Thursday, January 6, 2011

சச்சு மாமி

உங்கள் அபிமான ப்ரவுஸர்களில் உலகெங்கும் பொங்கல் வெளியீடு "ப்ளவுஸ் சங்கரன் II".


வரிசையா உக்காசுண்டு அவசர அவசரமா இன்ஜின்ல கரியை அள்ளிபோட்டுக்கர மாதிரி சாம்பார் ரசம் பாயாசம் எல்லாத்தையும் எதோ கடைசி பெட்டியை துரத்தி பிடிச்சி ஏறப் போறவன் மாதிரி இயந்திரத் தனமா சாப்பிடும் ந(ர)கர பந்திலேந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு பந்தி போஜனம் பத்தி உங்களுக்கு தெரியுமா?

கல்லிடை நகரத்துக்கு கல்யாணபுரி!னு ஒரு அழகான பெயர் உண்டு. லட்ச ரூபா குடுத்து மண்டபம் எல்லாம் வாடகைக்கு எடுக்க மாட்டா, சில லட்சங்கள் குடுத்து கான்ட்ராக்ட் எல்லாம் விடமாட்டா. தெருல இருக்கும் பண்ணையார் மாமாவுக்கு 3 வீடு இருக்கும்(வீடு மட்டும்), அதுல 2 வீட்டை எப்போதும் தெருக்காரா கல்யாணத்துக்காகவே ஒதுக்கி வெச்சுருப்பார். அந்த ரெண்டு நாளைக்கு ஆகும் கரண்ட் பில் மட்டும் இவா கட்டினா போதும். 2 ஆத்துல ஒரு ஆம் மாப்பிள்ளையாத்துகாரா வந்து இறங்கர்த்துக்கு, இன்னோன்னு பந்தி நடத்த. முக்கியமான சமையல் சாமான் எல்லாம் உரல்ல போட்டு அழகா இடிச்சு அந்த கல் உரல் வாசனையோட சாப்பாடு தயார் பண்ணுவா.



RVS அண்ணா! நல்ல பிள்ளையா லட்சணமா உரலை மட்டும் பாருங்கோ!!...:)

சமையலுக்கு வரும் மாமா சமையல் மட்டும் தான் பண்ணுவார், பரிமாறர்து எல்லாம் தெரு மாமாக்கள் & பசங்க தான். பிரமாதமா சமைச்சா மட்டும் போதாது, அதை அழகா பரிமாறர்தும் ஒரு கலை. பந்தில பரிமாறும் போது வரிசை க்ரமம் மாறாம பரிமாறனும், பட்டுப் பாவாடை போட்ட 'பவ்யாகுட்டி' கேட்டானு பல்லை காட்டிண்டு நட்ட நடுல பாயாச வாளியை கொண்டு போக கூடாது. ஒரு பதார்த்ததோட இன்னொன்னு கலக்காம போடனும், சூடான ரசம் எல்லாம் கைல படக்குனு விட கூடாது, எல்லாருக்கும் சிரிச்ச முகத்தோட பரிமாறனும், சாப்டர்துக்கு கொஞ்சம் நேரம் குடுக்கனும்,கை காயர அளவுக்கு அசமந்தமா போடகூடாது.

வலது பக்கம் ரோஜா பூ வெச்ச காயத்ரியை பாத்துண்டே பாலா மாமி கைல சாம்பக்காய் கூட்டை போடகூடாது(ஆயிலு! புரிஞ்சுதா?). சாதம் எல்லாம் பரிமாறும் போது இலைல சிதறாம பாந்தமா போடனும், பரிமாறும் கரண்டி இலைல படாம பரிமாறனும் அதே சமயம் ரொம்ப உசரத்துலேந்து போட்டு சாப்டரவாளோட பட்டுப்புடவை தலைப்புல தெளிக்கர மாதிரியும் ஆக கூடாது. வேகமா பரிமாறிண்டு போகும் போது நிலை தடுமாறி "பொதகடீர்"னு வாளி சகிதமா இலைல விழாம அழகா போகனும், களத்துல இருக்கும் இலையை காலால் மிதிக்காம சில்வண்டா நகரனும்.

