என்னோட பதிவுகள்ல வரக்கூடிய மாமிகளோட வித்தியாசமான பெயர்களுக்கு எல்லாம் "தக்குடு! இந்த மாமிக்கு ஏன் அந்த பேர்? அந்த மாமிக்கு ஏன் இந்த பேர்?"னு சந்தேகம் கேட்டு நெறையா பேர் மெயில்/மயில் எல்லாம் அனுப்பிண்டு இருக்கா. அதனால அந்த மாமிகளை பத்தி தனியா ஒரு பதிவு போடலாம்னு பொதுக் குழு தீர்மானம் பண்ணி இருக்கு.
1) ‘ஜம்போ’ ஜானகி மாமி
எனக்கு தெரிஞ்ச ஒரு வீரப் பெண்மணி, ஆள் சும்மா 6 அடி ஒசரத்துக்கு இருப்பா,50 வயசுன்னு சொல்லமுடியாத அளவுக்கு சுறுசுறுப்பு. மாமி! சாமி!னு நக்கல் நையாண்டி பண்ணும் விடலை பயலுகலுக்கு எல்லாம் இலவசமா கடவாபல்லை எடுத்து கைல குடுக்கும் சிம்ம சொப்பனம். ஒரு தடவை மாமி ஆத்தங்கரைல குளிச்சுட்டு வந்துண்டு இருக்கும் போது ஒரு திருடன் சைக்கிள்ல வேகமா வந்து மாமியோட கழுத்து செயினை இழுக்க முயற்சி பண்ணினான். இழுக்க வந்த கையை புடிச்சி ஒரு இழு இழுத்து தூக்கி எறிஞ்சுட்டா. அவனுக்கு வலது கைல ப்ராக்சர் ஆகி அதுக்கு அப்புறம் பஜார்ல மாமியை பாத்தா லுங்கியை இறக்கி விட்டு பவ்யமா வணக்கம் சொல்லிண்டு இருக்கான். சித்ரா பெளர்ணமி தேர்ல ஸ்வாமி 2 நாள் ஆகியும் நிலைக்கு போகாம இருந்த போது கோவத்தோட தெருல வந்து “பெருமாள் அங்க நடுத்தெரு நாராயணனா நின்னுண்டு இருக்கார், இங்க எல்லாருக்கும் ‘கோலங்கள்’ கேக்கர்தாடீ”னு சொல்லி அவாத்து வழியா போன கேபிள் ஒயரை அறுத்து எறிஞ்சுட்டா.. மாமி தலைமைல 30 மாமி போய் தேரை இழுக்கவும் பெருமாள் நிலைக்கு வந்துட்டார். “ஓஓ! ஒயரை குரங்கு அறுத்துடுத்து போலருக்கே!! அபிக்கு அப்புறம் என்னடி ஆச்சு?!”னு அடுத்த நாள் கதையவே மாத்திட்டா.
