Thursday, September 8, 2011

அதாகப்பட்டது................

பாலக்காடு தொடங்கி பனாமா கால்யாய் பர்யந்தம் ஜீவிச்சு இருக்கும் எல்லா ஓமணக்குட்டிகளுக்கும்/சேட்டன்களுக்கும் மனசு நிறைஞ்ச ஓணம் ஸத்யா


Itடது Butடானால் Whatடென்ன Sirஐயா-னு பெரியவா எல்லாம் சொன்ன மாதிரி ஊருக்கு போனாதான் நாலு வார்தை நம்பளால எழுத முடியர்து. மத்தவா எல்லாம் புத்தக விமர்சனம், உண்மையின் நிதர்சனம், ஏழையின் கரிசனம், ஆலய தரிசனம்னு நன்னா கோர்வையா எழுதிட்டு போயிடரா, இலை போடாத பந்தில உக்காந்த மாமி எதிர்த்த பந்தில பால்பாயாசத்தை நக்கி ஏப்பம் விடர மாமியை ஏக்கமா பாக்கர மாதிரி எல்லாரோட போஸ்டையும் பாத்துண்டு இருந்தேன். “எலேய் தக்குடு! ஒட்டகம் மேய்ச்சதெல்லாம் போதும் கல்லிடை காஸ்மோபொலிடனுக்கு போய் தொப்பையப்பனுக்கு ஹேப்பி பர்த்டே சொல்லிட்டு வா!”னு ஷேக்கு சொல்லிட்டார். பக்கதாத்து பொண்ணுக்கும் சேர்த்து பிள்ளையார் கோவில் சுவத்துல உக்காச்சுக்க இடம் போட்ட மாதிரி 2 மாசம் முன்னாடியே துண்டை போட்டு பிளைட்ல ஜென்னலோரமா ஒரு டிக்கெட் போட்டு வைச்சது கொஞ்சம் செளகர்யமா தான் இருந்தது. ஏர்போர்ட்ல 8 சாஸ்தா ப்ரீதிக்கு சேர்ந்த கூட்டம் மாதிரி ஜனபிரவாஹம்.

இந்த தடவை ஏர்போர்ட்ல ஆரம்பிச்சு காஸ்மோபொலிடன் வரைக்கும் எங்கையும் வம்பை விலைக்கு வாங்கப்பிடாதுனு ஒரு சங்கல்பத்தோட தான் கிளம்பினேன். 4 சீட்டுக்கு நடுல உக்காசுண்டாதான் வம்பு வருதுனு ஒரு அனாலிஸிஸ் பண்ணி இந்த தடவை டபுள் சீட்டர்ல டிக்கெட் போட்டு வெச்சுருந்தேன். சீட்டை தேடி கண்டுபிடிக்கர்த்துக்குள்ள இந்த ஏரோப்ளேன் பொம்ணாட்டிகள் 3 தடவை இடிச்சுட்டு போயாச்சு. இப்பெல்லாம் பொம்ணாட்டிகள் தான் ஆம்பிளேளை இடிக்கரா, ஹும்ம்! எல்லாம் கலி காலம். அடுத்த இடி அவா இடிக்கர்த்துக்குள்ள சீட்டை கண்டுபிடிச்சு போய் உக்காச்சுண்டுட்டேன்.

பயணங்கள்.....


பக்கத்து சீட்டுகாரன்/காரி நல்லபடியா அமையனுமேனு கொஞ்சம் கவலையாதான் இருந்தது. நம்பளை மாதிரியே அமைதியான(?!) சுபாவமா இருந்தா பிரச்சனை இல்லை. சிலபேருக்கு நாலு சீட் தள்ளி அவாளோட சகா யாராவது இருப்பா, அவாளை கூப்பிடறேன் பேர்வழினு நம்ப காதுல வந்து கத்திண்டு இருப்பா. இப்படியெல்லாம் யோசிச்சுண்டு இருக்கும் போதே ஜிப்பா போட்ட ஒரு வெள்ளக்கார மாமி சொல்லி வெச்ச மாதிரி சப்பரமா வந்து பக்கத்துல உக்காந்தா. திருனவேலி பஸ்ஸா இருந்தா “பொம்பளையாள் வந்துருக்கு பக்கத்து சீட்ல மாறி உக்காருங்க அண்ணாச்சி!”னு சொல்லி சீட்டு கொள்ளாம உக்காசுண்டு இருக்கும் ஒரு கிடாமீசை அண்ணாச்சிக்கு பக்கத்துல நம்மை கண்டக்டர் மாத்தி விட்டுடுவார்.