இது எல்லாம் போக கல்லிடைல சிலபல கூத்து எல்லாம் பந்தில வச்சு ஜாலியா நடக்கும், கோபமும் படமுடியாம சிரிக்கவும் முடியாம மாட்டிண்டவா அசடு வழிஞ்சுண்டு முழிப்பா(நம்ப LK மாதிரி). ஒவ்வொரு மாமா ஒவ்வொரு ஐயிட்டம் பரிமாறர்துல கெட்டிக்காராளா இருப்பா, அவாளோட ஏரியா தவிர அடுத்த விஷயத்துல தலையிட மாட்டா. எதோ யுத்தத்துக்கு தயார் ஆகர மாதிரி வாளி கரண்டி எல்லாம் அவாளே எடுத்து ரெடியா வெச்சுப்பா. எங்க ஊர்ல் பொண்ணை கல்யாணம் பண்ணின்ட மாப்பிள்ளைகள் யாராவது பந்தில சிக்கினான்னா தொலஞ்சான். அதுவும் எங்க தெருல பொண்ணு எடுத்தான்னா அவர் எங்க தெருவுக்கே மாப்பிள்ளை . நம்ப மாப்பிள்ளை கோவமே படமாட்டார்! சிரிச்சமுகம்! குணம் கெட்டவர் கிடையாது!னு முதல்லையே ஒரு மாமா பிட்டு எல்லாம் போட்டு பலிக்கு ஆட்டை தயார் பண்ணிடுவார்.

ஸ்டைல்’ மீனா மாமியோட மாப்பிள்ளை(மெட்ராஸ்காரர்)விவரம் தெரியாம கோவில் விஷேஷத்துல சாப்பிட பந்தில உக்காந்துட்டார், அவ்ளோதான்! எல்லா மாமாக்களும் “மாப்ளையை கவனி! மாப்ளையை கவனி!”னு சொல்லி நல்ல கவனிச்சுட்டா. அதுவும் பாயாச வாளி வரும் போது எதோ முறைமாமன் மேல மஞ்சத்தண்ணி விடும் அத்தை பொண்ணு மாதிரி ஆளாளுக்கு வாஞ்சையோட விடுவா. மாப்பிள்ளையை எதுக்கு எல்லாருமா சேர்ந்து பாடாபடுத்தரேள்!னு ‘ஸ்டைல்’ மீனா மாமி சத்தம் போடமாட்டா, மீறி எதாவது சத்தம் வந்தா ஒரு பாயாச வாளியை மாமியோட இலைக்கு திருப்பிவிட்டுடுவா.

டிபன் சாப்பிட உக்காச்சுக்கும் சச்சு மாமிக்கு கொச்சு விட எப்போதும் பெரிய போட்டியே நடக்கும், ஒரு தடவை ஆர்வக்கோளாறுல ஹரிகுட்டி "சச்சு! கொஞ்சம் கொச்சு!"னு சொல்லிட்டு திரும்பினா கிங்காங் மாதிரி சச்சு மாமியாத்து மாமா நிக்கரார். அப்புறம் என்ன, பந்தி வரிசையை தாண்டி குதிச்சு ஹரிகுட்டி ஓட, மாமா பின்னாடி ஓட,அந்த களோபரத்துல ஒரு வாளி சட்னி "டேட்டாபேஸ்" மாமி தலைல அபிஷேகம் ஆகி அந்த மாமி பதிலுக்கு பக்கத்துல இருந்த டம்ப்ளர் ஜலத்தை கோவத்தோட விட, அது மிஸ் ஆகி “பீப்பி”மாமா மூஞ்சில தெளிக்க...கல்யாணாம் கார்கில் ஆயிடுத்து.

