Thursday, May 19, 2011

வேலை தேடும் வேலை

Part 1 படிங்கோ முதல்ல

நாளும் பொழுதும் வேகம் வேகமா ஓடித்தே தவிர உருப்படியான வேலை எதுவும் கிடைக்கலை. நானும் எத்தனை நாளைக்கு தான் பாணி பூரி சாப்பிடரவாளோட வாயை பாத்துண்டு பொழுதை கழிக்கர்து? சொல்லி வச்ச மாதிரி எல்லா கம்பெனிலையும் எனக்கு தெரியாத கேள்வியை மட்டுமே கேட்டுண்டு இருந்தா. (இருக்காதா பின்ன, ஊர்ல உள்ள மாமா/மாமிகளோட எல்லா சாபத்தையும் மொத்த கான்ட்ராக்ட் எடுத்து வெச்சுருக்கேனே!) ஒரு கட்டத்துல ராத்ரி தூக்கத்துல கூட “ஐ யம் தக்குடு! தின்னவேலி வெட்டி ஆபிசர், லுக்கிங் பார் ய குட் ஜாப்! மேனஜர் போஸ்ட் ஆல்ஸோ ஓக்கே!”னு பொலம்ப ஆரம்பிச்சுட்டேன்.

அம்மன் கோவில் கொடைவிழா பத்திரிக்கை மாதிரி என்னோட பயோடேட்டா இல்லாத கம்பேனியே இல்லைனு ஆயிடுத்து. ரகுமான் மியூஜிக் போட்டு குடுத்த ஒரு செல்போன் கம்பேனில சிம் கார்ட் விற்கும் வேலைக்கு கூட உள்ள நுழைஞ்சு பாத்தேன், கன்னடம் தெரியலைனு சொல்லி ' நோ' சொல்லிட்டா! லூசாடா நீ!னு எங்க அண்ணாச்சி காய்ச்சி எடுத்துட்டான். 'தாட்பூட் தஞ்சாவூர்!'னு கோவம் வந்தா கத்துவானே தவிர என் மேல அவனுக்கு பாசம் ஜாஸ்தி.

ஐயப்ப படி பூஜைல "ஒன்னாம் திருப்படி சரணம் பொன்னயப்பா"னு பாடர மாதிரி எங்க போனாலும் மொதல்ல ஒரு எழுத்து தேர்வு அப்புறம் 3 - 4 ரவுண்ட் நேர்முகம்/மறைமுகம் எல்லாம் வரும். ரெண்டு மாசமா படை எடுக்கர்தால உள்ள நுழைஞ்ச உடனேயே சரணம் போட ஆரம்பிச்சுருவேன். என்னிக்கும் இல்லாத திருநாளா ஒரு கம்பேனில எனக்கு தெரிஞ்ச கேள்வியை மட்டும் பிரிண்ட் பண்ணி குடுத்த மாதிரி ஒரு டெஸ்ட் குடுத்தா. "அகரமுதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி! டைண் டைண் டைண்!"னு எனக்கு பாடனும் போல இருந்தது. சீக்கரமே டெஸ்ட் எழுதி முடிச்சதால அங்க இருந்த ஹெச் ஆர் பிகர் ஏன் லைட்டா லிப்ஸ்டிக் அடிச்சுண்டு இருக்கா?னு ரொம்ப தீவிரமா யோசிச்சுண்டு இருந்தேன். ‘கிக் பாக்ஸிங்’ மாதிரி எல்லா ரவுண்டையும் முடிச்சு ஒரு பெரிய தலையோட பேசர்துக்கு போயாச்சு. பாக்கர்துக்கு நன்னா சிரிச்ச முகமா இருந்தார். என்னமோ காதலை சொல்ல தவிக்கும் காதலர்கள் மாதிரி ஹலோ! ஹவ் ஆர் யூ? எல்லாமே ரெண்டு பேரும் ஒரே சமயத்துல சொல்லிண்டோம். இது கதைக்கு ஆகாது!னு முடிவு பண்ணி, நீங்க முதல்ல சொல்லுங்கோ!னு கூலா சொல்லிட்டேன். அவருக்கு பயங்கர ஆச்சரியம் & சிரிப்பு.