2) கோவில் மாமி
மாமிக்கு ஒரே புள்ளைதான், அவனும் சிங்கப்பூர்ல இருக்கான். அவாத்து கல்யாணத்துக்கு எம்.எஸ் அம்மா தம்பதி சமேதரா வந்த போட்டோவை அவாத்துல பாக்கலாம். மாமி எப்போ எந்த கோவில்ல இருப்பானே சொல்லமுடியாது. ஒரு கோவில்ல கூட தீபாராதனையை மிஸ் பண்ணமாட்டா. மாமி எல்லா கோவிலும் போய்ட்டு வரவரைக்கும் அவாத்து மாமா திண்னைல உக்காந்துண்டு போரவரவாளை வம்புக்கு இழுத்துண்டு இருப்பார்( நம்ப RVS அண்ணா மாதிரி). மாமி மூச்சு விட்டாலே எதாவது ஒரு ஸஹஸ்ரனாமமாதான் இருக்கும். “உங்களுக்கு எல்லாம் டேரக்ட் வைகுண்டம் தான் மாமி, ட்ரான்சிட் போய் துபாய்ல கனெக்டிங் ப்ளைட் எல்லாம் பிடிக்க வேண்டாம். ஸ்பெஷல் புஷ்பக விமானம் (புஷ்பேக் சீட்டோட) வந்து கூட்டிண்டு போகும்!”னு நக்கல் அடிச்சா அந்த மாமி வெக்கத்தோட சிரிப்பா. மாமிட்ட உள்ள ஒரே கெட்ட பழக்கம் எல்லாருக்கும் தெரியாத ஒரு ஸஹஸ்ரனாமத்தை சொல்லி மத்த மாமிகளை வாய் பாக்க வெச்சுடுவா. (லேட்டஸ்டா நந்திகேஸ்வர ஸஹஸ்ரனாமம் ஆரம்பிச்சு இருக்கா)
பெங்களூர்லேந்து ஒரு தடவை நான் ஊருக்கு போன போது பெருமாள் கோவில்ல இதே கூத்து நடந்துண்டு இருந்தது. கருட பஞ்சகம் சொல்லிண்டு இருந்த நம்ப மாமியை மத்த மாமிகள் எல்லாம் பரிதாபமா வாயை பாத்துண்டு இருந்தா. நான் மாமிகளுக்கு நடுல போய் உக்காசுண்டு மெதுவா ஒரு 4 ஸ்லோகம் சொன்னேன். மாமிக்கு ஷாக் ஆயிடுத்து, தக்குடு! இது என்ன ஸ்லோகம்? தெரிஞ்ச மாதிரியும் இருக்கு, ஆனா தெரியலையே நேக்கு?னு கேட்டா (பெங்களூர்ல இருக்கும் போதே விஷ்ணு & லலிதா ஸஹஸ்ரனாமத்துல அர்த்தம் மாட்ச் ஆகர மாதிரி ஒரு 20 ஸ்லோகத்தை எடுத்து 50 - 50 ரேஷியோல மிக்ஸ் பண்ணிட்டேன்).
இது வைஷூ ஸஹஸ்ரனாமம் மாமி! உங்களுக்கு தெரியாதா? கர்னாடகால ஒரு பெரிய மஹான் சொல்லிகுடுத்தார். இமயமலைல கொஞ்ச வருஷம் தபஸ் பண்ணினதால வைஷ்ணவியை ‘வைஷூ’னு தான் கூப்டுவார். அம்பாளை அவர் பார்த்த பரவசமான அனுபவத்தை சொல்லி இருக்கார். அம்பாள் பச்சக் கிளி மாதிரி இருந்தாளாம்!னு சொல்லிட்டு மாமியை பாத்தா, மாமி பக்தி பரவசத்தோட, “எனக்கு சொல்லி தரகூடாதா?”னு பிராண்ட ஆரம்பிச்சுட்டா. எல்லாரோடையும் சேர்ந்து ஸ்லோகம் எல்லாம் சொல்லுங்கோ, ஒரு சுபவேளைல சொல்லிதரேன்!னு சொல்லிட்டு எஸ்கேப் ஆயிட்டேன். இப்பவும் ஊருக்கு போன போது, “தக்குடு! அந்த வைஷூ ஸஹஸ்ரனாமம்!”னு மாமி என்னை பிடிச்சுண்டுட்டா. என்னோட ப்ளாக்கை அவா படிக்காத வரைக்கும் ஷேமம்.