99% எல்லாருமே ஸ்வீட் & வடையை கைல வாங்கிண்டு ABT பார்சல் சர்வீஸ் ஆஞ்சனேயர் மாதிரி அதை ஆத்துக்கு கொண்டு போவா. அதுலையும் பசங்க புகுந்து விளையாடுவாங்க. இப்படி கைல வாங்கி வெச்ச ஸ்வீட்டையும் வடையையும் பத்ரமா ஆத்துக்கு கொண்டு போகர்த்துக்கு மாமா/மாமிகள் படும்பாடு ரொம்ப வேடிக்கையா இருக்கும். ஸ்வீட்டை வாங்கி சைடுல வெச்சுருந்தா பின்பக்கம் வழியா எதாவது ஒரு வானரம் அழகா சத்தம் போடாம வந்து எடுத்துண்டு போயிடும். இதுக்கு பயந்தே சில மாமாக்கள் முதல் பந்தில சாப்டுட்டு ஆத்துக்கு போகும் அவாத்து மாமி கிட்ட ஸ்வீட்டையும் வடையையும் எதோ தாவூத் இப்ராஹிம் சரக்கை கை மாத்தி விடர மாதிரி ரகசியமா குடுத்து அனுப்புவார்.

சில சமயம் சைடுல வெச்சுருந்த ஸ்வீட் மேல அரை கரண்டி நெய்யை பின்னாடிலேந்து தெரியாம விட்டுட்டு போயிடுவா. பந்தி முடிஞ்சு அந்த ஸ்வீட்டை கைலயும் எடுக்க முடியாம வெச்சுட்டு போகவும் மனசு இல்லாம பரிதாபமா நிப்பார் அந்த மாமா. சில மாமாக்கள் கெட்ட வார்த்தைல திட்ட ஆரம்பிச்சுடுவா. கேக்கர்த்துக்கே அவ்ளோ ஆனந்தமா இருக்கும்.



சார்! லட்ட்ட்ட்ட்டு

சில மாமாக்கள் ஸ்வீட் வடையை கொண்டு போகர்த்துக்கு குட்டியா ஒரு பை எல்லாம் கொண்டு வருவா. எங்க ஊர் பக்கம் பந்தில பழமும் போடுவா, அதையும் சேர்த்து அந்த மாமா அந்த குட்டி பைல போட்டு வெச்சுட்டு சர்வ ஜாக்ரதையா சாப்டுண்டு இருப்பார். பசங்க அவாளோட முழு சாமர்த்தியத்தையும் பயன்படுத்தி அந்த பையை கொத்திண்டு போக முயற்சி பண்ணுவா. முடியாத பட்சத்துல மெதுவா அந்த பையை கையால ஒரு அமுக்கு அமுக்கிட்டு வந்துடுவா. ஆத்துல போய் அந்த மாமா ஆசையா ஸ்வீடையும் பழத்தையும் அவாத்து மாமிகிட்ட குடுக்க பையை திறந்தா பழனி பஞ்சாமிதம் மாதிரி நசுங்கின கதளிபழமும் லட்டுவும் சேர்ந்து புது தினுசான ஒரு வஸ்து இருக்கும்.

சாயங்காலம் கோவில் தீபாராதனைக்கு கோவில் வாசல்ல நிக்கும் போது மாமா புலம்ப ஆரம்பிச்சுடுவார்.“கொழந்தேளாவா இருக்கு! எல்லாம் கொரங்குகளான்னா இருக்கு! மத்தியானம் பந்தில வெச்சு யாரோ என்னோட ப@#%தை ^&#?!+ போயிடுத்துகள்!”நு மாமா சொல்லி முடிக்கர்த்துக்குள்ள தீபாராதனை பாக்கர்த்துக்கு நின்னுண்டு இருக்கும் மாமா மாமிகள் எல்லாம் ஒன்னுபோல 'க்லுக்'னு சிரிப்பா (எல்லா மாமிகளும் அதிதீவிர பாக்யராஜ் ரசிகைகள்). அதுக்கு அப்புறம் அந்த மாமாவுக்கு ஏன்டா சொன்னோம்னு ஆயிடும். எதுக்கு சிரிச்சானு தெரியாம நாங்களும் பரபிரம்மமாட்டமா நின்னுண்டு இருப்போம். இத்தனை கலாட்டா & குறும்புத்தனத்தோட தோழர்கள் படை சூழ வயிரு நிறைய சாப்பிடும் சுகமே தனிதான்.