ஒரு ஹாஆஆய்! சொல்லிட்டு அவாளோட இடத்துல செட்டில் ஆயிண்டா அந்த வெள்ளக்கார மாமி. ப்ளைட்ல ஏறின உடனே எந்த படமும் பாக்க ஆரம்பிக்க கூடாது. ப்ளைட் கிளம்பர வரைக்கும் நடுல நடுல நம்ப ஹெட்போன்ல கேப்டன் மாமா “ப்ளைட் நகர்ந்துண்டுருக்கு! பறக்க போகர்து! சீட்டை கெட்டியா புடிச்சுக்கோங்கோ! பக்கத்துல பிகர் இருந்தா அதோட கையை புடுச்சுக்கோங்கோ! பறக்க தொடங்கியாச்சு! டயர் உள்ள போகர்து! கக்கூசுக்கு போனவா மறக்காம ஜலம் விடுங்கோ!”னு எதாவது அனோன்ஸ்மென்ட் பண்ணி பண்ணி ப்ராணனை வாங்குவார். அதனால ப்ளைட் கிளம்பர வரைக்கும் நாம எதாவது புஸ்தகம் படிக்கர்துதான் தேவலை. நான் கைல கொண்டு போன புஸ்தகத்தை வாசிக்க ஆரம்பிசேன். அந்த வெ.மாமியும் புஸ்தகம் வாசிக்க ஆரம்பிச்சா.


கொஞ்ச நேரம் கழிச்சு பிரட்ல பட்டர் தடவும் போதுதான் நமக்கும் அந்த வெ.மாமிக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்னு தெரிஞ்சது. அவாளோட கைல ஹாரி பாட்டர், என்னோட கைல அபிராமி பட்டர். அழகா வெஜிடேரியன் சாப்பாடு சொல்லி வச்சு வாங்கி சாப்பிட்டா என்னோட சாம்பார் அவ்ளோ சோபிதம் இல்லாததால அந்த அம்மா அவாளுக்கு சொல்லி வெச்சுருந்த பெரும்பயறு டால்ல ஒரு கரண்டி எனக்கும் விடச்சொன்னா. இந்தியா பத்தி அவ்ளோ சமாசாரம் அவாளுக்கு தெரிஞ்சுருக்கு. அவாளோட குடும்ப கதையெல்லாத்தையும் என்கிட்ட சொல்ல ஆரம்பிச்சுட்டா. அந்த அம்மாவோட ரெண்டு புள்ளையாண்டான்கள் அமெரிக்காலையும் ஐரோப்பாலையும் இருக்கா. வெ.மாமி மெட்ராஸ்ல வேலை பாக்கராளாம். அவாளோட ஆத்துக்காரர் உன்னிகிருஷ்ணன்னு ஒரு மலையாளி. “அப்போ ஃபாரின் க்ளோப்ரேஷன்னு சொல்லுங்கோ!”னு பழக்க தோஷத்துல ‘படக்’னு சொல்லிட்டேன். நல்லவேளை அவா தப்பா எடுத்துக்காம ரசிச்சு சிரிச்சா. திருவண்ணாமலை, ரமணாஸ்ரமம் பத்தி எல்லாம் பேசினா. “ஊர்ல இருக்கர பண்டாரம்/பரதேசி,ஞானப்பழம்/வாழைப்பழம் எல்லாரும் சொல்லிவெச்ச மாதிரி உன்கிட்ட வந்து சவகாசம் வெச்சுக்கறாளே அது எப்பிடிடா மாப்ளே?”னு எங்க அண்ணா என்னை எப்போதும் கேட்பது ஞாபகம் வந்தது. “நீ என்ன புஸ்தகம் வாசிக்கறாய்?”னு கேட்டா. “இவரும் அல்மோஸ்ட் ஒரு இந்தியன் ஹாரிபாட்டர் தான் ஆனா இவரோட பேர் அபிராமி பட்டர். 100 பாட்டு பாடி அக்னிலேந்து தப்பிச்ச 'தி கிரேட் எஸ்கேப் ஸ்டோரி”னு அவாளுக்கு புரியரமாதிரி சொன்னேன்.


