Friday, November 5, 2010

தீபாவளி ஸ்பெஷல்

கைல எண்ணைக் கிண்ணத்தோட துரத்தும் பாசமான அம்மா, கண்ணில் விழுந்த சியக்காய் பொடி, வெண்ணீர் அடுப்பில் எரிந்த சரட்டையின் 'ஸ்ஸ்ஸ்ஸ்' சத்தம், வெண்கலப்பானைலேந்து வெண்ணீரை எடுக்கும் போது எவர்சில்வர் சொம்பு பக்கவாட்டில் மோதி எழும் 'டைங்ங்ங்ங்' ஓசை, ‘எவர்கிங்’ ஸ்டிக்கர் கிழிக்காமல் போடுண்ட பட்டாபட்டி, இஞ்சி லேகியத்துக்கு முன்னாடி அம்மாவுக்கு தெரியாமல் கள்ளத்தனமாய் அவசரம் அவசரமா வாய்ல போடுண்ட பாதாம் ஹல்வா, அதுல பங்குக்கு வந்த பாசக்கார அண்ணா, பக்கத்தாத்து பொண்ணோட பட்டுப்பாவாடை வாசனை எல்லாமே ஞாபகத்துல அப்பிடியே இருக்கு.வெள்ளிக் கிண்ணத்தில் ஜொலிக்கும் திரட்டிப்பால்..:)

நல்ல நாளும் அதுவுமா கூடப்பிறந்தவனை திட்டக் கூடாது, அதனால மரியாதைகுரிய என்னோட அண்ணா ஒரு மகாசோம்பேறி. 6 மணிக்கு மேல தான் தீபாவளி அன்னிக்கு எழுந்திருப்பான். தக்குடு 4 மணிலேந்தே குடைய ஆரம்பிச்சுடுவான். அப்பிடிக்கு ப்ரமாதமா பட்டாசு எல்லாம் ஒன்னும் கிடையாது. எங்க அம்மா வாங்கர 4 பட்டாசையும் 'துட்டை கரியாக்குவாளாடா'னு பக்கத்துலேந்து அஸ்து பாடி எங்க அண்ணா ஓய்ச்சு விட்டுடுவான். தக்குடு 2ஆம் கிளாஸ் படிக்கும் போது எங்க அம்மாவுக்கு கோ-ஆப்டெக்ஸ்ல பட்டுப் புடவை வாங்கிண்டு வந்தா, அதை பாத்துட்டு, ‘எனக்கு மட்டும் வெறும் ட்ராயர்தானா?’னு நான் ஒரே ஆர்ப்பாட்டம். வெறுத்து போன எங்க அப்பா ஒரு கட்டத்துல ‘உனக்கு கோ-ஆப்டெக்ஸ்ல டபுள் சைடு பார்டர் போட்ட பட்டுக் கோமணம் வாங்கி தரேன் கோந்தை, சட்டையை போட்டுண்டு வா, வாங்கிண்டு வரலாம்!’னு சொன்ன உடனே வேகமா சட்டையை போட்டுண்டு கிளம்பினதா இப்பையும் அம்மா சொல்லி சிரிப்பா.நம்பாத்து வெண்கல விளக்கு...:)

எல்லாராத்துலையும் வெடி எல்லாம் நிறைய போடுவா. புது ட்ரெஸ் போட்ட நானும் என்னோட தோஸ்துகளும் எதோ சர்வே ஆபிசர் மாதிரி அவாத்து வாசல்ல இருக்கும் வெடிக் குப்பையை வெச்சு யாராத்துல நிறைய வெடி போட்டுருக்கானு சர்வே எடுப்போம். காலேஜ் கோஷ்டியா ஆனதுக்கு அப்புறம் சர்வே அஜெண்டாவை மாத்திட்டோம். வெளக்கி வச்ச வெண்கல விளக்கு மாதிரி இருந்தாலும் எங்க தெரு பிகர்களை எல்லாம் நாங்க திரும்பி கூட பாக்க மாட்டோம். அதுல சில பல சட்டசிக்கல்கள் உண்டு. பாவனா மாதிரி பளிச்னு இருக்கானு நம்ப பல்லை காட்டினா பின்னாடியே அவளோட அம்மா சொர்ணாக்கா மாமி முந்தானையை இழுத்து சொரிகிண்டு சண்டைக்கு வந்துடுவா, பேக்ரவுண்ட்ல 'ஐகிரி நந்தினி நந்திதமேதினி' போட்டா கன கச்சிதமா பொருந்தும். இதுல என்ன தமாசுன்னா சூப்பர் பிகரோட அம்மா சண்டைக்கு வரும் போது சுமார் பிகரோட அம்மாவும் மெதுவா சேர்ந்துக்கப் பார்ப்பா. இந்த மாதிரி ஒரு தடவை ஆன போது என்னோட தோஸ்த் ஒருத்தன், ‘மாமி! நீங்களும் சேர்ந்து சவுண்ட் குடுக்காதீங்கோ! உங்காத்து பொண்ணையெல்லாம் நீங்களே சைட் அடி!னு சொன்னாலும் நாங்க பார்க்கமாட்டோம்!’னு சொல்லிட்டு அந்த இடத்திலேயே நிக்காம சிட்டா பறந்துட்டான். அதனால பக்கத்து தெரு பிகரை பாத்தாத்தான் தலையவே நிமிர்த்துவோம்.நெஞ்சை அள்ளும் நெல்லையின் அல்வா