பெரியதலை & தக்குடு...:)

உக்காச்சுண்டு இருத்த சேர்ல ஆடிண்டே நெஞ்சுல கை வெச்சுண்டு நர்சரி ஸ்கூல் குழந்தையாட்டமா அழகா சொன்னார். சிரிச்சமுகத்தோட டை கட்டின அந்த எஜமான் சொன்னதை எல்லாம் கை கட்டி உக்காசுண்டு இருந்த நான் ரசிச்சு கேட்டேன். அவர் சொன்னதுலேந்து அந்த ஆபிஸ்ல சுமாரா ஒரு 500 பேருக்கு அவர்தான் நாட்டாமைனு புரிஞ்சது. அவர் எல்லாம் சொல்லி முடிச்சதுக்கு அப்புறம் "ஹை! ஐ யம் சஞ்சய்ராமசாமி!" ஸ்டைல்ல நான் பேச ஆரம்பிச்சேன். எனக்கும் என்னோட தோஸ்த் ப்ளவுஸ் சங்கரனுக்கும் பொம்ணாட்டிகளுக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டருக்கு ‘கைனகாலஜிஸ்ட்’னு கூட சொல்ல தெரியாது. என்னமோ ‘லேடிஸ்’ டைலர் மாதிரி ‘லேடிஸ்’ டாக்டர்னு தான் சொல்லுவோம் அந்த அளவுக்கு இங்கிலீபீஷ்ல பெரிய அப்பாடேக்கரா இருந்தாலும் அதை எல்லாம் வெளில காமிச்சுக்காம நம்ப விபா அக்கா மாதிரி "ஜப்பான்ல ஜாக்கிஜான் கூப்டாங்க, அமெரிக்கால மைக்கேல் ஜாக்சன் கூப்டாங்க!"னு அள்ளிவிட்டேன். எல்லாத்தையும் கேட்டுட்டு "செம்மொழி குறித்து தனிகுழு விவாதிக்கும்! கனிமொழி பற்றி பொதுகுழு முடிவெடுக்கும்!"னு நம்ப தாத்தா ஸ்டைல்ல எதோ சொல்லிட்டு ஹெச் ஆர் பிகரை பார்த்து கைகாட்டிட்டு அந்த பெரிய தலை போய்டார்.

காத்தால இருந்த அதே ஹெச் ஆரும் நானும் ஒரு கண்ணாடி கூண்டு மாதிரி இருந்த ரூம்ல சம்சாரிக்க ஆரம்பிச்சோம். இந்த தடவை ஒழுங்கா லிப்ஸ்டிக் அடிச்சுண்டு வந்துருந்தா என்பதை தமிழ் கூறும் நல்லுலகுக்கு சொல்ல தக்குடு கடமைபட்டுள்ளான். கூண்டுக்கு வெளில வைரமுத்து இருந்திருந்தா "கைவளை குலுங்கும் கண்மணியே! உனைகண்ணாடி கூண்டுக்குள் அடைத்தது யாரடி? யூகங்கள் பல செய்தும் பூகம்பம் மட்டும் எஞ்சுகிறது என் நெஞ்சில்"......னு பாட ஆரம்பிச்சு இருப்பார். இட்லி மாமியா இருந்தா ஒரு 'உ' கவிதையை அவுத்து விட்டுருப்பா..:)



கோட் போட்ட சப்பாத்தி...:)