'திருவண்ணாமலைல பெளர்ணமி அன்னிக்கு வரக்கூடிய லக்ஷக்கணக்கானவா ஏன் கிரிவலபாதை முழுசும் எதையாவது சாப்டுண்டே போறா? போன்ல வேற பேசிண்டே இருக்காளே?'னு ஏகப்பட்ட சந்தேகம் வெ.மாமி கேட்டா. வாஸ்தவமான கேள்விதான். எனக்குமே முக்தி தலத்துல போய் “பொண்டாட்டியை குடு! புள்ளை குட்டியை குடு! மூட்டை மூட்டையா ஐஸ்வர்யத்தை குடு!”னு வேண்ட்ரவாளை பாத்தா பரிதாபமா இருக்கும். அதுலையும் திருவண்ணாமலைல குபேர லிங்கம் சன்னதில கூட்டம் அலைமோதும், வாயு லிங்கம்,யமலிங்கம் எல்லாம் காத்தாடும். “திருவண்ணாமலைல ரமணாஸ்ரமம் தவிர வேற எங்கையும் போயிடாதீங்கோ மாமி! குண்டலினி/ஜிமிக்கினு கலர் கலரா ரீல்விடும் தலப்பா கட்டின ஃப்ராடு பயலுக ஜாஸ்தி!”னு வெ.மாமியை உஷார் படுத்தினேன். ஒரு டகால்டி ஸ்வாமிகள் கிட்ட போய் ஒருத்தன் "ஸ்வாமி! அடியேனுக்கு எப்போது ஸித்தி கிட்டும்?"னு கேட்டானாம். என்ன சொல்லர்துன்னு தெரியாம 2 நிமிஷம் கண்ணை மூடி இருந்துட்டு "உங்க அப்பா எவ்வளவு சீக்கரம் ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கறாரோ அந்த க்ஷணமே உனக்கு சித்தி கிட்டும்"னு ஸ்வாமிகள் சொன்ன கதை தான் ஞாபகத்துக்கு வந்தது.


பேச்சுக்கு நடுல வெ.மாமி கல்யாணம் ஆகி 16 வருஷத்துக்கு அப்புறம் டைவர்ஸ் ஆயிடுத்து!னு சாதாரணமா சொன்னா. ‘நீங்க பண்ணினேளா? அவர் பண்ணினாரா?’னு எங்க தெரு ‘வம்பு’ வைதேகி மாமியா இருந்தா கேட்டு இருப்பா. நான் அதெல்லாம் கேட்கலை.”பொதுவா வெள்ளக்காரா ஆத்து கதவு நம்பரை கேட்டாளே ‘மைண்ட் யுவர் சொந்த பிசினஸ்’னு சொல்லிடுவாளே, நீங்க உங்காத்து மாமா சமாசாரம் எல்லாம் எதுக்கு என்கிட்ட சொல்றேள்?”னு கேட்டதுக்கு “நீ என்னோட ரெண்டாவது புள்ளையாண்டான் மாதிரியே இருக்கைடா கோந்தை!”னு சொல்லிட்டா. மனசுக்குள்ள தலைவரோட ‘அம்மா என்றழைக்காத’ பாட்டை ஓட விட்டு முகத்துல ‘ஆஆஆஆ!’னு கமல் பீலிங் குடுக்க நான் ப்ரயத்தனம் பண்ணர்துக்குள்ள “அவனும் உன்னை மாதிரியே சம்பந்தா சம்பந்தம் இல்லாம தத்துபித்துனு உளறிண்டே இருப்பான்”னு சொல்லி கடைசில என்னை வடிவேலாட்டம் ‘அவ்வ்வ்வ்வ்!’னு சொல்ல வெச்சுட்டா அந்த வெ.மாமி.