செல்லம்மா மன்னியாத்துல அல்வா அற்புதமா இருக்கும். அவாத்து மாமா & மாமியார் ஆம்பூர் கோமு மாமியை சேர்த்து மொத்தம் 3 பேர். அவாத்துல தக்குடுவுக்கு சர்வ சுதந்திரப் பாத்யதை உண்டு. தீபாவளி அன்னிக்கி காத்தால 8 மணி வாக்கில் போனா மொதல்ல செல்லமா மன்னி ஒரு துண்டம் அல்வா (ஆமாம், துண்டம் துண்டமா இருக்கும் அவாத்து அல்வா) தருவா. கொஞ்ச நேரம் கழிச்சி அவாத்து மாமா இந்தாடா தக்குடு!னு சொல்லி அவர் அல்வாவை ஆட்டையை போடும் போது எனக்கும் ஒரு துண்டு தருவார். கொஞ்ச நேரத்துல கோமு மாமி வந்து இந்தாடா சப்பைமூக்கா!னு ஒரு துண்டு தருவா. அந்த சமயம் பாத்து செல்லம்மா மன்னி & அவாத்து மாமா வந்து சேர்ந்துடுவா. ஓஒ! நானும் குடுத்தேனே! நானும் குடுத்தேனே!னு ஒருத்தருக்கொருத்தர் சொல்லிண்டு, கள்ளப் பயலே! மூச்சே விடலையேடா நீ!னு சிரிச்சுண்டே என்னை அதட்டுவா. நான் ஒன்னுமே தெரியாத மாதிரி முகத்தை வெச்சுண்டு மெதுவா இடத்தை காலி பண்ணிடுவேன். காலேஜ் பையன் ஆனதுக்கு அப்புறமும் கூட அவாத்து அல்வாவை நான் மிஸ் பண்ணினதே கிடையாது. ‘ஆம்பூர்’ கோமு மாமி உம்மாச்சி கிட்ட போய் சேர்ந்த அன்னிக்கு அவாத்து ரேளில போய், 'கோமு மாமி! இனிமே எனக்கு யாரு அல்வா பண்ணித் தருவா!'னு கண்ணீர் விட்டு கதறி அழுதேன்..:(

ஒரு தீபாவளி அன்னிக்கி காத்தால என்னோட தோஸ்த் 'ப்ளவுஸ்' சங்கரன்(பெயர் காரணம் தனிப் பதிவில்) பத்த வெச்ச ராக்கெட், பாட்டில் கவுந்து வாசல்ல கோலம் போட்டுண்டு இருந்த ஸ்டைல்’ மீனா மாமியோட பொண்ணை துரத்தி துரத்தி எடுத்துடுத்து. அடுத்த பத்து நிமிஷத்துக்கு தெரு புல்லா ‘ஸ்டைல்’ மீனா மாமியும் ‘ப்ளவுஸ்’ சங்கரனும் ஆக்ரோஷமா ‘தொட்டுப்புடிச்சு’ விளையாண்ட காட்சி கண்ணுலையே நிக்குது. கடைசி வரைக்கும் ‘ப்ளவுஸ்’ சங்கரன் அவுட்டே ஆகலை என்பது தான் அதுல ஹைலைட்டான விஷயம்...:)தக்குடுவின் இதயராணி பப்பு...:)(பட்டுப்பாவாடையில் என்னோட பப்பு)

