ஒரு ஊர்ல ஒரு ஏழை விவசாயி இருந்தாராம், அவருக்கு சொந்தமா ஒரு இரண்டு ஏக்கர் விவசாய நிலம் இருந்ததாம். இருபது வருஷமாக அவர் அந்த நிலத்துக்கு வரி எல்லாம் கட்டிக்கொண்டு இருந்தாராம், திடீர்னு ஒரு நாள் எதேச்சையாக அவருடைய நிலம் பற்றிய பட்டாவை அரசு அலுவலகத்தில் பார்க்க நேர்ந்தபோது, வரப்பு தவிர முழுவதுமாக அந்த நிலம் வேறு ஒரு நல்லவர் பெயரில் மாற்றப்பட்டு இருந்ததாம். போன மே மாதம் நிலவரி கட்டும் போது கூட என்னோட பேர்லதான்யா இருந்தது!னு சொல்லி அவரும் புகார் கொடுத்தாராம். விசாரணை அதிகாரி நல்லவரா இருந்ததால், விவசாயியோடுதுதான் அந்த நிலம்! அரசு பத்திரம் தவறாக திரித்து மாற்றப்பட்டுள்ளது!னு சொல்லி, நிலத்தை விவசாயி பேருக்கே திருப்பி மாற்றி எழுதவும் உத்தரவிட்டாராம்.
நண்பர்களே! இது எதோ கதையோ அல்லது சாதாரண பெட்டி செய்தியோ அல்ல! மேலே கண்ட விஷயம் நடந்த இடம் மகாராஷ்ரா மாநிலம் விதர்பா மாவட்டம் அமராவதி, பாதிக்கப்பட்ட ஏழை விவசாயியோட பெயர் கிஷோர், நிலத்தை ஆட்டை போடப்பார்த்த அந்த உத்தமரோட பெயர் என்ன தெரியுமா?????? தேவிசிங்ஷெகாவத், இவர் வேறு யாரும் அல்ல தற்போதைய இந்திய ஜனாதிபதியின் கணவர். இதுதான் இன்றைய இந்தியாவோட தலையெழுத்து..... (அந்தம்மா மீது ஒரு கொலைமுயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது என்பது உபரி தகவல்). சமுதாயப்பற்று மிக்க நம்ப மலை வாத்தியாரோட பதிவுகளை அடிக்கடி படிப்பதாலோ என்னமோ? விஷயம் கேள்விப்பட்டதும் என்னால் கோபத்தை அடக்க முடியவில்லை. அதன் காரணம்தான் இந்த திடீர் பதிவு.
முன்னாடியெல்லாம் திருடுபவன், கொள்ளையடிப்பவன் அப்படின்னா, ஒரு கடா மீசையும்,கன்னத்தில் ஒரு பெரிய மருவும் இருப்பது போல் பழைய படங்களில் பார்த்த ஞாபகம் ஆனால், இப்போது ஜென்டிலாக ஒரு ஷெர்வானியோ, ஒரு பைஜாமா குர்தாவோ அல்லது வெள்ளையும் சொள்ளையுமா ஒரு உடையிலோ வருகிறார்கள்.
எங்க ஊர் பக்கம் ஒரு வசனம் உண்டு, //சேலையிலை! சேலையில்லை!னு ஒருத்தி சித்தி வீட்டுக்கு போனாளாம், அங்க அவ சித்தி ஓலைபாயை கட்டிண்டு நின்னாளாம்// அதுபோல் உள்ளது இன்றைய நாட்டு நிலைமை. நாட்டின் மிக உயர்ந்த பதவிகளான ஜனாதிபதி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமை தேர்தல் ஆணையர் போன்றவைகளுக்கு வருபவர்கள் கருத்துக்களுக்கு அப்பார்பட்டவர்களாக இருக்க வேண்டும். அந்த நோக்கத்தில்தான் தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்திற்கு ' நிர்வசன் ஸதன்'(மாற்றுக் கருத்தில்லா நிலையம்) என்று பெயரிடப்பட்டது. ஆனால் இன்று ‘இலவச’ போதைக்கு அடிமையான ஒரு மாக்கள் சமுதாயத்தால் நாடு மொத்தமாக தனது மதிப்பை இழந்து கொண்டு வருகிறது. பொண்டாட்டி மட்டும்தான் இலவசமாக கொடுக்கவில்லை. அதுவும் சொல்ல முடியாது, பொன்னகரம் இடைதேர்தல்ல அரசு அறிவித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை! இலவச பொண்டாட்டி கொடுத்த பாரி வள்ளலே!னு இங்கு இருக்கும் அடிவருடிகள் அதற்கு ஒரு விழாவும்(அரசு செலவில்) எடுப்பார்கள்.
