Thursday, September 15, 2011

ஹலோவ்வ்வ்வ்...........

Part 1

ஒரு வழியா பொட்டியெல்லாத்தையும் எடுத்துண்டு மீனம்பாக்கத்துலேந்து வெளில வந்தேன். அதிகாலைல முதல் ஆளா வாசல் பெருக்கி தெளிக்கும் எங்க தெரு 'கொட்டடாகுடையடா' மாமியாத்து வாசல் மாதிரி ஒரு மிதமான மழை பெஞ்சு எல்லா இடமும் வாசல் தெளிச்ச மாதிரி ஈரபதத்தோட இருந்ததால மெட்ராஸ்ல வந்து இறங்கினோனே எப்போதும் வரும் எரிச்சல் இந்த தடவை வரலை.

மரியாதை நிமித்தமான சிலபல சந்திப்புக்கள் சென்னைல இருந்ததால் சென்னை வந்து பெண்களூர் போகற மாதிரி ஆயிடுத்து. மெட்ராஸ்ல இருக்கர மனுஷாளை விட மூனு மடங்கு ஜாஸ்தியா செல் போன் இருக்கும் போலருக்கு! அட ராமச்சந்திரா!!! அதுல என்ன தான் பண்ணுவாளோ! பகவானுக்கு தான் வெளிச்சம்! “இந்தோ வந்துண்டே இருக்கேன்! ரயிலுக்குள்ள ஏறியாச்சு! சீட்ல உக்காந்தாச்சு! கொட்டாவி விட்டேன்! கொய்யாபழம் சாப்பிட்டேன்!” இந்த ரீதில எல்லா சமாசாரத்துக்கும் சம்சாரத்துக்கு ஒரு கால். “உன்னோட அதிகார மயி@ எல்லாம் உங்க அப்பன்கிட்ட வெச்சுக்கோ!!” “சேலத்துல சகளையோட மூத்த மவளுக்கு வர வெள்ளிக்கிழமை சடங்கு!”னு கிராமிய மணம் கமழும் சம்பாஷணைகள் ஒரு பக்கம். “நீ எப்போதுமே இப்படி தான், ‘உம்மா’ தா!னு கேட்டா தரவே மாட்டே!” “நான் இப்போ என்ன கலர் சட்டை போட்டுண்டு இருக்கேன் சொல்லு பாப்போம்!!”னு எவனோ ஒரு அம்பிகாபதி அமராவதிக்கு சேதி சொல்லிண்டு இருக்கான். “இனிஷியல் பூட்டிங்க்ல பிரச்சனை இருந்தாலும் இருக்காலாம் எதுக்கும் நீங்க ரீபூட் பண்ணி பாக்கலாமே! yeppp! தரமணி கிட்ட வந்திட்டேன்!”னு நெட்வொர்க் அட்மினோட கால் ஒரு பக்கம் ஓடிண்டு இருக்கு.

இது எதுவும் இல்லைனா காது செவிடானவா மாதிரி சதாசர்வ காலமும் ஒரு மானம் கெட்ட ஹெட்போனை மாட்டிண்டு பாட்டு கேட்கவேண்டியது! பாட்டு கேக்கர்து நல்ல விஷயம் தான், நான் இல்லைனு சொல்லலை, அதுக்காக காதை திறக்காம எப்பபாத்தாலும் இசை மழையா? பொறுக்க முடியாம என்னோட பக்கத்துல இருந்த ஒருத்தர்கிட்ட நிஜமான குழந்தை அழர்து, கிளி கொஞ்சர்து எல்லாம் நீங்க கேட்டு இருக்கேளா?னு பேச்சு குடுத்தேன். ஒரு பக்க ஹெட்போனை கழட்டிட்டு "அது அடுத்த டிராக்ல ரிக்கார்ட் பண்ணி வெச்சுருக்கேன், எப்பையாவது கேப்பேன்"னு பதில் சொல்லிட்டு 'படக்'னு செவிட்டு மிஷினை மாட்டிண்டுட்டார். யாராவது டாக்டருக்கு படிக்கறவா இருந்தேள்னா அவா எல்லாரும் எண்டு டாக்டருக்கு (ENT) படிங்கோ! நிச்சியமா இன்னும் 5 வருஷத்துல முக்கால்வாசி ஆட்கள் செவிடாதான் அலையப்போறா.