தக்குடுவை உங்காத்து புள்ளையாட்டமா நினைச்சு பாச மழை பொழியும் எல்லா அன்பு இதயங்களுக்கும் தக்குடுவின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! இந்த நல்ல நாள்ல நம்ப எல்லாருக்கும் நல்ல எண்ணங்களையும், விசாலமான மனசையும், நிஷ்கபடமான பக்தியையும், திருப்தியான வாழ்க்கையையும் உம்மாச்சி நமக்கு அனுக்ரஹம் பண்ணனும்னு ப்ரார்த்தனை பண்ணிப்போம்.

24 comments:

எஸ்.கே said...

திரட்டிப்பால், அல்வான்னு எச்சில் ஊறவச்சிட்டீங்களே!
அந்த குத்து விளக்கு கண்ணில் ஒத்திக்கலாம்போல இருக்கு!
உங்கள் இதய ராணி செம க்யூட்!
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தக்குடுபாண்டி said...

@ SK - பதிவை படிக்காம படம் மட்டும் பாத்து கமண்டின மாதிரி இருக்கே??...:))

எஸ்.கே said...

:-)) பதிவை படிச்சாலும் அந்த படங்கள் மனசிலேயே நிக்குதுங்களே!! இன்னிக்கு முழுதும் அந்த நினைப்பு இருக்கும்!

ஆயில்யன் said...

தீபாவளி வாழ்த்துகள் !

யெம்ம்மாம் ஸ்வீட்ஸ்சு ! :) [இங்கே கிடைக்குதா நெல்லை புராடெக்ட்டு?]


தக்குடுவின் இதயராணி - ம்ஹுக்கும் உம்மை பார்த்து ஒரு மாதிரி அலறி/அழுது உக்காந்திருக்காங்க மேடம்! #கனவுக்கோட்டை கட்டாதீரு :))))

பத்மநாபன் said...

தீபாவளி இனிப்புகளை விடுப்பில் போனப்பவே பண்ண சொல்லி ஒரு புடி புடிச்சாச்சு போல (கேமிராவிலும் சேர்த்து )....

பதிவு செம ரகளையா இருக்கு ...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

அடுத்த தீபாவளி , தலை தீபாவளியாக வாழ்த்துக்கள்..

Nithu Bala said...

Deepavalai Vazhthukal Thakkudu...

Chitra said...

HAPPY DEEPAVALI!

Cute baby!!

Nellai halwa plate enakkuthaan!

Mahi said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

RVS said...

//இதுல என்ன தமாசுன்னா சூப்பர் பிகரோட அம்மா சண்டைக்கு வரும் போது சுமார் பிகரோட அம்மாவும் மெதுவா சேர்ந்துக்கப் பார்ப்பா. இந்த மாதிரி ஒரு தடவை ஆன போது என்னோட தோஸ்த் ஒருத்தன், ‘மாமி! நீங்களும் சேர்ந்து சவுண்ட் குடுக்காதீங்கோ! உங்காத்து பொண்ணையெல்லாம் நீங்களே சைட் அடி!னு சொன்னாலும் நாங்க பார்க்கமாட்டோம்!’னு சொல்லிட்டு அந்த இடத்திலேயே நிக்காம சிட்டா பறந்துட்டான்.//

இப்பிடி சொன்னதெல்லாம் தக்குடுவோட தோஸ்த்ஸ் அப்படின்னு சொன்னா தக்குடு ரொம்ப யோக்கிய சிகாமணி அப்படின்னு நாங்க ஒத்துக்கமாட்டோம். இது போன்ற விஷயங்களில் வெள்ளை அறிக்கை எதிர் பார்க்கிறோம். அடுத்த பதிவாக...

என்னோட நாலேட்ஜ் இம்ப்ரூவ் பண்ணிக்கரத்துக்காக கேட்கறேன்.. கோமு மாமி போனத்துக்கப்புறம் இப்போ யார் அல்வா பண்ணித்தரா..

இதயராணி அம்சமா இருக்கா. ஆசிர்வாதங்கள். ;-) ;-)

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

vgr said...