//பேயாளும் ஊரில் பிணம் கொத்தி உண்ணும் கழுகுகள்// அடுத்தவன் சொத்துக்கு பேயாய் பறக்கும் அல்பங்களின் கையில் நாடு சிக்கிக்கொண்டு தவிக்கிறது. முதல்வராக இருந்து விட்டு தான் இறந்த பிற்பாடு 4 பழைய கதர் வேஷ்டியும், சில நூறு ரூபாய்க்கும் குறைவான பாங்க் பேலன்ஸ் மட்டுமே விட்டுச்சென்ற 'கர்மவீரர்' வாழ்ந்த இந்த பூமியில் இது போன்ற கேவலமான கழிசடைகளும் நாட்டை ஆளுவது மிகவும் வேதனையான விஷயம். எனது நெருங்கிய முஸ்லீம் நண்பர் நபிகள் கூறியதாக ஒன்று சொல்லுவார், //உலகம் பிரளயத்தை நோக்கி செல்வதை சில அறிகுறிகள் மூலம் அறியலாம். சிறைச்சாலையில் கூட எல்லோரோடும் சேர்த்து அடைத்து வைப்பதற்கு தகுதியற்ற கொடிய கள்வர்கள் கூட்டம் கையில் நாட்டை ஆளும் பொறுப்பு இருக்கும்//. அது மிகவும் சரியாக இருக்கிறது.
அப்துல் கலாம் அய்யா, உங்களுடைய 'வல்லரசு'கனவு வெறும் கனவாகவே முடிந்து விடுமோ!!!! என்று பயமாக இருக்கிறது.
இன்றைய இந்தியா
தூர்ந்து போன கிணறு
அறுந்து போன கயிறு
ஓட்டை விழுந்த வாளி
பாவம்! தாகத்தில் இந்தியா!
ஜனாதிபதி போன்ற உயர் கெளரவமான பதவிகளுக்கு வருபவர்கள் நிஜ வாழ்விலும் கெளரவமானவர்களாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். இவ்வளவு நடந்த பின்னும் அந்த பதவியில் அட்டை போல் ஒட்டிக்கொண்டிருக்கும் இது போன்ற பெரிய மனிதர்களை பார்க்கும் போது, 'இதுக்கு முன்னாடி இருந்த சர்கிள் இன்ஸ்பெக்டர் என்னை ஏட்டையா பதவிலேந்து தூக்கர்துக்காக கக்கூஸ் களுவ சொன்னான்! நான் அசரலையே!!! என்று நடிகர் அர்ஜுனிடம் பெருமையாக நம்ப வடிவேலு பேசிய காமெடி வசனம்தான் நினைவுக்கு வருகிறது. ஜனாதிபதி போன்றவர்கள் ஜன நாயகத்தின் அதிபதியாக இல்லாமல் நாட்டை திவாலாக்கும் முடிவோடு வந்துள்ள 'இத்தாலிய' உளவாளிகளின் அடிப்பொடியாக இருந்தால் நம் நாட்டை சாமிதான் காப்பாத்த வேண்டும்.
ஆகவே நண்பர்களே! முப்பது வருடமாக நீங்கள் குடியிருக்கும் வீடோ, அல்லது உங்கள் விளை நிலமோ, அரசு ஆவணங்களிலும் உங்கள் பெயரில்தான் இருக்கிறதா? என்பதை அவ்வப்போது சரி பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், அண்டடாயருக்குள்ள நாம வச்ச கேவலம் அஞ்சு ரூபாய கூட அலேக்கா ஆதாரமில்லாம ஆட்டயப் போடற கூட்டத்துக்கு நடுவுல நாம வாழ்ந்து கொண்டு இருக்கோம். நம்ப நாட்டுல நேர்மையான அரசு அதிகாரிகளுக்கும் ரொம்ப பஞ்சம், எனவே உஷாரா இருங்க!!!!!!!