3) ‘ஹைப்பர்லிங்க்’ மாமி
இந்த மாமிகிட்ட சர்வ ஜாக்ரதையா இருக்கனும், எதோ ஞாபகத்துல யாரை பத்தியாவது உளறி வெச்சோம்னா, இன்னொரு சமயத்துல கரெக்டா அந்த பார்ட்டிகிட்ட பேசிண்டு இருக்கும் போது பத்தவெச்சுட்டு போயிடுவா. எவ்ளோ கட்டுப்பாட்டோட இருந்தாலும், தன்னையும் அறியாம எதையாவது இந்த மாமிகிட்ட மத்த மாமிகள் உளறி வெச்சுட்டுவா.அதோட பலனை நன்னா அனுபவிக்கவும் செய்வா. சில சமயம் நல்ல விஷயத்துக்கும் ஹைப்பர்லிங்க் குடுக்கர்துனால இந்த மாமியை யாரும் அதிகம் வைய்யமாட்டா. (இந்த மாமியை பத்தி எழுதும் போது எனக்கு TRC மாமா ஞாபகம் வரவே இல்லை..:)
4) சினிமா மாமி
பாலும் பழமும்-ல ஆரம்பிச்சி எந்திரன் வரைக்கும் இந்த மாமி பாக்காத சினிமாவே கிடையாது. படத்தை பாத்துட்டு வந்து குடும்பத்தோட பாக்க போலாமா? பொம்ணாட்டிகள் மட்டும் போலாமா? மாமாக்கள் மட்டும் போலாமா?னு அழகா ரேட்டிங் போட்டு சொல்லிடுவா. தெருல யாராவது சினிமா போகர்தா இருந்தா இந்த மாமிகிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்காம போகமாட்டா. இந்த மாமி தலைமைல எங்க தெரு வானரப் படை சினிமா பாக்க போனப்பதான் தமிழ் உம்மாச்சி படம் மலையாள உம்மாச்சி படமா மாறி காமெடி ஆயிடுத்து.
5) ‘டேட்டாபேஸ்’ மாமி
ஆரக்கிள் டேட்டாபேஸ் எல்லாம் இந்த மாமி முன்னாடி 50 அடி தள்ளி தான் நிக்கமுடியும். அபாரமான ஞாபகசக்தி, நல்லது ஞாபகம் இருக்கோ இல்லையோ வேண்டாதது எல்லாம் கரெக்டா ஞாபகம் இருக்கும். முப்பது வருஷமா தெருல நடந்த எல்லா விஷயமும் தேதி வாரியா எப்ப கேட்டாலும் 'டாண்' 'டாண்'னு சொல்லுவா. நான் வைக்கோல்போருக்கு பக்கத்துல கொளுத்திட்டு அம்மா கையால வெளக்கமாத்து அடி வாங்கினது, எங்க அண்ணா கடைசியா எழுதின ஹிந்தி பரிட்சை, KTC மாமா! மாமிக்கு தெரியாம ராத்ரி கரகாட்டம் பாத்துட்டு வந்து ஆத்துக்குள்ள போகமுடியாம ராத்ரி முழுசும் வாசல்ல நின்னது, தெரு மாமாக்கள் கல்யாணத்துக்கு முன்னாடி சைட் அடிச்ச பொம்ணாட்டிகளோட விபரம், தெருல யாரு எந்த வருஷம் பாஸ்/பெயில் ஆனா, கல்யாணி மாமியோட நாத்தனாரோட,மச்சினரோட,ஷட்டகரோட பொண்ணுக்கு முதல் குழந்தை பையனா/பொண்ணா? போன தீபாவளிக்கு 'குண்டல' கோமா மாமி எடுத்துண்ட பட்டுப் புடவையோட பார்டர்ல மயில் தலைல கொண்டை இருந்துதா இல்லையா? இந்த மாதிரி எந்த விஷயமும் அந்த மாமிக்கு மறக்காது. தப்பித் தவறி “ஞாபகம் இல்லையே?”னு அந்த மாமி வாய்ல வந்துடுத்துன்னா தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்விடுத்துனு அர்த்தம்.