அதாகப்பட்டது, நாம என்ன தான் அமைதியா இருக்கனும்னு முயற்சி பண்ணி வாயை கட்டி வெச்சுருந்தாலும் வலியவந்து நம்ப கிட்ட பொலம்பக்கூடியவா பொலம்பத்தான் செய்வா. கடைசில நாம தான் இஷ்டப்பட்டு பேசின மாதிரி அக்ஷதையை நம்ப தலைல போட்டுடுவா. ஜாதக ராசியை திடீர்னு எல்லாம் மாத்த முடியாது. இமிக்ரேஷன்ல சீல் வாங்கர்துக்கு மெட்ராஸ் ஏர்போர்ட்ல நிக்கும் போது பின்னாடிலேந்து யாரொ பிராண்டரமாதிரி ஒரு பீலிங். திரும்பினா குட்டியூண்டு கருப்புகலர் ஸ்டிக்கர் பொட்டு வெச்ச ஒரு அக்கா " நீங்க என்னோட சித்தி புள்ளை சைச்சு மாதிரியே இருக்கேள்"னு ஆரம்பிச்சா (“அய்யைய்ய்ய்ய்யோ! மறுபடியும் முதல்லேந்தா?”னு மனசுக்குள்ளே கேட்டுண்டேன்)........................................


குறிப்பு – (It = அது, but = ஆனால், what = என்ன, sir = ஐயா ) அடுத்த போஸ்ட் சென்னை, பெண்களூர் & கல்லிடை காஸ்மோல சந்தித்த சில சுவாரசியமான விஷயங்கள் :))

41 comments:

Lakshmi said...

தக்குடு என்பக்கம் வந்து பாருங்கோ லஷ்மீபதி பெருமாளோட கருட சேவை யெல்லாம் வந்துண்டு இருக்கு வரிசையா. ஆனாலும் உங்களைபோலல்லாம் காமெடியா எழுதமுடியாதுப்பா.

கடம்பவன குயில் said...

//பக்கத்து சீட்டுகாரன்/காரி நல்லபடியா அமையனுமேனு கொஞ்சம் கவலையாதான் இருந்தது. நம்பளை மாதிரியே அமைதியான(?!) சுபாவமா இருந்தா பிரச்சனை இல்லை. //

இதுதான் இருக்கிறதிலேயே ரொம்ப நான் ரசிச்ச ஜோக். எப்படி தக்குடி இப்படி சிரிக்காமல் உங்களப்பற்றி இப்படியெல்லாம் அபிப்ராயம் சொல்லிக்கறேள்.

கடம்பவன குயில் said...

//அவாளோட கைல ஹாரி பாட்டர், என்னோட கைல அபிராமி பட்டர். //

நம்பிட்டேன் உங்க கையில அபிராமி பட்டர்தான் இருந்தார்னு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களின் ஆகாய விமானப்பயணக்கதை வெகு அருமையாக நகைச்சுவையாக இருந்தது. பாராட்டுக்கள். vgk

கவிநயா said...

//“எலேய் தக்குடு! ஒட்டகம் மேய்ச்சதெல்லாம் போதும் கல்லிடை காஸ்மோபொலிடனுக்கு போய் தொப்பையப்பனுக்கு ஹேப்பி பர்த்டே சொல்லிட்டு வா!”னு ஷேக்கு சொல்லிட்டார்.//

ஆப்பீச்லயும் தக்குடுதானா? அந்த ஒட்டகமெல்லாம் தக்குடுவை ரொம்ப மிஸ் பண்ணிச்சாம். பா...வம் :(

//ஜாதக ராசியை திடீர்னு எல்லாம் மாத்த முடியாது.//

அப்டின்னா மெதுமெதுவா மாத்தலாமா? :)

//“அய்யைய்ய்ய்ய்யோ! மறுபடியும் முதல்லேந்தா?”னு மனசுக்குள்ளே கேட்டுண்டேன்//

நானும்தான். ஹி...ஹி.

vgr said...

edarku ooruku senreergal enbadai therivikavum.

ipadiku
vgr

Ramani said...

உங்களுக்கு ஸரஸ்வதி கடாட்சம் கைகூடி இருக்கு
இல்லையானா இவ்வளவு அழகா எழுத முடியாது
படிச்சு மாளலை.திரும்பத் திரும்ப படிக்கணும்னு
தோணிண்டே இருக்கு.எதுக்கும் கொடிப்பிணை வேணும்
அடுத்த பதிவை சீக்கிரம் போடுங்கோ

ஸ்ரீராம். said...

இலை போடாத மாமி - பாயசம் சாப்பிடற மாமி உவமை பிரமாதம். நிறைய பதிவு போடுகிறவர்கள் எழுதுவதை ஒரே பதிவிலேயே பேரை அடித்துக் கொண்டு போய் விடுகிறீர்களே ஸ்வாமி...!