கமண்ட் போட்டவா எல்லாம் ஒரு வாய் சாப்டுட்டு போங்கோ!..:)


குறிப்பு - மேல சொன்ன பவ்யாகுட்டி & காயத்ரி ரெண்டு பேரும் 5 வயசு கொழந்தேள். இந்த பாஸ்டன் நாட்டாமை மாதிரி கூலிங் கிளாஸ் போட்டு கற்பனை பண்ணிண்டா அதுக்கு கடை மொதலாளி பொறுப்பு கிடையாது...:)

51 comments:

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

நசுங்கிடுத்து...

Porkodi (பொற்கொடி) said...

//நீங்களா எதாவது கற்பனை பண்ணிண்டா அதுக்கு கடை மொதலாளி பொறுப்பு கிடையாது...:) //

naanga nenakave illiye, yaaru sonna?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//கல்யாணாம் கார்கில் ஆயிடுத்து.//
பின்ன...இருக்கற மக்கள் அப்படி... ஹா ஹா

//சார்! லட்ட்ட்ட்ட்டு//
லட்டை விட அந்த பாத்திரம் கனஜோர்... எங்க வாங்கினதுன்னு கேட்டு சொல்லேன்...

//நீங்களா எதாவது கற்பனை பண்ணிண்டா அதுக்கு கடை மொதலாளி பொறுப்பு கிடையாது...:) //
இன்னுமா இந்த உலகம் உன்னை நம்புது... ஸ்ஸ்ஸ்பப்பா....

paravasthu sundar said...

attagaasam thakkudu. nera oru kalyaana veettukku pona maathiri oru unarvu....

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... நான் லட்டு மட்டும் எடுத்துக்கிறேன். :-)

vgr said...

extremely funny thakkudu. Thalaipe kalakal.
keep writing.

But kadasi ilai il items idikarde...sumar :) asai katti mosam pannapla na iruku...ennanamo item mellam solitu...

-vgr
http://vgrblogger.blogspot.com

Vidhya Chandrasekaran said...

:))))))

GEETHA ACHAL said...

தக்குடு அருமையோ அருமை...அழகாக எழுத்து இருக்கின்றது...அப்படியே பார்த்த மாதிரி இருக்கின்றது...அவ்வளவு அழகாக எங்களையும் அந்த இடத்திற்கே கூட்டிகிட்டு போய்விட்டிங்க...வாழ்த்துகள்...

ஆயில்யன் said...

அருமை :)

//பசங்க அவாளோட முழு சாமர்த்தியத்தையும் பயன்படுத்தி அந்த பையை கொத்திண்டு போக முயற்சி பண்ணுவா. முடியாத பட்சத்துல மெதுவா அந்த பையை கையால ஒரு அமுக்கு அமுக்கிட்டு வந்துடுவா. //

அவ்வ்வ்வ்வ் நல்லா ப்ளான் பண்ணியிருக்கீங்க !

ஆமாம் சாப்பிடற இடத்துல சைட் அடிக்க முடியாட்டி எங்கிட்டுல போறது? #டவுட்டோ டவுட்டு

mightymaverick said...

அட உத்தம புத்திரனே... நம்பிட்டோம்லே... நீ வெறுமே உரலை மட்டும் தான் பார்த்தேன்னு... அப்புறம் இப்படி ஒரு விருந்து உனக்கு போடலாம்னு பார்த்தா நீ ஒட்டகம் மேய்க்க போய்ட்ட... சரி அடுத்த தடவை பெங்களூரு வரும் போது இந்த அண்ணனையும் ஞாபகம் வச்சு வந்து ஒரு வாய் சாப்பிட்டு போ... கல்லிடை பாக்கியராஜ் ரசிகர் மன்ற தலைவரான நீ சங்கத்து ஆட்களை இப்படியா போட்டு கொடுக்கிறது?

Kannan said...

ரொம்ப நன்னா இருந்தது, ஊர் ஞாபகம் வந்துடுத்து தக்குடு!..:)

ஆழ்வார்குறிச்சி கண்ணன்

Shobha said...