இவாளோட ரிங்டோன் எல்லாம் கேட்டா கொஞ்சம் சிரிப்பும் வரத்தான் செய்யர்து. " நெஞ்சை தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி" அடிச்ச உடனே பல்லெல்லாம் வாயா ஒரு அண்ணா அவரோட டாவு கூட பேசரார். "சட்டி சுட்டதடா கை விட்டதடா!" பாட்டு வந்து கரெக்டா ‘புத்தி கெட்டதடா’ னு டி.எம்.எஸ் இழுக்கும் போது போனை எடுத்து “வீட்டுக்கு தான் வந்துண்டு இருக்கேன்மா, வரும்போது அரை கிலோ புளி வாங்கிண்டு வரனுமா? வேற எதுவும் வேண்டாம்லா?னு பேசிட்டு விரக்தியா போனை கட்பண்ணர்து கல்யாணம் ஆகி 4 வருஷம் ஆன யாரோ ஒரு அப்பாவி ரங்கமணி. சரவணா ஸ்டோர்ஸையே வாங்கி வீட்டுல வெச்சாலும் இந்த பொம்ணாட்டிகளுக்கு ஆத்துக்கார் ஆபிஸ்லேந்து வரும் போது போன் பண்ணி “பால் வாங்கிண்டு வாங்கோ! குக்கருக்கு காஸ்கெட் வாங்கிண்டு வாங்கோ! பூ வாங்கிண்டு வாங்கோ! புண்ணாக்கு வாங்கிண்டு வாங்கோ!!”னு பிச்சுபிடிங்கி எடுக்கர்துல ஒரு தனி சுகம்.தா! தை! திக்கி! தை! :)

ரொம்ப நாளாவே இந்தியாவுக்கு எப்ப வருவை? எப்ப வருவை? ஒரு அக்கா கேட்டுண்டு இருந்தா. பரத நாட்டியத்துக்கு பேர் போன ஒரு இடத்துக்கு பக்கத்துல இருக்கும் அந்த அக்காவோட ஸ்பெஷாலிட்டியே அவா சொல்லும் “ஹலோவ்!”தான். நான் தங்கி இருந்த இடத்துலேந்து 15 நிமிஷம் தான் அவாளோட வீடு, அதானால அவாத்துக்கு கிளம்பி போய், அவாத்து பக்கத்து பஸ் ஸ்டாண்ட்லேந்து கால் பண்ணினேன். 3 நிமிஷத்துல வந்து ஸ்கூட்டில என்னை ஏத்திண்டா. வண்டி கிளம்பினது மட்டும் தான் எனக்கு தெரியும். அம்ம்ம்ம்ம்மாடி! ஜாக்கிசான் வேகத்துல வண்டி ஓட்டறா. நடுல நடுல ‘தக்குடு இருக்கையா! தக்குடு இருக்கையா!’னு செக் பண்ணிண்டா. எல்லாம் முடிஞ்சு அவாளோட அப்பார்ட்மெண்ட் பார்கிங்ல சுவருக்கும் ஒரு தூணுக்கும் நடுல ஜேம்ஸ்பாண்ட் சண்டைகாட்சில வரமாதிரி புகுந்து ஒரு ப்ரேக் பிடிச்சா பாருங்கோ!! 1983-ல காலமான எங்க தாத்தா கண்ணுல தெரிஞ்சார்.