31 comments:
me the first
endrum anbudan
Boston sriram
இன்னைக்கும் வட போச்சே.. (-:
// ‘ஜம்போ’ ஜானகி மாமி//
ஏதோ சர்கஸ் கம்பெனி பேரு மாதிரி இருக்கேன்னு பயத்துலயே படிச்சேன்... ஆனா பொருத்தம் தான்னு புரிஞ்சு போச்சு...:)
//புஷ்பக விமானம் (புஷ்பேக் சீட்டோட)//
LOL ...:)
//வைஷூ ஸஹஸ்ரனாமம் மாமி//
நோ கமெண்ட்ஸ்...:)
//ஒரு பெரிய மஹான் சொல்லிகுடுத்தார். இமயமலைல கொஞ்ச வருஷம் தபஸ் பண்ணினதால வைஷ்ணவியை ‘வைஷூ’னு தான் கூப்டுவார்//
அந்த மகன் பேரு "த" ல ஆரம்பிச்சு "டு" ல முடியும் தானே... எனக்கு கூட தெரியும்.. Kanataa நியூஸ்ல பாத்தேன்...:)
//‘ஹைப்பர்லிங்க்’ மாமி//
இதுல உள்குத்து ஒண்ணுமில்லையே...சும்மா கேட்டேன்...
//நான் வைக்கோல்போருக்கு பக்கத்துல கொளுத்திட்டு அம்மா கையால வெளக்கமாத்து அடி வாங்கினது,//
நீயுமா... என் தங்கை ஒரு வாட்டி மில்லுல பஞ்சுல நெருப்பு வெச்சுட்டு நல்லா வாங்கி இருக்கா... ஹா ஹா ஹா... இந்த வீட்டுல சின்னதுகளே இப்படி தான் போல...:)
//தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்விடுத்துனு அர்த்தம்//
இன்னைக்கி கனவுல பாஞ்சாலி கண்ணை குத்துவா போ...:)
Thakkudu idai poda marandadal nan add seygiren.
All characters appearing in this work are fictitious. Any resemblance to real persons, living or dead, is purely coincidental.
Nandri! Vanakam!
-vgr
தப்பித் தவறி “ஞாபகம் இல்லையே?”னு அந்த மாமி வாய்ல வந்துடுத்துன்னா தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்விடுத்துனு அர்த்தம்.
.....‘டேட்டாபேஸ்’ மாமி போல, தெருவுக்கு தெருவுக்கு - நம்ம ஊரு பக்கம் ஒரு மாமி இருப்பா.... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....
நன்னா எழுதி இருக்கேள், தக்குடு! அந்த மாமி கையாலேயே பாதாம் ஹல்வா கிண்டி தரச் சொல்லோணும்.
ஒவ்வொரு மாமியா படிச்சுண்டு வரச்சே எதிலயாவது நானும் இருக்கேனோன்னு தோணறதே:)
எனக்கு டேட்டா விஷயம் சம்பந்தம் இல்லை. ஹைப்பர் லின்க்? கொஞ்சம். தக்குடூஊஊஊஊஊஊ உன்னை என்ன பண்ணலாம்:) நன்னா இரு ராஜா.
no no i no agree
mee the first..
erunga padichtu vanthu tamila coment podren.
அம்பி நீ என் நன்பேண்டா..
எவ்ளோ சமத்தா எழுதி இருக்க
தெரியுமா
அப்பாவி கண்ணே பட்டுடும் போல இருக்கு
நன்னா வரணும் அம்பி
எல்லா கேரக்டர் பத்தியும் சொன்ன நீ ”பிளவுஸ் சங்கரன்” பத்தி ஏன் சொல்லலை. அது உன்னோட Pseudo Name என்கிறதால விட்டுட்டியா?
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
ரொம்ப ரொம்ப அனுபவிச்சு படிச்சேன் தக்குடு.. ;-)
திண்ணையில உட்கார்ந்து வம்பளக்கரதுல ஒரு அளவிலா ஆனந்தம் இருக்கு... மன்னார்குடி டேஸ்-ல ஒரு அஞ்சு பார்ட் சீரீஸ்-ஆ போடலாம்.. அவ்ளோ கதைகள் இருக்கு..