ஹாரி பாட்டர் - அபிராமி பட்டர்...குண்டலினி - ஜிமிக்கி....அட!

என் ரெண்டாவது பிள்ளை மாதிரியே வரிகளும் சிரிக்க வைத்தன. ஹேட்ஸ் ஆஃப் தக்குடு...

siva said...

OK PRESENT SIR..

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Suser journey posting . . .

Anonymous said...

தக்குடு, வந்துட்டியா. வெள்ளைக்கார மாமி, இந்திய மாமி எல்லோருக்கும் தக்குடு பற்றி
தெரிந்திருக்கு. ஆகக் கூடி ரெண்டாவது தடவை பல்லாவரம் விசிட்டா:)

யாரோ சொன்னா.
ஜிமிக்கி,குண்டலம் எல்லாம் அழகுதான்:)
சரஸ்வதி கடாட்ஷம் மட்டும் இல்லை ஸ்ரீ கடாக்ஷமும் சேர்ந்திருக்கு இப்பொ. Vallisimhan

Techops mami said...

Sari commedy takadu....antha aunty correcta unaku vacha aapu.super thambhi.continue.....

RAMVI said...

அதாகப்பட்டது,தக்குடு..எங்க ரொம்பநாளா ஆளக்காணுமேன்னு பார்த்தேன்..நல்ல பயண கட்டுரையோடத்தான் வந்திருக்கே!

RVS said...

சித்தி வாய்க்கற கதை ரொம்ப நன்னா இருந்தது. யாராவது மேல இடிக்க வரா மாதிரி இருந்தா ஒதுங்கிக்கனும்.

எனக்கென்ன அவா என் முதுகு மேலத்தான் இடிச்சா.. என் மேல இடிக்கலை...

எனக்கென்ன அவா என் தோள்பட்டையிலதான் இடிச்சா... என் மேல இடிக்கலை...

அப்டீன்னு நட்ட நடுப்பற நின்னுண்டு wrestling விளையாடிட்டு இந்தப் பேச்சா?

எங்க பறந்தாலும் இங்க மீனம்பாக்கத்திலதான் இறங்கனும் என்று சொல்லிக்கொண்டு இத்தோடு விடைபெறுகிறேன். நன்றி வணக்கம். :-)

vijayalakshmi said...

Thakkudu I miss you somuch...............

Shobha said...

Post romba nanna irukku, naan commenta ninachadellaam meedhi per commentiyutta. Adhunala enakku nee antha Pallavaram revisit enna ingara matterai mattum thani madalil therivikkavum.
Shobha

அமுதா கிருஷ்ணா said...

எல்லோருக்கும் தக்குடு பத்தி தெரிஞ்சு போச்சா???பாவம்..

Sriram, Doha. said...

தக்குடு.. ப்ளைட்லயுமா..??? தாங்கலடா சாமி

vasan said...

Dear Thakkudu,
Really a nice one with the pinch of humor especially the flow is the best.

ஜீ... said...

:-)

Anonymous said...

eppo siddhi kittum jokekukku vizhundu vizhundu sirichen.summa flight la poi ukkanda kathays ivlavu sirippa ezhutha mudiyuma? mudiyumnu prove panni irukeenga. naangalum than ethanayo thadavai porom ipdi ezutha mudivathillaye!!. u r blessed thakkudu. sasisugA203.

angelin said...

Hilarious post Thakkudu .
""A traveler without observation is a bird without wings".//
you are really great !!!!
ஜிப்பா போட்ட ஒரு வெள்ளக்கார மாமி,அவாளோட கைல ஹாரி பாட்டர், , கிடாமீசை அண்ணாச்சி , குட்டியூண்டு கருப்புகலர் ஸ்டிக்கர் பொட்டு வெச்ச ஒரு அக்கா "
well done thakkudu .

angelin said...

May the spirit of Onam remains everywhere - in whatever you do, whatever you think and whatever you hope in your life. Wish you a Happy Onam.

King Vishy said...