சென்னை மாமிகள் எல்லாம் கையோட ஜிப்லாக் பை கொண்டு வந்து , ஸ்வீட், வடை ,பழம் எல்லாம் அதிலே போட்டு ஹான்ட்பாக்ல வச்சுண்டு போயிடுவா . கல்லிடைக்காரா பாவம் அந்த டெக்னிக் எல்லாம் இன்னோம் தெரியலை.
அதென்ன கல்லிடை சாப்பாடு பத்தி சொல்லிட்டு இலைல கேரளா அரிசி சாப்பாடு பரிமாறி இருக்கே .
ஷோபா

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா, சாப்பாடு பந்தி எல்லாம் பிரமாதம்.. முதல் வருகையிலேயே அசந்துட்டேன்... நல்லதோர் பகிர்வு. இனி தொடருவேன்...

பத்மநாபன் said...

ஸ்ரீராம நவமிக்கு சாப்பாட்டுக்கு போன எபக்ட கொண்டு வந்துட்ட தக்குடு..

என்ன ஒரு அப்சர்வஷேன்.. பவ்யா குட்டி... பொதகடீர்...
பலிக்கு ஆட்டை தயார் செய்தல் .... சச்சு! கொஞ்சம் கொச்சு ... டேட்டாபேஸ்" மாமி .. பீப்பி”மாமா ......ஒரே சிக்ஸர்கள்.... கண்ணுல தண்ணிவர சிரிக்க வச்சுட்ட தக்குடு

ப@#%தை ^&#?!+ போயிடுத்துகள்...... நினைச்சாலே சிரிப்பு முட்டிக்குது..

mightymaverick said...

@ஷோபா - சரியான சாப்பாட்டு மாமியா இருப்பீங்க போலிருக்கே... கல்லிடை சாபாட்டைப்பத்தி பேசுறதுல எங்கே கேரளத்து சாப்பாடு வந்துச்சுன்னு சரியா கேட்டுட்டீங்களே!!! யாருக்கு தெரியும் எந்த கேரளத்து குட்டி கூட தக்குடு சுத்திக்கிட்டு இருக்கானோ? அம்பிக்கு தான் வெளிச்சம்...

Shobha said...

@வித்தியாசமான கடவுள்- ஒரு அப்செர்வேஷனைச் சொன்னா சாப்பாட்டு மாமியா? திஸ் இஸ் டூ மச்.
ஷோபா

Raks said...

Had a good read,nice post thakkudu :)

எல் கே said...

@ஷோபா அக்கா
அவன் ஒரு கேரளா பெண்ணை பார்த்து வச்சிருக்கறதா கேள்விபட்டேன்.. அதுதான் கேரளா ஐட்டம் இலையில்.

தி. ரா. ச.(T.R.C.) said...

அவன் ஒரு கேரளா பெண்ணை பார்த்து வச்சிருக்கறதா கேள்விபட்டேன்.. அதுதான் கேரளா ஐட்டம் இலையில்
@எல்கே நல்ல வேளை நடுவுலே" பார்த்து" அப்படின்னு ஒரு வார்த்தயை போட்டயோ எனக்கு உசிர் வந்தது.

தி. ரா. ச.(T.R.C.) said...

தக்குடு கல்யாண சாப்பாடு பிரமாதம்.இவ்வலவு களேபரத்தில் உன்னைக் காணோமேன்னு பாத்தேன்.ஸ்வீட்டை வாங்கி சைடுல வெச்சுருந்தா பின்பக்கம் வழியா எதாவது ஒரு வானரம் அழகா சத்தம் போடாம வந்து எடுத்துண்டு போயிடும். பதிவுலேயே என்க்கு பிடிச்ச இடம் இதுதான்.

பத்மநாபன் said...

தக்குடு பண்ணிய அலப்பறைக்கு திருப்பி திருப்பி வந்துட்டு இருக்கேன்

//ABT பார்சல் சர்வீஸ் ஆஞ்சனேயர் மாதிரி // மாமிகள் இந்த தடவை ஊருக்கு வர்றப்ப உண்டு இல்லை பண்ணறதா இருக்காங்க..