எதிர்காத்துல வந்ததால என்னோட ரெண்டு கண்ணுலையும் ஜலம். "ஆத்துக்கு வந்த மனுஷாளை பஸ்ஸ்டாண்ட்லேந்து பிக்கப் பண்ணினதுகெல்லாம் கண் கலங்க கூடாது கோந்தை"னு சொல்லிண்டே அவாத்துக்கு கூட்டிண்டு போய் லெமன் ஜூஸும் சிந்தூர நிறத்துக்கு சுடச்சுட கேசரியும் தந்தா. கேசரி ‘சூப்பரா இருக்கு!’னு சொன்னதுக்கு அப்புறம் மெதுவா “நான் தான் பண்ணினேன்!”னு சொன்னா எனக்கென்னவோ அவாளோட மாமியார் தான் பண்ணியிருப்பாளோ!னு ஒரு சம்சியம். ரொம்ப நேரம் அவாத்து மனுஷாளோட பேசிண்டு இருந்தோம். பிஸ்கெட் எனக்கு அவ்வளவா பிடிக்காதுங்கர்தாலா பேருக்கு அஞ்சே அஞ்சு ‘குட்டே’ பிஸ்கட் மட்டும் நொசிக்கினேன். அவாத்துல இருக்கும் போதே நம்ப பாங்க்’ மாமிக்கும் போன்ல பேசினோம். ‘ஆத்துக்கு வா தக்குடு!’னு ரொம்ப வாஞ்சையோட கூப்பிட்டா. “நான் ஸ்கூட்டில கூட்டிண்டு வரேன் மாமி!”னு இந்த அக்கா போன்ல சொன்னதுக்கு அப்புறம் பாங்க் மாமியாத்து விசிட்டையே நான் மறந்துட்டேன். திரும்பி ஆத்துக்கு கிளம்பர்துக்கு முன்னாடி அவாத்து பூஜைரூம்ல உள்ள உம்மாச்சிக்கு "பத்திரமா கை/காலோட என்னை திருப்பி அனுப்பி வை பெருமாளே"னு வேண்டிண்டு சேவிச்சேன். சேவிச்சு எழர்துக்குள்ள “அத்திம்பேர் அடுத்த வருஷம் ‘ஆல்டோ’ கார் வாங்கி தரர்தா சொல்லி இருக்கார் தக்குடு!”னு குண்டை தூக்கி போட்டா நம்ப அக்கா.

அடுத்த நாள் காத்தால நான் பெண்களூர் கிளம்பி போயாச்சு. பங்காரபேட்டை ஸ்டேஷன் தாண்டும் போதே மனசுக்குள்ள ஒரு இனம்புரியாத சந்தோஷம்! இருக்காதா பின்ன? தக்குடு இந்த லோகத்தை தெரிஞ்சுண்ட புண்ணிய ஷேத்ரமாச்சே! பெண்களூர்ல ஏகப்பட்ட மாற்றங்கள். அவுட்டர் ரிங்க் ரோட்ல எல்லாம் திடீர் திடீர்னு மேம்பாலம் வருது. மெட்ரோ ரயில் வேலை மும்மரமா நடக்கர்து, வால்வோ ஏசி பஸ்ல வண்டி வண்டியா கூட்டம் ஏறர்து, எல்லாரோட கைலயும் ஆப்பிள் ஐபோன் இருக்கு. ஹோட்டல்ல எல்லாம் விலைவாசி தங்கம் மாதிரி ஏறி இருக்கு. ஒரு மசால் தோசை + ஒரு ஜோடி சாம்பார் வடை + ஒரு காபி சாப்பிட்டதுக்கு 110 ரூபாய் பில்லு, பில்லை பாத்துட்டு ஆத்த்த்த்தாடி!னு வாய்விட்டே சொல்லிட்டேன். “ஆத்தாடியாவது! காத்தாடியாவது! ஒழுங்கா பைசாவை எடு!”னு சொல்லர மாதிரி சர்வர் முறைச்சார். வேலை பாத்த பழைய கம்பெனிக்கு போய் சகாக்களை எல்லாம் பாத்தேன். அந்த ‘டெக் பார்க்’ல அடா அடா அடா! என்ன ஒரு சூழ்நிலை தெரியுமோ! கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் கலர் கலரா ரகம்ரகமா..... பூ செடி இருந்ததுனு சொல்லவந்தேன். ஆபிஸ்ல இருந்த கன்னடத்து பைங்கிளிகளோட ரொம்ப நாளைக்கு அப்புறம் சத்தமா கன்னடத்துல பேசி சிரிச்சோம்.