கதை மாந்தர்கள்ன்னு மாதர்களைப் பற்றி மட்டும் சொல்லிட்டு.. ஸ்ரீராம் சொல்றா மாதிரி ப்ளவுஸ் சங்கரன் பத்தியெல்லாம் சொல்லலையே.. ;-) ;-)
Kalakal details....i think 'jambo janaki maami' pathi padicha pothu yenaku 'avai shanmuki' kamal taam neyabakam vanthathu...
kovi mami & Database maami kalakal...athoda unnoda 'vaishu sahasranaamam' super LOL :-)
keep going......:)
'Techops' Mami
(இந்த மாமியை பத்தி எழுதும் போது எனக்கு TRC மாமா ஞாபகம் வரவே இல்லை..:)
நீ மாமிகளைப் பத்தி எழுத ஆரம்பிச்சா உனக்கு அம்மா அப்பாவே ஞாபகம் வராது இதுலே வேறே TRC uncle ஞாபகம் வருமாக்கம். ராவுத்தரே ராப்பட்டினியாம் இதிலே குதிரைக்கு கோதுமை அல்வா கேட்டா மாதிரி இல்லே இருக்கு.ஆமாம் நான் கல்லிடை வந்த போது இந்த மாமிகளில் ஒருத்தரை கூட introduce பண்ணவே இல்லையே
கதை மாமிகள் ஜோர் ....
மடிசார் பேரேடே நகைச்சுவையா நடத்திட்டே தக்குடு
வரப்போற மாமியோட கதையும் போட்டுருக்கிலாமே ........
ரசிச்சுப் படிச்சேன் ! பிரம்மா இந்த மாமிகள் எல்லாரோடும் கலவையா தக்குடுவுக்குன்னு ஒரு மாமிய பூமிக்கு அனுப்பி இருக்கார் , சீக்கிரமே கண்டுபிடிப்போம் . அப்புறம் இருக்கு கச்சேரி :)
ஷோபா
மாமிகளின் பெயர்களும் அதற்கான விளக்கங்களும் நகைச்சுவை ததும்ப இருந்தது. நாங்கள் கூட ஒரு மாமிக்கு பெயர் வைத்திருந்தோம் – Spectrawide மாமி!
இவ்வளவு ”தெளிவா” மாமிகளை துவைத்துஅலசி
காயப்போட்ட தக்குடு சாரே உங்களுக்கு ஒருகிலோ
திருன வேலி அல்வா பார்சல்.
//Lakshmi said...
இவ்வளவு ”தெளிவா” மாமிகளை துவைத்துஅலசி
காயப்போட்ட தக்குடு சாரே உங்களுக்கு ஒருகிலோ
திருன வேலி அல்வா பார்சல்//
Oh..is this what called "thirunalvelikke alvaavaa?"...:))
Sorry thakkudu... couldn't resist adding this comment... (ini varalai...:)
correct avai shanmughi nyabagam thaan vanthathu. oorukku thirumbi pona enna pandradhaga uthesam? jumbo maami kovichukka maataala:)) sasisuga.
Interesting characters...
தக்குடுவுக்கு வரப்போற மாமி எப்படியோ....:)) ஸ்ரீ இது ஒன்லி மாமிகள் பத்தின பதிவு ப்ளௌஸ் சங்கரன் பத்தி தக்குடு ரொம்ப விளக்கமான பதிவு போடுவான். தக்குடு கவனிச்சியோ trc மாமா நீ எந்த மாமி யையும் அறிமுகபடுத்தலைன்னு கேக்கறார். உமா மாமிக்கு ஒரு போனை போடு சீக்கிரம் ...:))
அன்புடன்
சுபா
@ பாஸ்டன் நாட்டாமை - :))
@ அடப்பாவி தங்கமணி - மஹானோட பேரை வெளில சொல்லாதீங்கோ!!..:) ஆமாம் சின்னதுகள் எப்போதும் விளையாட்டுப் பிள்ளைகள் தான்..:)
@ vgr - நண்பேன்ன்ன்டா!!...;))
@ சித்ரா அக்கா - பாதாம் ஹல்வாதானே? கிண்டி தந்துட்டுத்தான் மறுஜோலி பார்ப்பா அந்த மாமி..:))
@ வல்லிம்மா - நீங்களா எதாவது நெனச்சுண்டா அதுக்கு தக்குடு பொறுப்பு கிடையாது..:)
@ சிவா - ரொம்ப சந்தோஷம்பா!..:)
@ பாஸ்டன் நாட்டாமை - ப்ளவுள் சங்கரன் தனி பதிவில் வருவார்.