RVS said...

உரலை டிராயர் போட்ட வயசுலேர்ந்து பார்த்துண்டு வரேன்.. ஒன்னும் மாற்றமே இல்லை.. இடது பக்கம் உரலை பார்த்தேன்.. வலது பக்கம் உலக்கையை பார்த்தேன்.
பார்த்தேன்.. பார்த்தேன்.. ;-)
பந்தி பரிமாறதுல எக்ஸ்பெர்ட்ன்னு தெரியறது..... அந்தப் பக்கத்து இலை பாயசம் ஊத்தப் போனது தக்குடுன்னு சொல்லாம சொல்லுது இந்த எழுத்து...
ஏதோ மொய் எழுதினவாதான் சாப்பிடணும்ன்னு சொல்றா மாதிரின்னா இருக்கு கமென்ட் போட்டவா மட்டும் சாப்பிடுங்கோன்னு சொல்றது.. ;-)

Kavinaya said...

அடேயப்பா... பரிமாறுவது எப்படி? (for dummies :) ன்னு ஒரு புத்தகமே போடற அளவு தெரிஞ்சு வச்சிருக்கீங்களே. தம்பி தங்கக்கம்பிதான் :)

Mahi said...

கலக்கல் போஸ்ட் தக்குடு!கல்யாணவீட்டுக்கே போயிட்டு வந்த மாதிரி இருந்தது. பந்தில எப்படிப் பரிமாறணும்னு தெளிவாத் தெரிஞ்சு வைச்சிருக்கே! எல்லாரும்(!!) இப்படியே இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்? :)

போன வாரத்திலே எங்காத்துக்காரருக்கு,தட்டுல இருக்க சாதத்துல எப்படி ரசம் பரிமாறணும்னு அரைமணி நேரம் க்ளாஸ் எடுத்தேன்,நோ யூஸ்!!! ;) :)

எல் கே said...

@திராசா
அங்கிள் :)))

Dubukku said...

:)))
ஸ்டைல் மீனா - வரேன் ஸ்டைல் மீனாட்ட சொல்லறேன். சரி அதிருக்கட்டும் உனக்கு சவுரி மீனா தெரியுமோ :P :P :P :)))))

எல் கே said...

இதை ஒரு ப்ரின்ட் எடுத்து கல்லிடைக்கு அனுப்பினா என்ன ??

vidhas said...

Rombha nanna erukku thakkudu :-) Kalyana athukku pona mathri eruanthathu, nee manasala nenikarthuellam mathava pera pottu nanna samalikera. ;-)

Kurinji said...

நல்ல பதிவு!

குறிஞ்சி குடில்

Sriram,Doha said...

Thakkudu!! Ungaloda oru anubhavathai vasathiaa maraichuttele?? Moda pandhile bramanaaloda ukkaandhu mokkittu, thiruppi kadaiseeee pandhilayum NEENGA okkanthappo ungala enna paadu paduthinaa (vaanarathuke vaanarnglaa -nnu kooda comment adichele??. Enna thakkudu idhaiyellam mara(i)kalaama??

Anonymous said...

Dear Thakkudu, ivloo jollya irukkuma unga uurla panthi yellam, naan ipdi yellam saptathey kedaiyaathu..:( neenga yennai kuutindu poovelaa ithai maathiri oru functionuku..:) database mami,pippi mama..unagalukkunu name kedaikkarthu paarungo!! Blouse sankaran 2 read panna waiting..:) as usual colourful post.

Ranjani Iyer

தக்குடு said...

தோஸ்த், அது கிராமத்து ஜோக், கண்டுகாதீங்கோ!..:)

@ ஷோபா மாமி - உங்களுக்கு ஆனாலும் கழுகு கண்ணுதான்பா!..:) உங்களுக்கு பிடிக்கும்னுதான் கேரளா சமையல் பண்ண சொன்னேன்!..;PP

@ RVS அண்ணா - நீங்க அந்த போட்டோல இடிப்பை மட்டும் தான் பார்த்தேன்!னு சொல்லறேளா?னு பத்பனாபன் அண்ணா என் கிட்ட கேக்கறார்...:)

@ டுபுக்கு அண்ணாச்சி - நாம ரெண்டு பேருமே கூட்டு களவாணிகள், அதனால என்னை நீங்க மாட்டி விடமுடியாது. செளரி மீனா பத்தி தனியா பதிவு போடலாம். உங்களுக்கு சதுக்க பூதம் தெரியுமா??..:PP

தக்குடு said...