“நீங்க என்ன எதிர்பாக்கறேள்?”னு கல்யாணப் பொண்ணோட தாய்மாமா மாதிரி அவங்க தான் ஆரம்பிச்சாங்க. “மூனு வேளை சாப்பாடு போட்டு முப்பது ரூபா தாங்கோ மூனு நாள் கண் முழிச்சு ஆணி பிடுங்கறேன்!”னு மனசுக்குள்ள சொல்லிண்டேன். அப்புறம் அவாளே ஒரு நல்ல தொகையை சம்பளமா சொல்லி தக்குடு வாழ்க்கைல விளக்கேத்தி வைச்சா. ‘செவ்வாய் புதன் வடக்க சூலம்’ அதனால வியாழக்கிழமைலேந்து வேலைக்கு வரட்டுமா?னு கேட்டேன் “பொன் கிடைச்சாலும் புதன் கிடைக்காது”(சோனா மிலேகா, புதவார் நயி மிலேகா) எல்லாம் அவாத்துல சொல்லிக்கமாட்டா போலருக்கு அதனால அவாளும் " வியாழக்கிழமை வாங்கோளேன்!!"னு சொல்லி வழியனுப்பி வைச்சா. வெளில வந்ததுக்கு அப்புறம் தான் நம்ப ஆபிஸ் எந்த இடத்துல அமைஞ்சுருக்குனு எனக்கு விளங்கித்து. வடக்கே இமயமலையும், தெற்கே இந்திய பெருங்கடலும்னு பள்ளிகூடத்துல நாம படிச்ச மாதிரி வலது பக்கம் சென்ட்ரல் மாலும், இடது பக்கம் கருடா மாலும்,ஒரு நடை எடுத்து வெச்சா பிரிகேட் ரோடு & கமர்ஷியல் தெரு என கலகலப்பான சூழ்நிலையோடு ரம்மியம் கொஞ்சும் அழகான ஒரு பிருந்தாவனம்னு சொன்னா அது மிகையாகாது.

இந்த மால் எல்லாமே புத்தி இல்லாம செலவழிக்கும் வடக்கத்தி சப்பாத்திகளை கணக்கு பண்ணி கட்டிவெச்சுருக்கும் மாயலோகம். 50 பைசாவுக்கு ‘வைராவி அண்ணா’ டெண்ட் கொட்டாய்ல அச்சுமுருக்கு வாங்கி சாப்பிட்ட நம்ப மாதிரி அரைடிக்கெட்டுகளுக்கு எல்லாம் ஒத்து/ நாயனம் எதுவுமே வராது. கரும்பு ஜூஸுக்கு 40 ரூபா குடுக்கர்துக்கு தக்குடு என்ன அகர்வாலாத்து சமத்துகுடமா? இருந்தாலும் பொழுது போகாதபோதெல்லாம் அங்க போய் எத்தனை சமத்துகள் காசை கரியாக்கிண்டு இருக்கு?னு பாத்துட்டு வருவோம். சுருக்கமா சொன்னா ‘சமைத்துப்பார்’ புஸ்தகம் மாதிரி தான், எந்த புஸ்தகத்துலையும் சமைச்சுட்டு சாப்பிடு!னு போடவே மாட்டான். லதாஜி நன்னா பாத்துக்கோங்கோ! இங்க சமையல் ப்ளாக் பத்தி தக்குடு எதுவும் சொல்லலை...:)

ஆபீஸுக்கு உள்ள எப்பிடி இருந்தது தெரியுமோ????.......

(கனவுகள் வளரும்)

30 comments:

ஆயில்யன் said...

//பெரியதலை & தக்குடு...:)/

பெரிய தலை - ஃபிகர் இல்லியா?
நல்லா யோசிச்சு சொல்லுங்க பாஸ் நாங்க வெயிட் பண்றோம்!


//“நீங்க என்ன எதிர்பாக்கறேள்?”னு கல்யாணப் பொண்ணோட தாய்மாமா மாதிரி அவங்க தான் ஆரம்பிச்சாங்க//

தாய்மாமா - டெரர் பார்ட்டீ நம்பர் 1 #இந்த தாய்மாமன்களே இப்படித்தான் !