Aha thakkudu...romba naaal.....rommmmmmmba naaaaaaalaikapram...am getting a feel of the real 'thakkuduness' in this blog. This is the kind that made me wanting to read to your posts...so am glad this week :)

post arumai...ooril deepavali endraikume kondattam than...its super fun. velakku sooper...enna palichunu iruku...yaru thechalo....theratipal sapdanam pola iruku....alva picture sumar :) yaru anda idaya rani...nan edo oru namitha, trisha photo vonu pathen....enna adisayam ;)

Swathi said...

Happy diwali to you Thakkudu,

Theratipal looks super. Halwa looks also super. Baby is so cute a and she is little princess

கவிநயா said...

விளக்கு பளபளன்னு இருக்கு :) குட்டிப்பாப்பா ரொம்ம்ப க்யூட்! உங்களுக்கு பொருத்தமான்னுதான் கொஞ்சூண்டு பெரீய்ய்ய்ய சந்தேகமா இருக்கு :)

தீபாவளி வாழ்த்துகள் தம்பீ! அமோகமாக வாழ்க!

Harini Sree said...

maami ponathukku feel pannama halwa pochenu vadivelu maari feel panni irukkel! :P

Shobha said...

//ஐகிரி நந்தினி நந்திதமேதினி' போட்டா கன கச்சிதமா பொருந்தும்.//
இது கலக்கல் கற்பனை :)
//சுமார் பிகரோட அம்மாவும் மெதுவா சேர்ந்துக்கப் பார்ப்பா//
ஏதோ அவாளுக்கும் ஒரு சான்ஸ் கிடைச்சுது.:)

//நான் ஒன்னுமே தெரியாத மாதிரி முகத்தை வெச்சுண்டு மெதுவா இடத்தை காலி பண்ணிடுவேன்.//
இதுல யார், யாருக்கு அல்வா குடுத்தான்னு தெரியலையே.
பப்பு ரொம்ப ச்வீட் . உன் கூட சேந்து என்ன ஆகப்போறதோ?

Subhashini said...

super post thakkudu

Subhashini said...

santhadi saakulay ambi kaala vararaa mathri theriyarthu. Hmmm. Paathukko..)) Naan ambi supporter aakum...))

jeyashrisuresh said...

Present sir,nalla padam kattiirukeenga.
Happy deepavali to u thakkudu

RAKS KITCHEN said...

Liked the halwa part,andha maami ummachita ponadhu ku kooda 'vada poche' style la halwa poche nu azhudhiyo? Now waiting for the blouse sankaran post :)

Anonymous said...

Dear Thakkudu, first paragraph yethoo kaviyarangkam lines maathiri avlooooo azlaka irukku. Photos yellam roomba pramatham.Ungalooda ithayarani devathai maathiri irukka. Style meena,blouse sankaran name yellam yepdithaan ungalukku thoonartho. Post padichathulenthu yenga ammavoda blouse paakumpoothellam 'Blouse sankaran'nu oru thadavai methuvaa sollindu asattu sirippu sirichundu irukken. Waiting for that kalakkal post.

Ranjani Iyer

sriram said...

Belated Wishes Thakkudu..

//பக்கத்தாத்து பொண்ணோட பட்டுப்பாவாடை வாசனை //

அந்த வயசிலேயே பயபுள்ள எங்கேயெல்லாம் மூக்கை வச்சு மோந்து பார்த்திருக்குன்னு பாருங்க..
இதுல அடுத்தவங்களைப் பாத்து ஜொள்ளுன்னு வெட்டி நியாயப் பேச்சு வேற ... :) :)

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

அப்பாதுரை said...

நெல்லை அல்வா பாத்ததோடு சரி.
உங்க பப்பு சிறக்க வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

Ithaya raanikkum ungalukkum vaazhththukaL thakkudu.
Halvaavum, thirattippaalum, vilakkum super,.

subu said...

தீபாவளி மலருக்கு (மலரும் நினைவுக்கு)அலாதா வாழ்த்துக்கள்!

அப்பாவி தங்கமணி said...

//நெஞ்சை அள்ளும் நெல்லையின் அல்வா//
ம்ம்ம்....

//காலேஜ் பையன் ஆனதுக்கு அப்புறமும் கூட அவாத்து அல்வாவை நான் மிஸ் பண்ணினதே கிடையாது//
அப்ப குடுக்கல் வாங்கல் எல்லாமும் உண்டா... சரி சரி... புரிஞ்சவங்க விசயத்த மனசுக்குள்ள வெச்சுகோங்க... ஹா ஹா

belated தீவாளி வாழ்த்துக்கள்...

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)