பெண்களூர் போயிட்டு அங்க உள்ள மால் எதையும் பாக்காம வந்தா ஊருக்கு போன பலன் கிட்டாது!னு ஊர் பெரியவால்லாம் சொல்லி இருக்கர்தால பழைய ப்ரண்டை கூட்டிண்டு ஃபோரம் மால் போனேன். போகும் வழில மாரத்தஹல்லில ஒரு பாணிபூரிகாரர் “வட்டத்துல ஒரு கை குறையர்து”னு சொன்னதால நானும் சேர்ந்துண்டேன்.. மாலுக்கு போனதுக்கு அப்புறம் நானும் எங்க அண்ணாவும் ஜோடியா உக்காசுண்டு உலகத்தோட மாயாவினோதங்களை அலசி ஆராய்ஞ்ச மாடிப்படில போய் திரும்பி ஒரு தடவை உக்காசுண்டு பாத்தேன். அங்க உள்ள செண்ட்/பவுடர்/சாம்பூ மணம் மாறாம இருந்தாலும் பிகர்கள் எல்லாம் நல்ல முன்னேறி இருக்கா. அவா போட்டுண்டு வளையவந்த டிரெஸ் நார்மல் சைஸ்னு கணக்குல எடுத்துண்டா எங்க ஊர்ல இருக்கும் குழந்தேளுக்கான 'மம்மிடாடி' ரெடிமேட் ஷோரூம்ல இருக்கும் மூனு வயசு குழந்தையோட கவுன் சைஸ் XL-நு தான் சொல்லனும். நிறையா பிகர்கள் அவாளோட 10ஆவது பிறந்த நாளுக்கு அவாத்துல எடுத்துகுடுத்த டிரஸ்ஸை எல்லாம் 20 வயசுல போட்டுண்டு கிழக்கையும் மேற்கையும் போயிண்டு இருந்தா. இன்னொரு அவதாரம் போட்டுண்டதுக்கு அப்புறம் தைச்ச மாதிரி இருந்த ஒரு டவுசரை போட்டுண்டு லாந்தினது. என்னோட ப்ரண்டோட ரொம்ப மும்மரமா பேசிண்டு இருந்ததால இந்த விஷயம் எதையுமே நான் கவனிக்கலைனு உண்மையை சொன்னா நீங்க எல்லாரும் “நம்பிட்டோம்!”னு தான் கமண்ட் போடுவேள்.

திடீர்னு மெட்ராஸ் அக்காடேந்து ஒரு கால், "ஹலோவ் தக்குடு, ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன்டா கோந்தை! அங்க வந்த பொம்ணாட்டிகள் எல்லாம் டிசைன் டிசைனா ஜன்னல் வச்ச @#$% போட்டுண்டு வந்தா, உன்னை தான் நினைச்சுண்டேன்!”னு வம்புக்கு இழுத்தா. ‘இதுக்கு எதுக்கு என்னை நினைச்சுக்கனும்!’னு மனசுல யோசிச்சுண்டே “அக்கா, கவலையேபடாதீங்கோ! மெட்ராஸ்ல ஜன்னலை மூடின பகவான் பெண்களூர்ல கதவையே திறந்துட்டார்!”னு சொல்லி சமாதாபடுத்தினேன்..........:)

குறிப்பு - போன போஸ்ட்லையே எல்லாரும் பல்லாவரம் பல்லாவரம்!னு சொல்லிண்டு இருந்தா, அது தமிழ் நாட்ல இருக்கா இல்லைனா கேரளால இருக்கனு கூட எனக்கு தெரியாது! அடுத்த போஸ்ட் சிருங்கேரி & கல்லிடை மாமா/மாமிகளுடன் கொண்டாடிய சதுர்த்தி உத்ஸவ ஸ்பெஷல் ரிப்போர்ட்........

31 comments:

Ramani said...

எல்லோருக்கும் தொண்டையிலே ஒரு மூடி இருக்கும்
தக்குடுக்கு அது இல்லையினு தெரியரது
இல்லாட்டி இப்படி மனசுல படரதையெல்லாம்
மட மடன்னு அருவி கொட்டுற மாதிரி
கொட்ட முடியுமா என்ன
பதிவு ரொம்ப நல்லா போறது
அடுத்த பதிவை எதிர்பார்த்

அமுதா கிருஷ்ணா said...

ENT டாக்டர் யோசனை டக்கர்.நிஜமா என்னதான் பேசுவாங்களோ தெரியலை.

Srinivas Gopalan said...

superfast ஆ தான் எழுதிருக்கே. ஒரே பதிவுலே சென்னை + பங்களூர் கவர் பண்ணிட்டியே.
சென்னை விசிட் ல எதோ ஒன்னு குறையற மாதிரி இருக்கே. நிஜமா உனக்கு பல்லாவரம் தெரியாது?? :))
வல்லி மாமிய கேட்டால் தெரியும்.

(Mis)Chief Editor said...