Chitra said...

ஆபீஸுக்கு உள்ள எப்பிடி இருந்தது தெரியுமோ????.......


..... முதல் பதிவுக்கும் - அதன் தொடருக்கும் - இத்தனை நாள் ஆச்சு... இப்போ இந்த கேள்விக்கு பதில் எப்போ வருமோ? ம்ம்ம்ம்.....

sundar said...

தக்குடு ரெம்ப நாளா ஆளைக்காணும்.ஒட்டகம் எல்லாம் அங்க நல்லா இருக்கா? பிகர் லிப்ஸ்டிக் பத்தி நல்ல ஆராய்ச்சி.shopping mall கட்டி சம்பாதிக்கர பணத்தைக் கொள்ளை அடிக்கும் கும்பல் பத்தி ஒரு தனிப்பதிவே போடலாம்.

கௌதமன் said...

உம் ..... அப்புறம்?

சென்னை பித்தன் said...

கலர்ஃபுல்லா இருந்ததோ?இன்னும் எத்தனை நாள் காத்திருக்கணும் அதைத்தெரிஞ்சுக்க?

Shobha said...

மொத்தத்துல உன் பெங்களூர் எக்ஸ்பீரியன்ஸ் சூபெரப்பு

ஷோபா

Anonymous said...

ஏனுங்கண்ணா பெங்களுர் பத்தி எங்களுக்கும் தெரியும்ங்க,

Anonymous said...

ஏனுங்கண்ணா பெங்களுர் பத்தி எங்களுக்கும் தெரியும்ங்க, - கண்ணன்

Matangi Mawley said...

"அம்மன் கோவில் கொடைவிழா பத்திரிக்கை மாதிரி..." ... "அகரமுதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி!..."..."என்னமோ காதலை சொல்ல தவிக்கும் காதலர்கள் மாதிரி ஹலோ! ஹவ் ஆர் யூ? எல்லாமே ரெண்டு பேரும் ஒரே சமயத்துல சொல்லிண்டோம்..." ... "உக்காச்சுண்டு இருத்த சேர்ல ஆடிண்டே நெஞ்சுல கை வெச்சுண்டு நர்சரி ஸ்கூல் குழந்தையாட்டமா..."..."நீங்க என்ன எதிர்பாக்கறேள்.."? ..

sabaaaa! solli maalala! enna uvamai-ies! cha...! chance-illa! Semma comedy...

appa appa vairamuththu-va vera izhuththu vittirukkel...!

moththaththula vela paaththelaa illayaa?

lata raja said...

aamaam naan idhula engayirundhu vandhean? samaiyal blog paththi yezhudhalainnu enakku arikkai kuduththirukkaradhaala, aduththa post-kku munnottamnu ninaikkaraen:)
Kanavugal thodaruma?

Anonymous said...

Vairamuthu Kavidhai super

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//ஒன்னாம் திருப்படி சரணம் பொன்னயப்பா//
அடப்பாவி... கொஞ்ச நாளா இந்த பாட்டை மறந்து இருந்தேன்... ஞாபகப்படுத்தி விட்டுட்டியா... இனி எங்க வீட்டு ஸ்பீக்கர்ல நாலு நாளைக்கி இதான் ஓடும்... பாவம் ரங்க்ஸ்... :))

//சீக்கரமே டெஸ்ட் எழுதி முடிச்சதால அங்க இருந்த ஹெச் ஆர் பிகர் ஏன் லைட்டா லிப்ஸ்டிக் அடிச்சுண்டு இருக்கா//
ஆனாலும் உலக தைரியம்... இதுக்கெல்லாம் இருக்கு உனக்கு ஒரு நாள்... :)))))

//பெரியதலை & தக்குடு//
Titanic ஹீரோ மாதிரின்னா இருக்கு அது...:)))