குறிப்பு - ஆடு பார்கலாம் ஆடு பகுதி-2 சில தினங்களில் பிரசுரமாகும்.
21 comments:
ennadhu vekkama?! enna thakkudu post vevagarama irukkumo?
அதை ஏன் கேக்கறீங்க தக்குடு.. நம்ம நாட்டை நினைச்சாலே பயமா இருக்கு! ஒண்ணும் புலம்பவும் முடியல, ஆன்னா ஊன்னா நீ வெளி நாட்டுல தானே இருக்கே, அங்க வரி கட்டிட்டு இங்க விஷயத்த பத்தி பேசாதேங்கறானுங்க.. :'( என்னவோ போங்க.
//அப்துல் கலாம் அய்யா, உங்களுடைய 'வல்லரசு'கனவு வெறும் கனவாகவே முடிந்து விடுமோ!!!! என்று பயமாக இருக்கிறது.//
ஆமா எல்லாரும் சொல்றீங்க, நானும் கேக்கணும் நினைச்சுருக்கேன்.. கலாம் ஒரு படித்த நல்லவர், நாடு முன்னேறணும்னு நினைச்சவர், ஓகே. ஆனா "கனவு காணுங்கள்"னு சொன்னதுக்கு மேலா அவர் என்ன பெரிய பங்காற்றினார், செயல் படுத்தினார்னு விளக்க முடியுமா? பள்ளி பள்ளியா போய் மாணவர்களை சந்தித்தது எல்லாம் பெரிய விஷயம் அல்ல என்னை பொறுத்த வரை (அது கூட எண்ணிடலாம்). Tangibleஆ அவர் என்ன நிகழ்த்தி காட்டினார்னு எனக்கு விளங்கலே. மத்த ஜனாதிபதி போல தான் அவரும் கையெழுத்து போட்டுட்டு போயிட்டார். அட்லீஸ்ட் முன்னாடி ஜனாதிபதிகளுக்காவது அரசியல் நெளிவு சுளிவு தெரியும், இவருக்கு அதுவுமில்லே. ஆமா இப்போ என்ன பன்ணிட்டு இருக்காராம்?
காமராஜரை பத்தி துணுக்குகள் படிக்கும் போதெல்லாம் வாயை பிளந்துக்கிட்டே இருக்க வேண்டி தான். இப்படிலாம் கூட மனுஷங்க இருந்தாங்களான்னு ஆச்சரியம் அடங்காதது.
சரி, இப்போ மத்த ஆராய்ச்சிக்கு போவோம்:
//முன்னாடியெல்லாம் திருடுபவன், கொள்ளையடிப்பவன் அப்படின்னா, ஒரு கடா மீசையும்,கன்னத்தில் ஒரு பெரிய மருவும் இருப்பது போல் பழைய படங்களில் பார்த்த ஞாபகம்//
அவ்ளோ பழைய படம் எல்லாம் பாத்தவரா நீங்க??? :0
//சேலையிலை! சேலையில்லை!னு ஒருத்தி சித்தி வீட்டுக்கு போனாலாம், அங்க அவ சித்தி ஓலைபாயை கட்டிண்டு நின்னாளாம்//
சரி இது எதுக்கு இங்க?! // போட்டு இருக்கறத பாத்தா எங்கருந்தோ கோட் பண்ணறீங்க போல? இல்ல சும்மானாச்சிக்கும் தெரிஞ்ச பழமொழிய போட்டு வெச்சீங்களா? ;)
//பொண்டாட்டி மட்டும்தான் இலவசமாக கொடுக்கவில்லை. அதுவும் சொல்ல முடியாது, பொன்னகரம் இடைதேர்தல்ல அரசு அறிவித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை! இலவச பொண்டாட்டி கொடுத்த பாரி வள்ளலே!னு இங்கு இருக்கும் அடிவருடிகள் அதற்கு ஒரு விழாவும்(அரசு செலவில்) எடுப்பார்கள்.//
ஆடு நனையுதேன்னு ஒநாய் அழுதுதாம்.. ஏய் எங்களுக்கும் பழமொழி தெரியும்லே.. இந்த தேர்தலுக்கு முன்னாடி நீங்க பென்னாகரத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகிடுவீங்கல்லே? ;)
ஆமா "கடைசியில் நானும்"னா என்னா அர்த்தமாம்?