@ RVS அண்ணா - வம்பளப்பு எப்போதுமே ஆனந்தம் தான்..:)
@ 'Techops'மாமி - நன்னிஹை!..:)
@ TRC மாமா - உமா மாமி கிட்ட சொல்லட்டுமா இதை..:PP
@ ரசிகமணி - வில்லங்கமா எல்லாம் திருப்பக் கூடாது..:)
@ ஷோபா மாமி - ஹா! ஹா!....:))
@ வெங்கட் சார் - அந்த பேருக்கு என்ன விளக்கம்??..;PP
@ லெக்ஷ்மி மேடம் - உங்களோட ஹல்வா கிட்டியது..:)
@ இட்லி மாமி - :))
@ சசி மேடம் - அதெல்லாம் மாமியை சமாளிச்சுடலாம்..:)
@ இங்கிலிபீஸ் கவிதை - ;))
@ சுபா மேடம் - உமா மாமிக்கு போன் போட்டாச்சு, நீங்களும் ஒரு வார்த்தை சொல்லிடுங்கோ!!..:)
@ தக்குடு என்னை போட்டுக் கொடுக்கிறதுக்கு ஒரு கூட்டத்தையே வளைச்சு வெச்சுருக்கியே.உன்னை தனியா கவனிச்சுக்கிறேன்
@ சுபா தக்குடு நல்ல பையன் நல்லா எழுதறான் போறுமா ?
கல்லிடைகுறிச்சி மாமிகள் எல்லோருமே கொஞ்சம் terror தான். ஜாக்ரதைய deal பண்ணனும் :)
jumbo mami, perallam engarthu than pudikaroyo!!! LOL . ennumamathala thakkdudu, see my comment in your last post.
தக்குடுகிட்ட பாத்துப் பழகணும். நமக்கெல்லாம் என்ன பேரோ :) அபிராமிதான் காப்பத்தணும்!
@ TRC மாமா - இவா எல்லாருக்கும் உங்களை பத்தியும் தெரியும் அதான்!!..;))
@ கோபாலன் அண்ணா - ஆமாம், கொஞ்சம் ஜாக்ரதையாதன் இருக்கனும்..:)
@ வித்யா அக்கா - கொஞ்சம் நக்கல் தான் எனக்கு உண்டு, அதனால பேர் மாத்தலை..:)
@ கவினயா அக்கா - உங்க பேர் என்ன சொல்லட்டுமா??...:PP
அக்ரஹாரத்தை ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வந்த திருப்தி! ஹப்பா....! பேஷ்! பேஷ்! அப்படியே, KK மாமி (அதான்...கரண்டியும் கையுமா எப்பவும் இருப்பாளே!) பற்றியும் எழுதி இருக்கலாமே தக்குடு! சரக்குக்கும், "inspiration" க்கும் தான் இட்லி மாமி இருக்காளே!
நல்ல காமெடி தக்குடு! ஜம்போ ஜானகி மாமி கதையப் படிச்சு சிரிச்சு கண்ணிலே தண்ணியே வந்துடுத்து! :)
padichchapram- intha aththana maami kailaiyum neenga maattinel-naa ennavaagum-nu oru flash! thillaana mohanaambaal-la vaiththi adi vangara kadesee scene takku-nu vanthuttu pochchu, mind la!
ennoda favourite 'jumbo' maami thaan! :D superb description!
Thanks and I have a tremendous proposal: What Home Renovation Expenses Are Tax Deductible average remodel cost
Post a Comment
யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)