா கடையத்துல இருக்கா, அவளோட முழூ பெயர் நித்ய நித்ய கல்யாணி, ஸ்வாமி பெயர் மறந்து போயாச்சு ""

ஆஹ்ஹா!! இதானே வேண்டாங்கறது!! நிஜ்ஜ்ஜ்ஜம்மா...? வல்லியம்மா சொல்லறாப்பல கேக்க வேண்டியவாளுக்கு கேக்கட்டும்.. டும்..டும்..!!!!!!!!!?????????:))))))))

ஸ்வாமி பேரு விஸ்வநாதர் அத மட்டும் எப்படிப்பா convenient ஆ மற்ந்துட்டீங்க?:))

அச்சா!! கடையமா?

மெளலி (மதுரையம்பதி) said...

போட்டுத் தாக்குறீங்களே சாமி, பாவமில்லையா நாங்கள்ளாம்?.. வல்லியம்மா & ஜெயஸ்ரீ-மா சொல்வதை நானும் வழி மொழிந்து மகிழ்கிறேன்..:))

தக்குடு said...

@ ஜெய்ஷ்ரீ மா - அடடே! வரணும் அம்மா,/அச்சா!! கடையமா?/ அச்சா நஹி ஹை! மே கல்லிடை ஹை!....:)
மதுரையம்பதி அண்ணாவோட பதிவுலேயே டெண்டு அடிச்சு தங்காமல் இந்த குழந்தையோட பதிவு பக்கமும் அடிக்கடி வந்து போகவும்...:)

@ ம'பதி அண்ணா - இந்த மதுரைக்காராளே வழிமொழியர்துல பலே கில்லாடிகள்...:)

தக்குடு said...

@ அடப்பாவி தங்கமணி - எழுதிட்ட போச்சு! ஆனா இப்போதைக்கு சினிமா பத்தி எதுவும் கிடையாது...:)

Ananya Mahadevan said...

அன்புள்ள தக்குடு
கீழ்க்கண்ட படங்களின் விமர்சனத்துக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். அர்ஜெண்டாக போடவும்.டீவீடீ வாங்கிப்பார்த்தாவது போடவும். இல்லாட்டி பொறுமையுடன் காத்திருந்தால் பொதிகையில் வரும்!

சிவகவி
சாந்த சக்குபாய்
சதாரம்
ராஜமுக்தி
சக்கரதாரி
ஆலமாரா - இந்தியாவின் முதல் பேசும் படம்!
மங்கம்மா சபதம் (அவா ஊதினா இவா வருவா புகழ் ரஞ்சனின் நடிப்பில் வைஜெயந்தி மாலா வின் அம்மா வசுந்தரா நடித்தது, அசாத்தியமான படமாக்கும்)

பெரியோர்களின் ஆசீர்வாதப்படி சீக்ரமே விவாஹப்ப்ராப்த்தி ரஸ்த்துன்னு ஆசீர்வாதிச்சுட்டு, விடை பெறுகிறேன்.

mightymaverick said...

கவலைப்படாதே... இந்த வாரம் ஊருக்கு போறேன்... உங்க ரெண்டு பேருக்கும் வில்லங்கமான விமானப்படைக்காரர் ஊரில் இருப்பதாக கேள்வி... அவரிடமும் திருவாளர் எங்கள் தாத்தாவிடமும் பேசி விட்டு அடுத்த பின்னூட்டம் போடுறேன்... அது சரி... எல்லாம் இங்கே எழுதுறே... அந்த நித்யாவை பத்தி முத்துவுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தா, அந்த நித்யகன்னி, திருமதி.தகடு ஆகி இருக்கலாம்ல... அதை பண்ணுலே மொதல்ல... பரவா இல்ல... பத்த வைக்கிறதுக்கு தானே நாங்கள்லாம் இருக்கோம்...

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)