//10ஆவது பிறந்த நாளுக்கு அவாத்துல எடுத்துகுடுத்த டிரஸ்ஸை எல்லாம் 20 வயசுல போட்டுண்டு கிழக்கையும் மேற்கையும் போயிண்டு இருந்தா. இன்னொரு அவதாரம் போட்டுண்டதுக்கு அப்புறம் தைச்ச மாதிரி இருந்த ஒரு டவுசரை போட்டுண்டு லாந்தினது. என்னோட ப்ரண்டோட ரொம்ப மும்மரமா பேசிண்டு இருந்ததால இந்த விஷயம் எதையுமே நான் கவனிக்கலைனு உண்மையை சொன்னா நீங்க எல்லாரும் “நம்பிட்டோம்!”னு தான் கமண்ட் போடுவேள். //

நம்பிட்டோம்!!!!

அப்பாவி தங்கமணி said...

//மரியாதை நிமித்தமான சிலபல சந்திப்புக்கள் சென்னைல இருந்ததால்//
எப்படி எப்படி? மரியாதை நிமித்தமான... ஒகே ஒகே.....:))

உனக்கு இந்த நேரத்துல வேண்டிய ஆராய்ச்சி பூரி கட்டை பறந்து வரும் போது இடம் போகணுமா வலம் போகணுமா தானே....நீ ஏன் ஜன்னல் கதவு பத்தி எல்லாம் யோசிச்சுட்டு இருக்காய்? ஹ்ம்ம்... என்னமோ போ...:)))

வித்தியாசமான கடவுள் said...

ங்கோயாலே... என்னோட வீட்டு பக்கம்லாம் (மாரதஹல்லி) சுத்திட்டு என் வீட்டுக்கு வராமல் திரும்ப பறந்திருக்க... உனக்கெல்லாம் அடுத்த முறை வரும் பொது ஆப்பு இருக்குடி...

ஸ்ரீராம். said...

பெண்களூர்....??

போட்டுண்டதுக்கு அப்புறம் தச்சது மாதிரி...!!!

செவிட்டு மெஷின்ல பாட்டு கேட்டு பாதி பேர் எதிர்காலத்துல செவிடா அலையும் பயக் காட்சி எனக்கும் உண்டு.

//ஒரு மசால் தோசை + ஒரு ஜோடி சாம்பார் வடை + ஒரு காபி சாப்பிட்டதுக்கு 110 ரூபாய் பில்லு,//
சென்னையை விட 12 ரூபாய் அதிகம்!

siva said...

present ambi..nanna eluthi erukel...
anga anga unga thiruvilaiyaadal narthanam purikirathu vaarthaigalil..

கவிநயா said...

வழக்கம் போல கலகல சிரிசிரி போஸ்ட் :) ஆனாலும் ஊருக்கு போயிட்டு வந்தப்புறம் நக்கல் ஒரு சுத்து ஜாஸ்தியாயிருக்கோ?

//கல்யாணம் ஆகி 4 வருஷம் ஆன யாரோ ஒரு அப்பாவி ரங்கமணி.//

கொஞ்சம் வெயிட்டீஸ் தம்பீ. தக்குடுவுக்கும் கல்யாணம் ஆகத்தான் போறது; 4 வருஷமும், அதுக்கு மே....லயும் ஆகத்தான் போறது :)

RAMVI said...

//“அக்கா, கவலையேபடாதீங்கோ! மெட்ராஸ்ல ஜன்னலை மூடின பகவான் பெண்களூர்ல கதவையே திறந்துட்டார்!”னு சொல்லி சமாதாபடுத்தினேன்..........:) //
அடப்பாவி, தக்குடு.சிரிச்சு சிரிச்சு வயத்தவலிதான் போ.

ஒவ்வொரு வரிக்கும் அடப்பாவி தக்குடுன்னு சொல்லிண்டுதான் படிச்சேன்.

வெங்கட் நாகராஜ் said...

மொபைல் ரிங் டோன்.... :) இங்க தில்லில ஒரு பிரஹஸ்பதியோட மொபைல்ல ரிங் டோனா “I Love You.. I Love You.... I Love You....." அப்படின்னு ஒரு பொண்ணு காட்டுக் கத்தலா கத்தற மாதிரி வைச்சுண்டுருக்கு! ரோடுலே நடந்து போகற போது திடீர்னு அடிச்சு சுத்தி இருக்கற எல்லாம் யாரு யாருன்னு பார்க்கிற மாதிரி வைச்சுருக்கு... அதுல அவருக்கு ஒரு சந்தோஷம்....