மலை அண்ணன் உங்களுக்கு மட்டுமா அண்ணனா இருந்தார்,..? எனக்கும் கூட தான் அண்ணனா இருக்கிறார்... ஏன் இந்த ஊருக்கே...
நன்றி..
என்னய்யா தக்குடு, கழக அரசியலை விமர்சித்து ஹிட் ரேட்டை உயர்த்திக்க முடிவா?...:)
புரிகிறது உமது ஆதங்கம்.....தலையாட்டிகள் தான் தலைமகனாக/மகளாக வரமுடியும் என்பது நமது நாட்டின் தலைஎழுத்து....
அரசியலுக்கு வெளியே இருந்து ஜனாதிபதியான அப்துல் கலாம் சில விஷயங்களை மாற்ற முயற்சி செய்ததால்தான் 5 வருஷங்களிலேயே வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். காங்கிரஸ் அல்லாத அரசு முன்னிருத்திய முதல் ஜனாதிபதியும் அவரே. அவரில்லையெனில் இன்று இந்தியாவில் பிறக்காத ஒருவர் இந்த நாட்டின் தலைமைப் பதவியில் இருந்திருப்பார்.
இன்றைய அரசியலில் இருப்பவர்கள் எவரையும் மாணவ சமுதாயம் ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள இயலாது. கலாம் அரசியல் வியாதி இல்லைதான், ஆனா அடுத்த ஜனரேஷனுக்கு ஒரு இன்ஸ்பரேஷனாக, ரோல்மாடலாக கண்டிப்பாக எடுத்துக் கொள்ளலாம். ஜனாதிபதியாக இல்லாவிடினும் அவர் ஒரு சிறந்த நிர்வாகி (டி.ஆர்.டி.ஓ போன்றவற்றில்) மற்றும் விஞ்ஞானி....அவரது சில கருத்துக்களாவது வரும் தலைமுறையைச் சென்றடையட்டுமே?..மாணவர்களை அவர்கள் இடத்திற்குச் சென்று, ந்ல்லுரை வழங்குவது என்பது இன்று எத்தனை தலைவர்கள் செய்கிறார்கள்?...
@ கொடி - //ஆனா "கனவு காணுங்கள்"னு சொன்னதுக்கு மேலா அவர் என்ன பெரிய பங்காற்றினார், செயல் படுத்தினார்னு விளக்க முடியுமா? பள்ளி பள்ளியா போய் மாணவர்களை சந்தித்தது எல்லாம் பெரிய விஷயம் அல்ல என்னை பொறுத்த வரை (அது கூட எண்ணிடலாம்). Tangibleஆ அவர் என்ன நிகழ்த்தி காட்டினார்னு எனக்கு விளங்கலே. மத்த ஜனாதிபதி போல தான் அவரும் கையெழுத்து போட்டுட்டு போயிட்டார். அட்லீஸ்ட் முன்னாடி ஜனாதிபதிகளுக்காவது அரசியல் நெளிவு சுளிவு தெரியும், இவருக்கு அதுவுமில்லே. ஆமா இப்போ என்ன பன்ணிட்டு இருக்காராம்?
// உங்ககிட்டேந்து இப்படி ஒரு கருத்து கலாம் sir பத்தி வரும் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்கவில்லை. அவருடைய இந்தியா 2020, இந்தியா என் கனவு போன்ற புத்தகங்களை நீங்கள் படிக்கும் வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை படித்துப் பாருங்கள். அவரின் வாழ்நாளில் நாட்டிற்காக என்னவெல்லாம் செய்தார் என்று புரியும்.