அருமையான பயணக் கட்டுரை!
தமிழக / கேரள ஸ்டீபன் லீகாக் நீர்! சப்ப மேட்டர எடுத்து, அதுக்கு பூ-பொட்டு வெச்சு அலங்கரிக்கிரீங்களே.. பெரிய திறமை தான்!
And most importantly.. Flight கெளம்புறப்போ படம் பாக்கக் கூடாது-னு சொன்னீங்களே.. அத தஞ்சாவூர் கல்வெட்டுல பதிச்சு வெக்கலாம்!

SRINIVAS GOPALAN said...

தக்குடு
நல்ல வேளை - உன் பக்கத்துல வெ. மாமி உக்காசுண்டா. நம்ம பக்கத்து மாமியா இருந்தா 'நீ வடமாளா, என்ன கோத்ரம்' னு கேட்டு அங்கேயே சம்பந்தம் பேசி
முடிச்சிருப்பா.
வர வர பிளேன்ல பிரம்மச்சாரிகளுக்கு பாதுகாப்பே இல்லாம போச்சு :))))

வெங்கட் நாகராஜ் said...

இலை போடாத மாமி - பாயசம் சாப்பிடற மாமி....

சித்தி எப்ப கிடைக்கும்...


போன்ற பல இடங்களில் சிரிச்சு மாளல தக்குடு... என்ன ஒரு எழுத்து....

இராஜராஜேஸ்வரி said...

அவாளோட கைல ஹாரி பாட்டர், என்னோட கைல அபிராமி பட்டர். அழகா வெஜிடேரியன் சாப்பாடு சொல்லி வச்சு வாங்கி சாப்பிட்டா

பத்மநாபன் said...

எதாகப்பட்டதா இருந்தாலும் தக்குடு கிட்ட மாட்டினால் சிரிக்காம தப்பிக்க முடியாது...

தக்குடு said...

@ லெக்ஷ்மி மாமி - வந்தாச்சே!!

@ க.குயில் - நாம என்ன நேருஜியா இல்லைனா 2G- யா நம்பளை பத்தி அடுத்தவா அபிப்ராயம் சொல்லர்துக்கு :)

@ வை கோ சார் - நன்றி!!

@ கவினயா அக்கா - ஒட்டகம் தவிர வேற யாரெல்லாம் மிஸ் பண்ணினானு தக்குடு அறிவான் :))

@ VGr - யோவ், அதான் கோவிலுக்கு கரகம் ஆட போனேன்னு சொல்லி இருக்கேன் இல்லைய்யா அப்புறம் என்னா?? :PP

@ ரமணி சார் - என்ன கடாக்ஷமோ எனக்கு ஒன்னும் தெரியலையே சார் :)

@sriram anna - ரொம்ப சந்தோஷம் அண்ணா :)

@ சிவா - அடென்டன்ஸ் நோட்டட்

@ ராஜா - நன்னிஹை!

@ வல்லிம்மா - எதுனாலும் பேசிக்கலாம், பப்ளிக்ல தக்குடுவௌ வாரிவிடுவாளா இப்படி?? :))

@ Techops மாமி - :))

@ ரமா அக்கா - ஓஹோ பிள்ளையை காணுமேனு தெடினேளா?? :)

@ மைனர்வாள் - நான் ஒன்னும் இடிக்கலை ஓய்ய்! அவாளா வந்து இடிச்சா நான் என்ன பண்ண முடியும்..:)

தக்குடு said...

@ விஜி மாமி - நானும் தான் :)

@ ஷோபா மேடம் - மெயில்தானே அனுப்பிட்டா போச்சு!! திருப்பதில பாம்பு வந்த கதை மெயில் ஓக்கேவா?? :))

@ அமுதா மேடம் - ஆமாம் மேடம் ....

@ சீராம் அண்ணா - பட்டீல் கதை ஆயிடுத்து :P

@ வாசன் சார் - :))

@ ஜீ- :-)

@ சசி அக்கா - பாசம் நிறைஞ்ச உங்களை மாதிரி மனுஷாதான் தக்குடுவுக்கு ஆசிர்வாதம் :)

@ தேவதை - நமக்கு கண்ணு நாலா பக்கமும் போகும் :)

@ விச்சு - தஞ்சாவூருக்கு சொல்லி அனுப்பியாச்சு...:)

@ கோபால் அண்ணா - இனிமே அதுக்கும் வழி இல்லை :)

@ வெங்கட் அண்ணா - நீங்களும் நக்கல் அடிக்காதீங்கோ தலை நகரமே!!