அம்பாளடியாள் said...

அழகிய தொடர் பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோ மிக்க
நன்றி பகிர்வுக்கு .முடிந்தால் வாருங்கள் என் தளத்திற்கும் ....

lata raja said...

Mariyaadhai nimiththamaanaa....ada ada ada.
NambittOm thaan:)

தோஹா அன்பன் said...

//“அக்கா, கவலையேபடாதீங்கோ! மெட்ராஸ்ல ஜன்னலை மூடின பகவான் பெண்களூர்ல கதவையே திறந்துட்டார்!”னு சொல்லி சமாதாபடுத்தினேன்//
கிருஷ்ணா ! கிருஷ்ணா!!

//குறிப்பு - போன போஸ்ட்லையே எல்லாரும் பல்லாவரம் பல்லாவரம்!னு சொல்லிண்டு இருந்தா, அது தமிழ் நாட்ல இருக்கா இல்லைனா கேரளால இருக்கனு கூட எனக்கு தெரியாது!//
பல்லாவரம் வந்தப்பறமும் கேரளாவ மறக்கலையா? ATM சொல்லறமாதிரி பூரி கட்ட தான். Sponsor பண்ண நாங்க ரெடி.

Lakshmi said...

தோஹா திருப்பலியா இன்னும் ? சிருங்கேரி, கல்லிடை மாமா மாமிகள் சந்திப்பெல்லாம் இருக்கே. அதுக்குள்ள எங்க போவே இல்லியா. ஆனாலும் உனக்கு நக்கல் ஜாஸ்தி ஆயிண்டே போரது’ இதுதான் கல்லிடைக்குசும்போ??

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

நல்ல ரசனையான அனுபவங்களின் தொகுப்பு
பேஸ் பேஸ் நன்னா இருக்கு..

vijayalakshmi said...

பெண்களூர் ?
spelling mistake thakkudu mathikkoo Bangalore okva?
Ennathu jannal, kadavuu nu parvai engiyoo porathu?
Mangappadi vangumbodhu nanga yarum kuda irrukka mattom ketiya? Otakam sagayathukku varathu therinjukko.

vijayalakshmi said...

மரியாதை நிமித்தமான சிலபல சந்திப்புக்கள் சென்னைல இருந்ததால்
Oooooooooooooo nambaroam ketiya?

Thanai thalaivi said...

தக்குடு, சென்னைக்கு வரச்சே எரிச்சல் எல்லாம் இனிமே வரபடாது... :)
இல்ல... எங்கள மாதிரி நல்லவங்க இருக்கிற ஊருன்னு சொல்ல வந்தேன்.

angelin said...

////பிஸ்கெட் எனக்கு அவ்வளவா பிடிக்காதுங்கர்தாலா பேருக்கு அஞ்சே அஞ்சு ‘குட்டே’ பிஸ்கட் மட்டும் நொசிக்கினேன். //
thats thakkudu !!!!.
எதை ஹைலைட் செய்றதுன்னே தெரியல தக்குடு சிரிச்சு சிரிச்சி தொண்டை என்னமோ செய்யுது .

RVS said...

பதிவு பூரா ஒரே பொம்மணாட்டியா இருக்காளே!!

அம்பி ஒரே நாட்டி!!! :-)

sury said...

//பதிவு பூரா ஒரே பொம்மணாட்டியா இருக்காளே!!//

பூலோகம் முழுக்கவே பொம்மனாட்டி தானே நிறஞ்சு இருக்கா !!
அப்ப தக்குடு மனசுலே மட்டும் இருக்கக் கூடாதா என்ன !!
நீ கவலப்படாதே தக்குடு !! ஜமாய் ராசா !!

இருந்தாலும் ஆத்துக்காரி வந்த உடனேயாவது
அடக்கி வாசி.

சுப்பு ரத்தினம்.

kggouthaman said...

good. enjoyed reading it.

Anonymous said...

ADA daa...UNAKU PALLAVARAM YENGA IRUKU NEA THERIYATHA.....CHENNI LA FLIGHT IRANKIYATHUM NEE AVATHUKU TAANEA PONEA..INTHA TADAVA YENKATHUKU KUDA VARA MUDIYALA UNAKU..AVALAVU BUSY....