//செம்மொழி குறித்து தனிகுழு விவாதிக்கும்! கனிமொழி பற்றி பொதுகுழு முடிவெடுக்கும்//
ஹா ஹா ஹா...:))

//இந்த தடவை ஒழுங்கா லிப்ஸ்டிக் அடிச்சுண்டு வந்துருந்தா என்பதை தமிழ் கூறும் நல்லுலகுக்கு சொல்ல தக்குடு கடமைபட்டுள்ளான்//
ஒண்ணும் பண்றதுகில்ல... உன்னை அந்த ஆண்டவன் தான் காப்பாத்தனும்...:))

//இட்லி மாமியா இருந்தா ஒரு 'உ' கவிதைய அவுத்து விட்டுருப்பா//
கவனிச்சுக்கறேன்... சமயம் வர்றப்ப...:)))

Vasagan said...

\ இந்த தடவை ஒழுங்கா லிப்ஸ்டிக் அடிச்சுண்டு வந்துருந்தா என்பதை தமிழ் கூறும் நல்லுலகுக்கு சொல்ல தக்குடு கடமைபட்டுள்ளான்.\
நல்ல வேலை , சொன்ன, இல்லை என்றால் எனக்கு தூக்கம் வந்துருக்காது .

\ஆபீஸுக்கு உள்ள எப்பிடி இருந்தது தெரியுமோ????.....\

Waiting.

வெங்கட் நாகராஜ் said...

Waiting to know!

:)))

தி. ரா. ச.(T.R.C.) said...

//“நீங்க என்ன எதிர்பாக்கறேள்?”னு கல்யாணப் பொண்ணோட தாய்மாமா மாதிரி அவங்க தான் ஆரம்பிச்சாங்க
இது தேவலை சில பேர் பொண்ணுபாக்க போகும்போது தாய் மாமா இல்லைன்னு வாடகைக்கு ஒரு நாய் மாமாவை கூட்டின்டு போவாங்க கேட்டா அண்ணா சென்டிமென்ட்ன்னு பில்டப் காட்டுவாங்க

SRINIVAS GOPALAN said...

interview போறப்ப hr போட்டுண்டு இருக்கற லிப்ஸ்டிக் எல்லாம் ஞாபகம் இருக்கு. வேலை விஷயமா என்ன கேட்டானு ஞாபகம் இருக்கா? இவ்வளோ distractionlayum கவனமா வேலை வாங்கினியே - சமர்த்து.

இராஜராஜேஸ்வரி said...

"கைவளை குலுங்கும் கண்மணியே! உனைகண்ணாடி கூண்டுக்குள் அடைத்தது யாரடி? யூகங்கள் பல செய்தும் பூகம்பம் மட்டும் எஞ்சுகிறது என் நெஞ்சில்"//
interesting.

பத்மநாபன் said...

பெங்களூர் பெங்களூர் வர்ணிப்பதற்கு பலமான பின்னணி இருக்கிற மாதிரி இருக்கு.. ஸோ எங்களுக்கு பிசி பேளா பாத் பெங்களூரில் தானா... வாழ்த்துக்கள்..

vidhas said...

Intersting post thakkudu,

மனம் திறந்து... (மதி) said...

//இட்லி மாமியா இருந்தா ஒரு 'உ' கவிதையை அவுத்து விட்டுருப்பா..:)//

:)))

//சுருக்கமா சொன்னா ‘சமைத்துப்பார்’ புஸ்தகம் மாதிரி தான், எந்த புஸ்தகத்துலையும் சமைச்சுட்டு சாப்பிடு!னு போடவே மாட்டான்.//

:)))
எனக்கு "Banking Law and Practice" எனும் popular book தான் நினைவுக்கு வருகிறது! Whatever is in Law cannot be practised and whatever is being practised cannot be brought under the purview of Law! :)))

Unknown said...

wow beautiful..color full

Unknown said...

eppadi ellam bitupotu velaila erukkaru officeru...

vanakkam officer..appdiey namakum oru job pathu potu kudunga..