@ VGR - தோஸ்த், அது கிராமத்து ஜோக், கண்டுகாதீங்கோ!..:)

குறையொன்றுமில்லை. said...

என்னமோ நம்ம பிறந்த ஊருபேரு அடிபடரதேன்னு வ்ந்தேன். செமை கலக்கல். நடக்கட்டும். வீட்ல பரிமாறரதோட சரியா சமையலுகூடவா?

பத்மநாபன் said...

//இடிப்பை மட்டும் தான் // ஸ்பெல்லிங் கரெக்டாத்தானே போட்டிருக்க தக்குடு...

உரல பார்த்த மச்சான் , உலக்கையும் பார்த்திருப்பார் இடிப்பையும் பார்த்திருப்பார்..

எல் கே said...

//உரல பார்த்த மச்சான் , உலக்கையும் பார்த்திருப்பார் இடிப்பையும் பார்த்திருப்பார்//

ஹெஹெஹ்

எல் கே said...

//உங்களுக்கு சதுக்க பூதம் தெரியுமா?//

உன் பேருதானே அது

தக்குடு said...

@ Padbanaban anna - //ஸ்பெல்லிங் கரெக்டாத்தானே போட்டிருக்க தக்குடு// Padbanaban anna, naan spllng yellam correctaathan pooturukken, but RVS anna taakunu veera spllngla read pannittu bathil pooduvaar paarungo!..:))

@ LK - //உன் பேருதானே அது // umakku puriyaathu oyyi! dubukku annachikkum yenakkum mattumthan antha code words yellam puriyum..:PP

Anonymous said...

Naan unga orru kalayanathea karpana pani paathuten...including antha vaanara kutti thakkudu....

still chennai layum yengathu pakam irukara cundu perima vathula ipadi taan visesam yellam pannuva..athula taan panuvaa..ava taan samipa..ava taan parimaruva...

Asusual examples super :-)

'Tech ops' mami

தக்குடு said...

@ TRC mama - Liftukulla maatindu mulichum innum unga nakkal korayalaiyee!!..;PP any way again key yedukka liftla poogamaiyaa iruppel!!..:P ha ha ha

Subhashini said...

தக்குடு அடுத்த வாட்டி கல்லிடை போகும் போது பத்திரம் எல்லாரும் விஷயம் தெரிஞ்சுது உன்னை ஒரு வழி பண்ணிடுவா ...:))
அன்புடன்
சுபா

Matangi Mawley said...

super comedy boss... :D

but intha parimaararathu-la ivalo matter irukkunne enakku theriyaathu!

muzhu post-um padichcha piraku-- unmaileye unga theru "maappilai"s mela naan romba ve parithaapa padaren! :D :D

R. Ramesh said...

nanri anne

SRINIVAS GOPALAN said...

Thakkudu
Romba nanna irundudu.Parimaradhula ivlo vishayam irukka? Tirunelvelikke kootindu poitte po

RVS said...

நா இல்லாதப்ப இங்க என்ன கலாட்டா... பொறுமையா பதில் படறேன்... சித்த இருங்கோ.. ;-)

RVS said...

தக்குடு அண்ட் பத்து கம்பனியிரின் கவனத்திற்கு... இடிப்பது, இடி வாங்குவது ரெண்டுமே சென்னை வந்தப்புறம் சகஜமாகி விட்டது. (அதிகமான கூட்டத்தை சொன்னேம்ப்பா...)....

//உரல பார்த்த மச்சான் , உலக்கையும் பார்த்திருப்பார் இடிப்பையும் பார்த்திருப்பார்..// இது டூ மச்... உலக்கையும் கையுமா ஒரு பொண்ணை பார்த்தவுடன் கையும் ஓடலை..காலும் ஓடலை.. என்ன பண்றது... (பத்துஜி போதுமா.!!!)