AANA ATHU UNMAI TAKUDU NAMA OLD COMPANY & pENKALUREA MARAKAMUDIYATHU...

வல்லிசிம்ஹன் said...

வல்லி மாமியைக் கேட்டா சொல்றேன்:)
மீனம்பாக்கம் தாண்டினால் பல்லாவரம் தானே.
செல்வத்திருமகள் இருக்கும் இடம் தெரியலைன்னு சொல்லுவாளோ தக்குடு.:)

படிச்சுட்டுக் கோவிச்சுக்கப் போறா யாரோ ஒருத்தர்.

இத்தனை விவரமா பெண்களூஊர் உடைகளை ஆராய்ச்சி செய்து கேள்விப்பட்டதே கிடையாதுப்பா.:))))))

Anonymous said...

உனக்கு கிண்டீயே மறந்துபோச்சு பல்லவரம் மட்டும் ஞாயபகம் இருக்கே.அது சரி தக்குடு பாங்களூரிலே எங்கே தங்கினே?

Guru said...

Hai Thakkudu

Super Dubai oru thadavai vango arabia jadi kudirai ellam parkalam

தக்குடு said...

@ ரமணி சார் - ஓட்டவாய்னு டீசண்டா சொல்றேளா??..:)

@ அமுதா மேடம் - அதான் எனக்கும் தெரியலை..

@ கோபாலன் அண்ணா - நீங்க பல்லாவரத்துலேயே நிக்காதீங்கோ! அடுத்த ஸ்டாப்புக்கு கொஞ்சம் வாங்கோ! :-)

@ பருப்பு ஆசிரியர் - :-)

@ இட்லி மாமி - வாங்கர அடியோட கூட ரெண்டு வாங்கிக்க வேண்டியது தான் அதுக்காக பெண்களூர்ல கண்ணை மூடிண்டா போக முடியும்..:P

@ விகடவுள் - கடைசி பார்ட்ல என்ன காரணம்னு போட்டு இருக்கேன் பாருங்கோ!

@ sriram அண்ணா - நீங்களும் எல்லாம் நோட் பண்னி இருக்கேள் போலருக்கே?? :-)

@ சிவா - ஹா ஹா :-)

@ கவினயா அக்கா - இதெல்லாம் ஒழுங்கா கவனிங்கோ!! க்கும்!! :P

@ ரமா மாமி - சந்தோஷமா சிரிச்சேள் இல்லையோ அதுதான் வேணும்!! :)

தக்குடு said...

@ வெங்கட் அண்ணா - உங்க ரிங்டோன் என்னனு சொல்லுங்கோ பார்ப்போம்! :ப்

@ அம்பாளடியாள் - நீங்க அம்பாளோட அடியாளா :)

@ லதா மாமி - சொன்னா நம்புங்கோ!!

@ தோஹா அன்பன் - எங்க போனாலும் கேரளாவை மறக்ககூடாது அண்ணா :)

@ லக்ஷ்மி மாமி - நீங்களும் அதே கல்லிடை தான் :)

@ ரமேஷ் சார் - முதல் வருகைக்கு நன்னிஹை

@ விஜி மாமி - அதுதான் கரெக்டான ஸ்பெல்லிங் :-)

@ தானை தலைவி அக்கா - ஓக்கே எஜமான் :)

@ தேவதை - ரொம்ப சந்தோஷம் பா....

@ மைனர்வாள் - என்னோட வாயை கிளராதீங்கோ!! :P

@ சூரி மாமா - உங்க கிட்ட கேட்டுக்கறேன்

@ கெளதமன் சார் - ரைட்டு

@ Techops மாமி - அதை சொல்லுங்கோ அக்கா!!

@ வல்லி மாமி - இந்த கலகத்தை ஆரம்பிச்சி வெச்சவாளே நீங்க தான் :-)

@ TRC மாமா - :))

@ குரு அண்ணா - நிச்சயமா அப்ப துபாய் வந்துட வேண்டியது தான் :)

Geja said...

NALLA RASICHI ELUTHI IRUKKEL.. ATHUVUM PENGALUR;) ROMBA RASITHU IRUPEL POLA....

(MUTHAL MURAI UNGAL BLOG PADITHA ENNAKU MAGILCHI..)

தக்குடு said...

@ Geja - Thanks for your first visit & nice comment. :)

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)