சின்னஞ்சிறிய குழந்தைகள் மனதில் நல்ல எண்ணங்களை விதைப்பது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது.ஒரு நல்ல குறிக்கோளை நோக்கி ஒரு ஒட்டுமொத்த சமுதாயத்தை ஊக்குவிப்பது என்பது ஊக்கு விற்பது போன்ற எளிய காரியம் கிடையாது. பணம்,பொருள்,அதிகாரம் என்று எதை கொண்டும் குழந்தைகளின் மனதை நம்முடைய பக்கத்திற்கு இழுக்க முடியாது.இருபத்து நாலு ரோடு பிரிந்து செல்லும் ஒரு முக்கிய சாலையின் சந்திப்பில் போக வேண்டிய ஊர் தெரியாமல் நின்று கொண்டிருக்கும் ஒரு வழிப்போக்கனுக்கு அவனுடையா ஊரை வழிகாட்டும் ஒரு வழிகாட்டி board வரப்பிரசாதமாகும், அதற்காக board என்ன ஊருக்கேவா கூட்டிண்டு போச்சு! என்று நாம் பேசினால் அது நமது அறியாமையைதான் காட்டும்.
இன்றும் DRDO-வில் அவரோடு பணிபுரிந்தவர்கள் இவரை பற்றி வியந்து வருகின்றனர். தனது ஆராய்ச்சிகளுக்கு தன்னுடைய குடும்பம் இடஞ்சலாக இருக்குமோ என்று எண்ணி இந்த நாட்டையே தன் குடும்பமாக கருதி வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாகவே கழித்துக் கொண்டிருப்பவர். எட்டு முக்கியமான ஏவுகணைகள் இன்று இந்திய ராணுவத்தில் இருக்கிறது என்றால் அது இவர் தலைமை ஏற்ற அணியால்தான். காண்பித்த இடத்தில் எல்லாம் கையெழுத்து போடுபவராக இருந்திருந்தால் இன்னொரு 5 வருடம் ஜனாதிபதியாக அவர் தொடர்திருக்கலாம்.இப்பொது தனது 80-வது வயதிலும் 5 முக்கியமான பல்கலைகழகங்களில் கெளரவ விரிவுரையாளராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார்.
மற்றவர்களை போல அவர் தாம் செய்த சாதனைகளை விளம்பரம் செய்திருக்கலாம், அல்லது முன்னாள் ஜனாதிபதி என்ற முறையில் அரசு ஆடம்பர விழாக்களில் மட்டும் கலந்து கொண்டு உல்லாசமாக கழித்திருக்கலாம்,ஜனாதிபதியாக இருந்த போது தனக்கு ஷூ போட்டு/கழற்றி விடவும்,கோர்ட் அணிவித்து விடவும் இருந்த 4 ஊழியர்களை ராஷ்ரபதி மாளிகைக்கு வந்த முதல் நாளிலேயே வேறு பணிக்கு மாற்றிவிடாமல் ராஜபோகம் அனுபவித்திருக்கலாம். ஆனால் அவர் எதையுமே செய்யவில்லை, ஏனென்றால் அவர் கலாம்.
நல்லா எழுதி இருக்கே.
கலாமும் ஒரு பிளாக் ஆரமிச்சு அவர் என்ன பண்ணினார்னு நாலு போஸ்ட் போட்டு இருக்கலாம். இல்லாட்டி ட்விட்டர்ல 140 வரிகளாவது எழுத தெரிஞ்சதா அவருக்கு..?
தமிழ் படங்கள் பாத்து பாத்து நம்ம மக்களுக்கு ஒன்னு பாட்ஷா ரஜினி மாதிரி ஆட்டோ ஓட்டி எல்லாருக்கும் வாரி வாரி குடுத்து இருந்தாலோ அல்லது சிவாஜி ரஜினி மாதிரி இலவசமா ஒரு யுனிவர்சிட்டி ஆரம்பிச்சு ரெண்டு கையால கையெழுத்து போட்டா தான் ஏதோ செஞ்சார்னு நம்புவாங்க. :)))
ஈயத்தை பாத்து இளிச்சதாம் பித்தளை - இப்படி கூட ஒரு பமொழி இருக்காமே அப்படியா..?