@ ராஜி அக்கா - :))

@ பத்துஜி - :))

மஞ்சுபாஷிணி said...

தக்குடு என்ன இப்படி அசத்திண்டிருக்கேள்....

இன்னும் முழுக்க படிக்கலை கேட்டயா...

ஹ்ருதயம் நிறஞ்ஞ ஓணாஷம்ஷகல் தக்குடு...

பேரு ரொம்ப நன்னாருக்குப்பா...

எங்காத்துல நொழஞ்சுட்டேனா அப்டின்னு தோண வெச்சிடுத்து உங்க தளத்துல வந்தப்ப....

ரொம்ப சுவாரஸ்யமா சொல்லிண்டு போறேள்....

இன்னும் முழுக்க படிச்சிடறேன்....

அன்பு வணக்கங்களுடனான வாழ்த்துகள் தக்குடு....

மஞ்சுபாஷிணி said...

யெச்சுஸ்மி....

கமெண்ட் பொட்டி மாத்ரமில்ல கமெண்ட்டும் பிரமாதமா வந்திருக்கு பாருங்கோ....

Shanthi said...

Konjam humour, konjam kusumbu, konjam edhartham nalla write up ...

மாலதி said...

ஏன்னா உங்க ஆத்துல மாமி கொஞ்சம் உஷரா இருக்க சொல்லுங்கோ இல்லேனா அவளுக்கு தங்கச்சி உடனே கூட்டிண்டு வந்திடுவேல் போலிருக்கே ?

Thanai thalaivi said...

தக்குடு,

உன் ஓணம் வாழ்த்து மெயில் கிடைத்தது. மிகவும் அருமை, நன்றிகள் பல.
நீயும், லக்ஷ்மி அம்மாவும் ஒரே ஊர்காரர்கள் என்று தெரியும். உங்களுக்குள் அறிமுகமானது மகிழ்ச்சி. அதெப்படிப்பா, உனக்கு மட்டும் எங்கே போனாலும் யாராவது மாமியே கம்பனிக்கு கிடைக்கிறா....!? :))

Thanai thalaivi said...

அதென்ன தக்குடு, எல்லோரும் பல்லாவரம்,பல்லாவரம் இங்கிரள்ளே அங்கே என்ன விசேஷம்......!? விவரமா பதிவு போடு.

அப்பாவி தங்கமணி said...

ஹா ஹா ஹா... சூப்பர் ரகளை... உன் முக ராசி அப்படினு நினைக்கிறேன்... :)))

Samantha said...

hahhaha gud sense of humour..keep posting

(Mis)Chief Editor said...

தக்குடு ஸார்! - என்னதான் நாங்க மாஞ்சு மாஞ்சு எயுதினாலும்...ரஜினி 'எந்திரன்' மாதிரி ஒரு போஸ்ட் குடுத்து...கபளீகரம் பண்றீரே! என்ன மாயம் ஓய்?!!

அது சரி...காதைக் கொடும்...இதெல்லாம் உவ்வுலவாங்காட்டி தானே?!

-பருப்பு ஆசிரியன்

தக்குடு said...

@ மஞ்சு மேடம் - உங்காத்துல இப்படிதான் பேசிப்பாளா?? முதல் வருகைக்கும் இனிமே வரப்போகும் வருகைக்கும் நன்னிஹை!..:)

@ ஷாந்தி மாமி - நன்னிஹை! :)

@ மாலதி மேடம் - வாங்க கவிதாயினி!! :)

@ தானைதலைவி - அதேதான், எங்க போனாலும் மாமிகள் கூட்டம் அலை மோதர்து :)

@ இட்லி மாமி - வாங்க பிஸி பிஸி மேடம் :)

@ சமந்தா - அவசரத்துல உங்க பேரை சமத்தா!னு வாசிச்சுட்டேன் :)

@ பருப்பு ஆசிரியர் - அதெல்லாம் ஒரு மாயமும் இல்லை ஓய்!! எல்லாம் உங்களை மாதிரி நல்ல மனுஷாளோட ஆதரவு :)

Jagannathan said...

உங்களுக்கு நகைச்சுவை சக்கரவர்த்தி என்று பட்டமளிக்கிறேன்! எத்தனை பிரியமான வாசகர்கள் (மாமிகள்!) உங்களுக்கு! - ஜெகன்னாதன்

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)