தக்குடு said...

@ பாலா - எழுதாதது எல்லாம் அர்த்தம் கரெக்ட்டா புடிக்கறாங்கப்பா!..:)

@ கேடி - அதானே! யாரு சொன்னது?

@ ATM அக்கா - நானும் அந்த பாத்திரத்தை ரொம்ப ரசிச்சேன்...:)

@ பரவஸ்து அண்ணா - ரொம்ப சந்தோஷம் அண்ணா!..:)

@ சித்ரா அக்கா - உங்க இஷ்டம் அக்கா!..:)

@ வித்யா - ஸ்மைலி மட்டும் போடரவாளுக்கு பாயாசம் விடாதீங்கோனு பரிமாறவா கிட்ட சொல்லனும்..:)

@ கீதா அக்கா - செளக்கியமா, ரொம்ப நாள் ஆச்சே உங்களை பார்த்து!

@ ஆயிலு - அதனால தான் புரிஞ்சுதா?னு கேட்டேன்..:)

@ வி கடவுள் - இந்தவாட்டி ஆத்துக்கு சாப்ட வரேண் சரியா!..:)

@ கண்ணன் அண்ணா - ரொம்ப சந்தோஷம் ..:)

@ வெங்கட் - நன்னிஹை சார்!..:)

@ ராக்ஸ்ஸ்ஸ் அடுக்களை- நன்னிஹை!..:)

@ LK - நல்லா இருய்யா, நீங்க நல்லா இருங்க!!..:P

@ TRC மாமா - உங்க கிட்ட சொல்லாம எதுவும் முடிவு பண்ணாது இந்த தக்குடு!..:) ahmm, ஜாலியா லிப்ட்ல போகலாம் வரேளா??..:))

@ பத்பனாபன் அண்ணா - ரசிச்சு படிச்சதுக்கு ரொம்ப சந்தோஷம் அண்ணா!..:)

தக்குடு said...

@ RVS அண்ணா - அந்த போட்டோ பாத்த உடனே உங்க பேரை கை டைப் பண்ணிடுத்து!..:)

@ கவினயா அக்கா - உங்க தம்பி ஆச்சே!..:)

@ மஹி - ஆத்துக்காரருக்கு பொறுமையா சொல்லி குடுங்கோ!..:)

@ வித்யா அக்கா - நீங்க நம்ப செட்டு என்பதை மறக்க வேண்டாம் புரிஞ்சுதா!..;))

@ குறிஞ்சி - நன்னிஹை!..:)

@ சீராம் அண்ணா - public watching!! beee careful (naan yennai sonnen)..:)

@ ரஞ்ஜனி - தாராளமா கூட்டின்டு போனா ஆச்சு! அம்மாவையும் வர சொல்லுங்கோ!..:)

@ லெக்ஷ்மி அம்மா - பொங்கினாதான் பூவா...:)

@ Tech ops மாமி - ஒரு பெரிமா எல்லாம் செல்லாது! செல்லாது! எங்க ஊர்ல போர்க்களம் மாதிரி இருக்கும்..:)

@ சுபா மேடம் - ஆமாம், இப்பவே பயமா இருக்கு..;)

@ மாதங்கி - ஆமாம், பாவமான ஆட்கள் அவா..:)

@ ரமேஷ் அண்ணா - ரைட்டு!!..:)

@ கோபாலன் சார் - செளந்தர்யலஹரி நன்னா இருக்கு சார்!..:)

@ RVS அண்ணா - இப்பவாவது வந்தேளே, அப்போ நீங்க ஒன்னுமே பாக்கலை இல்லையா?..;P

சிவகுமாரன் said...

நல்ல விருந்து.
தேங்க்ஸ்ங்க

Shanthi Krishnakumar said...

Virtual tour to a kalyana aam

தக்குடு said...

@ சிவகுமரன் - :))

@ சாந்தி மாமி - அதே! அதே!...:)

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)