Unknown said...

//இட்லி மாமியா இருந்தா ஒரு 'உ' கவிதைய அவுத்து விட்டுருப்பா//


ethai vanmaiyaga kandikirathu engal sangam.

Unknown said...

உம் ..... அப்புறம்?// athan thodarum pottutarey...

Unknown said...

ithana pesariye....post panni irukara picsku pic courtesy enga? ;)

RVS said...

நடுப்பர ஒரு கவிதை எழுதியிருக்கியே... அமர்க்களம் தக்குடு.. கல்லிடையின் வைரமுத்து நீ!
இவ்ளோ தைரியமா பிகர் பார்த்த கதையெல்லாம் எழுதறியே... உனக்கு யாரப்பா இன்ஸ்பிரேஷன்? ;-))

Anonymous said...

//“ஐ யம் தக்குடு! தின்னவேலி வெட்டி ஆபிசர், லுக்கிங் பார் ய குட் ஜாப்! மேனஜர் போஸ்ட் ஆல்ஸோ ஓக்கே!”னு பொலம்ப ஆரம்பிச்சுட்டேன். //

மனேஜர் போஸ்ட். அது சரி. ரொம்பத்தான் குசும்பு. அப்புறம் அது என்ன பொண்ணுங்க லிப்ஸ்டிக் பத்தி ரொம்ப பேசறே தக்குடு. அண்ணி கிட்ட போட்டுக் கொடுக்க நானே இருக்கேன். ஞாபகத்தில் இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

Ithaiyellaam pallaavaram kaaranga padippaangalaa:)

தக்குடு said...

@ ஆயிலு - :)) குசும்புயா உமக்கு!!

@ சித்ரா அக்கா - கேள்வி எல்லாம் பொதுகுழுல வெச்சு கேக்ககூடாது..:)

@ சுந்தர் சார் - :)) ரைட்டு வாத்தியாரே!

@ கெளதமன் - ராமாயண கதை கேட்ட குழந்தை மனசு அப்பிடியே இருக்கு உங்களுக்கு!..:P

@ சென்னை பித்தன் - இருங்கோ, சொல்ல வேண்டாமா? அதுக்குள்ள அவசரப்படக்கூடாது..:)

@ ஷோபா மாமி - :))

@ கண்ணாண்ணா - :))

@ மாதங்கி - எப்ப பாத்தாலும் வேலை பாக்கர்துக்கு நாம என்ன பெஷினா! ..:) பாராட்டுக்கு நன்னிஹை!

@ லதா மாமி - எழுதிட்டா போச்சு!!..:)

@ அனானி சார் - :))

தக்குடு said...

@ இட்லி மாமி - வரி வரியா ரசிச்சதுக்கு ரொம்ப சந்தோஷம். அடுத்த வாரமாவது உங்களுக்கு இட்லி நல்லபடியா வாய்க்கட்டும்...:P

@ வாசகன் மாமா - மாமி வெளுக்க போறா உங்களை...:))

@ வெங்கட் அண்ணா - :))

@TRC சார் - என்ன பண்ணர்து namba ரெண்டு பேருக்கும் போக்கிடம் கிடையாது..:)

@ கோபாலன் அண்ணா - வேலை விஷயமா எதோ கேட்டாளே!! சடக்நு ஞாபகம் வரமாட்டேங்கர்து..:)

@ ராஜி அக்கா - :))

@ பத்துஜி - :)) பெண்களூரை ரசிக்கதவா லோகத்துலையே இல்லை அண்ணா.

@ வித்யா அக்கா - :))

@ மதி - கரெக்டா பாயிண்டை புடிச்சீங்க!..:)

@ சிவா - ஹா ஹா :)

@ ரம்யா அக்கா - வந்தவுடனே குத்தம்தானா..:P

@ மைனர்வாள் - எனக்கு ஆசான் நீங்க தான்..:)))

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)