:) என் கிட்ட இருந்து எதிர் பாக்கலைனா என்னா அர்த்தம் தக்குடு.. வழக்கம் போல நான் சொல்ல வந்தத சரியா சொல்லாம போயிட்டேன் நினைக்கறேன்.
ஒரு விஞ்ஞானியா அவர் எனக்கு புரியாத எல்லா சாதனைகளும் செய்தவர், வாழ்க்கையே அர்ப்பணித்தவர். சரியே. ஆனா அவர் ஜனாதிபதியா பதவிக்கு வந்த போது எல்லாரும் ரொம்ப சந்தோஷ பட்டோம் ஏகப்பட்ட மாற்றங்களை கொண்டு வருவார், அரசாங்கத்தை வழி நடத்துவார்னு நினைச்சோம். அட்லீஸ்ட், என்னை சுற்றி இருந்தவர்கள் அப்படி தான் எதிர் பாத்தோம். அந்த வகைல அவர் ஏமாற்றமா தான் இருந்தார்னு என் எண்ணம்.
ஒவ்வொரு பள்ளியா போய் குழந்தைகளை சந்திக்கறது, ஒரு ஜனாதிபதி இவ்வளவு நன்றாக கலக்கிறாரா மக்களோடுன்னு இருக்கே தவிர, இது எந்த அளவு பயனளிக்க கூடிய முயற்சியா இருந்துது? அப்படி எல்லா பள்ளிகளுக்கும் போய் கட்டுப்படி தான் ஆகுமா நம்ம நாட்டுல? இந்த முயற்சிக்கு Return on Investment கம்மினு தான் நான் சொல்லுவேன். "இன்னிக்கு ஜனாதிபதி வர்றாரு"னு அந்த ஊரும் பள்ளியும் விழுந்து அடிச்சு ஏற்பாடு பண்ணி இருக்குமே ஒழிய, அது ஒரு நாள் கூத்து. முடிந்ததும், அவரவர் பொழப்பை பாக்க போக வேண்டியது தான். அவருடைய பவருக்கு அவர் முக்கியமான காரியங்கள் சில பல செய்து இருக்கணும் (என்னனு கேட்டா நான் தாறுமாறா ஏதாவது சொல்லுவேன், ஆனா காண் உட்பட்டு அவரால் நிச்சயம் இன்னும் செய்து இருக்க முடியும்னு மட்டும் தெரியும்), ஆனா அதுக்கெல்லாம் அரசாங்கத்தை பகைச்சுக்கணும்.
ஒரு வேளை என் எதிர்பார்ப்பு தான் ஜாஸ்தியாக இருக்கலாம். அவர் நிறைய செய்து இருக்கலாம், அது எனக்கு தான் தெரியாமலும் இருக்கலாம். (பார்றா, இதுலயே எவ்ளோ கலாம்னு!) ஒரு விஞ்ஞானி ஜனாதிபதி ஆகும் போது, இன்னும் நிறைய செய்து இருக்க முடியுமே என்பது என் ஆதங்கம். எனக்கு படிக்க கிடைக்கறதெல்லாம், அவருடைய விஞ்ஞான சாதனைகள், "கனவு காணுங்கள்"னு மாணவர்களுக்கு சொன்னது ரெண்டு தான். இதுல எது ஜனாதிபதியா ஆனதால் மட்டுமே சாத்தியம் ஆனது?
அம்பி, காமராஜர் காலத்தில் ட்விட்டர், ப்லாக்கர், எதுவும் இல்லாவிடினும், இன்று வரை அவரது நல்ல கொள்கைகளும், குணங்களும், செய்கைகளும் பேசப் பட்டு கொண்டே இருப்பதின் மாயம் என்ன? :)
//ஆனா காண் உட்பட்டு அவரால் நிச்சயம் இன்னும் செய்து இருக்க முடியும்னு மட்டும் தெரியும்//
aana constitutionku utpattu endru irundhu irukka vendum.. :)
சரி, பதிவுக்கு எது முக்கியமோ அத பத்தி பேசாம, கலாமை பத்தி விவாதம் பண்ணிட்டு.. இப்படி தான் நாட்டுலயும் திசை திருப்பி குற்றவாளிகள் தப்பிச்சுடறாங்க. சரி, ப்ரதீபா மேல கொலை முயர் கேஸா? இதை பத்தி 4 வரி விளக்கமா எழுதிருக்கலாமே? கோர்ட்டு கேஸுனு போனவங்க கூட ஜனாதிபதியா ஆகலாமா???!
சரி, கலாம் என்னன்ன செய்தார்னு ஒரு சிற்றுரை குடுத்தார் பாஸ்டன் அண்ணாச்சி.. அவரால ஆனதை அவர் செய்து இருக்கார், எனக்கு தான் தெரியலை என்பதை ஒத்துக்கிறேன். (யாரு இங்க நீ ஒத்துக்கறதுக்கு காத்து இருந்ததுனு கேக்க கூடாது..)
அம்பி, இங்க யார் ஈயம் யார் பித்தளைன்னு நீங்க ஒரு சிற்றுரை குடுத்தீங்கன்னா நல்லாருக்கும்..
காமராஜர் ஒரு மானிலத்துக்கு முதலமைச்சர். கலாம் ஒரு நாட்டுக்கு ஜனாதிபதி. ஒரு முதலமைசக்ரின் பணி என்ன? கடமை என்ன? ஒரு ஜனாதிபதியின் கடமை என்ன?னு பொலிட்டிக்கல் சயின்ஸ் - இந்தியன் கான்ஸ்டிடியூஷன் பிரிவுல விரிவா இருக்கும். ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு பொலிட்டிகல் சயின்ஸ் எடுத்தது எதுக்கு பிரயோஜன படுதோ இல்லையோ இந்த வெட்டி பிளாக் விவாதததுக்கு பயனாகுது. :)
கொடி உனக்கு புரியற மாதிரியே சொல்றேன். இப்போ உங்க ஆபிஸ்ல உன் கணினி ரிப்பேர் ஆச்சுனா பில்கேட்ஸ் வந்து சரி செஞ்சு குடுப்பாரா? இல்ல லோக்கல் அட்மின் வந்து ரிப்பேர் பண்ணுவாரா?
இந்திய ஒரு ஜன நாயக நாடு (அப்படினு சொல்லிக்கறோம்). இதே கலாம் ஒரு அதிபரா இருந்தா மரம் நட்டு இருக்கலாம், குளம் வெட்டி இருக்கலாம். ஆனா இங்க எல்லாமே மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுக தான் செய்ய முடியும். தெருவுல தண்ணி வரலைனா கவுன்சிலரை தான் பாக்கனும். முதல்வர் வர மாட்டார்.
அதனால் தான் நீ சொன்ன tangible ரிஸல்ட்னு எதுவும் கலாம் கிட்ட சொல்ல முடியல.
சரி அடுத்த பாயிண்டுக்கு போவோம்:
ஸ்கூல் ஸ்கூலா போய் இவரு குழந்தைகள் கிட்ட பேசினதுல என்ன நடந்தது? உடனே எதுவும் நடக்காது தாயி.
ஒரு பத்து, இருபது வருஷம் கழிச்சு இந்த புள்ளைங்க தான் நாளைக்கு ஓட்டு போடுவாங்க, தேர்தல்ல நிப்பாங்க, அரசு அதிகாரியா வருவாங்க. நூத்துல ஒருத்தன் தன் கடமைய ஒழுங்க செஞ்சு, லஞ்சம் வாங்காம இருக்க மாட்டானா என்ன? (என்று நம்புவோம், நம்பிக்கை தானே வாழ்க்கை)
அப்புறம் பாஸ்டன் அண்ணாச்சி இன்னும் வரவேயில்லை. வந்தது ம-பதி அண்ணா. நிறைய தூங்கினாலும் இப்படி தான் ஆகும். :p
@ கொடி, கலாம் சாரை வச்சு காமிடி கீமிடி எதுவும் பண்ணலையே?? ஏன் கேக்கரேன்னா, நீங்க பல ஆட்களை கத்த விட்டுட்டு அப்புறம் 'அட அநியாய அப்ரண்டிஸுகளா!'னு ஒரு பதிவும் போடற ஆளு, அதான் கேட்டேன்.
தற்போதைய ஜனாதிபதியை நினைத்தால் வருத்தமாய் தான் இருக்கிறது. என்னத்த சொல்ல...
//ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு பொலிட்டிகல் சயின்ஸ் எடுத்தது எதுக்கு பிரயோஜன படுதோ இல்லையோ இந்த வெட்டி பிளாக் விவாதததுக்கு பயனாகுது. :)//
ஓஹோ... :)
//இப்போ உங்க ஆபிஸ்ல உன் கணினி ரிப்பேர் ஆச்சுனா பில்கேட்ஸ் வந்து சரி செஞ்சு குடுப்பாரா? இல்ல லோக்கல் அட்மின் வந்து ரிப்பேர் பண்ணுவாரா? //
ஆமா, பில் வர மாட்டார், அதையே தான் நானும் சொல்றேன், ஸ்கூல் ஸ்கூலா போனது அவருடைய நேரத்தின் மதிப்புக்கு ரொம்ப குறைவான வரும்படி உள்ள ஒரு முயற்சினு.. :( சரி, நம்பிக்கை தான் வாழ்க்கைனு சொல்லிட்டீங்க, let's hope.
//அப்புறம் பாஸ்டன் அண்ணாச்சி இன்னும் வரவேயில்லை. வந்தது ம-பதி அண்ணா. நிறைய தூங்கினாலும் இப்படி தான் ஆகும். :p//
நான் பாஸ்டன் கிட்ட தனியா பேசிட்டு இருந்தப்போ அவர் பேசினது - ம.பதி அண்ணாவை நான் சொல்லலை, நிறைய வெங்காயம் உரிச்சாலும் இப்படித் தான், கோளாறாகிடுமாம். :P
//நீங்க பல ஆட்களை கத்த விட்டுட்டு அப்புறம் 'அட அநியாய அப்ரண்டிஸுகளா!'னு ஒரு பதிவும் போடற ஆளு, அதான் கேட்டேன்.//
ஐ! ஆமா ஆமா! ;)
ஆனாலும் தற்போதைய ஜனாதிபதி பத்தி நான் ஒண்ணுமே ஆரய்ச்சி பண்ணது இல்ல, இப்போ தான் தெரிய வந்துது! இவங்கலாம் கூட ஜனாதிபதி ஆகலாமா, என்னடா இதுன்னு இன்னும் ஆச்சரியம் அகலவில்லை.
ada pavi poli samaiyaa...vambi the thambi!! nee thaana !!! yaruda ithu..naam neja pera vachu kalasaraangalaynu paathen!!!
@ கொடி - ஆட்சி,அதிகாரம் மட்டும் கைல இருந்தா, யாரை வேணும்னாலும் எதா வேணும்னாலும் நியமிக்கலாம்...:(
பழமொழி சொன்னா அனுபவிக்கனும், ஆராயக்கூடாது!
@ம'பதி அண்ணா - என்னத்தே போட்டாலும் கமண்டாம ஓசி பேப்பர் படிக்கறவங்கதான் இங்க ஜாஸ்தியா இருக்கு!...:)
@ அம்பி - நீ என்ன காக்காயா கத்தினாலும் கொடிக்கு ஒரு விஷயத்தை புரியவைப்பது என்பது, //யானை! யானை!(in 23 ம் புலிகேசி)..:)
@ டுபுக்கு - வருகைக்கும் கருத்துக்கும் நன்னி!
@ கில்ஸ் - வாயா ஜொல்ஸு, வருகைக்கு நன்னி!
Buddy, is this post from you? Interesting!!
Hi, I am your newest follower! Ivvalau vishayam padikka enakku oru maamaangam aagalam.
So i just want to let you know that I shall look forward to idhumaadhiri nalla vishayangal..
Comments padikkavae time vaenum poala irukkae!
@ VGr - :))) ples chk the label of this post.
@ Lata Madam - Thks for reading my old post and all...;) comment area yeppothumey inga kalakkala irukkum, becos that is not from me...;)
Post a Comment
யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)